தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Six Pack எனும் சிற்பம்!

View previous topic View next topic Go down

Six Pack எனும் சிற்பம்! Empty Six Pack எனும் சிற்பம்!

Post by நாஞ்சில் குமார் Thu Oct 30, 2014 10:22 pm

Six Pack எனும் சிற்பம்! Rkd9pg

அறிந்ததும்... அறியாததும்!

இன்றும் சினிமா நட்சத்திரங்களே சாமான்ய மனிதர்களின் ஃபேஷனை தீர்மானிக்கிறார்கள். இளைஞர்களிடம் பரவி வரும் சிக்ஸ்பேக் காய்ச்சல் லேட்டஸ்ட் உதாரணம். பாலிவுட்டில் அமீர்கான் தொடங்கிவைத்த இந்த கலாசாரம், இன்று கோலிவுட்டில் அதர்வா வரை தொடர்கிறது. சமீபத்தில் விநாயகர் சதுர்த்திக்கு மும்பை அந்தேரியில் ‘சிக்ஸ்பேக் விநாயகர்’ அருள்பாலித்து ஆச்சரியப்பட வைத்தார். அதிகரித்து வரும் இந்த சிக்ஸ்பேக் மோகம் பற்றி கோலிவுட் ஹீரோக்களின் ஆஸ்தான பயிற்சியாளரான ஜெயக்குமாரிடம் கேட்டோம். சென்னை வந்திருந்த அர்னால்டைச் சந்தித்த பரபரப்பு குறையாமலே நம்மிடம் பேசினார் அவர்.

‘‘வயிற்றுப் பகுதியின் அடியில் மறைந்திருக்கும் தசைகளை (Abdominal muscles) வெளியில் தெரியுமாறு கொண்டு வருவது தான் சிக்ஸ் பேக். வயிற்றில் இருக்கும் இந்த தசைகள் கொழுப்பின் காரணமாக மறைந்திருக்கும். உடற்பயிற்சி, சரியான உணவுமுறைகளின் மூலம் கொழுப்பைக் கரைத்து இந்தத் தசைகளை வெளியில் தெரிய வைத்தால், படிக்கட்டுகள் போல மார்புக்குக் கீழ் இடதுபுறம் மூன்று பிரிவுகளாகவும் வலதுபுறம் மூன்று பிரிவுகளாகவும் தெரியும். Rectus abdominis என்கிற இந்த படிக்கட்டுகளைத்தான் சிக்ஸ்பேக் என்று சொல்கிறோம்.

இது மரபியல் காரணங்களாலேயே ஒருவருக்கு அமையும். வயிற்றுத் தசைகள் யாருக்கு மறைந்திருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே சிக்ஸ்பேக் கொண்டு வர முடியும். மரபியல் காரணங்கள் சாதகமாக இல்லாவிட்டால் உடற்பயிற்சி, டயட் போன்றவையும் கை கொடுக்காது. கட்டுமஸ்தான உடலை வேண்டுமானால் உருவாக்கலாம்’’ என்றவரிடம், ஷாருக்கான் சமீபத்தில் 10 பேக் வைத்திருப்பது பற்றியும் கேட்டோம்.

‘‘பொதுவாக ஒருவருக்கு 6 கட்ஸ் மட்டும்தான் வயிற்றுப் பகுதியில் இருக்கும். 8 பேக் இருப்பதே அரிதானதுதான். 10 பேக் என்பது இன்னும் அபூர்வம். ஷாருக்கான் இந்த அபூர்வ வகையைச் சேர்ந்தவர். என் அனுபவத்தில் பத்துக்கு மேல் ஒருவருக்கு கட்ஸ் வர வாய்ப்பில்லை. மீனவர்கள், வண்டி இழுப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற உடல் உழைப்பாளிகளுக்கு இயல்பாகவே சிக்ஸ்பேக் இருக்கும். அவர்களது கடும் உழைப்பின் காரணமாக கொழுப்பு கரைந்து சிக்ஸ்பேக் தானாகவே அமைந்திருக்கும். உடல் உழைப்பு குறைந்த இன்றைய வாழ்க்கை முறையில் கடுமையான உடற்பயிற்சிகள், முறையான டயட் என்று நீண்ட முயற்சிகளின் அடிப்படையிலேயே சிக்ஸ்பேக் அமையும். சராசரியாக சிக்ஸ்பேக் உருவாக 6 மாதம் வரை ஆகலாம்.

மரபியல் காரணங்கள் சாதகமாக இருந்தால் சிலருக்கு 3 மாதங்களிலேயே கொண்டு வந்துவிட முடியும். ஒரு கல்லுக்குள் சிற்பம் இருப்பது சிற்பியின் மனக்கண்ணில் தெரிகிறது. அதை வைத்துக் கல்லில் இருக்கும் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிடுகிறார். 6 பேக் என்பது சிற்பம் போல தேவையற்ற கொழுப்பை நீக்கி உடலைச் செதுக்குகிற வேலைதான். ஒரு சிற்பத்தைச் செதுக்குவதற்கு மெனக்கெடலும் கால அவகாசமும் தேவை...’’

சிக்ஸ்பேக் அமைப்பதற்கான பயிற்சிகள் என்னென்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

‘‘கார்டியோ வொர்க் அவுட் என்கிற ஏரோபிக் பயிற்சி, டிரெட் மில் போன்ற பயிற்சிகள், வயிற்றைச் சுற்றியிருக்கும் கொழுப்பைக் கரைக்க வெயிட் ட்ரெயினிங் பயிற்சி (வெயிட் லிஃப்ட்டிங் அல்ல), மாவுச்சத்து உணவுகளின் அளவுகளைக் குறைப்பது, உடலில் புரதச்சத்தை அதிகரிப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, வயிற்றுத் தசைகளுக்காக தனிப்பயிற்சி செய்வது என்று பல கட்டங்கள் இருக்கின்றன. சிக்ஸ்பேக்கை உருவாக்க பல மாதங்கள் ஆகும் என்றால், அதைக் கலைக்க ஒரு நாள் போதும். ஒரு படப்பிடிப்புக்கோ, ஒரு போட்டிக்கோ அவசியம் என்றால் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளலாம். வருடம் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்காகக் கட்டுக்கோப்பான உடலை வேண்டுமானால் பராமரிக்க முடியும். சிக்ஸ்பேக்கைப் பராமரிக்க முடியாது. அது நிரந்தரமில்லை!

நாம் ஆரோக்கியமாக இருக்க நம் உடலில் 22 சதவிகிதம் கொழுப்பு தேவை. சிக்ஸ்பேக் வேண்டும் என்றாலோ, கொழுப்பைக் குறைப்பதுதான் முதல் வேலை. கொழுப்பின் அளவு ஒற்றை இலக்கத்துக்கு வர வேண்டும். குறிப்பாக 5 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால்தான் சினிமாக்களில் பார்ப்பதுபோல கட்ஸ் தெளிவாகத் தெரியும். சினிமா ஹீரோக்கள் சிக்ஸ்பேக் தெரிய வேண்டிய குறிப்பிட்ட காட்சிகள் எடுக்கும் நாளில் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். தண்ணீர் குடித்தால் தசைகளுக்கும் தோலுக்கும் இடையில் சென்று தண்ணீர் சேர்ந்து கொள்ளும். இதனால் கட்ஸ் ஷார்ப் ஆகத் தெரியாது. அதனால்,  ஒரு சண்டைக் காட்சியை நாள் முழுவதும் எடுக்கிறார்கள் என்றால் நாள் முழுவதும் ஹீரோ தண்ணீர் குடிக்காமல்தான் இருப்பார். இந்த கஷ்டத்தை அனுபவித்ததால்தான் ‘6 பேக் முயற்சி செய்ய வேண்டாம். அது மிகவும் கஷ்டமானது’ என்று நடிகர் சூர்யா சொல்லியிருந்தார்.

கொழுப்புதான் ஆண்கள் ஆண்மைத் தன்மையோடு இருக்கும் வகையில் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை சுரக்க வைக்கிறது. சிக்ஸ்பேக் காரணமாக சராசரி கொழுப்பு அளவும் உடலில் குறைவதால் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைந்து ஆண்மைக்குறைவு ஏற்படும் அபாயமும் உண்டு. புரோட்டீன் பவுடர் அதிகமாக எடுத்துக் கொண்டு தண்ணீர் போதுமான அளவு குடிக்காவிட்டால் சிறுநீரகத்துக்கு வேலை அதிகரித்து சிறுநீரகப் பிரச்னைகளும் ஏற்படும்...’’சிக்ஸ்பேக் வைக்க விரும்பும் இளைஞர்களுக்கு ஜெயக்குமார் தன் அனுபவத்திலிருந்து என்ன சொல்கிறார்?

‘‘சிக்ஸ்பேக் என்பது அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டிய தொடர்ச்சியான வேலை. இதற்கு முதலில் வாழ்க்கை முறையை சரியாக மாற்ற வேண்டும். இரவில் 7 மணி நேரத் தூக்கம் அவசியம். மது, புகை, அதிக சர்க்கரை நிறைந்தகுளிர்பானங்கள், துரித உணவு கள் போன்ற பழக்கங்கள் இருக்கக் கூடாது. தினமும் ஒரு மணிநேரம் என்று வாரத்தில் 5 நாட்கள் பயிற்சி செய்தால் போதும். தினம் 5 மணி நேரமெல்லாம் ஜிம்மில் இருக்கத் தேவையில்லை. காய்கறிகள், புரதச்சத்துக்காக கோழி, மீன் போன்ற அசைவ உணவுகள், நார்ச்சத்து உள்ள உணவுகள், புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பெண்களும் சிக்ஸ்பேக் வைக்கிறார்கள். ஆனால், சிக்ஸ்பேக்குக்காக ஆண்கள் உழைப்பதைவிட பெண்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடலுக்குக் கொஞ்சம் பூசினாற் போன்ற அழகைத் தருவதும் கொழுப்புதான். கொழுப்பு குறைந்துவிடுவதால், ஒல்லியாக, முகம் சோர்வாகத் தெரிவார்கள். உடலின் மென்மைத் தன்மையும் குறையும். இந்த ரிஸ்க்குக்குத் தயாராக இருந்தால் பெண்களும் சிக்ஸ்பேக் வைக்கலாம்!’’

‘மிஸ்டர் மெட்ராஸ்’ (2012) பட்டம் பெற்றவரும் மருத்துவருமான ராஜீவ் சந்தோஷ் என்ன சொல்கிறார்?

‘‘உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, உடலைக் கட்டுமஸ்தானதாக மாற்றும் வகையில் சிக்ஸ்பேக் ஆரோக்கியமானதுதான். கட்ஸ் வர வேண்டும் என்பதற்காக ஸ்டீராய்ட் மருந்துகளை எடுத்துக் கொள்வதுதான் ஆபத்து. சிக்ஸ்பேக் வைப்பவர்கள் மற்றவர்களைவிட 3 மடங்கு அதிக புரதச்சத்து வேண்டும் என்பதற்காக புரோட்டீன் பவுடர் சாப்பிடுவார்கள். அதற்குத் தகுந்த அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். ஆரோக்கியத்துக்குத் தேவையான அளவு கொழுப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் முக்கியம். நல்ல பயிற்சியாளரிடம் சென்று முறைப்படி பயிற்சி பெற வேண்டும் என்பது மிகவும் கட்டாயம்!’’

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum