தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சித்த மருத்துவ துளிகள்

View previous topic View next topic Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:01 am

1260 எளிய சித்த மருத்துவ குறிப்புகள் என்னும் நூலில் இருந்து...


1. மாம்பழம்:
முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி
தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம்
சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

2. வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

3. முகம் வழுவழுப்பாக இருக்க: கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

4. இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும்.
உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6. குழந்தைகளுக்கு:
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம்
சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில்
புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:03 am

7. உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

8. வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. சுகப்பிரவசமாக:
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து
ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

10. உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

11. காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன்
இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு
காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

12. நெஞ்சுவலி குணமாக: அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:07 am

13. சிலந்தி கடிக்கு மருந்து: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

14. சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

15. வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்

16. காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

17. நுரையீரல் குணமாக:
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து
போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு
வர நுரையீரல் நோய் குணமாகும்.

18. பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:09 am

19. வாதநோய் குணமாக: குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

20. மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

21. மேகரோகம் குணமாக: ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

22. நீரழிவு நோய் குணமாக:
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி
வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர
நீரழிவு நோய் குணமாகும்.

23. இரத்த பேதியை குணப்படுத்த:
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை
சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி
நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

24. மூட்டுவலி குணமாக: அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:11 am

25. நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

26. பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

27. சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

28. மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:
வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம்
சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும்.
இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

29. வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

30. வயிற்று பூச்சிகள் ஒழிய:
வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து
கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.





முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:13 am

31. மலச்சிக்கல் தீர:
பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து
ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3
நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும்.
மலச்சிக்கல் தீரும்

32. குழந்தைகளுக்கு கண் சூடுதனிய: நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

33. இரத்தத்தை சுத்தப்படுத்த: இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

34. கக்குவான் இருமல் குணமாக:
நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர்
தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை,
மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

35. இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

36. சொறி சிரங்கு குணமாக: கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:16 am

37. சளி மூக்கடைப்பு தீர: கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

38. தலைவலி குணமாக: குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

39. இரத்த கொதிப்பு குணமாக: அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.


40. கண்வலி வராமல் தடுக்க: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

41. தொண்டை கரகரப்பு நீங்க: பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

42. குடல்புண் குணமாக: மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:19 am

43. கால்பித்த வெடிப்பு: அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

44. இரத்தம் சுத்தமாக:
தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து
சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்

45. முடிவளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில்
தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

46. செருப்புக்கடி குணமாக: தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

47. கருப்பு முடியாக மாற்ற: காய்ந்த
நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து
வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

48. தொழுநோய் குணமாக: கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:20 am

49. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:
ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில்
கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய்
நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய்
நாற்றம் விலகும்.

50. சதை போடுவது குறைக்க: வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

51. தூக்கம் வர: வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.

52. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற:
உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர
துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

53. கண்கள் குளிர்ச்சி:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து
பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

54. வாந்தியை நிறுத்த: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 10:22 am

55. பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

56. வயிற்று கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

57. மந்தம் அஜீரணம் குணமாக:
கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு
பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர்
சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு
நீங்கும்.

58. சிறு நீர் எரிச்சல் குணமாக: அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

59. வாய் நாற்றம் போக:
நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து
காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

60. சர்க்கரை வியாதி நீங்க: கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.


நன்றி - http://www.puthiyatamil.net/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by ஸ்ரீராம் Sun Feb 09, 2014 5:33 pm

அறுபது துளிகளும் அருமை அருமை
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by kanmani singh Mon Feb 10, 2014 11:30 am

அடேங்கப்பா... எவ்ளோ விஷயங்கள்! நன்றி நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சித்த மருத்துவ துளிகள்  Empty Re: சித்த மருத்துவ துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum