தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மதுரை அரசாளும் மீனாட்சி!

View previous topic View next topic Go down

மதுரை அரசாளும் மீனாட்சி! Empty மதுரை அரசாளும் மீனாட்சி!

Post by முழுமுதலோன் Wed May 14, 2014 9:49 am

மதுரை அரசாளும் மீனாட்சி! Madurai


பன்னெடுங்காலமாக பாண்டியநாட்டின் தலைநகராக விளங்கிவந்தது மதுரை. வரலாறு, வைகை, சங்கத்தமிழ் என பல்வேறு சிறப்பு களைக் கொண்ட இந்நகர் ஆலயத்தாலும் சிறப்புமிகக் கொண்டது.

இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் ஆலயம் உலகப்புகழ் பெற்றதென்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாலயம் உருவான வரலாறும் சிலிர்ப்பூட்டுவதே.

சுமார் 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாகக் கருதப்படும் இவ்வாலயம், பின்னர்காலப்போக்கில் சிதைந்துபோனது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆண்டவன் குலசேகரப் பாண்டியன். ஒருமுறை அவன் வேட்டைக்குச் செல்லும்போது கடம்பமரத்தின்கீழ் சுயம்புவாய் முகிழ்த்திருந்த சிவலிங்கத் திருமேனியைக் கண்டான். அவ் விடத்திலேயே ஆலயம் அமைத்து பூஜைகள் செய்தான். கோவிலை மையமாக வைத்து ஊரையும் உருவாக்கினான். பொதுவாக, ஊர் உருவான பின்னரே கோவில் உருவாகும். ஆனால் இங்கு கோவிலை அமைத்தபின்னர் ஊர் உருவாகியது.

மதுரை அரசாளும் மீனாட்சி! Madurai1குலசேகரப் பாண்டியனின் மகன் மலயத் வஜன். அவன் மனைவி காஞ்சனமாலை. இருவரும் குழந்தைச் செல்வம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். அதன் விளைவாக பார்வதிதேவியே அவர்களுக்கு மகளாக- மீனாட்சியாக அவதரித்தாள்.

மீனாட்சி பருவமடைந்தபின் மதுரையின் ஆட்சிப் பொறுப்பையேற்றுக் கொண்டு திக்விஜயம் மேற்கொண்டாள். சென்ற இடமெல்லாம் வெற்றிபெற்ற தேவி திருக்கயிலையை அடைந்தாள். அங்கு சிவபெருமானைக் கண்டு இவரே தன் மணவாளன் என்றுணர்ந்தாள். பின்னர் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது.

தற்போது மதுரையில் நாம் காணும் ஆலயம் மலயத்வஜனால் கட்டப்பட்டதல்ல. ஆதிக்கோவில் 1310-ல் மாலிக்காபூரால் தரைமட்டமாக்கப்பட்டது. அதன்பின்னர் மதுரையை ஆட்சிசெய்த கூன்பாண்டி யன், மாறவர்மன் சடையவர்மன், சுந்தரபாண்டியன், திருமலை நாயக்கர், முதலாம் கிருஷ்ணப்பர், வீரப்ப நாயக்கர், விசுவநாத நாயக்கர், மருது சகோதரர்கள் உள்ளிட்டோரால் கட்டிமுடிக்கப்பட்டது. ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகள் சித்திரை வீதி, வைகாசி வீதியென்று தமிழ் மாதங்களின் பெயர்களைக்கொண்டு விளங்குகின்றன.

இவ்வாலயக் கட்டுமான செலவு அன்றையமதிப்பீட்டில் ஒரு கோடியே இருபது லட்சம் என்று கணக்கிட்டுள்ளனர். இன்றைக்கு பலநூறு கோடி ரூபாய்க்கு சமம்.

அப்போதைய மன்னர்கள் ஆலயம் கட்ட பொருள் சேர்க்க பல திட்டங்கள் வகுத்து திரட்டினர். குழந்தையில்லாதோர் சொத்துகளும், வாரிசின்றி இறந்த கோவில் பணியாளரின் சொத்துகளும், உச்ச வரம்பிற்கு அதிகமாக வைத்துள்ளவர்களின் நிலங்களும், குற்றவாளிகளின் நிலங்களும், சிவத்துரோகம் செய்த பணியாளர்களின் முழு சொத்துகளும் ஆலயத்தையே சேரும் என்றனர்.

வீட்டுக்கு ஒரு ஆண்- பெண் கோவில் கட்டும் பணிக்கு வரவேண்டும். கூலியின்றி தாங்களாகவே அவர்கள் வேலை செய்தனர். 

பணியாட்களும் குறைந்த ஊதியத்திற்கு 17 மணி நேரம் வேலை செய்தனர். கூன் பாண்டியன் உண்டியல் குலுக்கி பொருள் சேர்த்தார்.

திருமலை நாயக்கர் ஆலயத் திருவிழாக் களை நிறுத்திவிட்டு, அதற்கு செலவிடும் பணத்தை ஆலயம் கட்டக்கொடுத்தார். அத் துடன் வீட்டுக்கு ஒரு பானை கொடுத்து, அதில் தினமும் பிடி அரிசி போடச் செய்து, அதனை காசாக்கியும் ஆலயம் கட்டக் கொடுத்தார். போரில் வென்றபின் எதிரிகளின் பொக்கிஷங்களை ஆலயத் திருப் பணிக்குத் தந்தார். இதனால்தான் பொற்றா மரைக்குளம் கட்டப்பட்டது.

கோவில் வளாகத்தில் பாழடைந்த கரியமாணிக்கப் பெருமாள் ஆலயத்தை இடித்து, அதில் கிடைத்த கட்டுமானப் பொருட்களை ஆலயம் கட்டக் கொடுத்தார். மருதுபாண்டியர்கள் தங்கள் நிதியிலிருந்து 50 சதவிகிதத்தை கோவில் கட்ட வழங்கினர். 

ஆலயம் கட்டத் தேவையான செங்கற்கள் இராமநாதபுரத்தில் தயாராகின. வழிநெடுக ஆட்களை இடைவிடாமல் நிறுத்தி வைத்து, அவர்கள் கைகள் மாற்றியே எல்லா செங்கற்களையும் ஆலயத்திற்கு கொண்டுவரச் செய்தனர்.

இப்படி பற்பல முறைகளால் பெறப்பட்ட நிதிகள் மூலம் இவ்வாலயம் கட்டப்பட்டது. மன்னர்கள், பணியாளர்கள் மட்டுமல்ல; பொதுமக் களும் ஆலயத் திருப்பணியில் பங்குபெற் றனர்.

சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் செவ்வக வடிவில், 847 அடிக்கு 772 அடி பரப்பளவுள்ள இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சக்தி பீடங்களில் முதன்மையானது. ராஜமாதங்கி சியாமளா பீடம் என்றழைக்கப்படுகிறது. மூலவரான மீனாட்சியம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லாலானது. தமிழகத்தில் மீனாட்சி சுந்த ரேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் 366 கோவில்கள் உள்ளன. அதில் இக்கோவில்தான் முதன்மைக் கோவிலா கும். கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இவ்வாலயம் இந்திய அதிசயங்களில் ஒன்றாகிவிட்டது.

பெரும்பாலான கோவில்களில் இறைவன் கிழக்கு முகமாகவும் இறைவி தெற்கு நோக்கியும் கோவில் கொண்டிருப்பர். ஆனால் மதுரையில் சுவாமியும் (சொக்கர்) அம்பிகையும் (மீனாட்சி) கிழக்கு நோக்கியே காட்சி தருகின்றனர்.

மதுரை தமிழகத்தின் 2-ஆவது பெரியநகரம். இது தூங்காநகரம் என பெயர் பெற்றது. இவ்வாலயம் கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சித்திரவனப் பும் கொண்டது. நாத அமைப்பு கொண்ட தூண்களை உடையது. மூர்த்தி, தலம், தீர்த்தப்பெருமை கொண்டது. கடம்ப மரமும் வில்வ மரமும் தல விருட்சம். பொற்றாமரைக் குளம், வைகை நதி, கிருதமாலை, கொண்டாழி, தெப்பக் குளம், புறந்தொட்டி, நிர்மால்ய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்களாகும். சிறப்பு- மதுரைமல்லி, தாழம்பூ, குங்குமம், பிட்டு பலகாரம்.

பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்திரங்களாக இடம்பெற் றுள்ளன. இதே 64 திருவிளையாடல்கள் சுவாமி கோவில் மகாமண்டபத்தில் வண்ணச்சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை தோன்றிய இடம் பொற்றாமரைக் குளம்தான். இக்குளத்தின் தென்புறச் சுவரில் 1,330 திருக்குறளும் வெண்சலவைக் கற்களில் பொறித்துப் பதித்துள்ளனர். இக்குளத்தில் இப்போது திருப்பனந்தாள் மடத்தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நம்பித் தம்பிரான் செய்தளித்த உண்மையான பொற்றாமரையையே மிதக்கவிட்டுள்ளனர்.

ராஜசேகர பாண்டியன் விருப்பப்படி நடராசர் தன் கால் மாற்றி ஆடிய தலமிது. அதுதான் வெள்ளி சபை என்ற ரஜத சபை. இது பஞ்ச சபைகளில் ஒன்று. பெயருக்கேற்றாற்போல் சந்நிதி முழுவதுமே வெள்ளியாலானது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த வெள்ளி வேலைப்பாடு கள் அனைத்தும் ஒரு முஸ்லிம் சிற்பியால் செய்து தரப் பட்டதுதான்.

மேலும் இவ்வாலயத்தில் பஞ்ச சபைகளும் உள்ளன. முதல் பிராகாரத்தில் கனகசபையும், ரத்ன சபையும்; வெள்ளியம்பலத்தில் ரஜதசபையும்; நூற்றுக்கால் மண்டபத்தில் தேவசபையும்; ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திர சபையும் அமைந்துள்ளன.

ஆயிரங்கால் மண்டபத்தில் ஒலியெழுப்பும் சிலைகள் பலவுள்ளன. அத்துடன் ஏழு இசைத்தூண்களும் உள்ளன. 

இங்கு முக்கியமான இடம் திருமலை நாயக்கர் கோவிலிலுள்ள நூல் நிலையம். ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தைத் தரிசித்து மீனாட்சியம்மன் அருளைப் பெறுவது அவசியம்.

இவ்வாலயத்தில் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் மிகவும் உயரமானது தென்கோபுரம். உயரம் 160 அடி. இதில் 1,511 சிற்பங்கள் உள்ளன.

மேலை கோபுரத்தில் 1,124 சிற்பங்களும்; கீழை கோபுரத்தில் 1,011 சிற்பங்களும்; வடகோபுரத்தில் 404 சிற்பங்களும்; விமானத்தில் 174 சுதைச் சிற்பங்களும் என மேலும் பல சிற்பங்களுடன் மொத்தம் 4,224 வண்ணச் சிற்பங்களைக் காணலாம். அத்துடன் ஆலயத்தில் 264 சுவாமி சிலைகளும் உள்ளன.
தெப்பக் குளத்தில் கிடைத்த ஏழு அடி உயர முக்குறுகுணிப் பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசி மாவால் மிகப்பெரிய கொழுக்கட்டை செய்து விநாயகர் சதுர்த்தி யன்று படைப்பார்கள். அம்மனுக்கு 15 திருப்பெயர்களும் சுவாமிக்கு 14 திருப்பெயர்களும் உள்ளன. ஆலய பிரசாதம் பிட்டுதான்!

மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை எழுந்தருளலும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களாகும்.



http://www.nakkheeran.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மதுரை அரசாளும் மீனாட்சி! Empty Re: மதுரை அரசாளும் மீனாட்சி!

Post by sreemuky Wed May 14, 2014 4:32 pm

சூ ப்ப்ப்ப் ர்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

மதுரை அரசாளும் மீனாட்சி! Empty Re: மதுரை அரசாளும் மீனாட்சி!

Post by ஸ்ரீராம் Thu May 15, 2014 8:55 am

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மதுரை அரசாளும் மீனாட்சி! Empty Re: மதுரை அரசாளும் மீனாட்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum