தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

View previous topic View next topic Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:20 pm

பேராசைக்காரன்!

ராகேஷும், யோகேஷும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், இருவருமே குணத்தால் வேறு பட்டவர்கள். ராகேஷ் பேராசைக்காரன். யோகேஷ் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவான்.


ஒரு நாள் இருவரும் பள்ளியை விட்டு வரும் போது ஒரு மரத்தடியில் வியாபாரி ஒருவன் குல்லாய் விற்றுக் கொண்டிருந்தான். ""ஒரு மூக்கு கண்ணாடி வாங்கினால் ஒரு குல்லாய் இனாம்,'' என அவன் கூவி விற்றுக் கொண்டிருந்தான். ராகேஷ் அவனிடம் போய், ""எனக்கு இரண்டு குல்லாய்கள் இலவசமாகத் தருவதானால் சொல் ஒரு மூக்கு கண்ணாடி வாங்குகிறேன்,'' என்றான்.


""பாவம்டா! அவனோ வியாபாரம் சரிவர நடைபெறவில்லை என்பதால் இலவசமாக ஒரு குல்லாயைக் கொடுக்கிறான். அதிகமாகக் கேட்டு அவனுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தாதே,'' என்று ராகேஷுக்கு உபதேசம் செய்தான் யோகேஷ். ஆனால், அவனோ ""நீ சும்மா இரு. கிடைத்தவரை லாபம்,'' என்றான். அந்த வியாபாரியும் வேறு வழி இல்லாமல் இரண்டு குல்லாய்களை இலவசமாகக் கொடுத்து ஒரு மூக்கு கண்ணாடியை அவனுக்கு விற்றான்.

யோகேஷ் ""எனக்கு இலவச குல்லாய் வேண்டாம்,'' என்று கூறி தனக்கொரு மூக்கு கண்ணாடி மட்டும் வாங்கிக் கொண்டு வியாபாரியின் நஷ்டத்தை ஈடு கட்டினான். ராகேஷ் கண்ணாடியை அணிந்து கொண்டு குல்லாயை தன் தலையில் மாட்டிக் கொண்டான். யோகேஷ் குல்லாயை மட்டும் போட்டுக் கொண்டான். இருவரும் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தனர். ராகேஷ் யோகேஷை வற்புறுத்தி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். ஆளுக்கொரு பூரி செட் கொண்டு வரச் சொல்லி சப்ளையரிடம் ஆர்டர் கொடுத்தனர். சுடச் சுட பூரி வந்தது. இருவரும் சாப்பிட்டனர். யோகேஷ் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை என்பதால் எப்பொழுதும் கையில் காசு வைத்திருப்பான் என்கிற நம்பிக்கையில் ராகேஷ் அவனை அழைத்திருக்கிறான். பில் கொண்டு வந்து கொடுத்ததும் அந்த பில்லை யோகேஷிடம் நீட்டினான் ராகேஷ்.

அதிர்ச்சியடைந்த யோகேஷ், ""என்னடா இது. நீ அழைத்தாய் என்றுதான் ஓட்டலுக்குள் நுழைந்தேன். உன்னிடம் காசே இல்லையா? நான் இன்றைக்கு என் பர்சை மறந்து வீட்டிலேயே வைத்து வந்துவிட்டேன் என்ன செய்வது?'' என்றான்.


""என்னிடம் ஏதுடா காசு இருந்த காசுக்குதான் மூக்கு கண்ணாடி வாங்கி விட்டோமே, உன்னை நம்பி மோசம் போனேன். இப்போ என்ன செய்யலாம்?'' என்றபடியே கையை பிசைந்தான்.


இருவரும் பேசிக் கொண்டதிலிருந்து, அவர்களிடம் காசு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு சப்ளையர் அவர்களைக் கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்த முதலாளியிடம் அழைத்துச் சென்றான். அப்போது அவர்களை யாரோ, ""தம்பிகளா!'' என அழைத்தது காதில் விழ திரும்பிப் பார்த்தனர்

அங்கே—


சற்று நேரத்திற்கு முன்பு அவர்களுக்கு கண்ணாடி விற்றானே அதே வியாபாரி.


""தம்பிகளா என்ன நடந்தது? சற்று நேரத்திற்கு முன்புதானே என்னிடம் சந்தோஷமாக கண்ணாடி வாங்கினீர்கள். நீ கேட்டாய் என்று நான் கூட ஒரு குல்லாயை அதிகமாக உனக்குக் கொடுத்தேனே அது தொலைந்து விட்டதா? வேறொன்று தரட்டுமா?'' என்று வியாபாரி ஆர்வத்தோடு கேட்டார்.


இருவரும் அவரிடம் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என முதலில் தயங்கினர். யோகேஷ் தைரியமாக நடந்ததைச் சொன்னான். உடனே அந்த வியாபாரி, ""உங்களுடைய பில் தொகையை நான் கொடுத்து விடுகிறேன். எவ்வளவு?'' என்றார்.

""நாற்பது ரூபாய் ஐம்பது காசு,'' என்றான் யோகேஷ்.

""அடடே நீங்கள் என்னிடம் மூக்கு கண்ணாடிக்கு கொடுத்த காசுதான் அது. அதை உங்களிடமே திருப்பித் தந்து விடுகிறேன். பில் தொகையை நீங்களே கல்லாவில் கொடுத்துவிடுங்கள். நான் மூக்கு கண்ணாடியை உங்களுக்கு என்னுடைய அன்பளிப்பாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்கிறேன்,'' என்றபடியே நாற்பது ரூபாய் ஐம்பது பைசாவை அவர்களிடம் கொடுத்தான்.


உடனே ராகேஷ் அந்த வியாபாரியைக் கூப்பிட்டு வணங்கி,""என்னை மன்னிக்க வேண்டும். என்னுடைய பேராசையால் உங்களிடம் இரண்டு குல்லாய் கேட்டுப் பெற்றேன். தேவை ஒன்றுதான் என்றாலும் அதிக ஆசைப்பட்டேன். அதன் பலன்தான் இந்த தண்டனை. இனிமேல் பேராசைக் கொள்ளமாட்டேன்,'' என்றான். யோகேஷுக்கு ராகேஷ் திருந்தியதில் சந்தோஷம். இருவரும் மறுநாள் அந்த வியாபாரியிடம் பணத்தை திருப்பி அளித்தனர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:24 pm

"எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!"
ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.எப்படி இருக்கு?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:26 pm

உங்களுக்குப் பயன் தேவையா? அடுத்தவருக்கு உதவுங்கள் !!
ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்" "என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?"

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: "நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்"

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்
ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.
அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது
முயன்றால் முடியாதது எதுவுமில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:27 pm

யானையின் அடக்கம்
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."
தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:29 pm

குறையா நிறையா?
ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
by..vithu
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:30 pm

வேஷங்கள் நிலைப்பதில்லை...
ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும்

இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது.

பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.

மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும்.

இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.

வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன.

ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது.

அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின.

"நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல" விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு "முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ" என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.by..vithu
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:31 pm

நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது
ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து "ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?" என்று கேட்டது."

ஒரு ஆத்மா கூட இல்லை" என்றான் மீனவன்.

"நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்" என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

"அரசனுக்கு காஹா ஏன் தேவை?" மீனவன் தண்டோராவிடம் கேட்டான்."

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்" என்று கூறிய தண்டோரா. சட்டென்று "உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?" என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. "அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது" என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், "காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது" என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் "காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்" என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.by..vithu
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:33 pm

சமயோசிதம் தேவை...
ஒரு பொற்கொல்லன். வசதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமண வயதில் அழகான மகள்.

அதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டு ஒருவன் இருந்தான். இளைஞன். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க ஆசை. கேட்ட போதெல்லாம் பொற்கொல்லனும் அவன் மகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். பொற்கொல்லன் மகளுக்கு சேட்டு இளைஞனை அறவே பிடிக்காது.

ஒரு முறை நாட்டின் பொருளாதாரம் தீவிரமாகத் தேய ஆரம்பித்தது ( Downturn :o) ). பொற்கொல்லனின் வியாபாரம் நொடித்துப் போகும் நிலைக்கு வந்தது. ஏகப் பட்ட பொருள் இழப்பு. வியாபாரத்தை தொடரவும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது.

பொற்கொல்லன் வேறு வழியில்லாமல் சேட்டு இளைஞனிடம் கடன் வாங்கப் போனான். சேட்டும் கேள்வி கேட்காமல் கடன் கொடுத்தான். அவனைப் பொறுத்த வரை வருங்கால மாமனாரல்லவா !

பொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. சேட்டு இளைஞன் கடனைத் திரும்பக் கேட்காமல் பொற்கொல்லனிடம் அவன் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான்.

பொற்கொல்லனும் அவன் மகளும் தீவிரமாக மறுத்தார்கள்.

சேட்டு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வசதியாக வாழும் சேட்டுக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும் படிதான் பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். பொற்கொல்லன் மறுத்து விட்டான்.

பணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னான். எப்படி, எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடியவில்லை.

பிரச்சனையைத் தீர்க்க சேட்டு அனைவருக்கும் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப் பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங் கூழாங்கற்களும், வெண் கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் சேட்டு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங் கூழாங்கல்லையும் ஒரு வெண் கூழாங்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த யோசனையை பொற்கொல்லனும் அவன் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக சேட்டு ஊர் பெரியவர்களிடம் கூறினான்.
ஊரார் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் வேண்டா வெறுப்பாக பொற்கொல்லனும் அவன் மகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சேட்டு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், ரகசியமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு, இரண்டு கருப்பு கூழாங்கற்களை வைத்துக் கட்டி விட்டான்.

ஆனால், உண்மையில், பொற்கொல்லன் மகளுக்கு வேண்டிய ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை சேட்டுக்குத் தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிப் போய் அவளிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.

பொற்கொல்லன் மகள் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தாள். அப்பாவும் அவளும் எடுத்திருந்த முந்தைய நிலைகளால் சேட்டின் மேல் இப்போது சந்தேகத்தைக் கிளப்பினால், வேண்டுமென்றே திருமணத்தைத் தவிர்ப்பதற்காக செய்வதாகத்தான் ஊரார் நினைக்கப் போகிறார்கள் என்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது. முதலில் அப்படிச் செய்யத் தோன்றிய எண்ணத்தைக் கை விட்டு விட்டாள். அவள் சிறுவனை இந்த விபரம் மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தி அனுப்பினாள்.

அடுத்த நாள் ஊரார் மத்தியில் அவள் தலைவிதி நிச்சயிக்கப் படப் போகிறது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் திடலுக்குப் போகும் நேரம் வந்தது. அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது.

சேட்டு கண்டிப்பாக தனக்குக்குத்தான் வெற்றி என்று நமட்டுச் சிரிப்புடன் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை சேட்டு உட்பட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை.

திடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும் ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள்.

பைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த சேட்டுக்குத் "திருடனுக்குத் தேள் கொட்டியது போல" ஆகி விட்டது. சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு தலையைத் தொங்க விட்டுக் கொண்டு போய் விட்டான்.by vithu
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:36 pm

அன்பிற்கு மொழியும் வடிவமும் கிடையாது

குட்டி கதைஒரு ஊரில் தங்கத்தால் மெல்லிய தாள் செய்து விற்கும் தொழில் செய்து வந்தார் ஒருவர். அவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் அந்தக் குழந்தை அப்பா செய்து வைத்திருந்த தங்கத் தாள் ஒன்றை எடுத்து ஒரு அட்டைப் பெட்டியில் ஒட்டி விட்டாள். அதைப் பார்த்த அப்பாவிற்கு மிகவும் கோபம். குழந்தையை "இப்படிப் பொருளின் மதிப்புத் தெரியாமல் வீணடித்து விட்டாயே" என்று கோபித்துக் கொண்டார்.

மறுநாள் காலை அவர் தூங்கி விழிக்கும் போது அந்தத் தங்கத் தகடு ஒட்டிய பெட்டி அவரது படுக்கை அருகில் இருந்தது. அதன் மேல் குழந்தை அவள் சொந்தக் கையெழுத்தில் பிறந்த நாள் வாழ்த்து எழுதியிருந்தாள். தந்தை அந்தப் பெட்டியை ஆர்வமாகத் திறந்து பார்த்தார். அது காலியாக இருந்தது.

திரும்பவும் அப்பாவிற்குக் கோபம் வந்தது. குழந்தையைக் கூப்பிட்டு "ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று கோபமாகக் கேட்டார். அதற்கு அவள் மழலை மாறாமல் "அப்பா, நான் அந்தப் பெட்டி நிறைய முத்தம் நிரப்பி வைத்திருந்தேனே. உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டாள். அப்பாவிற்குச் சுரீர் என்று ஏதோ தைத்தது. தன் தவற்றுக்கு வருந்தினார். மகளைக் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார்.

இன்று அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவள் குடும்பம், அவள் குழந்தை என்று கிளம்பிப் போய் விட்டாள். அப்பா இன்னமும் அந்தப் பெட்டியை பத்திரமாக வைத்திருக்கிறார். தினமும் அதைத் திறந்து அதிலிருந்து ஒரே ஒரு முத்தம் மட்டும் எடுத்துக் கொள்கிறார். இன்னமும் அந்தப் பெட்டியில் குறையாமல் முத்தங்கள் இருக்கின்றனவாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:38 pm

ஆபத்து! காப்பாற்று !!
-----------
குட்டி கதைஆங்கிலேயப் பண்ணையில் ஒரு எலி வாழ்ந்து வந்தது. பண்ணைக்கு சொந்தக்காரனும் அவன் மனைவியும் பண்ணையில் ஒரு கோழியும், பன்றியும், மாடும் வளர்த்தனர்.

எலி செய்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. ஒருவருக்கும் எலி அங்கே இருப்பது பிடிக்கவில்லை. ஒரு நாள் பண்ணைக் காரனும் அவன் மனைவியும் சந்தைக்குப் போய் வரும் போது எதையோ காகிதத்தில் சுற்றி வாங்கி வந்ததை சுவற்றுப் பொந்தில் இருந்து எலி பார்த்தது. அந்தச் சாமான் ஒரு எலிப் பொறி என்று கண்டதும் திடுக்கிட்டுப் போனது.

உடனே கோழியிடம் போய் "என்னைக் கொல்ல எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்" என்று கேட்டது. கோழியோ "இது என் பிரச்சினையே இல்லை. நானா பொறியில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்? உன் பிரச்சினையை உன்னிடமே வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டு தரையைக் கொத்த ஆரம்பித்து விட்டது.

பிறகு எலி பன்றியிடம் போய் முறையிட்டது. பன்றி அதைக் காதிலேயே வாங்கவில்லை. மாட்டிடம் போனால் அதுவும் "போ போ. எனக்கு வேறு வேலை பார்க்க வேண்டும்” என்று துரத்தி விட்டது.

எலியும் வேறு வழி தெரியாமல் தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தன் வாழ்க்கையைத் தொடர்ந்தது.

ஒரு நாள் நடு இரவில் எலிப்பொறி பட்டென்று மூடும் சத்தம் கேட்டது. பண்ணைக்காரன் மனைவி இருட்டில் தடவிக் கொண்டே என்னவென்று பார்க்கப் போனாள். பொறியில் ஒரு பாம்பின் வால் மாட்டிக் கிடந்ததை அறியாமல் பொறியில் கை வைக்கப் போய், அந்தப் பாம்பு அவளைக் கடித்து விட்டது. நச்சின் வீரியம் தாங்காமல் படுத்த படுக்கையாய் கிடந்தாள்.

வைத்தியன் வந்து பார்த்தான். அவளுக்குக் கோழி சூப் வைத்துக் கொடுத்தால் ஒரு வேளை அவளுக்கு நச்சை எதிர்க்கும் சக்தி கூடலாம் என்று யோசனை சொன்னான். பண்ணைக்காரன் அன்றிரவே கோழியை அடித்து சூப் வைத்து மனைவிக்குக் கொடுத்தான்.


நாளுக்கு நாள் மனைவியின் உடல் நலம் குறைந்து கொண்டே போனது. உற்றார் உறவினர் எல்லாம் நலம் விசாரிக்க வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்க ஏதும் இல்லை என்று ஒரு நாள் பன்றியை கசாப்பு போட்டு விட்டான் அந்த பண்ணைக்காரன்.


நோய்க் கொடுமை தாங்க முடியாமல் ஒரு நாள் மனைவி இறந்தே போனாள். அவளுடைய ஈமச் சடங்கிற்காக உற்றம் சுற்றம் எல்லாம் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடக் காசும் தானியமும் கையில் இல்லை. வேறு வழியில்லாமல் பண்ணைக்காரன் மாட்டையும் அடிக்க வேண்டியதாயிற்று.


நீதி: கூட இருப்பவர்களுக்கு ஆபத்து என்றால் அதை அசட்டையாகப் புறம் தள்ளாதே. உனக்கான ஆபத்தும் அதில் ஒளிந்திருக்கக் கூடும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:39 pm

உடனே சொர்க்கத்திற்குச் செல் !!
---------------------
கதைத் தொகுப்புஅக்பரின் நாவிதனுக்கு பீர்பாலைப் பிடிக்காது. அவரை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகத் திரிந்தான். ஒரு நாள் காலை அக்பருக்கு முகச் சவரம் செய்து கொண்டிருந்த போது வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான். "மஹாராஜா, நேற்று என் கனவில் தங்கள் தந்தையார் வந்தார்" என்றான். அக்பரும் உடனே "மேலே சொல். அவர் என்ன சொன்னார்" என்றார்.


நாவிதன் "உங்கள் தந்தைக்கு சொர்க்கத்தில் பொழுதே போகவில்லையாம். பேச்சுத்துணைக்கு அறிவிலும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்கும் ஒருவர் கூட இருந்தால் தேவலாம் என்றார். உங்களை உடனே அனுப்பி வைக்கச் சொன்னார்" என்றான்.


அக்பரும் உடனே சொர்க்கத்திற்குப் போகுமாறு பீர்பாலுக்குக் கட்டளை போட்டு விட்டார். பீர்பால் ஒத்துக் கொண்டு இரண்டு வாரம் தவணை கேட்டார். "அதனாலென்ன.. எடுத்துக் கொள்" என்று பேரரசரும் பெரிய மனதுடன் சம்மதித்தார்.


பீர்பால் வீட்டுக்குப் போய் தன் சவக் குழியை தானே தோண்டினார். யாருக்கும் தெரியாமல், அதிலிருந்து தன் வீட்டுக்குள் செல்ல ஒரு ரகசிய குகையை அமைத்தார். வேலை முடிந்த பின் அக்பரிடம் போய், "அரசே, நான் சொர்க்கத்துக்குப் போகத் தயாராகி விட்டேன். ஆனால் என்னை உயிருடன் புதைத்தால்தான் நான் வேகமாகச் சொர்க்கத்திற்குப் போக முடியும். ஆகவே, எங்கள் குடும்ப வழக்கப் படி என்னைத் தயவு செய்து என் வீட்டிலேயே புதைத்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அவர் கேட்டபடியே அக்பரும் செய்தார்.


திட்டமிட்டபடி பீர்பால், மூடிய சவக் குழியில் இருந்து தப்பித்து வீட்டுக்குள் வந்து விட்டார். யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே மறைந்து சுமார் ஆறு மாதம் வாழ்ந்தார். நீண்ட தாடியும் சடை முடியும் வளர்த்தார்.. பிறகு ஒரு நாள் திடும் என்று அரசவையில் அக்பர் முன்னால் போய் நின்றார்.


அக்பர் வியப்புடன் "பீர்பால், எப்படி நீ திரும்பி வந்தாய்" என்று கேட்டார். அதற்கு "அரசே, தங்கள் தந்தையார் என்னுடன் கழித்த ஆறு மாதம் மிகவும் மகிழ்ச்சியாகப் போனதால் எனக்கு ஊருக்குத் திரும்பிச் செல்ல வரம் கொடுத்தார். உங்களை மிகவும் விசாரித்தார்" என்றார் பீர்பால். "அப்பா நலமாக இருக்கிறாரா?" என்று ஆவலுடன் சக்ரவர்த்தி வினவினார். பீர்பால் அதற்குத் தன் தாடியையும் சடை முடியையும் தடவிக் கொண்டே "மன்னா , அவர் நலமாகத்தான் இருக்கிறார். ஆனால் நாவிதர்கள் யாரும் சொர்க்கத்திற்குப் போவதில்லை போலும். அதனால் சரியாகச் சவரம் செய்து கொள்ள இயலாமல் என்னைப் போலவே அவரும் சடை முடியுடன் பரிதாபமாகத் தோற்றமளிக்கிறார். இதற்கு நீங்கள் ஏதாவது உடனே ஆவன செய்ய வேண்டும். நம் அரண்மணை நாவிதன் உத்தமன். அவனை அனுப்பினால் நேரே சொர்க்கத்திற்குத்தான் போவான். காரியம் ஆகிவிடும்" என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:40 pm

உழைப்பே அதிர்ஷ்டம் தரும்
-------------------
குட்டி கதை ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

'இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்' என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் 'சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்' என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:43 pm

என் அடிமைகளுக்கு நீ அடிமை

குட்டி கதைமாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும் படி ஆணையிட்டான்.

முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப் படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.

முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து "கொல்ல வரும் ஆளைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா?" என்று கேட்டான்.

அதற்கு முனிவர் "மன்னா.. நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும் போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!" என்றார்.

அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. "நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக் முடியும்?" என்று முனிவரிடம் கேட்டான். அவர் "அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன்" என்றார்.

மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:44 pm

எலியும் பாலும் - ரஷிய குட்டிக் கதை
-----------------------------
குட்டிக் கதைபசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:45 pm

ஏமாந்த சிறுத்தை - கிழக்கு ஆப்பிரிக்க குட்டி கதை

குட்டி கதைஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

தருணத்தின் முக்கியம் அறிந்து முடிவை விரைவாக எடுக்க வேண்டியது அவசியம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:50 pm

கடைசி வீடு

குட்டி கதைஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் காலி மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். தன் தொழிலுக்கு உதவியாக ஒரு கொத்தனாரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்தக் கொத்தனார் மிகவும் நேர்த்தியான, அழகான வீடுகளைக் கட்டுவதில் திறமைசாலி. அவர் கட்டும் வீடுகள் உடனே நல்ல விலைக்குப் போயின. பலரும் காத்திருந்து வாங்கினார்கள்.

வியாபாரம் கொழித்தது. தனவந்தரும் கொத்தனாரை நல்ல சம்பளம் கொடுத்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். கொத்தனாருக்கு வயது நிரம்பவும், தான் ஓய்வு பெற்றால் நல்லது என்று நினைத்தார். தனவந்தரிடம் அந்த யோசனையைச் சொன்ன போது அவருக்கும் அது சரியென்றே பட்டது. ஆனாலும் அவர் கொத்தனாரைப் பார்த்து 'தம்பி, நீ எவ்வளவோ செய்து விட்டாய். உனக்கு வாழ்க்கையில் ஓய்வு தேவைதான். எனக்காக இறுதியாக ஒரு வீடு கட்டிக் கொடுத்து விட்டுப் போ" என்று கேட்டுக் கொண்டார்.

கொத்தனாருக்கு தனவந்தர் மேலும் வேலை சொன்னது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஓய்வு கேட்டால் வேலை சொல்கிறாரே என்று கோபப் பட்டார். ஆனாலும் பல நாளாக தன்னைப் பார்த்துக் கொண்ட மனிதரிடம் கொண்ட நன்றியறிதலால் ஒன்றும் பேசவில்லை.

வேண்டா வெறுப்பாக அந்தக் கடைசி வீட்டைக் கட்டினார். வழக்கமாக இருக்கும் தரம் அதில் இல்லை. காமா சோமாவென்று இருந்தது.

கட்டி முடித்த அன்று தனவந்தர் வந்தார். வீட்டின் சாவியைக் கொத்தனாரிடம் ஒப்படைத்து, "அப்பா, இந்த வீட்டையே உனக்காகத்தான் கட்டினேன். உன் ஓய்வு காலத்திற்கு இது உதவும். வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

கொத்தனாருக்குத் திடுக்கென்று இருந்தது. நமக்கு என்று தெரிந்திருந்தால் இன்னமும் கவனம் எடுத்து சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று வெகுநேரம் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.

நாமும் நமது இளம் வயதில் நம் யோசனைத் தெரிவுகளாலும் செய்கைத் தெரிவுகளாலும் நமது எதிர்காலம் என்ற வீட்டைக் கட்டுகிறோம். அதில்தான் வாழப் போகிறோம் என்று யோசித்துச் செய்பவர்கள் எப்போதுமே சிறப்பாக வாழ்கிறார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:51 pm

சிஙகமும் பங்கும் - ஆப்பிரிக்கக் குட்டிக் கதை

குட்டிக் கதைசிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக்
கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்".



அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" - கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்".

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: "பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?"


"மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:52 pm

சொர்க்கமும் நரகமும்

குட்டி கதைஒரு நாள் ஒரு ஜென் துறவியிடம் ஒரு சாமுராய் வீரர் வந்தார். ஜென் துறவி அமைதியாக அமர்ந்திருந்தார். சாமுராய் வீரர் துறவியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் என்று சொன்னார். துறவி புன்னகையுடன் தலையசைத்தார். சாமுராய் வீரர் "ஐயா எனக்கு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் வித்தியாசம் தெரியப் படுத்துங்கள்" என்றார்.

துறவி பதிலேதும் சொல்லாமல் புன்சிரித்துக் கொண்டிருந்தார். சாமுராய்க்கு தலைக்கு மேல் கோபம் வந்து விட்டது. தனது சாமுராய் வாளை உறுவிக்கொண்டு "உன்னை மதித்துக் கேள்வி கேட்பவனை அவமதிப்பாயா?" என்று உறுமினார். துறவி புன்னகை மாறாமல் "இப்போது நீர் நரகத்தில் இருக்கிறீர்" என்றார்.

இதைக் கேட்ட சாமுராய் சற்றே தெளிவு பெற்றவராய் உடனே பின் வாங்கினார். துறவியைப் பணிந்து வணங்கி "ஐயா, அறியாமல் செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள்" என்று சொன்னார். இப்போதும் அதே புன்னகையுடன் துறவி சொன்னார் "நீர் இப்போது சொர்க்கத்து வந்து விட்டீர்".
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:53 pm

தாய்மையின் சக்தி

குட்டி கதைஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.

ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள்.

சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.

இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர்.

அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் "நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?" என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி "இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்" என்று பதில் சொன்னாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 08, 2015 6:54 pm

பழக்கத்திற்கு அடிமை ஆகாதே! - ஐரோப்பிய குட்டி கதை

குட்டி கதைஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.
செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum