தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொடும்பாளூர் அற்புதங்கள்!

View previous topic View next topic Go down

கொடும்பாளூர் அற்புதங்கள்! Empty கொடும்பாளூர் அற்புதங்கள்!

Post by மகா பிரபு Tue Jan 21, 2014 5:57 am

[You must be registered and logged in to see this image.]

சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற தொன்மைப் புகழ்மிக்க ஊர் கொடும்பாளூர். சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணத்திலும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆண்டுகளாக மாற்றம் எதுவும் இல்லாமல், அன்று நிலவிய அதே பெயரில் இன்றளவும் நிலைத்து நீடித்து நிற்கிறது. அந்த வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு முன்னோடியாகத் திகழ்பவை இக் கொடும்பாளூர் கற்றளிகள் ஆகும்.

கொடும்பாளூர் மூவர் கோவில்: சிலப்பதிகாரத்தில், கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து மதுரை நகருக்கு இக் கொடும்பாளூர் வழியே சென்றதாகக் குறிப்புகள் உள்ளன. முந்தைய சோழநாட்டின் தலைநகரான உறையூரிலிருந்து பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குச் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்திருந்தது.
தென்னிந்திய அரசியல் வரலாற்றில் கொடும்பாளூர் வேளிர் குறிப்பிடத்தக்கவராவர். பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் இவர்கள் ஆட்சி புரிந்ததால் தங்கள் அரசியல் ஆதரவை அந்தந்த காலச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கொடும்பாளூர் புதுக்கோட்டையிலிருந்து குடுமியான்மலை வழியாக மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மதுரையில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டில் இராணி மங்கம்மாள் அவரது தளவாய் லட்சுமி நரசிம்மையா என்பவருக்கு இவ்வூரை மானியமாக வழங்கியதோடு, பாதசாரிப் பயணிகள் தங்கிச் செல்ல வசதியாகச் சத்திரம் ஒன்றையும் கட்டி வைத்தார்.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பலருடைய ஆட்சி உரிமைக்கான பல போர்கள் கொடும்பாளூரில் நடைபெற்றன. வேளிர் குல அரசர்களில் பூதி விக்ரம கேசரி என்பவன் மிக்க பெயரும், புகழும் கொண்டவன். இம்மன்னன் இரண்டாம் சுந்தர சோழ பராந்தகனுக்கும், இரண்டாம் ஆதித்த சோழனுக்கும் (காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) சம காலத்தவனாவான். இவனது காலத்தில் நாடு சகல துறைகளிலும் மிக உன்னதமான நிலையில் இருந்தது. மக்கள் அமைதியாகவும், இன்பமாகவும் தங்கள் வாழ்க்கையை நடத்தினர். அதனால் பல்வேறு கலைகளும் அங்கு வளர்ந்து செழித்திருந்தது. குறிப்பாக, சிற்பக்கலை மிக உன்னதமான நிலையை எட்டியிருந்தது. அதனுடைய வளர்ச்சி நாட்டு நலத்தை எடுத்துச் சொல்லும் வண்ணம் விளங்கியது.

இவ்வூரின் கிழக்கே விரிந்து பரந்த நிலப்பரப்பில் சுற்றிலும் பசுமை போர்த்திய வயல்கள் அமைந்திருக்க, "மூவர் கோவில்' என்றழைக்கப்படும் கற்றளி கம்பீரமாகக் காட்சியளித்து நிற்கின்றன. தஞ்சை பெரிய கோவில் எழுப்பப்படுவதற்கு முன்னோடியாக விளங்கியது.

பிரம்மாண்ட படைப்பாக எழும்பியிருக்கும் இக்கற்றளியை அமைத்த வேளிர்குல மன்னன் பூதி விக்ரம கேசரி என்பவன் தனது பெயராலும், தனது மனைவியர் வரகுணவாட்டி, கற்றளை பிராட்டியார் ஆகியோரது பெயராலும் மூன்று கற்றளிகளை எழுப்பி வைத்தான். எனவேதான் இக்கோவிலுக்கு "மூவர் கோவில்' எனும் பெயர் வந்தது. இம் மன்னனுக்கு பராந்தக வர்மன், ஆதித்த வர்மன் என இரு புதல்வர்கள் இருந்ததை இங்குள்ள வடமொழிக் கல்வெட்டின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

தெற்கு வடக்காகக் கட்டப்பட்டுள்ள இம் மூன்று கோவில்களில் காலப்போக்கில் வடக்குப் பக்கம் அமைந்திருந்த கோவில் மட்டும் முழுவதுமாய் இடிந்து போனது. தற்சமயம், மிச்சம் இருக்கிற இரு கோவில்களில் வடபுறம் அமைந்துள்ள கோவிலின் கருவறை தெற்கு வெளிச்சுவரில் நீண்ட வடமொழிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு.

இதில் கொடும்பாளூர் வேளிர்களின் ஒன்பது தலைமுறை குறித்த வம்சாவளிச் செய்திகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் இக்கோவிலைக் கட்டி வைத்த மன்னன் பூதி விக்ரமகேசரி எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. காளமுக சைவப் பிரிவினரின் தலைவன் மல்லிகார்ஜுனனுக்கு மடம் ஒன்றைக் கட்டித் தந்து, நாள்தோறும் ஐம்பது காளமுகர்களுக்கு உணவளிப்பதற்கு கிராமங்களைத் தர்மமாக வழங்கியதும் இக் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கொடும்பாளூர் அற்புதங்கள்! Empty Re: கொடும்பாளூர் அற்புதங்கள்!

Post by மகா பிரபு Tue Jan 21, 2014 5:59 am

காளமுகர்கள் என்பவர்கள் சைவ சமயத்தின் ஒரு பிரிவினர் ஆவர். தமிழகத்தின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் மூவர் கோவில் ஒவ்வொன்றிலும் கருவறை, அர்த்த மண்டபம், துவார பாலகர், நந்தியீசர் என ஆகம விதிப்படி கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை சந்நிதி மேற்குப் பார்த்தவண்ணம் அமைந்துள்ளது. கருவறை 21' ல 21' என்கிற அளவில் சதுரமாக உள்ளது. விமானம் 32' உயரமாக உள்ளது. மூன்று கோவில்களுக்கும் பொதுவான ஒரு மகாமண்டபம் வெகு நேர்த்தியாக அமைந்திருந்தது. மகா மண்டபத்தை அடுத்து நந்தி மண்டபம், பலிபீடம் அமைந்திருந்த சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பிரகாரச் சுற்றில் பரிவார தேவதைகளுக்காகக் கட்டப்பட்டிருந்த பதினைந்து சந்நிதிகளின் அஸ்திவாரங்கள் மட்டுமே இன்று நாம் கண்ணால் காணக் கூடியவை. வடகிழக்கு ஈசான மூலையில் வட்ட வடிவில் நேர்த்தியாக அமைந்த படிக்கிணறு ஒன்று உள்ளது. இக் கோவிலைச் சுற்றிலும் பெரிய திருமதில் ஒன்று இருந்துள்ள தடயத்தை நம்மால் காண முடிகிறது.
மூன்று கோவில்களிலும் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தற்போது வடபுறம் உள்ள கோவிலில் மட்டுமே பாணலிங்கம் காணப்படுகிறது. இக் கருவறை விமானத்தின் உள் பகுதியிலிருந்து அண்ணாந்து பார்த்தால் ஒரு மகா ஆச்சரியமும், அதிசயமும் நமது கண்களுக்குப் புலப்படுகிறது.
அதாவது விமானக் கட்டுமானக் கற்கள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நேர்த்தி நம்மை வியக்க வைக்கிறது. சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள பாரத்தைக் கொண்டு விமானத்தின் உள்பகுதி கூம்பு போன்ற உள்கூடாக உருவாக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழரின் நாகரிக வளர்ச்சியை, கலாசார மேன்மையை உலகத் தரத்துக்கு எடுத்துச் செல்லும் மதிப்புமிக்கவை ஆகும்.

விமானத்தின் உச்சிப்பகுதி ஒரு திருமந்திரக் கல்லினால் மூடப்பட்டிருக்கிறது. தாமரை போன்ற பீடத்தின் மேலே கோவிலும், பரிவார தேவதை சந்நிதிகளும் மிக்க கலை நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
முசுகுந்தேசுவரர் திருக்கோவில்: மூவர் கோவிலுக்கு சற்று தொலைவில் மேற்கே கண்மாய்க் கரையில் பழமையான முசுகுந்தேசுவரர் திருக்கோவில் கற்றளியாய் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் நாமம் திருமுதுகுன்றம் உடையார் என்பதாகும். இக் கோவிலை மகிமாலய இருக்கவேள் என்கிற பராந்தக குஞ்சரமல்லன் எனும் சிற்றரசன் பராந்தக சோழனின் 14-ஆவது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 921-இல் கட்டி வைத்துள்ளான்.

மூவர் கோவிலைப் போலவே, இத் திருக்கோவிலும் முழுக்க முழுக்க சோழர்களின் கட்டடக் கலைப்பாணியில் கல்லால்
எழுப்பப்பட்டது.

இந்த திருமுதுகுன்றம் உடையார் கோவிலும், மூவர் கோவிலும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் ஒரே உருவ அமைப்பில் விமானங்கள் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. கோவிலின் எதிரே தூர்ந்துபோன நிலையில் பெரிய தெப்பக்குளம் ஒன்று உள்ளது.

இடங்கழி நாயனார் கோவில்: நெடுஞ்சாலையிலிருந்து இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் இடங்கழி நாயனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாறு கோட்டை, கொத்தளங்களுடன் கொடி பறக்க தலைநகராய் இருந்து ஆண்ட கொடும்பாளூர் நகரம் இன்று பண்டைய பெருமைகள் அனைத்தும் தொலைந்து, அமைதி சூழ்ந்த சிறிய கிராமமாக மாறியுள்ளது. ஆண்டுகள் ஆயிரம் கடந்த பின்னரும், இன்றளவும் கம்பீரமாய் நிலைத்து நிற்கும் கொடும்பாளூர் கற்றளிகள் கலாசார மேன்மையை எடுத்துச் சொல்கிற கருவூலங்களாகத் திகழ்கின்றன.

dinamani
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கொடும்பாளூர் அற்புதங்கள்! Empty Re: கொடும்பாளூர் அற்புதங்கள்!

Post by செந்தில் Tue Jan 21, 2014 12:27 pm

கைதட்டல் தகவலுக்கு நன்றி பிரபு  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொடும்பாளூர் அற்புதங்கள்! Empty Re: கொடும்பாளூர் அற்புதங்கள்!

Post by முரளிராஜா Fri Feb 14, 2014 6:50 am

கொடும்பாளூர் பற்றிய தகவலுக்கு நன்றி பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொடும்பாளூர் அற்புதங்கள்! Empty Re: கொடும்பாளூர் அற்புதங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum