Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எபோலா வைரஸ் முழுமையான விவரம் - கவர் ஸ்டோரி.
Page 1 of 1 • Share
எபோலா வைரஸ் முழுமையான விவரம் - கவர் ஸ்டோரி.
ஆப்ரிக்க நாடுகளை மிரட்டி வரும் எபோலா வைரஸ் நோய் பாதித்த குனியாவில் இருந்து ஒரு வாலிபர் (பார்த்திபன்) தமிழகத்திற்கு வந்தார். தமிழகம் வந்த இந்த 26 வயது வாலிபர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இந்த நபரை சென்னையில் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு தனி அறையில் தீவிர சிகிச்சை அளித்து. அவரிடம் எபோலா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறி, அவரை அரசு மருத்துவ மனையில் தனியாக ஒரு வார்டில் சேர்த்து, அவரின் ரத்த மாதிரியை எடுத்த சோதனை நடத்தினர். இதில், எபோலா வைரஸ் கிருமிகள் இல்லாததால், பார்த்திபனை மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். தொடர்ந்து அவரை 21 நாட்கள் கண்காணிக்க வேண்டும் என தேனி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
உலகை அச்சுறுத்தி வரும் புதிய எபோலா நோய்க்கிருமி, ஆப்ரிக்க நாடுகளில் முதன் முதலாக பரவியது. குறிப்பாக நைஜீரியா, கென்யா, லைபீரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளிலும் இந்த நோய் பரவி வருகிறது. ஆப்ரிக்க நாடுகளில் 961 பேர் உயிரிழந்துள்ளனர். 1,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 45,000 இந்திய மக்கள் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசித்து வருகின்றனர்.
அந்த நாடுகளில் நிலைமை விபரீதமாகும் என்றால் அவர்கள் இந்தியா திரும்பி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எபோலா வைரஸ் சாத்தியக்கூறுகள் இந்தியாவில் குறைவாக இருக்கும்போதும் இதனை சமாளிப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சரி எபோலா நோய் என்றால் என்ன?
எபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா குருதி ஒழுக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று எபோலா தீ நுண்மத்தின் நான்கு வகைகளால் மனிதரில் ஏற்படும் நோய் பெயரிடப்பட்டுள்ளது. இது ஓர் உயிருக்கு கேடு விளைவிக்கும் கடுமையான நோயாகும். கடுமையான குருதி இழப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.
1976ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் சையர் நாட்டின் எபோலா ஆற்றங்கரையில் இத்தீநுண்மம் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு எபோலா தீநுண்மம் என்ற பெயர் ஏற்பட்டது. சையர், கோட் டிவார், சூடான் ஆகிய நாடுகளில் இத்தீநுண்மம் பற்றுவதற்கான தீவாய்ப்புள்ளது.
நோய் பரவல்:
இத்தீநுண்ம நோய் வாய்ப்பட்ட நோயாளியின் நீர்மங்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அவற்றின் மூலமாக தீ நுண்மம் உட்செல்கிறது. இது காற்றின் மூலமாகப் பரவுவதில்லை. எபோலா நோயுற்றவர்கள் ஏராளமாக குருதி இழப்பர். அவர்களது வயிற்றுப் போக்கிலும் வாந்தியிலும் குருதி இருக்கும். கடுமையான நோயுற்றவர்களின் மூக்கு, காதுகள் மற்றும் ஆண்/பெண்குறிகளிடமிருந்து குருதி ஒழுகும். இந்த நீர்மங்கள் மற்றவர்கள் நோய் பற்றிக்கொள்ள காரணமாக அமைகின்றன.
நோய் அறிகுறிகள்:
ஒருவருக்கு எபோலா பற்றும்போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டைவலி ஆகியன முதல் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளால் மலேரியா அல்லது குடற்காய்ச்சல் நோயென தவறாக எண்ணப்படுவதுண்டு. பின்னர் நோய் தீவிரமாகி குருதி இழக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி, குறைந்த குருதி அழுத்தம், விரைவான நாடித்துடிப்பு (இதயத் துடிப்பு), மற்றும் உறுப்புகளுக்கு குறைந்த குருதி வழங்கல் ஆகியன அறிகுறிகளாகும். இவற்றால் உறுப்புக்கள் செயலிழக்கத் துவங்குகின்றன. இதனை உறுப்பு செயலிழப்பு என்கின்றனர். மேலும் நோயாளியின் உடலை இறுக்கமாக்குவதால் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாக உள்ளது.
மருத்துவ சிகிச்சை:
இந்த நோய் தீ நுண்மத்தால் உண்டாவதால் மருந்துகள் இல்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் பலர் உயிர் பிழைக்கின்றனர். எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர்ம இழப்பைச் சரிகட்ட அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும். மருத்துவமனையில் சிரைவழி நீர்மங்கள், குருதி ஆகியனவற்றைக் கொடுப்பதுடன் குருதி அழுத்தம், சுற்றோட்டத் தொகுதி சீர்மை ஆகியவற்றிற்கான மருந்துகளும் அளிக்கப்படுகிறது.ஒரே நேரத்தில் பலர் எபோலா வாய்ப்பட்டால் அதனை தடுக்க மருத்துவர்களும் அரசும் விரைந்து செயல்படுகின்றனர். நோயுற்ற மக்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கின்றனர். நோயாளிகள் வெளியேற்றும் நீர்மங்கள் நோய் பரவாதவாறு கழிக்கப்படுகின்றன.எபோலா தீ நுண்மத்திற்கான தடுப்பு மருந்து கண்டறிய அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.
நன்றி: Thiruvarur மணி
Last edited by ஸ்ரீராம் on Wed Aug 13, 2014 9:57 am; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எபோலா வைரஸ் முழுமையான விவரம் - கவர் ஸ்டோரி.
எபோலா வைரஸ்அறிகுறியுடன் சென்னை மருத்துவமனையில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்!!!
கினியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 25 வயது நபர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் எபோலா வைரஸ் தாக்கப்பட்டதான அறிகுறிகள் இருந்ததாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேனியைச் சேர்ந்த இந்த நபர் நேற்று இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர் தனியான அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவிலிருந்து இந்த நபர் தனது சொந்த ஊரான தேனிக்குச் செல்ல சென்னை வந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் எபோலா வைரஸ் நோய் தலைவிரித்தாடுவதால் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ நிபுணர்கள் அங்கிருந்து வரும் பயணிகளை பரிசோதித்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் உதவி மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் எஸ்.ரகுநந்தன் கூறுகையில், “இப்போதைக்கு அந்த நோயாளி எபோலா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் இருக்கிறார். இவரது ரத்த மாதிரி புனேயில் உள்ள தேசிய வைரஸ் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் முடிவு இன்னமும் 24 அல்லது 48 மணி நேரத்தில் கிடைக்கும். அவர் உடல் வெப்ப அளவை ஒவ்வொரு 4 மணி நேரமும் சரிபார்த்து வருகிறோம். முடிவுகள் எப்படியிருந்தாலும் 20 நாட்களுக்கு அவரை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.
எபோலா வைரஸ் தாக்கப்பட்டிருந்தால், காய்ச்சல், தலைவலி, களைப்பு, வாந்தி, பேதி, கடும் வயிற்று வலி, மூட்டு வலி, மற்றும் ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும்.
நன்றி: இணையம்.

வரிசை எண் 3:
எபோலா வைரஸ் குறித்த புகார்களுக்கு இலவச தொலைபேசி எண் அறிவிப்பு
எபோலா வைரஸ் குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியபோது, தமிழகத்தில் எபோலா வைரஸ் குறித்த பாதிப்புகள் எங்கும் இல்லை. எனினும் இது தொடர்பான புகார்களுக்கு பொதுசுகாதாரத் துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். 044-2345 0496, 044-2433 4811 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளாலம் என்று தெரிவித்தனர்.
எபோலா வைரஸ் குறித்த தகவல்கள் இந்த பதிவில் தொடரும்....

என்னமோ... புதுசு புதுசா வருது... டாக்கர்களுக்கு கொள்ளை லாபம்தான்....
Re: எபோலா வைரஸ் முழுமையான விவரம் - கவர் ஸ்டோரி.
இன்றைய செய்தி.
=================
எபோலா' வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து சென்னை விமானநிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் தீவிர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக, விமான நிலையத்தில் மருத்துவக் குழு ஒன்று 24 மணி நேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் பயணிகளில் எவருக்காவது அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் "எபோலா' வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எபோலோ” வைரஸ்!! நோயிலிருந்து தற்காத்து கொளவது எப்படி?
பன்றி காய்ச்சல் உலகை வலம் வந்து ஓய்ந்திருக்கும் வேலையில் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் உலகை உலுக்க வந்திருக்கிறது. அதுதான் எபோலா எனும் உயிர்கொல்லி வைரஸ்.1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, ‘எபோலா வைரஸ்’ என, பெயர் வந்தது.
“காற்றின் மூலம் பரவாது”
எபோலா என்பது மனிதனின் இரத்த அணுக்களை தாக்கும் ஒருவித கொடிய வைரஸ் கிருமி. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவாது எனினும் வியர்வை, எச்சில், இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் அனைத்தின் மூலமாகவும் இந்த வைரஸ் பரவும்.
“எபோலாவை குணப்படுத்த முடியாது”
எபோலா வைரஸ் தாக்கப்பட்ட நபரை வெகு விரைவாக பலமியக்க செய்யும். இந்த வைரஸ் கிருமியை குணப்படுத்த முடியாது.
நோயின் அறிகுறிகள்: எபோலா வைரஸ் தாக்கிய இரண்டு அல்லது மூன்று வாரங்களில் காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, தசை வலி, வாயிற்று வலி, வாந்தி மற்றும் சில சமயங்களில் இரத்தப் போக்கும் ஏற்படும்.
தற்காத்துக் கொள்வது எப்படி?
> கைகளை அவ்வப்போது சோப்பை கொண்டு நன்றாக கழுவவும்.
> வெளிப்புற உணவுகளை தவிருங்கள். வீட்டிலேயே சுகாதாரமாக தயார் செய்து உண்ணுங்கள்.
> வீட்டை சுத்தமாகவும், சூரிய வெளிச்சம் அனுமதிக்குமாறும் காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
தாக்கினால் என்ன செய்வது?
உடனடியாக தலைமை மருத்துவமனையை நாடுங்கள்.மேலும் எபோலா வைரஸ் குறித்த சந்தேகங்கள், புகார்களுக்கு இலவசத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. . இந்தக் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 044-2345 0496, 2433 4811. அல்லது தமிழக அரசின் 104 மருத்துவ உதவி சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» லைசென்ஸ் அ முதல் ஃ வரை... - கவர் ஸ்டோரி
» ஜல்லிக்கட்டு அவசியம் தேவை. ஏன் எதற்கு? கவர் ஸ்டோரி.
» எபோலா வைரஸ் கொல்லி கண்டுபிடிப்பு; குரங்குக்கு கொடுத்த பரிசோதனை வெற்றி
» உடல் எதிர்ப்புச் சக்தியை எபோலா வைரஸ் எப்படி செயலிழக்கச் செய்கிறது? - ஆய்வில் கண்டுபிடிப்பு
» மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum