Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒன்றல்ல... பதினைந்து+ !
Page 1 of 1 • Share
ஒன்றல்ல... பதினைந்து+ !
‘‘‘ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்' என்பது ஒரு நோயின் தனிப்பட்ட பெயர் போலத்தான் தெரியும். ஆனால், பதினைந்துக்கும் மேற்பட்ட குறைபாடுகள் இந்த ஒற்றைப் பெயரின் பின்னால் மறைந்திருக்கிறது’’ என்கிறார் வாத இயல் (Rheumatology) சிறப்பு மருத்துவரான கிருஷ்ணமூர்த்தி. ஏன்? எதற்கு? எப்படி? இதோ... அவரே விளக்குகிறார்.
வேலியே பயிரை மேய்ந்தால்...
பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய் செல்கள் போன்றவற்றின் தாக்குதலாலேயே நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. இதுபோல அந்நிய காரணிகள் நம்மைத் தாக்க முயலும்போது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் இருக்கும் லிம்போசைட்டுகள்தான் அவற்றை எதிர்த்துப் போராடி நம்மைக் காப்பாற்றுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் Immune என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். எதிர்ப்பு சக்தி நம் உடலுக்கு எதிராகவே சில நேரங்களில் சண்டையிட ஆரம்பித்துவிடும். நம்மைக் காக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி, நமக்கு எதிராக திரும்புவதையே ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்' (Auto immune disorder) என்கிறோம். அதாவது வேலியே பயிரை மேய்ந்தால்? அதுதான் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்!
இரண்டு செல்கள்ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள்தான் போர் வீரர்கள் போல நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன என்று பார்த்தோம். இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமாக சொன்னால் வெள்ளை அணுக்களில் இருக்கும் லிம்போசைட்டுகளில் B, T என இரண்டு செல்கள் இருக்கின்றன. இந்த இரண்டு செல்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகின்றன. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளிடமிருந்து மட்டும் அல்லாமல் ரத்ததானம் பெறும்போது வேறு ரத்த வகையைக் கொடுத்தால் உடல் ஏற்றுக் கொள்ளாததற்கும் இந்த B,T செல்களின் நுண்ணுணர்வே காரணம்.
ரத்த வகை பொருத்தம் பார்த்து உறுப்பு தானம் பெறும்போதும், ‘இது என்னுடைய உறுப்பு அல்ல’ என்று அடம்பிடித்து உறுப்பு மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்குத் தலைவலியாக இருப்பதும் இந்த இரண்டு செல்கள்தான். அதனால்தான் உறுப்பு மாற்று சிகிச்சை செய்த பிறகு, உடலை சமாதானப்படுத்துவதுபோல சில மருந்துகளைக் கொடுத்து அதன் வேகத்தைத் தணிக்கிறார்கள். ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டரில் இந்த இரண்டு செல்களே நமக்கு எதிராகத் திரும்பி, பிரச்னையைக் கொடுக்கின்றன.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை...
ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கலாம். இது சாதாரண காயமாகவோ, ரத்தம், நரம்பு, தைராய்டு, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் பெரிய நோயாகவோ இருக்கலாம். மூளையில் ஏற்படும் மல்ட்டிபிள் ஸ்கிளிரோசிஸ், தோலில் உண்டாகிற சோரியாசிஸ், தசைகளை பாதிக்கும் பாலிமயோசைட்டிஸ், எலும்போடு எலும்பாக தோல் ஒட்டிக் கொள்ளும் ஸ்க்ளிரோடெர்மா என நிறைய வகைகள் இதில் உள்ளன. கணையத்தில் இன்சுலின் சுரப்பைக் குறைக்கும் நீரிழிவு கூட ஒருவகையில் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்தான். இவற்றில் மூட்டு மற்றும் தசை நோய் சம்பந்தப்பட்ட Rheumatology பிரச்னைகள்தான் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.
பெண்களைத் தாக்கும் லூபஸ்...
இந்தியாவைப் பொறுத்தவரை மூட்டு மற்றும் தசை நோய் பிரச்னையில் சிஸ்டமிக் லூபஸ்(Lupus) என்பது அதிகம். இது கொஞ்சம் ஆபத்தான நோயும் கூட என்பதால் கவனம் அவசியம். தமிழில் இதை முகப்புற்று என்கிறார்கள். 2, 3 வயதிலெல்லாம் கூட லூபஸ் பாதிப்பு வரலாம். குறிப்பாக, பெண்களை லூபஸ் நோய் அதிகமாகத் தாக்குகிறது. உடலெல்லாம் தோல் உரிந்து சிவந்து தெரியும். லூபஸ் பெண்களை அதிகம் தாக்குவதற்கு ஹார்மோன் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
காரணம் என்ன?
ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதனால் இந்த நோயைக் குணப்படுத்தவும் முடியவில்லை. மற்ற நோய்களைப் போல் அறிகுறிகளை வைத்தும் கண்டுபிடிப்பது சிரமம். சாதாரணமாக உடல்நலக் குறைபாட்டுக்கு மருத்துவரிடம் போகும்போது தெரிந்தால்தான் உண்டு. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரில் பொதுவான அம்சமாக மரபியல் காரணங்கள் இருக்கின்றன. அதனால், நம் குடும்பத்தில் யாருக்கேனும் இக்குறைபாடு இருந்தால் அதற்கேற்ற பரிசோதனையை செய்துகொள்வது நல்லது.
இதில் பதினைந்துக்கும் மேற்பட்ட நோய்கள் இருப்பதால் அத்தனை சோதனைகளும் செய்துகொள்வது சாத்தியம் இல்லை. நம் குடும்பத்தில் ரத்தம் தொடர்பான குறைபாடு ஒருவருக்கு இருந்தால் நாமும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வதே போதுமானது. நெருங்கிய உறவுகளில் திருமணத்தைத் தவிர்ப்பதன் மூலமும் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரைத் தடுக்க முடியும்.
தமிழ்நாடு நிலவரம்...
மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் எச்சில் மூலமாக ருமாட்டிக் காய்ச்சல் (Rheumatic fever) முன்பு ஏற்பட்டது. எச்சிலில் இருக்கும் ஸ்ட்ரெப்டாகாக்கைல் என்ற பாக்டீரியாவின் புரதத்துக்கும் இதயத்தில் இருக்கும் மயோஸின் என்கிற புரதத்துக்கும் அடையாளம் தெரியாமல் நம்முடைய எதிர்ப்பு சக்தி இதயத்தை தாக்கியதால் இந்த காய்ச்சல் வந்தது. இப்போது ருமாட்டிக் காய்ச்சலை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டோம்.
அதேபோல, ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம் நாட்டில் நூறில் ஒரு சதவிகிதம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இதன் பாதிப்பு அதிகம் என்பதால், மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளையும் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போதே நல்ல மருந்துகள் வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் நல்ல தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பலாம்.
தடை ஒன்றும் இல்லை!
ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய நோய்தானே தவிர, கவலைப்பட வேண்டிய விஷயம் அல்ல. மற்றவர்களைப்போல பள்ளி செல்லவோ, வேலைக்குப் போகவோ, திருமணம் செய்யவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ இந்த நோய் தடையாக இருக்காது. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரை கட்டுப்படுத்த ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள், ஊசிகள் இப்போது இருக்கின்றன. தகுந்த மருத்துவரின் பரிந்துரையின்படி, சரியான முறையில் எடுத்துக் கொண்டால் இதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். நீரிழிவுக்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதுபோல தொடர்ச்சியான சிகிச்சை இதற்கு அவசியம். அதைவிட குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நோயாளிக்கு மிகவும் அவசியம். குடும்பத்தினர் ஆதரவாக இருந்தாலே ஒரு நோய் பாதி குணமானதுபோல்தான்!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3633

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum