தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

View previous topic View next topic Go down

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் Empty திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

Post by முழுமுதலோன் Tue May 06, 2014 10:21 am

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் 10-Amazing-Temples-24

வெள்ளைக் கோபுரம்.. பெயர்க் காரணம்..!

ஒருகாலத்தில் கோயிலை ஆக்ரமிக்க வந்து அக்ரமங்கள் புரிய ஆரம்பித்த துலுக்கப் படைத்தளபதி ஒருவனை கோபுரத்தின் மேல் உல்லாசமாக அழைத்துச் சென்று அவனையும் தள்ளிவிட்டு, ஓர் உயிரைக் கொன்ற பாவத்திற்காகத் தானும் விழுந்து உயிர் துறந்தாள் வெள்ளையம்மாள் என்னும் தேவதாசி. அவள் நினைவாகவே வெள்ளைக் கோபுரம் என்று பெயர் பெற்றது கிழக்குப் பக்கத்துக் கோபுரம்.

அசலா.. போலியா...? கண்டுபிடித்த கண் பார்வையற்ற சலவைக்காரர்..!

முகமதியர்களால் கவர்ந்து செல்லப்பட்ட அழகிய மணவாளன் விக்கிரகம் பல வருடங்கள் கழித்து மீட்டுவரப்பட்டபோது அது முதலில் இருந்த அதே விக்கிரகம்தானா என்பதில் எழுந்த ஐயத்தை ஒரு கண் தெரியாத சலவைக்காரர் தனது பழுத்த வயதில் ஓர் உத்தியின் மூலம் தீர்த்துவைத்தார். அதாவது, அந்த விக்கிரகத்தைக் குளிப்பாட்டி அந்த திருக்குளிநீரை ஒரு தூய துணியில் தோய்த்துத் தன் கையில் பிழியுமாறு கூறினார். அதை முகர்ந்துபார்த்து விக்கிரகத்தில் எப்பொழுதும் வீசும் கஸ்தூரிப் பரிமளம் திகழ்வதை உணர்ந்து அதே அழகியமணவாளன்தான் என்று தீர்ப்புக்கூறினார்


ஸ்ரீ ராமானுசரின் கோவில் நிர்வாகம்..

பொதுமக்கள் தங்கள் பேசுமொழியில் அருள்கனிந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துவதை ஆதரிக்கும் பாஞ்சராத்திர ஆகம முறைப்படி ஸ்ரீரங்கத்தை நெறிப்படுத்தியும், பெரிய கோயிலை நிர்வகிக்கக் கோயில் பணிகளைப் பத்துத் தொகுதிகளாகப் பிரித்து அதற்குரிய தொண்டர்களை ஏற்படுத்தியும், கோயிலில் பக்திகொண்ட பொதுமக்கள் பலவிதத்திலும் பங்கேற்கும்படிச் செய்தும் ஸ்ரீரங்கத்தை முன்னிலும் மிகவிளங்க ஸ்ரீவைஷ்ணவ உலகத்தின் தலைநகரமாக ராமானுசர் ஆக்கினார் என்றே சொல்லவேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் Empty Re: திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

Post by முழுமுதலோன் Tue May 06, 2014 10:23 am

அரங்கன் செய்த அதிசயம்..

ஒரு கல்தச்சர், சிற்ப வேலை செய்வதற்காக ஒரு கல்லை உடைத்தவர், அதில் ஒரு குழியும், அதில் ஒரு தேரையும், அந்தத் தேரைக்குத் தேவையான நீரும் இருக்கக் கண்டு, ‘ஒரு தேரைக்கு வாழ்வும், வாழ்முதலும் அமைத்த அரங்கன் நிச்சயம் என்னையும் காப்பான்’ என்ற உள்ள எழுச்சியும், உறுதியும் பிறந்து, அந்த எண்ணத்திலேயே லயித்தவராய்த் தம் வாழ்நாள் முழுவதும் பேச்சு, இயக்கம் இன்றி நிஷ்டையில் அமர்ந்துவிட்டார். அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் அரங்கனே தினமும் ஸ்ரீராமானுஜர் கொடுத்தனுப்பினார் என்று கோயில் பிரஸாதங்களைக் கொண்டுபோய்க் கொடுத்துவந்தான். கல்தச்சன் காலமான பின்பு, அவன் மனைவி ஸ்ரீராமானுஜரிடம் எப்பொழுதும்போல் நிறுத்தாமல் பிரஸாதங்களை அனுப்பிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். அப்பொழுதுதான் ஸ்ரீராமானுஜருக்கே தெரியவந்தது. ‘இனிமேலாவது அரங்கன் சோறு சுமவாமல் இருப்பான்’ என்று கூறினார்.


வித்வான் கர்வம் தீர்த்த சிறுவன்..

ஒரு சமயம் ஸ்ரீரங்கத்துத் தெருக்களில் ‘ஸர்வக்ஞ பட்டன் வந்தார்! வாதிகளுக்கு சிம்மம் வந்தார்!’ என்று விருது ஒலிக்க வந்த பல்லக்கு வித்வானிடம் சென்று, ஒரு சிறுவன் (பராசர பட்டர்), ‘வித்வானே! இதோ என்னிரு கைகளில் எவ்வளவு மணல் என்பதை அறிவீரா?’ என்று கேட்டான். வித்வானோ, ‘எப்படியப்பா சொல்லமுடியும்? மணலை எண்ண முடியுமோ?’ என்று கூற, சிறுவன், ‘இரண்டு கைப்பிடி மணல் என்று சொல்ல அறியாத நீர் எப்படி ஸர்வக்ஞ பட்டன் என்று விருது ஊதி வருகிறீர், மிகப்பெரிய வித்வான்கள் எல்லாம் பக்தியின் மேலீட்டால் அடக்கமே உருவாக வாழும் இந்தப் புண்ணியத் தலத்தில்?’ என்று கேட்டுவிட்டான். அதற்கு அந்த வித்வான் அதிர்ந்து பேராச்சரியம் உற்று, அவனைத் தன் சிவிகைமீதேற்றிச் சென்று அவன் இல்லத்தில் விட்டுவிட்டுப் போனார்.


அரசனின் பக்தியும், பணிவும்..

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்(கி.பி.1250) ஒருசமயம் அரங்கனின் திருவாராதனம் (படையல்) கண்டு ஸேவித்துக்கொண்டிருக்கும்பொழுது அரங்கனின் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் நீரை பெய்துவைப்பதற்கான திருப்படிக்கத்தை அர்ச்சகர்கள் எடுத்துவைக்க மறந்ததன் காரணமாகத் திகைத்து நின்றார்கள். ஸேவித்துக்கொண்டிருந்த சுந்தரபாண்டியன் சிறிதும் தயங்காது தன் ராஜக் கிரீடத்தை நீட்டி அந்தப் புண்ணிய நீரை ஏந்தினான். அனைத்து மக்களும் நெகிழ்ந்து நின்ற அந்தச் சம்பவத்தைக் குறிக்க இன்றும் அவ்வாறு திருப்படிக்கத்தில் வழிபாட்டு நீரை ஏந்தும்போது ‘சுந்தர பாண்டியம் பிடித்தேல்’ என்றே அருளப்பாடு நடக்கிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் Empty Re: திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

Post by முழுமுதலோன் Tue May 06, 2014 10:24 am

மதுரையை ஆண்டுவந்த முதலாம் சடவர்ம சுந்திரபாண்டியன்(கிபி 1251-1268), இக்கோயிலில் பல கட்டிடங்களை எழுப்பியும் பலவகை அலங்காரங்களைச் செய்தும் ஏராளமான நன்கொடைகளை வழங்கியும் பெரும் புகழ் பெற்றான். திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நதி, மகாவிஷ்ணு சந்நதி, நரசிம்மர் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவற்றை இவ்வரசன் கட்டினான். கடக்(Cuttack, Orissa) அரசரை எதிர்த்து போரில் வென்று அவரது கருவூலத்தினின்று கைப்பற்றிய பொருள்களைக்கொண்டு சடவர்மன் சந்திரப்பாண்டியன் திருவரங்கநாதர்க்கு மரகதமாலை, பொற்கிரீடம், முத்தாரம் முத்துவிதானம், பலவகை பொற் பாத்திரங்கள், குவளைகள் ஆகியவற்றை வழங்கினான். காவிரி நதியில் தொப்போற்சவம் நடத்துவிப்பதற்கு தங்கத்தினாலேயே படகு அமைத்தான். அதில் தனது பட்டத்து யானையை படகில் ஏற்றி அதன் முதுகில் தான் ஏறி அமர்ந்து கொண்டான். மற்றொரு படகில் நாணயங்களையும் கொட்டி நிரப்பினான். தன்னுடைய படகினது நீர்மட்டத்துக்கு மற்றொரு படகும் வருகின்ற வரையில் நிரப்பினான் அதை பின்னர் கோயிலுக்கு தானமாக வழங்கினான் என்று கோயில் குறிப்புள்ளது.
________________________________________

ஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.
இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.
[அரசர் நகைச்சுவை]
அரசர் நகைச்சுவை - Jul 1, 2008
அரங்கன் கோயிலின் உள்ளே பல அறியப்படாத செய்திகள், கொஞ்சம் கொச்சையாகச் சொன்னால் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அதில் மிகவும் கிசுகிசுவாகப் பேசப்படுகிற விஷயம் பெரிய திருவடி (கருடாழ்வார்) சன்னதி குறித்து. சன்னதியின் பின்புறச் சுவரை ஒட்டியில்லாமல் நடுவிலேயே இருக்கிறார் கருடர். அவரது பின்புறம் மற்றொரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. கருடரின் பின்னால் ஒரு ரகசிய அறை இருப்பதாகவும், அதில் தங்கம், வெள்ளி என்று பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல். அந்த சந்தேகத்துக்கு வலு சேர்ப்பதுபோல் ஜன்னல்களின் இடைவெளிகளும்கூட கற்களால் அடைக்கப்பட்டு விட்டன. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின்போது, கோயில் நகைகளைக் காப்பாற்ற அங்கே பொக்கிஷங்கள் குவிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஊகங்களுக்கு சரியான ஆதாரம் இல்லை.

அதேசமயம் மற்றொரு சம்பவத்துக்கு சரியான ஆதாரம் இருக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்-டின் மத்தியில் ஜடாவர்மன் சுந்தரவர்மன் சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருந்தது. இவன் காலத்தில்தான் திருவரங்கன் கோயிலின் மூலஸ்தானக் கூரை, துவஜஸ்தம்பம் ஆகியவற்றுக்குத் தங்க முலாம் பூசியதுடன், கருடாழ்வார் மேனியையும் தங்கத்தால் போர்த்தி சந்தோஷப்பட்டான் ஜடாவர்மன். அது சரி, கருடாழ்வார் மீது பூசப்பட்டிருந்த தங்க முலாம் என்னவாயிற்று? மாலிக்காபூர் படையெடுத்தபோது பல கோயில் நகைகளை சூறையாடிச் சென்றான் என்பது வரலாறு. அந்த மாலிக்காபூர் கண்ணில் திருவரங்கமும் தப்பவில்லை. கருடாழ்வார் மேலிருந்த தங்கத்தை எப்படி எடுப்பது என்று யோசித்த மாலிக்காபூர் நிலையின் மேல் நெய் அபிஷேகம் நடத்தியிருக்கிறான். பின்னர் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டான். உருகி ஓடிய தங்கத்தை கட்டிகளாக்கி எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

விஜயநகர பேரரசு ஆட்சியின்போது, அரங்கன் சொத்துக்கள் சிவன் கோயிலுக்கு கொடுக்கப்பட்டபோது, அதைத் தடுக்க முயற்சித்து வெள்ளைக் கோபுரத்தின் மீதிலிருந்து உயிரை மாய்த்துக்கொண்ட இரு ஜீயர்கள்,

உறையூருக்குச் சென்று தன் மற்றொரு நாயகியைப் பார்க்கப் போன அரங்கனை திரும்பி வரும்போது ஒளிந்திருந்து தாயார் பார்த்தபோது, ஒரு சம்பவத்தைச் சொல்லும் ஐந்து குழி,

மூன்று வாசல்,

இப்படி பல அறியப்படாத செய்திகளைத் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு அதிசயிக்க வைக்கிறது அரங்கனின் ஆலயம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் Empty Re: திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

Post by முழுமுதலோன் Tue May 06, 2014 10:25 am

ஒருமுறை தன் சீடர்களுடன் ராமானுஜர் திருவரங்கம் செல்லும் வழியில், மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை (அழகர்மலை) தலத்தில் தங்க வேண்டி வந்தது. அங்கே எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாளை தொழுது அவர் திருவடி பணிந்து நின்றார்.

ஆண்டாள் முன்னொரு காலத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானிடம் வேண்டிக் கொண்டு சொன்ன பாசுரம் ஒன்று ராமானுஜரின் நினைவுக்கு இப்போது வந்தது. அந்த பாசுரத்தில், ‘‘திருமாலிருஞ்சோலை எம்பெருமா&ன! நீ என்னிடம் அருள் கொண்டு மணந்து கொண்டால் நூறு பானை வெண்ணெயும், நூறு பானை அக்கார வடிசிலும் உனக்கு நிவேதனம் செய்வேன்…’’ என்று கூறி வேண்டினாள். ஆண்டாளின் பிரார்த்தனையை திருமால் நிறைவேற்றினார். மணாளனாகி மாலையும் சூடினார். ஆனால், அரங்கனின் பக்தையான ஆண்டாளால் தன் வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஏனென்றால், பரமனைத் தேடி திருவரங்கம் வந்ததுமே அவள் அவனுடன் இரண்டறக் கலந்துவிட்டாள். அவள் வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிகழ்ச்சி சட்டென்று ராமானுஜரின் நினைவுக்கு வர, ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற முற்பட்டார். சுந்தரராஜப் பெருமாளுக்கு நூறு பானை வெண்ணெயும், நூறு பானை அக்கார வடிசிலும் நிவேதனம் செய்வித்தார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் Empty Re: திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

Post by முழுமுதலோன் Tue May 06, 2014 10:26 am

புகழ்மிக்கது

இந்த ஆலயத்தின் கட்டடக் கலைத் திறமையையும் சிற்ப
நேர்த்தியையும் காணும் நம் நாட்டவரேயல்லாமல், வரலாற்று வல்லுநர்களாகிய பர்கூசன் (Fergusson), ஹாவல் (Havell) முதலியோர் புகழ்ந்து தம் நூல்களில் அவற்றைப் பதிவு செய்துள்ளனர். திருவரங்கப் பெருமான் நிலை கொண்டிருக்கும் இத்திருக்கோயில் வைணவர்களுக்குச் சமயக் கோட்டை போன்றுள்ளது. வேணுகோபாலன் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, சேஷராயர் மண்டபம், பரமபதவாசல் முதலியவை ஆலயத்திற்குப் பெருஞ் சிறப்பினை யுண்டாக்குபவை.



கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! :

ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.


லுங்கி கட்டும் பெருமாள்..

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு
ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.



காவிரி நீர் அபிஷேகம்! :

ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.


பெருமாளுக்கு 365 போர்வை :

கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், போர்வை அணிவிப்பதாகவும் சொல்வர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் Empty Re: திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

Post by முழுமுதலோன் Tue May 06, 2014 10:27 am

ஆடிப்பெருக்கு திருவிழா :

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.


கம்பருக்கு அருளிய நரசிம்மர் :

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, சக்கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.


ஒரு முறை திருவரங்கத்துக்கு கம்பர் வருகைதந்தபோது காவிரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததாம். வெள்ளம் ஊரையே விழுங்கி விடும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்த போது, காவிரி கரையில் நின்று கம்பர் இந்த பாடலை பாடினாராம்.

"கன்னியிழந்தனள், கங்கை திறம்பினள்
காவிரி நெறியிழந்தாள் என்றுரை கேட்கலாமோ
உலகுடைய தாயே! நீ கரைகடக்கலாகாது காண்!"

(உலகத்திலேயே மிக புனிதமான நதியென்று கருதப்படும் கங்கை கூட, காதல் வயப்பட்டு, தன் காதலனான சமுத்திர ராஜனை கண்டவுடன் பாதை மாறி, கடமை மறந்து, கரை கடந்து, அவனோடு சென்று கலந்து விட்டாள். உலகம் போற்றும் காவிரியே! படி தாண்டாப் பத்தினியான நீ உன் பெண்மைக்கு இழுக்கு நேரும்படியாக, இப்படி கரை கடக்கலாகாது! )

கரைகளை உடைத்துக் கொண்டு வெளியே பாய துடித்துக் கொண்டிருந்த காவேரியானவள், இந்த பாடலுக்கு மயங்கி, அப்படியே சாந்த ஸ்வரூபியாக போய்விட்டாளாம்! இந்த பாடல்தான் கம்பனுக்கு "கவி சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்ததாக கேள்வி.



http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் Empty Re: திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

Post by செந்தில் Tue May 06, 2014 11:48 am

திருவரங்கம் பற்றிய விரிவான தகவல்கள் தந்தமைக்கு நன்றி அண்ணா.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

திருவரங்கம் - அதிசயத் தகவல்கள் Empty Re: திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum