Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள்
Page 1 of 1 • Share
குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள்
![குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள் Sy3zi9](https://2img.net/h/oi57.tinypic.com/sy3zi9.jpg)
உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பெற்றோர்களின் ஒரே குறிக்கோள் தங்கள் குழந்தைகள் நல்ல உடல்நலத்தோடு வளர்ந்து, சிறப்பாகப் படித்து, சமுதாயத்தில் தலை நிமிர்ந்து, தலைசிறந்து கவுரவமாக வாழ வேண்டும் என்பதே!
நாடு வளர வேண்டும் என்றால் வீடு வளர வேண்டும்... வீடு வளர வேண்டும் என்றால் வீட்டில் உள்ள நம் குழந்தைகள் வளர வேண்டும். குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது... அனைத்து துறைகளிலும் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதற்காக எத்தனை லட்சங்களும் செலவு செய்ய பெற்றோர் தயாராக உள்ள காலம் இது.
2 பேர் கூட சேர்ந்து படி ஏற முடியாத, காற்று கூட புக முடியாத, இருண்ட அடுக்குமாடிகள் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக் கூடாது, குழந்தைகள் ஓடி விளையாட பரந்து விரிந்த திறந்தவெளி உள்ள, விசாலமான அறைகள் கொண்ட, மரம் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்த, பல விளையாட்டு வசதிகள் கொண்ட, விளையாட்டுப் பயிற்சியாளர்கள் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது மிகவும் அவசியம்.
குழந்தைகள் வளர்ந்து வேலைக்கான தேர்வுக்குச் செல்லும்போது, அவர்களின் கல்வித்தகுதியோடு, எல்லாவித திறமைகளுக்கும், நல்ல உடல்நலமும், சிறந்த உடல்வாகும் (All Round Development) கணக்கில் எடுக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டுகள், உடற்பயிற்சிக் கூடங்களில் சிறப்புப் பயிற்சியில் பங்கேற்று, கோடை விடுமுறையிலும் சிறந்த உடல் மற்றும் மனநிலையோடு வளர்வது நமது நாட்டின் வளர்ச்சியாகும். அனைவரும் உடற்பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, இந்திய அரசு, ‘நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு அவசியம்’ என்ற குறிக்கோளின் அடிப்படையில், 2001ல் தேசிய விளையாட்டுக் கொள்கை மூலம் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் உடற்பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற உறுதி எடுத்தது. பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளில் குழந்தைகளை ஆர்வத்தோடு கலந்து கொள்ள வைப்பதால் நல்ல உடல்நலம் ஏற்படுவதோடு, படிப்படியாக வளரும் பருவங்களில் பலவித நன்மைகளும் மறைமுகமாகக் கிடைக்கின்றன.
விளையாட்டு / உடற்பயிற்சியினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்...
*உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, மூட்டு சேரும் இடங்களில் உறுதி.
* அதிக ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வதால் பரந்து, விரிந்த ஆரோக்கியமான நுரையீரல்.
* வலிமையான இதயம்.
* சீரான ரத்த ஓட்டம்.
* நன்றாக பசி எடுத்து, ஒவ்வொரு வேளைக்கும் நன்றாக உணவு உட்கொள்ளுதல்
* உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், ஒன்றோடு ஒன்று இணைந்து சிறந்த செயல்பாடு.
* எல்லோரோடும் சேர்ந்து விளையாடுவதால் மனிதநேய உணர்வு ஏற்படுதல்.
* சாதி, மத பேதமில்லாமல் நல்ல நண்பர்கள் கிடைத்தல்.
* முன்னேற்றத்தின் காரணமாக நல்ல போட்டி மனப்பான்மை உண்டாகுதல்.
* மனம், உடல் இரண்டையும் விளையாட்டு/உடற்பயிற்சிகளில் செலுத்துவதால் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவது தவிர்க்கப்படுதல்.
* சாதனைகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணரச் செய்யும் வாய்ப்புகள்.
* சுத்தத்தோடு கூடிய ஒழுக்கம்.
* உறுதியான தன்னம்பிக்கை.
* அதிக சந்தோஷம்.
* புதுமையாக செய்து நல்ல பேரும் புகழும் வாங்க வேண்டும் என்ற உத்வேகம்.
* மிக முக்கியமாக நாட்டுப்பற்று ஏற்படுதல்.
உடற்பயிற்சியால் குழந்தைகளின் மூளைக்கு கிடைக்கும் 5 நன்மைகள்...
1. உடல் வளர்ச்சியோடு கூடிய நல்ல மன வளர்ச்சி காரணமாக பள்ளிப் பாடங்களை நன்றாக புரிந்துகொண்டு, மனதில் பதிய வைத்து நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
2. எந்த முடிவு எடுக்கும்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். உடற்பயிற்சி/ விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகளின் மூளை, மற்ற குழந்தைகளைவிட 25% அதிகம் செயல்படுவதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளார்கள்.
3. உடற்பயிற்சி உறுதியான இதயத்தை, மூளையை சிறப்பாக செயல்பட தூண்டிக்கொண்டே (Regular release of key hormones of SEROTONIN, DOPAMINE and NOREPINEPHRINE) இருக்கிறது.
4. குழந்தைக்கு ஒரு வரப்பிரசாதமாக நினைவாற்றலை அளிக்கிறது.
5. மனவலிமை, நடை, உடல் அமைப்புகள் சிறப்புப் பெற்று, மூளை வளர்ச்சியும் தெளிவாக இருப்பதால், உடற்பயிற்சியில் ஈடுபடும் குழந்தைகள் எப்போதும் உலகின் உச்சியில் இருப்பதுபோல உணர்கின்றனர்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
![-](https://2img.net/i/empty.gif)
» குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்
» குழந்தைகளின் குற்றங்களுக்குக் காரணம் ஏது?
» குழந்தைகளின் வருங்காலம்
» குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்
» குழந்தைகளின் அற்புத உலகம்
» குழந்தைகளின் குற்றங்களுக்குக் காரணம் ஏது?
» குழந்தைகளின் வருங்காலம்
» குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்
» குழந்தைகளின் அற்புத உலகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|