தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Mon Jun 29, 2015 9:31 pm

 "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"


வழக்கமான மாலை ஓய்வு நேரம்...


விவசாயவேலைக்கு சென்றவர்கள், அலுவலகம் விட்டு வந்தவர்கள், பள்ளிசாலை சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள், வயதானோர் அனைவரும் கதைகேட்கும் மரத்தடியில் ஒன்றுகூடி ஜக்குவின் வருகைக்காக காத்திருந்தனர்.


தொங்கிப்போன முகத்தோடு மிக சோகமாக தளர்ந்த நடையில் அங்கு வந்து சேர்ந்தான் ஜக்கு.


அவனைப் பார்த்த அனைவரும் "என்னடா இந்த ஜக்கிற்கு வந்த சோதனை?" என கேள்விக்குறியோடு அவனை பார்த்தனர்.


ஜம்பு ஆறுதலாக பேசினான். "என்ன ஜக்கு? ஏனிந்த வருத்தம்?"


கூட்டத்திலிருந்த பெரியவர் முரளி, "என்ன ஜக்கு... எங்களுக்கெல்லாம் கதை சொல்லி சிரிக்க வைக்கிற  நீ... உனக்கே சோகமா?" என்றார்.


ஜக்கு பேசத் தொடங்கினான்...


"அனைவருக்கும் வணக்கம். அன்பான விசாரிப்புகளுக்கு நன்றி. இன்றைக்கு நான் சொல்லப்போகிற கதைக்கு ஏற்றார்போல என் முகத்தை சற்று தொங்கலாக... வாடலாக வைத்துக் கொண்டேன். வேறொன்றுமில்லை" என்றான்.


"அப்போ இன்றைக்கு சோககதை தானா?!" என்றான் பொடியன் ஒருவன்.


"தலைப்பு பார்த்தாக்கா விஞ்ஞானக் கதை போல தெரிந்ததே" என்றார் ஒருவர்.


"சஸ்பென்ஸ் தாங்கலை தம்பி ஜக்கு... சீக்கிரம் ரீலு விடுப்பா" என்றார் முரளி தாத்தா.


ஜக்கு சொல்ல ஆரம்பித்தான்...


தொடரும்...


ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by முரளிராஜா Mon Jun 29, 2015 9:47 pm

இனி தங்கள் கதையை தகவல் தள சென்சார்போர்ட் அனுமதி பெற்றே பதியவேண்டும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Mon Jun 29, 2015 9:47 pm

"நான் இன்று கதைபோல சில சம்பவங்களை சொல்லப் போகிறேன். கவனமாக கேளுங்கள்" என்று சொல்லி விட்டு ஆரம்பித்தான்.

சம்பவம் - 1


கி.மு. 1450.  இரத்தினபுரி அரண்மனை. பெயருக்கேற்ற செழிப்பு இரத்தினபுரியில் இருந்தது. மக்கள் மன்னர் ஆட்சியில் ரொம்பவே சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.


மன்னர் புருசோத்தமனுக்கு நல்ல அழகான மனைவி புனிதவல்லி. அழகான மகன் இளவரசன் அழகேசன். குறையொன்றுமில்லை புருசோத்தமனுக்கு. ஒன்றைத்தவிர...


அரச தர்பார்... மந்திரி பிரதானிகள், பெருங்குடி மக்கள் அனைவரும் கூடியிருக்க... அரசன் புருசோத்தமன் ராணி புனிதவல்லியோடு தர்பாருக்குள் நடந்து வரும் அழகே தனிதான் ...


குறுக்கே ஜம்பு நுழைந்தான். "இளவரசன் எங்கே ஜக்கு போயிட்டான்? தர்பாருக்கு அவன் வரலையா?" 


"எங்கே இன்னும் குறுக்கே வர்லயேன்னு பாத்தேன்.... வந்துட்ட...ம்ம்... இளவரசன் பள்ளிசாலை போயிட்டான். சந்தேகம் தீர்ந்ததா? மேற் கொண்டு கதையை தொடரட்டுமா?" என்றான் ஜக்கு.


"தொடரு... தொடரு..."


ஜக்கு தொடர்ந்தான்...


அரச தர்பாரில் வந்து அரசர் அமர்ந்ததும்...


தொடரும்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Mon Jun 29, 2015 9:49 pm

முரளிராஜா wrote:இனி தங்கள் கதையை தகவல் தள சென்சார்போர்ட் அனுமதி பெற்றே பதியவேண்டும் புன்முறுவல்

அந்த சென்சார்போர்டு டைரக்டர்ர்ர்ர்... நான்தானே நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஸ்ரீராம் Tue Jun 30, 2015 6:49 am

சூப்பர் ஜேக்
கதை சூடு பிடிக்குது
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Tue Jun 30, 2015 9:32 am

வாயிற் காப்போன் அரச சபை நடுவே வந்து தலை வணங்கி, "அரசே வணக்கம். நமது நாட்டிற்கு வேங்கை நாட்டுத் தூதுவன் ஒருவன் வந்திருக்கிறான்" என்றான்.

"வரச்சொல்" 

"ஆகட்டும் அரசே. உத்தரவு"

வேங்கை நாட்டுத்தூதுவன் அரசரை வணங்கி நின்றான்.

"தூதுவனே, என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?" வினவினார் மன்னர்.

"அரசே, தாங்கள் வேங்கை நாட்டின் பேரரசுக்கு கப்பம் கட்டும் ஒரு சிறிய சிற்றரசுக்கு அரசனாக இருக்கிறீர்கள். எங்கள் அரசோ... பேரரசு. மன்னரோ அரசர்களுக்கெல்லாம் அரசர். அப்படியிருக்க... தாங்கள் கடந்த இரண்டு அண்டுகளாக கப்பம், வரி, திரை, வட்டி செலுத்தவில்லை. அது விபரமாக வேங்கை நாட்டு அரசர் என்னை தங்களிடம் அனுப்பியுள்ளார்" என்றான் தூதுவன்.

இதைக் கேட்ட அரசன் புருசோத்தமனுக்கு கோபம் வந்தது.

"என்ன? கப்பம், வரி, திரை, வட்டி செலுத்த வேண்டுமா?!" (வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில்... தொடர்ந்து பேச ஆரம்பித்தார்) "யாரைக் கேட்கிறார் உங்கள் மன்னர் கப்பம்? எதற்கு கேட்கிறார் வரி? ஏன் செலுத்த வேண்டும் திரை? எதற்கு கட்ட வேண்டும் வட்டி? எங்கள் நாடு இனிமேல் சுதந்திர நாடாக இருக்கும். இனி யாருக்கும் அடிமைபடாது என போய் சொல் உன் வேங்கை நாட்டு மன்னனிடம்" என்றான் புருசோத்தமன் வீராவேசமாக.

சபையோர் அனைவரும் மன்னரது வீரவேச உரையைக் கேட்டு கரகோஷம் சத்தமாக எழுப்பினர். (தமிழனுடைய பண்பாட்டை மாற்ற இயலாது. மன்னர் காலத்திலிருந்து சட்டசபை வரைக்கும் கைதட்டியே வாழும் தமிழர் கலாச்சாரம் அல்லவா நம்முடையது??!!)

மன்னருடைய சிங்க கர்ஜனையை கேட்ட தூதுவன் சற்று  பயந்தவாறு, "அரசே... சற்று யோசியுங்கள்" என்றான்.

"ம்ம்ம்... யோசிப்பதா? அந்த பேச்சிற்கே இனி இடமில்லை"

"விளைவுகள்" என இழுத்தான் தூதுவன்.

"எந்த விளைவுகளையும் சந்திக்க எங்கள் நாடு ஆயத்தமாயிருக்கிறது என போய் சொல்" என்றான் அரசன். தொடர்ந்து ...

"சபை கலையலாம்" என்றான் அரசன்.

மதிய உணவிற்குப் பின்... மணிமண்டபம். அமைச்சர் மற்றும் தளபதிகள் வருகிறார்கள்.

"அரசே" என அழைத்தார் தளபதி.

"என்ன?" 

"நாம் இன்று வேட்டைக்குப் போவதாகச் சொன்னீர்கள்."

"ஆஹா... நல்லவேளையாக நினைவுபடுத்தினீர்... புறப்படுங்கள்" என்றார் மன்னர்.

காடு... வனம்....

"அரசே... பிரமாதம் போங்கள்" என அமைச்சர் பாராட்டினார்.

"எதை பாராட்டுகிறீர்கள் அமைச்சரே?"

"தாங்கள் வேட்டையாடியதைத்தான் அரசே. 3 சிங்கங்கள், ஒரு யானை, 5 மான்கள், 2 முயல்கள். எவ்வளவு வீரர் நீங்கள். குறிதவறாமல் அம்பெய்தினீர்கள். உங்கள் வீரத்திற்கு தலைவணங்குகிறோம் மன்னா" என்றார் அமைச்சர்.

அரசருக்கு பெருமிதமாயிருந்தது.

தளபதியும் தன் பங்கிற்கு பாராட்டினார்.

"அரசே!.காலையில் தர்பாரில் அருமையாக வீரமுழக்கமிட்டீர்கள். மதியம் காட்டு விலங்குகளை தனி ஒருவராக வேட்டையாடுகிறீர்கள். உங்கள் வீரத்திற்கு நிகரேது" என்றார்.

மன்னருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

" சரிசரி உடனே புறப்படுங்கள். அரண்மனைக்கு செல்வோம். இந்த வீரத்தை உடனடியாக மகாராணியிடம் சொல்லுங்கள். மன்னரின் பெருமையை அவர்கள் உணரட்டும்" என்றார் மன்னர்.

அரண்மனைக்கு அனைவரும் திரும்பினர்...

அங்கு அவர்களுக்கு ... ... காத்திருந்தது.

தொடரும்...



 #jack_stories
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஸ்ரீராம் Tue Jun 30, 2015 10:31 am

வாவ் சரித்திர கதையை விறுவிறுப்பாக போகுதே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஸ்ரீராம் Tue Jun 30, 2015 10:32 am

என் ஸ்ரீராமின் கதை நேரம் இன்று ஆரவாரத்துடன் தொடங்க இருக்கிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Tue Jun 30, 2015 3:15 pm

ஸ்ரீராம் wrote:என் ஸ்ரீராமின் கதை நேரம் இன்று ஆரவாரத்துடன் தொடங்க இருக்கிறது.

வரவேற்கிறேன்... எதிர்பார்க்கிறேன்... வாழ்த்துக்கள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Tue Jun 30, 2015 3:27 pm

சம்பவம் - 2


கி.பி.1835. இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி துளிர் விடும் ஆரம்ப காலம்.


சென்னை பட்டணம் நாகரீகமடைந்து வரும் நேரம். கிழக்கிந்திய கம்பெனியார் ஆளுகை செய்யும் காலம். ஆங்காங்காங்கே புதுபுது கட்டிடங்கள் கட்டப்பட்டு நகரம் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது.


புதுபுது காரியங்களை அறிவியலில் புகுத்த இளம் விஞ்ஞானிகள் இளம் ரத்த உத்வேகத்தோடு புது முயற்சிகளில் ஈடுபடும் நேரம். வெள்ளை அரசாங்கமும் அப்படிப்பட்டவர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தது.


எனவே, அநேகர் புதுபுது புதினங்களில் அதிக ஆர்வமும், கவனமும் செலுத்தத் தொடங்கினர். இந்த சூழ்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள மேலத்தெருவில் ஒரு இளம் விஞ்ஞானி முகேஷ் தன் புது முயற்சியில் இறங்கியிருந்தார். இப்போதுதான் அவருக்கு திருமணமாகி ஒருவருடம் முடியப்போகிறது.


முகேஷ் தனது பல அரிய கண்டுபிடிப்புகளுக்கு வெள்ளை அரசாங்கத்தால் பலமுறை பாராட்டுப் பத்திரமும், சான்றிதழ்களும், விருதுகளும் தன் இளவயதிலேயே பெற்றவர். அவரது கண்டுபிடிப்புகளை உலக அரங்கில் கொண்டு போவதாக வெள்ளை அரசாங்கம் அவருக்கு உத்தரவாதம் அளித்திருந்தது என்றால்...


அவர் எந்தளவிற்கு விஞ்ஞானத்திலும், வெள்ளை அரசாங்கத்திலும் செல்வாக்கு பெற்றவர்ராக இருந்திருப்பார் என பாருங்களேன்...


இப்படியிருக்க... ஒரு நாள்...


தொடரும்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Tue Jun 30, 2015 7:03 pm

தபால் தந்தி அலுவலகத்தில் இருந்து அவருக்கு ஒரு டெலிகிராம் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார்கள். அதில்...

"உடனே தலைமை செயலகத்திற்கு புறப்பட்டு வரவும் அவசரம்" என தலைமை செயலாளரிடமிருந்து வந்திருந்தது. இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், தலைமை செயலகத்தில் உள்ள அலுவலக கருவிகள் டைப்ரைட்டர், தந்தி மெஷின் போன்றவைகள் பழுதடைந்தால் இங்கிலாந்திலிருந்து பழுது நீக்கி தருபவர் வரவழைக்க மூன்று வாரமோ மூன்று மாதமோ ஆகும்.

அதுவரை காத்திருக்க இயலாதே. அரசு பணிகள் தடையாகுமே. எனவே, அரசு இயந்திரங்கள் எதுவாயிருந்தாலும் சரிபடுத்த இளம் விஞ்ஞானி முகேஷால் மட்டுமே முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால், அவருக்கு தந்தி அனுப்பியிருந்தனர்.

அவரும் தந்தி கிடைத்த உடனே இரயிலைப் பிடித்து எழும்புரில் இறங்கி, அங்கிருந்து குதிரை வண்டி பிடித்து விரைவாக சென்றார். இதெல்லாம் வழக்கமாக அவ்வப்போது நடக்கிற ஒன்று. வேலை முடிந்ததும் அவருக்கான சன்மானம் வழங்கப்படும்.

வெள்ளை அரசு அவரை மிக கௌரவமாக நடத்தியதைக் கண்டு அநேகர் பொறாமைகூட பட்டதுண்டு. சிறிய வயதில் இவ்வளவு உயர்வா? என சிலர் ஆச்சர்யப்பட்டனர்.

இன்று சரியான நேரத்தில் வேலை முடியவில்லை. அங்கேயே இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம். இந்நாட்கள் போல அந்நாட்களில் தகவல் தொடர்பு இருந்ததில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வேலை முடிந்து வீட்டிற்கு வர அவருக்கு நான்கு நாள் ஆகியிருந்தது. மிக ஆவலோடு வீட்டிற்கு வந்த அவருக்கு ... ஒரு .... ... ... காத்திருந்தது.

ரீலு அறுந்து போச்சு... ஒட்ட வச்சிட்டு வர்றேன்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஸ்ரீராம் Wed Jul 01, 2015 7:01 am

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
தொடரட்டும் ...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Wed Jul 01, 2015 9:15 am

சம்பவம் - 3


கி.பி.2075 எதிர்காலம்...


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் அறிவியல் முன்னேற்றத்தால் அனைத்து நவநாகரீகங்களையும் தன்னகத்தே கொண்டு பற்பல பாரம்பரியங்களை இழந்து தன்னை கிராமிய கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் விலகி ஹைடெக் கிராமங்களாக காட்சியளித்துக் கொண்டிருந்தன.


கிராமங்களில் சாதரணமாகவே மோனோ ரயிலும், மெட்ரோ ரயிலும், ஆங்காங்கே ஹெலிபேட்களும், ஒவ்வொரு தாலுகாவிலும் சிறிய விமான நிலையங்களும் அமைந்து நாகரீகத்தின் உச்சத்தை தொட்டிருந்தது. சொல்லப்போனால், கிராமங்கள் எல்லாம் கி.பி.2015 ல் காணப்பட்ட சென்னையை போல இருந்தது.


இளைஞர்கள் வாயில் சூயிங்கமும், நுனிநாக்கு ஆங்கிலம், ஜெர்மன், ஃபிரெஞ்ச் பாஷைகளும் தவழ்ந்து வழிந்து கொண்டிருந்தது. தமிழைத்தான் காணோம். தமிழ் பேசுபவர்களைக் கண்டால் புழுவைப் பார்ப்பதுபொலவும், காட்டு மிராண்டியை பார்ப்பது போலவும் பார்த்தனர்.


என்னதான் நாகரீகத்தின் உச்சத்தை கிராமங்கள் தொட்டிருந்தாலும்... தமிழனின் தனிக்குணத்தை மாற்ற இயலவில்லை. அதாங்க... மரத்தடியில் சிறுநீர் கழிப்பதும், பொது இடங்களில் பொலிச்சென்று எச்சிலை காறித் துப்புவதும் மாறவில்லை.


இப்படியிருக்க...


சென்னையில் மிகப் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் கிராமங்களில் பல கிளைகள் பேர் சொல்லும் அளவிற்கு வளர்ந்த நிலையில் காணப்படும் ஒரு நிறுவனத்தை நீங்கள் பார்ப்பீர்களானால் அது நமது செந்தில் நிறுவனம்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது தவிர பல பன்னாட்டு நிறுவனங்களில் முதலீடுகள், பங்களிப்புகள் என தலைசிறந்து விளங்குகிறது என்றால் அது நமது ஹீரோ செந்திலின் தனிப்பட்ட திறமையும், இடைவிடா உழைப்பும், அறிவித்திறன்தான் காரணம்.

இந்திய அரசாங்கத்தாலும், வெளிநாடுகளின் தொழிலதிபர்களின் கூட்டமைப்பாலும் பல விருதுகள் பெற்று சிறப்படைந்தவர் இவர். தனக்கு தெரிந்த எல்லா பிசினசிலும் முதலீடு செய்வதிலும், திறமையாக நிர்வகிப்பதிலும், வளர்ச்சியை நோக்கி பயனிப்பதிலும் அவர்க்கு நிகர் அவரே.

இப்படி எல்லாவற்றிலும் தலைசிறந்த நிலையில் இருந்த அவர்... தனது பன்னாட் நிறுவனங்களை பார்வையிட்டு விட்டு, சந்தோசமாக இன்று தனது பங்களாவிற்குள் மகிழ்ச்சியோடு நுழைந்தார்.

நுழைந்த அவருக்கு... ... ... காத்திருந்தது.

ரீலு அறுந்து போச்சு... ஒட்ட வச்சிட்டு வர்றேன்... 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by முரளிராஜா Wed Jul 01, 2015 1:40 pm

ஆகா கதை எழுதுவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Wed Jul 01, 2015 5:22 pm

முரளிராஜா wrote:ஆகா கதை எழுதுவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது

பாராட்டுக்கு நன்றிகள் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

(இதுக்கு முன்னாடி தெரியலையா? பயமா இருக்கு)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஸ்ரீராம் Wed Jul 01, 2015 6:29 pm

சூப்பர் நண்பரே.

பன்முக கதைகளை எழுவீர்கள் போல. இதுவே பெரிய மெகா தொடராக வரும் போல தெரியுதே.? தொடர்ந்து ஆவலுடன் படித்து வருகிறேன்.

நான் இரண்டு கதைகளை மட்டும் ஒரு தொடரில் எழுதுகிறேன். ஒரு இடத்தில் இரண்டு கதையும் இணைந்து விடும். ஆனால் நீங்கள் பல கதைகளை ஒரு தொடரில் எழுதுவது பெரிய விஷயம்தான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Wed Jul 01, 2015 7:51 pm

நீங்க புகழும் அளவுக்கு நான் தகுதியல்ல... ரொம்ப ஜாலி

விஷயமே தெரியாம உளறிக் கொண்டிருக்கிறேன்... போதை

மெகா தொடராக அல்ல...

இதை எப்படியாவது இணைக்கணுமே என்ற கவலை எனக்கு... போதை

முயற்சி செய்கிறேன்... தூக்கம் வந்துருச்சு

தங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள் பல... கைதட்டல்

நானும் குழம்பி... மற்றவர்களையும் குழப்ப எடுத்துக் கொண்ட முயற்சியே இது... ஆனால், கடைசியில் குழம்பியது என்னவோ... நான்தான் போல... லொள்ளு பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by முரளிராஜா Thu Jul 02, 2015 3:45 am

இப்படியெல்லாம் புகழ்ந்தாவாது  கதையை நிறுத்துவீங்க என்று பார்த்தோம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஸ்ரீராம் Thu Jul 02, 2015 9:49 am

முரளிராஜா wrote:இப்படியெல்லாம் புகழ்ந்தாவாது  கதையை நிறுத்துவீங்க என்று பார்த்தோம் புன்முறுவல்

அவ்வளவு சீக்கிரம் நிறுத்துவோமா? ரொம்ப ஜாலி கொண்டாட்டம் laugh
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Thu Jul 02, 2015 5:10 pm

சுவாரசியமாகவும் உற்சாகமாகவும் கதை சொல்லிக் கொண்டிருந்த ஜக்குவை இடைமறித்தான் ஜம்பு.

"ஜக்கு ஒரு நிமிஷம்..."

"என்ன?"

"இதுவரை மூணு சம்பவம் சொல்லியிருக்க"

"ஆமா. அதுக்கு"

"1. சரித்திரம்  2. விஞ்ஞானம் 3. தொழிலதிபர்" என்றான் ஜக்கு.

"தம்பி... அப்படியில்ல... 1. கடந்த காலம் 2. நிகழ்காலம் 3. எதிர் காலம்" என்றார் முரளி தாத்தா தன் பங்கிற்கு.

"என்னப்பா சொல்ல வர்ற... சீக்கிரமா சொல்லப்பா... நியுட்டனோட விதியா... இல்ல எங்களோட தலைவிதியா?" என்றார் கூட்டத்தில் இருந்த ஒரு பெருசு. ஏதோ ஒரு வகையில் எதிலோ ரொம்பவே பாதிக்கப்பட்டிருப்பார்போல.

இப்படி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது... ஏதோ நிழலாடியதுபோல தெரியவே... தலைதூக்கி பார்த்தான் ஜக்கு. அங்கு அவன் கண்ட காட்சி தூக்கி வாரிப்போட்டது.

ஜக்குவின் மனைவி கையில் சமையல் கருவிகளில் பிரபலமான ஒன்றை வைத்துக் கொண்டு நின்ற காட்சிதான் ஜக்குவை கதிகலங்க வைத்தது. (அக்கருவியைப் பற்றிய விளக்கமெல்லாம் நமது அருமை தல அவர்களுக்கு அத்துப்படி. எனவே, அவரிடமே கேட்டுக் கொள்ளவும்)

"யோவ்... மணி என்னாவது... டியுசன் போன புள்ளைகல இருட்டாகுமுன்னால கூட்டிகிட்டு வராம... இங்க என்னய்யா பண்றே..." என்றாள் ஜக்குவின் மனைவி.

"இதாம்மா.. .  இதோ ... இப்பவே... புறப்பட்டுட்டோமில்ல..." எனக்கூறி அவசரகதியில் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

தாயை இழந்த பிள்ளைகள் பரிதவிப்பதுபோல பரிதாபமாக ஜக்கு போவதை பார்த்துக் கொண்டிருந்தனர் கதை கேட்கும் கூட்டத்தினர். 

கூட்டத்தை திரும்பி ஒரு முறைமுறைத்தாள் ஜக்குவின் மனைவி. இதற்கு முன்பே ஜம்பு பின்னங்கால் பிடறியில்பட ஓட்டமெடுத்திருந்தார். முரளி தாத்தாவோ... தள்ளாடும் வயதில் ஓட முடியாததால்... தன்மேலிருந்த அங்க வஸ்திரத்தால் தன் தலைமேல் போட்டுக் கொண்டு தலைகவிழ்ந்து தன்னை மறைத்திருந்தார்.

ஜக்குவின் மனைவி அவ்விடம் விட்டு நீங்கிய பின்தான் அனைவருக்கும் ஒரு புதுதெம்பு வந்தது. சிறுத்தையிடமிருந்து தப்பிப் பிழைத்த புள்ளி மான்போல அனைவரும் ஒருவாறு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஈனஸ்வரத்தில் சிறிய முனகலோடு முரளி தாத்தா சொன்னார். "ஒருவேளை இதுதான் நான்காவது சம்பவமோ..." என்றார்.

ஓடித்திரும்பிய ஜம்பு சொன்னான், "இருக்கலாம்... இருக்கலாம்" என்றான்.

பயத்தில் ரீலு அறுந்துபோச்சு... ஒட்டிட்டு வர்றேன்...


#jack_stories
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Thu Jul 02, 2015 5:18 pm

முரளிராஜா wrote:இப்படியெல்லாம் புகழ்ந்தாவாது  கதையை நிறுத்துவீங்க என்று பார்த்தோம் புன்முறுவல்

புகழ்ச்சிக்கெல்லாம் பயந்துபோய் பாதியில நிறுத்த மாட்டோம் இல்ல... நக்கல்

(பயம் என்பது வாழ்வில் இல்லை நகைப்பு )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by முரளிராஜா Thu Jul 02, 2015 5:26 pm

கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Thu Jul 02, 2015 5:34 pm

சற்று நேரம் கழித்து திரும்பி வந்த ஜக்குவைப் பார்த்து ஜம்பு கேட்டான்.

"என்ன ஜக்கு ... தலையில வீக்கம் போல தெரியுது"

"ஒண்ணுமில்லப்பா... இருட்டுல தெரியமா நிலவுகால்ல மோதிக்கிட்டேன்... வேற ஒண்ணுமில்ல" என்றான்.

கூட்டத்தினர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சரி... ஜக்கு சொன்னால் அப்பீல் ஏது? என அனைவரும் ஒருமனதோடு ஆமோதித்து ஏற்றுக் கொண்டனர். 

"ஆமா... உனக்கு என்னாச்சுப்பா... கால் நொண்டி நொண்டி நடக்கிற ஜம்பு" என்றான் ஜக்கு. 

முறைத்துப் பார்த்தவாறே ஜம்பு சொன்னான். "ஏன் கேக்க மாட்டே... நான் ஓடின ஓட்டத்தில... தடுக்கி விழுந்து எழுந்து வந்தவனுக்கு இல்ல தெரியும் " என்றான் வருத்தத்தோடு.

"விடர்றா... விடர்றா... வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா" என்றான் ஜக்கு.

"சரிசரி... மேலே சொல்லு ஜக்கு... உன் கதையோடு முடிவு தெரியாம பாழும் மனசு பாடாய்படுது" என்றார் முரளி தாத்தா.

கூட்டத்தினர் அனைவரும், "ஆமா... ஆமா..." என்றனர். கோரஸாக.

ஜக்கு சொல்ல ஆரம்பித்தான்.

ஏனோ தெர்ல... அடிக்கடி ரீலு அறுந்து போகுது சோகம் ஒட்ட வச்சிட்டு வர்றேன்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Fri Jul 03, 2015 12:44 am

சம்பவம் - 4


கி.மு.2750 - கற்காலம்...


அதிக நாகரீகம் இல்லாத காலம்.


இடமோ... மலை கிராமம். அதாவது அடர்ந்த காடு, வனப்பகுதி. புமி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல். கண்கொள்ளா காட்சி. 


இயற்கையை கெடுக்க எந்த தொழிலதிபர்களும், தொழிற்சாலைகளும் இல்லாத காலம் அது. மாதம் மும்மாரி அல்ல... மாதம் 30 நாட்களில் 27 நாட்கள் மழையோ அல்லது தூறலோ பெய்து கொண்டிருக்கும் அற்புதமான காலமது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சியில் தான் வருடம் முழுவதும் மழை பெய்யுமாம். நான்காம் வகுப்பு பாடப் புத்தகத்தில் படித்த ஞாபகம். 


ஆனால், கி.மு.2750 ல் உலகம் முழுவதும் சிரபுஞ்சி நிலைமையே காணப்பட்டது. காரணம். காடும் வனமும் பாதிப்படையாததே.


இந்நிலையில்... 


வனப்பகுதியில் உள்ள வனவாசிகளின் குடியிருப்பில் ஒரே மகிழ்ச்சியின் கூக்குரல் வெகுதூரத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தது. 


"கும்பர கும்பர ஹோ... ஹோ... கும்பர கும்பர ஹோ... ஹோ... " என்ற ஆதிவாசிகளின் மகிழ்ச்சி குரல் அப்பகுதியையே அதிர வைத்தது. மேய்து கொண்டிருந்த மானினங்கள் தலைதூக்கி பார்த்து விட்டு "அட... இது ஆதிவாசிகளின் ஆர்ப்பாட்டம் . வழக்கமானதுதான் என கருதி தொடர்ந்து காட்டுப்புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.

ஆனால், அது வழக்கமானது அல்ல - என்பது அந்த புல் மேயும் மானினத்திற்கு என்ன தெரியும்?

அப்படி என்னதான் நடக்கிறது அங்கே?!

வனவாசிகளின் தலைவன் சுடலைக்கும் அவன் மனைவி மந்தாரைக்கும் அழகிய ஆண்மகவு பிறந்ததே அம் மகிழ்ச்சிக்கு காரணம்.

வனவாசிகளின் சாமியாடி குருவன் கம்பு ஊன்றியவாறு வந்து தலைவனின் கையிலிருந்த குழந்தையை பார்த்து விட்டு, "அடேய் சுடலை... நீ கொடுத்து வச்சவண்டா... தலைச்சனே தங்கமா பொறந்துட்டாண்டா... கொடுத்து வச்சவண்டா" என பாராட்டி முடிக்கு முன்பே.... ஆதிவாசிகள் "கும்பர கும்பர ஹோ... ஹோ...  கும்பர கும்பர ஹோ... ஹோ... " என தங்கள் மகிழ்ச்சியை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தினர்.

தலைவன் கூட்டத்தை அமைதிபடுத்தியபடி சொன்னான், "எனதருமை மக்களே, இந்நன்னாளில் நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாட உடனே காட்டுக்கு சென்று காட்டு மானை காட்டெருமையை வேட்டையாடிக் கொண்டு வாருங்கள்" என கட்டளையிட்டான்.

கேட்ட வாலிப இளங்காளைகள் வில்லில்  புறப்பட்ட அம்புபோல காட்டிற்குள் ஓடினர்.

வயதில் மூத்த கிழவிகள் மந்தாரையை சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்படியிருக்க... காலம் கடந்தது.

வருடம் ஒன்றும் மாதம் மூன்றுமாக கழிந்தது.

ஒருநாள் காலைவேளை..

தலைவனின் மகன் காலெடுத்து நடைபயிலும் நேரம். மந்தாரை கணவனைப் பார்த்து சொன்னாள்." யோவ்... மச்சான்... "

"என்ன புள்ள?"

"நம்ம புள்ள காலெடுத்து ஒரெட்டு எடுத்து வைக்குதில்ல"

"ஆமா"

"நாடி, நரம்பெல்லாம் நல்லா வேலை செய்ய காட்டுக்கு போய் கொஞ்சம் புலிப்பால் கொண்டாந்தாக்க என்னவாம்?"

"கொண்டாந்திட்டாப் போகுது புள்ள" என கூறியபடி தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் போனான்.

" பாத்து மச்சான்... பத்திரமா போயிட்டு வாங்க" என வழியனுப்பி வைத்தாள்.

நாட்கள் கடந்தது...

மூன்றாம் நாள் காலை பதினோரு மணிக்கு வீடு திரும்பினான்.

திரும்பினவனுக்கு ... ஒரு ... அதிர்ச்சி காத்திருந்தது.

ரீலு கட்டாயிடுச்சி...  நக்கல் பசை போட்டுட்டு வாரேன்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Fri Jul 03, 2015 1:01 am

ஆர்வமாக கதை கேட்டுக் கொண்டிருந்த முரளி தாத்தாவுக்கு திடீரென கோபம் தலைக்குமேலும் மூக்குக்கு மேலும் ஏறியது.

"ஏண்டா... அதிர்ச்சிக்கு பிறந்தவனே... யேண்டா இப்பிடி... யேன்? யேண்டா இப்பிடிபோட்டு எங்களை பாடாய்படுத்துற... கதைங்கிற பேர்ல காதுல இரத்தம் வர்றமாதிரி பண்றே. அப்பிடி என்னதாண்டா அதிர்ச்சி அவங்களுக்கு காத்திருந்தது?  என்றார் முரளி தாத்தா.

கூட்டத்திலிருந்த மற்றொரு பெருசு, "சீக்கிரமா சொல்லி தொலையேன்டா..." என்றார்.

"அதிர்ச்சி என்னவென்றுதான் சொல்லிடுடா ஜக்கு. பெருசு ரெண்டும் வாயை பொளந்திடப்போவுது" என்றான் ஜம்பு.

சரி இதுக்குமேல கதைய இழுத்தாக்க இவர்கள் தன்னை டின் கட்டிடுவார்கள் என்பதை உணர்ந்த ஜக்கு இறுதி முடிவுக்கு வந்தார்.

நான்கு சம்பவங்களையும் ஒருநேர்கோட்டில் இணைத்தாக வேண்டுமே. என்ன செய்ய... என் யோசித்த ஜக்கு... ஒரு நல்ல முடிவையும் திருப்பத்தையும் ஏற்படுத்தினால்தான் அடுத்தமுறை கதைகேட்க ஆர்வப்படுவார்கள் என கருதி தனது 11,337 வது கற்பனையை குதிரையை தட்டியெழுப்பி ஆலோசனை கேட்டான்.

அந்த குதிரை லாயம் ஜக்குவின் மூளையில் உள்ள நியுட்ரான்களின் நடுவிலே சிறப்பாக அமைந்திருந்தது. 11337 குதிரையானது தனது பிடரியை ஒரு வெட்டுவெட்டி, தலையை ஒரு சிலுப்பி சிலுப்பி லேசாக கனைத்து காலின் குளம்பை மூளைக்குள் தடம் பதித்து காலூன்றி எழுந்து கம்பீரமாக நின்றது.

ஜக்குவுக்கு ஒரு கவலை. என்னவென்றால், குதிரை ரெடியாகும் போது தனது இல்லத்தரசி வந்துவிடக்கூடாதே என்பதுதான் அது. குதிரை மிரண்டு ஓடிவிடக்கூடாதே என்று திகில்பிடித்தவாறே அதன் முன் மண்டியிட்டான் ஜக்கு.

குதிரை உற்சாகத்தோடு ஓட எத்தனித்தது.

ரீலு எடிட்டிங் வேலையில் இருப்பதால் சிறிது நேரம் கழித்து தொடரும்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum