தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை!

View previous topic View next topic Go down

சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை! Empty சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை!

Post by ஸ்ரீராம் Sat Jul 26, 2014 9:48 am

சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை! 10501848_713499612052347_9019270473331238659_n

சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை!
கேதார கௌரி விரதத்தின் கதை -
சிக்கி
நாம் கடைபிடிக்கும் ஒவ்வொரு விரதத்திற்கும், அதற்கேற்ற பலனும் அதை சார்ந்த கதையும் இருக்கும்.
அவையே அவ்விரதத்தை அர்த்தமுள்ளதாக்கும்.
தீபாவளி அமாவாசையின் போது சில குடும்பங்களில் நோன்பு மேற்கொள்ளும் பழக்கும் உள்ளது.
அதை கேதார கௌரி பூஜை என்றழைப்பர்.
பொதுவாக இப்பூஜையின் பலனை பற்றி நாம் அறிந்திருப்போம்.
ஆனால் இப்பூஜை உருவான கதை ஒன்று உண்டு.
கைலாயத்தில் ஒரு நாள், பார்வதியும் பரமேஸ்வரரும் நவரத்தின ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
வழக்கம் போல் பிரம்மாவும், விஷ்ணுவும், முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவதைகளும் இவர்களை வலம்வந்து வணங்கி சென்றனர்.
அப்போது பிருங்கி முனிவர் மட்டும் பார்வதி தாயை விட்டு பரமேஸ்வரரை மட்டும் வணங்கி ஆனந்த கூத்தாடினார்.
அதை கண்டு பிருங்கி முனிவர் மீது சினங்கொண்ட பார்வதி தேவி, பரமேஸ்வரரை பார்த்து கோபத்துடன் நியாயம் கேட்க, நம் ஈஸ்வரரோ “பிருங்கி ரிஷி பாக்கியத்தை கோரினவனல்ல மோக்ஷத்தை கோரினவன்.
ஆகையால் என்னை மட்டும் நமஸ்கரித்தான்.” என்றார்.
“அப்படியானால் உன் சரீரத்தில் ஓடும் ரத்தமானது என்னாலான சக்தியின் வடிவமே.
ஆகையால் நான் அளித்த சக்தியை என்னிடம் தந்துவிட்டு உன் ஈசனை வணங்கிச் செல்” என்று சொல்லி அவளளித்த சக்தியை பிருங்கி முனிவரிடமிருந்து எடுத்துக்கொண்டாள் தாய்.
சக்தி போனதும் பிருங்கி முனிவர் சாய்ந்துவிட்டார்.
தன்னை பக்தன் முன் உதாசின படுத்தியதால் ஈசனிடமும் கோபம் கொண்டு பூலோகம் வந்து விட்டார் பார்வதி.
பூலோகத்தில் காய்ந்து அழகற்று கிடந்த ஒரு வனத்திலே வில்வ விருக்ஷத்தின் கீழ் வந்தமர்ந்தாள்.
அவள் வருகையின் பிறகு அந்த வனமே பச்சைபசெலென செழிப்பாக மாறியது.
பூக்கள் எங்கும் பூத்து குலுங்கியது.
அவ்வனத்திலே ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த கௌதம முனிவருக்கு இம்மாற்றத்தை கண்டு ஆச்சர்யம்.
காரணம் கண்டறிய வனத்தை சுற்றி வந்தார்.
அம்பாளின் தரிசனம் கண்டு மனமகிழ்ந்து அவளை நமஸ்கரித்து பூலோகம் வந்த காரணத்தை கண்டறிந்தார்.
நடந்தவற்றை பார்வதி தேவி கூற, “இப்படி சினங்கொண்டு சக்தி சிவனை பிரியலாமா, பக்தர்கள் எங்கள் நிலை தான் என்னாவது.” என்று கௌதம முனிவர் பதறினார்.
பின்பு அந்த ஆசரமத்திலே தேவிக்கு தேவையானவையை ஏற்பாடு செய்தார்.
சினம் தணிந்த பின்னர் தேவி கௌதம முனிவரிடம் தான் ஒரு விரதத்தை பூலோகத்தில் மேற்கொள்ள விரும்புவதாய் கூறினார்.
அதற்கு கௌதம முனிவர் “ ஜெகத்ரக்ஷகியே ! பூலோகத்தில் கேதாரேஸ்வரர் நோன்பென்று ஒன்று உண்டு.
ஆனால் இதுவரை யாரும் அதை அனுஷ்டிக்கவில்லை.
இவ்விரத முறையை உங்களுக்கு நான் சொல்லுகிறேன்,
அதை தாம் மேற்கொள்ளுங்கள்” என்று தொடங்கி அவ்விரத முறையை விவரித்தார்.
அவர் கூறிய படியே பார்வதிதேவியும் புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் தீபாவளி அமாவாசை வரை, இருபத்தொரு நாள், ஆலவிருக்ஷத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தினமும் சுத்த வஸ்திரம் அணிந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார்.
தினமும் உபவாசமிருந்து நைவேத்தியம் செய்து அவ்வதிரசத்தை உண்டு வந்தார்.
பார்வதிதேவியின் விரதத்திற்கு மகிழ்ந்த பரமேஸ்வரர், இருபத்தோராம் நாள், தேவகணங்கள் புடைசூழ ரிஷப வாகனத்தில் காட்சியளித்து, இடபாகத்தை பரமேஸ்வரிக்களித்து அர்த்தநாரீஸ்வராக கைலாயத்தில் எழுந்தருளினார்.
இவ்விரததின் மேன்மையை கண்ட தேவகன்னிகள் தாங்களும் இவ்விரதத்தை கடைபிடிக்க எண்ணி, கங்கைகரையில் அனுஷ்டித்தனர்.
அச்சமயம், புண்ணியவதி பாக்கியவதி என்ற அரசகுமாரிகள் இருவர் , தங்கள் தகப்பன் நாடு இழந்ததின் வினையாய் அங்கு வந்தனர்.
இவ்விரதத்தை பார்த்த அவர்கள் அதன் விவரம் அறிந்து தேவகன்னிகள் கொடுத்த நோன்பு கையிற்றை பெற்று வீட்டிற்கு போக, வீடே அடையாளந் தெரியாமல் மாடமாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வர்யமும் பெருகியிருந்ததை கண்டு ஆர்ச்சர்யமடைந்தனர்.
சில நாட்களில் இருவரும் மற்ற நாட்டு அரசர்களை மனம் புரிந்து ஏகபோக வாழ்கை வாழ்ந்து வந்தனர்.
சில காலம் கழித்து பாக்கியவதி தன் கையிலனிந்திருந்த நோன்பு கையிற்றை அவரைபந்தலின் மேல் போட்டுவிட்டு மறந்து போனாள்.
அதன் விளைவாக அவள் கணவன் நாட்டை இழந்தான். உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் மிகவும் வறுமையில் வாடினர்.
ஒரு நாள் , பாக்கியவதி தன் குமாரனை அழைத்து தன் அக்கா புன்னியவதியின் அரண்மனைக்கு சென்று தங்கள் நிலைமையை சொல்லி பொன்பொருள் வாங்கி வர சொன்னாள்.
அவள் குமாரனும் அவ்வாறே செய்ய, புண்ணியவதி கொடுத்தனுப்பியதை , குளக்கரையில் கருடன் தூக்கிச்சென்றது. மீண்டும் அவன் புண்ணியவதியிடம் சென்று நடந்ததை சொல்ல, அவள் மீண்டும் பொருள் கொடுத்து அனுப்பினாள்.
அதை எடுத்துக்கொண்டு வரும் வழியில் திருடர்கள் குமாரனை மிரட்டி பிடுங்கிச் சென்றனர்.
மீண்டும் அழுதவாறே அவன் புண்ணியவதியிடம் செல்ல, அவள் இதில் ஏதோ தவறிருப்பதாய் உணர்ந்து, “உன் தாய் கேதாரேஸ்வரர் நோன்பை அனுஷ்டித்து வருகிறார்களா இல்லையா?” என்றாள் குமாரனிடம்.
அதற்கு அவன் , தன் தாய் அதை விட்டு பல வருடம் ஆகிவிட்டது என்று சொல்ல, உடனே புண்ணியவதி குமாரனை ஐப்பசி மாதம் வரை தங்க வைத்து, அப்பூஜையை முறையே அனுஷ்டித்து, நோன்பு கையிற்றையும் அதனுடன் பொன்பொருளையும் கொடுத்தனுப்பினாள்.
தவறாமல் இப்பூஜையை அனுஷ்டிக்கும்படி அறிவுறுத்தினாள். குமாரனும் சென்று அவன் தாயிடம் நடந்ததை சொல்ல, பாக்கியவதி தவறை உணர்ந்து நோன்பு கையிற்றை அணிந்து கொண்டாள்.
சிறிது நாளில் அவள் கணவனிடமே அரசாங்கம் திரும்ப வந்துவிட்டது. பிறகு முன்போலவே பாக்கியவதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் கிடைத்தது.
ஆதலால் இப்பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனபூர்வமாக விரும்பிச் செய்பவர்களுக்கு பரமேஸ்வரன், கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும், சகல செல்வங்களையும் அனுக்ரஹிப்பார் என்பது ஐதீகம்.
இன்றைய காலகட்டத்தில் யாரும் தொடர்ந்து இருபத்தொரு நாள் விரதம் இருப்பதில்லை.
ஆகையால் அமாவசை அன்று மற்றும் இருபத்தொரு அதிரசத்தையும், வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் படைத்து, ஈசனை வணங்கி நோன்பு கையிற்றை அணிந்து கொள்கின்றனர்.
நீங்களும் இந்நோன்பை மேற்கொண்டு ஈசனின் அருள் பெறுங்கள். அன்பர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

தகவல் இணையம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை! Empty Re: சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை!

Post by முரளிராஜா Wed Oct 29, 2014 9:45 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை! Empty Re: சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை!

Post by செந்தில் Wed Oct 29, 2014 11:27 am

பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை! Empty Re: சிவன் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவன் இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum