Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவில் சாலை விபத்துக்களும் உயிரிழப்புகளும்....
Page 1 of 1 • Share
இந்தியாவில் சாலை விபத்துக்களும் உயிரிழப்புகளும்....
இந்தியாவில் சாலை விபத்துக்களும் உயிரிழப்புகளும்....
சாலை விபத்துகள் காரணமாக மட்டும் உலகளவில் ஆண்டுதோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1.24 மில்லியன் (12,40,000). உலக சுகாதார மையத்தின் கணக்கெடுப்புமூலம் இது தெரியவந்துள்ளது. விபத்துகள் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20 முதல் 50 மில்லியனாக இருக்கக்கூடும். அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மது அருந்திவிட்டு ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமை, சீட் பெல்ட் போடாதது, குழந்தைகளுக்கான இருக்கைகள் அமைக்கப்படாதது ஆகிய ஐந்து காரணங்களால் சாலை விபத்துகள் அதிகம் நேர்கின்றன என்று சொல்லப்படுகிறது. வாகனம் ஓட்டும்போது செல்பேசியில் பேசுவதும் மற்றொரு முக்கியக் காரணமாக வருங்காலத்தில் ஆகிவிடும் என்றே தோன்றுகிறது.
உலக சுகாதார மையம் தனது ஆய்வைக் குறைந்த வருவாய் நாடுகள், நடுத்தர வருவாய் நாடுகள், அதிக வருவாய் நாடுகள் என்ற அடிப்படையிலும், பிரதேசங்கள் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 40 பேர் சாலை விபத்தில் இறந்துபோகிறார்கள். இவர்கள் 25 வயதுக்குள்ளானவர்கள். 15-29 வயது வரை உள்ளவர்களின் இறப்புக்கான காரணங்களில் சாலை விபத்துகள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போதைய நிலையில் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை எட்டாவது இடத்திலுள்ளது. முறையான சாலை விதிகளையும் சட்டத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தத் தவறினால் 2030ல் ஐந்தாமிடத்துக்கு வந்துவிடுவோம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் சாலை விபத்தில் இறப்பவர்களை வாகன உபயோகத்தின் அடிப்படையில் பார்த்தால், மோட்டார் சைக்கிள் உபயோகிப்பவர்கள்தான் 50% இறப்புக்கு உள்ளாகிறார்கள். இரண்டு, மூன்று சக்கர மோட்டார் வாகனம் மூலம் இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கை 23%. பிறகு பாதசாரிகள் (25%), சைக்கிள் ஓட்டுநர்கள் (5%), நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள்(கார் 31%), இதர வாகனங்கள் ஓட்டுபவர்கள் (19%) ஆகியோர் வருகின்றனர்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இந்தியாவில் சாலை விபத்துக்களும் உயிரிழப்புகளும்....
இனி இந்தியாவைப் பற்றிப் பார்ப்போம். நடுத்தர வருவாய் நாட்டின்கீழ் இந்தியா வருகிறது. 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள கணக்கின்படி 1,34,000 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 85% ஆண்கள், 15% பெண்களாவர். பதிவு செய்யப்படாதவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் நிச்சயம் இது அதிகரிக்கும்.
இந்தியாவில் இரண்டு, மூன்று சக்கர மோட்டார் வாகனம் (32%), , சைக்கிள் (5%), நான்கு சக்கர வாகனங்கள் (கார் 16%), மற்ற வாகனங்கள் (17%), பேருந்துகள் (8%), டிரக்குகள் (13%) ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் சாலை விபத்துக்குப் பலியாகின்றனர். இவர்களோடு பாதசாரிகள் 9% பேரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் இந்தியாவில்தான் நடைபெறுகின்றன. மிக மோசமாக சாலை விதிகளைப் பின்பற்றுவதிலும் இந்திய மக்கள் முன்னணியில் உள்ளனர். 2010 கணக்கின் படி ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் இறந்துபோகின்றனர்.
இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்க என்ன காரணம்? முதலில் மக்களுக்குச் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா என்பதே மிகப் பெரிய கேள்வி.
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதேனும் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றனவா?
வாகனங்களுக்கென சீட் பெல்ட் அணிவதற்கான ஒழுங்குமுறை இந்தியாவில் இல்லை. அதேபோல குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகளை வலியுறுத்தத் தனிச் சட்டங்கள் இல்லை. குடித்துவிட்டு ஓட்டுதல், ஹெல்மெட் அணிதல், வேகக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்குச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றை முறையாக கவனிப்பதில்லை. ஏதேனும் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டால் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது போல காண்பிக்கப்படும். சிறிது நாள்கள் ஹெல்மெட் அணிந்து மக்கள் செல்வார்கள். அவர்களும்கூட பாதுகாப்புத் தேவைகளுக்காக அல்ல, அபராதத்துக்குப் பயந்தே அவ்வாறு செய்கிறார்கள்.
வாகன ஓட்டிகள் தவறிழைத்தால் அவருடைய ஓட்டுனர் உரிமத்தைப் பறிப்பதற்கான டி மெரிட் பாயிண்ட் சிஸ்டம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை. அதேபோல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களாலும், இரண்டு,மூன்று சக்கர வாகன ஓட்டிகளாலும்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடிகள் இல்லை. கட்டணம் வசூலிப்பதில் மட்டும்தான் இவை அக்கறை காட்டுகின்றன. அங்கேயே வாகன ஓட்டிகளைப் பரிசோதிக்கவும் வழிமுறைகள் கொண்டுவந்தால் நலம்.
சீட் பெல்ட் அணிவதால் முன்னிருக்கையில் அமர்பவர்களில் 50 சதவிகிதத்தினரும், பின் இருக்கையில் அமர்பவர்களில் 75% சதவிகிதத்தினரும் உயிர் பிழைக்கவும், கடுமையான காயங்களிலிருந்து தப்பிக்கவும் முடியும் என்று உலக சுகாதார மையத்தின் அறிக்கை சொல்கிறது. இதைக் கணக்கில் கொண்டு அரசு உடனடியாக சீட் பெல்ட்டைக் கட்டாயப்படுத்தவேண்டும்.
இயன்ற அளவு இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் பயணம் செய்தால் விபத்துகள் பெருமளவு தவிர்க்கப்படும். மேலும் வாகன ஓட்டிகளுக்கு ஆண்டுதோறும் முறையான பயிற்சியை அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வழங்கவேண்டும்.
வாகன விபத்துகளைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் இந்திய அரசு தனியாக பட்ஜெட் ஒதுக்க வேண்டும். கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். நகர எல்லைக்குள் கண்காணிப்பு காமிரா சிஸ்டம் பொருத்தப்படலாம். நகருக்கு வெளியே வளைவுகளிலும், ஊர் எல்லைகளிலும் காமிரா பொருத்துவதன்மூலம் விபத்துகள் தவிர்க்கப்படலாம். சட்டத்தின் துணையும் மக்கள் விழிப்புணர்வும் இருந்துவிட்டால் சாலை விபத்துகளிலிருந்து நிரந்தரமாக விடுபட்டுவிடலாம்
நன்றி : முகநூல்

பேப்பரில் அதிகம் காணப்படுவது இந்த உயிர் இழப்புகளும் விபத்துகளும் கள்ளக் காதல்களும்தான்.
Re: இந்தியாவில் சாலை விபத்துக்களும் உயிரிழப்புகளும்....
சாலை விதிகளை முறையாக கடை பிடித்தாலே விபத்தினை குறைக்கலாம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சாலை விபத்து பற்றி...........
» அழகிய சாலை சித்திரங்கள்
» வேண்டாமே சாலை விதிமீறல்கள்
» மாதத்தின் பெயரில் சாலை
» சாலை விதிகளை மதித்தல்:
» அழகிய சாலை சித்திரங்கள்
» வேண்டாமே சாலை விதிமீறல்கள்
» மாதத்தின் பெயரில் சாலை
» சாலை விதிகளை மதித்தல்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum