தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ட்வின்ஸ்

View previous topic View next topic Go down

ட்வின்ஸ் Empty ட்வின்ஸ்

Post by நாஞ்சில் குமார் Tue Jun 17, 2014 9:25 pm

[You must be registered and logged in to see this image.]
 

‘ட்வின்ஸ்... கடவுள் தன் ஸ்டைலில் அறிவிக்கிற ஒன் பிளஸ் ஒன் ஆஃபர்!’ எங்கேயோ படித்த ஞாபகம்.  உண்மைதான்... உயிரற்ற பொருட்களுக்கு  ஒன் பிளஸ் ஒன் ஆஃபர் கிடைக்கிறபோதே உற்சாகமாகிவிடுகிறது நமது அற்ப மனது. ஒரு உயிரை எதிர்பார்த்து ஏங்கியிருக்கிற தருணத்தில்,  இன்னொன்றும் சேர்ந்து கிடைத்தால்? அப்போது ஏற்படுகிற உணர்வு, இரட்டைக் கருவைச் சுமந்த பெண்களுக்கு மட்டுமே உரித்தான ஆனந்த  அனுபவம். அப்படியொரு ஆனந்தத்தை என் வாழ்வில் நானும் அனுபவித்திருக்கிறேன். யெஸ்... நானும் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தவள்!

இன்பம், துன்பம்... அமைதி, குழப்பம்... தூக்கம், விழிப்பு... தயவு, தவிப்பு... இன்னும் இப்படி நேரெதிரான அத்தனை உணர்வுகளையும் ஒரே நேரத்தில்  அனுபவித்தால் எப்படியிருக்கும்? அதெப்படி சாத்தியம்? ஒரு நேரத்தில் ஒன்றுதானே  சாத்தியம் என்கிறீர்களா? இரட்டைக் குழந்தைகளைப்  பெற்றெடுத்த அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். இன்பமும் துன்பமும் சேர்ந்து மனம் கனத்த கணங்களையும் அமைதியும் ஆர்ப்பரிப்புமாக மனது  பரிதவித்த நொடிகளையும் தூக்கம் பாதி, விழிப்பு பாதியாக ஏங்கித் தவித்த பகல், இரவு
களையும் பற்றி ஆயிரம் அனுபவங்களைப் பகிர்வார்கள்.

கருவில் சுமக்கிற உயிர் மட்டும் இரண்டல்ல... காலம் முழுக்க அனுபவிக்கப் போகிற உணர்வுகளும் என் போன்ற அம்மாக்களுக்கு எப்போதுமே  இரண்டிரண்டுதான். இரண்டு குட்டி இளவரசர்களை பெற்றெடுத்தவள் என்கிற முறையில் எனக்கு எப்போதுமே கர்வம் உண்டு. இரட்டையரின் அம்மா  என அடையாளப்படுத்திக் கொள்வதிலும் அளவு கடந்த பெருமிதமும் கூட. 14 வருடங்கள் கடந்து விட்டன. கர்ப்பம் உறுதியான அந்தக் கணத்தைவிட  கருவாகி இருக்கும் சிசு ஒன்றல்ல, இரண்டு எனத் தெரிந்த அந்த நொடி சிலிர்ப்பானது! எங்கள் குடும்பத்தின் முதல் இரட்டையரைப் பெற்றெடுக்கப்  போகும் நினைப்பில் முதல் 4 மாதங்கள் பதற்றமும் பயமுமாகவே தொடர்ந்தன.  

5வது மாதத் தொடக்கம்... ஆச்சரியத்தின் தொடக்கமும்! வயிற்றுக்குள் யாரோ கிச்சுக்கிச்சு மூட்டுகிற மாதிரி ஒரு உணர்வு. வலது பக்க கிச்சுக்கிச்சு  அடங்குவதற்குள், இடது பக்கத்திலிருந்து இன்னொன்று... என்னுள் வளர்ந்து கொண்டிருந்த இரட்டைக் குழந்தைகளின் முதல் உதை அது என்று  தெரிந்த அந்தக் கணம் இப்போதும் மறக்கவில்லை  எனக்கு. வயிற்றுக்குள் குழந்தை உதைப்பது, பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி சுகமாக இருக்கும் எனக் கேள்விப்பட்டிருந்த நான், அதை அந்த நிமிடம் நிஜத்தில் உணர்ந்தேன்.

அப்போதிலிருந்தே என்னைப் பீடித்திருந்த பயமும் பதற்றமும் விலகி, துணைக்கு இருவர் இருக்கிற தைரியம் வந்து ஒட்டிக் கொண்டது.  எப்போதெல்லாம் லேசான சோர்வு எட்டிப் பார்க்குமோ அப்போதெல்லாம் என் செல்லங்களைத் தொட்டுப் பார்ப்பேன். உடனே துள்ளலும் துடிப்புமாக  உள்ளே ஓடி விளையாடத் தொடங்கிவிடுவார்கள். என்னையும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இப்படி, அனுபவித்த அந்த 9 மாதப் பயணம் ஒருநாள்  இனிதே நிறைவுற்றது. நான் பெற்றெடுத்த குழந்தைகளில் ஒன்று அச்சு அசல் அம்மாவின் சாயலில்... இன்னொன்று... அப்படியே அப்பாவின் பிரதியாக.

இருவரையும் கைகளில் ஏந்திய அந்த நிமிடம், நான்தான் உலகின் மிக மகிழ்ச்சியான மனுஷி என இந்த உலகமே அதிருமளவுக்குக் கத்த வேண்டும்  போலிருந்தது. தாயான நாள் தொடங்கி, இப்போதுவரை, ‘உங்களுக்கு எத்தனை பசங்க?’ என யாராவது கேட்டால், இரண்டு என சாதாரணமாக பதில்  சொல்ல வராது எனக்கு... ‘ட்வின்ஸ்’ என்பேன் பெருமையாக. ‘அப்படியா... ரெண்டும் ஆணா, பெண்ணா? ஒரே மாதிரி இருப்பாங்களா...’ என  அடுத்தடுத்து வருகிற ஆச்சரிய கேள்விகளுக்கு எத்தனை முறை பதில் சொன்னாலும் எனக்கு அலுக்கவே அலுக்காது!

ஆங்கிலத்தில் ‘sometimes miracles come in pairs’  என்று சொல்வார்கள். அதாவது, சில நேரங்களில் அற்புதங்கள் ஜோடியாக வரும். ‘double  trouble’ என்றொரு வார்த்தையும் உண்டு. இந்த இரண்டுமே இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்களுக்காகவே சொல்லப்பட்டவையோ!  இரட்டையரைப் பெற்று வளர்ப்பதில், இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு எப்படி குறைவில்லையோ, அதே அளவு சிரமங்களுக்கும் சோதனைகளுக்கும்  சவால்களுக்கும் கூட பஞ்சமே இருக்காது.

கருவைச் சுமப்பதிலிருந்தே ஆரம்பமாகிவிடும் அந்த சிரமங்கள். ஒன்றுக்கான இடத்தில் இரண்டை சுமப்பது முதல் சவால். வலி, வேதனை என  எல்லாமே இரண்டு மடங்காகும். ஆறேழு மாதங்களிலேயே அவசரமாக குழந்தைகள் பிறந்து விடமாட்டார்களா? பாரத்தை இறக்கி வைத்துவிட  மாட்டோமா என மூச்சுத் திணறும். நிற்பது, நடப்பது, உட்கார்வது, தூங்குவது என எல்லாமே இம்சையாகும்.‘கர்ப்பக் காலத்தில் எல்லாப் பெண்களும்   சந்திக்கிற பிரச்னைகள்தானே... பிரசவமானால் சரியாகி விடும்’ என்பது இரட்டைக் குழந்தைகள் விஷயத்தில் பொருந்தாது. பிரசவத்துக்குப் பிறகுதான்  பெரிய சவாலே காத்திருக்கும்.

இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் சாப்பிடாது; தூங்காது. ஒன்று தூங்க ஆரம்பித்த பிறகு இன்னொன்று விழித்துக் கொண்டு வீறிடும். குழந்தைகள்  தூங்கும் நேரத்தில்தான் புதுத் தாயானவள் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பார்கள். ட்வின்ஸ் விஷயத்தில் அதற்கு வாய்ப்பே கிடைக்காது. இரவா,  பகலா என்பதுகூடத் தெரியாமல் மணித் துளிகள் ஓடும். மாறி மாறி பாலுக்கு அழும் பிள்ளைகளின் பசியாற்றியே களைத்துப் போவாள் தாய்.

உதவிக்கு எத்தனை பேர் இருந்தாலும் போதாது. கண்கள் தூக்கம் கேட்டுக் கெஞ்சும். அரிதாக இரண்டு குழந்தைகளும் சேர்ந்து உறங்கும் அந்தச் சில  நிமிடங்களில் தனது வயிற்றுத் தேவையைப் பார்ப்பதா, தூக்கத்துக்கு ஒதுக்குவதா, வெளி உலகத்தை எட்டிப் பார்க்க உபயோகிப்பதா எனக் குழம்பிப்  போவாள் தாய். எந்த நிமிடம் குழந்தைகள் விழித்துக் கொள்வார்களோ என்கிற அந்தப் பதற்றம் அவளின் தவிப்பைக் கூட்டும்.  இதுவும் கடந்து போகும்  என்பதுதான் இவர்களுக்கான விதி. நாட்கள் நகர, நகர மாற்றங்களும் ஒருபுறம் நடந்தவண்ணம் இருக்கும். 3, 6, 8, 10 என ஒவ்வொரு மாதமும்  ஒவ்வொருவிதமான முன்னேற்றம் தெரியும்.

தாய்க்கும் குழந்தைகளுக்கும் இடையிலான இந்தப் போராட்ட காலம் முடிய குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். ‘அட... அவ்வளவுதானா’ என  நினைக்க வேண்டாம். ஒரு வயதுக்குப் பிறகு வேறு சிரமங்கள்... சவால்கள்... பிரச்னைகள் என அது ஒரு தொடர்கதை. ஆனாலும், சுவாரஸ்யங்கள்  நிறைந்த தொடர்கதை! ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான இரண்டு பிள்ளைகளை வளர்க்கிற அந்த அனுபவம் அலாதியானது. உணவு கொடுப்பதில்  தொடங்கி, உடை வாங்குவது வரை ஒன்று போலப் பார்த்துப் பார்த்துச் செய்கிற அந்த அனுபவத்தில், சின்னச் சின்ன சந்தோஷங்கள் மட்டுமல்ல...  நிறைய நிறைய அதிர்ச்சிகளும் காத்திருக்கும்.  

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ட்வின்ஸ் Empty Re: ட்வின்ஸ்

Post by முரளிராஜா Wed Jun 18, 2014 11:50 am

நன்றி நாஞ்சில் குமார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum