Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேங்காய்ப்பூ சோமாஸ்
Page 1 of 1 • Share
தேங்காய்ப்பூ சோமாஸ்
தேங்காய்ப்பூ சோமாஸ்
இந்த தேங்காய்ப்பூ சோமாஸ் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய இல்லங்களில் மிகவும் பிரபலமானது. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவைக் கொண்டது. (முறையாக பாதுகாத்தால்) 1 வாரம் வரைகூட வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பூ - 500 மில்லி
பசு நெய் - 50 மில்லி
ரோஜா பன்னீர் - 2 ஸ்பூன்
சீனி - 100 கிராம்
பொட்டுக் கடலை - 1 பிடி
கிஸ்மிஸ் - 1 பிடி
முந்திரிப் பருப்பு - 1 பிடி
கசகசா - 2 ஸ்பூன்
கறுப்பு எள் - 2 ஸ்பூன்
ஏலப்பொடி - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
உள்ளடம் (பூரணம்) செய்முறை:
1-3. ஒரு வாணலியில் பசுநெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொண்டு, கிஸ்மிஸை வறுக்கவும். அதே நெய்யில் கசகசா மற்றும் கறுப்பு எள்ளை வாசம் வரும்வரை (தீயாமல்) வறுக்கவும்.
4. பொட்டுக் கடலையை வறுப்பதாக இருந்தால், கசகசா & கறுப்பு எள்ளை வறுப்பதற்கு முன்பே வறுத்து எடுத்துக் கொள்ளவும். (வறுக்காமலும் சேர்க்கலாம்.)
அவசியம் கவனிக்கவும்: கசகசாவை வறுத்தால் மட்டுமே அதன் போதை தன்மை மாறுவதாக சொல்லப்படுவதால் வறுக்காமல் சேர்க்கவேண்டாம். எந்த சமையலாக இருந்தாலுமே!
1. அதே வாணலியில் தேங்காய்ப்பூவை 3 ஸ்பூன் நெய்விட்டு அடுப்பை நிதானமாக வைத்து கைவிடாமல் தொடர்ந்து வறுக்கவும்.
2. கோல்டன் கலரில் வந்தவுடன் உப்பு, ஏலப்பொடி சேர்த்து பிரட்டி வேறு பாத்திரத்தில் உடனே மாற்றவும். (பாத்திரத்தை மாற்றாமல் வைத்திருந்தால் அடிப்பக்கத்தில் உள்ள தேங்காய்ப்பூ அந்த சூட்டில் கருகிவிடும்.)
1. பிறகு அந்த வாணலியை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தமாக துடைத்துவிட்டு சீனியும், அதில் பாதியளவு தண்ணீரும் சேர்த்து, ரோஜா பன்னீர் சேர்க்கவும்.
2. சீனி நன்கு கரைந்து பாகு கொதிக்கும்போது வறுத்து வைத்துள்ள தேங்காய்ப் பூவைக் கொட்டி, பூ முழுவதும் பாகு படும்படி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
3. ஏற்கனவே நெய்யில் வறுத்து வைத்துள்ள பொருட்களை இதனுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
1. இப்போது இந்த உள்ளடத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு மரக் கரண்டியால் நன்கு அழுத்தவும்.
2. ஆறி, இறுகும்வரை க்ளியர் ராப் பேப்பர் போட்டு மூடி வைக்கவும். (இந்த உள்ளடத்தை முந்திய நாள்கூட செய்து வைக்கலாம்.)
மாவு தயார் பண்ணி மடிக்கும் முறை:
1. தேவையான பொருட்கள்:
மைதா - 600 மில்லி
தண்ணீர் - 150 மில்லிக்கு சற்று கூடுதலாக
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
சீனி - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
2. கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பூரிமாவுபோல் பிசைந்து, எலுமிச்சை அளவுக்கு சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
3. சப்பாத்திக் கட்டையில் சிறிது மைதாவைத் தூவிக்கொண்டு, சற்று மெல்லியதாக தேய்க்கவும்.
4. சோமாஸ் அச்சு அல்லது வட்டமான ஒரு பொருளைக் கொண்டு வெட்டி எடுக்கவும்.
1. தேய்த்து, வெட்டிய மாவில் ஒட்டியிருக்கும் மைதாவினை தட்டிவிட்டு வைக்கவும். (மாவு அதிகமாக ஒட்டியிருந்தால் எண்ணெயில் இறங்கி, எண்ணெய் சீக்கிரமாக கறுத்துவிடும்.)
2. இப்போது தண்ணீரில் மைதாவினை சிறிது குழைத்து, வெட்டி எடுத்த மாவினை சோமாஸ் அச்சில் வைத்து, ஒரு பக்கமாக உள்ளடத்தை வைத்து, குழைத்த மைதா பேஸ்ட்டை ஓரங்களில் தடவவும்.
3. மெதுவாக அச்சினை மூடி ஓரங்கள் நன்கு ஒட்டும்படி அழுத்தி எடுக்கவும். பிரியாதபடி மீண்டும் ஒருமுறை விரல்களால் அழுத்தவும்.
4. சோமாஸ் அச்சு இல்லாவிட்டால் வட்டமாக வெட்டி, உள்ளடம் வைத்த பிறகு கையினாலேயே இதுபோல் மடிக்கலாம். அப்படி மடிக்கும்போது விரல்களால் ஓரங்களை வரிசையாக கிள்ளிவிடவும். (4 வது எண் படத்தில் உள்ளது, அச்சு இல்லாமல் கைகளால் மடித்து, கிள்ளியது.)
1. ஓரங்களை சரியாக ஒட்டியவுடன், சூடான எண்ணெயில் போட்டு அதன் மேல் எண்ணெயை ஜாரணியால் மெதுவாக அள்ளி, அள்ளி விடவும். அப்போதுதான் நன்கு உப்பி பொரியும்.
2. போதுமான அளவு பொரிந்தவுடன் எடுக்கவும்.
3. வலைத்தட்டில் வைத்து எண்ணெயை நன்கு வடியவிடவும்.
சுவையான தேங்காய்ப்பூ சோமாஸ் ரெடி!
குறிப்பு: வெளியில் ஆறியதுபோல் இருக்கும், ஆனால் உள்ளே உள்ள சூடு சீக்கிரம் குறையாது. சூடாக மூடினால் மறுநாளே நமத்துவிடும். அதனால் நன்கு ஆறும்வரை (சுமார் 4,5 மணி நேரங்கள்) திறந்தே வைக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் இறுக மூடி வைத்தால் 1 வாரமாக இருந்தாலும் நமத்துப் போகாமல் இருக்கும்.
சமையல் குறிப்பு-அஸ்மா ஷர்ஃபுதீன்
http://payanikkumpaathai.blogspot.com/2010/07/blog-post_26.html

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum