தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை மொழி

View previous topic View next topic Go down

கவிதை மொழி Empty கவிதை மொழி

Post by thamiliniyan Fri May 01, 2015 12:02 pm

4.2 கவிதை மொழி

கவிதை மொழியை மரபுக் கவிதை மொழி, புதுக்கவிதை மொழி என்று பிரிக்கலாம்.

4.2.1 மரபுக் கவிதை மொழி

மரபுக் கவிதைகள் பெரும்பாலும் காதல், இயற்கை, சமயம், அரசியல் போன்ற உள்ளடக்கங்களைத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்துபவை. இவை பா, பாவினம் என்ற வடிவங்களில் எதுகை, மோனை, சீர், தளை, அடி, தொடை போன்ற பல உறுப்புக்களை கொண்டவையாக இலங்க வேண்டும் என்ற கட்டாயம் உடையவை. இத்தகைய சட்ட திட்டங்களுக்கு உட்படுவதால் அவை ஒரே அச்சில் வார்க்கப்படும் செங்கற்களைப் போல ஒரே மாதிரியாக அமைந்து விடலாம். தனித்தன்மை ஏதும் இன்றி அவை சலிப்பை உண்டாக்கலாம். ஆனால், அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் என்று எண்ணிப்பாருங்கள். ஒரே பொருளைப் பற்றி ஒரே வகையான செய்யுள் இலக்கணத்துடன் (யாப்பு) இரு வேறு கவிஞர்கள் பாடும் கவிதைகள் இரண்டும் ஒன்றுபோல ஒன்று அமைவதில்லை. பாடும் கவிஞரின் ஆளுமைத் திறத்தின் வேறுபாட்டில் இரண்டும் வேறுபாட்டுடன் அமைகின்றன. வேறு வேறு வகைச் சுவை தருகின்றன. ஆளுமைத் திறத்தால் அவர்கள் கையாளும் மொழி வேறுபடுவதே இதற்குக் காரணம். படைப்பாளிக்குப் படைப்பாளி கவிதை மொழி வேறுபடுவதால் ஒவ்வொரு கவிதையும் இனிமை பயக்கின்றது. எனவேதான் ஷெல்லி ‘Poetry is Language; Language is Poetry’ என்று குறிப்பிடுகிறார். இவ்வளவு சிறப்புடைய கவிதை மொழி பல கூறுகளை உள்ளடக்கியது ஆகும். அவை பின்வருமாறு அமையும்.

(1) சிறப்பு மிக்க சொல்லாட்சி
(2) உவமை, உருவகம் போன்ற உத்திகள்
(3) சரியான தொடர் அமைப்புகள்

இம்மூன்று பண்புகளை உள்ளடக்கிய கவிதைகள் வெற்றி பெறுகின்றன. சில சான்றுகளை நாம் இப்பாடத்தில் காண்போம்.

• சிறப்பு மிக்க சொல்லாட்சி

எந்த ஒரு சிறந்த கவிதையும் தனிமனிதப் பண்பைக் கூறி அதிலிருந்து பொதுப்பண்பும் உலகப் பண்பும் விளங்குமாறு செய்ய வேண்டும். இதனைத்தான் ‘The essence of poetry is universality’ என்று கால்ரிட்ஜ் விளக்குகிறார். சங்க அகப் பாடல்கள் தனிமனிதக் காதல் உணர்வை வெளிப்படுத்துபவை. இதிலிருந்து இக்கவிதைகள் உலகப் பொதுப்பண்பை - உலகத்திற்கே பொதுவான பண்பாகிய காதல் என்ற உணர்வை - வெளிப்படுத்துகின்றன. இத்தகைய கவிதைகளுள் பல மொழிப் பயன்பாட்டின் காரணமாகச் சிறப்புப் பெற்று, மக்கள் மனத்தில் நிலைத்து நிற்பவை.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.

என்ற சங்கப் பாடலில் (குறு.40) தலைவன் பேசுகிறான்.

‘என் தாயும் உன் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லாதவர்கள். நானும் நீயும் முன் பின் தெரிந்தவர்களா? இல்லை. இப்படி எந்த வழியிலும் உறவே அற்ற நம் இருவரது மனமும் செம்மண்ணில் விழுந்த மழை நீர் எப்படித் தன்நிறம் மாறிச் சிவந்த நிறமுடையதாக மாறுகிறதோ, செம்மண்ணும் எப்படி மழை நீருடன் கலந்து குழைந்து சேறாகி விடுகிறதோ அதுபோல நம் மனங்கள் ஒன்றோடு ஒன்று காதல் என்ற உணர்வால் கலந்தனவே’ என்று தலைவன் தலைவியிடம் பேசும் இப்பாடல், உலகத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி எல்லா மக்களிடமும் காணக்கூடிய ஒரு பொது உணர்வான ஆண் பெண் காதல் பற்றிப் பேசுகிறது.

காதல் என்ற கருத்தை எளிய முறையில் இப்பாடல் விளக்குவதற்குக் காரணம் இதில் கையாளப்பட்டிருக்கும் சொற்களும் உவமையும்தாம். (யாய் - ஞாய், எந்தை - நுந்தை. யான் - நீ) ஆகிய முரண் சொற்கள் இருவரும் வேறு வேறு குடிப்பிறந்து வந்தவர்கள் என்ற சுவையைத் தோற்றுவிக்கப் பெரிதும் கை கொடுக்கின்றன. அதே போல யார் ஆகியரோ? எம்முறைக்கேளிர்?, எவ்வழி அறிதும்? என்ற வினாத்தொடர்களில் உள்ள வினாச் சொற்கள் தொடர்ந்து வந்து மனத்தில் தொடர் வினாக்களை எழுப்புகின்றன. முரண்சொற்களும் வினாத்தொடரும் தொடர்ந்து வருதல் என்ற உத்தி ஒரே கருத்தை மூன்று முறை சுட்டிப் படிப்பவரின் மனத்தில் கருத்தை ஆழமாகப் பதிக்கிறது.

இதனை அடுத்து அமையும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற உவமை, சொல்ல வரும் காதல் என்ற கருத்தைத் துல்லியமாக எடுத்துரைக்கிறது. இவ்வாறு

(1) முரண்சொற்கள் - சொல்
(2) வினாத்தொடர் - தொடர்
(3) தொடர்ந்து வருதல், தகுந்த உவமை - உத்தி

ஆகிய மொழிசார்ந்த கூறுகள் இப்பாடலில் இடம் பெற்று இலக்கிய நயமுடையதாகப் பாடலை உயர்த்துகின்றன அல்லவா?

• உவமை, உருவகம் போன்ற உத்திகள்

பாரதிதாசனின் இன்பத் தமிழ் என்ற பாடல் பின்வருமாறு அமைகிறது.

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!

(பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1 : 95)

தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி மிகுந்த தமிழ்ப் புலமையுடன் வாழ்வில் விளங்கிய பாரதிதாசன் தமிழ் மொழிமேல் கொண்டிருந்த பற்று அளப்பரிது. அவரது தமிழ்ப் பற்றினை மேற்குறிப்பிட்ட கவிதை சுட்டுகிறது.

இப்பாடலில் தமிழை அவர் அமுது, தேன், கனி, நிலவு, மணம், வாழும் நகரம், அசதியை மாற்றும் தேன், பிறவிக்குத் தாய், இதயத் தீ போன்று பலவாறு வர்ணிக்கிறார். இவை சிறந்த உருவகங்களாகின்றன. இவ்வர்ணனைகளே இக்கவிதைக்கு உயிரூட்டுகின்றன. இவ்வர்ணனைகள் பொருத்தமுடையனவாய் இக்கவிதையில் அமைந்திருக்கின்றன. “கவிதை என்பது கற்பனை நிகழ்ச்சிகளின் பதிவு மட்டுமன்று அதற்கு மேம்பட்டது. சம்பவங்கள் உயிரோட்டமான ஈர்க்கும் நடையில் விளக்கப்பட வேண்டும்” என்ற டேவிட் டைஸனின் கருத்துக்குப் பாரதிதாசனின் இக்கவிதை மிகுதியும் பொருத்தமுடையதாகிறது. இதனால்தான் சி.என்.அண்ணாதுரை “பாரதிதாசனின் கவிதைகளை எண்ணி மகிழ ஒருவருக்கு இலக்கண அறிவு அதிகம் தேவை என்ற அவசியம் இல்லை. அவரது கவிதைகளை நாம் வாசிக்கும் போழுது அவரது கருத்து நம் இரத்தத்தில் கலந்து, உணர்வு நம் நாடி நரம்புகளில் பெருக்கப்படுகிறது” என்று போற்றுகிறார்.

ஓர் இலக்கியப் படைப்பாளன் தான் சொல்ல வரும் கருத்துக் குறித்த உணர்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்தச் சிறந்த உத்திகள் கைகொடுக்கின்றன. அவ்வுத்திகளும் பொருத்தமாய் அமைந்து எளிய சொற்களில் தெரிவிக்கப்படும் போது அக்கவிதை படிப்போர் மனத்தில் பதிகிறது.

• தொடர்

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவரான கண்ணதாசனின் கவிதைகளில் சொற்கள் தொடர்ந்து அழகாக அமைந்து இனிய தொடர்களை உருவாக்குகின்றன. ஒருவரை வருணிக்க வேண்டுமென்றால் அவர் பெயர்த் தொடரைக் கையாளுகிறார்.

முத்துமணிப் பல்லக்கு
முளைத்தெழுந்த சிறுகீரை
தத்துங்கிளி தேவ
தாரு உதிர்த்தஇலை
கொத்து மலர்ஒன்றாய்க்
கூடிச் சமைத்தமுகம்
பத்து மாதங்கூடப்
பாலன்வய தாகவில்லை
செத்துக் கிடக்கின்றான்.

(தொகுதி V, 187 : 1-5)

என்ற வருணனை இறந்து கிடக்கும் ஒரு சிறு குழந்தையை வர்ணிப்பதாகும். இங்குப் பெயர்த் தொடர்கள் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம்.

செயலின் தொடர்ச்சியைக் காட்ட இவரது கவிதைகளில் கையாளப்படும் தொடர் வினையெச்சத் தொடராகும்.

என்குரல் தூரங் கேட்டால்
எகிறிக்கால் பிளந்து வந்து
என்னுடல் மீதில் ஏறி
என்னவோ சொல்ல எண்ணி
முன்வாயில் முகத்தை வைத்து
முழுஉடல் நடுங்க ஆடும்
என்னுயிர் சீசர்க் கேநான்
எசமான னல்ல தோழன்.

(தொகுதி iv, 122: 1-4)

சீசர் என்ற தன் வளர்ப்பு நாய் இறந்த போது பாடிய இரங்கல் பா ஆகும் இது. இங்கு, நாய் தன் நன்றியைக் காட்டச் செய்யும் செயலின் தொடர்ச்சியை விவரிக்க எச்சத்தொடர் வந்துள்ளது.

சில வாக்கியங்கள் ஏவல் பொருளுமல்லாது வியங்கோள் பொருளுமின்றி அனுமதிப் பொருளைத் தருகின்றன. கவிஞரது உள்ளத்து உணர்வை உள்ளவாறே விளக்க அனுமதி வாக்கியங்கள் பயன்படுகின்றன.

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்.

i & ii. 95 :1-2)

கவிஞரின் எண்ணத் துணிவினை விளக்க இத்தொடரமைப்பு உதவுகிறது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பல உருபன்கள் பயன்படுகின்றன. இவ்வாறு அமையும் இணைப்புத் தொடர்களில் தொடர்களை இணைக்கப் பெரும்பாலும் பயன்படும் சொல் ‘உம்’ ஆகும்.

பரபரப் பாகப் பறந்துசெல் வாரும்
சுறுசுறுப் பாகத் தொடர்ந்துசெல் வாரும்
அதுஇது என்றே அலையும் பேர்களும்
மதுமங் கைஎன மயங்கிநிற் பாரும்
மாளிகை எழுப்ப மனந்துடிப் பாரும்
மண்குடில் விளக்கில் வாழும் மனிதரும்
பள்ளியை நோக்கிப் பறக்கும் பாலரும்
படம்நா டகம்எனப் பார்க்கும் ரசிகரும்
ஐயா பசியென அலறும் நொண்டியும்
வெய்யில் கருதாது வேலைசெய் வார்களும்
பரந்த உலகில் பங்குதா ரர்கள்

(ப. 57, 1-11)

இவ்வெடுத்துக்காட்டில் உள்ளபடி தொடர்களை இணைத்துப் பெரிய தொடர்களை உருவாக்க ‘உம்’ என்ற இடைச்சொல் பயன்படுகிறது.

போல், போல, போலே, போலும், போலவும், போலவே, போன்று, போன்ற, ஆக, நிகர், என, அன்ன, அனைய, ஒக்க என்னும் இந்த உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டு ஒப்புமைத் தொடர்கள் அமைகின்றன.

கள்வர் மனம்போல் காரிருள் சூழும் வேளையில்

(i & ii, 11 : 16-17)

இலக்கியக் காதல் வழக்கம் போல எல்லாம் நடக்க

(i & ii, 11 : 13-14)

என்பன சான்று.

4.2.2 புதுக்கவிதை மொழி

மரபுக் கவிதை விதிகளிடமிருந்து மாறுபடும் புதுக்கவிதைகள், புதுமை வேட்டலின் காரணமாகவும், தன் எண்ணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற கவிஞரின் வேட்கை காரணமாகவும் மரபு மீறித் தோன்றியிருக்கின்றன. மரபுக் கவிதைகளுக்குள்ள கட்டுப்பாடுகள் புதுக்கவிதைகளுக்கு இல்லை. உள்ளடக்கம் தொடர்பாகவும் இன்னது பற்றித்தான் பாட வேண்டும் என்ற வரன்முறை இல்லை. வடிவம் தொடர்பாகவும் பழைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறையும் இல்லை. மனிதனது விரக்தி, மன இயல்புகள், அனுபவங்கள், சமுதாயக் கட்டுப்பாடுகள் மேல் எதிர்ப்பு, காதல் தோல்வி, நிலை உயர வேண்டும் என்ற மனித மன ஆசை, அரசியல் குறித்த எள்ளல், சமுதாய நடைமுறை குறித்த எள்ளல், மனிதனின் தற்போதைய நிலை காரணமான விளைவு, பழைய நினைவுகள் போன்ற கருத்துகள் புதுக்கவிதைகளில் பாடுபொருளாகின்றன. புதுக்கவிதைகளில் கையாளப்படும் மொழி அமைப்பைப் பின்வருமாறு பகுத்துக் காணலாம்.

(1) சொல்லாட்சி
(2) குறியீடு, உருவகம் ஆகிய உத்திகள்
(3) தொடரமைப்பு

என்று பிரிக்கலாம்.

• சொல்லாட்சி

அப்துல் ரகுமானின் பால்வீதி என்ற தொகுப்பைச் சான்றாகக் கொண்டு சில கவிதைகளைக் காணலாம். அப்துல் ரகுமான் தகுந்த இடத்தில் தகுந்த சொற்களைக் கையாளுவதில் கவனம் செலுத்துகிறார். கவிதையில் பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொற்களைக் கையாண்டால் அக்கவிதை மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கும்.

தன் காதலியின் அன்பற்ற தன்மையைச் சுட்டிக் காட்டக் ‘கருமிக் கண்கள்’ என்ற சொல்லாட்சி இவரது கவிதை ஒன்றில் கையாளப்பட்டுள்ளது. “என்னை உன் கருமிக் கண்களுக்குள் கண்ணீராகச் சேர்த்துக் கொள்” என்பது செய்தி. (பால்வீதி, பாடல் எண். 19) இங்குக் கருமி என்ற அடைமொழி பொருத்தமான சொற்பயன்பாடு உடையதாகிறது.

தீப மரத்தின்
தீக்கனி உண்ண
விட்டில் வந்தது
கனியோ
விட்டிலை உண்டது

(பாடல். 14)

விட்டில் தீபத்தினை அனுபவிக்கத் தீபத்தின் அருகில் வந்தது. ஆனால் தீபம் விட்டிலை உண்டு விட்டது. இங்குக் கனியோ என்பதில் ‘ஓ’ என்ற இடைச்சொல் ஆனால் என்ற பொருளைத் தந்து பொருத்தமான சொல்லாக அமைகிறது.

சில பாடல்களில் ஓரிரு சொற்கள் மட்டுமே பாடலின் முழுப்பொருளையும் தந்து விடுகின்றன.

ஒற்றை நெருப்பு உதட்டின் வாசிப்பில்
புல்லாங்குழலே உருகுகிறது

என்ற கவிதையில் ஒற்றை நெருப்பு, உதடு ஆகிய சொற்கள் கவிதை மெழுகுவர்த்தி பற்றிப் பேசுகிறது என்று தெரிவிக்கின்றன. நேர் எதிர் பொருட்களைத் தரும் முரண் சொற்களைப் பயன்படுத்திக் கருத்தைத் தெரிவிக்கும் முறையையும் புதுக்கவிதைகளில் காணலாம். விளையாட்டு என்ற கவிதையில் தன் காதலியின் செயலைக் குறிப்பிடும் தலைவன்.

யதார்த்தப் பகலில்
குறளாய்க் கொடை இரந்து
ஏகாந்த இரவில்
விசுவரூபம் கொண்டு
என்னையே புதைக்கும்
நிழல் நீ

என்று குறிப்பிடுகிறான். பகலில் என்னிடம் இரந்து நிற்கும் நீ இரவில் என்னை வருத்துகிறாய் என்று காதல் குறித்துப் பேசுகிறான். இங்கு அன்பு, கோபம் என்ற பொருளைத் தர குறள் x விசுவரூபம் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள் = வாமன அவதாரம்) இவை தவிர, பகல் x இரவு ஆகிய சொற்கள் பொழுது மாறுபாட்டைக் குறிக்க இடம் பெறுகின்றன.

முரண்தொடை என்ற கவிதையில் மட்டும் ஆதி அந்தம், சமாதி தொட்டில், நீலாம்பரி பூபாளம், வைகறை அந்தி, இருட்டு ஒளி, புன்னகை கண்ணீர் ஆகிய எதிர்ச்சொற்கள் முரண் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

• குறியீடு, உருவகம் ஆகிய உத்திகள்

குறியீடு இல்லாமல் புதுக்கவிதை புனைவது இயலாது என்று கூறும் அளவிற்குக் குறியீடு சிறந்த உத்தியாகப் பயன்படுத்தப் படுகிறது.

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களில் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி

என்ற கவிதையில் நம்நாட்டுத் தேர்தல் முறையை எள்ளி நகையாடுவதற்குப் புராணக் கருத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புறத்திணை என்ற சொல் இப்பொருளைப் பெறுவதற்கு மிகுந்த உதவியாக அமைகிறது.

மின்னல் என்ற கவிதையில் மின்னல் பல வகைகளில் உருவகிக்கப்படுகிறது. மின்னல் இப்படிப்பட்டது என்ற ஒரே கருத்து வெவ்வேறு விதமாக உருவகிக்கப்படுவதைப் பின்வரும் வரிகளில் காணலாம்.

வான உற்சவத்தின்
வாண வேடிக்கை
முகிற்புற்றுக் கக்கும்
நெருப்புப் பாம்புகள்
கறுப்பு உதட்டின்
வெளிச்ச உளறல்
இடிச் சொற்பொழிவின்
சுருக்கெழுத்து

இங்கு ஒவ்வொரு உருவகத்தையும் நின்று நிதானித்து, படிப்பாளி சுவைக்கலாம். மரபுக் கவிதைகளில் போல தொடர்ந்த ஆர்வமூட்டும் கருத்தோட்டத்திற்கும் இறுதிவரை கொண்டு சென்று கருத்தை முடிக்கும் முறைக்கும் புதுக்கவிதையில் இடமில்லை. ஒவ்வொரு பத்தியிலும் ஒவ்வொரு வகையான உத்தியை வெளிப்படுத்தும் முறை இங்கு அமைகிறது.

• தொடரமைப்பு

புதுக்கவிதைகள் பின்வரும் தொடரமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றன.

(1) தனி வாக்கியம்
(2) கலவை வாக்கியம்
(3) பெயர்த் தொடர்

அப்துல் ரகுமானின் பால்வீதி கவிதைத் தொகுப்பில் தொடரமைப்புகள் குறிப்பிட்ட வரிசை முறையில் அல்லது வரிசை முறையிலிருந்து மாறி வருகின்றன. அப்படி மாறி வரும் பொழுது எழுவாய் அல்லது பயனிலை குறைவுபடுகிறது. அனுமதி வாக்கியமாகிறது. தலைமைப் பெயர் உருவகிக்கப்படுகிறது. தொடர் வினாவாக முடிகிறது. கலவை வாக்கியங்கள் குறிப்பிட்ட தம் வரிசை முறையிலிருந்து மாறுதல், வினாவாக முடிதல், பயனிலை இன்றி முடிதல், நிகழ்காலப் பொருளைத் தரும் எதிர்கால இடைநிலையைக் கொண்டு முடிதல் ஆகிய வகைகளில் அமைகின்றன.

யதார்த்தப் பகலில்
குறளாய்க் கொடையிரந்து
ஏகாந்த இரவில்
விசுவரூபம் கொண்டு
என்னையே புதைக்கும்
நிழல் நீ

என்பது கலவை வாக்கியத்திற்குச் சான்று

மூலம் :http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051442.htm#42vina

thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

கவிதை மொழி Empty Re: கவிதை மொழி

Post by செந்தில் Thu Aug 06, 2015 12:53 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கவிதை மொழி Empty Re: கவிதை மொழி

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:21 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை மொழி Empty Re: கவிதை மொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum