Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை: டில்லி - ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம்
Page 1 of 1 • Share
மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை: டில்லி - ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம்
புதுடில்லி: நாட்டின் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம், நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், டில்லியிலிருந்து, 99 நிமிடத்தில், ஆக்ரா நகர் சென்றடைந்தது. இது, ரயில்வே துறையில், மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.
இதுவரை, டில்லி - போபால் இடையே இயக்கப்படும், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தான், அதிவேக ரயிலாக கருதப்பட்டது. இந்த ரயில், மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு அதிவேக ரயிலின் சோதனை ஓட்டத்தை, இந்திய ரயில்வே துறை, நேற்று வெற்றிகரமாக நடத்தியது. 10 பெட்டிகளுடன், நேற்று காலை, 11:15 மணிக்கு, டில்லியிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட போது, 99 நிமிடங்களில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகர் சென்றடைந்தது. டில்லி - ஆக்ரா இடையேயான, இந்த அதிவேக ரயிலின், வர்த்தக ரீதியான இயக்கம், ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என, ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 'இந்த அதிவேக ரயில், வர்த்தக ரீதியாக இயக்கப்படும் போது, டில்லியிலிருந்து புறப்பட்டு, 90 நிமிடங்களில், ஆக்ரா நகர் சென்றடையும்' என, டில்லி ரயில்வே டிவிஷனின், பிராந்திய துணை மேலாளர், அனுராக் சச்சான் கூறினார். தற்போது, 150 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், டில்லியில் இருந்து ஆக்ரா சென்றடைய, 120 நிமிடங்களாகிறது. நவம்பர் முதல், அதிவேக ரயில் இயக்கப்படும் போது, இதைவிட அரை மணி நேரம் குறைவாக, 90 நிமிடங்களில் சென்றடையும்.
அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் தொடர்பாக, அனுராக் சச்சான் கூறியதாவது: டில்லி - ஆக்ரா இடையேயான, அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம், இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. நவம்பரில், வர்த்தக ரீதியாக ரயில் ஓடத் துவங்கும். டில்லி - ஆக்ரா ரயில் பாதையில், 16 இடங்களில், வேகத்தை குறைத்துச் செல்ல வேண்டிய இடங்கள் மற்றும் வளைவுகள் இருந்தன. அவையெல்லாம், ரயில் அதிவேகத்தில் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
அடுத்தது என்ன?
* டில்லி - ஆக்ரா இடையேயான, அதிவேக ரயில் சேவை துவங்கி விட்டால், அடுத்த கட்டமாக, டில்லி - கான்பூர், டில்லி - சண்டிகர் வழித்தடத்தில், இதுபோன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.
* டில்லியிலிருந்து ஆக்ரா நகருக்கு, யமுனா விரைவு நெடுஞ்சாலையில், வாகனத்தில் சென்றால், இரண்டு மணி நேரமாகும். நவம்பர் முதல் இயக்க உள்ள, அதிவேக ரயிலில் சென்றால், ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம்.
* டில்லி - ஆக்ரா அதிவேக ரயில் செயல்பாட்டிற்கு வந்தால், அது, தாஜ்மகாலை பார்க்கச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
* அதிவேக ரயிலை இயக்குவதற்கு ஏற்ற வகையில், ரயில் பாதையை சீரமைக்க, ரயில்வே துறை தன் சொந்த நிதியை செலவழித்து உள்ளது. அனேகமாக, இந்தப் பணிக்கு, 15 கோடி செலவாகும்.
* ரயிலின் வேகம் குறையாமல் இருக்கவும், தடைகள் ஏற்படாமல் தடுக்கவும், டில்லி - ஆக்ரா இடையேயான ரயில் பாதையில், 27 கி.மீ., தூரத்திற்கு, ரயில் பாதையை ஒட்டி, வேலி அமைக்கப்படுகிறது.
* சீனாவில், பீஜிங் - ஷாங்காய் நகர் இடையே இயக்கப்படும் புல்லட் ரயில், மணிக்கு, சராசரியாக, 250 கி.மீ., வேகத்திலும், அதிகபட்சமாக, 430 கி.மீ., வேகத்திலும் செல்லக்கூடியது.
புல்லட் ரயில் எப்போது வரும்?
உலகிலேயே, இந்தியன் ரயில்வே பெரிய அமைப்பு என்றாலும், மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில், ரயில்கள் செல்லக்கூடிய அளவிலான, ரயில் பாதைகள் எதுவும் இங்கு அமைக்கப்படவில்லை. இதுபோன்ற ரயில் பாதைகள் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கூட, 'அதிவேக ரயில்கள் மற்றும் புல்லட் ரயில்கள் இயக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, இப்போதைய, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அப்படி அதிவேக ரயில்கள் இயக்கப்படுவதற்கான ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, அவை செயல்பாட்டிற்கு வரவேண்டும் எனில், 2030ம் ஆண்டு வரை ஆகலாம். இன்னும் நீடித்தால், 2035 வரை ஆகலாம். ஏனெனில், அதிவேக ரயில்கள் அல்லது புல்லட் ரயில்களுக்கு என, பிரத்யேக ரயில் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில், 150 கி.மீ., வேகத்திலிருந்து, 160 கி.மீ., வேகத்தை மட்டுமே எட்ட முடிந்துள்ளது. அதாவது, 10 கி.மீ., வேகம் மட்டுமே அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால், நேற்றைய சோதனை ஓட்டத்தை, 'செமி - புல்லட் ரயில் அல்லது செமி அதிவேக ரயில்' என, ஊடகங்கள் விமர்சித்து உள்ளன.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை: டில்லி - ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம்
ம்... நல்லது நடக்குது போல...
Re: மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை: டில்லி - ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம்
நடக்கட்டும்,நடக்கட்டும்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இந்தியாவில் 180 கி.மீ. வேகத்தில் ஸ்பெயின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
» மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம்
» கேன்சரை கண்டுபிடிக்க இதோ பேப்பர் சோதனை! இந்திய விஞ்ஞானி சாதனை...!
» ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 8 போர் விமானங்களை தரையிறக்கியது விமானப்படை
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
» மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம்
» கேன்சரை கண்டுபிடிக்க இதோ பேப்பர் சோதனை! இந்திய விஞ்ஞானி சாதனை...!
» ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 8 போர் விமானங்களை தரையிறக்கியது விமானப்படை
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum