தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்த ஒருபக்க கதைகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:15 pm

தலைமுறை – ஒரு பக்க கதை
*******************************************
பெரியவர் பக்தவச்லம் வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில்
உட்கார்ந்து ஒரு வாரப்பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார்.
அவரது பேரன் மகேஷ் புதிதாக வாங்கிய மோட்டார் பைக்கை
பளபளவென்று துடைத்துக் கொண்டிருந்தான்.
-
வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்தவர் கண்ணாடியை
மட்டும் இறக்கிவிட்டு பெரியவரே, இங்கே பிருந்தாவன் நகர்னு
புதுசா பிளாட் போடறாங்களே, அது எங்கே ? என்று கேட்டார்.
-
அது மாதிரி எந்த நகரும் இங்கே இல்லையே! என்றார்
பக்தவச்லம்.
-
சார், நேரா போயி லெப்ட்ல கட் பண்ணுங்க, ஒரு சவுக்குத்
தோப்பு வரும், அது பக்கத்துலதான் பிருந்தாவன் நகர்’ என்றான்
மகேஷ்.
-
ரொம்ப தேங்கஃஸ் தம்பி” என்றார் காரிலிருந்தவர்
-
-
”மகேஷ், இத்தனை வருஷமாக இருக்கேன் , எனக்குத் தெரியாத
அட்ரஸ் எல்லாம் எப்படி உனக்குத் தெரிஞ்சுது?’ என்று பக்தவச்லம்
கேட்டார்
-
தாத்தா, மூணு மாசத்துக்கு முன்னாடி, நீங்க, அப்பா, சித்தப்பா
அத்தை எலாரும் போய் உங்க பூர்வீக சொத்தை வித்தீங்களே
அது எங்கே இருக்கு? என்று கேட்டான் மகேஷ்.
-
அதுவா? சவுக்குத் தோப்பு பக்கத்துல…
-
அதுதான் தாத்தா, இப்போ பிருந்தாவன் நகர்!
-
———————————-
>சு.மணிவண்ணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:15 pm

பாடம் - ஒரு பக்கக் கதை
*****************************************

வீட்டுப்பாடம் எழுத அமர்ந்த பாலன்,தனது புத்தகப்பையைத் தலைகீழாகக் கவிழ்த்து கீழே கொட்டினான். அதிலிருந்து ஏராளமான பென்சில்கள், ரப்பர்கள், பேனாக்கள் கீழே விழுந்தன.

அவதைப் பார்த்த பாலனின் அம்மா,"ஏதுடா இதெல்லாம்" என்று கேட்டார்.


"இது கோபிகிட்ட அடிச்சது. இது சுரேசு கிட்ட அடிச்சது" என்று பெருமையுடன் வரிசையாக சொல்லிக்கொண்டே சென்றான்.
-
தன் மகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவே பாலனின் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னார்.

"இவனுக்கு வீட்டுல என்ன குறைச்சல்? நம்ம மானத்தை வாங்கணுமின்னே பிறந்திருக்கான். வாங்குற சம்பளத்துல பாதிய இவனுக்குத்தானே செலவழிக்குறோம். இவனால ஸ்கூல்ல எனக்குத் தான் கெட்டப்பெயர் வரப் போகுது" என்று கோபப்பட்டார் ஆசிரியரான பாலனின் தந்தை.


-
மறுநாள் பாலனும், அவன் தந்தையும் அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

"என்னங்க, நம்ம தெருவில நடக்குற கோலப் போட்டியில சேர்ந்திருக்கேன். ஸ்கூல் விட்டு வரும்போது ஸ்கூல்ல இருந்து கலர் சாக்பீஸ் டப்பாவ எடுத்துக்கிட்ட வாங்க" என்றார் பாலனின் தாய்.

பாலன் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். அவர் தலைகுனிந்து கொண்டார்.

நன்றி :ஜேம்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:16 pm

சந்தோஷம் – ஒரு பக்க கதை
**************************************
ரங்கசாமி ஆற்றாமை தாங்காமல் பக்கத்து வீட்டு
தியாகராஜனைக் கேட்டே விட்டார். ‘ஏன் சார்,
தீபாவளிக்கு எதுக்கு இத்தனை தடபுடல், இவ்வளவு
செலவு? நீங்க செலவு பண்ணுன காசுக்கு ரெண்டு பவுன்
நகை வாங்கி வச்சுட்டாக்கூட பிற்காலத்துக்கு உதவியா
இருக்குமே?
-
கேட்ட ரங்கசாமியை கையமர்த்தி விட்டு, வீட்டினுள்
சென்ற தியாகராஜன் ஒரு சி.டி.உடன் வந்தார் . அதை
ரங்கசாமியிடம் கொடுத்து, ”இதை வீட்டில் போய்
போட்டுப் பாருங்கள்! நான் செலவு செய்ததறகு அர்த்தம்
புரியும்!” என்றார்
-
ரங்கசாமி சி.டி.யை பார்க்க ஆரம்பித்தார். தியாகராஜனின்
இரண்டு மகன்கள், அவர்கள் குழந்தைகள், அவருடைய
மகள், மருமகன், குழந்தைகள், அவருடைய தங்கை
குடும்பம் என்று தலைக்கு எண்ணெய் வைப்பதில் இருந்து
பலகாரம் சுடுவது, சாப்பிடுவது, வெடி வெடிப்பது என்று
சந்தோஷம் நிரம்பி வழிந்தது, அந்த சி.டி.யில்.
-
கைக்காசு தொலைந்து விடும் என்று மகிழ்ச்சியைத்
தொலைத்த ரங்கசாமி, சி.டி.யை தியாகராஜனிடம்
தலைகுனிந்தவாறே திருப்பிக் கொடுத்தார்.
-
தியாகராஜன் கேட்டார். ”ஏன் ரங்கசாமி சார், பவுன் எப்ப
வேணா கிடைக்கும்! கோடி கொடுத்தாலும் இந்த சந்தோஷம்
கிடைக்குமா?”
-
பதில் கூற முடியாமல் தலை குனிந்தார் ரங்கசாமி
-
—————————————-
>வி.சகிதா முருகன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:16 pm

கற்றது - ஒரு பக்க கதை
***************************
1990
வினோத், ஆசிரியர் மறுநாள் எழுதிக் கொண்டு வரச்சொன்ன
பொதுக்கட்டுரையை எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தான்.
பின்னால் நிழலாடியது ராகுல்!
-
“வினோத் சார் சொன்ன கட்டுரை எழுதிட்டியா?’
-
“முடிச்சிட்டேன் ராகுல். ஆமாம், ஒவ்வொரு முறையும்
அடுத்தவங்க கட்டுரையை காப்பியடிச்சி எழுதிக்கிறே. நீயா
முயற்சி செய்து, கற்பனை பண்ணி எழுதலாமே?’
-
“அடப்போடா!… சுயமா எழுதறதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது.
அடுத்தவன்கிட்டே வாங்கணுமா, காப்பி அடிச்சம்மா.. முடிஞ்சது
வேலை! கற்பனை அது இதுவெல்லாம் உனக்குத்தான் வரும்.’
-
2013
-
“டேய், வினோத்! பார்த்து ரொம்ப நாளாச்சு. நல்லா இருக்கியா?
என்னடா பண்றே?’ – ராகுல் கேட்டான்.
-
“அனிமேஷன் கோர்ஸ் முடிச்சிட்டு பெரிய கம்பெனியிலே
வேலையில் இருக்கேன்டா!’
-
“அனிமேஷன்னா?’
-
“கற்பனையா மனிதர்களை, விலங்குகளை கம்ப்யூட்டர்ல
உருவாக்கி நடிக்க வச்சி படமெடுக்கிறது!’
-
“அப்படியா?’
-
“ஆமாம். ராகுல் நீ என்னடா பண்றே?’
-
“ஜெராக்ஸ் கட வச்சிருக்கேன்!’
-
————————————-
- ஜெயாமணாளன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 9:20 pm

‘ஒரு டம்ளர் பால்’ கதை
**************************

அவன் ஒரு ஏழைச்சிறுவன். வீடு வீடாகச் சென்று துணிகளை விற்று, அதனால் வரும் பணத்தைக் கொண்டு, ஸ்கூல் ஃபீஸ் கட்டி படித்து வந்தான். ஒருநாள் அவனிடம் ஒன்றுமே இல்லை. கடும்பசி. தனது பாக்கெட்டைத் துழாவினான். கையில் தட்டுப்பட்டதோ வெறும் ஐந்து ரூபாய் நாணயம். இதை வைத்து சாப்பாடு சாப்பிட முடியுமா? யோசித்தான். ஏதாவது ஒரு வீட்டில் இந்தக் காசைக் கொடுத்து சாப்பாடு வாங்கிச் சாப்பிடலாம் என்று முடிவு செய்து, அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
“யாருங்க” என்ற இனிய குரலுடன் கதவைத் திறந்த இளம்பெண் தேவதையாகவே காட்சியளித்தாள். அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், “கொ… கொஞ்… கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான். அவனை ஏறஇறங்கப் பார்த்த அவள், அவன் கடும்பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள். உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை மெதுவாகக் குடித்து முடித்தான்.
“நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான்.
“நீங்க எதையும் தர வேண்டாம்.

ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள் கனிவுடன்.
“அப்படீன்னா என் அடி மனசில் இருந்து உங்களுக்கு ஒரு தேங்ஸ்”
ஆண்டுகள் பல கடந்தன. அன்று அழகு தேவதையாக இருந்தவள், இன்று படுக்கையில் வீழ்ந்த நோயாளி. உள்ளூர் மருத்துவர்கள் கைவிரிக்க, நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். அவளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ நிபுணர் டாக்டர் ஹாவர்ட் கெல்லி அழைத்து வரப்பட்டார்.

நோயாளியின் கேஸ் ஷீட்டை மருத்துவர் படித்தார். அவருடைய புருவம் சுருங்கியது. அவள் எந்த நகரத்திலிருந்து வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் நாற்காலியைவிட்டு எழுந்து அவள் அறைக்கு விரைந்தார். அவளைப் பார்த்தவுடன் அவள் யார் என்று மருத்துவருக்குத் தெரிந்துவிட்டது. தன் அறைக்குத் திரும்பினார்.

அன்றிலிருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக்கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.

சிகிச்சைக்காகப் பில்லை, தான் பார்த்த பிறகு தான் அவளிடம் கொடுக்க வேண்டும் என்று அக்கவுண்ட்ஸ் பகுதிக்குக் கட்டளை பிறப்பித்தார். பில்லும் வந்தது. அதைப் பார்த்த மருத்துவர் அதன் மார்ஜினில் எதையோ எழுதினார். அவள் அறைக்கு அதை அனுப்பிவிட்டார்.
பில் இருந்த உறையை பார்த்தாள் அவள். “இந்த பில் தொகையை முழுவதுமாகச் செலுத்தி முடிக்க வேண்டும் என்றால் என் ஆயுள் முழுக்கச் செலுத்தினாலும் போதாதே!” என்று எண்ணினாள். நடுக்கத்துடன் உறையைப் பிரித்தாள்.
“ஒரு டம்ளர் பாலூக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழு கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி.

இந்தக் கதை நமக்கு உணர்த்துவது அன்பின் சக்தியை. ஒருமுறை நிபந்தனையற்ற அன்பை தயைக் காட்டுகிற கலங்கரை விளக்காகவும் அன்பு திகழ்கிறது. எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்கிற நல்ல காரியம், இன்றோ, நாளையோ அல்லது பல வருடங்களுக்குப் பிறகோ நன்மையைக் கொண்டுவரும் என்பதே இக்கதையின் சாரம்.

பெறுவதன் மூலம் நாம் வாழ்கிறோம். கொடுப்பதன் மூலம் வாழ்விக்கிறோம் என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் வரிகளை மனதில் கொண்டு, சூரியன் தரும் ஒளியைப் போலவும், ரோஜா வீசுகிற மணம் போலவும், மலை உருவாக்கும் நதியைப் போலவும் நம் ஒவ்வொருவரிடமும் நிபந்தனையற்ற அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் தற்போது இந்நிலை இருக்கிறதா? இல்லை. இத்தகைய நிபந்தனையற்ற அன்பு இல்லாததன் காரணமாகத் தான் கோபம், வன்முறை, குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் மனிதர்கள் அதிகரித்துவிட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் வெளிக்காட்டும் ஈகோ என்ற மாயபிம்பம் நமது பிறப்பின் நோக்கத்தையே முடக்கிவிடுகிறது. நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வதன் மூலமே வன்முறையையும், அராஜகத்தையும் அழிக்க முடியும் என்பதை உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.
“மன்னிக்கும் மனோபாவத்தால் இன்னல்களிலிருந்து ஒருவரை விடுவித்துவிட முடியும்; அந்த ஒருவர் நீங்கள் தான் என்பதை உணருங்கள்” என்பதற்கு ஏற்ப ஆன்மாவுக்கு அழகைத் தரும் மன்னிக்கும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களது காயத்துக்குக் காரணமாக இருக்கலாம். அதையே மனதில் நினைத்துக்கொண்டு கோபமும், வலியும் கொள்ளாமல் மன்னித்துவிட்டாலே நமது மனம் லேசாகிவிடும். கடந்த கால காயங்களில் இருந்து விடுபடுவதற்கு அன்பு ஒன்றே நல்ல தீர்வு.

நன்றி:தன்நம்பிக்கை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 9:24 pm

டேஸ்ட் - ஒரு பக்க கதை
**********************
பக்கத்து வீட்டுக்கு போய்த் திரும்பியதன்
மனைவி உமாவை கவனித்தான் தினேஷ்.
போகும்போது துள்ளலுடன் போனவள் இப்போ
வரும்போது தலையை தொங்க போட்டு
கொண்டு ஏன் வருகிறாள்?
-
உமா உனக்கு என்ன ஆச்சு! போறப்போ
சந்தோசமா போனே இப்ப ஏன் இப்படி வர்ற?
-
நம்ம வீட்ல வேலை பார்த்த பொன்னம்மாவை
அவ சமையல் சரியில்லைன்னு போக
சொல்லிட்டோம்ல
-
ஆமா அதுக்கென்ன?
-
பக்கத்து வீட்டு கீதா ஒரு சமையல்காரி
வேணும்னு சொன்னா அந்த பொன்னம்மாவை
அங்க அனுப்பி அவஸ்தைபட வைப்போம்னு
நினைச்சேன். பொன்னம்மாவை அவங்க வீட்டு
சமையல் வேவையில் மாட்டி வச்சேன்.
அவ சமையல்லே அந்த கீதா என்ன பாடு
படுறான்னு பாக்கத்தான் போனேன். ஆனா
அந்த பொன்னம்மா சமையல் சூப்பரா
இருக்குன்னு எனக்கு தேங்க்ஸ் சொல்றா.
அது தான் எனக்கு புரியலே வாட்டத்துடன்
சொன்னாள் உமா. தினேஷ் புரிதலுடன்
சொன்னான்.
-
உமா உனக்கு பிடிக்கிற சேலை அவளுக்கு
பிடிக்காது. ஒவ்வொருத்தர் டேஸ்டும் ஒவ்வொரு
மாதிரி இருக்கும். நம்ம வீட்லே பொன்னம்மா
சமையல் எடுபடவே அவங்களுக்கு அவ
சமையல் புடிச்சு போச்சு. உன் திட்டம் பலிக்கலே!
-
மறு பேச்சு பேசாமல் உள்ளே சென்றாள் உமா.
-
--------------------------------------
-கு.அருணாசலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 9:26 pm

பழி - ஒரு பக்க கதை
**************************

மனைவி வேலம்மாளோடு பேருந்தில் சென்று
கொண்டிருந்தான்சேகர்.
முன் சீட்ல உட்கார்ந்திருந்த பெண்ணின் தோளில்
சாய்ந்திருந்த குழந்தை, கையை ஆட்டி ஆட்டிஅவனை
விளையாட்டுக்கு இழுத்தது.
-
அதன் இளம் கன்னத்தில் லேசாகத் தட்டினான் அவன்
-
வேலம்மாளுக்கு சுரீரென்றது. முன்சீட் பக்கம் தலையை
நீட்டி, 'இந்தாம்மா...புள்ளையை எடுத்து மடியில் வை!
பஸ் போற வேகத்துல, சீட் கம்பியில் வாய் இடிச்சு ரத்தம்
வரப்போகுது' என்று குழந்தையின் தாயை எச்சரித்தாள்.
-
குழந்தை தன் தாயின் மடியில் செல்வதற்குள் சுரீரென
தன் கையை இழுத்துக் கொண்டான் சேகர்.
-
ஊர் வந்ததும் இறங்கி நடந்தபோது கண்கலங்க அவனிடம்
சொன்னாள் வேலம்மா....'' என்னை மன்னிச்சுடுய்யா!
கழுத்தில் தங்க செயின் போட்டிருந்த குழந்தையின்
கன்னத்தை நீ தொட்டதும் எனக்கு கை காலெல்லாம்
உதற ஆரம்பிச்சுட்டது, ஏன்னா,செயினைப் பிடித்து
இழுத்த கேஸ்ல உள்ளே போயிட்டுச் சமீபத்திலதான்
நீ வெளியே வந்திருக்கே, விதி இன்னொரு பழிக்கு
உன்னை ஆளாக்கிவிடக்கூடாது பாரு!''
-
''உன் அச்சம் நியாயமானதுதான்..'' என்றபடியே அவளோடு
நடந்தான் அவன்
-
======================================
>பம்மல் நாகராஜன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 6:18 pm

சமையல் - ஒரு பக்க கதை
***************************************
அடுப்புல ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விடுங்க ஸ்வேதா. சரியாய் ஒரு ஸ்பூன் போதும்.
-
ஸ்வேதா ஏப்ரன் அணிந்திருந்தாள். பக்கத்தில் அற்புதா. அவர்களைப்போலவே அவர்கள் முன் இருந்த மாட்யூலர் கிச்சன் சமயலறையும் நீட்டாக அழகாக இருந்தது.
அற்புதா அவளுடைய அழகிய கன்னத்தைவிட கொஞ்சம் சிவப்பாயிருந்த பெரிய மிளகாய் துண்டுகளை கையில் வைத்திருந்தாள்.
-
கொஞ்சம் எண்ணை காய்ந்தபின்…இப்போ கொஞ்சம் கடுகு, அதன்பின் இந்த மிளகாய் துண்டுகளை போட்டு, அப்புறம் கொஞ்சம் வெங்காயம் தாளிக்கலாம். ஓக்கே ? இந்த நேரத்தில் கொஞ்சம் போல உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் டீ ஹைட்ரேட் ஆகி டேஸ்ட் கூடும்..
-
சரி..இது ஸ்வேதா..
-
அற்புதா தொடர்ந்தாள். இப்போ நாம செய்யப்போற சிக்கன் நாட்டுக்கோட்டை செட்டிநாடு அப்படீங்கற வெரைட்டி. இதுக்கு நாம ஏற்கனவே எடுத்து மஞ்சள் தூளில் ஊற வெச்சிருக்கிற போன்லஸ் சிக்கனை இப்ப எடுப்போம்.
-
அற்புதா, இந்த வெரைட்டிக்கு நாட்டுக்கோழி இருந்தாத்தால் நல்லா இருக்கும்னு முன்பு சொல்லியிருந்தீங்க இல்லையா ?
ஆமாம் ஸ்வேதா. ஆனா இங்க சிட்டியில நாட்டுக்கோழி கிடைக்கறதில்லை. ஆனால் அதே செட்டிநாடு மசாலா கிடைக்கறதால நாம அதே டேஸ்ட் கொடுக்கமுடியும்..
-
ட்ர்ர். ஒரு சின்ன வைப்ரேட்டர் சிலிர்ப்புக்குப்பின் தீபாவின் அலைபேசி ஒலித்தது..ராங்கு ரங்கம்மா ரவிக்க எங்கங்கம்மா போலாமா…
ஹல்லோ…
ஹலோ தீபூ…என்ன சமையல் ? லஞ்சுக்கு வரவா ?
-
இல்லடா…இன்னைக்கு நான் எந்திரிச்சதே பதினோரு மணிக்குத்தான். நீ ஆபீஸ் கேண்டின்ல லஞ்ச் முடிச்சுரு. அப்படியே பிஸ்ஸா ஹட்டுக்கு சொல்லி எனக்கொரு வெஜ் பிட்ஸா ஆர்டர் பண்ணிடு.
ஓக்கேம்மா. என்ன பண்ணிக்கிட்டிருக்க ?
-
டிவியில ஸ்வேதா / அற்புதா டெலிஷியஸ் செட்டிநாடு சமையல்னு
ஒரு ப்ரொக்ராம் பார்த்துக்கிட்டிருக்கேன்….
..

=============
நன்றி -- tvp.ravi
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 6:21 pm

பணக்காரி – ஒரு பக்க கதை
******************************************
கல்யாண புரோக்கர் ரகுபதியிடம் வந்தார். நீட்டினார்
ரகுபதி அலசினார். ஒன்றைத் தேர்வுசெய்தார்
-
“ரவி, இந்த இடம் நல்லாயிருக்கு, பார்த்து ஓ.கே. சொல்லு”
என்றார், பிள்ளையிடம் தந்தார்.
-
“ப்ச், பொண்ணு சுமார் அழகு, வேண்டாமே”
-
“டேய்…அழகு சோறு போடாது, பொண்ணு வீடு நல்ல வெயிட்
ஏகத்துக்கு நிலம் ,நீச்சு இருக்கு.., யோசி…”
-
ரவி தலையாட்டினான். தாலியைக் கட்டினான்.
ஒரு மாதம் கடந்தது. ரவியின் புது மனைவி எகிறினாள்.
-
‘இந்தாங்க..இனமேயும் தாங்காது! என் அப்பா வீட்டுகிட்ட
தனிக்குடித்தன்ம போயிடலாங்க…”
-
‘ஒரு மாசத்துலயா? ஊர் சிரிக்கும்டி, என் அப்பா எவ்ளோ
கஷ்டப்படுவார்…?”
-
‘ஊர் வாய் துட்டு தராது, சொந்தம் சொத்து தராது.
என் அப்பா தருவார், யோசிங்க…”
-
ரவி மீண்டும் தலையாட்டினான்…நடையைக் கட்டினான்.
-
அப்பா விதிர்த்து போய் நின்றார்…!
-
———————————–
>ச.பிரசன்னா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 6:25 pm

மழை - ஒரு பக்க கதை
************************************

மல்டிகுஷன் ரெஸ்டாரண்ட், மெல்லிய வெளிச்சம்
-
சார் என்ன ஆர்டர்?
-
நான், ஹைதராபாத் சிக்கன், க்ரில் சிக்கன், முதல்ல
ரெண்டு டெமோட்டோ சூப்..!
-
ஒ.கே.சார்..!
-
என்ன ப்ரியா ஒ.கே.தானே..?
-
ஒ.கே.டார்லிங்..!
-
பேறர்...ஏசி ஒர்க் ஆகலியா..? கூலிங் கம்மியா இருக்கு..!
-
கொஞ்சம் ப்ராப்ளம் சார்..!இப்ப சரியாயிடும் சார்!
-
அப்பாடா ஏ.சி. இல்லாம வாழவே முடியாது போல ,
பயங்கர வெயில், இல்ல வினோத்..
-
ஆமா மழையே கிடையாது.. எப்பதான் நல்லா மழை
பெய்யுமோ?
-
நாட்டுல நல்லவங்களே கிடையாது போல, அதான்
மழையே வர மாட்டேங்குது..!
-
ஆமா..வாஸ்வந்தான் வினோ...!
-
அய்யோ! நல்லா மாட்டிக்கிட்டோம்..! என் ஹஸ்பென்ட்
ஃப்ரண்ட் ரெஸ்டாரண்டுக்குள்ளே வர்றார்...!
-
-------------------------------------------
>அ.ரியாஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 6:28 pm

படம் - ஒரு பக்க கதை
************************************
பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருந்த லட்சுமி
பெருமூச்செறிந்தாள்.
-
'ஒய்மா...ஒய் திஸ் பெருமூச்சு' என்றாள் மகள் மதுமதி
-
பாரு...எல்லோரும் குரூப் குரூப்பா எடுத்துக்கிட்ட படங்கள்
இருக்கு. ஆனா நானும் என் அம்மாவும் ஒண்ணா எடுத்துக்கிட்ட
படம் ஒண்ணு கூட கிடையாது. 'ஏன்னா உன் பாட்டி நான்
பிறந்தவுடன் இறந்து போயிட்டாங்க' என்றாள் லட்சுமி.
-
'பாட்டியோட படம் ஒண்ணு கூட கிடையாதாம்மா' என்றாள்
மதுமதி கனிவாக.
-
'பாட்டியோட சீமந்தப் புகைப்படம் ஒண்ணு இருக்கு' என்று
அதைக் காட்டினாள் லட்சுமி.
-
தாய்மையின் பூரிப்பில், தலையில் நெற்றிசுசுட்டி, பூச்சடை...
கண்களில் மையும் மிரட்சியும், கைகளில் ரேஷன் கடை...க்யூ
வரிசையாக கண்ணாடி வளையல்கள், பட்டுப் புடுவை ,
மேடிட்ட வயிறு, பின்புறம் கண்ணாடியில் பிம்பம், பக்கத்தில்
பூச்சாடி.
-

'டோன்ட் ஒரிம்மா, நீயும் உன் அம்மாவும் சேர்ந்து
எடுத்துக்கிட்ட படம்தான் இது,.பாட்டியோட வயித்துக்குள்ளே
இருக்கிறது நீதானேம்மா...'கூல்' என்றாள் லட்சுமியை இறுக்க
கட்டி முத்தமிட்ட மதுமதி.
-
இளைய தலைமுறையின் புதிய கோணத்தைக் கண்டு
லட்சுமியின் புருவங்கள் உயர்ந்தன.
-
--------------------------------
>இரா.தேன்மொழி அண்ணாதுரை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 6:32 pm

கஸ்டமர் - ஒரு பக்க கதை
*****************************************
கசமுத்து பலசரக்கு கடையில் நான் நின்றிருந்தேன்.
ஒவ்வொருவராக வந்து பலசரக்கு சாமான்கள் வாங்கி
சென்ற வண்ணம் இருந்தனர்.

ஒருவர் கருப்புகட்டி ஒரு கிலோ என்று கேட்க, ஏய் தம்பி
சாருக்கு உடன்குடி கருப்புகட்டியை போட்டுக்கொடு
என்றார் கசமுத்து.

இன்னொரு பெண், அரை கிலோ துவரம்பருப்பு என்று
கேட்க, அம்மாவுக்கு அந்த நயம் பருப்பை நிறுத்துக்கொடு
என்றார்.

எனக்கு தெரியும் இவரிடம் இருப்பது ஒரே கருப்பு கட்டி.
ஒரே துவரம்பருப்பு தான் என்று.

இது பற்றி கடை முதலாளி கசமுத்துவிடம் கேட்க இப்படி
சொன்னால் தான் கஸ்டமர்கள் நமக்கு நல்ல பொருளை
பார்த்து தார்றார்னு நினைப்பாங்க. ந;ம்ம கஸ்டம்ர்கள்
வேற கடைக்கு போகாம நம்ம கடைக்கே வருவாங்க.
இது வியாபார டெக்னிக் தம்பி என்றார் கசமுத்து.

அப்படிப்போடு சபாஷ் என்றேன் நான்.
-
----------------------------
எஸ்.முகம்மது யூசூப்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 1:53 pm

பட்டு மனசு - ஒரு பக்க கதை -
****************************************

அம்மா உங்களுக்கு பட்டுப்புடவை உயிருன்னா, மருமக
காயத்ரியை எதுக்கு தினம் பட்டுப்புடவையைக் கட்டச்
சொல்லி சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கீங்க..?'' என்ற
ராகவனிடம் தாய் சீத்தா...
-
'' காரணம் இருக்கு...காயத்ரி குடும்பத்துக்கு நெசுவுத் தொழில்.
அவுங்க தொழில்ல, காயத்ரி மட்டும் பட்டுப்புடவை தயாரிப்பில்
ஒரு ஜாம்பவானா இருந்தவ. ஒரு சமயம் அங்க போனப்ப,
--
ஆன்ட்டி வாங்கன்னு, நெய்யறதை விட்டுட்டு ஓடி வந்து
உட்காரச் சொல்லி அவ தயாரிச்ச பட்டுப் புடவைகளை
காட்டிக்கிட்டு இருந்தாள். அவ கட்டியிருந்த கந்தல் புடவையில
என் கண்ணு பட்டுச்சு.
-
உடல்முழுக்க உழைப்போட வியர்வைத் துளி...பசியினால் வாடி
ஒட்டிய வயிறு. இவ்வளவு ஏழ்மையிலும் முகத்துல வசீகர
கவர்ச்சிக்கு குறைவு இல்லை.

கஷ்டப்பட்டது சுகப்படட்டுமேனு , உன் சம்மதத்தோட மருமகளா
ஏத்துக்கிட்டேன். ராகவா... அவ பட்டுப் புடவையை நெய்தாலும்,
அதைக் கட்டிப் பார்க்க அவளுக்கு குடுப்பினை இல்லை,

அதான்..! நம்ம வீட்ல தினம் கட்டச் சொல்லி சந்தோஷப்பட்டுகிட்டு
இருக்கேன்''
-
அம்மா உனக்கு எப்பவும் பட்டு மனசும்மா...என்றான் பூரிப்போடு
ராகவன்
-
---------------------------------------
>என்.கோபாலகிருஷ்ணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 1:58 pm

பாஸிட்டிவ் - ஒரு பக்க கதை
**********************************************
ஏம்பா சரவணா, குழந்தைக்கு ஜாதகம் பாக்கப் போனியே
என்னாச்சு? வீட்டிற்குள் நுழைந்த சரவணனை மறித்து
அவனுடைய அம்மா பார்வதி கேட்டாள்

ஹோதிடர் சொன்னதை அவனுக்குள்ளாகவே நினைத்துக்
கொண்டான்.
-
இதோ பாரு தம்பி உனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம்
கழிச்சி குழந்தை பிறந்திருக்கு. இது எல்லாருக்கும்
சந்தோஷம்தான். ஆனா குழந்தை பிறந்த நேரம் சரியில்லை.
வெளிப்படையா சொல்லணும்னா, நீ இப்ப பாக்கற வேலை
உனக்கு பறிபோயிடும். நீ குடியிருக்கிற வீடும் உன் கைவிட்டுப்
போற சூழ்நிலை உருவாகும்''
-
வெளிறிய முகத்தோடு வெளியேறியவன், வீட்டில் அவன் அம்மா
பார்வதியின் கேள்விக்கு பதில் சொல்வதறியாது திகைத்து நின்றான்.
-
''என்னப்பா ஜோதிடர் என்ன சொன்னார்னு கேட்டேன், கம்முனு
இருக்கறே?''
-
சற்றே சுதாரித்தவனாவான். 'அது ரொம்ப நல்ல
விஷயம்தாம்மா
நான் இப்ப பாக்கற வேலையை விட வேற ஒரு
நல்ல வேலை கிடைக்குமாம்.
நாம இப்ப குடியிருக்கிற வீட்டை விட பெரிய
வீடு கட்டுவேனாம்.
-
அப்படியா ரொம்ப சந்தோஷம்பா!' என்றாள்.
-
--------------------------------
>ராம்மூர்த்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by ரானுஜா Wed Dec 18, 2013 5:17 pm

கதை அருமை புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 7:07 pm

nanRi nanRi  கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 19, 2013 11:55 am

நன்றி நன்றி  கொண்டாட்டம் கொண்டாட்டம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 19, 2013 11:57 am

கேட்ச் - ஒரு பக்க கதை
***********************************
மாரிமுத்துவின் மானசீக அணி ஃபீல்டிங
-
எதிர் அணி வெற்றி பெற ஒரே பந்து இரண்டு ரன்கள்
-
பந்து ஆகாயத்தை நோக்கி அடிக்கப்பட்டது!
-
மாரிமுத்து டீ ஆத்துவதை கூட நிறுத்திவிட்டு, டீக்கடை
டிவி- யில் மூச்சடைத்துப் பார்க்க
-
பந்து பவுண்டரிக்கு அருகில் இறங்கி, அங்கு நின்றிருந்த அவனது
கிரிக்கெட் 'ஹீரோ'வின் கைகளில் விழுந்தது
-
அனைவரும் உற்சாக கூச்சலிட பந்து கையிலிருந்து நழுவி
கீழே விழ, அணி தோற்றது!
-
ஆத்திரம் தாங்காத மாரிமுத்து, உடலில் தீயை பற்ற வைக்க,
மறுநாள் தினசரிகளின் ஒரு மூலையில் செய்தியாக எரிந்து
போனான்.
-
''ரெண்டு பொம்பள புள்ளங்களை, நான் எப்படி
கரையேத்த!''
-
அழுது கொண்டே குழந்தைகளோடு போகும் இடம் தெரியாமல்
போயக் கொண்டிருந்தாள் மாரிமுத்துவின் இளம் மனைவி
-
நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த சொகுசுக்
கப்பலில் பாலிவுட்டின் 'கனவுக்கன்னி' கிரிக்கெட் 'ஹீரோ' மார்பில்
சாய்ந்து உளறிக் கொண்டிருந்தாள்
-
''டார்லிங் நீ அந்த கேட்சை மிஸ் பண்றவரைக்கும் நான்
நினைக்கவே இல்லை. இப்படி 'வேர்ல்டு டூர்'
வருவோம்னு! கிரேட் டீல்..!!
-
---------------------------------
>ப.உமாமகேஸ்வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 19, 2013 12:01 pm

வேஸ்ட் - ஒரு பக்க கதை
****************************************
“என்ன அருணா இது, இப்படிச் சொதப்பிட்டியே?’ என்றான்
கௌதம், மனைவியிடம்.
-
“என்ன சொல்றீங்க?’ என்றாள் அவள்.
-
“பின்னே? பர்த்டேக்கு டிரெஸ் எடுக்கப் போறேன்னு போய்
எனக்குக் கண்றாவியான டிசைன்லே எடுத்திட்டு வநதிருக்கே.
பிள்ளைகளுக்காவது உருப்படியா எடுத்திருக்கியா?

தினேஷ் ஏற்கெனவே கலர் கொஞ்சம் கம்மி. அவனுக்கு எடுத்த
சட்டையும் டார்க் கலர்லே… திவ்யாவுக்குக் காதிலே போடற
ரிங்ஸ் என்னடான்னா இத்தனை பெரிசா இருக்கு. எங்க ஆபீஸ்லே
ரெண்டு மூணு நாளா ஆடிட் காரணமா கொஞ்சம்
பிசியாயிட்டேன்ங்கறதாலே இப்படிப் பண்ணிட்டு வந்திருக்கியே?

சுருக்கமாச் சொல்றதுன்னா உன்னோட செலக்ஷன் எல்லாமே
டோட்டல் வேஸ்ட் அருணா…’
-
“அப்படியா? நீங்களும் என்னோட செலக்ஷன்தான்கறதை
ஞாபகம் வச்சுகிட்டுதானே பேசறீங்க?’ என்றாள் அவள்,
சலனமில்லாமல்.
-
————————————

- ஷேக் சிந்தா மதார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 19, 2013 12:04 pm

தந்திரம் - ஒரு பக்க கதை
*************************************
கல்யாணிக்குக் கல்யாணம்.
-
எல்லோரும் கண்டிப்பாக திருமணத்திற்குச் செல்ல
வேண்டும். கிரி வசிக்கும் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புற
புதிய குடியிருப்பு.
-
புறப்படும் முன், பீரோவைத் திறந்து துணிமணிகளைச்
சிதறியடித்தான்.
-
தேவையில்லாத காகிதங்களை வீடு முழுவதும் பறக்க
விட்டான்.
-
'என்னங்க...இப்பிடிப் பைத்தியம் போல நடந்துக்கிறீங்க..''
என்றாள் மனைவி.
-
'அடியே...நான் நல்லாத்தாதானிருக்கேன். இந்தப் பகுதியைப்\
பத்தி ஒனக்கு நல்லாவே தெரியும். திருட்டுப் பயம் அதிகம்..
திருட வநபவன் இந்த சூழ்நிலையைப் பார்த்தால் ஏற்கனவே
கொள்ளை போன இந்த வீட்டில் ஒன்றுமே கிடைகாது என
நினைத்துப் போயிடுவான். அதுக்குத்தான் இந்த தந்திரம்'
என்றான்-
-
கணவனை நினைத்துப் பெருமைப்பட்டாள்..!
-
------------------------------
>கோவில்பட்டி எஸ்.தங்கராஜ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 19, 2013 12:09 pm

தங்கம் - ஒரு பக்க கதை
*********************************
தங்கம் விலை குறைந்த சில தினங்களாகவே பரபரப்பாக
காணப்பட்டாள் அக்ஷயா. அன்றும் அப்படித்தான்.

அதிகாலையில் குளித்து முடித்து தயாரானாள்.'இன்றும்
தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது' தொலைக்
காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
-
தங்கம் விலைக் குறைவு. அக்ஷயாவை இன்னுன் சுறுசுறுப்பாக
இயங்க வைத்தது.
-
''அம்மா, .டிபன் ரெடியாயிடுச்சாம்மா, கடை திறந்ததும்
முதல் ஆளா போய் நிக்கணும். பவுனுக்கு இரண்டாயிரத்து\
நூறு ரூபாய் குறைஞ்சிருக்குது. கூட்டம் முண்டியடிச்சுக்கிட்டு
வரும். அதுக்கு முன்னாடி நாம போயிடணும்' பட படத்தாள்
அக்ஷயா.
-
''பத்து நிமிஷம் பொறும்மா, இதோ தயாராயிடுச்சு...''
சமையலறையில் குரல் ஏட்டது.
-
''பத்து நிமிஷமெல்லாம் முடியாதும்மா...'கூட்டம் வரும்னு
தெரியும்ல. முன்னாடியே வர வேண்டியதுதானே'ன்னு
சூப்பர்வைஸர் கத்துவாரும்மா..நான் வரேன்...!''

சொல்லிக் கொண்டே பேருந்து பிடிக்க ஓடினாள்.
பிரபல நகைக்கஃகடையில் சேல்ஸ்வுமனாக வேலை பார்க்கும்
அக்ஷயா
-
-------------------------------------
>பட்டவர்த்தி ஆதி.சௌந்தரராஜன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 19, 2013 12:12 pm

மெஷின் - ஒரு பக்க கதை
*****************************************
ஞாயிறு என்பதால் லேட்டாக எழுந்து கையில் நியூஸ்
பேப்பரும் மனைவி கொடுத்த காபியுமாக வந்து சோபாவில்
அமர்ந்த மாதவனுக்கு கொல்லைப்புறம் கமலா துணி
துவைப்பது கண்ணில் பட்டது.
-
தேவி! வாஷிங் மெஷின் வாங்கியதும் கமலாவை
நிறுத்திட்டேன்னு சொன்னாயே, என்னாச்சு மெஷின் ஏதும்
ரிப்பேராயிடுச்சா..?
-
அதில்லைங்க…இந்த ஒரு வாரமா அவ வராம எனக்கு
பேச்சுத் துணைக்கும் ஆளில்லை, இந்த தெருவுல யார் வீட்ல
என்ன நடக்குதுங்கறதும் தெரியல…அதான்
கமலாவை மறுபடி வரச் சொல்லிட்டேன்…!
-
அப்ப வாஷிங் மெஷின்?
-
அது பாட்டுக்கு இருக்கட்டுமே!
-
ம்ஹீம்! சரியான அக்கப்போர்! என்று முணு முணுத்தான் மாதவன்.
-
==================================
>என்.பூதேவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 20, 2013 8:40 pm

பயிற்சி - ஒரு பக்க கதை
***********************************

கிராமத்து பசங்களை உங்க ஜவுளிக்கடையில வேலைக்கு
வெச்சிருக்கீங்க. இந்த சிட்டியில் வாடிக்கையாளர்கிட்டே
எப்படி பேசணும், என்ன மாதிரி பாடி லாங்வேஜ் காட்டணும்னு
அவங்களுக்கு நாங்க கத்துத் கொடுக்கிறோம். ஒரு வார
வகுப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுங்க…”
-
போன வாரம் சுய முன்னேற்றப் பயிற்சியாளர் ஒருவர்
வந்து கடை உரிமையாளர் தங்கபாண்டியாரிடம் சொன்ன
யோசனை அது.
-
அவர் அது பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் கடைக்கு
வந்த இரு பெண்கள் பேசிக் கொள்வது காதில் விழுந்தது.
-
”பெரிய மால் எல்லாத்தையும் விட்டுட்டு இந்தக் கடையில்
எதுக்கடி டிரெஸ் எடுக்க வந்தே?” ஒரு பெண் கேட்க…
-
”நீ சொல்ற கடைகள்ல சேல்ஸூக்கு நிக்கிறவங்க ‘கீ’ கொடுத்த
பொம்மை மாதிரி பேசுவாங்க. இந்தக் கடைப்பசங்க இயல்பா
பேசி, நம்ம சொந்தக்காரங்க மாதிரியே நடந்துக்கிறாங்க.
இப்படி வெள்ளந்தியா பேசுறவங்களுக்காகத்தான், துணி எடுக்க
எப்பவும் இங்கேயே வர்றேன்…” மற்றவள் பதில் சொன்னாள்.
-
வாடிக்கையாளர்களின் பேச்சைக் கேட்ட தங்கபாண்டியன்,
தன் கடைப் பையன்களையும் ‘கீ’ கொடுத்த பொம்மையாக
மாற்ற வேண்டாம் என்று தீர்மானித்தார்…!
-
————————————–
>கீர்த்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 20, 2013 8:44 pm

அடகு - ஒரு பக்க கதை
************************************
கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை
யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக்
கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள் நுழைந்தனர்.
-
நகைகளை வைத்து பணமும், இரசீதும் பெற்று கொண்டு
வெளியேறினர். வழியில் உள்ள மளிகைக் கடையில் அரிசியும்,
கொஞ்சம் மளிகையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.
-
இவர்கள் அடகுக் கடைக்கு போனது தான் அன்றைக்கு அந்த
தெருவில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. என்ன ஆச்சு?
பெருசுகளுக்கு? மளிகையும், மூட்டை அரிசியும் வீடு தேடிவருமே
அடகு கடைக்கு வேறு போவானேன்? என்ன கஷ்டமோ பாவம்
என பேசியவர்களில் நலம் விரும்பிகளும் உண்டு. நக்கல்
அடிப்போரும் உண்டு.
-
மறு நாள் ரயிலில் எதிரில் அமர்ந்திருந்த கணபதியிடம்,
ஏங்க நாமகோயிலுக்கு போகத்தான் நம்ம பையன் பணம்
கொடுத்தானே, பின்ன எதுக்கு நகையை சொற்ப பணத்துக்கு
அடகுல வச்சீங்க? தெருவில் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?
என்றாள் பாக்கியம்மாள் கோபமாக.
-
பாக்கியம், நாம திரும்பி வர எப்படியும் பத்து நாள் ஆகும்.
நம்ம வீடோ தனியா ஒதுக்குப்புறமா இருக்குது. நாம வர்ற
வரைக்கும் நகையெல்லாம் பத்திரமா இருக்க இதுவும் ஒரு
வழிதான்.

மத்தவங்க நினைக்கிறத பத்தி நீ ஏன் கவலைப்படறே?
என்றார் கணபதி. கணவரின் வியூகத்தை வியந்த பாக்கியம்
வாயடைத்து அமர்ந்தாள்.
-
———————————–
-கே.முருகேசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 20, 2013 8:48 pm

திருமணம் – ஒரு பக்க கதை
******************************************
ளாக நேர்முகத்தில் தேர்வு பெற்ற மாணவ மாணவியருக்கு
நியமனங்களை வழங்கும் விழா அமர்க்களப்பட்டுக்
கொண்டிருந்தது.

-
மதிய உணவுக்குப் பின் கலந்துரையாடல். அதன்பின் யார்
யாரோ மேடை ஏறிப் பேச கடைசியாக பேசினார் கல்லூரி
நிறுவனத் தலைவர்.
-
“உங்க எல்லோருக்கும் ஒண்ணு சொல்றேன். வேலைக்கு
போங்க, வேணாங்கல, ஆனா உடனே கல்யாணம் பண்ணிக்குங்க.
அதுதான் நல்லது. குடும்பமா இருந்தாதான் பரிவு பாசம்
அன்பு எல்லாம் இருக்கறதோட வேலைலயும் கவனம் செலுத்த
முடியும்.’
-
புரியாமல் பார்த்த மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.
இறங்கி வந்த நிறுவனரிடம் கேட்டார் சிறப்பு விருந்தினர்.
“என்ன சார், இப்படி பேசிப்புட்டிங்க. வேலை கிடைச்சதும்
கல்யாணம் பண்ணிக்கணுமா, அதனால என்ன ஆகப் போவுது?’
-
“என்ன ஆகப்போவுதா? நகரத்துல நாலு கல்யாண மண்டபம்
கட்டி வைச்சிருக்கேன். அஞ்சு விளையாட்டுப் பள்ளி, துவக்கப்
பள்ளி, உயர்நிலைப் பள்ளினு கட்டி வைச்சிருக்கேனே.
இதுங்க கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டிகளை பெத்துப்
போட்டா தானே எனக்கு வருமானம் என்ன நான் சொல்றது!’
-
சிறப்பு விருந்தினருக்கு மயக்கம் வந்தது.
-
———————————–
- சூர்யகுமாரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த ஒருபக்க கதைகள்  Empty Re: படித்த ஒருபக்க கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum