Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கந்தர் அனுபூதி - உரையுடன்
Page 1 of 1 • Share
கந்தர் அனுபூதி - உரையுடன்
அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த கந்தர் அனுபூதி - உரையுடன்
அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த சக்தி மிகுந்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் ஒரு சிறந்த பாராயண நூலாகும்.
அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த சக்தி மிகுந்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் ஒரு சிறந்த பாராயண நூலாகும்.
காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
கல்லைப் போன்ற கடினமான உள்ளம், பக்தியினால் உருகும்படிக்கு, அடைக்கலமான அடியவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகனுக்கு, எல்லா இலக்கண அம்சங்களும் பொருந்திய தமிழ் மாலை, சிறப்பாக அமையும் பொருட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளை நாடி துதிப்போம். நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
நூல்
ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே 1.
அக்ரமாக சான்றோர்களை அழிப்பதற்காக தேடுகின்ற, கஜமுகாசுரனை, போர் செய்து அழித்த, ஒப்பற்ற விநாயகப் பெருமானின், தம்பியே, பிரணவ நடனமாடும் மயில், உன்னுடைய ஞானா சக்தியாகிய வேலாயுதம், அடியார்களுக்கு முருகனின் அருளைத் தெரிவிக்கின்ற சேவல் (இவை மூன்றையும்) துதித்துப் பாடுகின்ற தொழிலையே என்னுடைய கடமையாக நீ அருள வேண்டும். ..ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே 1.
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே 2.
மங்காத உள்ளக் களிப்பும், துன்பமற்ற நிலையும், யோக சொரூபனும், நன்மை பயப்பவனும், அடியார்களிடம் இனிமையாகவே பேசி திருவிளையாடல் புரிபவனும், நீ தானே முருகா, உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ, நான் எனும் ஜீவ போதம் இழந்து அனுபவிக்கும் பேரின்ப நிலையை, மற்றவர்களுக்கு நீயே எடுத்துச் சொல்லவேண்டும். ..சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே 2.
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே 3.
ஆறுமுகக் கடவுளே, நித்தய அழிவில்லாத பொருள் என்பது (எது?) ஆகாயமோ?, தண்ணீரோ?, நிலமோ?, நெருப்போ?, காற்றோ?, அறிவு தோன்றும் இடமோ?, ஓதப்படும் நான்கு வேதங்களோ?, நான் என்கிற தத்துவமோ?, மனமோ?, என்னை ஆட்கொண்ட இடம் தானோ? ..ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே 3.
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே 4.
சுற்றத்தினர் சூழ போருக்கு எழுந்த, சூரபத்மனின் மார்பையும், கிரவுஞ்ச மலையையும், தொளைத்து ஊடுறுவிப் போகும்படி, தொடுத்த வேலாயுதத்தை உடையவனே, வளையளை அனிந்த கைகளை உடைய மனைவியுடன், மக்களும் (பிற செல்வம், உறவினர்) என்று கூறப்படுகின்ற அடியேன் கட்டுண்டு அழிவது, முறையோ முறையோ (முறை ஆகாது) ..தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே 4.
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே 5.
வல்லமை மிக்க பெரிய மாயைகளை எல்லாம், நீக்க வல்லவராகிய, உயிர்களைவிட்டு பிரியாதவராகிய முருகப் பிரான், தன் வாயினால் வழிகளை (உபதேசங்களை), தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை சதா நினைத்து, சோர்வு அடையச் செய்கிற, உலக மாயைக்குள் கிடந்து, கலங்குவதை நான் விடவில்லையே. ..முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே 5.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே 6.
எனக்கு இடும் கட்டளை எவை என வினவி, வள்ளி பிராட்டியின் திருவடிகளை வணங்குகின்ற, குன்றாத, மிகுந்த காதல் கொண்டுள்ள, கருணைக் கடவுளே, மிகவும் கடினமான மனமாகிய கல்லின் மீது, உனது திருவடியான, அழகு மிகுந்த தாமரை மலருவது என்ன ஆச்சரியம்? ..அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே 6.
கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே 7.
ஏ மனமே, நீ கெட்டு வீணே ஒழிகின்றாய், நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக, இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம் செய்வாயாக, வேலாயுதக்கடவுளின் திருவடிகளைத் தியானிப்பாயாக, நீண்ட பிறவித் துன்பத்தை, பொடியாக்கி ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக வினைகள் யாவையும் விட்டு விடுவாய் ..திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே 7.
அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே 8.
குமாரக் கடவுள், மலை அரசனது மகளான பார்வதியின் புதல்வன், போருக்கு வந்த சூரர்களை அழித்தவன், நான் பிறந்த ஊர், உறவினர்கள், நான் தான் எனப்படும், இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய, மெய்ப் பொருள் பேசியது என்ன ஆச்சரியம். ..பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே 8.
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே 9.
கிரவுஞ்ச கிரியின் மீது, தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி வேலாயுத்தை ஏவி, அழித்தவனே, துன்பம் இல்லாதவனே, பயமற்றவனே, தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை உடைய, பெண்களது, மோக வலையில் அகப்பட்டு, ஊஞ்சல் ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற தன்மையை, எப்போது நீங்கப் பெறுவேன்? ..பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே 9.
கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே 10.
மலர் மாலையணிந்த திரு மார்பினரே, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுடைய பொன்னுலகை அழித்த, சூரனாகிய மாமரம் அழியும்படி செலுத்திய, வேலாயுதக் கடவுளே, கரிய எருமையின் மீது, காலன் வரும்போது, அழகிய தோகையை உடைய மயில் வாகனத்தில் எழுந்தருளி, அடியேன் எதிரே வந்தருள்வீராக ..தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே 10.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே 11.
திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலாயுதக் கடவுளே, நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, இறந்து போகாத வண்ணம், உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே ..போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே 11.
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே 12
செவ்விய மானின் புதல்வியாகிய வள்ளியம்மையாரை, வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற கள்வனும், மிகப் பெரியவனும், பிறப்பும் இறப்பும் இல்லாதவனும் ஆகிய முருகன், சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை அடைந்து இருப்பாய், என்று உபதேசித்தவுடன், அவனை அன்றி வேறு ஒரு உலகம் ஒன்றையும் அறியாது நின்றேன், இது என்ன ஆச்சரியம். ..பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே 12
முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே 13.
உருவப் பொருளும் அன்று, அருவப் பொருளும் அன்று, உள்ள பொருளும் அன்று, இல்லாத பொருளும் அன்று, இருளும் அன்று, ஒளியாகிய பொருளும் அன்று, என்று சொல்லும் தன்மையில் உள்ள அப் பரம் பொருளே, முருகப் பெருமான் என்றும், ஒப்பற்ற வேலேந்திய முனிவன் என்றும், நமது பரம குரு என்றும், அப்பரமனது திருவருளைக் கொண்டு அறியாமல், மற்ற வழிகளில் அறிய முடியுமோ? முடியாது. ..றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே 13.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே 14.
ஏ மனமே, உடம்பு, வாய், கண், மூக்கு, காது ஆகிய, ஐம் பொறிகளின் வழியே செல்லும் ஆசைகளை, முற்றிலும் ஒழித்து விடு (அதனால்), திருக் கரத்தில் விளங்கும் ஒளிவீசும் வேலாயுதத்தை உடைய, முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று, உயர்வு பெற்று வாழ்வாய். ..றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே 14.
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே 15.
போர் புரிவதில் விருப்பமுள்ள தேவர்களும், பூவுலகத்தவரும் புகழ்ந்து துதிக்கின்ற, குரு சிரேஷ்டனே, அருங் குணங்கள் எட்டிற்கும் உறைவிடமானவனே, முருகன், குமரன், குகன் என உனது திரு நாமங்களை மெய்யன்புடன் புகழ்ந்து கூறி, உள்ளம் கசிந்து உருகும் தன்மையைத் தந்து, மெய்யுணர்வை எப்போது அடியேனுக்கு தந்து அருள் புரிவாய். ..துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே 15.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலந் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே 16.
வீரனே, முதுமையான சூரபத்மன் கிளைகள் அழியும்படி, வேலாயுதத்தைச் செலுத்தின தீரனே, தேவ லோகத்தைக் காத்தவனே, சிந்திக்கத் தெரியாத தீவினைகளை உடைய அடியேன், பெரிய நீண்டுகொண்டே செல்லும், நோயால் கட்டப்பட்டு, சுழலுதல் தகுதி ஆகுமா? ..டோ ரா வினையே னுழலந் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே 16.
யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே 17.
நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும், நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும், தாமே திரும்பப் பெற வேண்டி, வேலாயுதக் கடவுள் நமக்குக் கொடுத்ததினால், இப் பூமியில், நீங்கள் மயக்கங்களை விட்டு, தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழும் உத்தம சீலர்களே, நம்மை அவனுக்கு அர்ப்பணித்து அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள்.தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே 17.
உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே 18
பிறப்பில்லாதவனும், இறப்பில்லாதவனும், நினைப்பில்லாதவனும், மறதி இல்லாதவனும், பிரம்மனும் திருமாலும் தேடி காண முடியாதவனும், மலம் இல்லாவனுமாகிய சிவ பெருமானின், குமாரனே, எல்லாவற்றிற்கும் மேலானவனே, பாப இல்லாதவனே, பாபம் இல்லாதவனே, தேவ லோக ரட்சகனே, ராட்சசர்களுக்கு பயங்கரமானவனே.விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே 18
வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌiப் படினே 19.
முதலும் முடிவும் இல்லாத, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய அரசனே, வறுமை என்கிற ஒரு பாவி வந்து விட்டால், உடல் அழகும், செல்வங்களும், நல்ல மனமும், நல்ல குணநலங்களும், பிறந்த வம்ச பரம்பரையின் பெருமையும், பிறந்த குலத்தின் பெருமையும், நீங்கி விடுகின்றன. (இது பெரும் வியப்பே). ..குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌiப் படினே 19.
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண்
உரிதா வுபதேச முணர்ந் தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே 20.
விரிந்து பரந்த உறுதியான உள்ளம் கொண்டவனே, மிகுந்த வலிமை உடையவனே, எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே, தேவர்கள் விரும்பும் தாரகப் மந்திரமாம் பிரணவப் பொருளே, விண்ணுலகோரைக் காத்த தேவசேனாபதியே, தேவ லோகத்தைத் தாங்குபவரே, அடைவதற்கு அரிது ஆகிய உண்மைப் பொருளைப் பெறுவதற்கு, அடியேனாகிய நான், தகுதி உடைவனாகும்படி உபதேசம் செய்து உணர்த்தி அருளிய திறம் ஆச்சரியமானது. ..உரிதா வுபதேச முணர்ந் தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே 20.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே 21.
கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலே, முருக வேளே, மயிலை வாகனமாகக் கொண்டவனே, அடியார்களைக் காக்கும் விரதம் கொண்டவனே, அசுர கூட்டங்களையும் சூரனையும் அழித்தவனே, நினைப்பு மறப்பு அற்ற வழியைக் கண்டு கொள்ள, அடியேனுக்கு, உன்னுடைய இரு திருவடித் தாமரைகளைத் தருவதற்கு, உன்னுடைய திரு உள்ளம் எப்போது இசையுமோ? ..கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே 21.
காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூ 22.
கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலை உடைய, வள்ளிப் பிராட்டியின் பாதங்களைத் தொழுகின்ற, முருக வேளை, தேவர்களின் அரசனை, மேரு மலையன்ன பெருமை உடையவனை, காளைப் பருவம் கொண்ட குமரன், ஈசன் என தியானம் செய்து, அவனுடைய திருவடிகளை வணங்கும்படியான, தவத்தினை அடியேன் அடைந்தது ஆச்சரியமானது. ..தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூ 22.
அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே 23.
கூர்மையும் வலிமையுமுடைய வேலாயுதத்தை ஏந்தி மகிமை பெற்றவனே, குறவர் குலத்து வளர்ந்த மின்னல் கொடி போன்ற வள்ளி நாயகியைச் சேர்கின்ற, குணக் குன்றமே, உனது திருவடியைத் தியானிக்காமல், அறிவின்மையினால், அடியேன் அடியோடு அழிந்து போகலாமோ., இது நீதியோ? இது நீதியோ? ..முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே 23.
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே 24.
சூரபத்மன் குலம் முழுவதையும், அவனுக்கு காவலாய் இருந்த கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் சென்ற கொடிய கொலை புரியும் வேலாயுதத்தை திருக்கையில் தாங்கிக் கொண்டிருப்பவனே, இந்திரனுடைய நகரத்திற்கு அரசனே, கூரிய வேல் போன்ற கண்களை உடைய, மாதர்களுடைய தனபாரங்களை, சேர விருப்பங்கொண்ட அடியேன், உனது திரு அருள் பேற்றை பெற நான் நினைக்க மாட்டேனோ? ..சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே 24.
மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே 25.
திருக்கரங்கள் மட்டுமோ, கையில் விளங்கும் வேலாயுதம் மட்டுமோ, திருவடிகள் மட்டுமோ, திருமேனி முழுவதும் செம்மை நிறம் கொண்டவனே, மயில் ஏறிய மாவீரனே, கொடிய தீவினையால் வந்த வாழ்க்கையை, என்றும் நிலையானது என மகிழ்ந்து, அந்தோ, அடியேன் உழலுதல் நீதியோ? ..தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே 25.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே 26.
வேதங்களிலும் ஆகமங்களிலும் காணப்படுகின்ற உட் பொருளான ஞானத்தையே வடிவாகக் உடையவனே, மனதிற்கு எட்டாத நிலையில் இருப்பவனே, தேவ லோகத்தின் முடி மணியாக விளங்குபவனே, உனது திருவடியை அன்றி வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லாத அடியேன், திருவருளைப் பெற்று உய்யுமாறு, நீ ஒரு சிறிதேனும் நினைக்க வில்லையே (நினைத்து அருள் புரியவும்). ..நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே 26.
மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே 27.
பொன்னைப் போன்றவனே, நவ ரத்தினம் போல் ஒளியை வீசுபவனே, பேரின்பப் பொருளே, பேரருளானவனே, தலைவனே, மயிலை வாகனமாகக் கொண்ட மேலானவனே, மின்னலைப் போல் தோன்றி உடனே மறையும் நிலையில்லாத இவ்வுலக வாழ்வை நிலையானது என எண்ணிக் கொண்டிருக்கும் நான், இந்த நிலையை என்ன என்று கூறுவேன், இந்த உலகில் என் தலை விதியின் பயன் இதுதானோ? ..என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே 27.
ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே 28.
கெடுதலும் அழிவுமில்லாத அமுதம் போன்றவனே, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய மன்னவனே, ஞானத்திற்கு இருப்பிடமானவனே, நான் என்னும் ஆணவ முனைப்பில் அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி, வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய், நிலைத்திருப்பதான, மேலான நிலையை (அனுபவித்து அனுபவத்தில் காண்பதே அல்லாது பிறருக்கு இந்த அனுபவம் இத்தன்மையது என்று), சொல்லத் தக்கதோ? (சொல்ல முடியாது). ..ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே 28.
இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே 29.
போர் புரிவதற்கு ஏற்றதான, பன்னிரு திருத் தோள்களிலும், அடியேனுடைய பாமாலைகளையே தரித்துக்கொண்டிருக்கும், ஒளிவீசும் வேலாயுதக் கடவுளே, இந்த இல்வாழ்க்கை எனும் மாயை வலையில், அடியேனை சிக்க வைத்து விட்டாய், தீயவனாகிய என்னுடைய, அறியாமையால் செய்த பிழைகளை பொறுத்தாய் இல்லையே. ..பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே 29.
செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே 30.
செவ்வானம் நிறத்துடன் தோன்றும், ஐவேலை உடைய முருகப் பெருமான், அந்த ஒரு நாள், இந்த உபதேசத்திற்கு நிகரானது வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லும்படி, உபதேசத்தால் உணர்த்திய சுவானுபூதியை, அங்ஙனம் உபதேசித்த முறையில் தமக்குள் உள்ளுணர்வால் உணர்வதல்லாமல், அதை மற்றவர்களுக்கு எவ்வாறு வார்த்தைகளால் எடுத்துச் சொல்ல முடியும்? (முடியாது). ..றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே 30.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே 31.
மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானே, பாழ்பட்ட இவ்வுலக வாழ்வு என்கின்ற, இந்தப் பெரிய மாயை என்கின்ற படு குழியிலே, நீ விழுவாயாக என்று, அடியோன் தலையில் எழுதி விட்டீரே, (இதற்கு காரணமான) இழிவான செய்கைகள், அடியேன் முன் செய்தவைகள் இருகின்றனவோ?, இனி தேவா£ர் வாழ்ந்து போவீராக. ..வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே 31.
கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே 32.
கொலை செய்வதையேதான் தொழிலாகக் கொண்ட, வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளிப் பிராட்டியாரை தழுவி மகிழ்கின்றவனே, மலை போன்றவனே, கிரவுஞ்ச மலையை இரு கூறிட்டு வெற்றி வாகை கொண்டவனே, முதன்மையான சமயவாதிகளோடு வாதம் செய்து பிணக்குதல் செய்து, சாஸ்த்ர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு பேசி, அப்படிப்பட்ட வாத பிரதிவாத மாயையிலே நான் மூழ்கிவிடுவேனோ? (மூழ்க்விடக் கூடாது). ..டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே 32.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே 33.
கங்கா நதி தாங்கிக்கொண்டு வந்து கொடுத்த, தேவர்கள் வேண்டியபடி சிவ பெருமானிடத்தில் தோன்றியவரே, கந்தப் பெருமானே, முருகப் பெருமானே, கருணைக்கு இருப்பிடமானவனே, மனதில் துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும், மனைவி செல்வம் எனப்படும், விந்திய மலைக் காடுபோன்ற இத் துன்பத்தை, அடியேன் என்று விடுவேன்? ..விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே 33.
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே 34.
போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவரே, ஆறுமுகக் கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவரே, அழகிய விலை மாந்தர்களின், தீய வழியில் சென்று, நான் கெட்டுப் போகாமல், அடியேனுக்கு வரம் தந்தருள்வீர். ..மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே 34.
விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே 35.
பிறைச் சந்தரனைப் போன்று, வளைந்து ஒளி பொருந்திய நெற்றியை உடைய, வள்ளி பிராட்டியைத் தவிர, வேறு ஒருவரையும் துதிக்காத செயலை ஒரு விரதமாகக் கொண்ட கந்தக் கடவுளே, விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவனே, அரசனே, பிரம தேவன் படைத்த, இந்த தேகத்தை விட முடியாத அடியேன், நல்ல கதியை அடையும் பொருட்டு, தாமரை மலர்கள் போன்ற உனது திருவடிகளை அடியேனுக்கு என்று கொடுத்தருள்வீர்? ..கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே 35.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே 36.
பிரம்ம தேவன் முதலிய தேவர்கள், தங்கள் தலையில் சூடிக் கொள்ளும் தாமரைபோன்ற பாதங்களை உடையவனே, மின்னல் கொடிபோன்ற வள்ளி பிராட்டியின் பாதங்களை தமது தலையில் சூட்டிக் கொண்டவனே, சிவ பெருமான், நாதனே, குமரனே போற்றி என உன்னை வணங்கி, எனக்கு உபதேசி என விளம்ப, நீ அவருக்கு உபதேசித்த பொருள் எது? (அதை நீ எனக்கு உபதேசித்து அருள் புரிய வேண்டும்). ..ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே 36.
கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே 37.
ஏ மனமே, கிரவுஞ்ச கிரியின் மீது, வெற்றி வேலை உடைய கந்தக் கடவுளின், அடியார்களின் திருக் கூட்டத்தை சேர்ந்தவன் என்ற, பதவியை அடைவதையே விரும்புவாய், நான் எனது என்கிற அகங்காரத்தை, பொறுமை எனும் ஞானத்தால் வேரோடு நீக்கி விடுவாயாக ..பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே 37.
ஆதாளிaய யொன் றறியே னையறத்
தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே 38.
கூதாள மலரை சூடியவனே, வேடர் குலத்துதித்த வள்ளிப் பிராட்டியின் தலைவனே பேய்க் கூட்டங்கள் துதிக்கும் வேலாயுதனே, வீண் பேச்சுக்களை பேசுகிறவனும், நல்லவைகளை பற்றிய அறிவு இல்லாதவனும், மட்டமான தீக்குணம் கொண்ட அடியேனை, ஒரு பொருளாகக் கருதி ஆண்டு கொண்ட அருளை எப்படி விரித்து கூற முடியும்? ..தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே 38.
மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே 39.
மன்னனே, வேடர் குலத்தில் உதித்த வள்ளிப் பிராட்டியின் திருத் தோள்களை தழுவும் தெய்வீகனே, மங்கல மூர்த்தியும் சுகத்தைத் தருபவருமான சிவ மூர்த்தியின் குருநாதனே, ஏழு வகையான எனது பிறவிகள் தொலையுமாறு, மாயையிலிருந்தும் நீங்காத, மூன்று ஆசைகளும், எப்போதுதான் அடியேனை பற்றாது நீங்குமோ? ..மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே 39.
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே 40.
வள்ளி மலையில் சுனைகளிடத்தும், மலை அருவிகள் விழுமிடத்தும், பசுமை நிறங்கொண்ட தினைப் புனத்திடத்தும், பரணிடத்தும், வள்ளிப் பிராட்டிக்கு அருள் செய்யும் பொருட்டு சுற்றித் திரிந்த பெருமானே, ஆன்மாக்களின் இருவினைகளையும் ஓடச் செய்யும், ஞான ஒளி வீசுகின்ற வேலாயுதத்தை ஒருகாலும் மறக்க மாட்டேன், இல் வாழ்வில் கலக்கம் கொண்டு மயங்கி அழியலாமோ? ..மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே 40.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே 41.
அழகனே, முருகப் பெருமானே, மயிலின் மீது வரும் பெருமானே, யோகீசனே, சிவ ஞானத்தை பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உபதேசம் செய்பவனே. யமன் வந்து என் உயிரை பறித்துக்கொண்டு போகும் அந்தக் கடைசி நாளில், அடியேன் இறந்து போகாதபடி, அடியேனை உமது திருவடி நிழலிலே தங்கும்படி காத்தருளும். ..காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே 41.
குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே 42.
தியானிக்கப் படுகின்ற பொருளை, காலம், இடம் முதலியன பற்றி நினைக்காமல் தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே எண்ணிக்கொண்டு, பசு, பாச ஞானங்களை விட்டு, பதி ஞானத்தால் அறியும் உண்மை வழியை, ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய கடவுள் மெளன குருவாய் வந்து உள் நின்று உணர்த்திய உடனே, உலகத்தாறோடு நெருங்கும் உறவு நீங்கி, வாக்கும் அற்று, நினைவும் அற்று, சுட்டி அறிகின்ற அறிவும் அற்று, அறியாமையும் முற்றிலும் நீங்கிவிட்டன. ..நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே 42.
தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே 43.
தூய்மையான இரத்தின மணிகளும், ஆடைகளும் அணிகின்ற வள்ளி பிராட்டியாரின், காதலனே, முருகப் பெருமானே, நீ காட்டிய அன்புடன் கூடிய அருளினால், ஆசையாகிய விலங்கு, தூள் தூளாக பொடியான பின் மெளன நிலையுடன் கூடிய அநுபூதி நிலை எனக்குக் கிடைத்தது. ..நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே 43.
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே 44.
பகைவர்களையும், மாயை மற்றும் மலங்களையும் அழிக்கின்ற, ஓப்பற்ற வேலாயுதக் கடவுளின் திருவடிகள், முத்தி தலத்திலும், தேவர்களின் சிறப்பான தலைகளிலும், வேதங்களிலும் வள்ளி வாழ்ந்த வெப்பமான காட்டிலும், தினைப் புனத்திலும் மணக்கும்படி விளங்கும், அத்தகைய திருவடிகளை என் தலை மேல் சூடும்படி தந்தருளிய கருணையை சொல்லி விளக்க முடியுமோ? (முடியாது). ..சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே 44.
கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே 45.
சற்குருநாதனே, குமரனே, வஜ்ர படையோனே, தெய்வயானைக்கு நாயகனே, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு சிவ யோகத்தை அருள் பாலிக்கும் கருணாமூர்த்தியே, தாம் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுத் தராமல் ஒளித்து வைத்துக்கொள்ளும் குருமார்களிடம் சென்று, அக் கல்வி ஞானத்தை நான் யாசிக்கா வண்ணம், உண்மைப் பொருளை உபதேசித்து அருள்வாயோ? ..றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே 45.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே 46.
கந்தக் கடவுளே, ஒளி படைத்த வேலாயுதத்தை உடையவனே, உமையம்மையின் திருக்குமரனே, என்றும் இளையோனே, வேத நாயகனே, எங்களுக்கு பெற்ற தாயாகவும், எனக்கு அருள் புரியும் தந்தையும் நீதானே, அடியேனுடைய மனக் கவலைகளை எல்லாம், தீர்த்து என்னை ஆண்டு அருள்வீராக. ..சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே 46.
ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே 47.
கோபித்து வந்த, சூரபத்மனை அழித்து, துன்பத்தைக் கூறி முறையிட்ட தேவர்களின் உலகத்தை, திருப்பி கொடுத்து சந்தோசப் படுத்தியவனே, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து, அவற்றிக்கு அப்பால் உள்ள அநுபூதியாகிய குக சாயுச்சிய நிலையை, அடியேன் பெறும் பேறாக, பெற்றுக் கொள்ளுகின்ற வழியை எனக்கு அருள்வாயோ? ..பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே 47.
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே 48.
உலகாயத பந்த பாசத்தில் நெருக்கமான உறவுகள் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டு, அதனால் மல இருள் முற்றிலும் வலிமை குன்றி ஒழியும்படி, மயக்கத்தை வென்ற சிவ ஞானிகளுடன், பொருந்தி இருக்கும் வேலாயுதக் கடவுளே, ஜீவ போதம் தன்னை விட்டு நீங்கி, சிவ போத நிலையில் அடங்கி, அந்த அருட் காட்சியில் லயித்து பதிஞானத்தால் உணர்கின்ற சிவ ஞானிகளது உள்ளுணர்வில், பிரிதல் சிறிது கூட இல்லாமல், கலந்து நின்ற பெருமான் நீ அல்லையோ? ..பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே 48.
தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே 49.
ஒளி வீசுகின்ற கதிர் வேலாயுதத்தை உடையவனே, வெவ்வேறு வடிவங்களை எடுக்கும் திறமையைப் பெற்றவனே, உன்னைத் தியானிக்கும் அடியவரது துன்பத்தைப் போக்கும், கருணை நிரம்பிய பேரொளியே, கருவி கரணங்களிலிருந்து கழன்று, தனிமையான இனிமையில் நிலைத்து நின்ற பேரின்பத்தை, மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படி, இனி மற்றவர்க்கு விளக்கிச் சொல்ல இயலுமோ? (இயலாது). ..இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே 49.
மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே 50.
கங்கா நதியின் திருக் குமாரனே, மெய் அறிவிற்கும் அதனால் விளையும் பேரின்பத்திற்கும் தலைவனே, அந்தத் திதி புத்திரராகிய அசுரர்களின், வலிமையை அழித்த போர் வீரனே, அறிவு கெட்டு, மிகவும் வாட்டமுற்று, மயக்கமுற்று, அற நெறியால் வரும் உனது அநுபூதி நிலையை இழந்து, கெட்டு ஒழிந்து விட மாட்டேன் ..கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே 50.
உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே 51.
ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட சகள வடிவாயும், குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும், உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும், இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும், மலராகவும், அம் மலரின் மணமாகவும், மாணிக்கமாகவும், அதன் ஒளியாயும், சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்து காப்பவனும், சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும், அந்த உயிர்களின் வினைப் பயனாகவும், முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும் நிலையாகவும், உள்ள முருகக் கடவுளே என் குருவாக வந்து எனக்கு அருளி என்னை ஆட்கொண்டவன். ..மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே 51.
கந்தர் அனுபூதி முற்றிற்று.
http://www.panippulam.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
செந்தில் தினமும் ஒரு பாடல் படியுங்கள்
வாழ்க்கை இன்னும் சிறக்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
செந்தில் தினமும் ஒரு பாடல் படியுங்கள்
வாழ்க்கை இன்னும் சிறக்கும்
அப்படியே செய்கிறேன் அண்ணா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
செந்தில் Today at 4:48 pm
செந்தில் தினமும் ஒரு பாடல் படியுங்கள்
வாழ்க்கை இன்னும் சிறக்கும்
அப்படியே செய்கிறேன் அண்ணா.
சும்மா சொல்லவில்லை எனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன்
நிச்சியம் வளமும் நலமும் உண்டு என்பதில் ஐயமில்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர் அனுபூதி - உரையுடன்
உங்கள் அனுபவ வார்த்தையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா.கண்டிப்பாக தினமும் ஒன்றாக படித்துபயன்பெருகிறேன்.சும்மா சொல்லவில்லை எனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன்
நிச்சியம் வளமும் நலமும் உண்டு என்பதில் ஐயமில்லை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» "கந்தர் அநுபூதி"
» கந்தர் அலங்காரம்
» கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன? தவறாமல் படியுங்க !!பெரும் பயன் அடையுங்க !!!
» கந்தர் சஷ்டி கவசம்
» இதோ... உங்களுக்காக ...'கந்தர் சஷ்டி கவசம்'
» கந்தர் அலங்காரம்
» கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன? தவறாமல் படியுங்க !!பெரும் பயன் அடையுங்க !!!
» கந்தர் சஷ்டி கவசம்
» இதோ... உங்களுக்காக ...'கந்தர் சஷ்டி கவசம்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum