தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்பால் ஆனதொரு மருத்துவம்!

View previous topic View next topic Go down

அன்பால் ஆனதொரு மருத்துவம்! Empty அன்பால் ஆனதொரு மருத்துவம்!

Post by நாஞ்சில் குமார் Tue Apr 08, 2014 8:43 pm

அன்பால் ஆனதொரு மருத்துவம்!
 
மருத்துவத்தில் எத்தனையோ புதிய விஷயங்கள் வந்துவிட்டன. இதற்கிடையே, வலியால் அவதியுறும் நோயாளிகளுக்கு வலி வாரணத்தை அன்போடு அளித்து வரும் பாலியேடிவ் கேர் கிளினிக் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

” வசூல்ராஜா ‘ எம் . பி . பி . எஸ் . பார்த்திருந்தால் அதில் கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியத்தை மறந்திருக்க மாட்டீர்கள் . நோயாளிகள் மீது நாம் காட்டும் அக்கறைதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மருந்தைவிட முக்கியமானது என்பது கதையின் முடிச்சு . அது நகைச்சுவைப் படம் . பாலியேடிவ் கேர் என்று அழைக்கப்படும் இதன் நிஜ வடிவத்தில் காமெடிக்கு இடமில்லை . அரவணைப்பும் ஆறுதலும் நிறைந்த இந்த வைத்திய உலகம் நெகிழ்ச்சியானது .  சென்னையில் ” லஷ்மி பாலியேடிவ் கேர் கிளினிக் ‘ நடத்திவரும் டாக்டர் மல்லிகா திருவதனனைச் சந்திக்கச் சென்றபோது அந்த நெகிழ்ச்சியை ரத்தமும் சதையுமாக உணரமுடிந்தது .

“” என்னம்மா நீ கொடுத்த மருந்து வலியைக் குறைக்கவேயில்லையே . ரெண்டே நாள்ல மறுபடி வலிக்க ஆரம்பிச்சுடுச்சே ” என்கிறார் கேன்சர் வலியால் அவதிப்படும் ஒரு பெரியவர் . “” அடடா ” என்று அன்பாகக் கேட்கிறார் . வயிற்றைப் பிடித்துக் கொண்டு வளைந்து அமர்ந்து மீண்டும் அந்தப் பெரியவர் சொல்கிறார் …“” ரொம்ப வலிக்குதும்மா …” என்று கண்களில் பயம் கொப்பளிக்க இறைஞ்சும் குரல் . கேட்கும் நமக்கே வலிக்கிறது . நம்மை பக்கத்து அறையில் உட்கார வைத்துவிட்டு அவரிடம் ஆதரவோடு விசாரித்துவிட்டு வந்து பேச ஆரம்பித்தார் . “” வழக்கமாக மருத்துவத்துக்கும் இதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் . “” பாலியம் என்பது ஓர் அரபுச் சொல். அதற்கு அணைத்துக் கொள்ளுதல் என்பதுதான் பொருள் . பாலியேடிவி கேர் என்பது அதிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை .

கேன்சர் , நுரையீரல் நோய் , இதய நோய் , இளம்பிள்ளை வாதம் , கிட்னி பாதிப்பு , அல்சைமர் , கணையம் பழுதடைதல் , பக்கவாதம் , ஆஸ்துமா போன்ற எத்தனையோ பாதிப்புகளால் மக்கள் வலியில் துடிக்கிறார்கள் . இவர்களில் சிலருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் குணமாக்குதல் என்பதைவிட  வலி நிவாரணமளிப்பதுதான் முக்கியம்.  இந்த மருத்துவ முறை மேலை நாடுகளில் வழக்கத்துக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . இந்தியாவில் 1986 முதல் இந்த மருத்துவம் செயல்படுகிறது . பேராசிரியர் எம் . ஆர் . ராஜகோபால் என்பவர்தான் இதை முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் . இந்தியாவைப் பொறுத்தவரை பாலியேடிவ் கேரின் தந்தை என்று அவரைச் சொல்லலாம் . கேரளத்தைச் சேர்ந்த அவரால்தான் இப்போதும் இந்தியாவிலேயே அங்கு இது பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது .

சென்னையைப் பொறுத்தவரை இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இதற்கான ஆரம்பங்கள் செயல்பட்டன . எங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகின்றன . ஆர்.எம்.டி ., டீன் பவுண்டேஷன் , ஜீவோதயா, வேலூர் சி.எம்.சி. போன்றவை பேலியேடிவ் கேருக்காக அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றன .இதற்கான வலி போக்கும் மருந்தாக மார்ப்பைன் வழங்குகிறோம் . ஓபியம் வகை சார்ந்த இந்த மருந்தை , எல்லா மருத்துவரும் தருவதற்கு அனுமதியில்லை . இதற்கான பயிற்சி பெற்ற மருத்துவரே வழங்க முடியும் . ஆகவே இதற்கான எட்டுவாரப் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம் . அதில் மூன்று நாள்கள் மட்டுமே நேரடிப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள் . ஒரு நாள் தேர்வு இருக்கும் . அவ்வளவுதான் . இதற்கு ஆயிரம் ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது . ஓபியம் கலந்த மருந்து என்பதால் இதில் போதைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை .

நோயாளிகளின் உடல்நிலை , வலி ஆகியவற்றைப் பொறுத்தே இது வழங்கப்படுகிறது . மேலும் இதை ஊசி மூலம் செலுத்துவதில்லை . மாத்திரையாகத்தான் வழங்குகிறோம் . நிம்மதியான தூக்கமும் வலியற்ற நிலையுமே இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நோயாளிகள் மீது அக்கறை உள்ள மருத்துவர் எவரும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம் . நோயாளிகள் என்றதும் , அவர்களைக் குணப்படுத்துவது மட்டுமே டாக்டர்கள் நோக்கமாக இருக்கிறது . இன்னும் சில நாளில் இறந்துவிடக் கூடியவருக்கும் தொடர்ந்து லட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்கிறார்கள் . பலர் நிலம் , வீடு விற்று வைத்தியம் பார்க்கிறார்கள் . நகைகளை விற்கிறார்கள் . குழந்தைகள் பள்ளியைவிட்டு நிறுத்தப்படுகிறார்கள் . ஒரு வாரம் உயிரைத் தக்க வைப்பதற்கு இப்படி வைத்தியம் செய்வதைவிட , ஆறுதல் வைத்தியமான இது மிக்க பலன் அளிப்பதைக் கவனிக்கிறோம்.

வலி இல்லாமல் இருப்பதால் அவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள் . அதனாலேயே சாப்பிடவும் நம்பிக்கை பெறவும் ஆரம்பித்து புத்துணர்வு அடைகிறார்கள் . சிகிச்சையால் கிடைக்காத பலன் , சில சமயங்களில் இந்த நம்பிக்கையால் கிடைத்துவிடுகிறது .
உள்ள ரீதியான , உடல் ரீதியான , சமூக ரீதியான , நம்பிக்கைகள் ரீதியான ஓர் அரவணைப்பாக இருக்கும் இச்சிகிச்சை , எல்லா மருத்துவமனையிலும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம் . மருத்துவப் படிப்பிலும் இது சப்ஜெக்டாக நடத்தப்பட்டால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கும் ” என்று அவர் சொல்லி முடிக்கிறார்.  நோயாளிகளுக்கு ஒரு நிம்மதி.  

நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அன்பால் ஆனதொரு மருத்துவம்! Empty Re: அன்பால் ஆனதொரு மருத்துவம்!

Post by செந்தில் Tue Apr 08, 2014 8:49 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum