தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே..

View previous topic View next topic Go down

நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே.. Empty நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே..

Post by நாஞ்சில் குமார் Fri Dec 19, 2014 8:35 pm

நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே.. 5my87n

உங்கள் உறவுக்காரர்களில், நண்பர்களில், பிரபலங்களில் எத்தனையோ ஜோடிகளைப் பார்த்து ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என வியந்திருப்பீர்கள். அவர்களுக்குள் அப்படியொரு அன்யோன்யமும் புரிதலும் எப்படி சாத்தியமாகி யிருக்கும் என மாய்ந்து போயிருப்பீர்கள். அந்த வியப்பு விலகுவதற்குள்ளேயே அந்த ஜோடிகளில் ஒரு சிலர் சண்டை போட்டுப் பிரிந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் அடைவீர்கள். அதெப்படி சாத்தியம்?

காதலித்த காலத்திலும் திருமணமான புதிதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு அளவுகடந்த அன்பும் அதீத பற்றும் இருக்கிறது. காரணம்... ஒருவருக்கு இன்னொருவர் கொடுக்கும் மரியாதை... துணை செய்கிற சின்னச் சின்ன விஷயங்களைக் கூடப் பாராட்டுவது... துணையின் வார்த்தைகளுக்குக் காது கொடுப்பதுடன், மதிப்பும் அளிப்பது. திருமணத்துக்குப் பிறகு இவை அனைத்தும் காணாமல் போகின்றன. துணையின் மீது அன்பும் மரியாதையும் காதலும் குறைகிறது. துணையிடம் கருத்து கேட்காமல் தாமாக முடிவெடுப்பது அல்லது தன் நண்பர்களிடமோ, பெற்றோரிடமோ அபிப்ராயம் கேட்டு முடிவெடுப்பது...  இது போன்றவை துணைக்கு கோபத்தையும் வெறுப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தும். சண்டைக்கு அஸ்திவாரம் அமைக்கும்.
நாளாக ஆக அது பெரிதாகி, ஒரு கட்டத்தில் பிரிவு என்கிற தீர்வில் வந்து நிற்கும். இதனால்தான் பெரும்பாலான தம்பதியர் நல்லவர்களாகவே இருந்தாலும் அவர்களுக்குள்ளும் பிரச்னைகளும் சண்டைகளும் ஏற்பட்டு, உறவு மோசமாகவே செய்கிறது. இதை எப்படி சரி செய்யலாம்?
பலரும் தங்கள் உறவுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் தாமாக சரியாகும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படி ஆகாது. பிரச்னைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அதைத் தீர்ப்பதற்கான அடிகளை எடுத்து வைத்தால்தான், தீர்வை நோக்கி நகர முடியும். அந்த முதல் அடியை யார் எடுத்து வைப்பது என்பதில்தான் இருவருக்குள்ளும் குழப்பமே...

நாளைக்கு நமது உறவு சீராகவும் சுமுகமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிற தம்பதியரில் யார் வேண்டுமானாலும் தயங்காமல் இந்த முதல் அடியைத் தொடங்கலாம். ‘அதெல்லாம் சரியாக வராது... ஏற்கனவே எங்கள் உறவு மோசமான நிலைமைக்கு வந்து விட்டது... இனி சரி செய்வது சிரமம்’ என சிலர் நினைக்கலாம். சரி செய்கிற அந்தக் கட்டத்தை எல்லாம் கடந்து விட்டதாக நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கு ஓர் உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘மிகச் சிறந்த தம்பதியர் கூட மோசமான உறவுக்குள் போகலாம். அடிப்படையில் இருவரும் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனாலும், அவர்களுக்கிடையிலான உறவு மோசமானதாக இருக்கும். எல்லாருக்கும் அடுத்தவர் மீது அன்பு காட்டவும், அதே அன்பைத் திரும்பப் பெறவும் ஆசை இருக்கிறது.

அதற்கு அவசியத் தேவையான பரஸ்பர மரியாதையையும் அன்பையும் பாராட்டையும் பகிர்வதில்தான் சிக்கல். அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முனையாததுதான் பிரச்னைக்கான காரணங்கள். அது தெரியாமல் நடந்து கொள்வதாலேயே, அவர்களது காதலும் உறவும் மோசமாகிறது. அன்பையும் மரியாதையையும் பகிர்வதற்கு பதில் ஒருவரை ஒருவர் குத்திக் காட்டுவது, குறை சொல்வது, சத்தமாகப் பேசுவது, தான் எடுப்பதே இறுதி முடிவு என ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஆயுதங்களின் மூலம் எதிர்மறையான விளைவுகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக சிந்தனையில்லாத வார்த்தைகளை வீசுதல், சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்குதல், அடிதடி என வன்முறையில் இறங்குதல் அல்லது பேசாமல் விலகி இருப்பது போன்ற எல்லாம் நடக்கும்.

விஞ்ஞானப்பூர்வமான காதலுடன் கூடிய தகவல் பரிமாற்றத்துக்குப் பழகும் தம்பதியரின் உறவுக்குள் பிரச்னைகளே வருவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது கணவன் - மனைவிக்கு இடையில் மட்டுமின்றி, அவர்களது வாரிசுகளுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும்கூட பெரியளவில் உதவும். ஆரோக்கியமான உடல் வேண்டும் என்கிற விழிப்புணர்வு இன்று எல்லோருக்கும் பரவலாக வந்திருக்கிறது. அரைகுறை ஞானத்தில், ‘இதுதான் சரி’ என்கிற நினைப்பில் தாமாக உணவுக்கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கிறவர்களே அதிகம். ‘கொஞ்சமாத்தான் சாப்பிடறேன்... ஆனாலும், வெயிட் குறையலை’ எனச் சொல்கிறவர்கள் இந்த ரகம்தான். இதே விஷயம்தான் உறவுகளுக்குள்ளும் நடக்கிறது. எது சரியான தகவல் பரிமாற்றம் என்பதே தெரியாமல், ‘நான் ஒழுங்காத்தான் இருக்கேன். நல்லாத்தான் பேசறேன்... ஆனாலும், எங்களுக்குள்ள பிரச்னை...’ என சொல்லிக் கொள்வார்கள்.

பிரச்னைகள் இல்லாத தம்பதியரே கிடையாது. பணம், குழந்தை வளர்ப்பு, வயதான பெற்றோரைப் பராமரிப்பது, ஸ்திரமற்ற வேலை என ஒவ்வொருவருக்கும் சவால்களுக்குப் பஞ்சமே இல்லை. கணவன் -  மனைவிக்கிடையிலான பேச்சுப் பரிமாற்றம் சரியாக இருந்தால், இந்தப் பிரச்னைகளை சுலபமாக சமாளித்துக் கடந்து விடலாம் என்கிற விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. இந்த விழிப்புணர்வைப் பெற கால அவகாசமெல்லாம் அவசியமில்லை. காலம் கடந்து விடவில்லை. இப்போது நினைத்தாலும் நிலைமையை மாற்றி விட முடியும். இருவருக்குள்ளும் பேசித் தீர்க்க முடியாத விஷயங்களுக்காக கவுன்சலர்களை நாடலாம். ஆனாலும், அப்படிச் செல்வதில் இருவருக்குமே பெரிய தயக்கம் இருக்கிறது. சரியான கவுன்சலரை எப்படிக் கண்டுபிடிப்பது என்கிற குழப்பம்...

அப்படியே கண்டுபிடித்துப் போனாலும் அவர் தங்கள் வாழ்க்கையின் பழைய விஷயங்களைக் கிளறிப் பேசுவாரே... அதனால் பிரச்னை இன்னும் பெரிதாகுமே என்கிற பயம்... இதையெல்லாம் மீறி, சரியான கவுன்சலரை கண்டுபிடித்து ஆலோசனைக்குச் செல்கிற தம்பதியர் அத்தனை பேரும் மனம் மாறி வாழ்க்கையில் இணைந்து விடுவதில்லை. அவர்களுக்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது. ‘எங்க ரெண்டு பேருக்கும் எந்த விஷயத்துலயும் சரியா வராது... எல்லாத்துலயும் கருத்து வேறுபாடு...’ எனப் பலர் சொல்லக் கேட்கலாம். உண்மை என்னவென்றால், இந்த உலகில் ஒவ்வொருவருமே தனி மனிதர்தான். சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் தனித்தன்மை கொண்டவர்கள்தான். காலையில் எழுந்ததும் காபியா, டீயா... என்ன குடிப்பது, காலை உணவுக்கு என்ன சமைப்பது, சாப்பிடுவது, என்ன கலர் உடை உடுத்துவது, எந்த ஊருக்குப் பயணம் செய்வது... இப்படி எல்லா விஷயங்களிலுமே சுய விருப்பங்கள் கொண்டவர்கள். எனவே, தம்பதிக்குள் இதை ஒரு பிரச்னையாகப் பேச வேண்டியதில்லை.

இரு வேறு சூழல்களில் வளர்ந்து விட்டு, திடீரென வாழ்க்கையில் இணைகிற போது, அத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையை மறந்துவிட்டு, துணைக்கேற்ப முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்பதுதான் தவறு. வேற்றுமைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். இதிலும் ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் பெரும் பங்கு வகிக்கிறது. சிந்தனையிலும் செயலிலும், சென்ற தலை முறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் மலையளவு வித்தியாசங்களைப் பார்க்கிறோம். எந்த டி.வி. சேனல் பார்ப்பது, என்ன டூத் பேஸ்ட் உபயோகிப்பது என்கிற சின்னச் சின்ன விஷயங்களில் தொடங்கி, பெரிய விவகாரங்கள் வரை எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடுகள்... நுகர்வோர் கலாசாரமானது நம் முன்னே ஏராளமான சாய்ஸ்களை கொட்டியிருக்கிறது.

அவரவர்க்கு விருப்பமானதை, வசதியானதைத் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கிற இந்த கலாசாரமானது பாசிட்டிவான பாதிப்பை ஏற்படுத்துவதற்குப் பதில், பாதகங்களையே அதிகமாக்கியிருக்கிறது. எல்லா விஷயங்களிலும் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, கணவன் - மனைவிக்குள்ளான வாக்குவாதங்களுக்கு விதையாகிறது. சில நேரங்களில் இந்த உறவு சரியில்லை என முதல் திருமணத்தை விவாகரத்து செய்து விட்டு, இன்னொரு திருமணம் செய்பவர்களும் உண்டு. ஆய்வு ஒன்று என்ன சொல்கிறது தெரியுமா? முதல் திருமணம் விவாகரத்தில் முடிய 50 சதவிகிதமும், 2வது திருமணம் விவாகரத்தாக 70 சதவிகிதமும், 3வது திருமணம் விவாகரத்தாக 75 சதவிகிதமும் வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

துணையுடனான பிரச்னைகளை சரி செய்து, அதற்குக் காரணமான நமது குணங்களை மாற்றிக் கொள்வதற்குப் பதில், துணையையே மாற்றுவது எப்படி சரியான தீர்வாகும்? ஆனாலும், தன்னை மாற்றிக் கொள்வதைவிட, துணையை மாற்றுவதுதான் பலருக்கும் சுலபமானதாக இருக்கிறது. நம் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள முன் வந்தோமானால், துணை மட்டுமில்லை, இந்த உலகமே நமக்கு ஏதுவானதாக மாறியது போல உணர்வோம். யாருடனும், எங்கும், எந்த உறவும் நட்பும் சுமுகமானதாகவே இருக்கும்.  ‘எல்லாம் சரிதான்... இது இருவழிப் பாதையாக இருந்தால் பிரச்னையில்லை. மாறுவதற்கு நான் தயார். என் துணையும் அதற்குத் தயாராக வேண்டுமில்லையா?’ என்கிற கேள்வியும் சிலருக்கு உண்டு.

அந்த எதிர்பார்ப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு, ‘நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே...’ எனத் துணியுங்கள். உங்களுடைய அன்பும் அக்கறையும் காதலுடன் கூடிய அணுகுமுறையும் நீங்கள் எதிர்பார்க்காமலேயே உங்கள் துணையையும் உங்களுக்கேற்ப மாற்றிக் காட்டும். உறவை சுமுகமாக்கும் இந்த முயற்சியில் இருவரின் பங்களிப்பும் இருப்பது ரொம்பவே நல்லதுதான். முடியவில்லையா... தனியாளாகவும் ஜெயிக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்...இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது திடீரென எப்படி இதையெல்லாம் பற்றி யோசிப்பது? இதெல்லாம் சரியாக வருமா எனத் தயங்குகிறவர்களுக்கு மீண்டும் அதே விஷயத்தை வலியுறுத்துகிறேன். பெட்டர் லேட் தேன் நெவர்!

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே.. Empty Re: நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே..

Post by ஜேக் Sat Dec 20, 2014 11:52 pm

நல்ல விஷயங்கள்தான்... நடைமுறையில் சிலவேளைகளில் சாத்தியபடவில்லையே... சோகம்

நல்ல கட்டுரை சூப்பர் சூப்பர் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே.. Empty Re: நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே..

Post by செந்தில் Mon Dec 22, 2014 7:05 pm

தம்பதியர் அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை.
சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே.. Empty Re: நான் மாறப் போகிறேன்... இந்த நொடியிலிருந்தே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum