தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நொறுங்குகிறதா பெண் இதயம்?

View previous topic View next topic Go down

நொறுங்குகிறதா பெண் இதயம்? Empty நொறுங்குகிறதா பெண் இதயம்?

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 6:40 pm

[You must be registered and logged in to see this image.]
 

நீரிழிவும் மூட்டுவலியும் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்தன. இன்று அவை வயது வித்தியாசம் பார்ப்பதில்லை. அதே  போலத்தான் இதய நோய்களும். ‘மாரடைப்பும் இதய நோய்களும் ஆண்களுக்கு மட்டும்தான் வரும்... அப்படியே பெண்களுக்கு வந்தாலும் வயதான  பிறகுதான் வரும்’ என்ற நிலை இன்றில்லை. மக்களின் வாழ்க்கைமுறை மாறிப் போனதன் விளைவாக, நோய்களின் போக்கிலும் ஏகப்பட்ட  மாற்றங்கள். இன்று எந்த நோயும் எந்த வயதினருக்கும் வரலாம் என்பதற்கான ஒரு உதாரணம்தான் பெண்களையும் குறி வைக்க ஆரம்பித்திருக்கிற  இதய நோய்கள்.

பெண்களுக்கு இதய நோய்கள் அதிகரித்திருப்பதன் பின்னணி, அவற்றின் அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விவரமாகப் பேசுகிறார் இதய நோய் சிகிச்சை  நிபுணர் டாக்டர் சந்திரசேகரன். ‘‘என்னுடைய அனுபவத்தில் 35 வயது இளம்பெண் மாரடைப்பில் இறந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆஞ்ஜியோ, பைபாஸ்  அறுவைகள் எல்லாம் செய்த பிறகும் அவரைப் பிழைக்க வைக்க முடியவில்லை. இன்று இதய நோய்களால் பாதிக்கப்படுகிற பெண்களின் வயது 35  ஆகக் குறைந்திருப்பதை அபாயகரமான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்கிற டாக்டர், நோய்க்கான காரணங்களைப்  பட்டியலிடுகிறார்.

‘‘பெண்களின் உடலில் உள்ள பாதுகாப்பு ஹார்மோன்களின் காரணமாக அவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் இயல்பிலேயே குறைவு.  சிலருக்கு இளவயதிலேயே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆர்த்ரைடிஸ், பருமன் போன்றவை இருந்தால், அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும்  இதய நோய்கள் வரலாம். இதய நோய்களுக்கான காரணங்களை மாற்றக் கூடியவை, மாற்ற முடியாதவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

மாற்றக் கூடியவை...

புகைப்பழக்கம்
நீரிழிவு
பருமன்
உயர் ரத்த அழுத்தம்


இந்தக் காரணங்களை பெண்கள் தமது உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம்  தவிர்க்கலாம்.

மாற்ற முடியாதவை...

வயது
பாலினம்
குடும்பப் பின்னணியில் அம்மா அல்லது அப்பாவுக்கு இதய நோய்கள் இருப்பது.


இந்த மூன்றையுமே மாற்ற முடியாது. மூன்றாவது காரணத்தைக் கட்டுப்படுத்தலாம். அதாவது அப்பா அல்லது அம்மாவுக்கு அவர்களது 50 பிளஸ்  வயதில் இதய நோய் வந்திருந்தால், வாரிசுகளுக்கும் அது பாதிக்கிற அபாயம் அதிகமாகவே இருக்கும். அது தெரிந்தால், ஏற்கனவே சொன்ன மாதிரி  உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் அது சீக்கிரமே நெருங்காமல் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். இவை தவிர சில பெண்களுக்கு  பரம்பரையாக புரோட்டீன் சி குறைபாடு பிரச்னை இருக்கலாம்.

அதன் காரணமாகவும் ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, இதய நோய்கள் பாதிக்கும் வாய்ப்பு இள வயதிலேயே அதிகரிக்கலாம். அதையும்  முறையான மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறிந்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
எந்த வேலையும் செய்யாமல், உடலுக்கு உழைப்பே இல்லாமல் சோம்பேறியாகக் காலம் தள்ளுகிற பெண்களுக்கும் இதய நோய்கள் வரும் அபாயம்  அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

மிஸ் பர்ஃபெக்டா நீங்கள்?

சில பெண்களுக்கு எங்கேயும், எப்போதும், எல்லாம் மிகச் சரியாக இருக்க வேண்டும். 5 நிமிடங்கள் தாமதமானாலும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.  சின்னச் சின்ன தவறுகள்கூட அவர்களுக்கு உச்சக்கட்ட டென்ஷனை கொடுக்கும். ‘எனக்கு எல்லாம் சரியா இல்லைனா பிடிக்காது. பர்ஃபெக்ஷன்  முக்கியம்’ எனப் பெருமையாக சொல்லிக் கொண்டாலும், இந்த குணாதிசயம் உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இப்படிப்பட்ட குணம்  கொண்டவர்களை ‘டைப் ஏ பர்சனாலிட்டி’ என்கிறோம். இவர்களுக்கு உண்டாகிற டென்ஷனும் படபடப்பும் இதய நோய்களுக்கு வழி வகுக்கலாம்...  ஜாக்கிரதை!

ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை

பிறந்த குழந்தையிலிருந்து, ஓய்வு பெற்ற முதியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் இருக்கிறது. குறிப்பாக  ஐ.டி. துறையிலும், சாஃப்ட்வேர் துறையிலும் வேலை பார்க்கிற பெண்களுக்கு இது மிக அதிகம். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் புராஜெக்ட்டுகளை  முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம், கண்ட நேரத்து உணவுப் பழக்கம், கொழுப்பும் கலோரியும் அதிகமான உணவுகள், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை என  எல்லாமே ஆரோக்கியக் கேட்டுக்கான விஷயங்கள். அதீத ஸ்ட்ரெஸ் காரணமாகவும் இதயம் பாதிக்கப்படலாம்.

தவிர்க்கவும் தப்பிக்கவும்...

குடும்பப் பின்னணியில் இதய நோய்கள் இருப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், பருமன், அதிக ரத்த அழுத்தம் உள்ள பெண்கள் எல்லாம் 35 வயதுக்குப்  பிறகு வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலானவர்களுக்கு காலம் கடந்து மாஸ்டர்  ஹெல்த் செக்கப் செய்கிற போதுதான், நீரிழிவு இருப்பது கூட முதல் முறை தெரிய வருகிறது. வயதானவர்களுக்கு நெஞ்சு வலி இல்லாமல்கூட  அமைதியாக மாரடைப்பு வரலாம். அதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல.

எக்கோ கார்டியோகிராம், டிரெட்மில் டெஸ்ட் போன்றவற்றை செய்வதன் மூலம் ஏற்கனவே மாரடைப்பு வந்திருக்கிறதா, வரும் வாய்ப்புள்ளதா என்கிற  தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். மெனோபாஸ் வந்து விட்ட பெண்கள் கிட்டத்தட்ட ஆண்களுக்குச் சமம்தான். அதுவரை அவர்களைப்  பாதுகாத்த ஹார்மோன்கள் அதன்பிறகு இல்லாமல் போவதால் இதய நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம். எனவே முறையான மருத்துவப்  பரிசோதனையும், இதயத்துக்கான சோதனையும் மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வாரத்துக்கு 150 நிமிட நடைப் பயிற்சி அவசியமாகிறது. நடந்து விட்டு வந்தாலே, உடல் லேசான மாதிரியும், ஆரோக்கியமாக இருக்கிற உணர்வும் நிச்சயம் வரும்.

ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். பொரித்த உணவுகள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், ஊறுகாய்  போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பழக்கம் இருந்தால் தவிர்க்கப்பட வேண்டும். புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்திலிருந்து மீள,  மனதை லேசாக்கும் பயிற்சிகளை, மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நொறுங்குகிறதா பெண் இதயம்? Empty Re: நொறுங்குகிறதா பெண் இதயம்?

Post by செந்தில் Thu Jun 19, 2014 6:57 pm

பயன்மிக்க விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நொறுங்குகிறதா பெண் இதயம்? Empty Re: நொறுங்குகிறதா பெண் இதயம்?

Post by mohaideen Fri Jun 20, 2014 2:02 pm

பெண்களுக்கான தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நொறுங்குகிறதா பெண் இதயம்? Empty Re: நொறுங்குகிறதா பெண் இதயம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum