Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரசித்த ஒரு பக்க கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ரசித்த ஒரு பக்க கதைகள்
ரசித்த ஒரு பக்க கதைகள்
**************************************
அனுபவம் – ஒரு பக்க கதை
---------------------------------------
என்னம்மா…டவுனில் போனமாதம் புதுசா ஒரு
ஜவுளிக்கடை திறந்திருக்காங்க…அதை விட்டுட்டு
பழைய கடைகளில்தான் அண்ணன் கல்யாணத்திற்கு
துணி வாங்கணும்னு சொல்றே, ஏதாவது
சென்டிமென்டா..? – மேனகா தன் தாய் கனகாவிடம்
கேட்டாள்.
-
”அந்தப் பழைய கடையில் இரண்டு துணிகள் எடுப்போம்
அதே மாதிரி துணிகளின் விலையை புதுக்கடையில்
விசாரிப்போம், அப்ப காரணம் புரிஞ்சிக்குவே” என்றாள்
கனகா.
-
துணிகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தபொழுது
புதுக்கடையில் விலை சற்று ஏற்றமாக இருந்தது.
-
விலை இப்படித்தான் இருக்கும்னு உனக்கு எப்படிம்மா
தெரியும்? மேனகா ஆச்சரியமாக கேட்டாள்.
-
வட்டிக்கு கடன் வாங்கி, பிரபலங்களை அழைத்து புதுசா
கடை திறக்கறவங்க, அந்த செலவையெல்லாம்
வாடிக்கையாளர்களிடமிருந்து குறுகிய காலத்தில்
எப்படி வசுலிக்கலாம்னுதான் முயற்சிபண்ணுவாங்க.
பழைய கடைக்காரங்க, பெரும்பாலும் கடனிலிருந்து
மீண்டு வந்திருப்பாங்க, அதனால அம்மாதிரி செலவுகள்
அவர்களுக்கு தற்பொழுது இருக்காது. அதனால்தான்
புதுக்கடையில் இந்த ஏற்றவிலை.
-
படிக்காத தன் தாயின் அனுபவ அறிவைக்கண்டு வியந்து
போனாள் மேனகா.
-
————————————————
>எஸ்.எஸ்.ராமன் (குமுதம்)

Re: ரசித்த ஒரு பக்க கதைகள்
பட்டுப் புடவை – ஒரு பக்க கதை
நந்திதாவின் கல்யாணத்திற்காக ஸ்பெஷலாக
நெய்யப்பட்டிருந்த அந்த பட்டுப்புடவையை நூறாவது
தடவையாக எடுத்து அழகு பார்த்தாள் நந்திதா.
-
கிட்டத்தட்ட அந்தப் புடவையின் விலை மட்டும் ஐம்பது
லட்சம் என அவளது அப்பா சொன்னார். புடவையை
டிசைன் செய்தது. நந்திதாவுக்கு கணவனாக வரப்போகும்
விஷ்ணு. இதுவரை எந்த மணமகளும் அணியாத வகையில்
நந்திதாவின் புடவை இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் நந்திதாவின் மீது விஷ்ணு வைத்துள்ள
காதல் அவளுக்குப் புரியும் என்பதால், செலவைப்பற்றி
கவலைப் படாமல், காசை வாரி இறைத்து அந்தப் புடவையை
நெய்யச் சொல்லியிருந்தான்.
-
அன்றும் புடவையை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த
போது, அவளது அப்பா சந்தானத்தின் சத்தம் கேட்டது.
-
“அம்மா நந்திதா… விஷ்ணு சார் வந்திருக்கார்… அந்தப்
புடவையை எடுத்துட்டு வாம்மா…’ என்று சொல்லவும், கையில்
எடுத்த புடவையை அதற்கென்று இருந்த அட்டைப்பெட்டியில்
வைத்து, அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
-
புடவையை விரித்துப் பார்த்த விஷ்ணு அசந்து விட்டான்.
-
“சார் நான் நினைச்சதை விட அருமையா நெய்திருக்கீங்க…
எங்க கல்யாணத்திற்கு வர்ற எல்லாரும் புடவையைப் பார்த்து
மூக்கில் விரலை வைக்கப் போறாங்க பாருங்க… எல்லா
பத்திரிகையிலும் இந்தப் புடவையைப் பத்தின நியூஸ்தான்
ஹைலைட்டா இருக்கப்போகுது பாருங்க… இந்தாங்க சார்,
இந்தப் புடவை நெய்ய நீங்க கேட்ட பணம்’ என்று புடவை
நெய்ததற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, புடவையுடன்
கிளம்பிய விஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்
ஏழை நந்திதா!
-
———————————
- எஸ். செல்வசுந்தரி

பொம்மை - ஒரு பக்க கதை
------------------------------------------
ரேகாவின் செல்போன் ஒலித்தது...
அலுவலகத்திலிருந்து அவள் கணவர் அசோக்தான்
பேசினார்.
-
நம்ம அழகப்பன் மகளுக்கு சின்னதா ஆக்ஸிடென்ட் .
மாடியில் இருந்து தவறி விழுந்து ஹாஸ்பிட்டல்ல
சேர்த்திருக்காங்களாம்.
''நம்ம ஷிவானி வயசுதான் அவளுக்கு. செகண்ட்தான்
படிக்கிறா. பாவம்! நான் பர்மிஷன் கேட்டுட்டு சீக்கரம்
வர்றேன். நீயும் ஷிவானியும் ரெடியா இருங்க..
ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடலாம்...''
-
ஷிவானிக்கு டியூஷன் இருக்கேங்க...அவளும் வரணுமா?
நீங்க மட்டும் போகலாமே..!
-
ப்ச்...எல்லாரும் போய் பார்த்துட்டு வந்தாதாம்மா
நல்லாயிருக்கும்...
-
சரிங்க..!
-
போகும் வழியில் டூவீலரை நிறுத்தி பெரியதாக
பொம்மை ஒன்று வாங்கினார் அசோக்.
-
உடம்புக்கு முடியாதவங்களை பார்க்கப் போறப்ப ஆப்பிள்,
ஆரஞ்ச், ஹார்லிக்ஸ்னுதான் வாங்குவாங்க. நீங்க
எதுக்கு பொம்மை வாங்கிறீங்க? - கிண்டலாகக்
கேட்டாள் ரேகா.
-
''பொதுவா குழந்தைகளுக்கு விளையாட்டுதான்
உயிர். சாப்பாடெல்லாம் மல்லுக்கட்டிதான் ஊட்டணும்
அடிபட்ட குழந்தைக்கு நாம என்ன ஆறுதல் சொல்ல
முடியும்? அதான் அவ வயசுள்ள நம்ம ஷிவானியைக்
கூப்பிட்டேன். அவ கொடுக்காத நம்பிக்கையைக்
கூட ஒரு பொம்மை அந்த குழந்தைக்கு
கொடுக்கட்டும்னுதான் பொம்மை வாங்கினேன்...
-
புரிந்து கொண்டாள் ரேகா...!
-
---------------------------------------------------
>பெ.பாண்டியன்
நன்றி: குங்குமம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum