Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
Page 1 of 1 • Share
உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிப்பது கெடுதல் என்பதற்கான 5 காரணங்கள்!!!
சாப்பிடும் போது தட்டின் அருகில் ஒரு நீள சொம்பில் தண்ணீர் வைத்திருப்பதை நாம் தினந்தோறும் காணக்கூடிய ஒரு காட்சியாகும். உணவருந்தும் போது ஒரு டம்ளர் தண்ணீர், குறிப்பாக குளிர்ந்த நீரை தன்னருகில் வைத்துக் கொள்ள பலரும் விரும்புவார்கள். ஆனால் இந்த பழக்கம் உங்கள் உடல்நலத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இங்கு உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான 5 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும்
உங்கள் வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. 'செரிமான தீ' (ஆயுர்வேத நூல்களின் படி) என அழைக்கப்படும் இந்த செரிமான என்சைம்கள், நீங்கள் உண்ணும் உணவை உங்கள் வயிறு இறுக்கி, அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
எச்சில் அளவை குறைக்கும்
செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். இதனால் செரிமான செயல்முறைக்கு தயாராகவும் உதவும். உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி விடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.
அசிடிட்டியை உண்டாக்கும்
அசிடிட்டியால் அடிக்கடி பிணித்தாக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின் மீது பழியை போடலாம். தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். சேச்சுரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது. அதன் பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும் என சோனாலி சபர்வால் கூறுகிறார். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர்பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கும்
உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், அதிகளவில் கிளைசீமிக் உள்ள உணவுகளை உண்ணுவதை போல், உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்கும் என்று சோனாலி சபர்வால் கூறுகிறார். அதற்கு காரணம், உங்கள் உடலால் உணவை சரியாக செரிக்க வைக்க முடியவில்லை என்றால், உணவில் உள்ள குளுகோஸ் பகுதியை கொழுப்பாக மாற்றி அதனை உடலில் தேக்கி வைத்துவிடும். இதன் பின் இந்த செயல்முறை அதிக அளவிலான இன்சுலினை உங்கள் உடலில் எதிர்ப்பார்க்கும். இதனால் உடலின் ஒட்டுமொத்த இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
உடல் எடையை அதிகரிக்க செய்யும்
உணவருந்தும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மற்றொரு பொதுவான அறிகுறி - உடல் எடை அதிகரிப்பது. ஏற்கனவே விவரித்ததை போல், இன்சுலின் அளவு அதிகரிப்பதால், உணவு உடையும் போது, அதிலுள்ள கொழுப்புகள் உடலில் தேங்கிவிடும். இதுப்போக, உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பலவீனமான செரிமான தீ என்று ஆயுர்வேதம் நம்புகிறது. இது உடலில் உள்ள வட, கபா மற்றும் பிட்டா உறுப்புகளுக்கு இடையே சமமின்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாது உடல் வேலை செய்யும் முறையில் பாதிப்பை உண்டாக்கிவிடும்.
உணவில் உப்பை குறைக்கவும்
குறைந்த அளவில் உப்பு சேர்த்த உணவை உண்ணுங்கள். உப்பு என்பது வேகமாக தாகத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். அதனால் அதனை குறைத்து கொண்டால் அது மிகவும் நல்லதாகும்.
உணவை நன்கு மென்று விழுங்கவும்
உணவை அப்படியே விழுங்காதீர்கள்; நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளிக்கும். மேலும் செஇமான செயல்முறையை வேகமாக்க எச்சிலும் உதவும். இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மென்று உண்ணுவதால் உள்ள மற்றொரு பயன் - எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது.
30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும்
உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும் முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்க வேண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
பயனுள்ள தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
உண்மைதான்... அப்படியே குளித்த உடனே கூட சாப்பிடக் கூடாது. 30 முன்பே குளிக்க வேண்டும் இல்லையேல் சாப்பிட்டுவிட்டு 30 நிமிடம் பொருத்துதான் குளிக்க வேண்டும்.
கூடவே குறைந்த பட்சம் 6 சுவைகளில் 3-4 சுவைகளையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது. வந்த நோயும் படிப்படியாகச் சரியாகிவிடும் சக்கரை நோய் உள்பட... !!!
கூடவே குறைந்த பட்சம் 6 சுவைகளில் 3-4 சுவைகளையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது. வந்த நோயும் படிப்படியாகச் சரியாகிவிடும் சக்கரை நோய் உள்பட... !!!
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
குளிக்காமலே இருந்துட்டா எப்ப வேண்டுமானாலும் சாப்பிடலாம்லகவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்... அப்படியே குளித்த உடனே கூட சாப்பிடக் கூடாது. 30 முன்பே குளிக்க வேண்டும் இல்லையேல் சாப்பிட்டுவிட்டு 30 நிமிடம் பொருத்துதான் குளிக்க வேண்டும்.
கூடவே குறைந்த பட்சம் 6 சுவைகளில் 3-4 சுவைகளையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது. வந்த நோயும் படிப்படியாகச் சரியாகிவிடும் சக்கரை நோய் உள்பட... !!!
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
படிக்க வேண்டிய பதிவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
இதுவும் நல்லாதானே இருக்கு... ஆனா நோய் வரும் பரவாலையா? அண்ணா வர்ற கோவத்துக்கு...முரளிராஜா wrote:குளிக்காமலே இருந்துட்டா எப்ப வேண்டுமானாலும் சாப்பிடலாம்லகவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்... அப்படியே குளித்த உடனே கூட சாப்பிடக் கூடாது. 30 முன்பே குளிக்க வேண்டும் இல்லையேல் சாப்பிட்டுவிட்டு 30 நிமிடம் பொருத்துதான் குளிக்க வேண்டும்.
கூடவே குறைந்த பட்சம் 6 சுவைகளில் 3-4 சுவைகளையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது. வந்த நோயும் படிப்படியாகச் சரியாகிவிடும் சக்கரை நோய் உள்பட... !!!
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
குளிக்காமலே இருந்துட்டா எப்ப வேண்டுமானாலும் சாப்பிடலாம்ல
உங்க பழக்கத்தையா கேட்டாங்க.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
ஹீலர் பாஸ்கர் அவர்கள் இந்த கருத்தைதான் வலியுறுத்தி வருகிறார்கள். நானும் கடந்த 4 வருடங்களாக என்னுடைய உணவுப் பழக்கத்தை இப்படித்தான் கடை பிடித்து வருகிறேன். பகிர்வுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
சிறப்பான தகவல் நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
அவருடைய கருத்தைதான் நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்...நாஞ்சில் குமார் wrote:ஹீலர் பாஸ்கர் அவர்கள் இந்த கருத்தைதான் வலியுறுத்தி வருகிறார்கள். நானும் கடந்த 4 வருடங்களாக என்னுடைய உணவுப் பழக்கத்தை இப்படித்தான் கடை பிடித்து வருகிறேன். பகிர்வுக்கு நன்றி.
Similar topics
» தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும்
» தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது?
» சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் அசிடிட்டி ஏற்படும்
» தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது?
» சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் அசிடிட்டி ஏற்படும்
» தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum