Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிஸி பிசாசை விரட்டலாம்!
Page 1 of 1 • Share
பிஸி பிசாசை விரட்டலாம்!
செல்லமே
அலைபேசியில் நுரைத்துப் பாயும் குறுந்தகவல்களை விட வேகமாகி விட்டது வாழ்க்கை. ஆறு மாதக் குழந்தை அம்மா வேலை விட்டு வருவதற்கு காத்திருக்கிறது. சாப்பிட வைக்க ஆயா... கதை, பாட்டு, பாடம், விளையாட்டு எல்லாவற்றையும் யாராவது ஒரு மிஸ்ஸிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும். வாழ்க்கை இன்னும் வேகமெடுக்கும் போது வாடகைத் தாய்களின் கருவறையில் வளர்ந்து, பிறக்க வேண்டிய சூழலுக்கு அனைத்து குழந்தைகளுமே தள்ளப்படலாம். ‘பிஸி’ என்ற வார்த்தை அன்பின் எதிரியாக வலம் வருகிறது. குழந்தைகளோடு குழந்தைகளாக மாறும் போதுதான் நம் பால்ய பருவத்தைத் திரும்பப் பெறமுடியும். அந்த மகிழ்வை தொலைக்கத் துணியும் போது பிஞ்சு மனதின் ஏக்கம் சுமந்த கிளைகள் பூக்காமல், காய்க்காமல் வெட்டப்படுகின்றன. அப்புறம் எப்படி செல்லங்களின் வாழ்வில் வசந்தம் வீசும்..?
‘பிஸி’ என்ற வார்த்தையே விஷம்தான். நேரத்தை மேலாண்மை செய்வதில் சிக்கல் உள்ளவர்களே அதிகமாக ‘பிஸி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தையை வெல்ல முடிந்தவர்களால் எந்தச் சூழலையும் தங்களுக்கான சொர்க்கமாக மாற்றிக் கொள்ள முடியும். எப்போதும் ‘பிஸி’ என்கிற செல்லப் பேயுடன் மல்லுக்கட்டும் பெற்றோர், செல்லங்களுடன் நேரம் செலவிடுவதற்கான தந்திரங்களை விளக்குகிறார் குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா.
‘‘வேலைக்குச் செல்லும் தம்பதிகளுக்கு குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைகிறது. அதிகபட்சமாக குழந்தைக்கு 3 மாதங்கள் மட்டுமே அம்மாவின் அரவணைப்புக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு அம்மா வேலை முடிந்து வந்த பிறகுதான் தாய்ப்பாலே கிடைக்கும். இந்தப் பிரிவு, அம்மா குறித்த ஏக்கத்தை குழந்தைக்கு அதிகப்படுத்தும். பணிபுரியும் பெண்கள் வீடு திரும்பிய பிறகும் வீட்டு வேலைகளில் மூழ்கி விடுகிறார்கள். எழுந்து நடந்து, ஓடி விளையாடும் வரை குழந்தை வளர்ப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற எண்ணம் பெரும்பான்மையான தந்தைகளுக்கு இருக்கிறது.
மிகச்சிறு வயதில் பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத குழந்தைகள் அழுது, அடம் பிடிக்கத் தொடங்குகிறார்கள். தாயின் அரவணைப்புக்காகவே மெதுவாக சாப்பிடுவார்கள்... ஊட்டிவிடச்சொல்லி தொந்தரவு செய்வார்கள். பெற்றோரின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் அத்தனை வித்தைகளும் இந்தச் சுட்டிகளுக்குத் தெரிந்திருக்கும். இச்சூழலில் குழந்தைகள் அடம் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர்களிட மிருந்து தப்பிக்க பெற்றோர் தேடும் வழி ‘டே கேர் சென்டர்’கள்... அடுத்து கேஜி வகுப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். பெற்றோரின் அன்பு தவிர்க்கப்படும் சூழலில் குறும்பும் அடமும் வகுப்பறையிலும் தொடரும்.
குழந்தைகளின் அடம் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அது ஒருவிதமான கேட்டல். அடக்கி வைக்கப்பட்ட ஆவல் அணையை உடைத்துக் கொண்டு வெளிப்படும் போது மனம் காட்டும் வேகம். பணம் சம்பாதிப்பது முக்கியம்... அதை விட முக்கியம் அவர்களுடன் நாம் செலவழிக்கும் நேரம். ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்தையாவது குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்குள் உருவானால் அதற்கான கதவுகள் தானாகவே திறக்கும். அதற்கு பதிலாக குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்க பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் தாராளமாகக் கிடைக்கின்றன. நேரத்தை செலவழிக்க ஏதாவது ஒரு தகவல் தொடர்பு சாதனத்தில் விளையாட குழந்தைகள் விரும்புகின்றன.
காலப்போக்கில் அந்த சாதனங்களுக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். திருடுதல், பொய் சொல்லுதல், போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல் என வளர் இளம் பருவத்தில் நுழையும் போதே அனைத்து கெட்ட விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். குழந்தைகளிடம் உருவாகும் நடத்தை மாற்றம் பள்ளி, சமூகம், உறவுகள் என அனைத்து இடங்களிலும் விரும்பத்தகாத சூழலை உருவாக்குகிறது. இந்த எதிர்ச் சூழல் படிப்பிலும் தோல்வியை உருவாக்கும். குழந்தைகளின் அன்புக்கான ஏக்கத்தை பெற்றோர் புரிந்து கொள்வதே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. படிப்பில் பிரச்னை என்பதற்காக பள்ளியை மாற்றுதல், நடத்தையை சரி செய்ய கண்டிப்பது, தண்டிப்பது என தவறான ஆயுதங்களை கையில் எடுப்பது என குழந்தைப் பருவத்தின் இனிமைகளை சிதைத்து விடுகிறார்கள்.
பள்ளி செல்லத் தொடங்கியவுடன் அனைத்து சிறப்பு வகுப்புகளுக்கும் குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள். குழந்தை எனும் மயிலிறகை தொட்டு, வருடி, உச்சி முகர்ந்து, வியந்து கொண்டாடத் தெரியாதவர்களாக பெற்றோர் இருப்பது மிகப்பெரிய சோகம். அந்தக் குட்டி மயிலிறகு, புத்தகம் சுமக்கிறது... விரல் நோக எழுதுகிறது... மூளைக்குள் தேவைப்படாத விஷயங்களையெல்லாம் சேகரித்துக் கொள்கிறது... மனதில் ஏக்கம் அழுத்தும் போது ஒரு முத்தம் தேடி தாயிடம் வருகிறது. மயிலிறகின் மெல்லிய அழுகையை கேட்பதற்கான காதுகள் எப்போதும் இருப்பதில்லை. வண்ணம் கரைந்து, துகள்கள் உதிர்ந்து ஒரு மரக்கட்டை போல ஆகிவிடுகிறது மயிலிறகு.
அப்பா அலுவலகத்தில் பிஸி, அம்மா சமையலறையில் பிஸி. குட்டிச் செல்லம் ஹோம் ஒர்க்குடன் மல்லுக்கட்டி, அதை முடிப்பதற்கே இரவு எட்டு மணியாகிவிடுகிறது. எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நேரத்திலாவது தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்கலாம். காலை முதல் நடந்த விஷயங்களை சொல்வதற்கு குழந்தையை இந்த நேரத்தில் அனுமதிக்கலாம். அந்த இரவு உணவு குழந்தையின் விருப்பமாக அமைந்துவிட்டால் பெற்றோர் தனக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதை குழந்தை உணர்ந்திருக்கிறது என்று பொருள். உணவுக்குப் பின் தாயோ, தந்தையோ மடியில் படுக்க வைத்து குட்டிக் கதைகளைப் படித்துக் காட்ட லாம். குழந்தை கற்பனைச் சிறகை விரித்துப் பறப்பதற்கான சூழல் உருவாகும்.
அம்மாவின் அன்பைக் குழந்தை புரிந்து கொள்ளும். குழந்தைக்குப் புரியும் வயதில், கதைகளின் ஊடாக அம்மாவும் அப்பாவும் கடந்து வந்த வாழ்க்கையைச் சொல்ல லாம். குடும்பம், பெற்றோரின் வாழ்க்கைச் சூழலை குழந்தை புரிந்து கொள்ளும். உறவுகளுக்குள் நல்ல பிணைப்பு உருவாகும். காலை நேரத்தில் உணவு தயாரிப்பில் தொடங்கி பல வேலைகள் அம்மாவுக்கு இருக்கின்றன. அதனால் குழந்தையை படுக்கையில் இருந்து எழுப்பும் பொறுப்பை தந்தை எடுத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி, தேநீர் வேளை, பல் துலக்கி, குளிக்கச் செய்து, கிளம்ப வைத்தல் என பல பணிகளை குழந்தையுடன் பகிர்ந்து கொள்வது காலை நேர டென்ஷனைக் குறைக்கும். நேர மேலாண்மையை குழந்தைக்கும் பழக்கலாம்.
எவ்வளவு பிஸியான பெற்றோராக இருந்தாலும் இந்த இரண்டு வேளையிலும் மிகச்சரியாக குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்கிவிட்டால் அவர்கள் மனதைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். பெற்றோரை பிரியும் ஏக்கம் மறைந்து அவர்களுடன் இருக்கும் நேரத்தின் மீதான தேடல் இனிக்கும். சின்னச் சின்ன புன்னகை அரும்புகள் சேர்த்துக் கட்டிய மிகப்பெரிய மலர்ச்செண்டுதானே வாழ்க்கை! நகைப்பதற்கு ஏன் தயக்கம்? உங்கள் மனதில் இப்போது ‘பிஸி’ பேய் இருக்கிறதா? இல்லையா! அப்பாடா... உங்கள் செல்லம் தப்பித்தது.’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2934
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பிஸி பிசாசை விரட்டலாம்!
இன்றைய வாழ்வியல் சூழலுக்கு சிறப்பான கட்டுரை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம்
» மூட்டு வலியா ?? விரட்டலாம் வாங்க
» கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
» நொச்சி வளர்த்து டெங்கு கொசுவை விரட்டலாம்!
» உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்..!
» மூட்டு வலியா ?? விரட்டலாம் வாங்க
» கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
» நொச்சி வளர்த்து டெங்கு கொசுவை விரட்டலாம்!
» உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum