Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஓடி விளையாடு பாப்பா!
Page 1 of 1 • Share
ஓடி விளையாடு பாப்பா!
ஆக்டிவ் கிட்ஸ்
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி ஆட்டம் போட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள் குழந்தைகள். இந்த விடுமுறை கால மகிழ்ச்சி, ஆண்டு முழுவதும் உடன் வந்தால் கல்வித்திறனும் ஆரோக்கியமும் குழந்தைகளிடம் மேம்படும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
‘நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் உடல் சார்ந்த செயல்பாடு உள்ள குழந்தைகளிடம் நல்ல மனவளர்ச்சி இருப்பதும், செயல்பாடு குறைந்த குழந்தைகளிடம் மன அழுத்தம் இருப்பதும்ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நடந்த இந்த ஆய்வு 7ம் வகுப்பு படிக்கும் 4 ஆயிரத்து 600 மாணவர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதே வகுப்பு மாணவர்கள் 8ம் வகுப்புக்குள் நுழைகிறபோது படிப்பின் மீதுள்ள அழுத்தம் காரணமாக உடல் சார்ந்த செயல்பாடு குறைவதையும், அதன் எதிரொலியாக மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதையும் ஆய்வை நடத்திய ராட் கே டிஷ்மண் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
உடற்பயிற்சி மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தியிடம் இந்த ஆய்வு பற்றி கேட்டோம்...‘‘இந்த உண்மையை ஆய்வு நடத்தித்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. துறுதுறுவென இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. இந்த இயல்பை மீறி மந்தமாக இருக்கும்பட்சத்தில்தான் அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஒருவரின் ஆயுளைத் தீர்மானிப்பதில் உடற்பயிற்சிகளும் ஆரோக்கியமான உணவுகளும் கல்வியைவிட முக்கிய பங்கு வகிக்கின்றன என்ற உண்மையை சங்கடப்படாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார் கண்ணன் புகழேந்தி.
‘‘Disease of inactivity என்கிற உடல்சார்ந்த செயல்பாடு குறைந்த குழந்தைகளிடம் பருமன், மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு என்று பல நோய்கள் வருகின்றன. 2000ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரைவிட ஆயுள் குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. கல்வி தருகிற மன அழுத்தத்தால் இளவயதிலேயே நீரிழிவு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களில் 60 சதவிகிதம் பேர் இந்தியர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். ஒரு போரால் இழக்கக்கூடிய மக்களுக்கு இணையாக பல்வேறு நோய்களுக்கு மக்களைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே தவிர்க்கக் கூடிய நோய்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
‘விளையாடுவதன் மூலம் நாம் சொர்க்கத்துக்கு செல்ல முடியும்’ என்கிறார் விவேகானந்தர். நாம் வாழும் உலகத்தையே சொர்க்கமாக மாற்றிக் கொள்ளக் கூடிய மனநிலையை விளையாட்டு நமக்குத் தருகிறது என்பதுதான் இதன் அர்த்தம். ‘காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு’ என்று படிப்புக்கு நேரம் ஒதுக்குவதைப் போலவே விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பாரதியார் ஒரு டாக்டரை போலவே கூறியிருக்கிறார். இன்றோ குழந்தைகள் மாலை நேரத்தில் டியூஷனில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாலும், அவர்களின் எதிர்காலம் குறித்த பயத்தாலும் தேவையற்ற அழுத்தத்தைக் குழந்தைகளிடம் சுமத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்த பதற்றம் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்குகிறது.தைரியம் அற்ற பூஞ்சை மனநிலையோடே இன்றைய குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சமீபத்தில் டி.வி. ரிமோட்டை கொடுக்கவில்லை என்று ஒரு ப்ளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்டதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
குழந்தைகளின் கல்வியைப் போலவே, அவர்களது ஆரோக்கியமான எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது விளையாட்டுக்காகவோ, உடற்பயிற்சிக்காகவோ ஒதுக்க வேண்டும். படித்துக் கொண்டே இருந்தால் நல்ல மார்க் வாங்குவார்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையில், விளையாட்டுக்குப் பிறகு படித்தால், அந்தக் குழந்தை இன்னும் கவனமுடன் நன்றாகப் படிக்கும். காரணம் மனமும் உடலும் வேறு வேறு அல்ல. மனதின் சந்தோஷம் அதிகரிக்கும்போது கல்வித்திறன் மேலும் அதிகமாகும். விளையாடுகிற குழந்தைகளுக்கு உடல்நலம் பற்றிய உணர்வு வந்துவிடுவதால் தீய பழக்கங்களும் அவர்களை ஆட்கொள்வதில்லை’’ என்கிறார்.
குழந்தைகள் மனநல மருத்துவர் கண்ணன் இதில் இன்னொரு கோணத்தை முன் வைக்கிறார். ‘‘இந்தப் பிரச்னையில் பலருக்கும் பங்கு இருக்கிறது. பெற்றோரை மட்டுமே குறை சொல்ல முடியாது. நகா்மயமான வாழ்க்கை, பணத்தை நோக்கிய ஓட்டம், இட வசதியின்மை, கல்வி மீதுள்ள அழுத்தம் போன்ற பல காரணங்களால் குழந்தைகளின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன. குழந்தைகள் விளையாட வீடுகளில் வசதி இல்லை. விளையாட்டு மைதானம் இல்லாவிட்டால் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் தராது.
எத்தனையோ பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாமல் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அப்படியே விளையாட்டு மைதானம் இருக்கும் பள்ளிகளில் மண் தரை இல்லாமல் சிமென்ட் தரையோ டைல்ஸ் தரையையோதான் பார்க்க முடிகிறது. விளையாட்டு வகுப்புகளும் முறையாக நடப்பதில்லை.பரம்பரை ரீதியான காரணங்கள், குடும்பச் சூழல், பள்ளிச்சூழல் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவதால் இந்த ஆய்வை வேறு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டும்.
மன அழுத்தம் ஏற்பட்ட அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழல் என்ன, வீட்டில் சேர்ந்து சாப்பிடுகிறார்களா, வாரம் ஒருநாளாவது வெளியிடங்களுக்குச் சென்று வருகிறார்களா, அதற்கு முன்பு அவர்களின் வார நடவடிக்கைகள் என்ன, முன்பே மன அழுத்தத்தின் அறிகுறி இருந்ததா போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். செயல்படுவதற்காகத்தான் நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அவர்களின் இயல்புக்கு எதிராக முடக்கி வைத்து படிப்பைத் திணிக்கிறபோது உடலின் அடிப்படை நோக்கமே பாதிக்கப்படுகிறது.
இதனால்தான் தேவையில்லாத விளைவுகள் ஏற்படுகின்றன என்று அந்த ஆய்வு கூறியிருக்கிறது. விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளால் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவது மருத்துவரீதியாக உண்மைதான். மன அழுத்த ஹார்மோன்கள் குறைவதைப் போலவே மற்ற நல்ல பழக்கங்களையும் விளையாட்டு கற்றுத் தருகிறது.
பிடிக்காதவர்களுடனும் அனுசரித்துப் போகிற குழு உணர்வையும், தோல்விகளை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தையும், விட்டுக் கொடுக்கும் உணர்வையும் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. விழுந்தால்கூட எப்படி தற்காத்துக் கொண்டு விழ வேண்டும், விழுந்தாலும் எப்படி எழ வேண்டும் என்பதையெல்லாம் தாமாகவே குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். சமூக ரீதியாக நாம் கற்றுக் கொடுக்க முடியாத பல விஷயங்களை விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. அதனால், குழந்தைகளைக் கொஞ்சம் விளையாடவும் விடுங்கள்!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3680

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஓடி விளையாடு பாப்பா!
சிறப்பான குழந்தை நல கட்டுரைக்கு நன்றி மொஹைதீன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வெற்றியோடு விளையாடு
» காதல் உனக்கு ஒரு விளையாடு ...!!!
» ஜாதிகள் உள்ளதடி பாப்பா!
» ஆறு - பாடி பழகுப் பாப்பா
» விழித்திரு பாப்பா விழித்திரு
» காதல் உனக்கு ஒரு விளையாடு ...!!!
» ஜாதிகள் உள்ளதடி பாப்பா!
» ஆறு - பாடி பழகுப் பாப்பா
» விழித்திரு பாப்பா விழித்திரு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum