Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
முன்பொரு சமயம் குமுதம் இதழைத் தயாரித்தபோது ராஜேஷ்குமார் தன் வாசகர்களுக்காக ஒரு மினி க்ரைம் நாவலை நான்கே பக்கங்களில் எழுதினார். அதை நிறையப் பேர் படித்திருக்க மாட்டீர்கள் என்பதால் இங்கே...
தீர்ப்பின் நிறம்
- ராஜேஷ்குமார் -
(1) இரவு மணி பத்து. காலிங் பெல் நீளமாகக் கூப்பிட, யூனிபார்மைக் கழட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சுகுமார் கதவைத் திறக்க- வெளியே ஒரு நபர். இருட்டில் முகம் தெரியவில்லை. ‘‘யார்?’’ -வந்தவன் சுட்டான். ஸைலன்ஸர் பிஸ்டல்! இன்ஸ்பெக்டர் மல்லாந்தார்.
(2) பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ் செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்ப, போக்குவரத்தற்ற ரோட்டின் வளைவில் திடுமென்று அவன் நின்றிருக்க, அதிர்ந்து போய் பிரேக்கை அழுத்தினார். நின்றிருந்தவன் அவருடைய தலையில் ஓங்கி அடிக்க, குப்புற விழுந்தார். விழுந்தவரை இழுத்துக் கொண்டு போய் ரோட்டின் நடுவே இருந்த மேன்-ஹோலைத் திறந்து உள்ளே திணித்து மூடினான். ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
(3) இரவு பன்னிரெண்டு மணி. மத்திய சிறைச்சாலை. சிறை சூப்பிரண்டெண்டுக்கு முன் ஜெயிலர், வார்டன். கலவர முகங்கள். ‘‘பூபதி தப்பிச்சுட்டானா?’’ ‘‘ஆமா ஸார். எப்படின்னு தெரியலை’’
(4) ‘‘ஸார், டெலிகிராம்’’ குரல் கேட்டுக் கொட்டாவியோடு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சேதுவின் மார்பில் தோட்டா பாய்ந்து அவரை உடனடியாகச் சாய்த்தது.
(5) ஊருக்கு வெளியே இருட்டில் மயானம். சுண்ணாம்புப் பூச்சோடு சமாதிகள் தெரிய, கிழக்குப் பக்க சமாதியில் ஓர் உருவம் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. வானத்தில் உடைந்த நிலா. சிதறிய நட்சத்திரங்கள்.
(6) காலை ஐந்தரை மணி. ஜட்ஜ் பிரகாசம் மார்னிங் வாக் போக வெளியே வந்தார். வேகமாய் நூறு மீட்டர் தூர நடை. அவர் அந்த மரத்தைக் கடந்ததும் அதன் பின்னிருந்து வெளிப்பட்டான் அவன். சுட்டான். ஜட்ஜ் பின்பக்கமாய் மடங்கி விழ, சுட்டவன் பக்கத்தில் வந்து அவருடைய நெஞ்சை மிதித்து, துடித்துக் கொண்டிருந்த உயிரை நிறுத்தினான்.
(7) சரோஜா பயமாய் அவனை ஏறிட்டாள். ‘‘நீ அவசரப்பட்டுட்டே செல்வம்...’’ என்றாள். ‘‘ஊ...ஹும்... நான் எடுத்த முடிவு சரிதான்...’’ என்றான் அவன்.
(8) ‘‘ராத்திரியில் நாலு கொலை. இன்ஸ்பெக்டர் சுகுமார், பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ், ஸாடாக் விட்னஸ் சேது, ஜட்ஜ் பிரகாசம் -ஒரே மாதிரி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்காங்க’’ போலீஸ் கமிஷனர் பெருமூச்சு விட்டார்.
(9) ஜெயில் சூப்பிரண்டெண்ட் ஜீப்பில் தாவி ஏறினார். ஜெயிலர் ஓடி வந்தார். ‘‘ஸார்....’’ ‘‘என்ன..?’’ ‘‘தப்பின கைதி பூபதி போன் பண்ணியிருந்தான். அவனைத் தேடறதை நாம நிறுத்தணுமாம். இல்லேன்னா உங்க கர்ப்பிணிப் பொண்ணைச் சுட்டுக் கொல்வானாம்.’’ ‘‘என்னோட இருபத்தஞ்சு வருஷ சர்வீஸ்ல எந்தக் கைதியையும் தப்பிப் போக விட்டதில்லை. என் கர்ப்பிணிப் பொண்ணை அவன் சுட்டாலும் சரி, அவனைப் பிடிக்காம நான் வரப் போறதில்லை’’ -சொன்ன ஜெயில் சூப்பிரண்டெண்ட் ஜீப்பை விரட்டினார்.
10) டி.எஸ்.பி. அதிர்ச்சியாய் கமிஷனரை ஏறிட்டார். ‘‘தப்பியோடின கைதி பூபதி ஒரு மரண தண்டனைக் கைதியா...?’’ ‘‘ஆமா ஸார். வர்ற பத்தாம் தேதி அவனைத் தூக்கிலே போடறதா இருந்தது.’’
(11) ‘‘என்னாச்சு...?’’ டி.ஜி.பி. கேட்டார். ‘‘ஆள் கிடைக்கலை ஸார்...’’ ஜெயில் சூப்பிரண்டெண்ட் முனகினார். ‘‘ரிடையராக ரெண்டு மாசம் இருக்கும் போது உங்க சர்வீஸ்ல இப்படி நடந்திருக்க வேண்டாம்.’’ ‘‘ஸார்... ஷுட் அட் ஸைட் ஆர்டர் எனக்கு வேணும்...’’ ‘‘கிராண்டட். அந்தப் பூபதியைப் பார்த்த நிமிஷமே சுட்டுத் தள்ளுங்க...’’
(12) ‘‘ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்?’’ ‘‘ஆமா...’’ ‘‘கார்ப்பரேஷன் எருக் கிடங்கு லாரியில் ஒரு டெட்பாடி...’’ போலீஸ் போய்ப் பார்த்தார்கள். ஒரு நிர்வாணப் பெண்- உடம்பில் தோட்டா. ஒரு கான்ஸ்டபிள் கத்தினார். ‘‘ஸார்! இது சரோஜா. பூபதியோட காதலி!’’
(13) ராத்திரி ஒரு மணி. மயானத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஜீப்பை நிறுத்தி, ஜெயில் சூப்பிரண்டெண்ட் இறங்கினார். உடன் வந்த ஜெயிலரைக் கூப்பிட்டார். ‘‘விக்டர்...’’ ‘‘ஸார்...’’ நீங்க மயானத்தை இடப்பக்கமாச் சுத்திட்டு வாங்க... நான் வலது பக்கமாச் சுத்திட்டு வர்றேன்...’’
(14) சமாதிக்கு மத்தியிலிருந்து அவன் எழுந்தான். ஜீ்ப்பிலிருந்து இறங்கி நடக்கிற ஜெயில் சூப்பிரண்டெண்டையும், ஜெயிலரையும் பார்த்தான்.
(15) ஜெயில் சூப்பிரண்டெண்ட் மெதுவாய் நடந்து மயானத்திற்குள் நுழைந்து இடிந்த அந்தப் பழைய கட்டிடத்துப் பக்கமாய்ப் போனார்.
(16) கட்டிடத்துக்குள் மறைந்திருந்த அவன் சுவரில் முதுகைத் தேய்த்துக் கொண்டு அசையாமல் அப்படியே நின்றான்.
(17) ஜெயில் சூப்பிரண்டெண்ட் கட்டிடச் சுவரை நெருங்கியதும் மெல்லக் கூப்பிட்டார். ‘‘பூபதி!’’ ‘‘ஐயா...’’ ‘‘உன் லிஸ்ட்ல இருக்கற எல்லாரையும் முடிச்சுட்டியா?’’ ‘‘முடிச்சுட்டேன்யா. லட்சக்கணக்கில் பணம் தர்றவங்களுக்கு சாதகமாக தீர்ப்பை சொல்லிட்டு வந்த நீதிபதி பிரகாசம், பொய் சாட்சிகளை உருவாக்கி நிரபராதிகளை தூக்குக்கு அனுப்பிட்டிருந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ், ப்ராடு இன்ஸ்பெக்டர் சுகுமார், பொய்சாட்சி சொல்றதுக்காகவே அவதாரம் எடுத்த சேது, என்மேல கொலைப் பழியைச் சுமத்திட்டு அப்பாவி மாதிரி நடிச்ச சரோஜா... எல்லாரையும் முடிச்சுட்டேன்யா. செய்யாத கொலைக்கு தூக்குல தொங்கணுமேன்னு நினைச்சேன்... இப்ப மனசு திருப்தியா இருக்குய்யா. ஊருக்கு ஒரு நல்ல காரியம் பண்ணின திருப்தி இருக்கு.’’ ‘‘நான் கொடுத்த துப்பாக்கி எங்கே?’’ ‘‘அதை ஆழமாக் குழி தோண்டிப் புதைச்சுட்டேன்யா...’’ ‘‘குட்..! உன்னைக் கண்டதும் சுடறதுக்கான ஆர்டரோட இப்ப வந்திருக்கேன். எனக்குப் பயந்து ஓடற மாதிரி ஓடு. சுட்டுத் தள்றேன்...’’ ‘‘சந்தோஷம்ய்யா...’’ அவன் இருட்டிலிருந்து வெளிப்பட்டு ஓடினான்.
(18) ஜெயில் சூப்பிரண்டெண்ட் வேண்டுமென்றே கத்தினார். ‘‘பூபதி... ஓடாதே...!’’ அவன் ஓடினான். ‘‘ஜெயிலர், கம் திஸ் ஸைட்..!’’ சூப்பிரண்டெண்ட் குரல் கொடுக்க, ஜெயிலர் மறு பக்கத்திலிருந்து ஓடி வந்தார். ஜெயிலரைச் சாட்சியாக வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த பூபதியை நிம்மதியாய்ச் சுட்டார் சூப்பிரண்டெண்ட். பூபதி சந்தோஷமாய் தோட்டாவை மார்பில் வாங்கிக் கொண்டு சரிந்தான். திருப்தியோடு உயிரை விட ஆரம்பித்தான்.
nandri-http://minnalvarigal.blogspot.com/2012/07/blog-post.html

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
ஒரு பக்கத்தில் ஒரு மர்ம நாவலை ராஜேஷ்குமார் அவர்கள் மட்டும்தான் எழுதமுடியும், இவரின் சிறுகதைகளை கூட பல முறை படித்துள்ளேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
அருமை பகிர்வுக்கு நன்றி
இவரின் கதைகள் ரொம்ப பிடிக்கும்
இவரின் கதைகள் ரொம்ப பிடிக்கும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
ரானுஜா wrote:அருமை பகிர்வுக்கு நன்றி
இவரின் கதைகள் ரொம்ப பிடிக்கும்
எனக்கும் பிடிக்கும் அக்கா
நிறைய படிக்க [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
ஸ்ரீராம் wrote:ரானுஜா wrote:அருமை பகிர்வுக்கு நன்றி
இவரின் கதைகள் ரொம்ப பிடிக்கும்
எனக்கும் பிடிக்கும் அக்கா
நிறைய படிக்க [You must be registered and logged in to see this link.]
நன்றி ஸ்ரீராம் என்ன தான் ஆனாலும் கைல புத்தகம் வச்சு படிக்கும் சுகமே தனி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
அது உண்மைதான் அக்கா. கணினியை கட்டிட்டு அழற இந்த காலத்தில் அது ரொம்ப கஷ்டமா இருக்கிறது அக்கா.
முன்பு போல புத்தக கண்காட்சியில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும்.
முன்பு போல புத்தக கண்காட்சியில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
ஆமா ஸ்ரீராம். முன்னலாம் என் வீட்ல எங்க பார்த்தாலும் புத்தகமா இருக்கும். அம்மா, தங்கை எல்லாரும் கேட்டு வாங்கி படிப்பாங்க. இப்போ????????????????ஸ்ரீராம் wrote:அது உண்மைதான் அக்கா. கணினியை கட்டிட்டு அழற இந்த காலத்தில் அது ரொம்ப கஷ்டமா இருக்கிறது அக்கா.
முன்பு போல புத்தக கண்காட்சியில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும்.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
ரானுஜா wrote:ஆமா ஸ்ரீராம். முன்னலாம் என் வீட்ல எங்க பார்த்தாலும் புத்தகமா இருக்கும். அம்மா, தங்கை எல்லாரும் கேட்டு வாங்கி படிப்பாங்க. இப்போ????????????????ஸ்ரீராம் wrote:அது உண்மைதான் அக்கா. கணினியை கட்டிட்டு அழற இந்த காலத்தில் அது ரொம்ப கஷ்டமா இருக்கிறது அக்கா.
முன்பு போல புத்தக கண்காட்சியில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும்.
எங்க வீட்டில் கூட அப்படிதான். இப்ப காலம் மாறி போச்சு.
சீரியல் பார்க்கவே நேரம் இல்லை இன்றைய தலைமுறையினருக்கு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தீர்ப்பின் நிறம் - ராஜேஷ்குமார் -
ஸ்ரீராம் wrote:ரானுஜா wrote:ஆமா ஸ்ரீராம். முன்னலாம் என் வீட்ல எங்க பார்த்தாலும் புத்தகமா இருக்கும். அம்மா, தங்கை எல்லாரும் கேட்டு வாங்கி படிப்பாங்க. இப்போ????????????????ஸ்ரீராம் wrote:அது உண்மைதான் அக்கா. கணினியை கட்டிட்டு அழற இந்த காலத்தில் அது ரொம்ப கஷ்டமா இருக்கிறது அக்கா.
முன்பு போல புத்தக கண்காட்சியில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும்.
எங்க வீட்டில் கூட அப்படிதான். இப்ப காலம் மாறி போச்சு.
சீரியல் பார்க்கவே நேரம் இல்லை இன்றைய தலைமுறையினருக்கு.
அதெல்லாம் சும்மா... வாங்கித் தர ஆளில்லை...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum