Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அறியாத உண்மைகளும் தெரியாத விஷயங்களும்
Page 1 of 1 • Share
அறியாத உண்மைகளும் தெரியாத விஷயங்களும்
[You must be registered and logged in to see this image.]
உணவால் பாதிப்பு ஏற்படுமா?
தர்பூசணி சாப்பிடுறியா... அய்யய்யோ தடுமம் பிடிச்சுடும். அதைச் சாப்பிடாதே!
கர்ப்பிணி பெண்ணா இருந்துட்டு... பப்பாளி கேட்கிறியே!
தாய்ப்பால் நல்லா சுரக்க, பூண்டை அதிகமாக சாப்பாட்டில சேர்த்துக்கோ!
இப்படி உண்மையே இல்லாத பல விஷயங்கள், பல வீடுகளில், பல குடும்பங்களில் பேசக் கேட்டிருக்கிறலாம். உண்மையிலேயே இதுபோன்ற காது வழிச்செய்திகள், உணவு நிபுணர்களால் உண்மையில்லை என்றே நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்னர் எப்படி இதுபோன்ற செய்திகள் பரவுகின்றன என்பது அவர்களால் மட்டுமின்றி, தொடரும் பாரம்பரிய உறவுகளாலும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.
இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாத உணவுகள் பல உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் சூடு, வாயு, பித்தம், சளி என்று பல்வேறு காரணங்களை கொண்டு நிராகரித்து வருகிறோம்.
பல வீடுகளில் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் நாவல்பழ கொட்டைகளை சேகரித்து வெயிலில் காயவைத்து பொடி செய்து, பாலில் கலந்து குடிப்பார்கள். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையுமாம். இப்படியும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், உண்மையிலேயே இப்படி நாவல்பழ கொட்டையினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையுமா என்றால், இல்லை என்றுதான் டாக்டர்களிடம் இருந்து பதில் வருகிறது.
இப்படி உண்மைகளை அறியாமல் மக்கள் இருப்பதால், அவர்களின் உடலுக்குதான் உரிய விட்டமின்கள், சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் மக்களால் கூறப்படும் சில தவறான கருத்துக்களும், உண்மை நிலையையும் பற்றி இங்கு காணலாம்.
1.உடம்பு இளைக்க காலை உணவை தவிர்க்க வேண்டும்.
பதில்: காலை உணவை தவிர்ப்பதால் உடலுக்கு பாதிப்புதான் ஏற்படும். இரவு உணவுக்கு பின்னர் காலை உணவை சாப்பிடுவதற்கு சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை இடைவெளி உள்ளது. மேலும், இரவு உணவானது உடல் உறுப்புகளின் பழுது பார்க்கும் பணிக்கான சக்திக்கே சென்று விடுகின்றன. இதுபோன்ற நிலையில், காலை உணவு என்பது நமது அன்றாட சக்திக்கு மிக முக்கியமான ஒன்றாகும். அலுவலகத்துக்கு செல்பவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மந்தமாக இருக்கும் என்று கருதினால் சக்தி மிகுந்த பாலாடை, வெண்ணை, ஜாம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
2. சாதாரண பிரெட்டைவிட, அதை டோஸ்ட் செய்து சாப்பிட்டால், குறைவான கலோரியை பெறலாம்.
பதில்: ரொட்டியானது வறுக்கப்படும்போது, அதில் உள்ள தண்ணீர் சத்து வற்றி, மொறுப்மொறுப்பாக மட்டுமே மாறுகிறது. கலோரியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.
3. உடல் எடை குறைய காலையில் தேன் சாப்பிட வேண்டும்.
பதில்: 100 கிராம் எடைக் கொண்ட ஒரு வாழைப்பழம், 116 கலோரி வெப்பத்தை தருகிறது. ஆனால், 100 கிராம் தேனானது, 319 கலோரி வெப்பத்தை தருகிறது. பின்னர் எப்படி அது உடல் எடையை குறைக்க உதவும்?
4. குழந்தைகளுக்கு பாலை குடிக்க தரவேண்டியது மிக அவசியம்.
பதில்: சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளுக்கு பால் அவசியமானது இல்லை. ஏனெனில், பாலில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து மிகக்குறைவாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், அதை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்தால், அக்குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாதுக்கள் அடங்கிய உணவுகள் குழந்தைக்கு மிக அவசியம்.
5. அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் பெருகும்.
பதில்: குடிநீரில் கலோரியை அதிகரிக்கச் செய்யக்கூடிய எந்த ஒரு பொருளும் இல்லை. சோடியம் குளோரைடு உப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும்பட்சத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். அதனால் உடல் எடை கூடும்.
6. காப்பியில் உள்ளதை விட டீயில் காஃபின் அளவு குறைவாக உள்ளது.
பதில்: காபிக் கொட்டையில் உள்ள காஃபினின் அளவைக் காட்டிலும், தேயிலையில் உள்ள காஃபின் செறிவாக உள்ளது. அதிகமாக நீர் சேர்க்கப்பட்டு, டீயானது நீர்க்கப்பட்டு விடுவதால், அதன் விளைவு நம்மைப் பாதிக்காது. ஆனால் உண்மையிலேயே காப்பிக்கொட்டையில் உள்ளதைவிட டீயில் 60 சதவீதம் காஃபின் அதிகமாக உள்ளது.
7. நாள்தோறும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியிருக்காது.
பதில்: உண்மையிலேயே பெரிய அளவுக்கு ஆப்பிளில் மருத்துவ குணங்களோ, சத்துக்களோ இல்லை. ஒரு நடுத்தர அளவு ஆப்பிள் சுமார் 10 மி.கி. அளவு வைட்டமின் சியை உடலுக்கு தருகிறது. ஆனால் ஒரு ஆரஞ்சு பழம் இதை விட 5 மடங்கு அளவு வைட்டமின் சி உள்ளது. ஆப்பிளில் சுமார் 13.5 கிராம் இனிப்பு, 2 கிராம் நார்ச்சத்து மற்றும் 55 கலோரி வெப்பம் ஆகியவை மட்டுமே உள்ளது.
8. ஜலதோஷம் நிற்க வைட்டமின் சியை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
மருத்துவ ரீதியாக, ஜலதோஷம் பாதித்தவர்களுக்கு தொடர்ந்து வைட்டமின் சி கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. உண்மையிலேயே ஜலதோஷம் நிற்கவில்லை என்பதுதான் முடிவாக இருந்தது.
9. பழுப்பு நிறம் கொண்ட முட்டைகள் அதிக சக்தி மிகுந்தவை.
பதில்: கோழிகளின் வகையைப் பொறுத்து அவற்றின் முட்டை நிறம் மாறுகிறது. நிறத்தை வைத்து சத்தை அளவிட முடியாது.
10. தேனில் உடலுக்கு நன்மை பயக்கும் குணங்கள் உள்ளன.
பதில்: உண்மையிலேயே தேனில் நாம் நினைக்கும் அளவுக்கு நன்மை ஏற்படுத்தும் மருத்துவ குணங்கள் இல்லை. அதில் பழச்சர்க்கரை, பழ வெள்ளம் மற்றும் நீர், சில வைட்டமின்கள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில், இது சத்துணவு வல்லுநர்களுக்கே சவாலாக உள்ளது.
நன்றி - உணவு நலம்

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்
» ஐஸ்கிரீம் - யூகங்களும், உண்மைகளும்
» அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம்
» அறியாத தகவல்கள்
» அறிந்தும் அறியாத பழமொழிகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum