தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலக அதிசயங்கள்....

View previous topic View next topic Go down

உலக அதிசயங்கள்.... Empty உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 11:59 am

நமக்கெல்லாம் புதிதாக உள்ள உலக அதிசயங்களைதான் பெரும்பாலும் தெரிந்திருக்கும் .... ஆனால் பண்டைய உலக அதிசயங்களும் பிரமிக்க தக்கதாக உள்ளது .... அவற்றையும் இங்கே உங்கள் பார்வைக்காக முதலில் வைத்து தொடர்ந்து புதிய ஏழு அதிசயங்களையும் பார்வையிடலாம் ....



பண்டைய உலக அதிசயங்கள்

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பண்டைய உலக அதிசயங்கள் ஏழு



[You must be registered and logged in to see this image.]

பண்டைய உலக அதிசயங்கள். வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழ். கிசாவின் பெரிய பிரமிட், பபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, ஆர்ட்டெமிஸ் கோயில், மௌசோல்லொஸின் மௌசோலியம், ரோடொஸின் கொலோசஸ், அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம்.14ம் நூற்றாண்டை சேர்ந்த இடாய்ச்சு ஓவியர் மார்த்தன் வான் யீம்சூகெர்க் வரைந்தது.


தற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.

1) கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

 2) பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.

 3) ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.

 4)ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.
 
5) மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.
 
6) ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.
 
7) அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.

 
இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது.


***********************
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:00 pm

01) கிசாவின் பெரிய பிரமிட் (பண்டைய உலக அதிசயம்)

கிசாவின் பெரிய பிரமீடு (அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே. இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதும் இதுவேயாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2560 என்று கணக்கிடப்பட்டுள்ளது


[You must be registered and logged in to see this image.]

கி.மு 2560 இல் கட்டப்பட்ட கிசாவின் பெரிய பிரமிடு கி.பி 2005 ஆம் ஆண்டு தோற்றம்

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.
 
பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், பசோல்ட், கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் மிகப் பெரியது. (மெக்சிக்கோவிலுள்ள சோலுலாவின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) )



வரலாறும் விளக்கமும்


[You must be registered and logged in to see this image.]

கிசாவின் பெரிய பிரமிட்
19 ஆம் நூற்றாண்டு stereopticon அட்டைப் புகைப்படம்

இது 4வது வம்ச எகிப்திய பாரோ மன்னனான கூபுவின் சமாதி என்றும் இதன் கட்டுமானம் 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூபுவின் தலைமை பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்றழைக்கபட்டவரால் இந்த பிரமீடு வடிவமைக்கபட்டிருக்கலாம். உண்மையில் கிசாவின் பெரிய பிரமீடு 146.5மீட்டர் உயரம் உடையதாகும். ஆனால் காலத்தால் ஏற்பட்ட அறிப்புகளாலும் இதன் மேல்முனையில் உள்ள தலைமை கல்லின் சேதத்தினாலும் இதன் தற்போதய உயரம் 138.8மீட்டராக உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கவாட்டு அளவானது 230.4மீட்டர்களாகும். கிசா பிரமிடின் மொத்த அடர் எடை 5.9மில்லியன் என அளவிடப்பட்டுள்ளது. இதன் உள்ளீடோடு சேர்த்து இந்த பிரமீடிங் கன அளவானது 2500000 கன மீட்டர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளின் படிக்கு இதனை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயிருக்கலாம் எனவும் அளவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானத்தின் பொழுது தினசரி 800 தொன்கள் அளவுள்ள கட்டுமான கற்களை நிறுவியிருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல 2.3 மில்லியன். இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 - 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது.


கட்டுமான பொருள்கள்

கிசா பிரமீடு 2.3 மில்லியன் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அருகில் உள்ள கற்க்குவாரியில் இருந்து எடுத்துவரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. அரசனின் பகுப்பறையை சுற்றிலும் 20 முதல் 80 தொன்கள் எடையுள்ள மிகப்பெரிய கட்டுமான கற்களானது அமைக்கப்பட்டுள்ளன அவை அனைத்தும் 500 மைல்களுக்கு அப்பாலுள்ள அஸ்வான் எனுமிடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன. பாறைகளில் வரிசையாக சிறு துளையிட்டு அந்த துளைகளில் மரத்தாலான ஆப்புகளை அந்த துளைகளில் இறுக்கி அவற்றின் மீது நீரை ஊற்றும்போது மரம் ஈரத்தின் காரணமாக உப்பலாகி பாறைகளில் பெரிய விரிசலை ஏற்படுத்துகிறன இந்த பிரபலமான முறைதான் பழங்கால எகிப்தியர்கள் கற்களை வெட்டி எடுக்கவும் உதவியிருக்கிறன. இப்படி வெட்டி எடுக்கப்பட்ட பெரிய கற்களானது படகுகளை மூலம் நைல் நதியின் வழியாக கட்டுமான இடங்களுக்கு இடம்பெயர்த்தபட்டிருக்கிறன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட 5.5 மில்லியன் தொன்கள் எடையுள்ள சுண்ணாம்பு கற்களும் 8000 தொன்கள் எடையுள்ள கிரானைட் கற்களும் 500000 தொன்கள் எடையுள்ள சாந்து கலவையும் இதன் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளன.


வார்ப்பு கற்கள்


[You must be registered and logged in to see this image.]

வார்ப்பு கல்

இந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன வரப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய தட்டையான மேல்பரப்புடைய கற்கள் ஆகும். உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்பு கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்பு கல்லானது பிரமீடுக்கு தேவையான வடிவத்தை கொடுக்கிறது. இன்றைய நிலையில் உள்பக்கமாக அமைக்கபெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவிட்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் கெய்ரோவில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:01 pm

02) பபிலோனின் தொங்கு தோட்டம் (பண்டைய உலக அதிசயம்)


[You must be registered and logged in to see this image.]

பபிலோனின் தொங்கு தோட்டம்

பபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின்தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெஸ்ஸாரால் (Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.

 
ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை



[You must be registered and logged in to see this image.]

Hanging_Gardens_of_Babylon
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:02 pm

03) ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (பண்டைய உலக அதிசயம்)



[You must be registered and logged in to see this image.]

ஸேயுஸ் சிலை

ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (Statue of Zeus at Olympia) கிமு 433 இல் பீடியாஸ் என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரீஸ் நாட்டில் செதுக்கப்பட்டது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது.
 
இந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:04 pm

04) ஆர்ட்டெமிஸ் கோயில் (பண்டைய உலக அதிசயம்)


[You must be registered and logged in to see this image.]

துருக்கியின் இசுத்தான்புல் நகரில் உள்ள மினியாதுர்க் பூங்காவில் காணப்படும் ஆர்ட்டெமிசு கோயிலின் மாதிரி வடிவம்.

ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


[You must be registered and logged in to see this image.]

ஆர்ட்டெமிஸின் சிலை

கல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனசு என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.


ஆர்ட்டெமிஸ்

ஆர்ட்டெமிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு, அறுவடை, இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார். இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா.



[You must be registered and logged in to see this image.]

டயானா

பன்னிரு ஒலிம்பியர்கள்

ஜூஸ் | ஹீரா | போசீடான் | ஹெஸ்டியா | டெமட்டர் | அப்ரடைட்டி
 அத்தீனா | அப்போலோ |ஆர்ட்டெமிஸ் | ஏரிஸ் | ஹெப்பஸ்தஸ் | ஹெர்மீஸ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:05 pm

05) மௌசோல்லொசின் கல்லறை (பண்டைய உலக அதிசயம்)



[You must be registered and logged in to see this image.]

மௌசோல்லொஸின் மௌசோலியம், ஹலிகார்னசஸின் மௌசோலியம் அல்லது மௌசோல்லொஸின் சமாதி (கிரேக்கம், Μαυσωλεῖον της Ἁλικαρνασσοῦ) கி.மு 353- கிமு 350 இடையில் ஹலிகார்னசஸ் (தற்போது துருக்கி போத்ரம்) என்னுமிடத்தில் மௌசோல்லொஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.[1][2] அது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரம் கொண்டு நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளை தாங்கி யிருந்தது.[3] இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தனர்.
 
மௌசோலியம் என்ற சொல் மௌசோல்லொஸிற்கு காணிக்கையாக்கப் பட்ட கட்டிடம் என்ற பொருளில் எழுந்தபோதும் நாளடைவில் எந்த சமாதிக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஆனது
[size=14.44444465637207].[/size]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:06 pm

06) ரோடொஸின் கொலோசஸ் (பண்டைய உலக அதிசயம்)


[You must be registered and logged in to see this image.]

ரொடோஸின் பிரம்மாண்டமான சிலை
 கி.மு 280ல், கிரீசில் நிறுவப்பட்ட ரொடோஸின் பிரம்மாண்டமான சிலை

ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) கிரேக்கத் தீவான ரோடொசில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். Chares of Lindos இனால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது.


[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:08 pm

07) அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் (பண்டைய உலக அதிசயம்)


[You must be registered and logged in to see this image.]


2006 ஆய்வின் பின்னர் உருவாக்கப்பட்ட 3D படம்

அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் (அல்லது அலெக்சாந்திரியாவின் ஃபாரோஸ், கிரேக்கம்: ὁ Φάρος τῆς Ἀλεξανδρείας) கி.மு மூன்றாம் நூற்றாண்டில் (285க்கும் 247க்கும் இடைப்பட்ட காலத்தில்) எகிப்து|எகிப்தின் அலெக்சாந்திரியாவின் ஃபாரோஸ் தீவில் துறைமுகத்தை அடையாளம் காணும் விதமாகக் கட்டப்பட்ட கோபுரமாகும். பின்னர் இது கலங்கரைவிளக்கமாகவும் செயல்பட்டது.
 
115இலிருந்து 135 மீட்டர் வரை மதிப்பிடப்படும் இதன் உயரம் அந்நாளைய உலகின் மூன்றாம் (பிரமிட்கள் குஃபு மற்றும் காஃபரா அடுத்து) உயரமான கட்டிடமாகக் கருதப்படுகிறது.பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
இந்தக் கலங்கரை விளக்கம் 956,1303 மற்றும் 1323 ஆண்டுகளின் நிலநடுக்கங்களின் போது அழிபட்டது. 1480ஆம் ஆண்டு அழிபட்ட கட்டிடத்தின் கற்களைக் கொண்டு அங்கு ஓர் கோட்டை எழுப்பப்பட்டு முழுமையாக பழமையான கட்டிடத்தின் இடிபாடுகள் அழிந்தன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:09 pm

புதிய ஏழு உலக அதிசயங்கள்

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை ஜூலை 7 2007 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன
 
100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது. வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் கருத்துக்கணிப்பு நிறுவனமான ஜோக்பி இன்டர்னேஷனல் நிறுவனரும் தற்போதைய தலைவர்/தலைமை செயல் அதிகாரியுமான ஜான் ஜோக்பியின் கூற்றுப்படி, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை "இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய கருத்துக்கணிப்பை" நடத்தியிருக்கிறது




[You must be registered and logged in to see this image.]

புதிய ஏழு அதிசயங்களாக வெற்றி பெற்ற இருப்பிடங்கள்.


இந்த திட்டம் பரவலான வீச்சில் அதிகாரப்பூர்வ எதிர்வினைகளைப் பெற்றது. சில நாடுகள் தங்களின் இறுதித்தேர்வுக்கு கூடுதலான வாக்குகள் சேகரிக்க பிரயத்தனப்பட்டனர், மற்றவர்கள் இந்த போட்டியை அலட்சியம் செய்தனர் அல்லது விமர்சித்தனர். பரப்புரையின் தொடக்கத்தில் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளைக்கு ஆதரவளித்து அதிசயங்கள் தேர்வு செய்வதில் ஆலோசனைகளை எல்லாம் வழங்கிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ 2007 இல் இந்த தாபனத்தில் இருந்து தள்ளி நின்று கொண்டது. கூடுதலான நினைவுச்சின்னங்கள் அவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இணையத்தளங்கள் மூலம் அல்லது தேசிய இணையத்தளங்களிலான வலிமையான ஆதரவு விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. பல நாடுகளில் தேசிய தலைவர்களும் பிரபலங்களும் நியூ7ஒன்டர்ஸ் பரப்புரைக்கு ஊக்கமளித்தனர். பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்த வாக்காளர்களின் புவியியல் ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பன்முகத்தன்மையைக் கொண்டு பார்த்தால், உலகளாவிய பேச்சுவார்த்தை மற்றும் கலாச்சார பரிவர்த்தனை என்னும் தனது நோக்கம் சாதிக்கப்பட்டிருப்பதைக் காண்பதாக நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்துள்ளது.
 
2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தனியார் நன்கொடைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் இவற்றைக் கொண்டே இயங்கியது, எந்த பொதுப் பணத்தையோ அல்லது வரிசெலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை[6]. முடிவு அறிவித்த பிறகு, இதன் மூலம் தமக்கு எந்த வருவாயும் கிட்டவில்லை என்றும் தனது முதலீடுகளையே ஓரளவுக்கு தான் மீட்க முடிந்தது என்றும் நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்தது.
 
உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான வாக்கெடுப்பை, மனிதகுல வரலாற்றில் முதலாவது உலகளாவிய ஜனநாயக நடைமுறை என்று அழைத்தார் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தலைவரான பெர்னார்டு வெபர்[9]. 2007 இல் [[இயற்கையின் புதிய ஏழு அதிசயங்கள் (New7Wonders of Nature) என்றழைக்கப்பட்ட இதே மாதிரியான ஒரு போட்டியை இந்த அறக்கட்டளை துவக்கியிருக்கிறது, தேர்வு விண்ணப்பங்கள் டிசம்பர் 31, 2008 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இறுதிக்கு தேர்வு பெற்ற 21 அடையாளங்கள் 2010 கோடை வரை வாக்களிப்புக்குட்பட்டதாக இருக்கும்.



வரலாறு

உலகின் ஏழு அதிசயங்கள் குறித்த சிந்தனையின் மூலம் ஹீரோடோடஸ் (Herodotus) (கிமு 484 - கிமு 425) மற்றும் காலிமாசஸ் (Callimachus) (கிமு 305 - கிமு 240) காலத்தை நோக்கி பின்செல்கிறது, இவர்கள் கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கும் தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, எபசசில் (Ephesus) உள்ள ஆர்திமிஸ் கோவில், ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை (Colossus of Rhodes) மற்றும் அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. ஏனையவை மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ, அல்லது பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன

நியூ7ஒன்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின் படி[11], சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநர் மற்றும் விமான ஓட்டியான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999 இல் தொடங்கினார். இந்த திட்டத்தின் இணையத் தளம் 2001 இல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் $700 தொகையை அளித்தார்[1]. இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும். நவம்பர் 24 2005 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு வந்தன. ஜனவரி 1, 2006 இல் இந்த பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டும், ஐந்து கண்டங்களில் இருந்தான உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் ஆறுபேர், சாகா ஹதித், சீசர் பெல்லி, டடோ ஆன்டோ, ஹாரி சீட்லர், ஆசிஸ் டேயோப், யுங் ஹோ சாங், கொண்ட ஒரு குழு மற்றும் அதன் தலைவரான யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பெட்ரிகோ மேயர் ஆகியோர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நியூ7ஒன்டர்ஸ் கூறியது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் தகுதியாளர் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது



[You must be registered and logged in to see this image.]

புதிய ஏழு அதிசயங்களுக்கான இறுதி தேர்வுகள்.

ஒவ்வொரு இறுதித்தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது, சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மஹாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என.
 
இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈஸ்டர் தீவு, மற்றும் ஈபிள் கோபுரம் இவற்றை அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகள் கொண்டு வெளியிடப்பட்டது.
 
யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரலான பெட்ரிகோ மேயர் திட்டத்தின் நிபுணர்குழுவில் தனிநபர் தலைவராக இருந்தார்[15]. நியூ7ஒன்டர்ஸ் யுனெஸ்கோவுடன் தொடர்புடையதல்ல.
 
பரப்புரையின் அடிப்படை இலக்கு உலகளாவிய பரிமாற்றத்தையும் கலாச்சாரங்களுக்கு இடையிலான போற்றலை ஊக்கப்படுவதும் ஆகும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.இது தவிர, "உலக நினைவு" என்று நியூ7ஒன்டர்ஸ் அழைப்பதான ஒன்றும் உருவாக்கப்பட்டது, இதன் பொருள் உலகமெங்கிலும் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்கும் பகிர்ந்து கொள்ளும் 7 விஷயங்கள் என்பதாகும். உலகமறிந்த நினைவுச் சின்னங்கள் இடையிலான போட்டி, அதன் மீதான வருங்கால வாக்கெடுப்புகள், தொடர்பான வியாபாரங்கள், மற்றும் வாக்காளர் தரவுத்தள பயன்பாடு இவற்றில் இருந்து வரும் வருவாயின் ஒரு பகுதியை, உலகின் பல்வேறு மீட்சி திட்டங்களை உருவாக்க, அல்லது அவற்றுக்கு உதவ பயன்படுத்துவதற்கும் நியூ7ஒன்டர்ஸ் விரும்புகிறது.உலகின் தனித்துவமிக்க கலாச்சார பண்பாட்டு தளங்கள் (...) குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது என்பது எப்போதும் நியூ7ஒன்டர்ஸின் ஒரு இலக்காக இருந்து வந்திருக்கிறது."இந்த உணர்வை வளர்ப்பது அதனளவிலேயே ஒரு அதிசயமாகத் திகழும்" என்கின்றன ஜூலை 5, 2007 தினத்தின் நியூஸ்விக் மற்றும் MSNBC



வென்றவை

அகர வரிசையில்


01) சிச்சென் இட்சா -  யுகட்டான், மெக்சிகோ

02) மீட்பரான கிறிஸ்துவின் சிலை - ரியோ டி ஜெனிரோ, பிரேசில்

03) கொலோசியம் - ரோம், இத்தாலி

04) சீனப் பெருஞ்சுவர் - சீனா

05) மாச்சு பிச்சு - குஸ்கோ, பெரு

06) பெட்ரா- ஜோர்டான்

07) தாஜ் மஹால் - ஆக்ரா, இந்தியா


பட்டியலில் ஒன்று மதிப்புமிக்கது என்னும் கவுரவ அந்தஸ்தை கொண்டது: கிசா பிரமிடு வளாகம்
 (உலகின் பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதியானது)- கெய்ரோ, எகிப்து



எதிர்வினைகள்

ஐக்கிய நாடுகள்

2007 ஆம் ஆண்டில், ஐநாவின் மிலினிய மேம்பாட்டு இலக்குகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கான அங்கீகாரமாக ஐநாவுடன் ஒரு கூட்டுசெயல்பாட்டு ஏற்பாட்டை நியூ7ஒன்டர்ஸ் செய்துகொண்டது.ஐநா கூறியது:

    "There is no comparison between Mr. Weber’s mediatised campaign and the scientific and educational work resulting from the inscription of sites on UNESCO’s World Heritage List. The list of the 7 New Wonders of the World will be the result of a private undertaking, reflecting only the opinions of those with access to the Internet and not the entire world. This initiative cannot, in any significant and sustainable manner, contribute to the preservation of sites elected by this public"

எகிப்து

எகிப்து வர்ணனையாளர்கள் இதனை உண்மையான பழைய அதிசயங்களில் (Ancient Wonders) உயிர் பிழைத்திருக்கும் ஒன்றே ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடின் அந்தஸ்துக்கான போட்டியாக பார்த்தனர்."இதனை எகிப்துக்கு, அதன் நாகரீகம் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு எதிரான ஒரு சதியாகக் காணலாம்" என்று முன்னணி அரசாங்க நாளிதழ் ஒன்றில் தலையங்க ஆசிரியர் அல் சயீத் அல்-நகார் எழுதினார்.இந்த திட்டம் "அபத்தமானது" என்று கூறிய எகிப்தின் கலாச்சார அமைச்சரான பரூக் ஹோஸ்னி அதனை உருவாக்கிய வெபர், "தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அக்கறை மட்டுமே கொண்ட" ஒரு மனிதர் என்றார்.உலக பாரம்பரிய தள (World Heritage Site)ங்கள் அமைப்பின் எகிப்திய நிபுணரான நகிப் அமின், "வர்த்தக அம்சம் தவிர, வாக்கெடுப்பில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை" என்பதை சுட்டிக் காட்டினார்.
 
எகிப்திடம் இருந்தான புகார்களுக்குப் பிறகு, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை உலகின் 7 பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதி ஒன்றான கிசா பிரமிடுகளுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் போட்டிச்சின்னம் என்னும் கவுரவத்தை அளித்து, அதனை வாக்கெடுப்பில் இருந்து நீக்கியது.ஆனாலும், கிசாவின் பெரும் பிரமிடு அவர்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளின் இணையத் தள த்தில் இடம் பெற்றிருக்கவில்லை



பிரேசில்
 
பிரேசில் நாட்டில் வோட் நோ கிறிஸ்டோ (கிறிஸ்துவுக்கு வாக்களியுங்கள்) என்னும் பரப்புரை நடந்தது, இதற்கு தனியார் நிறுவனங்கள் ஆதரவளித்தன, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் வாக்களிக்க செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை[21]. இது தவிர, பான்கோ பிராடஸ்கோ மற்றும் ரெடெ க்ளோபோ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஆதரவாளர்கள் இந்த சிலை முதல் ஏழு இடத்திற்குள் வாக்களிப்பில் இடம் பிடிப்பதற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் தொகையை செலவளித்தன[1].
 
நியூஸ்வீக்கில் வெளியான ஒரு கட்டுரையின் படி, சுமார் 10 மில்லியன் பிரேசில் நாட்டினர் இந்த போட்டியில் ஜூலையின் ஆரம்பம் வரை வாக்களித்திருந்தனர்[1]. இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.



பெரு
 
பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட தீவிரமான பிரச்சாரம் அங்கிருக்கும் ஊடகங்களிலும் அதன் மூலம் பெரு மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, பெரு மக்கள்தொகையினர் அநேகம் பேருக்கும் வீட்டில் இணைய இணைப்பு இல்லாதிருந்த போதிலும் அவர்கள் தங்கள் தேசிய அதிசயத்திற்கு பெருமளவில் வாக்களித்தனர்.புதிய உலக அதிசயங்கள் குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியதோடு மாச்சு பிச்சு தேர்வு செய்யப்பட்டது தேசிய அளவில் கொண்டாடப்பட்டது, குறிப்பாக கஸ்கோ பிரதான சதுக்கத்திலும் லிமாவிலும், அங்கு ஜனாதிபதி ஆலன் கார்சியா ஒரு விழா ஏற்பாடு செய்தார்.


சிலி 

ஈஸ்டர் தீவு, மோய்க்கான சிலியின் பிரதிநிதி ஆல்பர்டோ ஹோடஸ் கூறும்போது, மோயிஸ் எட்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும் இதே புதிய ஏழு அதிசயங்களில் மனோரீதியாக இடம் பிடித்தது போலத்தான் என்று அமைப்பாளரான பெர்னார்டு வெபர் அவரிடம் அளித்த ஒரு கடிதம் கூறுவதாகத் தெரிவித்தார். பங்கு பெற்றவர்களில் இத்தகையதொரு ஆறுதல் கடிதம் பெற்றது தாம் மட்டுமே என்று ஹோடஸ் தெரிவித்தார்


ஜோர்டான்
 
ஜோர்டானின் ராணி ரனியா அல்-அப்துல்லாவும் ஜோர்டானின் தேசிய கருவூலமான பெட்ராவை ஆதரிக்கும் பரப்புரையில் இணைந்து கொண்டார்[1]. 7 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டிருக்கும் நாடாக இருந்தபோதிலும், அந்த நாட்டில் இருந்து 14 மில்லியன் வாக்குகளுக்கும் அதிகமாக பதிவானதாகக் கூறப்படுகிறது[1]. இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.


இந்தியா
 
இந்தியாவில் பரப்புரை வேகம் பிடித்து ஜூலை 2007 வாக்கில் உச்சத்தை எட்டியது, செய்திச் சானல்கள், வானொலி நிலையங்கள், மற்றும் பல பிரபலங்கள் என அனைவரும் மக்களை வாக்களிக்க கேட்டுக் கொண்டனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:11 pm

01) சிச்சென் இட்சா -  யுகட்டான், மெக்சிகோ  (புதிய உலக அதிசயம்)



சிச்சென் இட்சா
 Pre-Hispanic City of Chichen-Itza*

யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்

[You must be registered and logged in to see this image.]


நாடு
 
மெக்சிகோ
 
வகை
 
கலாச்சாரம் சார்
 

ஒப்பளவு
 
i, ii, iii


மேற்கோள்
 
483

பகுதி†
 
இலத்தீன் அமெரிகா, கரிபியம்
 

பொறிப்பு வரலாறு

பொறிப்பு - 1988  (12வது அமர்வு)


பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
 † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.



சிச்சென் இட்சா (Chichen Itza) என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரீகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.
 



[You must be registered and logged in to see this image.]சுற்றுலாப் பயணிகள் கோட்டை என அழைக்கப்படும் எல் காஸ்ட்டிலோ பிரமிட் மீது ஏறும் காட்சி



சிச்சென் இட்சா அழிபாடுகள் நடுவண் அரசின் சொத்து. எனினும் களத்தைக் காக்கும் பொறுப்பை மெக்சிக்கோவின் மானிடவியல், வரலாற்றுத் தேசிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலங்கள் 29 மார்ச் 2010 வரை தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்நிலங்களை இப்போது யுக்கட்டான் மாநிலம் விலைகொடுத்து வாங்கியுள்ளது.

[You must be registered and logged in to see this image.]


கோட்டையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள படிகள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:12 pm

02) மீட்பரான கிறிஸ்துவின் சிலை - ரியோ டி ஜெனிரோ, பிரேசில் 
(புதிய உலக அதிசயம்)



மீட்பர் கிறிஸ்து (போர்த்துக்கேய மொழியில்: Cristo Redentor) என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீட்டர் (31 அடி) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீட்டர் (130 அடி) உயரமும், 30 மீட்டர் (98 அடி) அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700-மீட்டர் (2 அடி) உயரமுள்ள கொர்கொவாடோ (Corcovado) மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது. கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது.[1] இது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும் (soapstone) 1922-இல் இருந்து 1931-குள் கட்டட்ப்பட்டதாகும்


[You must be registered and logged in to see this image.]



கிட்டிய நகரம்
 
ரியோ டி ஜனேரோ, பிரேசில்
 

ஆள்கூறுகள்
 
22°57′6″S 43°12′39″Wஅமைவு: 22°57′6″S 43°12′39″W
 

நிறுவப்பட்டது
 
அர்ப்பணிப்பு: அக்டோபர் 12, 1931
அருட்பொழிவு: அக்டோபர் 12, 2006
உலக அதிசயமாக: சூலை 7, 2007

கொர்கொவாடோ மலையின் மீது ஒரு பெரிய சிலையினை வைக்கும் யோசனை வரலாற்றில் முதன் முதலில் 1850-களில் கத்தோலிக்க குருவான பேத்ரோ மரிய பாஸ் ஒரு பெரிய நினைவுச் சின்னம் கட்ட இளவரசி இசபெலிடமிருந்து நிதி கோரிய போது இடம்பெறுகின்றது. இக்கோரிக்கையினைப்பற்றி இளவரசி மிகுந்த கவனம் கொள்ளவில்லை. 1889-இல் பிலேசில் நாட்டில் அரசு சமயம் பிரிவினை ஏற்பட்ட போது இக்கருத்து நிராகரிக்கப்பட்டது.[4]
 
இரண்டாம் முறையாக இம்மலையின் மிது ஒரு சின்னம் எழுப்ப வேண்டும் என்னும் கோரிக்கை 1921-இல் ரியோ நகர கத்தோலிக்க மக்களிடம் எழுந்தது. [5] பிரேசில் நாட்டின் கத்தோலிக்க மக்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி ஒரு சிலையினை எழுப்ப நிதி திரட்டினர்.
 
இம்மலையின் மீது கட்டப்படவிறுந்த கிறிஸ்துவின் சிலை முதலில், சிலுவையோ அல்லது கிறிஸ்து தனது கரங்களில் உலகினை ஏந்தியவாறு நிற்பதாகவோ உறுவாக்கக்ப்பட இருந்தது,[6] ஆனால் இறுதியில் அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் செய்ய முடிவு செய்யப்பட்டது




[You must be registered and logged in to see this image.]

உலங்கு வானூர்தியின் மூலம் எடுக்கப்பட்ட இச்சிலையின் படம்

உள்ளூர் பொறியாளர் ஹிய்டோர் தா சில்வா கோஸ்டாவினால் சிலை வடிவமைக்கப்பட்டு பிரஞ்சு சிற்பி பாவுல் லான்டோஸ்கியினால் செதுக்கப்பட்டது.பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழாமினால் லான்டோஸ்கியின் ஆய்வு முடிவை பரிசோதிக்கப்பட்டு, சிலுவை வடிவில் உள்ள இந்த சிலைக்கு எஃகினைவிடவும் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மிகவும் பொருத்தமானதாகக் கொள்ளப்பட்டது.[4] நீடித்த குணங்கள் மற்றும் பயன்படுத்த எளிதாக இருப்பதர்க்காகவும் வெளிப்புறத்தில் சோப்புக்கல் பூச்சு இணைக்கப்பட்டது.  கட்டுமானம் 1922 இலிருந்து 1931 வரை, ஒன்பது ஆண்டுகள் நடந்தது. இதன் மொத்தம் செலவு ஐஅ$250000 ஆகும். இந்த நினைவுச்சின்னம் அக்டோபர் 12, 1931 அன்று திறக்கப்பட்டது


[You must be registered and logged in to see this image.]

சிலையின் மற்றோரு கோணம்


அக்டோபர் 2006-இல், இச்சிலையின் 75ஆவது ஆண்டு விழாவின் போது, ரியோ நகரின் பேராயர், கர்தினால் ஆஸ்கார் ஷீல்டு, இச்சிலையின் அடியில் ஒரு சிற்றாலயத்தை அருட்பொழிவு செய்தார். அதனால் இப்போது அங்கே திருமணமும், திருமுழுக்கு கொடுப்பதும் வழக்கமாகியுள்ளது


[You must be registered and logged in to see this image.]

சிலையின் முகம்
.

15 ஏப்ரல் 2010 அன்று சிலையின் தலையிலும் வலது கையின் மீதும் கிராஃபிட்டியால் கிறுக்கப்பட்டிருந்தது. ரியோ நகரின் மாநகராட்சித் தலைவர் இதனை நாட்டுக்கே எதிரான குற்றம் எனக் கண்டித்தார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க துப்பு தருவோர்க்கு R$ 10,000 பரிசுத்தோகையினையும் அறிவித்தார். ரியோ நகரின் இராணுவப்படை காவல்துறையினர் பவுலோ சொசுசா என்பவரை சந்தேகத்தின் பேரின் கைது செய்துள்ளனர்


உலக அதிசயமாக


சூலை 7, 2007 அன்று லிஸ்பனில் நடந்த நிகழ்வின் போது, இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டது.இச்சிலை உலக அதிசயப்பட்டியலில் இடம் பெற, பெருநிறுவன ஆதரவாளர்கள் பலர் முயன்றனர்


மறுசீரமைப்பு பணிகள்


இச்சிலை பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக் களமாகமாக 2009-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1980-இல் இச்சிலையின் முதல் மறுசீரமைப்பு பணிகள் நடந்தன.
 
1990-இல் ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம், ஊடக நிறுவனமான ரேடி கிலோபோ, எண்ணெய் நிறுவனமான ஷெல் டோ பிரேசில், பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக்களங்களின் பராமரிப்புச் செயலகம் மற்றும் ரியோ டி ஜனேரோ நகர அரசும் இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டன.
 
2003-ஆம் ஆண்டில் இச்சிலையினை எளிதில் சென்றடைய மின்தூக்கிகளும், நடைபாதைகளும் அமைக்கப்பட்டன.
 
10 பெப்ரவரி 2008-இல் இச்சிலை தலை மற்றும் கரங்களில் மின்னல் தாக்கியதால் பாதிப்புக்கு உள்ளானது. நான்காம் சீரமைப்புப் பணிகள் 2010-இல் துவங்கின.ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம் [சான்று தேவை] மற்றும் சுரங்க நிறுவனமான வாலேயும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டன. இம்முறை சிலையினிலேயே பழுதகற்ற முயன்றனர். சிலையின் உள் கட்டமைப்புப் புதுப்பிக்கப்பட்டு, அதன் சோப்புக்கல் மொசைக் உள்ளடக்கத்தின் மேல் இருந்த பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை மேலோடு நீக்குவது மற்றும் சிலையின் மேல் இருந்த சிறிய விரிசல்களை சரிபார்த்தல் மூலம் சிலை புதுபிக்கப்பட்டது. சிலையின் தலை மற்றும் கைகளில் அமைந்துள்ள மின்னல் கம்பிகளும் பழுது பார்க்கப்பட்டது. புதிய மின்னல் கம்பிகள் சிலையின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டன.
 
இதன் மறுசீரமைப்பு பணிகளுக்கு 100 ஆட்களும், 60,000 கற்களும் தேவைப்பட்டன. இக்கற்கள் மூல சிலையின் கற்கள் வந்த அதே கற்சுரங்கத்திலிருந்தே எடுக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.மறுசீரமைக்கப்பட்ட சிலையின் திறப்பு விழாவின் போது, 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க்கவிருந்த பிரேசில் கால்பந்தாட்ட அணியினை ஊக்குவிக்கும் வகையில், இது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது
 
இச்சிலை எப்போதும் மழையிலும் வலுவான காற்றிலும் தாக்கப்படுவதால் இதனை அவ்வப்போது சீரமைப்பது அவசியமானது ஆகும்



ஊடக சித்தரிப்பு


[You must be registered and logged in to see this image.]


கொர்கொவாடோ மலையின் உச்சியில் அமைந்துள்ள மீட்பரான கிறிஸ்துவின் சிலையின் அகலப்பரப்பு காட்சி. பின் புறத்தின் மையத்தில் சிகர்லோப் மலைகள் மற்றும் கியுஆனபாரா விரிகுடா

மீட்பரான கிறிஸ்துவின் சிலை பல புனைகதை மற்றும் ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளது. '2012' என்னும் படத்தில், உலக அழிவின் போது இச்சிலை அருகில் உள்ள மலையில் மோதி உடைவதைப்போல் இடம் பெருகின்றது. இதனால் இப்படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. மேலும் இச்சிலை பல நிகழ்பட விளையாட்டுகளிலும், நாடகங்களிலும், படங்களிலும், ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது.


குறிக்கத்தக்க சிலைகளுடைய உயரங்களின் ஒப்பீடு


[You must be registered and logged in to see this image.]



1.இளவேனில் பருவ கோயிலின் புத்தர் சிலை (Spring Temple Buddha) 153 மீ
 2.சுதந்திரச் சிலை 93 மீ
 3.தய்நாடு அழைக்கின்றது (The Motherland Calls) 91 மீ
 4.மீட்பரான கிறிஸ்து (சிலை) 39.6 மீ
 5.மைக்கலாஞ்சலோவின் தாவீது சிலை (Statue of David|) 5.17 மீ (சிற்ப்பம் 5.17 மீ + அடிப்பீடம் = சராசரியாக 7.7 மீ)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:14 pm

03) கொலோசியம் - ரோம், இத்தாலி (புதிய உலக அதிசயம்)


[You must be registered and logged in to see this image.]

கொலொசியம் ரோம், இத்தாலி

கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

வரலாறு

கட்டுமானம்


[You must be registered and logged in to see this image.]

கொலோசியத்தின் உட்புறத் தோற்றம் ஒன்று. நிலம் தற்கால மீள்கட்டுமானம் ஆகும். இதன் கீழ் அக்காலத்தில் விலங்குகளையும், அடிமைகளையும் அடைத்து வைக்கும் சிறிய அறைகள் இருந்தன


கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார்.


ரோமர் வரலாற்றின் பிற்காலம்
 
217 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டுமமைக்கப்பட்ட இது, கிறிஸ்தவம், படிப்படியாக மனித உயிர்கள் பலியாகும் வீரவிளையாட்டுக்களுக்கு முடிவுகட்டும் வரை பயன்பட்டு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ஆம் ஆண்டுவரை பயன்பட்டது. 442 இலும், 508 இலும் ஏற்பட்ட புவியதிர்வுகளினால் இக்கட்டிடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது.


மத்தியகாலமும், மறுமலர்ச்சிக் காலமும்
 
847, 1349 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் ஏற்பட்ட புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
 
இதன் முகப்பை மூடியிருந்த சலவைக் கற்கள், வேறு கட்டிடவேலைகளில் பயன்படுத்தப்பட்டதுடன், இவற்றை எரித்துச் சுண்ணாம்பும் தயாரித்தார்கள். மறுமலர்ச்சிக்காலத்தில், சிறப்பாக 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில், ரோம ஆளும் குடும்பங்கள், புனித பேதுரு பேராலயம் மற்றும் தனியார் மாளிகைகளைக் கட்டுவதற்காக இந்தக் கட்டிடத்திலிருந்து சலவைக் கற்களை எடுத்துவந்தனர்.



[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:16 pm

04) சீனப் பெருஞ்சுவர் - சீனா (புதிய உலக அதிசயம்)




சீனப் பெருஞ் சுவர்
 The Great Wall*
 யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்

[You must be registered and logged in to see this image.]



நாடு
 
சீனா

வகை
 
காலச்சாரம் சார்

ஒப்பளவு
 
i, ii, iii, iv, vi
 

மேற்கோள்
 
438
 
பகுதி†
 
ஆசியா பசிபிக்
 
பொறிப்பு வரலாறு

பொறிப்பு  1987  (11வது அமர்வு)


சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.
 
இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.



வரலாறு


கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள் பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.
 
வெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும், திருத்தவேலைகளும் நடைபெற்றிருக்கின்றன:

1.கிமு 208 (கின் வம்சம்)
 2.கிமு முதலாம் நூற்றாண்டு (ஹான் வம்சம்)
 3.1138 - 1198 (பத்து வம்சங்களினதும் ஐந்து அரசுகளினதும் காலம்)
 4.1368 (மிங் வம்சம்)




[You must be registered and logged in to see this image.]

பெருஞ்சுவர் சின் வம்சம்


மிங் வம்சப் பெருஞ் சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ (Qinghuangdao)வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஒன்பது மாகாணங்களையும், 100 'கவுண்டி'களையும் கடந்து, மேற்கு முனையில், வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டி பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்க புகைச் சைகைகளைப் பயன்படுத்தின.


[You must be registered and logged in to see this image.]

பெருஞ்சுவர் ஹான் வம்சம்


முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ் சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது.


[You must be registered and logged in to see this image.]

பெருஞ்சுவர் மிங் வம்சம்

அரசாங்கம் சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது. அவர்கள் படைகளால் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால், இச்சுவர் "உலகின் அதி நீளமான மயானம்" என்றும் அழைக்கப்படுவதுண்டு.



[You must be registered and logged in to see this image.]

முழுமையான சுவர்க் கட்டுமானத்தின் நிலப்படம்


குறிப்பிடத்தக்க பகுதிகள்

பின்வரும் மூன்று பகுதிகள் பெய்ஜிங் மாநகரசபைப் பகுதிக்குள் வருகின்றன. இவை திருத்தப்பட்டு இருப்பதுடன், தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் இடங்களாகவும் உள்ளன.


*வடக்குக் கடவை அல்லது ஜூயோங்குவான் கடவை. சீனர்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கு இச் சுவரைப் பயன்படுத்திய காலத்தில், சுவரின் இப்பகுதியில் பல காவலர்கள் இருந்து தலைநகரான பெய்ஜிங்கைப் பாதுகாத்தனர். மலைப்பகுதியில் இருந்து எடுத்த கற்களாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட இச் சுவர்ப்பகுதி, 7.8 மீட்டர் (25.6 அடி) உயரமும், 5 மீட்டர் (16.4 அடி) அகலமும் கொண்டது.
 
*மேற்குக் கடவை அல்லது ஜியாயுகுவான் கடவை. இக் கோட்டை, சீனப் பெருஞ் சுவரின் மேற்குப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.
 ஷான்ஹாய்குவான் கடவை. இக்கோட்டை பெருஞ்சுவரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
 
*மிகவும் சரிவான மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மிங் காலச் சுவர்ப் பகுதி, மிகவும் கவர்ச்சியானது. இது 11 கிலோமீட்டர் (7 மைல்) நீளமும், 5 முதல் 8 மீட்டர்வரை (16 - 26 அடி) உயரமும் கொண்டது. அடிப்பகுதியில் 6 மீட்டர் (19.7 அடி) அகலத்தைக் கொண்ட இச் சுவர்ப்பகுதி உச்சியில் 5 மீட்டர் (16.4 அடி) அகலத்தைக் கொண்டுள்ளது. வாங்ஜிங்லூ என்பது ஜிங்ஷான்லிங்கின் 67 காவல் கோபுரங்களில் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 980 மீட்டர் (3,215 அடி) உயரத்தில் உள்ளது.
 
*ஜின்ஷான்லிங்கின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முத்தியான்யு பெருஞ்சுவர் மலையொன்றைச் சுற்றி அமைந்துள்ளது. தென்கிழக்கிலிருந்து, வடமேற்காகச் செல்லும் இச் சுவர் 2.25 கிலோமீட்டர் (1.3 மைல்) நீளமானது. இது மேற்கில் ஜுயோங்குவான் கடவையுடனும், கிழக்கில் குபெய்க்குவுடனும் இணைந்துள்ளது.




[You must be registered and logged in to see this image.]

ஜின்ஷான்லிங்கிலுள்ள சுவரின் ஒரு பகுதி

இன்னொரு குறிப்பிடத்தக்க பகுதி சுவரின் கிழக்கு முனைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது. இங்கேதான் பெருஞ் சுவரின் முதல் கடவை இச் சுவர் ஏறும் முதல் மலையான ஷான்ஹாய்குவானில் கட்டப்பட்டது. இச் சுவரில் பாலமாகக் கட்டப்பட்ட ஒரே பகுதியான ஜியோமென்கூ உள்ளது. சோங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட மெங் ஜியாங்-நு கோயில் இங்கிருப்பதால், ஷான்காய்குவான் பெருஞ் சுவர், "பெருஞ்சுவர்க் கட்டுமானத்தின் அருங்காட்சியகம்" எனப்படுகிறது.


[You must be registered and logged in to see this image.]


காவற் கோபுரங்கள்

பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும், தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும், எதிரிகளின் நகர்வுகள் குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால், மலை முகடுகளிலும், சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும், சமிக்ஞைக் கோபுரங்கள் 
அமைக்கப்பட்டிருந்தன.


கட்டிடப்பொருள்கள்

செங்கற்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், பெருஞ்சுவர் மண், கற்கள், மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது. மிங் வம்சக் காலத்தில், சுவரின் பல இடங்களில் செங்கற்களும், கற்கள், ஓடுகள், சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. செங்கற்களின் அளவு, கற்கள், மண் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்வதிலும் பார்க்கக் கட்டுமான வேலையை வேகமாகச் செய்ய உதவியது. அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக்கூடியவையாக இருந்ததுடன் மண்சுவர்களை விடக் கூடிய காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. கற்கள் அவற்றின் நிறை காரணமாக சுவரை உறுதியாக வைத்திருக்கக் கூடியன என்றாலும், அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது. இதனால், நீள்சதுரக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்கள், அத்திவாரம், வாயில் பகுதிகள் போன்றவற்றுக்குப் பயன்பட்டன

தற்போதைய நிலைமை

பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும், இன்னும் சில இடங்களில், சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன. கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன. சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது. குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60 கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி, மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது.


சிறப்பு மதிப்பீடு

இச் சுவர் சிலசமயம் "நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்" ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனாலும் இது கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றல்ல.
 
1987 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் அறிவிக்கப்பட்டது.
 
1938 ஆம் ஆண்டில், ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய "அதிசயங்களின் இரண்டாவது புத்தகம்", சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது. இந்தக் குறிப்பு நிலைத்து, நகரத்துப் பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன், பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது. எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல.
 
எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து, அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது, சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும். பெருஞ் சுவர் சில மீட்டர்கள் அகலம் மட்டுமே கொண்டது, அதனால் நெடுஞ்சாலைகள், விமான ஓடுபாதைகள் முதலிய பூமியிலுள்ள பல்வேறு அமைப்புக்களுடன் ஒப்பிடக்கூடியது. விண்வெளி விமானிகள் வெவ்வேறுவிதமான குறிப்புகளைத் தந்துள்ளனர். இது அதிசயப்படத்தக்கதல்ல. ஒளியின் திசையைப் பொறுத்து, சில சமயங்களில் தெளிவாகத் தெரியும் சந்திர மேற்பரப்பிலுள்ள சில அம்சங்கள், வேறு சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமற் போவதுண்டு.
 
"விமான ஓடுபாதையளவுக்குச் சிறியவற்றைக்கூட நாங்கள் பார்க்கமுடிகிறது, (ஆனால்) 180 மைல்கள் மட்டுமேயான உயரத்திலிருந்து சீனப் பெருஞ் சுவர் தெரியவேயில்லை" என ஒரு விண்வெளிக் கலத்தின் விமானி அறிக்கையிட்டார். விமானி வில்லியம் போக் என்பவர் ஸ்கைலாப்பிலிருந்து தான் அதைப் பார்த்ததாக நினைத்தார். ஆனால் பின்னர், உண்மையில் அவர் பார்த்தது பீக்கிங்குக்கு அண்மையிலுள்ள பெருங் கால்வாயையே எனக் கண்டுகொண்டார். இவர் தொலை நோக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பெருஞ் சுவரைக் காண்பதில் வெற்றிகண்டார் என்றாலும் வெற்றுக் கண்களுக்குச் சுவர் தெரியவில்லை என்றார். அண்மையில் சீன விண்வெளி விமானி யாங் லிவெய், தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என அறிவித்தார். ஒரு அப்போல்லோ விமானி, சில ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது எந்த மனிதரமைத்த அமைப்புமே தெரியவில்லை என்றார்.
 
அனுபவம் மிக்க அமெரிக்க விமானி Gene Cernan, 160 கிமீ தொடக்கம் 320 கிமீ உயரத்திலுள்ள பூமிச் சுற்றுப்பாதையிலிருந்து சீனப் பெருஞ் சுவர் வெற்றுக் கண்ணுக்குத் தெரியவே செய்கிறது என்று கூறினார்.
 
எவ்வாறெனினும் சீனப் பெருஞ் சுவர், மனிதனாலாக்கப்பட்ட வேறெந்த அமைப்பையும் விட விண்வெளியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக் கூடியது என்ற கதை உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:18 pm

05) மாச்சு பிச்சு - குஸ்கோ, பெரு (புதிய உலக அதிசயம்)



[You must be registered and logged in to see this image.]

Huayna Picchu above the ruins of Machu Picchu
 
நாடு
 
 பெரு
 

வகை
 
கலப்பு
 
ஒப்பளவு
 
i, iii, vii, ix


மேற்கோள்

 
274
 

பகுதி†
 
இலத்தீன் அமெரிக்கா, கரிபியன்
 

பொறிப்பு வரலாறு


பொறிப்பு -1983  (7வது அமர்வு)


* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
 † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.


மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்[1]. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.
 
இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.
 
1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.
 
மச்சு பிக்ச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.



வரலாறு


[You must be registered and logged in to see this image.]

1911 இல் மச்சு பிக்ச்சுவின் தோற்றம்

மச்சி பிக்ச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது[3]. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் கைவிடப்பட்டது[3][4]. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. பிக்ச்சோ என்ற பெயருள்ள ஒரு நகரைப் பற்றி எசுப்பானியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் அந்நகருக்கு சென்றார்கள் என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடங்களில் உள்ள புராதன கற்பாறைகளை அழித்திருந்தனர் என்றாலும், மச்சு பிக்ச்சுவில் உள்ளவற்றை அவர்கள் தொடவில்லை



[You must be registered and logged in to see this image.]

பெருவில் மச்சு பிக்ச்சுவின் அமைவிடம்

[You must be registered and logged in to see this image.]

சூரியனின் கோயில்

[You must be registered and logged in to see this image.]

இன்கா சுவர்


[You must be registered and logged in to see this image.]

இன்டிகுவாட்டானா": இன்காக்களினால் கட்டப்பட்ட ஒரு வானியல் மணிக்கூடாகக் கருதப்படுகிறது

[You must be registered and logged in to see this image.]

மச்சு பிக்ச்சுவின் தோற்றம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:19 pm

06) பெட்ரா- ஜோர்டான் (புதிய உலக அதிசயம்)

[You must be registered and logged in to see this image.]

மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் தான் ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டு வரை பலராலும் அறியப்படாமல் இருந்த இந்த மலை நகரத்தை, 1812-ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் (லிuபீஷ்வீரீ ஙிuக்ஷீநீளீலீணீக்ஷீபீt) என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்தான் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். பின்னர் 1985-ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2007-ல் சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் அமைப்பு வெளியிட்ட புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.


[You must be registered and logged in to see this image.]

உலக அதிசயமாக கருதப்படும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது? கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட இந்த மலைக் கோவில்கள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன என்ற ஒரு காரணமே போதும். ஆனால் அதையும் தாண்டி பல அதிசயங்கள் அங்கே விரிந்து கிடக்கின்றன. பண்டைய காலத்தில் நெபாடியர்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள் சூழ நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்திருந்ததால் இந்த நகரம் மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டது.


நெபாடியர்கள் தண்ணீர் மேலாண்மையில் கைதேர்ந்தவர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில் நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். காலத்தை வென்று வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், பானை சோற்றுக்கு பதம் சொல்வது போல இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. பண்டைய மன்னர் ஒருவர் தனது பொக்கிஷங்களை போருக்கு செல்லும் வழியில் இந்த மலைக் குகையின் கூரைகளில் ஒளித்து வைத்தார் என்று ஒரு செவி வழிக் கதையும் உள்ளது. ஆனால் இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது இது உண்மையிலேயே கலைகளின் கஜானா என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய மலைப் பாதை வழியாக இந்த இடத்தை அடைவதே மிகவும் சவால் மிக்க பயணமாக இருப்பதால் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.


பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல்வேறு கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி மலைக்க வைக்கும் நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்று பார்த்தால் விழிகள் வியப்பால் விரிந்து விடுகின்றன. இந்த கோவிலைச் சுற்றி நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொக்கிஷங்கள் நாம் இன்னும் பல அதிசயங்களுக்கு தயாராக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.




[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by முழுமுதலோன் Sun Mar 23, 2014 12:23 pm

07) தாஜ் மஹால் - ஆக்ரா, இந்தியா (புதிய உலக அதிசயம்)


[You must be registered and logged in to see this image.]

தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது



[You must be registered and logged in to see this image.]

தாஜ்மகால் - பநோரமிக் காட்சி


தோற்றம்


[You must be registered and logged in to see this image.]


தாஜ்மகாலைக் கட்டுவித்த ஷா ஜகான், -"புவிக் கோளத்தின் மேல் ஷா ஜகான்" சிமித்சோனிய நிறுவனத்தில் உள்ளது

[You must be registered and logged in to see this image.]

மும்தாஜைக் காட்டும் படம்

1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஸ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஸ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷா ஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது:

"குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டாகும். சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது". 

தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான சமர்க்கண்ட்டிலுள்ள தைமூரின் சமாதி, ஹுமாயூன் சமாதி, ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் சலவைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.



கட்டிடக்கலை

சமாதி


[You must be registered and logged in to see this image.]

ஹுமாயூன் சமாதி. இதுவும், தாஜ்மகாலும் ஒரே கட்டிடக்கலைப் பணியில் அமைந்தவை

தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது.
 
இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.




[You must be registered and logged in to see this image.]

அடி, குவிமாடம், மற்றும் மினார்


[You must be registered and logged in to see this image.]

உச்சி


[You must be registered and logged in to see this image.]

Main iwan and side pishtaqs


[You must be registered and logged in to see this image.]

தாஜ்மகால் அடித்தளத்தின்
எளிமைப் படுத்தப்பட்ட தளப்படம்



இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.
 
அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொழுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள் அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன




[You must be registered and logged in to see this image.]

மீன்முள்ளு 
அமைப்பு


[You must be registered and logged in to see this image.]

செடி கொடி 
அழகூட்டல்


[You must be registered and logged in to see this image.]

Spandrel detail


[You must be registered and logged in to see this image.]

செதுக்கு ஓவியம்



வெளிப்புற அழகூட்டல்

தாஜ்மகாலின் வெளிப்புற அழகூட்டல், முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. மனித உருவங்களையோ பிற விலங்கு உருவங்களையோ அழகூட்டல்களில் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ள இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வனப்பெழுத்துக்களும், செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் "துலுத்" எனப்படும் வகையைச் சார்ந்தது. இவற்றைப் பாரசீக வனப்பெழுத்துக் கலைஞரான அமானத் கான் என்பவரால் உருவாக்கியுள்ளார். இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக்கற்கள் பதித்து உருவாக்கப்பட்டவை.


உட்புற அழகூட்டல்
 
தாஜ்மகாலின் உட்புறக் கூடம் மரபுவழியான அழகூட்டல்களையும் தாண்டிச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம் எண்கோண வடிவானது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள கதவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட "போலி"க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது.


பூங்கா
 
தாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் விம்பம் இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது. பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன. பாரசீகப் பூங்காக்களின் வடிவமைப்பைப் பின்பற்றி அமைக்கப்பட்ட முகலாயப் பூங்காக்கள், முகலாயப் பேரரசர் பாபரினால் இந்தியாவுக்கு அறிமுகமானது. இது நான்கு ஆறுகள் பாயும் சுவர்க்கத்திலுள்ள பூங்காவுக்கான ஒரு குறியீட்டு வடிவமாகும். முகலாய இஸ்லாமிய நூலொன்றில், சுவர்க்கம் என்பது, மையத்தில் அமைந்துள்ள ஒரு ஊற்றிலிருந்து நான்கு திசைகளிலும் பாயும் ஆறுகளைக் கொண்ட ஒரு பூங்கா எனக் கூறப்பட்டுள்ளது.
 
பெரும்பாலான முகலாயப் பூங்காக்கள், சதுர வடிவானவையாகவும், சமாதியையோ அல்லது ஒரு காட்சிக் கூடத்தையோ அதன் மையப் பகுதியில் கொண்டதாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்குப் புறம்பாக தாஜ்மகாலில் சமாதி ஒரு பக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. யமுனை ஆற்றுக்கு மறு பக்கத்தில், மஹ்தாப் பாக் அல்லது நிலவொளிப் பூங்கா கண்டு பிடிக்கப்பட்டிருப்பதுடன், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், யமுனை நதியையும், நிலவொளிப் பூங்காவையும் உட்படுத்தி இத்தொகுதியை வடிவமைத்து இருக்கலாம் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. இங்கே யமுனை ஆற்றை, சுவர்க்கத்தின் ஆறுகளில் ஒன்றாக வடிவமைப்பில் சேர்த்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தாஜ்மகால் பூங்காவுக்கும், ஷாலிமாரில் உள்ள பூங்காவுக்கும் அவற்றின் அமைப்பிலும், அவற்றிலுள்ள, ஊற்றுக்கள், செங்கல் மற்றும் சலவைக்கற்கள் பதித்த நடைபாதைகள், வடிவவியல் உருக்களில் அமைந்த செங்கல் வரம்பிட்ட பூம்படுகைகள் ஆகிய கட்டிடக்கலைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமையும், ஷாலிமாரை அமைத்த, அலி மர்தான் என்னும் பொறியாளரே தாஜ்மகால் பூங்காவையும் அமைத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இப் பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புக்கள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும், பழமர வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன. முகலாயப் பேரரசு சரிவடையத் தொடங்கியதோடு இப் பூங்காவின் பராமரிப்பும் குறைந்தது. இப்பகுதி பிரித்தானியர் கைக்குப் போனபோது அவர்கள் இப் பூங்காவின் அமைப்பை மாற்றி இலண்டனில் உள்ளது போன்ற புற்றரைகளை அமைத்தனர்.



வெளிக் கட்டிடங்கள்
 
தாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யாமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது. இவற்றுட் பெரும்பாலானவை, அக்காலத்து சிறிய முகலாயச் சமாதிக் கட்டிடங்களைப் போல் செந்நிற மணற்கற்களால் ஆனவை. சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தியாவின் இந்துக் கோயில்களில் காணப்படும் அம்சம் முகலாயக் கட்டிடங்களில் பயன்பட்டது.
 
முக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது.



கட்டுமானம் 

ஆக்ரா நகருக்குத் தெற்கே உள்ள நிலமொன்றில் தாஜ்மகால் கட்டப்பட்டது. மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த நிலத்தைப் பெறுவதற்காக, ஷா ஜகான் அவருக்கு ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பெரிய நிலமொன்றை வழங்கினார். ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட பகுதி அகழப்பட்டு மண் நிரப்பி இறுக்கப்பட்டு ஆற்று மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்துக்கு நிரப்பப்பட்டது. முதன்மைக் கட்டிடப் பகுதியில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டு கற்களும், சிறு பாறைகளும் இட்டு நிரப்பி அத்திவாரம் இடப்பட்டது. மூங்கிலால் ஆன சாரமரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்காக செங்கற்களால் தற்காலிக அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வமைப்புக்கள் மிகவும் பெரிதாக இருந்ததால் இதட் அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடுமென்று அக்காலத்து மேற்பார்வையாளர்கள் கருதியதாகத் தெரிகிறது. மரபுவழிக் கதைகளின்படி கட்டிடம் கட்டி முடிந்ததும், இந்தத் தற்காலிக அமைப்பில் இருந்து எவரும் கற்களை எடுத்துத் தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அறிவித்தானாம் இதனால் ஓரிரவிலேயே இவ்வமைப்புக்கள் அகற்றப்பட்டனவாம். சலவைக்கற்களை கட்டிடக் களத்துக்கு எடுத்துச் செல்வதற்கு 15 கிலோமீட்டர் நீளமான சாய்தளப் பாதை ஒன்று மண் போட்டு இறுக்கி அமைக்கப்பட்டதாம். 20 தொடக்கம் 30 எருதுகளைக் கொண்ட குழுக்களைக் கொண்டு இதற்கென உருவாக்கப்பட்ட வண்டிகளில் கற்களை ஏற்றி இழுத்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.


கறுப்பு நிறத் தாஜ் மஹால் 

தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.


அமில மழை
 
தாஜ் மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது.[1] அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.[2] 1996 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்ம ஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்து தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது


தூய்மைபடுத்தல் நடவடிக்கை
 
தாஜ்மகால் மீது களிமண் பூசி தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கையை தொல் பொருள் ஆய்வுத்துறை தொடங்க உள்ளதாகவும் வெயில், மழை, பனி, காற்றினால் பரவு தூசி போன்ற காரணங்களினால் உலகப் பிரசித்திப் பெற்ற இந்த தாஜ்மகால் கட்டடம் மாசு படிந்து வருகின்றது என்றும் கவலையான தகவல்கள் வெளிவருகின்றன.] அத்துடன் தாஜ்மகாலை காண உலகெங்கும் இருந்து கிட்டத்தட 25 லட்சம் பயணிகள் வந்து செல்வதாகவும், தாஜ்மகாலை கட்டடத்தைச் சுற்றி குப்பை கூளங்கள், பசுவின் சாணம் போன்றனவும் பரவிக்கிடக்கின்றனவாம். அத்துடன் தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளது உடைமைகளை வைத்துக்கொள்வதற்கான அறை வசதிகள், மலசலக்கூடங்களுக்கான வழிகாட்டு அடையாளக் குறிகள் போன்றனவும் போதிய அளவில் இல்லை எனும் செய்திகளும் வருகின்றன. இவை பொறுப்பானவர்களின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது




[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலக அதிசயங்கள்.... Empty Re: உலக அதிசயங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum