தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள்

View previous topic View next topic Go down

கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள் Empty கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள்

Post by நாஞ்சில் குமார் Tue Oct 21, 2014 10:23 pm



மாதவிலக்காவது, அதைத் தொடர்ந்து திருமணமாகி குழந்தை பெறுவது என இந்த இரண்டுமே கர்ப்பப்பையின் மாபெரும் வேலைகள் என்பது பெரும்பாலான பெண்களின் நினைப்பு.அதனால்தான் முன்பெல்லாம் கர்ப்பப்பையில் சின்ன பிரச்னை என்றால்கூட சர்வசாதாரணமாக அறுவை சிகிச்சையில் அதை வெட்டி எறிந்து விட்டு வேறு வேலையைப் பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் இருந்தது. விஞ்ஞானமும், மருத்துவமும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் கர்ப்பப்பையை அகற்றாமலேயே பிரச்னைகளை மட்டும் குணப்படுத்த முடியும்.

கர்ப்பப் பையில் வரக்கூடிய பிரச்னைகளுக்கான அதை நீக்காமல் செய்யக்கூடிய தீர்வுகள் பற்றியும், தவிர்க்க முடியாமல் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்கிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

‘‘கர்ப்பப்பையில் உண்டாகிற அனேகப் பிரச்னைகளை இன்று கர்ப்பப்பையை அகற்றாமலேயே சரிசெய்ய முடியும். உதாரணத்துக்கு ஃபைப்ராயிடு கட்டி என்றால் அதை மட்டும் நீக்கும் சிகிச்சைகள் வந்து விட்டன. அதீத ரத்தப் போக்கு தொடர்பான பிரச்னைகளுக்கும் பிரத்யேக ஊசிகள், மெரீனா என்கிற கருத்தடைச் சாதனம் போன்றவை உதவும். ஹார்மோன் கோளாறு காரணமாக உண்டாகிற அளவுக்கதிக ரத்தப் போக்கை சரி செய்ய, கர்ப்பப் பையின் உள்ளே உள்ள சவ்வுப் பகுதியை பொசுக்கி, அதை மெலிதாக்கும் எண்டோமெட்ரியல் அப்லேஷன் சிகிச்சை பலனளிக்கும். கர்ப்பப் பையில் கட்டியோ, சதையோ இருந்தாலும் ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலம் சரி செய்து விட முடியும்.

இவற்றையெல்லாம் மீறி, கர்ப்பப்பையில் வேறு ஏதேனும் பெரிய பிரச்னைகள் இருந்து, கர்ப்பப் பையை நீக்குவது மட்டுமே தீர்வு என்கிற நிலையில், லேப்ராஸ்கோப்பி முறையில் அதை நீக்குவதுதான் பாதுகாப்பானது. ஓப்பன் சர்ஜரி என்கிற வயிற்றைக் கிழித்துச் செய்கிற அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறை யிலும் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று டிஎல்ஹெச் எனப்படுகிற டோட்டல் லேப்ராஸ்கோப்பிக் ஹிஸ்ட்டரெக்டமி. இதில் முழுக்க முழுக்க லேப்ராஸ்கோப்பிக் முறையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படும். இன்னொன்று எல்ஏவிஹெச் எனப்படுகிற லேப்ராஸ்கோப்பிக் அசிஸ்ட்டெட் வெஜைனல் ஹிஸ்ட்டரெக்டமி.

இதில் பாதி அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோப்பி முறையிலும், மீதி பிறப்புறுப்பின் வழியேவும் செய்யப்படும். முதல் வகையில் இடுப்பெலும்புத் தசைகள் பாதிக்கப்படாது. பின்னாளில் ஏற்படுகிற சிறுநீர் கசிவு, சிறுநீரை அடக்க முடியாத நிலை, அடி இறக்கம் போன்றவை இதில் இருக்காது. இரண்டாவது வகையில் இந்தப் பிரச்னைகளைத் தவிர்ப்பது சிரமம்.கர்ப்பப்பையை அகற்றச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தினால், அதற்கு முன் உங்கள் சினைப்பையை ஸ்கேன் செய்து பார்த்து, அவற்றின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டும். சினைப்பையைப் பாதுகாப்பது உங்கள் உரிமை. கர்ப்பப்பையை அகற்றும் போது சினைப்பைகளையும் சேர்த்து அகற்றி விடுவார்கள் சிலர்.

பெண்மைக்குக் காரணமான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை சுரப்பது தவிரவும் சினைப்பைக்கு வேறு வேலைகளும் உண்டு. ஆண்ட்ரோஜென் எனப்படுகிற ஹார்மோனும் அங்குதான் சுரக்கப்படுகிறது. அதுதான் மெனோபாஸுக்கு பிறகு பெண்களை மன அழுத்த மின்றி, நல்ல மனநிலையில் வைத்திருக்கவும், தாம்பத்ய உறவில் நாட்டம் குறையாமலிருக்கவும் உதவுகிறது. இதையெல்லாம் மீறி, குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் சினைப்பை புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்துப் பெண்கள் சிஏ 125 என்கிற ரத்தப் பரிசோதனையைச் செய்து பார்த்து, அதை உறுதி செய்து கொள்ளலாம். சினைப்பைகளைப் போலவே சினைக் குழாய்களையும் அகற்றக் கூடாது. சினைக்குழாய்களை நீக்கினால், சினைப் பைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, அதுவும் பெரிய பாதிப்பைத் தரும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள் Empty Re: கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள்

Post by முரளிராஜா Sat Oct 25, 2014 9:47 am

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள் Empty Re: கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள்

Post by mohaideen Sun Oct 26, 2014 10:54 am

பெண்கள் அறியவேண்டிய தகவல்கள் நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள் Empty Re: கர்ப்பப்பையில் வரக் கூடிய பிரச்னைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum