Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிரப்பப்படாத வெற்றிடங்கள்
Page 1 of 1 • Share
நிரப்பப்படாத வெற்றிடங்கள்
வெற்றிடங்களை காற்று நிரப்பும்; காற்றில்லாத வெற்றிடங்களை சோதனைக்காக அறிவியல் உருவாக்கும். ஆனால், வெவ்வேறு துறைகளில் ஏற்படும் வெற்றிடங்களை மட்டும் மானுடர்களால் நிரப்ப முடியாது. நிரப்பும் முயற்சியிலேயே மனிதன் வெற்றி கொள்கிறான் என்பது அழகு என்றால், இடங்கள் என்னவோ நிரம்பாமல் அப்படியே இருப்பது அதனினும் அழகு.
இல்லையெனில் இங்கு கவிஞர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் வேலையே இருக்காது. நிலவும், காதலும் கவிஞர்களின் விரல் நுனியில் அசையா சொத்துகளா என்ன? அவற்றிடமிருந்து விலகி வராத கவிஞர்களே கிடையாதே. அநேகமாக, கவிதைகளை அதிகமாக அலங்கரித்தது நிலவும், காதலுமாகத்தான் இருக்கும்.
என்றபோதும், நாளைய கவிஞனும் அதனை அலங்கரிக்கவும், அதனைக் கடக்கவும் தானே போகிறான். காரணம், அங்குள்ள வெற்றிடம் நிரப்பப்படாமல் இருப்பது மட்டும்தான். ஆனால், அவன் கடக்கும் திசையும், அலங்காரமும் வேறானவை. இந்த முயற்சியில் வளர்வது நிலவும், காதலும் மட்டுமல்ல. கவிஞனும்தான்.
கவிதைத் துறையில் மட்டுமல்ல இந்த வெற்றிடங்கள். சக்கரம், தீ, விவசாயம், நிலையான இருப்பிடம் என்று தொடங்கி செவ்வாய்கிரகத்தில் ஆய்வு என புதிய கண்டுபிடிப்புத் துறையில் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சி இன்னும் இங்கு ஓயவே இல்லை.
அவ்வாறு இருக்கும்போது, இது வெற்றிக்கான துறை அல்ல என்று பெரும்பாலானவர்கள் எப்படி பிரிக்க முடியும்?
இந்தத் துறையினால் எனது எதிர்காலம் வீணாகி விட்டது என்று நாம் கூறி விடக் கூடாது. உலகின் ஏதோ ஓர் மூலையில் நமது நிலையிலேயே உள்ள ஒருவன் அதே துறையில் உச்சத்தில் இருப்பான் என்பதை மறக்கக் கூடாது. அவனுக்கான சூழல் வேறு என்று நாம் சமாதானம் தேடிக் கொள்ளவும் கூடாது.
ஏனெனில், அவனது சூழல் நமக்கு கிடைத்த சூழலை விட மோசமாகவும் இருந்திருக்கலாம். அவன் செய்தது எல்லாம், பாதையில் கண்டுபிடிக்கப்படாத வெற்றிடங்களைக் கண்டிருப்பான்; அடைக்க முயற்சித்திருப்பான் என்பது மட்டும்தான்.
படித்து விட்டதாலோ, வளாகத் தேர்வில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டு விட்டதாலோ வெற்றிடத்தை நிரப்பி விட்டதாகக் கருதக் கூடாது. ஐ.ஐ.எம். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள், படிப்பு குறைவான முதலாளியிடம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதையும் மறந்து விடக்கூடாது.
எல்லாம் தொடங்கப்பட்டுள்ளது என்றாலும், எதுவும் முடிக்கப்படாமல் உள்ளன. மானுடத்தின் தேடல் கோடு போன்றது. அதன் ஆரம்பம் வேண்டுமானால் புள்ளியாக இருக்கலாம். அதன் முடிவும் இல்லை; அதனை முடிப்பவர்களும் இல்லை.
நமது பெயரும் பதிவு செய்யப்பட வேண்டுமெனில் அக்கோட்டை சிறிது அதிகப்படுத்தலாம். அவ்வாறு நாம் செய்யாவிடிலும் அது வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.
முயற்சி போதும் என்று நாம் நிறுத்தினால், நமக்கு பின்னால் வருபவர் நிறுத்த மாட்டார். போட்டியை சக மனிதனிடம் காட்டினால் வெற்றி கிடைக்கும் எனில், அதை நம்மிடத்தில் காட்டினால் வெற்றி இரட்டிப்பாகும்; பொறாமையும் நம்மை விட்டு அகலும்.
தனித்து விடப்பட்டேன் என்பதற்காக ஒளி வீசுவதை வீதி விளக்குகள் நிறுத்தி விடவில்லை. எவரேனும் ஒருவருக்கு பயன்படும் என்று அதிகாலை வரையிலும் அது ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது.
வெற்றிடத்துக்கான தேடலை ஆசை எனலாமா? இருக்கட்டுமே. ஆசைதான் மனிதனை எழ வைத்தது; அதுவே நம்மை நடக்கவும் ஓடவும் செய்தது. தனது இயலாமையை மறைக்க, சூழல் மீது குற்றம் சுமத்துபவனை சூழல் மட்டுமல்ல, சமூகமும் ஒதுக்கி விடும்.
ஒரு சில விநாடிகளில் முடியும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கு ஆண்டுக்கணக்கில் பயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இருக்கையில், நமது நீண்ட பயணத்துக்கு முயற்சிகளும் பயிற்சிகளும் அதிகம் தேவைப்படுகிறது.
வெற்றிடத்தை நிரப்பும் தேடலில் ஒருவன் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று பொறுமைதானே தவிர, பொறாமை அல்ல.
ஆடுகளுடன் புலி வாழ்ந்த கதையை கேட்டதுண்டு; தெனாலிராமன் கதை மூலம் சிந்தித்தது உண்டு; நேர்மையான தலைவர்கள் வரலாற்றைக் கேட்டு சிலிர்த்ததும் உண்டு.
ஆனாலும், டாஸ்மாக்கிலும் நீதிமன்றத்திலும் கூட்டம் பெருகி அல்லவா வருகிறது. எழவேண்டும் என்று எத்தணித்த பிறகு, இன்னும் ஏன் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்?
கடந்த கால சரித்திரம் நமக்கு கற்றுத்தரும் பாடம் ஒன்றுதான். அதனை ஒருசிலர்தான் தெரிந்து கொள்கின்றனர்.
அவர்களிலும் மிகச் சிலர்தான் உணர்ந்து செயல்படுகின்றனர். இறுதியில், பிரமிடின் உச்சத்தை ஓரிருவர் மட்டும் அடைகின்றனர்.
By ம. பண்டரிநாதன்
நன்றி: தினமணி

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நிரப்பப்படாத வெற்றிடங்கள்
மிக அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum