Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கண்றாவி காதல்கள்
Page 1 of 1 • Share
கண்றாவி காதல்கள்
தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம்.
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்!
பள்ளிக்குச் சென்ற தனது மகளைக் காணவில்லை என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை ஒருவர் புகார் தந்தார். 'பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது, அவள் இன்று பள்ளிக்கு வரவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்’ என்று அவர் சொல்ல... உடனடியாக போலீஸார் விசாரணையில் இறங்கினர். அந்தப் பெண் படிக்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் என்று விசாரித்தும் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பெண் பயன்படுத்திய செல்போனில் அதிகமாகப் பேசிய ஒருவன், அந்தப் பெண் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் பின்தொடர்ந்த ஒருவன், அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவன் என மூன்று நபர்களை அள்ளிக்கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களும், அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்தடுத்து மற்ற இரண்டு பையன்களுக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து போன் வர... போலீஸார் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமும் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் பேசியிருக்கிறாள் அந்தப் பெண். ஆனால் யாரிடமும், தான் இருக்கும் இடத்தைச் சொல்லவே இல்லை. இந்தப் பேச்சுக்களைக் கேட்ட அனைவரும் தலை கிறுகிறுத்துதான் போனார்கள். பிறகு, அந்தப் பெண் பேசிய செல்போன் டவரை கண்காணிப்பு செய்தபோது, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து அந்தப் பெண் பேசியது தெரிய வந்தது.
திருப்பூர் போலீஸாருக்கு அந்தப் பெண்ணின் புகைப்படத்தோடு தகவல் தரப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் அந்தப் பெண்ணை அலேக்காக தூக்கிவிட்டனர். தேனிக்கு கொண்டுவந்த பிறகு அந்தப் பெண்ணிடம், ''ஏன்மா ஒரே நேரத்துல மூணு பேர லவ் பண்ணிருக்க. அதுவும் ஒரே நேரத்துல வரச் சொல்லியிருக்க?'' என்று போலீஸார் கேட்க... ''லவ் ஃபெயிலியர்னா என்னால தாங்கிக்க முடியாது. ஒருத்தன் விட்டா இன்னொருத்தன் இருப்பான்ல. எப்படியும் மூணு பேரும் ஒழுங்கா வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும், யார் முதல்ல வர்றாங்களோ அவனோட கிளம்பியிருப்பேன்'' என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறாள்.
அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தது போலீஸ்.

அந்தப் பெண்ணின் தந்தை, 'சார்... நம்ப வேண்டாம். இவனுகதான் என் மகளை எங்கோ கடத்தி வைத்துக்கொண்டு தெரியாது என்று சொல்கிறார்கள்’ என்று அழவே... போலீஸார் அவர்களை நையப் புடைத்தனர். அப்போது, மூவரில் ஒருவனுடைய செல்போன் ஒலித்தது. 'சார்... இது என் பொண்ணு நம்பர்’ என்று அலறுகிறார் அந்தப் பெண்ணின் தந்தை. அவனைப் பேசச் சொன்னார்கள் போலீஸார். அந்தப் பெண், 'எங்கடா இருக்க? உன்னை நம்பி வீட்டை விட்டு வந்துட்டேன். நீ உடனே சென்னை கிளம்பி வந்துடுடா. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழலாம். எனக்கு வீட்டில் நிம்மதி இல்லை’ என்று சொன்னாள். 'இப்போ நீ எங்கே இருக்க?’ என்று இவன் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல், 'நீ உடனே கிளம்பி சென்னை வா!’ என்று சொல்லிவிட்டு கட் செய்துவிட்டாள்.
அடுத்தடுத்து மற்ற இரண்டு பையன்களுக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து போன் வர... போலீஸார் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமும் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் பேசியிருக்கிறாள் அந்தப் பெண். ஆனால் யாரிடமும், தான் இருக்கும் இடத்தைச் சொல்லவே இல்லை. இந்தப் பேச்சுக்களைக் கேட்ட அனைவரும் தலை கிறுகிறுத்துதான் போனார்கள். பிறகு, அந்தப் பெண் பேசிய செல்போன் டவரை கண்காணிப்பு செய்தபோது, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து அந்தப் பெண் பேசியது தெரிய வந்தது.
திருப்பூர் போலீஸாருக்கு அந்தப் பெண்ணின் புகைப்படத்தோடு தகவல் தரப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் அந்தப் பெண்ணை அலேக்காக தூக்கிவிட்டனர். தேனிக்கு கொண்டுவந்த பிறகு அந்தப் பெண்ணிடம், ''ஏன்மா ஒரே நேரத்துல மூணு பேர லவ் பண்ணிருக்க. அதுவும் ஒரே நேரத்துல வரச் சொல்லியிருக்க?'' என்று போலீஸார் கேட்க... ''லவ் ஃபெயிலியர்னா என்னால தாங்கிக்க முடியாது. ஒருத்தன் விட்டா இன்னொருத்தன் இருப்பான்ல. எப்படியும் மூணு பேரும் ஒழுங்கா வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும், யார் முதல்ல வர்றாங்களோ அவனோட கிளம்பியிருப்பேன்'' என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறாள்.
அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தது போலீஸ்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கண்றாவி காதல்கள்
எனக்கு 19... உனக்கு 22...
'கல்லூரியில் படிக்கும் என் மகளை கடந்த 10 நாட்களாகக் காணவில்லை!’ என்ற புகாரோடு வந்தார் ஒரு தந்தை. அந்தப் பெண்ணின் செல்போன் இன்கம்மிங் - அவுட்கோயிங் விவரங்களை அலசியதில், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குப் பேசியது தெரிய வந்தது. அந்த எண்ணுக்கு உரிய பையனோடு அந்தப் பெண் ஓடிவிட்டதும் தெரியவந்தது. லேட்டஸ்டாக அவர்கள் செல்போனில் தொடர்புகொண்ட ஆட்களை விசாரிக்க, கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு என்ற இடத்தில் ஒரு டீ எஸ்டேட்டில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது. அவர்களைத் தூக்கி வந்து போலீஸார் விசாரித்தபோது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
''அந்தப் பெண்ணுக்கு 22 வயசு. அந்தப் பையனுக்கு 19 வயசு. அவன் முதலாம் ஆண்டு படிக்கும்போது, இந்தப் பெண் மூன்றாம் ஆண்டு. இருவரும் வேறு வேறு கல்லூரி. ஒரு வருடத்துக்கு முன் செல்போனில் ஆரம்பித்த காதல் ஃபேஸ்புக் மூலம் தொடர... இருவரும் ஊரைவிட்டு ஓடியிருக்கின்றனர். கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 'சினிமாக்களில் வருவதுபோல முதலிரவு வேண்டும்’ என்று அந்தப் பெண் ஆசையாகச் சொல்ல... கட்டிலில் பூ தூவி அலங்காரம் செய்து, பழம், பால் என்று நண்பர்களின் ஏற்பாட்டில் கொண்டாடி உள்ளனர். இப்படியே ஒரு வாரம் சந்தோஷமாகக் கழிந்தது'' என்று சொல்லியிருக்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் வந்த பிறகு, 'எங்கள் பெண் வந்தால் போதும்’ என்று பெண் வீட்டில் சொல்ல, 'பிரச்னை வராமல் என்ன செய்தாலும் ஓகே’ என்று பையன் வீட்டில் சொல்ல... குறுக்கே புகுந்திருக்கிறார் அந்தப் பெண். ''எனக்கு இவன் வேண்டாம். நான் என் அம்மா அப்பாவோட போறேன். என் செலவுக்குத் தேவையான பணத்தை இவனால சம்பாதிக்க முடியல. எல்லாத்தையும் நண்பர்கள்கிட்ட எதிர்பார்க்குறான். ஆனா, காதலிக்கும்போது அப்படி இல்ல. சினிமா, ஹோட்டல்னு நல்லா செலவு செய்வான்'' என்று சொல்லிவிட்டு, பெற்றோருடன் புறப்படத் தயாராகி இருக்கிறாள். அந்தப் பையன் போலீஸ் ஸ்டேஷனிலேயே, கீழே படுத்து உருண்டு புரண்டு அழ... 'விடுடா தம்பி’ எண்று அந்தப் பையனைத் தேற்றி ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.

இவள் வேற மாதிரி!
'9-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவியைக் காணவில்லை’ என்று அந்தப் பள்ளி நிர்வாகமே புகார் கொடுக்க... செல்போன் டவர் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கியது போலீஸ். திருப்பூர், கோவை ஏரியாக்களில் இருப்பதாக டவர் காட்டிக்கொடுக்க... அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த நபரையும் போலீஸார் தூக்கிக்கொண்டு வந்தனர். விசாரணையில்தான், அந்தப் பெண்ணோடு இருந்தது அவரது ஆசிரியர் என்று தெரிய வந்தது.
அவரை நையப் புடைத்து விசாரித்தபோது, ''அந்த மாணவிதான் என்னை மிரட்டி செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அவர் அழைக்கும்போது போகவில்லை என்றால், போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டுகிறார்'' என்று பரிதாபமாகச் சொல்ல... ஆடிப்போய்விட்டனர் போலீஸார். இதுபற்றி விசாரணையில் இறங்க... அந்தப் பெண் செல்போன் மூலம் 30-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பேசிவருவது தெரிய வந்துள்ளது. இவருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.
இந்தச் சம்பவங்களை எல்லாம் உற்று கவனிக்கும் சமூக ஆர்வலர்களோ, ''குழந்தை வளர்ப்பில் குறைபாடு உள்ளதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். என்ன செய்கிறோம் என்று தெரியாத இரண்டாங்கெட்ட வயசு பதின்ம வயது. அப்போது பெற்றோர் கண்காணிப்பில் குழந்தைகள் இல்லாவிட்டால், இதுபோன்று வழிதவறி போய்விட வாய்ப்பு உள்ளது. படிக்கும்போது பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும்போது, நல்ல விஷயங்களைவிட கெட்ட விஷயங்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். இப்போது நடைபெற்ற அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் செல்போன் இருப்பதைப் பார்த்தாலே இது புரியும்'' என்கிறார்கள்.
பாசத்தோடு கண்டிப்பும் தேவை!
- சண்.சரவணக்குமார்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum