Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!
Page 1 of 1 • Share
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!
எம்.பரக்கத் அலி, ஓவியங்கள்: கண்ணா
அட... அமைச்சரவை மாற்றங்களின்போது மட்டுமே தமிழக அமைச்சர்கள் செய்திகளில் அடிபடுகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பிரத்யேக இயல்புகள் என்ன? எதுவுமே தெரியாத மூடுமந்திரமாகத்தானே இருக்கிறது. ஒரு 'மினிஸ்ட்ரி ரவுண்ட்-அப்’ அடிப்போம். வாருங்கள்...
யார் என்ன பழமொழி சொன்னாலும் அதன் அர்த்தம் கேட்டு மனதில் இருத்திக்கொள்வது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பழக்கம். அதோடு பழமொழிகள் தொடர்பான புத்தகங்களையும் படிப்பார். 'கிழிஞ்ச ஜிப்பா... தகர டப்பா’ என கருணாநிதி பெயர் சொல்லாமல் வளர்மதி சட்டசபையில் பேசியபோது, தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தனர். உடனே, 'மூளி என்றால் இவர்கள் ஏன் மூக்கை தொட்டுப் பார்க்கிறார்கள்?’ என பதிலடி கொடுத்தார் ஓ.பி. அதற்கெல்லாம் அந்தப் பழமொழி பிரேமையே காரணம்!
'எக்ஸ் மினிஸ்டர்’ என லெட்டர் பேடு அச்சடித்து வைத்திருக்கிறார்
ஓர் அமைச்சர் என்றால், நம்புவீர்களா? அவர், சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன். 'உள்ளே... வெளியே’ அமைச்சரவை மாற்றத்தில் இவர் வெளியேற்றப்பட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். அதனாலேயே நிரந்தரமாக 'எக்ஸ்-மினிஸ்டர்’ லெட்டர் பேடு அச்சடித்து வைத்துக்கொண்டிருக்கிறார். 'மினிஸ்டர் போஸ்ட் நிரந்தரம் கிடையாதுல. அதான் இந்த ஏற்பாடு’ என்று நெருக்கமானவர்களிடம் பெருமிதமாகச் சொல்லிக்கொள்வாராம். இதுதாங்க தொலைநோக்குச் சிந்தனை!
[size]
மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் தன்னைப் பற்றி எந்தச் செய்தியும் ஊடகங்களில் அடிபடாமல் பார்த்துக்கொள்வார். அதற்கென ஒரு தனி அணியே வைத்திருக்கிறார். அமைச்சர் தொடர்பான எந்தச் செய்திகளும் வராமல் பார்த்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்களாம் அவர்கள். மக்களுக்கு சேவை செய்யத்தானே எந்த எல்லைக்கும் போகணும்![/size]

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!
'சட்டப்படி’ அமைச்சர் என்று பெயர் வாங்கி வைத்திருக்கிறார் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன். யாராவது உதவி கேட்டால், 'சட்டப்படி செய்ய முடியுமா? முடிஞ்சா செஞ்சுகொடுங்க’ என்று பரிந்துரைப்பதாலேயே இந்தப் பெயர்.
பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத காமராஜர் முதல்வராக இருந்த மாநிலத்தில், ஐந்தாவது வகுப்பு மட்டுமே படித்த 'முக்கூர்’ சுப்பிரமணியன் 'தகவல் தொழில்நுட்ப அமைச்சர்’ என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுதான். ஆனால், ஈமெயில், கூகிள், வாட்ஸ்-அப், இணையம், ஈ கவர்னன்ஸ், வீடியோ கான்ஃபரன்ஸ்... என தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து எதுவும் தெரியாத, புரியாத அவர், அத்துறை வளர்ச்சிக்கு என்ன பாடுபட முடியும் என்பதை நித்தம் நித்தம் விவாதிக்கிறார்களாம் துறை அதிகாரிகள்!
குடிநீர் தொடர்பான விவகாரங்கள் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டது. ஆனால், அந்தத் தண்ணீரை வைத்து 'அம்மா குடிநீர்’ ஆரம்பித்து சபாஷ் வாங்கிய பலே கில்லாடி போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனால் கிளெட்ச்சை அழுத்தி கியர் தட்டவேண்டிய போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், புட்டியில் தண்ணீர் நிரப்பி மூடி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சருக்கு வராத யோசனை, செந்தில்பாலாஜிக்கு வந்தது. போக்குவரத்து ஊழியர்களின் உடம்பில் இருந்து லிட்டர் கணக்கில் ரத்தம் உறிஞ்சி, 'கின்னஸ்’ சாதனை படைத்து அம்மாவிடம் சமர்ப்பித்தார். இந்த 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால்’ செந்தில்பாலாஜிமீது மற்ற அமைச்சர்களுக்கு செம காண்டு. 'அம்மா’வும் இவர்கிட்ட உஷாரா இருக்கணும்போல!
கோரிக்கைகளுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அறிவுரை மழை பொழிவது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா ஸ்டைல். 'எதிர்காலத்தைப் பாரு. பிள்ளைகளைப் படிக்க வை. குடும்பத்தைக் காப்பாத்து...’ என அறிவுரைகளை அள்ளிவிடுவார்.
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபாலிடம் விநோதமான ஒரு பழக்கம் உண்டு. உள்ளாடைகள் உள்பட தன்னுடைய ஆடைகள் அனைத்தையும் அவரே துவைத்து அலசி காயப்போடுவாராம். இவரின் பல வருடப் பழக்கமான இது, அமைச்சரான பிறகும் தொடர்கிறது. 'அமைதிப்படை’ சத்யராஜ் குளியல் காட்சி, சார் மனசுல அழுத்தமா பதிஞ்சிருச்சுபோல!
கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரை வெரைட்டியாகத் திட்டியே 'மாண்புமிகு’ ஆனவர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அப்படி விதவிதமான வசை பாடல்களை எழுதிக்கொடுப்பதற்காகவே ஒருவருக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் விஜயபாஸ்கர். இவருடைய இந்த வியூகத்தை தாமதமாகத் தெரிந்துகொண்ட சில அமைச்சர்கள், இப்போது நன்றாக எழுதத் தெரிந்த தமிழ் பட்டதாரிகளை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர்களிலேயே அதிதீவிர பக்திப் பழம்... சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி. பெரிய வட்டப் பொட்டு, சந்தனம், விபூதி என நெற்றி முழுக்க நிரப்பிக்கொள்பவர், பெரிய டாலர் செயினை புடைவைக்கு மேலே நன்றாகத் தெரியும்படி எடுத்துவிட்டிருப்பார். காரணம், அந்த டாலரில் 'அம்மா’ படம் பளிச்சிடும். கோட்டையில் அவருடைய அறை மினி கோயிலாகக் காட்சியளிக்கும். கருமாரி அம்மன், கற்பக விநாயகர், காளிகாம்பாள் படங்களை சுவர் முழுவதும் மாட்டி வைத்திருப்பார். மேஜையோ அஷ்டலட்சுமி, விநாயகர் சிலைகள் நிரம்பி கர்ப்பக்கிரகம்போல காட்சியளிக்கும். நடுநாயகமாக 'அம்மா’ படம். அந்த வரிசையில் சம்பந்தமே இல்லாமல், விவேகானந்தர் படம் ஒன்றும் இருப்பதுதான் ஆச்சர்யம்!

அம்மாவிடம் பூங்கொத்து கொடுக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள், காட்டும் பவ்யம் ஒவ்வொன்றும் ஒருவிதம். வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிகவும் எட்ட நின்று இடுப்புக்கு மேல் முழு உடலையும் வளைத்து நின்று பூச்செண்டு கொடுப்பார். ஜெயலலிதாவே எட்டித்தான் அதை வாங்கவேண்டியிருக்கும். 'அம்மா இருக்கும் இடம் கோயில். அங்கே செருப்பு போடலாமா?’ எனச் சொல்லி கொஞ்ச நாள் செருப்பு போடாமல் திரிந்தவர் இவர்.
ஒவ்வோர் அமைச்சரும் தங்கள் துறை சார்பாக புதிய திட்டமோ அறிவிப்போ வெளியிடுவதாக இருந்தால், ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் அதை முதலில் அமல்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என அலசி ஆராய்ந்துவிட்டுதான் பிற தொகுதிகள் பக்கம் கவனம் திருப்புவார்கள்.
ஆச்சர்யமாக, எந்த அமைச்சரின் மேஜையிலும் கணினி இல்லை!
'மூவ்மென்ட்’ - அம்மாவின் கான்வாய் கிளம்பிவிட்டதற்கான சங்கேத வார்த்தை இது. கார்டனில் ஜெயலலிதா தயாராகும் முன்னரே, அவரது கான்வாய் ஆயத்தமாகிவிடும். கார்கள் அணிவகுக்கத் தொடங்கியதுமே, முதல்வரின் பாதுகாப்பு போலீஸார் 'கான்வாய் ரெடி’ என ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிடுவார்கள். அது 'பி.எஸ்.ஓ’ என அழைக்கப்படும் அமைச்சர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வந்து சேரும். உடனே அவர்கள் அமைச்சர்களுக்கு தகவல் சொல்ல, அலர்ட் ஆவார்கள். என்ன வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முக்கூர் சுப்ரமணியன் அறைகளில் கூடுவார்கள். காரணம், கோட்டையில் ஜெயலலிதா கார் வந்து நிற்கும் போர்ட்டிக்கோவுக்கு அருகில்தான் அந்த இரண்டு அறைகளும் இருக்கின்றன. அம்மாவின் கார் வந்து சேரும் வரை அங்கே பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். கார்டனில் இருந்து கான்வாய் கிளம்பியதும் ரெண்டாவது எஸ்.எம்.எஸ் வரும். அவ்வளவுதான்... புரோட்டோக்கால்படி வரிசைக் கட்டி நின்றுவிட்டு 'கப்சிப்’ ஆகிவிடுவார்கள்.
'அட, அமைச்சர்கள் ஏன் எப்பவும் இவ்ளோ டென்ஷனா இருக்காங்க?’ என்று கேட்கிறீர்களா? 'முதல்வன்’ ரகுவரன், அர்ஜுனிடம் கேட்பாரே... அதுபோல... ஒரு நாள்... ஒரே ஒரு நாள் நீங்கள் 'அம்மா அமைச்சரவையில்’ இருந்து பாருங்களேன். அப்போ புரியும்!
விகடன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum