தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

View previous topic View next topic Go down

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்! Empty வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

Post by செந்தில் Wed Sep 10, 2014 1:58 pm

இந்தியாவில் 21 சதவிகித தொற்றுநோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்னைகள் எண்ணில் அடங்காதவை. தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துக் குடிப்பதற்கெல்லாம் நம்மில் பலருக்கு நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள வாட்டர் கேன் பயன்படுத்தினாலும்கூட கிருமிகளுக்குப் பஞ்சமில்லை. எங்கும் எதிலும் கலப்படம் என்பது குடிநீரையும் விட்டு வைக்கவில்லை. ‘நல்ல தண்ணீர்’ என்று உத்தரவாதம் தரக்கூடிய ஒரே வசதி வாட்டர் பியூரிஃபையரில்தான் கிடைக்கிறது.

சரி... வாட்டர் பியூரிஃபையர் வாங்கப் போகிறீர்களா?

கடைக்குள் நுழைந்ததும் ஏகப்பட்ட பிராண்டுகள், கிறுகிறுக்க வைக்கும் விலைப்பட்டியல், எந்த பிராண்ட் பெஸ்ட்? நம்ம பட்ஜெட்டுக்கு எது சரியா இருக்கும்? இது போன்ற குழப்பங்கள்தான் மிஞ்சும். அந்தக் கவலைகளை நீக்க இதைப் படியுங்கள் முதலில்...

இரண்டு வகை வாட்டர் பியூரிஃபையர்கள் இருக்கின்றன. உப்புத் தண்ணீரை சுத்தம் செய்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராகக் கொடுப்பது ஸிளி (REVERSE OSMOSIS) வகை. இது, சவ்வூடு பரவல் முறையில் செய்யப்படுவது. நிலத்தடி நீர், கிணற்று நீரை சுத்திகரிப்பு செய்து நல்ல தண்ணீராக கொடுப்பது UV (ULTRA VIOLET) வகை. இந்த இரு அடிப்படைகளில்தான் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

சில மாடல்களை கிச்சனில் உள்ள பைப்புடன் இணைத்து சுவரில் பொருத்திக் கொள்ளலாம். தனியாக இடவசதி தேவையில்லை. நம் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீரில் உள்ள குளோரின், கிருமிகள் போன்றவற்றை கிட்டத்தட்ட 7 கட்டங்களாக சுத்தம் செய்து, நல்ல தண்ணீராக்கி நமக்கு கொடுப்பதுதான் வாட்டர் பியூரிஃபையரின் வேலை.

இக்கருவி ஒரு மணி நேரம் இயங்குவதற்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும். பெரும் பாலும் எல்லா பிராண்டுகளுமே ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கின்றன. பியூரிஃபையர் மூலம் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர், உடலுக்கு எவ்விதத் தீங்கையும் கொடுக்காது. அப்படியே குடிக்கலாம்... சமையலுக்கும் பயன்படுத்தலாம். கொதிக்க வைக்க வேண்டிய தேவையில்லை.

என்னென்ன பிராண்டுகள்?
யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்டர் பியூரிஃபையர்கள்தான் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன. (விலை: ரூபாயில்)
CLASSIC : 7,990 (UV முறை )
DUO : 16,990 (RO + UV என இரண்டு வகைகளும்)
ENHANCE : 13,990 (RO முறை).
BOOSTER : 9,190 (இதற்கு கனெக்ஷன் தேவையில்லை. ஒரு பைப் மூலம் குடத்தில் உள்ள தண்ணீரையே சுத்தப்படுத்திக் கொள்ளலாம்).
HIFLOW : 9,490 (ஒரு மணி நேரத்துக்கு 180 லிட்டர் தண்ணீர் கொடுக்கக் கூடியது. கூட்டுக் குடும்பத்துக்கு பொருத்தமாக இருக்கும்).
INFINITI : 11,490.
SENSA : 21,990 (UV + UF) பல கட்டங்களாகத் தண்ணீரைசுத்தப்படுத்தி
அதிலுள்ள பாக்டீரியாக்களை நீக்குவதுதான் FU என்ற
ULTRA FILTERATIONமுறை.
NANO RO+UV : 10,000
SPRING FRESH DX : 15,000 (எப்படிப்பட்ட தண்ணீரையும் சுத்தப்படுத்தக் கூடியது).
ELEGANT RO : 11,600
CRYSTAL : 8,000
AQUAFLODX : 6000 இவை யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின்தயாரிப்புகள்.
PUREIT RO MARVELLA RO : 13,500
MARVELLA METRO : 7,500
WHIRLPOOL MINERALA85 : 16,800
KENT GRAND+ : 16,800 இவை மற்ற பிராண்டுகள்.

சில இடங்களில் கிடைக்கும் தண்ணீர், அதிக உப்புத்தன்மையுடன் இருக்கும். பெரிய தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் ஆயில் தன்மையுடன் கூடிய தண்ணீர் வரும். இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு ஹிதி முறையில் சுத்திகரிப்பு செய்யும் பியூரிஃபையர் தேவைப்படும்.

வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படும் வாட்டர் பியூரிஃபையர்கள், ஒரு மணி நேரத்துக்கு 6 லிட்டரிலிருந்து 60 லிட்டர் வரை தண்ணீரை சுத்தம் செய்து தரக்கூடியவை. அதிகம் தண்ணீர் தேவைப்படுபவர்கள் அதற்கேற்ற வசதியுள்ளவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு வாட்டர் பியூரிஃபையரும் 6 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீரை சுத்திகரித்துக் கொடுக்கும். அதற்குப் பிறகு பியூரி ஃபையரில் உள்ள ஃபில்டரை மாற்ற வேண்டும். 6 ஆயிரம் லிட்டரை நெருங்கும் போது ஃபில்டரை மாற்றுவதற்கான அலர்ட் கொடுப்பதற்கான வசதிகள் சில பியூரிஃபையர்களில் கிடைக்கின்றன. ஒரு ஃபில்டருக்கான செலவு குறைந்தது 2,000 ரூபாய்க்கு மேலாகும்.

வாட்டர் பியூரிஃபையர்களுக்கு பராமரிப்பு என்று தனியாக எதுவும் தேவை இல்லை. சில மெஷின்களில் ஃபில்டர் செய்த தண்ணீர் போக, அழுக்குகள் ஒரு பகுதியில் தேங்கி நின்றுவிடும். அவற்றை மட்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை க்ளீன் செய்தால் போதும். மற்றபடி 4 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சேமித்து வைத்திருந்தால், 2 நாட்களுக்குள் பயன் படுத்த வேண்டும். இல்லையென்றால், மறு படியும் கிருமிகள் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. சில பியூரிஃபையர்களில் சில்வர் நானோ டெக்னாலஜி பொருத்தப்பட்டிருக்கும். இந்த வசதி இருந்தால், நாம் சேமித்து வைத்திருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்தக் கிருமி தாக்குதலுக்கும் உள்ளாகாது. ஆனாலும், தண்ணீரை அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக பயன்படுத்திக் கொள்வதே நல்லது.

தண்ணீரை ஸ்டோரேஜ் முறை மூலம் சுத்தப்படுத்துவதற்கும் நிறைய வசதிகள் இருக்கின்றன. நம் வீட்டுக்கு வரும் மெட்ரோ வாட்டரை சுத்தப்படுத்திக் கொடுப்பதற்காகவே குறைந்த செலவில் ஸ்டோரேஜ் பியூரிஃபையர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இதன் மூலம், குறைந்தது 20 லிட்டர் தண்ணீர் வரைக்கும் சேமித்து, சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதிலும் நிறைய பிராண்டுகள் இருக்கின்றன.

AQUASUE AMRIT : 2,250 (20 லிட்டர் வரை)
CLASSIC FI COMPACT : 1,200 (5 லிட்டர்)
CLASSIC AUTOFILL : 2,200 (8 லிட்டர்)
CLASSIC AUTOFILL : 3,200 (18 லிட்டர்)
KENT GOLD : 3,700 (10 லிட்டர்) இதிலும் ஃபில்டரை 6 மாதத்துக்கு
ஒருமுறை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நன்றி - DINAKARAN.COM
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்! Empty Re: வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

Post by mohaideen Wed Sep 10, 2014 2:01 pm

தகவலுக்கு நன்றி நண்பா

எனக்கு இது மிக அவசியம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்! Empty Re: வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

Post by முரளிராஜா Wed Sep 10, 2014 3:09 pm

இந்த விவரங்களைத்தான் தேடிகொண்டிருந்தேன்
மிக்க நன்றி செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்! Empty Re: வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum