தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஞாயிறு போற்றுவோம்... ஞாயிறு போற்றுவோம்

View previous topic View next topic Go down

ஞாயிறு போற்றுவோம்... ஞாயிறு போற்றுவோம் Empty ஞாயிறு போற்றுவோம்... ஞாயிறு போற்றுவோம்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 23, 2014 11:49 pm

ஞாயிறு போற்றுவோம்... ஞாயிறு போற்றுவோம் 2mo5kc2
மனித சமுதாயத்தில் என்றைக்கு ஆற்றல் வளம் கலந்ததோ அன்றே பெரிய மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழத் துவங்கின. ஆதிமனிதன் கல்லை உரசி தீயை உண்டாக்கின அன்றே அவன் வாழ்வில் ஒளி பிறந்து துன்ப இருள் நீங்கத் துவங்கியது. 15ம் நூற்றாண்டில், ஐரோப்பா கண்டத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கத் துவங்கியவுடன், தொழிற்புரட்சியும் ஏற்பட்டது. ரயில்கள் போன்றவைகளில் மனிதன் வசதியாக பயணம் செய்ய துவங்கினான். 150 ஆண்டுகளுக்கு முன் பெட்ரோலிய எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் வானவூர்திகள் வந்தவுடன், நெடுந்தூர பயணங்கள் கூட மனிதருக்கு சாத்தியமாயிற்று. மின் ஆற்றல் வந்ததும் எல்லா வீடுகளிலும் வெளிச்சம் பிறந்தது. ஆற்றல் வளங்களான நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவை 20ம் நூற்றாண்டில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தின.

இன்று உலகில் 700 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வு வசதிக்காக ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டிற்கு 3000 கிலோவாட் மணிக்கு குறையாத ஆற்றல் தேவைப்படுகிறது. இவை யாவும் நிலக்கரி பெட்ரோலிய ஆற்றல் எரிபொருளிலிருந்து பெறப்படுகிறது. 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்று கிடைக்கும் ஆற்றல் அளவு ஆண்டிற்கு 1000 கிலோ வாட் மணி ஆகும். இதனால் வாழ்க்கை தரம் மற்ற நாடுகளை விட தாழ்வாகவே உள்ளது. ஏராளமான எண்ணெய் பொருட்களை நாம் இறக்குமதி செய்கிறோம். இதனால் நம் அந்நிய செலாவணி விரயமாகிறது. பெட்ரோலிய பொருட்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் பெட்ரோலிய வளங்கள் தீர்ந்து விடலாம் என கணிக்கப்படுகிறது. இதன்பின் வாழ்வை வளமாக்கும் மின்சாரம் போன்ற ஆற்றல் வளங்களை எவ்வாறு பெறுவது?

இதற்கு அறிவியலாளர்கள் சூரிய ஆற்றலை சுட்டி காட்டுகின்றனர். சூரிய ஆற்றலின் பல பரிமாணங்களே நம் வருங்கால வாழ்வை வளப்படுத்தப் போகின்றன. இதை நாம் எல்லோரும் புரிந்து பயன்படுத்தினால், 21ம் நூற்றாண்டில் சூரிய ஆற்றல் புரட்சி ஏற்பட்டு, இந்தியர்கள் வளமான வாழ்வை பெற வாய்ப்புள்ளது. சூரிய ஆற்றல் மேலும் வற்றாத தன்மை கொண்டது. இந்தியன் ஒவ்வொருவரின் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது. சூரியன் இன்னும் 450 கோடி ஆண்டுகள் ஒளிர்ந்து ஆற்றலை தரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் அதன் அளவு அபரிமிதமானது. சூரிய ஆற்றலை புரிந்து பயன்படுத்தி வாழ்வின் தரத்தை உயர்த்த வேண்டும். பெட்ரோலியம், நிலக்கரி போல சூரிய ஆற்றல் சுற்றுப்புறத்தை மாசு படுத்தாது. இது இயற்கையின் தூய்மையான ஆற்றல். தமிழகத்தில் பூமியில் படும் சூரிய ஆற்றல் அதாவது வெயிலின் அளவு சதுரமீட்டருக்கு சராசரியாக 700 வாட் ஆகும். தினசரி சூரிய ஆற்றல் 8 மணி நேரம் கிடைக்கிறது. ஒரு சதுரமீட்டரில் படும் வெயிலின் அளவு நாள் ஒன்றுக்கு சுமார் 5 யுனிட் மின்சார ஆற்றலுக்கு சமம். எவ்வளவு ஆற்றல் பரந்த வெளியில் படுகிறது. அதை பயன்படுத்தும் முறைகளை அறிந்தால், ஒவ்வொரு இந்தியரும் வளமான வாழ்வை பெறலாம். சூரிய ஆற்றல் ஒளி வடிவில் பூமியை அடைகிறது. இதை தாவரங்கள் பயன்படுத்தி உணவு பொருட்களை அளிக்கின்றது. இந்த ஒளி ஆற்றலை இன்றைய தொழில் நுட்பம் மூலம் ஒளியாக கண்ணாடி இழையில் கடத்தலாம். வெப்பமாக, மின்சாரமாக மாற்றலாம். கடல் நீரிலிருந்து நன்னீர் பெறலாம்.

சூரிய ஒளி இழை:


பகலில் பல வீடுகள், அலுவலகங்களில் போதிய வெளிச்சம் இன்றி மின் விளக்கை பயன்படுத்துவர். இதை தவிர்க்க கீழ்கண்ட கருவி உதவுகிறது. குழாயில் தண்ணீரை வேண்டுமிடத்திற்கு கொண்டு செல்வது போல, சூரிய ஒளியையும் கண்ணாடி இழை மூலம் கடத்தி செல்லலாம். 'ஆப்டிக்கல் பைபர்' என்ற கண்ணாடி இழைகள் சில மில்லி மீட்டர் விட்டம் கொண்ட வளையக்கூடிய இழை. அதன் ஒரு முனையில் ஒளியை செலுத்தினால், அது அந்த இழை வழியாக மறுமுனை வந்து வெளிப்படும். இதுபோன்ற இழைகளின் தொகுப்பு முனையை வெயில்படும் மாடியில் வைத்து, அவைகளை வீட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டும். மாடியில் படும் வெயில் கண்ணாடி இழைகளின் மூலம் கட்டத்தப்பட்டு, வீட்டின் அறைகளில் மறுமுனையில் வெளிப்படுத்தும். போதிய வெளிச்சம் பகல் முழுவதும் கிடைக்கும். வெளிநாடுகளில் இது நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் இந்த தொழில் நுட்பத்தை கொண்டு வர வேண்டும்.

வெப்ப ஆற்றல்:


சூரிய ஒளியான வெயிலை வெப்பமயமாக்கி சமையல் செய்ய பயன்படுத்தலாம். சூரிய அடுப்பில் எளிதாக வெயிலை பயன்படுத்தி உணவு சமைக்கலாம். குவி ஆடி மூலம் வெயிலை ஒன்றுபடுத்தினால் சுமார் 300 டிகிரி செல்சியஸ் மேற்பட்ட வெப்ப நிலை பெறலாம். இதனால் சமையலை சீக்கிரம் முடிக்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவனம் உள்ளதால், சூரிய வெப்ப அடுப்புகள் அங்கு பிரபலம். சூரிய புகை கூண்டு என்ற கருவி வீட்டிலுள்ள வெப்பக்காற்றை வெளி யேற்றி சுற்றியுள்ள குளிர்காற்றை வீட்டிற்குள் உறிஞ்சி கொடுக்கும். இந்த அமைப்பு எகிப்து நாட்டில் பிரபலம். இதனால் மின் விசிறி போன்ற மின் கருவிகள் தேவைப்படாது. சூரிய வெப்பத்தில் இயங்கும் குளிர்சாதன பெட்டிகள் கூட இன்று சந்தைக்கு வந்துள்ளன.

சூரிய மின் உற்பத்தி:


சூரிய மின் கலங்களில் வெயில் பட்டவுடன் மின்சாரம் உற்பத்தியாகும். தகுந்த பரப்புள்ள சூரிய மின் கலங்கள் வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய மின்சாரத்தை பகலில் மின் தேக்கிகளில் சேமித்து கொண்டால், தேவைப்படும் போது, மின்சாரத்தை பயன்படுத்தலாம். சூரிய மின் கலங்கள் பழுதடையாமல், 25 ஆண்டுகள் உழைக்கும். இதன் விலைகள் குறைந்து வருகிறது. அரசும் வீட்டு உபயோகத்திற்கு தகுந்த மானியம் வழங்குகிறது. நானோ தொழில் நுட்பத்தில் உற்பத்தியாகும் சூரிய மின் கலங்களின் திறன் அதிகம். வெளிநாடுகளில் நானோ சூரிய மின்கலங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. வீடுகளில் சூரிய மின்சாரம் வந்தால் அனல் மின்நிலையங்கள் அவசியமில்லை. சூரிய மின்கல ஆய்வுகள் இன்று உலகெங்கும் நடக்கிறது. சில ஆண்டுகளில் சூரிய மின்கல செயற்கை கோள்களை பூமியிலிருந்து சில ஆயிரம் மைல்கள் உயரத்தில் நிறுவ முயற்சிகளும் நடக்கின்றன. செயற்கை கோள் மின்கல தட்டுகள் வெயிலை நோக்கி அமைந்து தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யும். உற்பத்திக்கான சூரிய மின்சாரம் மைக்ரோ அலைகளாக மாற்றப்பட்டு பூமியை நோக்கி பாய்ச்சப்படும். பூமியில் மற்றொரு கருவி மைக்ரோ அலைகளை ஏற்று, மின்சாரமாக மாற்றும். அம்மின்சாரம் நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படும். இன்னும் 50 ஆண்டுகளில் இந்த தொழில் நுட்பம் சாத்தியமாகும். அப்போது உலக மக்கள் சூழலை பாதிக்காத தூய சூரிய மின்சாரம் பெறுவர். மின்கார்களும், ரயில்களும் அதிகம் வந்து விடும்.

கடல் நீரிலிருந்து நன்னீர்:


காற்றுக்கு அடுத்தபடி மனிதனுக்கு தேவைப்படுவது தண்ணீர். இந்த நன்னீரை சூரியனே மழையாக அளிக்கிறது. உலகின் மேல்பரப்பில் மூன்றில் 2 பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. கடல்நீரை நாம் அருந்த முடியாது. கடல் பரப்பில் வெயில் பட்டு கடலில் உள்ள நன்னீர் அவியாக பிரிந்து மேகமாகி பின் நிலப்பரப்பில் குளிர்ச்சியான இடத்தில் மழையாக நன்னீரை கொடுக்கிறது. இன்று சூரிய வடிகாய்ச்சி என்ற அமைப்புகளில் கடல் நீரை ஆவியாக்கி அதை குளிரச் செய்து நன்னீரை அளிக்கும். சூரிய வடிகாய்ச்சிகள் கடற்கரைகளில் அமைக்கப்படும். அரேபிய நாடுகளில் சூரிய நன்னீர் கொண்டு விவசாயம் நடக்கிறது. பல்வேறு பயன்களை தரும் சூரியனை, ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும் என சிலப்பதிகாரம் போற்றுகிறது.

- பேராசிரியர் சி.இ.சூரியமூர்த்தி,
ஆற்றல் துறை முன்னாள் தலைவர்,
மதுரை காமராஜ் பல்கலை,
மதுரை. 97913 76681.


நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஞாயிறு போற்றுவோம்... ஞாயிறு போற்றுவோம் Empty Re: ஞாயிறு போற்றுவோம்... ஞாயிறு போற்றுவோம்

Post by செந்தில் Thu Jul 24, 2014 12:01 pm

இன்றிய காலத்திற்கு தேவையான அவசியமான பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum