தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2

View previous topic View next topic Go down

WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Empty WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 1

Post by மகா பிரபு Sun Oct 21, 2012 1:20 pm

WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Wwf-wrestlemania-x8-cover WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 WWE-Royal-Rumble


நீங்கள் wwe(World Wrestling Entertainment) ரசிகரா? அண்ணன் அண்டர் ரேக்கர்,தலைவர் ரொக்,ஜோன் சீனா என wwe ஐ ரசிப்பவரா?(பதிவின் நீளத்திற்கு மன்னிக்கவும்) அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தப்பதிவு.

நானும் ரெசிலிங்க்கிற்கு ரசிகன் தான் எனது நண்பர்களுக்கும் எனக்கும் சினிமா ஹீரோக்களைப்பற்றிய சண்டையை விட இதனாலும் வாய்த்தர்க்கங்கள் அடிக்கடி வரும்.எனக்கு பிடித்த wwe சூப்பர் ஸ்டார்கள் ஒஸ்ரின், ரொக், அண்டர் ரேக்கர் யாராவது ஒருதரைக்கூறச் சொன்னால் அது ஓஸ்ரின்தான்.ஏனோ முதலாவதாக அவரது மேட்சை பார்த்ததாலோ என்னவோ பிடித்துவிட்டது. பின்னர் அவரை பற்றிய விடயங்களை இணையத்தில் தேடி அறிந்துகொண்டேன். பின்னர் அவரும் முண்ணணியில் இருப்பவர்தான் என்று தெரிய வந்தது.

wwe ஆரம்பத்தில் wwf ஆக இருந்தது பின்னர் wwe ஆக மாற்றப்பட்டுவிட்டது. wwf ஆக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முக்கிய ஸ்ராரும் ஏதாவது ஒரு சில வருடங்களுக்கு முண்ணணியில் இருந்தார்கள். ஒஸ்ரின் ரொக்கை ஓட ஓட விரட்டிய சந்தர்ப்பங்களும் உண்டு.ரொக்கும் அவ்வாறே ஒஸ்ரினை விரட்டிய சம்பவங்களும் நடந்தன.ஹோகன் என்ற பெரிய சூப்பர் ஸ்டாரும் wwf இல் இருந்தார். இவருக்கும் ரொக்கிற்கும் இடையில் நடைபெற்ற மேட்சிற்குத்தான் அனேக பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். கேன்,ரிக் ஃப்லேயர் , ரிபிள் ஏஜ், ஷோன் மைக்கல், ரண்டி ஓற்றன், கோல்ட் பேர்க் என்று wwf இல் பெரிய பட்டாளமே இருந்தது.




WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 ZrsrWWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Wm7_07wwf இல் நடந்த அவ்வளவு மேட்சும் மிகவும் துடி துடிப்பாக இருந்தன அதாவது இப்பொழுது ஜோன் சீனா பங்கை அடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து எழுந்திருப்பது போல் இல்லை. 1990 வரை wwf ஹோகனின் வசம் இருந்தது என கூறலாம். விதி 1990 இல் அண்டர் டேக்கரை கொண்டுவந்து சேர்த்தது. டங்க்......இந்த ஒலியை ரெஸிலிங் ரிங்கில் கேட்பவர்கள் எல்லோரும் தமது இறுதிச்சடங்கில் கேட்கும் ஒலியாக உணர்ந்தார்கள். ஹோகன் ரொக் ஒஸ்ரின் என சகலரையும் ஆட்டம் காட்டியவர் அண்டர் டேக்கர். இவர் ரெஸ்ரில் மேனியா எனப்படும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் விழாவில் நடைபெறும் மேட்சில் இதுவரை தோற்றதில்லை. அத்துடன் தனித்துவமான ஃபினிஸ்ஸிங்க் ஸோர்ட் அப்படியே கவிழ்த்து ஒரு அடி ஆள் காலி.உண்மையில் இப்படி ஒருத்தனை அடித்தால் கொலை கேஸ் கொஃன்பேர்ம்.




WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Undertaker-wrestling-professional-supertsar-tomb-stone-pile-driver-to-john-cena-1
வித்தியாஸமான் களங்களில் மேட்சுகள் நடைபெறும்.கூண்டுக்குள் மச், மச்சில் ஆயுதங்கள் தளபாடங்கள் என எதையும் பயன்படுத்தும் மேட்ச். அத்துடன் ரோயல் ரம்பிள் என்று ஒரு மேட்ச் நடைபெறும் அதில் இறுதியில் எஞ்சியிருப்பவர் சாம்பியனை தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவார். இது மிகவும் சுவாரிஸ்யமாக இருக்கும். நானும் எனது நண்பனும் வாய்த்தர்க்கமிடுவது நமக்கு பிடித்த இருவரில் யார் பெரியவர் என்பதில்தான்
WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Undertaker_wallpaper4அதாவது அண்டர் டேக்கர் வெர்ஸ் ஒஸ்டின் ஆனால் இருவரும் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் அண்டர்டேக்கர் அளவிற்கு யாருமே இருக்க முடியாது என்பதுதான் உண்மை. இப்பொழுதும் அண்டர்டேக்கர் என்றால் எல்லோருக்கும் சிம்மசொப்பனம்தான்.ஜோன்சீனா கூட பாவம் அழுதுகொண்டு ஓடியிருக்கிறார். ஆனால் அது தெரிந்தும் நான் விடுவதாக இல்லை அந்த மேட்ச்சில் அவர் தோற்றார் இந்த மேட்ச்சில் இவர் ஓடிவிட்டார் என முடியாமல் சென்று கொண்டே இருக்கும் எமது சண்டை. இப்போதைய பலருக்கு ஆரம்ப மேட்ச்ச்களைப்பற்றிய விடயங்கள் தெரிவதில்லை சோ இப்பொழுது காண்பவற்றைக்கொண்டு அவர்களை ஹீரோக்களாக்கிவிடுகின்றார்கள். wwe இல் நடைபெறும் மேட்ச்கள் நாடகம் மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை போல செல்லும். அண்ணன் தம்பி சண்டை. கணவன் மனைவி சண்டை நண்பர்களுக்கிடையில் பழிவாங்கல் என கதை தொடரும்.


WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Stone-cold-stunnerவீட்டில் நான் ரெஸ்லிங்க்கை பார்ப்பதை எனது அம்மாவோ அப்பாவோ பார்த்தால் அவ்வளவுதான் வாயைமூடிக்கொண்டிருக்கமாட்டார்கள். "இன்னொருதனைப்போட்டு அடிக்கிறதை எல்லாம் சந்தோசமா பாத்துக்கிட்டிருக்கிறியே என்ன ஜென்மமேடா நீ?" அதால தான் உன் மூன்சியும் விடியாம கிடக்கு என்று ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் வழக்கம் போல் அவற்றை புறம் தள்ளிவிட்டு எனது வேலையை தொடர்ந்துவிடுவேன்.என் இன்னொரு நண்பங்கூட என்னை திட்டியதுண்டு "இன்னொருதனை அடிக்கிறதை பார்க்கிறது காட்டுமிராண்டித்தனம்" என்று. இப்பொழுதெல்லாம் இதை பார்த்து பல காலம் ஆகிவிட்டது ஏனென்றால் wwe நிலை அவ்வளவு கேவலம். இப்பொழுது அவர்கள் செய்யும் நொட்டல்களை எல்லாம் சகிக்க எனக்கு தைரியமில்லை அத்துடன் அண்டர் டேக்கர் வாராமல் போன பிற்பாடு எனக்கு அங்கு என்னவேலை என்று பாதியில் ஸ்டொப் பண்ணி விட்டேன்.

சரி ஒரு wwe ரசிகனாக நான் அலட்டியாகிற்று ஆனால் இனி அறிவியல் தளத்தில் சற்று சிந்திக்கப்போகின்றேன்.

WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Goldberg-rock-austinwwe மச்சில் அடிபடும் ஸ்ரார்க்ள் எல்லோரும் மேடையில் தான் மூஞ்சையை தூக்கி வைத்திருக்கிறார்க்ளே தவிர உண்மையில் மேடைக்கு வெளியே அவரவர் நண்பர்கள் போலத்தான் இருக்கிறார்கள்.ஆரம்பத்திலேயே உதைக்கும் ஒரு விடயம் என்னவெனில் சாதாரணமாக ஒருவருக்கு முகத்தில் ஒரு குத்துவிட்டாலே முகம் புடைத்துவிடும் தக்காளிச்சட்னி வெளியே வரும்.ஆனால் ரெஸ்லிங்க்கில் ஓங்கி அந்தக்குத்து குத்தினால் கூட தலையை லேசாக உலுப்பி விட்டு மீண்டும் சண்டையிடத்தொடங்கிவிடுகின்றார்கள்.அத்துடன் மேடையில் நின்று சண்டையிடுவதுடன் மூலையில் இருக்கும் கம்பி மீது ஏறி நின்று பாய்வது என்று பல விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன.கம்பி கதிரை முதல் சுத்தியலால் கூட அடிக்கின்றார்கள் ஆனால் அடிவான்கிய நபர் அடுத்த நாள் ஏதோ சிறு கட்டுக்களுடன் வருவார்.சனம் விடுவதாக இல்லை தொடர்ந்து பார்த்துவருகின்றார்கள்.பல ஸ்ரார்கள் வரும் போது அவர்களுக்கே உரிய தீம் சோங்க் போடுவார்கள் அத்துடன் அவர்கள் தமது கை கால்களைத்தூக்கி அக்ஸன் செய்யும்பொழுது அவர்கள் வரும் வாசலில் நெர்ப்புத்துகள்கள் வெடித்துப்பறக்கும்.இது சாதாரணமானவர்களுக்கு ஆனால் அண்டர்ரேக்கர் ஒரு படி மேலே இவருடன் யாரவது சண்டையிட்டால் சண்டையிட்டவர் இன்னொருவருடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது இடையில் டங்க்..கேட்கும் வருவார் ரேக்கர் இவரது வருகையே பலமுறை வித்தியாசமாக இருக்கும் வாசலில் இருக்கும் மேடை பிளக்க உள்ளே இருந்தெல்லாம் வந்திருக்கிறார்.


WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Batista-entrance
இவர் வந்து வாசலில் நிற்பார் மேடையில் ஏற்கனவே ரேக்கருடன் சண்டையிட்டவர் சற்றுக்கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார்.ரேக்கர் கையை தூக்குவார் மின்னலடிக்கும் பின்னர் மெடையில் இருப்பவரை நோக்கி கையை காட்ட மேடையில் மின்னலடித்து மேடை உடைந்து விழும்.உதாரணமான காட்சி இதோ....



தொடர்ச்சி நாளை
[size=7]நன்றி : வெங்காயம்[/சைஸ்]


Last edited by மகா பிரபு on Mon Oct 22, 2012 8:07 am; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Empty Re: WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2

Post by முரளிராஜா Mon Oct 22, 2012 7:30 am

தொடருங்கள் மகா பிரபு ஆர்வமுடன் காத்திருக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Empty Re: WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2

Post by மகா பிரபு Mon Oct 22, 2012 8:23 am

ஆனால் ரெஸ்லிங்கில் மோதுபவர்களுக்கு இரத்தம் வருகின்றதே அதுவும் அடித்தவுடன் /அடி பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வருகின்றதே என்று நீங்கள் கேட்கலாம் சற்றுப்பொறுங்கள். அதற்கு விடை கூறமுன் இந்த வீடியோக்களையும் பார்த்துவிடுங்கள். இதில் இதுவரை நடந்த விபத்துக்கள் காட்டப்பட்டுள்ளன.






விபத்துக்கள் மட்டுமல்ல சிலரது உயிர்கூடப்போயிருக்கின்றது.Owen Hart 1999 இல் மேடைக்கு அவரதுஸ்ரைலில் மிக உயரமான இடத்தில் இருந்து கேபிளில் வழுக்கிக்கொண்டு வரும்போது தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.



மேலே கூறிய விபத்து உண்மையில் நடைபெற்றது. இவ்வாறான விபத்துக்களை நாம் நாடகமென்று கூறமுடியாது. இது வரை உண்மையில் விபத்துக்கள் நடந்துள்ளன.

ஆனால் ரெஸ்லிங்கில் இரத்தம் வருவது பற்றி wwe இல் பிரபல ஸ்ரார் காலி உண்மையை அனைவருக்கும் முன் போட்டு உடைத்திருக்கின்றார்.

நாம் இரத்தம் வருவதற்கு ஸ்பெஸலான மாத்திரைகளை உட்கொள்கின்றொம் என்று. அப்படியானால் ரெஸ்லிங்கில் இரத்தம் வருவது 100% மாத்திரையால என கேட்ட பொழுது. இல்லை 90% ஆன மச்களில் ஸ்கிரிப்ட்டில் இரத்தம் வருவது அவசியமாயின் அவர்கள் இவ்வாறான இரத்தத்தை வருவிக்கும் மருந்துகளை உட்கொள்வார்கள் என கூறினார். அத்துடன் அவ் மருந்தின் பெயரை நான் கூறமுடியாது ஏனெனில் wwe அதற்காக மில்லியன் டாலர்களை செலவிடுகின்றது என கூறினார் காலி.




அப்படியானால் ரெஸ்லிங்கின் மேட்ச் களின் போது காலியிடமிருந்து வருவது அவரின் சொந்த இரத்தம் இல்லையா?என கேட்டபொழுது ஆம் பெரும்பாலான நேரங்களில் வருவது எனது சொந்த இரத்தமல்ல ஆனால் சில நேரங்களில் இரத்தம்வரத்தான் செய்யும் என காலி கூறினார்.




அதற்கான வீடியோ...



ரெஸ்லிங்கில் இரத்தம்வருவது மட்டும்தான் பித்தலாட்டம் என்றுதப்பாக நினைக்கவேண்டாம் உன்னிப்பாக நாம் கவனிக்கவேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ரெஸ்லிங்கிற்கென பாடசாலைகளே உள்ளன.அங்கு கற்பிக்கின்றார்கள் எவ்வாறு ரிங்கிற்குள் சண்டையிடுவதுஎன்று. சண்டையிடுதல் என்றதும் ஓங்கி அடித்தல் பாய்ந்து அடித்தல் கதிரை கடப்பாரையால் அடித்தல் மட்டும்தான் கண்ணுக்கு தெரியாலாம்.ஆனால் நன்றாக கவனித்தால் பல விடயங்கள் புலப்படும். உண்மையில் ரெஸ்லிங்கில் இருவர் சண்டையிடுகின்றார்களாயின் ஒருவர் மற்றவரை என்நேரமும் பாதுகாத்துக்கொண்டுதான்(தனது எதிரியை) இருப்பார்.

ரிங்கின் மூலையில் ஏறி நின்று பாயும்போது கீழே நிற்கும் நபர் கைகளை நீட்டி அவரை லாவகமாக அடிபடாமல் தாங்கிப்பிடித்துக்கொண்டு தானும் கீழே விழுவார். இதனால் இருவரும் காயப்படாமல் தப்பித்துக்கொள்வார்கள். அத்துடன் ஒருவரை மற்றவர் கைகளாலும் சரி அல்லது ஏதாவது ஆயுதத்தாலும் சரி தாக்குவார்கள்.இப்படி எவ்வாறு அதிக சேதமில்லாது தாக்குவது ?, காயப்படாமல் எவ்வாறு மற்றவரைக்காப்பாற்றுவது போன்ற பயிற்சிகள்தான் இவ்வாறான பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இங்கு குறிப்பிடப்படும் குறைந்த அளவு சேதம் என்பது சாதாரண இரு மனிதர்கள் தமக்கிடையே சண்டையிடும்போது ஏற்படும் சேதத்தை விட அதிகம்தான் இதற்காகத்தான் தமது உடல்களை அவ்வளவு கட்டுமஸ்தானதாக வைத்திருக்கிறார்கள் அத்துடன் மில்லியன் கணக்கான பணத்தையும் சம்பளமாகப் பெறுகின்றார்கள். அதோடு சகலதும் பாதுகாப்பானது என்றால் எந்த சுப்பனோ குப்பனோ வந்து ஸ்ரார் ஆகிவிட முடியும்.


அத்துடன் நான் நமது ஹீரோக்கள் என தலையில் தூக்கி வைத்திருப்பவர்களெல்லாம் நமக்கு ஹீரோவாகத்திணிக்கப்பட்டவர்கள். நமது சுயமான சிந்தனையில் நாம் அவர்களை ஹீரோவாக்கவில்லை. ஒரு திரைப்படம் சுவாரிசயமாக இருப்பதற்கு ஹீரோ தேவை அத்துடன் வில்லனும் தேவை. அது போலத்தான் ரெஸ்லிங்க்ஐ சுவாரிஸ்யமாக்குவதற்கு சிலர் வில்லன்களாக சித்திகரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டின் படி அவர்கள் வில்லன்களாகுகின்றார்கள். இதனால் நாம் ஹீரோவாக நினைப்பவர்கள் நமக்கு ஹீரோக்களாகி விடுகின்றார்கள். ஒருவர் புதிதாக ரெஸ்லிங்க் கிற்கு அறிமுகமாகினால் அவருக்கு ஆடியன்ஸிடமிருந்து உடனடியாக வரவேற்புக்கிடைக்காது இதற்காக அவரை அந்த சந்தர்ப்பத்தில் ஹீரோவாக இருப்பவருடன் வில்லனாக மோதவிடுவார்கள். புதிதாக வந்தவர் முறையற்று மோதுவார். பின்னால் வந்து அடித்துவிட்டு ஓடிவிடுவார் இப்படியெல்லாம் செய்து. பின்னர் திடீர் என்று மனம்மாறிவிடுவார். ஆனால் அப்பொழுதும் அவர் முழுமையான ஹீரோஅல்ல பின்னர் இவரை மாதிரி ஒருவருடன் மோதி பலதடவைகள் இவருடன் மோதுபவரிடம் அடி வாங்கி அடிவாங்கி அவர் 4/5 பேரைக்கூட்டிகொண்டுவந்தும் அடிப்பார் இப்படியெல்லாம் அடிமேல் அடிவாங்கி பின்னர் திருப்பி எல்லோரையும் ஓட ஓட விரட்டி. இப்படித்தான் உருவாக்கப்படுகிறார் ஒரு ஹீரோ.

WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Imagesஆனால் வில்லனாக இருப்பவர் உண்மையில் அப்படி வில்லனாக இருக்கமாட்டார். நாம் ரெஸ்லிங்க்கில் மோதும் ஸ்ரார் ஒருவரது காரக்ரரை அங்கு அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்துக்கொண்டு முடிவுசெய்ய முடியாது. உதாரணமாக அண்டர் ரேக்கரை எடுத்துக்கொள்வோம் இவரைப்பார்த்தால் ரிங்கில் இருக்கும் ஸ்ரார்களே கலங்குவார்கள் என்றால் சாதாரண மனிதர்களான நாங்கள் எப்படி இவரை அணுகுவது? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அண்டர் ரேக்கர் நாம் நினைப்பதைப்போல் அல்ல அவர் சாதுவான சாதாரண மனிதராகத்தான் நடந்துகொள்கின்றார்.


WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Me-and-the-undertaker-794508


இவரைப்போலத்தான் ஏனைய ஸ்ரார்களும்
wwe ரெஸ்லிங்க் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ரெஃபிரக்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு அவசியம்? ரிங்கில் மோதும் ஸ்ரார்கள் மோதும்போது தங்களுக்குள் எப்படி எமக்குத்தெரியாமல் சைகைகளை பரிமாற்றுகின்றார்கள்?. அடி பட்டது இரத்தம் உடனே எப்படி இரத்தம் வருகின்றது? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Empty Re: WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2

Post by மகா பிரபு Wed Oct 24, 2012 7:32 am


WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 20120401_LIGHT_wm_rock_cena_stareoff_C


சென்றபதிவில் wwe ரெஸ்லிங்கின் உண்மைத்தன்மையை ஓரளவிற்கு ஆராய்ந்தோம் உண்மையில் wwe சில விபத்துக்கள் நடந்ததையும் துரதிஸ்ரவசமான ஒரு மரணத்தைப்பற்றியும், நான் ஹீரோக்கள் என நினைப்பவர்களை நாம் தீர்மானிப்பதில்லை wwe ஆல் அப்படி நினைக்குமாறு திணிக்கப்படுகின்றோம் என்பதையும் பார்தோம். ரெஸிலிங்கிற்கென பிரத்தியேகமாக மேடை செய்யப்பட்டிருக்கும். இதனால் சாதரணதரையில் விழும்போது ஏற்படும் பாதிப்பை விட பாதிப்புக்குறைவாக இருக்கும்.


WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 08



camera ரிக்ஸ்ஸும் இன்நிகழ்ச்சி திறம்பட நடைபெறுவதற்கு உதவியாக இருக்கின்றது. அடிக்கும் போதும் சரி,பாயும் போதும் சரி அதை கமரா மிகைப்படுத்திக்காட்டுவதில் உதவியாக இருக்கின்றது.ரெஸ்லிங்க்கை பார்க்கும் போது அதில் ஒருவர் இன்னொருவருக்கு ஃபினிஸ்ஸின் சோர்ட் அடிக்கும் போது கவனமாக அவதானித்திருக்கிறீர்களா? ஃபினிஸ்ஸின் சோர்ட் டை அடிப்பதற்கு சில செக்கண்ட்கள் வரை ஒரு வியூவில் இருக்கும் கமரா ஃபினிஸ்ஸின் சோர்ட் அடிக்கும் போது தூரமாக வேறு வியூவிற்கு சென்றுவிடும்.

இதற்கெற்றாற் போல் 3/4 கேமரா மேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் ஒவ்வொரு ரெஸ்லரும் தமது கதாப்பாத்திரங்களுடன் நின்றுவிடாது அதற்கு மேலதிகமான வேலையையும் செய்கின்றனர்.தன்னுடன் மோதுபவரை பாதுகாப்பது கதிரை, சுத்தியல் போன்ற சாதனங்களால் அடிக்கும் போது எப்படித்தாக்கவேண்டும்? ஒருவர் இன்னொருவரை தாக்கும்போது தக்கப்படுபவர் எப்படி ஒத்துழைப்புத்தரவேண்டும்? என்றெல்லாம் பயிற்சியளிக்கப்படுகின்றது.இதன்காரணமாகத்தான் நடிக்கத்தெரிந்த ஒருவர் மட்டும் இதற்கு போதாது.


யு டியூப்பில் பிரபலமான சில வீடியோக்கள்

ஓஸ்ரினிடம் ஸ்ரனர் வாங்கிக்கட்டிய ஜோன்சீனா....



உண்மையில் பின்வரும் வீடியோதான் மிகவும் அதிகமானோரால் பார்வையிடப்பட்ட வீடியோ. 20,029,941 பார்வையாளர்கள்....

காலி வேர்ஸ் ரேய்மஸ்ரிறியோ




ரொக் வெர்ஸ் கோல்ட் பேர்க்...ரொக் துண்டைக்காணோம் என்று ஓடியது இதில்தான்...




டேக்கர் காலியை முதல் முதலில் சந்தித்தல்



அத்துடன் ஸ்கிரிப்ரில் இருக்கும்படி அத்தனையும் நடைபெற்றுவிடாது. சில விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை. சரி ஒவ்வொன்றாக நோக்குவோம் ரெஸ்லேர்ஸ் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை விடயங்கள் இருக்கின்றன.



WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Venkkayam

உடலை தூக்கி தரையில் மோதுதல்.இது பொதுவாக சகல ரெஸ்லேர்ஸும் செய்வதுதான். நன்றாக கவனித்தால் உண்மை புலப்படும்.இதில் கீழே போடப்படுபவர் தம்மை தூக்க மற்றவருக்கு உதவிசெய்வார். அத்துடன் தூக்கி கீழே மோதுபவர் கீழே விழுபவரை ஓரளவு தாங்குவார். கீழே விழுபவர் மற்றவர் மீது தனது கைகளை ஊன்றி உடல் பாரத்தின் ஒரு பகுதியை செலுத்துவார்.இவற்றினால் கீழே விழுபவர்க்கான சேதம் பெருமளவில் குறைக்கப்படும்.பின்வரும் படத்தை கவனியுங்கள். அதில் அடி வாங்குபவரின் கைகளை கவனியுங்கள் சீனா அவரை தூக்கி எறியமாட்டார் கீழே மேடையில் விழும்வரை சீனாவின் கைகள் அவர்மீது இருக்கும். (சில சமயங்களில் தூகியும் எறிந்திருக்கிறார்கள்)


WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Ht_wwe_kevin4_061017_ssv

[/centerமற்றவை அடுத்த பதிவில்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2 Empty Re: WWE ஆட்டங்கள் உண்மையா? தொடர் பகுதி 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum