தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அப்பா!!

View previous topic View next topic Go down

அப்பா!! Empty அப்பா!!

Post by ஸ்ரீராம் Fri Nov 09, 2012 11:26 pm

நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா!!...

அப்பா!! Dad-and-son

என் முதல் கதாநாயகன்..
நீங்கள் தான் அப்பா..!

தலைகனத்தில்
நான் ஆடும் போது
குட்டு வைத்தது நீங்கள்,

தடுமாறி நான்
விழுந்த போது
தூக்கி நிறுத்தியதும்
நீங்கள் அப்பா..!

உங்கள் உயிரே
என் மீது
வைத்து இருந்தும்,
ஒரு சிறு
இடைவெளியில்தான்
நம் பந்தத்தை
நீங்கள்
வைத்து இருந்தீர்கள்,
அந்த
இடைவெளிதான்
உங்கள் பாசத்தை
உணர வைத்தது எனக்கு,


கம்பீர பார்வை,
நேர் படும் பேச்சு,
அஞ்சா நெஞ்சம்,
சில சமயம்
ரௌத்திர குணம்
இருந்தாலும்
உங்கள்
மனம் என்றும்
குழந்தைதான் அப்பா...!


அடுக்கி வைத்த
சிங்கப்பல்,
கொண்டு நீங்கள் சிரிக்கும் போதும்,
உதிர்ந்தது
என்னவோ
மழலை
புன்னகைதான்
அப்பா...!


அம்மா சொல்வார்கள்
நான்
எனக்கு
விவரம்
தெரியும் வரை
உங்கள் மடியில் தான்
படுத்துகொள்வேன் என்று,

ஆனால்
எனக்கு விவரம்
தெரிந்த நாள் முதல்,
உங்கள் மடியில்
நான்
படுத்தது இல்லையே அப்பா..!


ஒன்று நினைவு
உள்ளது அப்பா...
நான்,
காதலில் தோற்ற போது,

என் படுக்கையே
என் கண்ணீரால்
நனைந்த போது,
நீங்கள் வந்தீர்கள்,
என் தலை எடுத்து
உங்கள் மடியில் வைத்து
என் தலைமுடி கோதி,
என் கண்ணீர் நீங்கள்
துடைத்தபோது ,
என் மனசாட்சி
என்னை செருப்பால்
அடித்தது அப்பா...!


இந்த மடியை
விட்டுவிட்டா
நீ,
பெண் மடி
தேடி அலைந்தாய் என்று...?


உங்கள் கண்களில்
நான் இதுவரை
கண்ணீரை கண்டதில்லை,

அப்பா,
உங்கள் அப்பா
இறந்தபோதும்
மனதில் அழுதீர்களே தவிர
கண்களில் அழவில்லை நீங்கள்,


கண் மருத்துவரிடம்
உங்களை
கூட்டிசென்றபோது,
உங்கள் கண்களில்
மருந்து விட்டார்கள்,

முதல் சொட்டு
உங்கள் கண்களில் விழாமல்,
கண் ஓரம் விழுந்து,
கண்ணீர் போல்
வழிந்தது,
வழிந்தது என்னவோ
மருந்துதான்,
பார்க்க கண்ணீர் போல்
இருந்ததனால்
நான் பதறிப்போனேன்
அப்பா...!
என் அப்பா கண்களில் கண்ணீரா.???


ஒரு முறை சாலையில்
உங்கள் விரல் பிடித்து
நான் நடக்கையில்,
எதிரே வந்தவர்,
தன்
மிதிவண்டியில்
என்னை இடித்து விட,
என் கால்களில்
ரத்தம்..,

நீங்கள் எதுவும் பேசவில்லை,
அப்போது...!
பிறகு,
என்னை வீட்டில் விட்டுவிட்டு...
நீங்கள் சென்று
அவன் சட்டை பிடித்து,
அவன் கால்களை
பதம் பார்த்ததை,
நான் அறிவேன் அப்பா..!

உங்களின் ரௌத்திரம்
நான் கண்டது
அப்போதுதான் அப்பா...!


நூறு ருபாய்
நான் கேட்டாலும்
நூறு கேள்வி
கேட்பீர்கள்..எதற்கு என்று..?
வெறுப்பாய்
பெற்றுசெல்வேன் நான்..,

இன்று நான்
சம்பாதிக்கையில்
புரிகிறது அப்பா..!
நூறு ரூபாய்க்கு
நூறு வியர்வை துளிகளை
சிந்த வேண்டி இருக்கிறது...,


அப்பா..!
உங்களின் வியர்வை
உறிஞ்சு வளர்ந்தவந்தானா நான்..???


உங்களால் பிறந்தவன்
நான் அப்பா..,
உங்களை காய படுத்தி
இருக்கிறேன் பல முறை,
மன்னிப்பு என்ற வார்த்தை
போதாது அப்பா..!


என் ஆசை
ஒன்று தான் அப்பா..!
உங்களை இழக்கும்
மன தைரியம்
எனக்கு இல்லை..அப்பா..!


என் ஈமை சடங்குகளை
நீங்கள் செய்யுங்கள் அப்பா
என் பாவங்கள்
தீரட்டும்...


ஆம் அப்பா
உங்களுக்கு முன்பு
நான் மரிக்க வேண்டும்...


போதும் அப்பா..,
இதுவரை போதும்
நான் உங்களை
பாடாய் படுத்தியது....!

அப்பா...!

" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..."

நன்றி திரு. இளையபாரதி

http://prakashbarathi.blogspot.in


இந்த கவிதையை படித்ததும் கண்ணில் கண்ணீர் வழிகிறது. என் அப்பாவின் பாசம் (அம்மாவுதான்) பற்றி அமர்க்கள உறவுகள் ஒரு சிலருக்கு தெரியும். இதைபடித்ததும் அப்பா உடல்நிலையில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். கவிஞர் திரு. இளையபாரதி அவர்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அப்பா!! Empty Re: அப்பா!!

Post by Manik Sat Nov 10, 2012 7:28 am

அப்பாவும் அம்மாவும் ஒருவரே பாசம் மட்டும் தனித்தனியாக எதற்கு

நம்முடைய பாசம் தான் அவர்களுடைய உயிர் அது என்றைக்கு குறைகிறதோ அன்றோடு அவர்கள் வாழ்க்கையை வெறுத்துவிடுவர்

அளவுகடந்த பாசத்தை தவிர நாம் அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அப்பா!! Empty Re: அப்பா!!

Post by முரளிராஜா Sat Nov 10, 2012 7:34 am

அப்பாவின் அன்பை அழகாய் சொல்கிறது கவிதை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அப்பா!! Empty Re: அப்பா!!

Post by mohaideen Sat Nov 10, 2012 9:16 am

மிக அருமையா கவிதை அப்பா!! 534526அப்பா!! 534526அப்பா!! 534526
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அப்பா!! Empty Re: அப்பா!!

Post by ரானுஜா Sat Nov 10, 2012 2:05 pm

ரொம்ப அருமையா இருக்கு அப்பா கவிதை பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அப்பா!! Empty Re: அப்பா!!

Post by பாலகன் கண்ணில் Sun Nov 11, 2012 6:39 pm

ஸ்ரீராம்-க்கு நன்றிகள் பல...
பாலகன் கண்ணில்
பாலகன் கண்ணில்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

Back to top Go down

அப்பா!! Empty Re: அப்பா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum