Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சந்தோஷ வாழ்வு தரும் சரபேஸ்வரர்!
Page 1 of 1 • Share
சந்தோஷ வாழ்வு தரும் சரபேஸ்வரர்!
சரபேஸ்வரர்- சந்தோஷம் நிலைத்திருக்க வரம் அருளும், தெய்வ மூர்த்தம். தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் பேராபத்துகளும் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத கஷ்டங்கள், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத பிணிகள் ஆகியன அகலவும், தீவினைகள், விஷ பயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் சரபரை வழிபட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் வியாசர். பக்த பிரகலாதனைக் காக்க ஸ்ரீமந் நாராயணன் நரசிம்மமாய் அவதரித்து இரண்யகசிபுவை அழித்தருளிய திருக்கதை நாமறிந்ததே. அவ்வாறு அசுரனை அழித்தும் நரசிம்மரின் ஆக்ரோஷம் தணியவில்லை. இதனால் அஞ்சி நடுங்கிய தேவர்கள் சிவனாரைச் சரணடைந்தனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்டு, நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவபெருமான் எடுத்த திருக்கோலமே சரபேஸ்வர மூர்த்தம் என்கின்றன புராணங்கள்.
சரபரின் திருவடிவம் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்து சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். பறவை போன்று பொன்னிறம், இரண்டு இறக்கைகள், செந்நிற கண்கள், கூரிய நகங்களுடன் கூடிய- சிங்கத்துக்கு இருப்பது போன்ற நான்கு கால்கள், மனித உடல், கிரீடம் தரித்த சிங்க முகம் மற்றும் தந்தங்களுடன் பயங்கரமாகக் காட்சி தருவார் சரபர் என்று விளக்குகிறது காமிக ஆகமம். எட்டு கால்கள் கொண்டவர் என்று வேறு சில நூல்கள் விவரிக்கின்றன. ஸ்ரீதத்வ நிதி எனும் நூல் 32 திருக்கரங்களுடன் திகழும் சரபத்தின் ஒரு திருக்கரம் துர்கையை அணைத்தவாறு இருக்கும் என்று விளக்குகிறது. பிரத்யங்கிரா எனும் காளியும், சூலினி துர்கையும் சரபரின் இறக்கைளாகவும், இவரின் இதயத்தில் பைரவரும், வயிற்றில் வடவாக்னியும், தலையில் கங்கையும் திகழ தொடையில் நரசிம்மரைக் கிடத்தியபடி காட்சியளிப்பதாக பிரமாண்ட புராணம் சொல்கிறது. சரப மூர்த்தியின் சக்தி- அரிப்ரணாசினி.
தமிழகத்தில் கும்பகோணம் அருகிலுள்ள துக்காச்சி எனும் ஊரில் அமைந்திருக்கும் விக்ரமசோழீச்வரம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில்தான் சரப சிற்பம் முதன்முதலாக அமைக்கப்பட்டது என்பர். இந்தத் தலம் தவிர சரப சிற்பம் முதன்முதலாக அமைக்கப்பட்டது என்பர். இந்தத் தலம் தவிர தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை, மதுரை கோயில்கள், சென்னையில் குரோம்பேட்டை குமரன் குன்றம் கோயில், சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா கோயில், திருமயிலை வெள்ளீஸ்வரர் கோயில், சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோயம்பேடு- குசலவபுரீஸ்வரர் கோயில், திரிசூலம் ஆகிய தலங்களில் சரபேஸ்வரரைத் தரிசிக்கலாம்.
சரபேஸ்வரரை வழிபடுவதால் பகை அழியும், போர்களில் வெற்றி கிடைக்கும் நோய் நீங்கும் என்கிறது உத்தரகாரணாகமம் கூறுகிறது. நாமும் சரபேஸ்வரர் அருள் வழங்கும் கோயில்களுக்குச் சென்று அவரை வழிபடுவோம். இயலாதவர்கள் அனுதினமும் அவரின் திருவடியை மனதில் தியானித்து சரபர் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வணங்கி, அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுச் சிறக்கலாம்.
ஸாலுவேசாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப: ப்ரசோதயாத்
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சந்தோஷ வாழ்வு தரும் சரபேஸ்வரர்!
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வைராக்கிய வாழ்வு வெற்றி தரும்!
» தயிர் தரும் சுக வாழ்வு.
» நோயற்ற வாழ்வு தரும் சாறுகள் :-
» இஞ்சி தரும் இனிமையான வாழ்வு:----
» சாறுகள் தரும் சத்தான வாழ்வு:-
» தயிர் தரும் சுக வாழ்வு.
» நோயற்ற வாழ்வு தரும் சாறுகள் :-
» இஞ்சி தரும் இனிமையான வாழ்வு:----
» சாறுகள் தரும் சத்தான வாழ்வு:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum