தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஞானக் கதைகள்

View previous topic View next topic Go down

ஞானக் கதைகள் Empty ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:10 pm

நன்றி - http://jeyarajanm.blogspot.in/

ஞானி அமைச்சர்

சீன தத்துவ ஞானி லா வோ த்சுவினால் கவரப்பட்ட அந்த நாட்டு மன்னன் அவரை அமைச்சரவையில் மகாமந்திரியாக நியமித்தால் தனது நாடு சிறப்படையும் என்று கருதினான்.அருகில் இருந்த ஒரு அமைச்சர், ''மன்னா,ஞானிகளை வணங்கலாம்.அன்றாட வாழ்க்கையில் அவர்களை இணைத்துக் கொள்வது சரியாக வராது,''என்றார்.அதைப் பொருட்படுத்தாத மன்னன் ஞானியிடன் சென்று தலைமை அமைச்சர் பொறுப்பேற்குமாறு வேண்டினான்.ஞானி சொன்னார்,''ஆட்சி பற்றிய உனது கண்ணோட்டம் வேறு,எனது கருத்துக்கள் வேறு.அதனால் உன் முடிவு சரி வராது,'' என்றார். மன்னன் மீண்டும் வலியுறுத்தவே ஞானியும் தலைமை அமைச்சராகப் பொறுபேற்றார்.முதல் நாளே ஒரு வழக்கு விசாரணைக்கு ஞானியிடம் வந்தது.திருடன் ஒருவன் அவ்வூரில் புகழ்பெற்ற ஒரு பணக்காரனின் வீட்டில் திருடும் போது கையும் களவுமாகப் பிடிபட்டு விசாரணைக்கு நிறுத்தப் பட்டிருந்தான்.விசாரணையில் திருடனும் தான் செய்த திருட்டை ஒப்புக் கொண்டான்.ஞானி,''திருடியவனுக்கும்,திருட்டுக் கொடுத்தவனுக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை ''என்று தீர்ப்பளித்தார்.மன்னர் உட்பட அனைவரும் இத்தீர்ப்பு கேட்டு திடுக்கிட்டனர்.தான் செய்த தவறு என்ன என்று பணக்காரன் கேட்டதற்கு,''அவன் வறுமை காரணமாகத் திருடினான்.மற்றவர்களின் உழைப்பைத் திருடி,திறமை,சாமர்த்தியம் என்ற பெயரில் பணத்தைக் குவித்து அவனைத் திருடும் படி நீ தூண்டினாய்..நியாயமாய் உனக்கு அதிகதனடனை கொடுத்திருக்க வேண்டும்,''என்றார் ஞானி.தண்டனை பெற்றவன் மன்னரை சந்தித்து,''மன்னா,இவனை அமைச்சராய் வைத்திருக்காதீர்கள்.இன்று எனக்கு ஏற்பட்ட நிலை,நாளை உங்களுக்கும் ஏற்படலாம்.உங்கள் கஜானாவில் உள்ள சொத்துக்கள் ஏழைகளிடம் சுரண்டப்பட்டது என்று கூறு உங்களையும் சிறையில் அடைக்கலாம்.''என்றான்.குழப்பம் அடைந்த மன்னன் ஞானியிடமிருந்த பதவியை பறித்தான்.
குற்றம் நடைபெறக் காரணமான சூழ்நிலைகளை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் தண்டனைகள் அளிப்பதன் மூலம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியாது. மேலும் தந்திரமான குற்றவாளிகள் உருவாகும் சூழ்நிலை தான் ஏற்படும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:11 pm

யசோதரை

புத்தர் ஞானம் அடைந்தபின் பல ஊர்களுக்கும் சென்று வருகையில் ஒரு நாள் தனது சொந்த ஊரைக் கடந்து செல்ல வேண்டி வந்தது.நடு இரவில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்ததால் தன் மீது தனது மனைவி யசோதரை கோபமாய் இருப்பார் என்பதனை நினைவில் கொண்டு,தனது மனைவியை சந்திக்க சென்றார்.சந்தித்தபோது யசோதரை மிகுந்த கோபத்துடன்தான் இருந்தார்.அவர் புத்தரிடம் சொன்னார்,
''நீங்கள் இந்த உலகத்தைத் துறந்ததைப் பற்றி எனக்கு கோபம் இல்லை.அப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு இருப்பது தெரிந்திருந்தால் நான் அதற்குத் தடையாக இருந்திருக்க மாட்டேன்.ஆனால் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை.அதுதான் எனக்கு வருத்தம்.ஒன்றும் கூறாமல் நட்ட நடு ராத்திரியில் நீங்கள் பிரிந்து சென்றது எனக்கு எவ்வளவு வேதனை அளித்தது தெரியுமா?நான் வீர குலத்துப்பெண்.தனது கணவன் போருக்கு சென்றால்,அவரை மாலை அணிவித்து வழியனுப்பும் குலத்தை சேர்ந்தவள்.அவ்வாறு அனுப்பும்போது கூட கண்ணீர் விட்டால் தனது கணவரின் வீரத்திற்கு இழுக்கு என்று எண்ணக் கூடியவள்.நீங்கள் தைரியமாக உலகத்தைத் துறக்கப் போவதாக என்னிடம் கூறி சென்றிருந்தால் நான் பெருமை அடைந்திருப்பேன்.என்னுடைய பெருமையையும்.அமைதியையும் குலைத்து விட்டீர்கள்.நீங்கள் என்னை முழுமையாக நேசித்திருந்தால் நானும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பியிருப்பேன்.எனவே என் கோபம் உங்கள் துறவரத்துக்கல்ல,என்னிடம் சொல்லாமல் போனதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.''
புத்தர்,''நீ சொன்னது சரிதான்.நான் அதற்காக மன்னிப்புக் கேட்கவே இப்போது வந்துள்ளேன்.என்னை மன்னித்துவிடு.முழுமையான அன்பு என்றால் என்ன என்பதை இப்போது அறிந்து இங்கு வந்திருக்கிறேன்.இவ்வளவு தாமதமாக இங்கு வந்ததற்குக் காரணம் ,உன் கோபம் படிப்படியாகக் குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் தான்.''
பின் யசோதரை தனது கணவராகிய புத்தரிடம் சிட்சை பெற்றுக் கொண்டார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:12 pm

சிரிக்கும் புத்தர்கள்

சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தார்கள்.அவர்கள் எங்கும் சேர்ந்தே செல்வார்கள்.ஒரு ஊருக்குச் சென்றால் அந்த ஊரின் மையப் பகுதியில் நின்று கொண்டு மூவரும் வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பிப்பார்கள்.உடனே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்து விடும்.சிறிது நேரத்தில் அனைவருமே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.அவர்கள் எந்த விதமான புத்திமதிகளோ ஆலோசனைகளோ சொல்வது இல்லை.அது ஏன்?சிரிப்பைத்தவிர அவர்கள் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அவர்கள் வந்த இடம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மக்கள் அவர்களை மிக நேசித்து 'சிரிக்கும் புத்தர்கள்' (LAUGHING BUDHDHAS)என்று அழைத்தார்கள்.ஒரு கிராமத்துக்கு சென்ற போது அவர்களில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.இப்போது மீதி இரண்டு பேரும் கண்டிப்பாக அழுவார்கள் என்று எண்ணி மக்கள் சென்றபோது அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.அதில் ஒருவர் அதிசயமாய் வாய் திறந்து,''அவன் மரணத்தில் எங்களை வென்று விட்டான். அவன் வெற்றியைக் கொண்டாட நாங்கள் சிரிக்கிறோம்,''என்றார்.பின் இறந்த புத்தரை அப்படியே சிதைக்குக் கொண்டு போனார்கள்.பிணத்தைக் குளிப்பாட்டவில்லை.புதுத் துணிகள் மாற்றவில்லை.ஏன் என்று மக்கள் கேட்டதற்கு அந்த ஞானி சொன்னார்,''அவன் இறக்கும் முன்னே, தான் தூய்மையாகவே இருப்பதாகவும் அதனால் இறந்தபின் தன்னை எந்த மாற்றமும் செய்யாது அப்படியே சிதையில் எரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறான்'' என்றார்.சீதை மூட்டப்பட்டது.திடீரென இறந்த உடலிலிருந்து வான வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன.அப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது,அவர் ஏன் ஆடை மாற்ற வேண்டாம் என்று சொன்னார் என்று.தான் இறந்த பின்னும் மக்கள் கவலையின்றி சிரிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது ஆடையின் உள்ளே வெடிகளை ஒளித்து வைத்திருக்கிறார். அது கடைசி வரை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.சிரிப்பையே போதனையாக தந்த அவர்களை இன்றும் மக்கள் மறவாதிருக்கிறார்கள்.
தற்போது அவர்கள் பொம்மைகளை வீட்டில் வைப்பது வளம் தரும் என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:12 pm

சம்பிரதாயம்

மத போதகர் ஒருவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அவர் கடவுளை வணங்கும் முறை மற்றும் மத சம்பந்தமான சாஸ்திர சம்பிரதாயங்களில் கரை கண்டவர்.திடீரென கடலின் சீற்றம் காரணமாக கப்பல் சேதமடைந்து தெய்வாதீனமாக அவர் தப்பி ஒரு தீவினை அடைந்தார்.இவர் ஒரு மதபோதகர் என்பதனை அறிந்த அவ்வூர் மக்கள் மிகுந்த நட்பு பாராட்டினர்.அவரும் அங்கு மத போதகர் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.மக்களும் அங்கு அவ்வாறு யாரும் இல்லைஎன்றும் அவ்வூரில் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும் அவர்கள் இறை பக்தி மிக்கவர்கள் என்றும் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்றும் அவர்கள் சொல்வது படிதான் அங்கு வழிபாடுகள் நடக்கும் என்று கூறினார்.போதகரும் உடனே அவர்களைப் பார்க்க விரும்பியதால் அவர்களிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார்.மூன்று சகோதரர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.பொதுவான விசயங்கள் பேசி முடித்ததும் போதகர் அங்கு இறைவழிபாடு என்ன முறையில் நடக்கிறது என்று கேட்டார்.அந்த சகோதரர்கள் ,''நாங்கள் எங்கள் தொழிலில் முழு கவனமுடன் இருப்போம்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் ஆண்டவனுக்கு தினமும் சிறிது நேரம் சாதாரணமாக நன்றி சொல்வோம்.''என்றனர்.இவர்கள் அறியாமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய போதகர் அவர்களிடம் இறை வழிபாட்டு முறைகளை விளக்கினார்.அவர்களுக்கு சில பாடல்கள் புரியவில்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினர்.பல முறை சொல்லிக் கொடுத்தும் அவர்களால் சரியாக உச்சரித்துப் பாடமுடியவில்லை.அதற்காக அவர்கள் வருத்தப்பட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள்.இதற்கிடையில் ஒருநாள் ஒரு கப்பல் அங்கு வந்ததால் போதகரும் அவர்களிடம் தான் சொல்லிக் கொடுத்தவற்றைக் கடைப்பிடிக்க சொல்லி அறிவுறுத்தி விட்டு கப்பலில் ஏறினார்.கப்பல் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. .மக்கள் அனைவரையும் பார்த்துக் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தார்,போதகர்.அப்போது அவர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.அந்த மூவரும் கடலில் வேகமாக நடந்தவாறு கப்பலை நோக்கிக் கத்தியபடி வந்து கொண்டிருந்தனர்.கப்பல் உடனே நிறுத்தப்பட்டது. மூச்சிறைக்க வந்த அவர்கள் போதகரிடம்,''ஐயா,நீங்கள் சொல்லிக் கொடுத்தது மறந்துவிட்டது.தயவு செய்து இன்னொரு முறை சொல்லிக் கொடுங்கள்,''என்றனர்.போதகர் சொன்னார்,''என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.உண்மையான பக்தி சம்பிரதாயங்களில் இல்லை என்று நீங்கள் எனக்கு உணர்த்திவிட்டீர்கள்.நீங்கள் உங்கள் வழக்கப்படியே இறைவனை வணங்குங்கள்.கடலிலே நடக்கக் கூடிய அளவுக்கு உங்களிடம் இறைவனின் கருணை உள்ளது .உங்கள் காலில் விழக்கூட நான் தகுதியற்றவன்,'' என்றார்.அவர் சொல்வது புரியாது அம்மூவரும் அவரிடம் விடைபெற்றனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:13 pm

உனக்கென்ன வேலை?

ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது,''நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''பிறந்து கொள்,''
பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது,''நான் வளர வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''வளர்ந்து கொள்.''
வளர்ந்த குழந்தை கேட்டது,''நான் படிக்க வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''படித்துக் கொள்.''
படித்த பையன் கேட்டான்,''எனக்கு நல்ல வேலை வேண்டுமே?''
கடவுள் சொன்னார்,''தேடிக் கண்டுபிடி,''
வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்,''எனக்கு திருமணம் செய்ய வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''நல்ல பெண்ணாய்ப்பார்த்து திருமணம் செய்துகொள்.''
திருமணம் ஆனதும் கேட்டான்,''நல்ல குழந்தை வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''பெற்றுக் கொள்.''
வயதானபின் அவன் கேட்டான்,''நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே,''
கடவுள் சொன்னார்,''இறந்து கொள்.''
அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்,''ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய்.அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?''
கடவுள் புன்னகையுடன் சொன்னார்,''இத்தனையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே அதுதான் நான்.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:13 pm

கடவுளைப்பற்றி

புத்தரிடம் ஒரு கற்றறிந்த பிராமணர் கடவுளைப்பற்றிக் கேட்டார்.புத்தர் பதில் ஏதும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார்.இதைப் பார்த்த அவர் சீடர் ஆனந்தனுக்கு ஏமாற்றம்.ஏனெனில் அந்த பிராமணருக்கு சீடர்களின் எண்ணிக்கை அதிகம்.அவர் மட்டும் பௌத்த மதத்திற்கு மாறி விட்டால் அவரைப் பின்பற்றி ஆயிரக் கணக்கானோர் பௌத்த மதத்திற்கு மாறி விடுவார்கள்.ஆனால் புத்தர் மௌனமாகவே இருந்தார்.சிறிது நேரம் கழித்து அந்த பிராமணர் புத்தரை வணங்கி நன்றி தெரிவித்து விட்டு போய் விட்டார்.அவர் போனபின் ஆனந்தன் புத்தரிடம் நல்ல ஒரு வாய்ப்பை இழந்து விட்டதாகக் கூறி வருத்தப்பட்டார்.புத்தர் சொன்னார்,''ஒரு நல்ல குதிரைக்கு சாட்டையின் நிழலே போதுமானது.அந்தக் குதிரையை சாட்டையினால் அடிக்க வேண்டியதில்லை.அவர் மன மாற்றம் அடைந்துவிட்டார்.''ஆனால் ஆனந்தனுக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை.ஆனால் மறுநாள் காலை அந்த பிராமணர் ஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்தரிடம் வருவதைப் பார்த்த ஆனந்தனால் நம்ப முடியவில்லை.அவர் அன்று இரவு புத்தரிடம்,''இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது?நீங்கள் கண்களை மூடி மௌனமாக இருந்தது அவரை அவமதிப்பதுபோல நான் உணர்ந்தேன்.ஏனென்றால் அவர் முக்கியமான கேள்வி கேட்டு நீங்கள் சரியான பதில் சொல்ல மறுத்து விட்டீர்களே?''என்று கேட்டார்.புத்தர் சொன்னார்,''இந்த மௌனம் ஒரு சூட்சுமமான பதில் ஆகும்.அது அவருக்குத் தெரியும்.கடவுளைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது.நான் ஏதாவது சொல்லியிருந்தால் என் மீது நம்பிக்கை இல்லாது அவர் போயிருப்பார்.ஏனென்றால் நான் சொல்லும் கடவுள்,கடவுளே அல்ல என்பதையே காட்டியிருக்கும்.அதனால்தான் நான் என் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக இருந்தேன்.கண்களைத் திறந்திருந்தால் கூட கண்களின் மூலம் நான் எதுவோ சொல்ல வருகிறேன் என்று அவர் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும்.எனவே என் மௌனம்தான் சரியான பதில்.அதை அவரும் ஏற்றுக் கொண்டார்.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:14 pm

புதியவினை

புத்தர் ஞானமடைந்தபின் அவர் உறவினர் தேவதத்தன் அவருக்கு விஷமிட முயற்சி செய்தான்.அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான். .ஆனால் எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.ஒருமுறை ஒரு மதம் பிடித்த யானையை புத்தரின் அருகில் ஏவி விட்டான்.ஆனால் அது புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,கண்களை மூடிக் கொண்டது.சிலர் புத்தரைக் கேட்டார்கள்,''தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான்.ஆனால் நீங்கள் அவனை ஒன்றும் செய்வதில்லை.ஏன்?அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?''புத்தர் சொன்னார், ''என்னுடைய கடந்த காலச் செயல்களால்தான் இவை எல்லாம் நடக்கின்றன. கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன்.அந்த சங்கிலித் தொடரின் பிரதிபலிப்பாக அவன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.இது அவனுடைய செயல் அல்ல.அதேபோல் கடந்த காலத்தில் இந்த யானைக்கு நான் ஏதேனும் உதவி செய்திருப்பேன். அப்படியில்லை என்றால் அது எப்படி இவ்வாறு சாந்தமாக என் அருகில் நிற்கும்?இப்போது நான் தேவதத்தன் செயல்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.அப்படி இல்லாமல் நான் பதிலுக்கு ஏதேனும் செய்தால் மீண்டும் ஒரு சங்கிலி உருவாகிவிடும்.என் கடந்த காலச் செயல்களுக்கு இப்போது தேவதத்தன் செய்யும் செயல்களோடு தேவதத்தனுடைய விசயங்கள் முடிந்து போகட்டும்.நான் இனி ஒரு புதிய சங்கிலியை,வினையை,கர்மத்தை எதிர்காலத்தில் உருவாக்கப் போவதில்லை.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:14 pm

ஒளி சென்றதெங்கே?

சூபி ஞானி ஒருவர் ஒரு மாலை வேளையில் ஒரு கிராமத்துப் பக்கம் சென்று கொண்டிருந்தார்.ஒரு குழந்தை எரிந்து கொண்டிருந்த கை விளக்கோடு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது.அந்த ஞானி குழந்தையை நிறுத்திக் கேட்டார்,''இந்த விளக்கின் ஒளி எங்கிருந்து வந்தது?நீதானே விளக்கேற்றினாய்?''குழந்தை பதில் அளித்தது,''நான்தான் விளக்கேற்றினேன்.ஆனால் ஒளி எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது.''பின் அந்தக் குழந்தை விளக்கைத் தனது வாயால் ஊதி அணைத்தது. அது ஞானியிடம்,''இப்போது உங்கள் முன்னர்தான் ஒளி மறைந்து விட்டது.இப்போது சொல்லுங்கள்,ஒளி எங்கே சென்றது?இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் நான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.''என்று கேட்டது.திகைத்துப் போன ஞானி அக்குழந்தையின் காலில் விழுந்தார்.இனி யாரிடமும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதில்லை என்று உறுதி அளித்தார்.அக்குழந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஒளி சென்ற இடம் தனக்குத் தெரியாது என்றார்.தான் பதில் அளிக்க முடியாத கேள்வியைப் பிறரிடம் கேட்பது முட்டாள்தனம் என்பதனை உணர்ந்தார்.பின் அவர் கூறினார்,''விளக்கை விடு.அதற்கு மேலாக எனக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறாய்.என் விளக்கில்(உடல்)ஒளி வருவது எங்கிருந்து என்று எனக்குத் தெரியாது.அது எங்கு மறையும் என்பதும் தெரியாது.என் விளக்கைப் பற்றி முதலில் நான் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.பின் இந்த மண் விளக்கின் ஒளியைத் தேடுகிறேன்.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:15 pm

காய்ந்த இலை

ஞானம் தேடி ஒரு பெண் சமண ஆசிரமம் ஒன்றில் சேர்ந்தாள்.அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக''நீ உன்னையே உணர்வாயாக''என்றனர்.அது அவளுக்குப் பிடிபடவில்லை/அவளுக்கு எப்படி போதிப்பது என்று அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை.ஒருநாள் அவள் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தபோது காய்ந்த இலை ஒன்று மரத்திலிருந்து உதிர்வதைக் கண்டாள்.அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் திடீரென ஆடிப்பாட ஆரம்பித்தாள்.அவள் ஞானம் அடைந்து விட்டாள் .ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள்,''என்ன படித்தீர்கள்?எந்த சாத்திரம் கற்று நீங்கள் ஞானம் அடைந்தீர்கள்?அதை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.நீண்ட காலமாக நாங்களும் என்னென்னவோ படித்தும் ஞானம் அடைய முடியவில்லை. ஆனால் நீங்கள் குறுகிய காலத்தில் எதையும் படிக்காமலேயே ஞானம் அடைந்து விட்டீர்களே!''என்று கூறி ஆச்சரியப்பட்டனர்.அந்தப் பெண் சொன்னாள்,''எதையும் படித்து நான் கற்றுக் கொள்ளவில்லை.மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று விழுவதைக் கண்டேன்.என் ஆசை நிறைவேறி விட்டது,''மற்றவர்கள் சொன்னார்கள்,''நாங்களும்தான் மரத்திலிருந்து இலைகள் விழுவதைப் பார்க்கிறோம்.அது உன்னை மட்டும் எப்படி பாதித்தது?''அவள் சொன்னாள்,''ஒரு காய்ந்த இலை விழுவதைப் பார்த்ததும் என்னிலிருந்து ஏதோ கீழே விழுந்தது.இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப்போல விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.பின் எதற்குப் பெருமை,கர்வம் எல்லாம்?காய்ந்த இலையைக் காற்று உதைத்து எல்லா திசைகளிலும் மாறி மாறி அடித்துச் செல்வதைக் கண்டேன்.நாளை அது சாம்பலாகிவிடும்.நானும் அந்த இலையைப் போன்றே அலைவேன்.இன்றிலிருந்து நான் இங்கில்லை.இதை அந்த காய்ந்த இலையிலிருந்து கற்றுக் கொண்டேன்.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:15 pm

கொண்டாட்டம்.

சுஷ்யா என்றொரு யூத ஞானிஇருந்தார்.அவர் எப்போதும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருப்பார்.யூதக் கோவிலில் அவர் ஆட ஆரம்பித்து விட்டால் டேபிள்,சேர்,எல்லாம் பறக்கும்.எதிர்வரும் ஆட்கள் ஒதுங்கி ஓடி விடுவார்கள்.ஆடும்போது அவருக்கு எதுவும் தெரியாது. ஆட்டத்தில் தன்னையே அவர் மறந்து விடுவார்.இறை நினைப்பு மட்டுமே இருக்கும்.
ஒருநாள் திடீரென சிறுவனாயிருந்த அவருடைய ஒரே மகன் இறந்து விட்டான்.அவன் மீது அவருக்கு அளவு கடந்த பாசம்.அவன் இறந்ததும் அவர் என்ன செய்தார் என்று நினைக்கிறீர்கள்?கண்களில் ஆனந்தக் கண்ணீர் சிந்த,கல்லறை வரை அவர் ஆடிக் கொண்டே சென்றார்.அவர் கடவுளிடம் சொன்னார்,''தூய்மையான ஆத்மாவான ஒரு குழந்தையை எனக்குப் பரிசாகத் தந்தாய்.இப்போது அந்த ஆத்மாவை மாசு எதுவும் ஏற்படாது தூய்மையாகவே உன்னிடம் நான் திரும்பவும் ஒப்படைக்கிறேன்.சில காலம் இந்தப் பரிசு என்னிடம் இருக்க அனுமதித்தமைக்கு நன்றி..''
மனம் தூய்மையாயிருந்தால் எந்த ஒரு காரணமும் கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்ல முடியும்.இல்லாவிடில் எல்லாவற்றிலும் குறையே கண்டுபிடித்துக் கொண்டிருப்போம்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:17 pm

பலனை எதிர்பார்த்து...

ஒரு பெண் ஞானி பால் செம் அவர்களிடம் வந்து தனக்குக் குழந்தை பிறக்க அருள் செய்யுமாறு கேட்டாள்.வேறு என்ன சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள் என்பதனை உணர்ந்த ஞானிஅவளிடம் என்ன குழந்தை வேண்டும் என்று கேட்க அவளும் ஆண் குழந்தை வேண்டும் என்று சொன்னாள். ஞானியும், ''முதலில் என் கதையைக் கேள்,''என்று சொல்லிவிட்டு தனது கதையைக் கூற ஆரம்பித்தார்:
என் தாய்க்கும் குழந்தை இல்லாதிருந்ததால் ஒரு ஞானியிடம் சென்று இதே போல பிள்ளை வேண்டி வணங்கினாள்.அந்த ஞானியும்,''அதற்கு முதலில் அழகான தொப்பி ஒன்று செய்து கொண்டுவா,''என்றார்.மறுநாள் என் அன்னையும் ஒரு அழகான தொப்பி செய்து அவரிடம் கொடுத்தார்.ஞானி தொப்பியை தலையில் வைத்ததும்,என் தாய்,''இந்தத் தொப்பி உங்களுக்கு மிக அழகாக இருக்கிறது.எனக்காக நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இந்தத் தொப்பியை அணிந்ததற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் ''என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.அதன்பின்தான் நான் பிறந்தேன்.
கதையைக் கேட்டதும் அப்பெண் அங்கிருந்து சென்று மறுநாள் ஒரு தொப்பியுடன் பால் செம்மிடம் வந்தாள் .அவரும் உடனே அத்தொப்பியை அணிந்து கொண்டார்.ஆனால் அவர் நன்றி எதுவும் சொல்லாமல் தனது காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.சிறிது நேரம் பொறுத்த பெண் அவரிடம்,''நான்தான் தொப்பி கொடுத்து விட்டேனே.குழந்தை வரம் தாருங்கள்,''என்று கேட்டாள்.அதற்கு பால் செம் சொன்னார்,''என் கதையில் என் தாய் எந்த விதஎதிர்பார்ப்பும் இல்லாமல் தொப்பியைக் கொடுத்தார்.அதனால் நான் பிறந்தேன்.இப்போது ஒரு தொப்பியை கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக ஒரு குழந்தை கேட்கிறாயே,இது நியாயமா?உடனே நீ இங்கிருந்து போய்விடு.திரும்ப இங்கு வராதே,''.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:17 pm

தொடர்பு

சூபி ஞானி தாநூன், ஞானத் தேடலின் போது ஒரு முறை பாலைவனத்தினூடே நெடுந்தூரம் பயணம் செய்து களைப்புற்றிருந்தார்.கிராமம் ஒன்றை அணுகியபோது ஒரு வீட்டின் கூரை மீது ஓலைகளை அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துப் பைத்தியம்போல சிரித்தாள்.ஞானி காரணம் கேட்க,அவள் சொன்னாள்,''நீங்கள் இங்கு வரும்போது உமது கம்பளி மேலாடையைக் கண்டு ஒரு சூபி ஞானி வருகிறார் என்று நினைத்தேன்.பின் உமது முகத்தைக் கண்டவுடன் நீர் ஒரு குரு அல்ல,சீடன்தான் என்று நினைத்தேன்.அருகில் நெருங்கிய பின்தான் நீர் சீடன் கூட அல்ல,வெறுமனே ஞானம் தேடி அலைபவர் கூட இல்லை என்று எண்ணினேன்.ஞானத்தைத் தேடுகிறேன் என்ற எண்ணத்தில் பெருமிதம் கொள்ளும் ஒரு சவடால் பேர்வழி தான் நீங்கள் என்று தெரிந்து அதனால் சிரித்தேன்.''தனது அங்கிக்கும் தனது ஞானத்துக்கும் தொடர்பே இல்லை என்று உணர்ந்த ஞானி தாநூன் தனது அங்கியை அங்கேயே உதறி எறிந்தார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:18 pm

பரிசு

சுல்தான் ஒருவர் ,ஒரு ஞானியிடம் கவரப்பட்டு அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்து தரிசித்து வந்தார்.ஞானியின் போதனைகள் அவருக்கு மிகவும் பிடித்தது.எனவே அலுவல் பல இருந்தும் ஞானியிடம் அதிக நேரம் செலவழிப்பதை விரும்பினார்.அவரிடம் திரண்ட சொத்துக்கள் இருந்தன. எனவே அவர் ஞானியிடம்,''நீங்கள் எது செய்யச் சொன்னாலும் நான் செய்யக் காத்திருக்கிறேன்.உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள், ''என்றார். ஞானி,''ஆம்,உன்னிடம் எனக்கு ஆக வேண்டியது ஒன்றிருக்கிறது. அதை மறுக்காமல் செய்வாயா?''என்று கேட்டார்.சுல்தானும் ஆவலுடன் என்னவென்று கேட்க,''நீ மீண்டும் இங்கு வராதிருக்க வேண்டும்,''என்று ஞானி சொன்னார்.சுல்தானுக்கு அதிர்ச்சி,திகைப்பு,ஏமாற்றம்,வருத்தம் எல்லாம் ஒரு சேர ஏற்பட்டது.சுல்தான் மிகுத்த பணிவுடன்,''தங்களுக்கு மனம் வருந்தும்படி நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?அப்படி ஏதாவது செய்தாலும் அதற்கு இது பெருந்தண்டனை அல்லவா?நீங்கள் என்னை மன்னிக்கக் கூடாதா?''என்று புலம்பினான்.ஞானி சொன்னார்,''அப்பா,இதில் உன் தவறு ஏதும் இல்லை.தவறு என் சீடர்களிடம்தான்.இதுவரை அவர்கள் கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்தார்கள்,பாடினார்கள்,ஆடினார்கள்.அவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதிருந்தது.இப்போது நீ எதுவேண்டுமானாலும் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் மனம் ,உன்னை எப்படிப் பாராட்டி,கவர்ந்து உன்னிடம் பரிசுகள் வாங்கலாம் என்று அலை மோத ஆரம்பித்து விட்டது.உன்னை எதிர்கொள்ளும் அளவுக்கு என் சீடர்களிடம் ஆன்மீக பலம் இல்லை.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:18 pm

கர்வபங்கம்

அறிஞர் ஒருவர் இருந்தார்.பல நூல்களையும் அவர் கற்றிருந்தார். பல இடங்களிலிருந்தும் மக்கள் வந்து அவரைப் பார்த்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டது.ஒரு முறை அவர் வெளியூர் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கு அவரை யாருக்கும் தெரியாது. அதனால் அவரை யாரும் வந்து பார்க்கவில்லை.நிறையப் படித்தவர்களிடம் ஒரு குறை இருக்கும்.அதாவது அவர்களுக்கு, தனக்குத் தெரிந்ததை யாரிடமாவது சொல்லி தங்கள் மேதாவித் தனத்தை வெளிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.இந்த அறிஞரும் அதற்கு விதிவிலக்கல்ல.யாரும் வந்து பார்க்காதபோது யாரிடம் தனது அறிவை வெளிப்படுத்துவது?அப்போது அங்கு ஒரு சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து தீக் குச்சியால் அதை ஏற்றினாள் .அறிஞருக்கு அந்தக் குழந்தையிடமாவது தனது திறமையைக் காட்ட ஆசை வந்தது.அந்தக் குழந்தையை அழைத்து,''பாப்பா,இங்கு இருட்டாக இருந்தது.நீ மெழுகுவர்த்தியை எற்றின உடனே வெளிச்சம் வந்தது.,அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது?''என்று கேட்டார்.அந்தக் குழந்தை உடனே தனது வாயினால் ஊதி மெழுகு வர்த்தியை அணைத்தது.பின் அவரிடம் கேட்டது,''சிறிது நேரம் முன் வெளிச்சம் இருந்தது,.மெழுகுவர்த்தியை அனைத்ததும் அந்து வெளிச்சம் எங்கே போனது?''அந்த அறிஞர் திணறி விட்டார்.அப்போதுதான் தனக்கு எல்லாமே தெரியாது என்பதனை உணர்ந்தார். அவருக்கு ஞானம் ஏற்பட்டது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:19 pm

நாய்வால்
ஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது.என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.இதை நீண்ட நேரம் கைவைத்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.முதல் நாய் சொன்னது,''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன்.அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார்.அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,'' இரண்டாவது நாய் சொன்னது,''அன்பு நண்பனே,நானும் அந்த மகானைப் பார்த்தபோது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார்.நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன்.ஆனால் அதற்குப்பின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது.அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''
நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது.நாம் நம் கடமைகளை சரிவர செய்து வந்தால்,மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:19 pm

கணக்கு தீர்ந்தது.

புத்தரைப் பார்க்க வந்த ஒருவன் திடீரென அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். புத்தரும் முகத்தைத் துடைத்தவாறு,''அப்பனே,வேறு என்ன சொல்ல விரும்புகிறாய்?''என அமைதியாகக் கேட்டார்.அவனுடைய அவமாரியாதைக்கு எதிர் செயல் ஏதும் இல்லாது அவர் முகம் அமைதியாக இருப்பதைக் கண்ட அவனுக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது.அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விட்டான்.அன்றிரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை அவன் கொடுத்த அவமரியாதை அவனுக்கே திரும்ப வந்து விட்டதாய் அவன் உணர்ந்தான்.நடந்ததை அவனால் நம்ப முடியவில்லை.நீண்ட யோசனைக்குப் பின் தன் தவறை அவன் உணர்ந்தான்.மறு நாள் அவன் நேரே புத்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.புத்தர் சொன்னார்,''அதைப் பற்றி கவலைப் படாதே.இதற்கு முன் எப்போதோ உனக்கு ஏதோ தீங்கு நான் இழைத்திருக்க வேண்டும்.இப்போது அந்தக் கணக்கு சரி செய்யப்பட்டு விட்டது.அதனால் நீ செய்ததற்குப் பதிலாக ஏதும் செய்யப் போவதில்லை. நான் ஏதேனும் பதிலுக்கு செய்தால் நம் கணக்கு முடியாது தொடர்ந்து கொண்டே போகும்.நான் கணக்கை முடித்து விட்டேன்.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:20 pm

என்னைத் தெரிந்து கொள்ள

ஞானி நாகார்ஜுனா தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது வழக்கம்.அவர் மீது பக்தி கொண்டிருந்த அந்நாட்டு அரசி அவருக்கு தங்கத்தாலான ஒரு பிச்சைப் பாத்திரத்தை வழங்கினார்.அதன்பின் அதிலேயே அவர் பிச்சை வாங்கி வந்தார்.ஒருநாள் ஒரு திருடன் பாத்திரத்தைப் பார்த்துவிட்டான்.அதை எப்படிடும் திருடி விடுவது என்று எண்ணி அவரைப் பின் தொடர்ந்தான். நாகார்ஜுனாவும் அன்று இரவு ஒரு மடத்தில் தங்கி சாப்பிட்டார்.திருடனைப் பார்த்த அவர் அவனுடைய எண்ணம் அறிந்து அப்பாத்திரத்தை அவன் இருந்த பக்கம் எறிந்தார்.திருடனால் இதை நம்ப முடியவில்லை.அவர் அவனை தன் பக்கம் வரவழைக்கவே இப்படி செய்தார்.அதேபோல அவனும் அவரிடம் வந்து தங்கப் பாத்திரத்தை அவரிடம் திரும்பக் கொடுத்தான்.அதற்கு அவர் அதை அவனுக்கு ஏற்கனவே பரிசாக அளித்து விட்டதாகக் கூறினார்.திருடன் நம்ப முடியாமல்,''இதனுடைய விலை என்ன தெரியுமா?;;என்று கேட்டான்.அதற்கு அவர் சொன்னார்,''நான் என்னை அறிந்து வைத்திருப்பதால் வேறு எதுவும் எனக்கு விலை உயர்ந்த பொருளாகத் தெரியவில்லை,''உடனே திருடன்,''நான் என்னை எப்படித் தெரிந்து கொள்வது?''என்று கேட்டான்..அதற்கு அவர்,''திருடும்போது சுய உணர்வோடு ,எச்சரிக்கையோடு,கவனத்தோடு இரு,''
என்றார்.அதன்பின் திருடன் இரண்டு முறை திருட முயற்சி செய்தான்.ஆனால் அவன் ஞானி சொன்னதுபோல சுய உணர்வோடு இருந்தபோது செல்வம் எதையும் திருட அவனுக்கு விருப்பம் வரவில்லை.கடைசியாக வெறுங்கையோடு நாகார்ஜுனாவிடம் வந்தான்.அவருடைய சீடனான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:21 pm

எதிர்பார்ப்பது தவறா?

மன்னன் ஒருவன் முனிவரிடம்,கேட்டான்,''கீதையிலே,'கடமையை செய்,பலனை எதிர்பாராதே,'என்று கூறப்பட்டுள்ளது.நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டியது என் கடமை.அதனை மக்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது தவறா?''முனிவர் அதற்கு,''உன் கேள்விக்கு பதில் சொல்ல நீ ஒரு வாரம் என் ஆசிரமத்தில் சாப்பிட வேண்டும்,''என்றார்.மன்னனும் அவ்வாறே அங்கு சாப்பிட்டு வந்தான்.சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது.அதை ரசித்து அவன் சாப்பிட்டான்.ஒரு வாரம் முடிந்தவுடன் முனிவர் கேட்டார்,''இங்கு சாப்பாடு எப்படி இருந்தது?''மன்னன் சொன்னான்,''நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது.இதை சமைத்த சமையல்காரரை என் அரண்மனைக்கு அழைத்துச் சென்று தலைமை சமையல்காரராக நியமிக்கப் போகிறேன்,''முனிவர் சொன்னார்,''சுவையாக சமைக்க வேண்டியது ஒரு சமையல்காரரின் கடமை.இந்த சமையல்காரன் தன் கடமையை செய்தான்.இப்போது அவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது.கடமையை சரியாக செய்தவனுக்கு அதற்கான பலன் கண்டிப்பாக தேடி வரும்.''
ஆசையின் அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பு.ஆசைக்கு அளவில்லை.பலனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டால் நம்மால் அந்த செயலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது.சரியாக செய்தால் அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:21 pm

தாவோ என்றால் என்ன?

ஞானி யாகூ சான் ,தன சீடர்களுக்கு உற்சாகமாக போதனைகள் செய்து கொண்டிருக்கும்போது அவரைப் பார்க்க அந்தப் பகுதியின் கவர்னர் வந்தார்.யாகூசானின் உதவியாளர் அவருக்கு அறையைக் காண்பித்தார்.அப்போது யாகூசான் ஒரு சூத்திரத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார்.யாகூசான் கவர்னர் வந்ததைப் பார்க்கவில்லை.அவர் கவனம் முழுவதும் படிப்பில் இருந்தது.கவர்னர் இயல்பிலேயே கோபக்காரர்.அவர் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு திரும்பத் தயாரானார்.அப்போது அவர் அதிருப்தியைத் தெரிவிக்க எண்ணி,''உங்கள் முகத்தைப் பார்ப்பதைவிட உங்கள் பெயரே சிறந்தது என்று நினைக்கிறேன்.'' என்றார்.அப்போதுதான் அவரைக் கவனித்த யாகூசான்,''உங்களுடைய கண்களைத் தாழ்த்தி காதுகளுக்கு ஏன் நீங்கள் மதிப்புக் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.கவர்னர் தன் இரு கைகளையும் ஒன்று சேர்த்து,வணக்கமாகக் குனிந்து,''தாவோ என்றால் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.யாகூசான் உடனே தன் கைகளை மேலும் கீழும் அசைத்துக் காட்டி,''புரிந்து கொண்டீர்களா?''என்றார்.கவர்னருக்குப் புரியவில்லை. யாகூசான் பிறகு சப்தமாக,''மேகங்கள் ஆகாயத்தில் இருக்கின்றன.நீர் கிணற்றில் இருக்கிறது.''என்றார்.கவர்னருக்கு இப்போது புரிந்துவிட்டது.அவர் மிகவும் மகிழ்வுடன்,மன நிறைவு பெற்று யாகூசானை குனிந்து வணங்கி கீழ்க்கண்ட பாடலை யாகூசானுக்கு அன்பளிப்பாக அளித்தார்.
''முயன்று பெற்ற அனைத்தின் தோற்றமும் நாரையினது போன்றதே.
ஆயிரம் பைன் மரங்களுக்கிடையே இரண்டு கம்பங்கள் வழியாகக் கேட்க வந்தேன்.
தாவோ பற்றி உதவாக்கரை வாதம் இல்லை.
மேகங்கள் ஆகாயத்தில்,தண்ணீர் கிணற்றில்.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:22 pm

ஏன் அழ வேண்டும்?

ஞானி சுவான்சுவின் மனைவி இறந்துவிட்டார்.அவருடைய நண்பர் ஹு சு துக்கம் விசாரிக்க வந்தார்.அப்போது சுவான்சு மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடிக் கொண்டிருந்தார்.ஒரு பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தாளம் வேறு!ஹு சுவுக்கு இக்காட்சியைப் பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது.''என்ன அவமானம்?என்ன இருந்தாலும் அவள் உன் மனைவி.வாழ்நாள் முழுவதும் உனக்காக வாழ்ந்தவள்..உனக்கு அழுகை வரவில்லைஎன்றால் அது ரொம்பக் கேவலமாகத் தெரிகிறது.நீ பாட்டுக்கு ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறாயே.இது உனக்கே நன்றாக இருக்கிறதா?''என்று சுவான்சுவைப் பார்த்துக் கேட்டார். சுவான்சு சிரித்துக் கொண்டே சொன்னார்,''என் அன்பிற்குரிய மனைவி இறந்தவுடன் எனக்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது.விழிகளில் கண்ணீர் கரை புரண்டு வந்தது.ஆனால் உடனே எனக்கு ஒரு உண்மை ஞாபகம் வந்தது.இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணம் அடைவது தவிர்க்க இயலாதது.இது இயற்கையின் மகத்தான நியதி.என் பாச மனைவி தற்போது இந்த வாழ்விலிருந்து ஓய்வெடுத்துத் தூங்குகிறாள்.அவள்
என் வருகைக்காக அமைதியாகக் காத்திருக்கிறாள். நான் ஏன் கதறிக்கொண்டும் அழுது கொண்டும் ஆர்ப்பாட்டம் செய்தும் அவள் அமைதியை கெடுக்க வேண்டும்?நான் அப்படி செய்தால் எனக்கு இயற்கையின் உன்னத நியதிகள் எதுவும் தெரியாது என்று பொருள்.''
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஞானக் கதைகள் Empty Re: ஞானக் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum