Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா?
Page 1 of 1 • Share
பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா?
பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன. அதற்குச் சிறந்த மாற்று காகிதப் பைகள், கோப்பைகள், தட்டுகள் என்பதுதான் நம்மில் பெரும்பாலோரது நம்பிக்கை. ஆனால், பிளாஸ்டிக் பையைப் போலவே, காகிதப் பையும் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பது பலரும் அறியாத சேதி.
மறுசுழற்சி செய்யக்கூடியது, புதுப்பிக்கத்தக்கது, மக்கக்கூடியது என்பதால் காகிதப் பை, காகிதக் குவளை, காகிதத் தட்டு போன்றவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள் (இயற்கை வளம்), உற்பத்தி நடைமுறைகள், மறுசுழற்சி ஆகிய அம்சங்களில் காகிதப் பைகள் சிறப்பாக இல்லை என்பதுதான் உண்மை.
என்ன நடக்கிறது?
காகிதப் பைகள், அட்டைப் பைகள் தயாரிக்க, மரக் கூழே பயன்படுத்தப்படுகிறது. மறுசுழற்சிக் காகிதம், நாளிதழ் காகிதத்தில் செய்யப்படும் காகிதப் பைகளை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. காகிதம் உற்பத்தி செய்வதற்கு அடிப்படை மரங்கள்தான். 2-3 கிலோ காகிதம் தயாரிக்க ஒரு வளர்ந்த மரம் தேவை. மரங்கள் நமக்குச் செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், காகிதங்கள் ஏற்படுத்தும் இழப்பைப் புரிந்துகொள்ளலாம்.
மாசுபாடு
உற்பத்தியைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் உற்பத்தியைவிட காகிதப் பை உற்பத்தி 70 சதவீதம் அதிக மாசை வெளியிடுவதாக ஒரு கணிப்பு சொல்கிறது. மேலும் பிளாஸ்டிக் பைகளைவிட காகிதப் பை தயாரிப்பு 50 மடங்கு அதிக நீர்மாசை உருவாக்குகிறது. காகித-அட்டைப் பைகளைத் தூய்மைப்படுத்தி நிறமேற்றுவதற்கு, பிளீச்சிங் செய்ய நிறைய குளோரின் பயன்படுத்தப்படுகிறது. இது நீர்மாசை உருவாக்குகிறது.
காகிதப் பை தயாரிக்க, பிளாஸ்டிக் பையைவிட 4 மடங்கு அதிக எரிபொருள் தேவை. பிளாஸ்டிக் பை தயாரிப்பைவிட மூன்று மடங்கு அதிகத் தண்ணீர் காகிதப் பை தயாரிப்புக்குத் தேவைப்படுகிறது.
பிளாஸ்டிக் நல்லதா?
அதற்காகப் பிளாஸ்டிக் பை நல்லது என்ற முடிவுக்கு எக்காரணம் கொண்டும் வர வேண்டியதில்லை. இரண்டுமே நல்லதில்லை என்பதுதான் நாம் அறிய வேண்டியது. உற்பத்தி நடைமுறை, கழிவாதல், மக்காத தன்மை ஆகிய அம்சங்களில் காகிதப் பையைவிடவும் பிளாஸ்டிக் பை மோசமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. 1977-ல் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் காகிதப் பைகளுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் பை கொடுக்கப்பட ஆரம்பித்தது. 1996-ல் உலகில் பயன்படுத்தப்படும் 5-ல் நான்கு பைகள் பிளாஸ்டிக் பைகளாக மாறிவிட்டன.
திடக்கழிவான பிளாஸ்டிக்கை அகற்றுவது மிகப் பெரிய பிரச்சினை. அப்புறம் மக்காமல் ஊரெங்கும் பறந்துகொண்டு, சாக்கடைகளை அடைத்துக்கொண்டு, மழை நீரைப் போகவிடாமல், மண்ணுக்குள் நீரைவிடாமல் தடுக்கின்றன பிளாஸ்டிக் பைகள்.
சிறந்த மாற்று
பிளாஸ்டிக் பைகள், காகிதப் பைகள் இரண்டுக்கும் சிறந்த மாற்று துணிப் பைகள்தான். நம்ம ஊர் மஞ்சப்பை, கட்டைப் பைதான் எப்போதுமே சிறந்தது. அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், துவைத்துச் சுத்தப்படுத்தியும் பயன்படுத்த முடியும். அதனால், துணிப் பைக்கு ஜே போடலாம்!
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா?
பயனுள்ள விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி அண்ணா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா?
மிக அவசியமான தகவல்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு.
» பிளாஸ்டிக் பூ
» நுண் பிளாஸ்டிக் பயங்கரம்
» பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய்
» பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு.
» பிளாஸ்டிக் பூ
» நுண் பிளாஸ்டிக் பயங்கரம்
» பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய்
» பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|