Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தையின் முதல் ரோல் மாடல்!
Page 1 of 1 • Share
குழந்தையின் முதல் ரோல் மாடல்!
‘‘பனிக்குடத்தில் சிறகு விரித்து வளரத் தொடங்கும் செல்லத்தின் குணநலன்களை தாயின் நடவடிக்கைகளே கட்டமைக்கின்றன. அதுமட்டுமல்ல... குழந்தை எவ்வளவு வளர்ந்தாலும், தாய்க்கும் பிள்ளைக்குமான உறவில் ‘தி எண்ட்’ கார்டு போடவே முடியாது. அடுத்தடுத்த தலைமுறையிலும் அது பாட்டியை பற்றிய நினைவுகளாகத் தொடரும்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அருணா விண்ணரசி.
‘‘தாய்மையின் போது பெண்ணுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முக்கியமானவை. ‘லவ் ஹார்மோன்’ என அழைக்கப்படும் ‘ஆக்ஸிடோசின்’ குழந்தையின் மீதான பிணைப்பைப் பலப்படுத்துகிறது. ‘மதரிங் ஹார்மோன்’ என அழைக்கப்படும் ‘புரோலாக்டின்’ பால் சுரக்கும் தன்மையை உருவாக்குகிறது... குழந்தைக்கான ஏக்கத்தை உண்டாக்குகிறது. கருவுற்றிருக்கும்போது தாய் எதிர்கொள்ளும் உணர்வுகளின் அழுத்தமும் அதற்கான தாக்கமும் குழந்தைக்குள் பதிவாகிறது.
பால் குடிக்கத் தொடங்கும்போது பசி தீர்வதுடன், குழந்தைக்கு டென்ஷனும் குறைகிறது... பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறது. அள்ளிக் கொள்வது, முத்தமிடுவது, தாலாட்டித் தூங்க வைப்பது, அழுதால் தேற்றுவது போன்ற உணர்வு ரீதியான வெளிப்பாடுகள் குழந்தைக்குள் அன்புக்கான வெளியை விரிவுபடுத்துகிறது. மூளையின் ‘ஹிப்போ கேம்பல்’, ‘அமைடலா’ பகுதிகளை தாயின் அன்பான அணுகு முறை விரிவடையச் செய்கிறது. கருவிலேயே மூளையின் செல்கள் உருவாகிவிட்டாலும், அதற்கான இணைப்புகளை அதிகப்படுத்துவது வெளியில் குழந்தைக்குக் கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் வளர்ப்பு முறையும்தான்.
முதல் வருடத்தில் தாய்ப்பால் குடித்திருந்தாலும் குடிக்காமல் இருந்தாலும் அன்பு செலுத்தும் முறையை தாயின் வழியாகவே குழந்தை தெரிந்து கொள்கிறது. தாயின் அன்புதான் மற்ற மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் பழகுவதற்குமான மனநிலையை, சமூகத்தின் மீதான நம்பகத் தன்மையை உருவாக்குகிறது. தாயிடம் அன்பு கிடைக்காத குழந்தையால் மற்றவர்களின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாது. அன்பை செலுத்தவும் வாங்கிக் கொள்ளவும் சிரமப்படும். மற்றவர்களுடன் கலந்து பழகத் தெரியாமல் கெட்ட பெயருக்கு ஆளாகும். பிடிக்காதது நடக்கும் போது மூர்க்கத்தனமாக வன்முறையில் ஈடுபடும். சிறுவயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல், பாலியல்ரீதியான குற்றங்களில்
ஈடுபடுதலுக்கு அன்பான குழந்தைப் பருவம் அமையாமல் போவதும் காரணம்.
அம்மாக்களில் பல வகை. ‘அத்தாரிட்டேரியன்’ வகையைச் சேர்ந்தவர்கள், தான் சொல்வதும் செய்வதுமே சரி என்பவர்கள்... குழந்தைகள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க மறுக்கிறவர்கள்... குழந்தையின் உணர்வுகளை, நியாயங்களை புரிந்து கொள்ளாமல் தன் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் தங்கள் விருப்பத்தையும் உணர்வையும் வெளிக்காட்ட பயப்படுவார்கள். சார்ந்து வாழும் மனோபாவத்தைப் பெறுவார்கள். தனக்குப் பிடித்ததையோ, இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பதற்கோ கூட தயங்குவார்கள். முடிவெடுப்பதிலும் பிரச்னைகளை எதிர்கொள்வதிலும் மற்றவர்களின் கருத்தைக் கேட்டே நடப்பவர்களாக வளர வாய்ப்பிருக்கிறது. சுயசார்பில்லாத குழந்தைகளால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய முடியாது.
‘அத்தாரிடேட்டிவ்’ என்பது இரண்டாவது வகை. இந்த அம்மாக்கள், குழந்தை இங்கே, இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார்கள். அதே நேரம் அதில் சிரமத்தை சந்தித்தால், தன் கருத்தைச் சொல்ல குழந்தையை அனுமதிப்பார்கள். குழந்தையின் விருப்பத்தையும் நடைமுறைச் சிக்கலையும் புரிந்து கொண்டு மனம் புண்படாத அளவில் மாற்றங்கள் செய்வார்கள். இவர்கள் கட்டுப்பாடுகளை விதித்தாலும் திணிப்பதில்லை. இவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் நல்லது கெட்டதை வகை பிரித்து பார்க்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். வெளியிடங்களில் சூழலுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு சாதிப்பவர்களாக வளர்வார்கள். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் பக்குவம் இவர்களுக்குக் கிடைக்கிறது. இதுவே சிறந்த குழந்தை வளர்ப்பு முறை.
மூன்றாவது வகை ‘பர்மிசிவ்’. குழந்தைக்கு அதிகபட்ச சுதந்திரம் அளிப்பார்கள். எது கேட்டாலும் வாங்கித் தருவார்கள். இந்த சூழலில்தான் குழந்தைகள், பெற்றோரை ஆட்டுவிப்பவர்களாக மாறுகிறார்கள். தான் சொல்வதுதான் நடக்க வேண்டும் என்ற அதிகாரத்தை வெளிப்படுத்தும் பண்பு உருவாகிறது. இவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரே இடத்தில் பணியாற்ற மாட்டார்கள். தனக்காக எல்லாவற்றையும் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். திறமை இருந்தாலும் அவற்றை சரியாக வெளிப்படுத்தி, வெற்றியை எட்டுவதற்கான வழியை இவர்கள் தேடுவதே இல்லை. எப்போதும் பிரச்னைகளின் பின்னால் அலைவார்கள்.
‘அன் இன்வால்வ்டு பேரன்டிங்’ நான்காவது வகை. குழந்தையை வயிற்றில் சுமப்பதையே இவர்கள் பெரிய பிரச்னையாக நினைப்பார்கள். குழந்தையை வளர்ப்பதில் அக்கறை காட்ட மாட்டார்கள். குழந்தையின் பசி, தூக்கம், துக்கத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் நம்பிக்கையின்றி, பயத்துடன் வளர்வார்கள் குழந்தைகள். தனக்குக் கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைக்கிறதே என்ற பொறாமை முளைவிடத் தொடங்கும். திருடுதல், பொய் பேசுதல் போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொள்ளும். பெற்றோருக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வதை வீரம் என்று நினைப்பார்கள். சுற்றி இருப்பவர்களிடம் பய உணர்வை ஏற்படுத்துவார்கள். பின்னாளில் சமூக விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபடவும் அக்கறையற்ற வளர்ப்பு முறையே காரணம் ஆகிறது.
குழந்தையின் முதல் ரோல் மாடல் ‘அம்மா’. அம்மாதான் உறவுகளையும் உணர்வுகளையும் அறிமுகம் செய்கிறார். தாயின் நடத்தையே குழந்தை கற்றுக் கொள்ளும் முதல் பள்ளி. தாயின் அன்பு, நல்ல மனிதர்களை இனம் கண்டுகொள்வதற்கான வழியமைத்துக் கொடுக்கிறது. தாயின் சின்னச் சின்ன வெளிப்பாடுகள் கூட குழந்தையை செதுக்கி உருவாக்குகின்றன. தாய்மை எனும் மந்திரம் ஒரு குழந்தையின் மனதுக்குள் இவ்வளவு மாயங்கள் செய்கிறது. ஒவ்வொரு தாயும் இவ்வளவு பொறுப்புகளையும் உணர்ந்து குழந்தையை வளர்க்க வேண்டும். அப்போதுதான் மழை கண்டு விரியும் மயில் போல சக மனிதரின் வலியுணர்ந்து உதவும் மனிதர்கள் இந்த சமூகத்துக்கு கிடைப்பார்கள்!’’
தினகரன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குழந்தையின் முதல் ரோல் மாடல்!
சூப்பர்
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை
» மாடல் அழகிகளின் கேட்வாக் நிகழ்ச்சி நடக்க இருப்பதால்...
» சாம்சங் - கிராண்ட் பிரைம் மாடல் விபரம் தேவை
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» வாழை பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» மாடல் அழகிகளின் கேட்வாக் நிகழ்ச்சி நடக்க இருப்பதால்...
» சாம்சங் - கிராண்ட் பிரைம் மாடல் விபரம் தேவை
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» வாழை பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum