Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நன்மையும், தீமையும் கலந்து கொடுத்த அதிரடி அறிவிப்பு வியாபார பாதிப்பிலும் நாட்டுக்காக அனுசரிக்கும் நல
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
நன்மையும், தீமையும் கலந்து கொடுத்த அதிரடி அறிவிப்பு வியாபார பாதிப்பிலும் நாட்டுக்காக அனுசரிக்கும் நல
தஞ்சாவூர்:
காசு... பணம்... துட்டு... மணி... மணி... என்று ஆளாய் பறந்து அரசுக்கு வருமானவரியை மறைத்து சேர்த்து வைக்கும் பணம் இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்யும் என்பதை அறிந்தும்... அதை நிறுத்தாமல் தொடர்ந்தவர்கள் இன்று விழிபிதுங்கி தாங்கள் சேர்த்து வைத்த பணம் வெறும் வண்ணக் காகிதங்களாய் மாறி போய்விட்ட அதிர்ச்சியில் உள்ளனர். காரணம்... மத்திய அரசு.
இந்தியாவின் தலைவிதியை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி எடுத்த அதிரடி முடிவு. கடந்த நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணி. மக்களிடம் புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது. உங்களிடம் உள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்புதான் அது.
பின்னர் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வு... தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை வங்கியில் மாற்ற அலைமோதுகின்றனர் இன்று வரை. இருப்பினும் மக்களிடம் இந்த அதிரடிக்கு அமோக ஆதரவும் இருப்பதை உணர வேண்டும். காரணம் சில ஆயிரங்கள் மாற்றவே தாங்கள் இப்படி விழிபிதுங்குகிறோம்... கோடிக்கணக்கில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு என்ற நினைப்பில் சமாதானம் ஆகின்றனர். சரி... இந்த அதிரடி அறிவிப்பால் தொழில்களின் நிலை... சிறு,குறு வியாபாரிகளின் விற்பனை சரிவா... எடுத்தோம் சிலரின் மனநிலையின் வெளிப்பாட்டை. இதோ... அது உங்களுக்காக....
ஆரோக்கிய அருள்ராஜ் (இருசக்கர வாகன பழுது பார்ப்பு பட்டறை உரிமையாளர்):
சிரமமாக உள்ளது. காரணம். வாகனங்கள் பழுது பார்த்தவுடன் வாடிக்கையாளர்கள் தற்போது ரூ.2000 பணத்தை கொடுக்கின்றனர். வாகனத்தை சரி செய்தற்கு உதாரணமாக ரூ.200 என்றே வைத்துக் கொள்ளுங்க.
மீதி ரூ.1800 ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்கு எங்கு போய் சில்லரை மாற்றுவது. இந்த அதிரடி திட்டத்தால் தற்போது ஒரு சில நாட்களுக்கு பிரச்னை என்றாலும் வரும்காலத்தில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இது சரியான தீர்வு. ஆரம்பத்தில் சிரமப்பட்டாலும் வரும் காலத்தை கருத்தில் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த அதிரடி திட்டம் இப்போது என்னை போன்றவர்களுக்கு வருமானத்தை பாதித்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. திருச்சியில் புதிய ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் வந்து விட்டன. ஆனால் புதிய ரூ.500 நோட்டுக்கள் வந்தால்தான் இந்த பிரச்னைக்கு சற்றே தீர்வு ஏற்படும்.
சிவப்பிரகாசம் (என்கிற) சிவாஜி, தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்டில் ஸ்வீட் ஸ்டாலில் பணியாற்றுபவர்:
முதல்ல ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் அருமையான திட்டம். பிரதமர் கொடுத்துள்ள இந்த அதிரடி நமக்கு கசப்பு மருந்தாக இருந்தாலும் எதிர்காலத்தில் இனிப்பாக மாற அஸ்திவாரம் என்பதை மறுக்க கூடாது. எங்கள் கடையிலும் விற்பனை குறைந்துள்ளது. காரணம் சில்லரை தட்டுப்பாடுதான். முன்பு ரூ.500, 1000 நோட்டுக்கள் இருந்ததால் ஓரளவுக்கு எங்களால் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு சில்லரை கொடுக்க முடிந்தது.
இப்போது புதிய ரூ.2000 நோட்டுக்கு சில்லரை என்பது மிகவும் தட்டுப்பாடான நிலைதான். புதிய ரூ.500 நோட்டு புழக்கத்தில் வந்தால் இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கும். அதேபோல் வங்கிகளிலும் கூடுதலாக பணம் கொடுக்க அலுவலர்களை நியமித்தால் வெகுநேரம் காத்திருக்கும் நிலை மாறும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த அதிரடிக்கு வரவேற்புதான் உள்ளது. இப்போது வியாபாரம் பாதிப்பு என்பதை மறுப்பதற்கில்லை.
மைக்கேல் ராஜ் (தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் குளிர்பான கடையில் பணியாற்றுவர்):
நல்ல திட்டம். நடுத்தர மக்கள் வங்கிகளில் காத்திருப்பதால் அவர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என்பது உண்மைதான். இருந்தாலும் மக்கள் இதை அனுசரித்துக் கொள்கின்றனர். . வேறு எந்த வழியிலும் கருப்பு பணத்தை பணமுதலைகள் மாற்றாத வகையில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
இப்போது எங்களுக்கு என்று இல்லை. அனைத்து தரப்பு வியாபாரிகளுக்கும் விற்பனை குறைந்து விட்டது. சில நாட்களில் இந்த நிலை மாறி விடும் என்று எதிர்பார்க்கிறோம்.நம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் புற்று நோய் போன்ற இந்த கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்க இந்த அதிரடி திட்டம் தேவைதான். நான் இந்த திட்டத்தை ரொம்பவே வரவேற்கிறேன்.
அருள்நேசன் (தஞ்சாவூர்):
அருமையான திட்டம். கருப்பு பண முதலைகளுக்கு இந்த அதிரடி சரியான சாவுமணி என்றே சொல்ல வேண்டும். இந்த திடீர் அறிவிப்பால் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மைதான். பணியிடத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கால் கடுக்க வங்கிகளில் நிற்கும் நிலை உள்ளது. இதை சீக்கிரம் சீரமைக்க வேண்டும். புதிய ரூ.500நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தால் மட்டுமே இந்த பிரச்னையை சீரமைக்க முடியும்.
இப்போது அனைவரிடமும் ரூ.2000 நோட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு சில்லரை. அதுதானே முக்கியம். டீக்குடிக்க கூடவோ... அல்லது டிபன் சாப்பிடவோ சில்லரை இருந்தால் தானே முடியும். அரசு இதற்கு தகுந்த ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும். வியாபாரிகள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். முழுமையான வியாபாரம் இல்லை. ஆனால் எதிர்கால வளமான இந்தியாவிற்கு இந்த அதிரடி வேண்டும். இதை மக்களும் புரிந்து கொண்டுதான் உள்ளனர்.
கருப்பு பணம் ஒழிந்து விடும் என்பதில் ஐயமில்லை. அடுத்த புற்றுநோயான லஞ்சத்தையும் ஒழிக்க இதுபோன்ற அதிரடி எடுக்க வேண்டும்.
ஜாஹிர் உசேன் (தஞ்சை புதிய பேருந்துநிலைய கடையில் பணியாற்றுபவர்):
டாக்டர் ஊசி போடும் போது வலித்தாலும் நோய் நம்மை விட்டு போய்விட வேண்டும் என்பதற்காகத்தானே பொறுத்துக் கொள்கிறோம். அதுபோலத்தான் இதையும் பார்க்க வேண்டும். இப்போது வியாபாரம் பாதிப்புதான். சம்பளம் வாங்குவதிலும் பிரச்னைதான். இருப்பினும் நம் நாடு முன்னேற்றம் அடைகிறது என்றால் அதில் நம் பங்கும் இருக்க வேண்டும் அல்லவா.
இப்போதைய சிரமங்கள் நாளை இனிமையாக மாறும் என்ற திடமான நம்பிக்கை உள்ளது. எனவே இப்போதைய சிரமத்தை பொறுத்துக் கொள்கிறோம்.இதை இத்துடன் விட்டு விடக்கூடாது. மேலும் மேலும் வலுவாக்கினால் வலிமையான இந்தியா என்ற நமது கனவு மெய்ப்படும்.
இந்த நேரத்தை பயன்படுத்தி பலர் கமிஷன் ஏஜெண்டாக பலன் அடைந்து வருகின்றனர். அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கடையில் பொருட்கள் போடும் பெரிய நிறுவனங்கள் கூட சில்லரை இல்லை என்கின்றனர். இதனால் புதிய ரூ.500 நோட்டுக்களை விரைவில் புழக்கத்தில் விட வேண்டும்.
குருசாமி (தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர்):
எனக்கு வியாபாரம் பாதிப்புதான். உதாரணமாக ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரத்திற்கு வியாபாரம் நடக்கும் என்றால் இப்போது ரூ. 500க்கு நடப்பதே பெரிய விஷயமாக இருக்கு. ரூ.100க்கு பழங்கள் வாங்கிவிட்டு ரூ.2000 நோட்டை தருகின்றனர். அதற்கு எங்கு சில்லரைக்கு செல்வது.
இத்தனை சிரமங்கள் இருந்தாலும் மிகவும் வரவேற்கக்கூடிய திட்டம்தான் இது. இதனால் வரும் காலத்தில் நிம்மதியான வாழ்வை மக்களுக்கு அளிக்க மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சில வாரங்களிலோ... அல்லது மாதங்களிலோ இந்த பிரச்னை சீரமைக்கப்பட்டு விடும் என்று நம்புகிறேன்.
மாதவன், வினோத் (தஞ்சை புதிய பேருந்துநிலையத்தில் குளிர்பானக்கடை வைத்துள்ளவர்கள்):
வியாபாரம் வெகுவாக குறைந்து விட்டது. சில்லரை தட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் எங்களை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். முன்பு ரூ.500 கொடுத்து ரூ.50க்கு பொருள் வாங்கினாலும் மீதி கொடுத்துவிடலாம். இப்போது ரூ.2000 நோட்டுக்களை தருகின்றனர்.
சராசரியாக நடக்கும் வியாபாரம் கூட நடக்கவில்லை. இருந்தாலும் இந்த அதிரடி நடவடிக்கை புற்றுநோய் போல் பரவி வரும் கருப்பு பணத்தை ஒழித்தால் அனைவரும் மகிழ்ச்சிதான். இந்த சிரமத்தையும் நாங்கள் மனதார ஏற்றுக் கொள்கிறோம். வருங்கால வளமான இந்தியாவிற்காக.
எஸ்.எஸ். மணி (சிறுதொழில் பழ வியாபாரிகள் சங்க செயலாளர்):
இந்த திட்டம் வியாபாரிகளுக்கு வெகு பாதிப்பை கொடுத்துள்ளது. கடந்த 10 நாட்களாக வியாபாரம் சரிவர இல்லை. இதனால் எங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதிதான் சம்பளம் கொடுக்க முடிகிறது. நாட்டில் உள்ள பணப்புழக்கத்திற்கு ஏற்ப புதிய நோட்டுக்களை ஏற்பாடு செய்து கொண்டு இந்த அதிரடியை எடுத்திருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டாங்க.
வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தினமும் பிரச்னை ஏற்படுகிறது. இருப்பினும் இந்த அதிரடியான திட்டத்தால் கருப்பு பணம் ஒழிந்தால் அனைவருக்கும் நல்லதுதான். திட்டம் நல்ல திட்டம்தான். இதற்கு தேவையான முன்னேற்பாடுகளுடன் அரசு செய்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கலாம். வியாபாரிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா. அதிலும் எங்களை போன்ற சிறு வியாபாரிகள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. இந்த திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் புதிய ரூபாய் நோட்டுக்களை விரைவில் அதிகளவில் நாடு முழுவதும் கொண்டு போய் சேர்க்க உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
வரும் காலத்தில் மத்திய அரசு கொடுக்கும் ஒத்துழைப்பை வைத்தே இந்த அதிரடியால் ஏற்படும் நன்மைகள் தெரிய வரும்.
ஜெயா (புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடையில் வேலை செய்பவர்):
மிகுந்த சிரமமாக உள்ளது. கடையில் விற்பனையும் குறைவு. இதனால் சம்பளம் கிடைப்பது பாதியாக குறைந்து விட்டது. அரசின் இந்த அதிரடி நல்ல விஷயமாக இருக்கிறது. இருந்தாலும் எங்களை போன்ற அன்றாட தினக்கூலிகளையும் மனதில் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தால்தான்தான் ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.
N.Nagarajan- புதியவர்
- பதிவுகள் : 25
Similar topics
» பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்... அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
» பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
» புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
» நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?
» வியாபார தந்திரம்
» பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
» புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
» நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?
» வியாபார தந்திரம்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum