Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் சமையலறையில்!
Page 1 of 1 • Share
என் சமையலறையில்!
ஒரு கட்டு முளைக்கீரை அல்லது அரைக்கீரையையும் 1 கைப்பிடி கொத்தமல்லியையும் சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பைப் போட்டு வதக்கவும். அதில் 3 பச்சை மிளகாய்களைக் கீறிப் போட்டு, 3 பல் பூண்டைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதில் கீரையைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கிளறிவிட்டு மூடவும். மிதமான தீயில் வைக்கவும். கீரை வெந்ததும் கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும், சுண்டைக்காய் அளவு புளி, தேவையான உப்புச் சேர்த்து நைசாக அரைக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட கீரை துவையல் தயார்.
நெல்லிக்காய் ஊறுகாய் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி உண்டு. நெல்லிக்காயை உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்து, அந்த உப்பு நீரிலேயே வைத்திருக்க வேண்டும். தேவைப்படும்போது எடுத்து, நறுக்கி, சூடான எண்ணெயில் கடுகு தாளித்து, மிளகாய் தூள், வெந்தயத் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கிளறி உபயோகிக்க வேண்டும். இப்படிச் செய்தால் கெட்டுப் போகாது. மொத்தமாகத் தாளித்து வைத்தால் கெட்டுப் போய்விடும்.
சுண்டலைத் தாளிதம் செய்து இறக்கியதும், இரண்டு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்துத் தூவவும். பிரமாதமான சுவை கிடைக்கும். கேழ்வரகை ஊற வைத்து, அரைத்துப் பால் எடுத்து கோதுமை அல்வா போலச் செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும். பரங்கிப் பிஞ்சின் தோலை பொடியாக அரிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து பரங்கிப் பிஞ்சுத் தோலைப் போட்டு வதக்கவும். வதங்கி யதும் மிளகாய் தூள், உப்புச் சேர்த்து வதக்கி சூடாக சாப்பிடலாம்.
புடலை, பீர்க்கங்காய், பரங்கிக்காய் கூட்டு செய்யும் போது, ஒரு டீஸ்பூன் பால் சேர்த்தால் சுவையாக இருக்கும். சூடான தோசைக்கல்லில் சிறிது புளித்த மோரும் உப்பும் தடவித் தேய்த்தால் தோசைக்கல்லில் பிசுபிசுப்பு இருக்காது. வாங்கி வந்தவுடன் காம்பைக் கிள்ளிவிட்டால் பச்சை மிளகாய் அழுகாமல் இருக்கும். பாகற்காயை அரிந்து, சிறிது நேரம் அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். பிறகு சமைக்கவும். கசப்பு இருக்காது.
சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு வகைகளை எண்ணெய் விட்டு வதக்கி கறி செய்யும் போது, சிறிதளவு பொட்டுக் கடலை மாவைத் தூவினால் மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். அடைக்கு அரைக்கும் போது, ஒரு சிறிய துண்டு பரங்கிப்பிஞ்சு அல்லது பரங்கிக்காயை சேர்த்து அரைக்கவும். அடை மிருதுவாக பஞ்சு போல இருக்கும். ஆப்ப மாவைக் கரைத்ததும் சிறிது தேங்காய் தண்ணீர் ஊற்றி வைத்தால் ருசியாகவும் மென்மையாகவும் இருக்கும். முருங்கைக்கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையைச் சேர்த்துக் கொண்டால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரி உதிரியாக இருக்கும்.
எலுமிச்சைப் பழத்தை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு வைத்து விட்டு எடுத்து, பிறகு பிழிந்தால் நிறைய சாறு வரும். பிழிவதும் சுலபம். முட்டைகளின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது. கிழங்குகளை உப்புப் போட்டு வேக வைத்தால் கிழங்கு சரியாக வேகாது. சேனையை தோல் எடுத்துவிட்டுத்தான் வேக வைக்க வேண்டும். கொத்தமல்லி சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, மிளகாய்க்கு பதிலாக மிளகை வறுத்துச் சேர்த்தால் சுவை கூடும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» என் சமையலறையில்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் 10 பாதுகாப்பு டிப்ஸ்
» சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் 10 பாதுகாப்பு டிப்ஸ்
» சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum