தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாணவன்

View previous topic View next topic Go down

மாணவன் Empty மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:10 pm



         உலகம் என்பது ஒரு பல்கலைக்கழகம்.அதில் ஒவ்வொருவரும் ஒரு மாணவன் தான் . "மாணவன்" என்ற சொல்லுக்கு இந்த அகன்ற பொருளையோ கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். இந்த புத்தகம் குறிப்பாக கல்லூரியில் , பள்ளியில் படிக்கும் மானவர்களுக்க்காகவே எழுதப்பட்டது என்றாலும்,சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் எல்லாமே எல்லாருக்கும் பொருந்தும்.

         செல்வச் செழிப்பிற்கும்  ,வெற்றிக்கும் அவை வழி காட்டுகின்றன. ஒரு மாணவனாக இருக்கும் பருவத்தில் படிப்பிற்கு நிரம்ப நேரம் தேவைப்படுகிறது.அதற்காக எளிதாக  நியாபகத்தில் வைத்துக்கொள்ளும் வசதிக்காக ,சில உதாரணங்கள்,இந்த உத்திகள் வாழ்க்கைக்கு உதவும் ..ஆங்கிலத்தில் மாணவன் என்ற சொல்லுக்கு உரித்த சொல் "STUDENT " என்பதாகும் .இதன் ஆறு எழுத்துக்களையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.இதை பற்றி காண்போம் .
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:11 pm

"S" is for STUDY

          முதல் எழுத்து வாழ்கையில் என்றென்றைக்கும் படிப்பு தொடர வேண்டும் என்பதை குறிக்கிறது. படிப்பு என்பது நாம் கல்லூரியில் படிக்கும் படிப்பு மாத்திரம் அன்று.வாழ்கையில் நாம் படிக்கும் ஒவ்வொரு படிப்பினையும்  நம் வாழ்நாள் முழுதும் நாம் கற்றே தீர வேண்டும்.தெரியாத ஒன்றை கற்க வேண்டிய அவசியம் வாழ்கையில் உண்டு.

         எதையும் கற்றுக்கொள்ள ஒரு திறந்த உள்ளம் வேண்டும். இது என்றைக்கும் தடைபடாத ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். "கற்களும் பாறைகளும் ஸ்தோத்திரங்களை சொல்லும் ,சலசலத்து ஓடும் சிற்றோடைகளில் பாடங்கள் நிறைய கற்கலாம்" என்று எழுதினார் ஷேக்ஸ்பியர்."பிரபஞ்சம் எனும் பெரிய மரத்தின் ஒவ்வொரு இலையும் வேதமாகும்" அறிவு பிறக்கும் இடமாகிறது.

          உங்கள் கல்லூரி படிப்பை சீரான வகையில் முறைப்படுத்தி சொந்த முயற்சியாலும், நேரம் தவறாமலும் படிப்பை முடித்தாக வேண்டும் .ஒரு மாணவன் என்ற முறையில் வேறு யாவரையும் சாராமல் உங்கள் பாடங்களை நீங்களே கற்று தேர்வுக்கு தயார் செய்துகொள்ளவேண்டும் .

         உங்கள் பாடங்களை படிப்பதை பிற மானவனைவிட்டு இந்த பாடத்தை படியேன் நான் கொஞ்சம் "பிஸி" யாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது.உணர்ச்சிக்கு உந்துதலாக ஒரு ஞானியின் ஆரம்ப காலத்தை ஒட்டிய ஒரு கதை ..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:12 pm

குட்டி கதை

                ஓர் ஏழை மாணவன்  நாள் முழுவதும் உழைப்பு.  இரவில்தான் விளக்கின் வெளிச்சத்தில் படிக்க நேரம் மிஞ்சும். ஒரு நாள் விளக்கில் ஊற்ற போதுமான எண்ணை இல்லை. பெருத்த ஏமாற்றத்துடன் தூங்கச்சென்றான். தூக்கம் அவனை மேலிடும் பொழுது..

              அவன் கனவில் ஒரு தேவதை தோன்றி "உலகத்தில் தேவையான அறிவை எல்லாம் உனக்கு நான் தருகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்,உன் வாயை திற ,அதில் நான் அறிவை உமிழ்வேன் " என்றாள்.அந்த தேவதை.

              இளைஞன் நெளிந்தான்."வேண்டாம்". என்னை மன்னித்துவிடு. அறிவை பெரும் வழி அதுவல்ல. நான் வேண்டுவதெல்லாம் என் விளக்குக்கு  ஊற்ற எண்ணை வேண்டும்.அது கிடைத்தால் போதும் ,நான் விளக்கை ஏற்றி ,படிக்கும் வரையில் அணையாமல் பாதுகாத்து படிப்பேன். அறிவை கண்ணியத்தோடு  பெறுவேன் என்றான்.

              உண்மையில் அந்த தேவதை அவனை சோதிக்கவே அப்படி சொன்னாள்.பையனின் ஈடுபாட்டை பார்த்து அவனை ஆசிர்வதித்தாள்.இறுதியில் ஒரு பேரரிஞாக அந்த இளைஞன் உருவானான்.

              எப்பொழுதும் நீங்கள் உங்களையே சார்ந்திருக்க வேண்டும் என்பதை இக்கதை சொல்கிறது. இந்த சுய சார்பினால் நீங்கள் ஒரு சிறந்த மாணவனாகவும் ஆன்மிகத்தில் உயர்ந்தவனாகவும் பிரகாசிக்க முடியும்.

              உங்கள் சுய முயற்சியிலேயே  நம்பிக்கை வைத்து படிப்பில் உங்களை சீராக சீற்படுதிக்கொளுங்கள். அடுத்த வகுப்பிற்கு தேவையான பாடங்களை படித்து நீங்கள் தயார் நிலையில் செல்லும் போது உங்கள் காதில் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொள்ளும்  நிலைக்கு உங்கள் மனம் தயாராகிவிடுகிறது.

              இல்லாவிட்டால் மனம் வெறுமையை ஆட்கொள்கிறது  . சரிதான் போகட்டும் வீட்டிற்க்கு போய் படித்துக்கொள்ளலாம் என்ற போக்கில் விட்டுவிடுவீர்கள் .ஒரு வெற்றிகரமான மாணவனாக இருப்பது ஒரு கலை. அதற்க்காக நாள் முழுதும் புத்தகத்தை படிப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்பதில்லை.உங்கள் கால அவகாசத்தை முறையாக மேலாண்மை செய்தாலே போதும் . உங்களை சீற்படுத்திக்கொண்டவராக   ஆகிவிடுவீர்கள்.

              ஆகவே நீங்கள் படிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு முக்கியமல்ல .எந்த அளவிற்கு உங்கள் மனதிற்குள் சென்று பதிந்திருக்கிறது என்பதுதான்  முக்கியம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:12 pm

"T" for TENACITY
மன உறுதிப்பாடு

ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நீங்கள் நலிந்தவராக இருக்கலாம். அதற்க்காக வருத்தப்பட்டோ, தோற்றுவிட்டோம் என்ற உணர்வோ வேண்டாம்.நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் முயற்ச்சி தொடர்ந்தால், தகுந்த துணையோடும் வழிகாட்டுதலோடும்  நீங்கள் நிச்சயம் உயருவீர்கள்.எவருக்கும் எதுவும் அடைய முடியாதது என்று ஏதும் இல்லை , "எனக்கும் இதற்கும் ஒத்து வராது" என்ற எண்ணத்தை  எப்பொழுதும் கற்பித்துகொல்லாதீர்கள் .

உதாரனத்திற்க்கு  வகுப்பில்  நீங்கள் சிறிய உரை ஓன்று நிகழ்த்த வேண்டி வருகிறது .உங்கள் உரையை தயாரிக்கிறீர்கள், ஆனால் மேடை  ஏறியதும் உடலில்  நடுக்கம் ,குரலில் நடுக்கம் , எல்லாம் முடிந்த பின் யாரோ ஒருவர் "இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராதுப்பா" என்று சொல்லிவிடுகிறார்.

அந்த கருத்து முற்றிலும் தவறானது. எந்த ஒரு ஆரம்பத்திலும் கொஞ்சம் பயம் ,நடுக்கம் இருக்கத்தான் செய்யும் . இந்த ஆரம்ப நலிவை எதிர்த்து நின்று தீர்மானத்துடன் முனைந்தால் எந்த ஒரு பாடமும் கடினமானதாக தோன்றாது.உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மையும் தீர்மானமான உள்ளமும் தான்.

எந்த ஒரு திட்டமும் ஆரம்பத்திலிருந்தே சீராகவே செல்லாது ,எந்த ஒரு போரிலும் எதிரியை உடனே வென்று விட முடியாது. எதிர்ப்பு இல்லாத போர் ஏது? ஆகவே தீர்மானமான உள்ளம் மிகவும் அவசியம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:13 pm

"U" is for UNDERSTANDING
அறிவதும் புரிந்துகொள்ளுதலும்

வெற்றிக்கு பின் உள்ள பரம ரகசியம் இந்த அறிந்து கொள்ளுவதிலும், புரிந்து கொள்ளுதலிலும்தான்   இருக்கிறது. இது பற்பல விஷயங்களை சொல்லுகிறது. பள்ளிப்பாடங்களை  படிக்கும் போது உங்கள் மனம் தளர்ந்து இருக்கிறது.

பிறரையும், உங்களையும், வாழ்கையையும்  புரிந்து கொள்ள வேண்டும் .மேலும் மேலும் விவேகத்தை பெற்று , மனம் அமைதியுடன் அணுகும் போது தவறாக புரிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அந்த தவறு நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறது.

ஒரு குட்டிக்கதை. 
ஒரு குடியானவன் மரங்களை வெட்டி விறகாக்கி பிழைப்பவன். ஒரு நாள் மரம் வெட்டி முடித்து வீட்டிற்கு வந்தான்.கோடாலியை காணவில்லை. மரத்தடியில் இருக்கும் என்று நினைத்து சென்று பார்த்தல் அங்கு கோடாலியை காணவில்லை  .அவனுக்கு அதிர்ச்சி .சுற்று முற்றும் பார்த்தான்.

தன் வீட்டிற்கு முன் ஒரு இளைஞன் சென்று கொண்டிருப்பதை பார்த்தான் ."அவன்தான் திருடி இருக்க வேண்டும் ஒரு கை பார்க்கிறேன் "என்று சொல்லிக்கொண்டான். அவனை பார்க்க பார்க்க அவன்தான் குற்றவாளி என்று குடியானவனக்கு பட்டது."அவன் குற்றவாளியை போல தோற்றம் மட்டும் இல்லை குற்றவாளியை போலவே நடக்கவும் செய்கிறான்" என்று சொல்லிக்கொண்டான்..

அவனைப்பற்றி  நினைக்க நினைக்க மேலும் பற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு. கோபம் கொந்தளிக்கும் மனதுடன் தற்செயலாக திரும்பி  பார்த்தவனுக்கு  ஓர் ஆச்சரியம். அவனுடைய கோடாலி அருகில் கீழே கிடந்தது. வீட்டிற்கு போகும் அவசரத்தில் கதவிற்கு பின் அது கீழே விழுந்திருக்கிறது . இப்போது மீண்டும் அந்த இளைஞனை  பார்த்தான். அடடா அந்த பையன் நல்லவனே, "நல்லவனாக தோன்றுவதோடு மட்டுமல்ல நல்லவனைபோலவே நடக்கிறான்"  என்று சொல்லிக்கொண்டான்.

இந்த நகைச்சுவை கதை மனித மனப்பாங்கு எவள்ளவு சீக்கிரம் மாறுகிறது என்பதை காண்பிக்கிரதல்லவா? ஒரு சுழலை நீங்கள் புரிந்து கொள்ளும்போது தவறாகவே அதை வியாக்கியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். புரிந்து கொள்ளுதல் சரியான பிறகு சம்பவத்தை வேறு விதமாக வியாக்கியானம் செய்ய ஆரம்பிக்கிறோம்.

உங்களையும் சரி ,பிறரையும் சரி, புரிந்துகொள்ளுதல் என்பது ஓர் அருங்கலை .பள்ளியில் படிக்கும் பாடங்களை புரிந்து கொள்வது அவ்வளவு
கடினமல்ல. ஆனால் மனித சுபாவத்தை அறிந்துகொள்வது கடினம்தான் . ஒவ்வொரு நாளும் நமக்கு இந்த சவால் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:14 pm

ஒவ்வொரு மாணாக்கனும் வாழ்கையை புரிந்து கொள்ளுதல்,  வாழ்க்கை ஏன் இவ்வளவு  கடினமான பிரச்சனைகளுடன் இருக்க வேண்டும், விடை தெரியாமல் மனம் சோர்ந்து தொய்வடைந்து சவால்களே   இல்லை என்றும் செல்வச் செழிப்பே  பூத்துக்குலுங்கிய சூழலாக வாழ்க்கை இருந்துவிட்டால் நீங்கள் முதுகெலும்பு இல்லாத பிறவி ஆகிவிடுவீர்கள்.

இதை மேலும் சரியாக புரிந்தகொள்ள ஒரு ரோஜா செடியை கற்பனை செய்து பாருங்கள். ரோஜா செடியில் ஆகாங்கு சில முட்கள் இருந்தே ஆக வேண்டும். அந்த முற்கள் மலரின் பிரிக்கப்பட முடியாத அங்கங்கள் .ஒவ்வொரு முள்ளும் தாவரம் தழைத்து நிற்கவும் நீர்சத்து ஆவியாக போய்விடாமலும் காக்கிறது.

அதே போல சோதனைகள் உங்கள் உள்ளார்ந்த சக்திகளை வீணாக்காமல் பார்த்து கொள்கின்றன. உரமாக உங்களுக்குள் உறைந்திருக்கும் உள்ளார்ந்த சக்திகள் உங்கள் தனித்தன்மையின் புனிதத்தை வெளிக்கொண்டுவருகின்றன.

தவறில்லாமல் புரிந்து கொள்ளுதல் யோகத்தையும் உங்களுக்கு சரியாக புரிய வைக்கிறது. யோக தத்துவங்களை படிப்பது உங்கள் புரிந்துகொள்ளுதல் சக்தியை அதிகப்படுத்துகிறது. உலகத்தை மேலும் புரிய வைக்கிறது. பிறரோடு உங்களுக்கு ஏற்படும் உறவை பற்றியும் அறிய வைக்கிறது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:15 pm

"D" is for DEVOTION

"மாத்ரு தேவோ பவா" உன் தாயார் உனக்கு தெய்வம் ,"பித்ரு தேவோ பவா " உன் தந்தை உனக்கு தெய்வம், "ஆசார்ய தேவோ பவா" உன் ஆசான் உனக்கு தெய்வம்,"தேவோ தேவோ பவா" கடவுள் உனக்கு தெய்வம். சமூகத்திலும் உங்களோடு நெருக்கமாக இருப்பவர்கள் மீது அன்பு செலுத்தியே தான் கடவுளை அடைய முடியும்.

தாய்,தந்தை ஆசான் மற்றும் அனைவரிடமும் ஒரு மரியாதை, பணிவுடனும்,ஓர் கலையை கற்கும் போதுதான் உயர்ந்த கல்வியும் கலாசாரத்தில் உரிய நிலையும் கிடைக்கும். ஆசான் என்ற சொல்லானது ஆன்மிகத்தை போதிப்பவர் என்றும் உங்களை முழுமையாக்குபவர்  என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மதத்திலும் பூஜிக்கும் முறைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும் .ஆனால் கடவுளை நேசிப்பது என்பது மாறாத தத்துவம். ஒவ்வொரு மாணாக்கனும் இந்த கடவுள் பற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்கையில் மிகுந்த செல்வச்செழிப்பும்,  புகழ், வலிமை, அனைத்தும் நம்மை வந்தடையலாம்.

கடவுள் பற்று இல்லாமல் போனால் நம் முதுமையில் தனிமையும் ஆற்றாமையும் நிச்சயம் சூழும். ஆனால் உங்களிடமே குடிகொண்டுள்ள கடவுளை அறிந்து கொண்டால் இறப்பே உங்கள் வீட்டு வாசலை தட்டினால் கூட உங்கள் மனம் அமைதி கொண்டு சந்தோசமாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:15 pm

"E" for ERADICATION of Defects

தீயவற்றை ஒதுக்குதலுக்கும் ,நற்பண்புகளை வளர்ப்பதற்கும் ஓர் வழி ஆத்ம பரிசோதனை தான். பிறரிடம் குற்றம் காண்பதை விட்டு ,நம்மை பற்றி நாமே யோசிப்போம் மனம் தளர்ந்து யோசிப்போம்,என்ன தவறு செய்தோம், நாம் எடுத்துக்கொண்ட பணிகளை சரிவர முடித்தோமா யாரையாவது தகாத வார்தைகள் சொன்னோமா என்றெல்லாம் யோசித்து  பார்க்கவும்.

ஒரு நாட்குறிப்பு புத்தகத்தை எடுத்து எழுதி வருவதும் நல்ல பழக்கமாகும்,என்ன தவறு செய்தோம் எப்படி அதை தவிர்ப்பது என்பதை பற்றியும் எழுதலாம்.உங்கள் தனிமையில் நீங்கள் காணும் குற்றங்களை பற்றி வருத்தப்பட்டு நீங்களே உங்களை சமாதானம் செய்துகொள்ளாமல் நீங்கள் செய்த தவறுகளின் விளைவுகளை நேரில் சந்தியுங்கள்.உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ள வேண்டாம்.

நேராக நடக்க தெரியும் வரை குழந்தை விழுந்து விழுந்து தான் நடக்கிறது. ஆத்ம பரிசோதனையின் மூலம் உங்கள் தனித்தன்மையில் நீங்கள் சில குறைகளை காண முடியும். (கோபப்படுதல்,பொறாமை,எரிச்சல் படுத்தல் போன்றவை).இவற்றை எல்லாம் ஒதுக்குவது என்பது ஒரு கலை. இதற்க்கு ஒன்றும் பெரிய உளவியல் சூத்திரங்களை கற்க தேவை இல்லை.சிறு வயதில் நீங்கள் செய்த குற்றத்திற்காக தாயார் கன்னத்தில் அறைந்தது ஒரு பொருட்டல்ல.எதிர்மறை உணர்வுகள் சூழ ஆரம்பித்தன என்பதும் ஒரு பொருட்டல்ல .ஆனால் இவற்றை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்பது தான் முக்கியம்.

உங்கள் மன ஆழத்தில் அன்பே உலவி கொண்டுள்ளது நான் அன்பு செய்வதில் வல்லவனாக ஆகிக்கொண்டு இருக்கிறேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். அந்த பெறுமானம் கொண்ட உணர்வை அன்றாடம் வெளிப்படுத்துங்கள். ஞானிகளும் ,முனிவர்களும் எவ்வளவு ஆச்சரியமான பிறவிகள் அன்பே உருவாய்,கருணையே வடிவமாய், சாந்தமே சொருபமாய் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

நேர்மறையான குணங்களை அடிக்கடி அழுத்தமாக மனதில் ஏற்றிகொல்வதினால் எதிர்மறை உணர்வுகளை விரட்டிக்கொண்டே இருப்பீர்கள். எதிர்மறை உணர்வு நீண்ட நாட்கள் தொடராது. நேர்மையான  உணர்வே உங்களுடைய இயற்கையான உணர்வாக மாறிவிடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:16 pm

"N" is for NOW

எதையும் காலம் தாழ்த்தாதீர்கள் . ஒத்திப்போடாதீர்கள் .இபொழுது செய்ய வேண்டிய பணிகளை இப்போதே செய்து முடியுங்கள் . பெருமை அடைவதர்க்கும் வெற்றிகளை வென்று குவிப்பதற்கும் ஒத்திப்போடும் சுபாவம் பெரும் தடைக்கல்லாகும் .வெற்றி பெற்றோர்களுக்கும் ,பெறாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் தங்கள் யோசனைகளை எவ்வளவு  விரைவாக செயல்படுத்தினார்கள் என்பதுதான்.

சற்று தாமதித்தால் இன்னும் பல மகத்தான யோசனை வரும் அப்போது செயல் படுத்தலாம் என்று நினைத்தால் பேச்சு மட்டும் தான் வசீகரமாக போய்க்கொண்டு இருக்கும். உங்கள் யோசனைகளையும் , திட்டங்களையும் உடனுக்குடன் செயல் படுத்தும்போது அந்த வேலை குறைவதோடு, மலைப்பாகவும் தோன்றாது.

ஒத்திப்போடும் போது இயல்பாகவே புது வேலைகள் கூடும் .அதன் காரணமாக எரிச்சல் தோன்றும் . ஆகவே தான் அவ்வப்பொழுது  பணிகளை அப்போதே முடிக்க வேண்டும். இதனால் கால அவகாசமும் கிடைக்கும். உள்ளார்ந்த வெற்றியை உணர போதிய சக்தி இருக்கும்.

ஆகவே "DIN" எனும் தாரக மந்திரத்தை நினைவில் வையுங்கள். அது என்ன சொல்கிறது ? Do it now ! என்று  பனிக்கிறது. இன்றே இப்பொழுதே செய்யப்படக்கூடிய காரியத்தை நாளைக்கு என்று ஒத்தி போடாதீர்கள்.உங்கள் நல்யோசனைகளை இன்றே செயல் படுத்துங்கள். மேலும் ஒரு நாள் கூட தாமதிக்க வேண்டாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 12:17 pm

"T" is for TARGET

எதற்கும் எவருக்கும் ஓர் இலக்கு என்று ஒன்று உண்டு. ஏதோ ஓர் எல்லையில்லாத தூரத்தில் இருக்கும் இலக்கு ஒன்றை  மனிதிலே வைத்து உயர பாடுபட வேண்டும். தொழில் உலகத்திலும் சரி, சமூக சூழல்களிலும் சரி இலக்குகள் மதிக்கப்பட்டு உழைப்பால் அடையப்பட வேண்டும்.ஒரு வெற்றிகரமான விஞ்ஞானியாகவோ ,அரசியல்வாதியாகவோ , அல்லது மதத் தலைவராகவோ , இல்லை பெரிய தொழிலதிபராகவோ ,உயர்ந்த பதவியையோ அடைய இடையறாத முயற்சி கொண்டு அதை உங்கள் இலக்காக நிர்ணயித்துக்கொண்டு அடையப்பாருங்கள்.

ஆனால் என்றென்றைக்கும் ஆன்மிக இலக்கை மறந்துவிடாதீர்கள். நேர்மை தவறாத  மனத்துடனும் தீர்மானமான உள்ளத்துடனும்  ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் "STUDENT" எனும் சொல்.

S  -STUDY
T  -TENACITY
U  -UNDERSTANDING
D  -DEVOTION
E  -ERADICATION OF DEFECTS
N  -NOW
T  -TARGET

என்பதை தான் குறிக்கிறது.

இதை எந்நாளும் மறக்க வேண்டாம். வாழ்க்கை எனும் சர்வகலா சாலையில் நீங்கள் ஒரு மாணாக்கன் என்ற உணர்வோடு வாழ்ந்தால் அது நிறைவடையும் பரிசளிக்கும் , நீங்கள் உங்களுக்கு வகுத்துக்கொண்ட இலக்குகள் எல்லாவற்றையும் அடைவீர்கள்.



http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by kanmani singh Wed Jul 30, 2014 1:48 pm

படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்! நன்றி நண்பா!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by செந்தில் Wed Jul 30, 2014 2:26 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by mohaideen Thu Jul 31, 2014 11:23 am

6 எழுத்துக்களுக்கும் தனித்தனியான விளக்கங்கள் அருமை.

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by ஸ்ரீராம் Thu Jul 31, 2014 12:15 pm

சூப்பர்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by நண்பன் Fri Aug 01, 2014 10:47 am

சூப்பர் 
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

மாணவன் Empty Re: மாணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum