Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!
Page 1 of 1 • Share
ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!
முனைவர் மு.ஸ்டாலின் நாகராஜன்
சீராக பராமரிக்கக்கூடிய உடலைக் கொண்டே சிறந்த ஆரோக்கியம் பெற முடியும். அதன் மூலம்தான் அருமையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இதுதானே புத்திசாலித்தனம்?
இனிசிகரெட்டை தொட மாட்டேன்... மது அருந்துவதை அறவே விட்டு விடுவேன்...காபி, டீ குடிக்க மாட்டேன்... எண்ணெயில் வறுத்தெடுத்த பலகாரத்தை தொடவே மாட்டேன்... காலை 5 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு உறங்கச் சென்று விடுவேன்... தினமும் 2 மணி நேரத்துக்கு மேல் டி.வி. பார்க்க மாட்டேன்... ஆபீஸ் வேலைகளை வீட்டில் செய்யவே மாட்டேன்... லேப்டாப், மொபைலை இரவில் தொட மாட்டேன்... தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வேன்... பரீட்சைக்கு முதல் நாள் மட்டுமே படிக்காமல், அன்றைய பாடங்களை அன்றன்றே படித்துவிடுவேன்... தினமும் காலை எழுந்து நடைப்பயிற்சி செய்வேன்... ஓட்டப் பயிற்சி செய்வேன்... - இப்படி ஒவ்வொரு புத்தாண்டின் போதோ, பிறந்த நாளின் போதோ பற்பல புத்தாண்டு உறுதிமொழிகளை (New Year / Birthday Resolutions) எடுத்துக்கொண்டே இருக்கிறோம்.
ஆனால், ஜனவரி 31க்குள் அனைத்தும் தூள் தூளாகி, பழைய கதையை ஆரம்பித்து விடுகிறோமே? முன்பெல்லாம் கல்யாணம் அல்லது ஏதாவது குடும்ப விசேஷங்களுக்குத்தான் சாப்பாடு அயிட்டங்கள் தடபுடலாக இருக்கும். அதுவே பின்பு மெதுவாக மாதம் ஒருமுறை சம்பள தின பார்ட்டியாகி, வார இறுதி பார்ட்டி ஆகி, இப்போது தினசரி பார்ட்டியாக வளர்ந்து நிற்கிறது. இதனால் கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகளை உண்டு, நம் பெற்றோர் அளித்த அருமையான உடலை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து தப்பிக்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறது மனித இனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான உடலையும், நல்ல ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த சில அருமையான வழிகள்...
1 உடற்பயிற்சிக் கூடம்
வீட்டுக்கு அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது தினமும் 45 நிமிடங்கள், வாரம் 4 நாட்கள் பயிற்சி மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு அதிகமாக உடலில் தங்கி யுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce or Burn Extra Calories) பயன் பெறலாம். பட்டினியாக - ஒருவேளை அல்லது இருவேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது மடமையே. தசைகள் வலுவிழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An empty stomach can lead to muscle loss).
2 ஆரோக்கிய உணவு
நம் முன்னோர் கூறியபடி Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper என்பதைப் பின்பற்றுங்கள். அனைத்து வகை தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன் என அனைத்தும் கலந்த சரிவிகித உணவு (Balanced Diet) எடுத்துக்கொள்வது அவசியம். அதிக அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே 5 வேளைகளுக்கு சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தமம்.
3. நிறைய தண்ணீர்
உங்களின் எடையை சீராக வைத்துக்கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.
4. எலும்புகளுக்குகால்சியம்
அதிக உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ கால்சியம் எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில் தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில் தசைப்பிடிப்பு உண்டாகும்.
5 ஆழ்ந்த உறக்கம்
தூக்கமின்மையே இதயம், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு மூலகாரணம். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால் உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த நாளங்கள் அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3471
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!
கட்டுரைக்கு மிக்க நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» கருமை நீங்க அருமையான வழிகள்
» அலர்ஜியை போக்கும் அருமையான வழிகள்
» உப்பைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்த சில அருமையான வழிகள்!!!
» அருமையான படைப்புகள்... அருமையான பயன்பாடுகள்
» அருமையான கருத்து
» அலர்ஜியை போக்கும் அருமையான வழிகள்
» உப்பைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்த சில அருமையான வழிகள்!!!
» அருமையான படைப்புகள்... அருமையான பயன்பாடுகள்
» அருமையான கருத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|