Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அம்மா
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
அம்மா
ஐன்பத்தைந்து வயதைத் தொட்டு இருந்த அந்த அன்னைக்கு மனம் மிகவும் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது.
சிறிய விஷயம்தான், ஆனால் அது தனது மனதை இவ்வளவு அரிக்கும் என்று சற்றும் எதிரிப்பார்க்கவில்லை. “தான் இங்கு வந்தது தவறோ?” என்று எண்ணும் அளவிற்கு மனது பாரமாய் இருந்தது.
அவரது ஊரில் ஒரு குட்டி ராணியாய், வீட்டை அலங்கரித்தவர், இங்கு வந்து வேலைக்காரி போன்று இருக்கிறோமோ என்று எண்ண வைத்தது தற்போதையச் சூழ்நிலை.
மீனாட்சி, தேனியில் உள்ள ஊரில் தனக்கென ஒரு ராஜ்யத்தையே வைத்திருந்தவர். அந்த அளவிற்கு அவரின் துணி தைக்கும் கலைக்கு அனைவரும் அடிமை. ஆம் அடிமை என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படி இருந்தனர் வாடிக்கையாளர்கள். அவர் இந்த தினத்தில் தைத்துத் தருவேன் என்றால், அன்று அது தயாராகி இருக்கும். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அவரின் நேர்த்தி பெண்களைக் முகம் கோணாமல் அவற்றை மனதார கொடுக்க வைக்கும்.
இத்தோடு சேர்ந்து, ஏழு ஆடுகள், சில கோழிகள், ஒரு செல்ல நாய் என அவரை சுற்றி எப்போது சகாக்கள் இருந்துக்கொண்டே இருப்பார்.
கணவர் விவசாயத்திற்கு காலையிலேயே செல்வதால், தனியாக நேரத்தை செலவழிக்க முடியாமல் ஆரம்பித்தவைதான் இவை எல்லாம்.
பிள்ளைகளான மகனும் மகளும், பனிரெண்டாவது முடித்ததும் வெளியூரில் தங்கிப் படிக்க, மீனாட்சிக்கு, இவை மட்டுமே வாழ்வில் பிடிப்பை உண்டுபண்ணியது. தான் எடுத்த விஷயத்தில் எல்லாம் தீவிரமாய் செயல்பட்டு அதற்கான நல்ல பெயரும் பெற்று, மக்களை வெகுவாகக் கவர்ந்துக்கொண்டார்.
தினந்தோறும் ஊரில் உள்ளப் பெண்கள் அவரிடம் வந்து பணமாகவோ, பொருளாகவோ உதவி கேட்க, அதற்கும் முகம் சுளிக்காமல் உதவுவார். சிலரது வீட்டின் குடும்பப் பிரச்சனைகளை சுமுகமாக பேசி தீர்ப்பதும், அவரின் பட்டியலில் அடங்கும்.
இப்படி நடுநாயகமாக விளங்கியவர், பிள்ளைகள் இருவரும் வேலையில் சேர்ந்து, லண்டனிற்கு செல்ல, இருவரையும் ஒரு சிறு வீட்டை எடுத்துத் தங்கச் சொன்னார், இருவரும் கொஞ்சம் அருகே இருப்பதால்.
பிள்ளைகளுக்கு, வேலைக்கு செல்லும் அவசரம், புது வகையான உணவுகள், என அனைத்தும் ஒத்துழைக்காமல் போக, இருவரின் வற்புறுத்துதலின் பேரிலும், கணவரின் அனுமதியுடனும், தனது சாம்ராஜ்யத்தை மொத்தமாகக் குலைத்து, பிள்ளைகளைத் தேடி சென்றார் அவர்.
புரியாத பாஷை, புது சூழல், புது மனிதர்கள், ஆடம்பர வாழ்க்கை என அனைத்தும் புதிதாக இருக்க, அந்தச் சூழலில் ஒத்துப்போகவே இரு மாதங்களுக்கு மேல் ஆகியது.
காலையில் எழுந்ததும், சமைப்பவர், பிள்ளைகள் சென்றதும், அவர்களது துணிகளைத் துவைப்பது, வீட்டை ஒதுங்கவைப்பது என நேரம் செல்ல, விடியலில் செல்லும் பிள்ளைகள், இரவில் வரும்வரை தனியாகவே இருந்தார். அவர்கள் வந்ததுமோ, மீண்டும் சமையல், பாத்திரங்களைத் துலக்குவது என ஓடியது.
முதலில் சீக்கிரமாக வந்தவர்கள், இப்போது எல்லாம் பிந்தியே வர, அவர் தூங்குவதற்கும் நேரம் எடுத்தது.
வேலைகள் செய்துக்கொண்டும், மக்களோடு ஓயாமல் பேசிக்கொண்டும் இருந்தவருக்கு, ஒருகட்டத்தில் அங்கு இருந்த அனைத்தும் சலித்துவிட, மனம் ஊரை நாடத் துவங்கியது.
அப்போது பார்த்து, அப்பார்ட்மெண்டின் எதிர்வீட்டில், புதிதாக ஒரு கன்னடக் குடும்பம் வந்துக் குடியேற, அதில் இருந்த வயதானப் பெண்மணி, அவருக்குத் தெரிந்தத் தமிழில் இவரிடம்,”பிள்ளைகளுக்குச் சமைச்சுப்போட்டு வேலைக்காரியா இருக்க வந்திருக்கியா?” என்று கேட்டுவிட, அப்போது ஆரம்பித்தது இந்தத் தவிப்பு.
அதன்பின், அந்தத் தாக்கத்தை மனம் தன்னகத்தே எடுத்து பலதை நினைக்க, அவரால் அங்கு இன்னமும் இருக்கமுடியாது என்று தோன்றியது.
இரவு பிள்ளைகள் வந்ததும் அவர்களிடம் பேசி, குறைந்தது இரண்டு மூன்று மாதங்களாவது ஊரில் இருந்துவிட்டு வர அனுமதி கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் வருவதற்காய் காத்திருந்தார்.
இருவரும் வந்ததும், எப்போதும் போல், அவர்களைக் கைக் கால்களை கழுவிவிட்டுச், சாப்பிட அழைக்க, அதற்குள் வேகவேகமாக மூவருக்கும் தேவையான மசாலா தோசைகளைச் சுட்டுப், படபடவென்று எடுத்து வந்தார், பிள்ளைகளுக்குப் பசிக்குமே என்ற கவலையில்.
மூவரும் சாப்பிட்டு முடித்தமும், மீனாட்சி வாயைத் திறந்து தனது எண்ணத்தைச் சொல்ல விளைந்த நேரம்,
மகன்,”எப்படிமா இப்படி செய்யுறீங்க சமையலை. எங்கப் போனாலும் இப்படி ருசியா கிடைக்காதும்மா. அம்மான்னா அம்மாதான்” என்று உணர்ந்து சொன்னான்,
அதைப்போன்று மகளும்,”அம்மா பேசமா எனக்கு கல்யாணம் முடிஞ்சதும் என்கூடவே வந்திறேன். அப்போத்தான் தினமும் உன் கையால சாப்பிடுற பாக்கியம் கிடைக்கும். அவ்ளோ சூப்பர் மா. இன்னும் நாக்குல எச்சில் ஊறுது” என்று சொல்ல,
மீனாட்சிக்கு அதுவரை மனதில் புழுவாய் அரித்துக் கொண்டிருந்தச் சஞ்சலம் எல்லாம் நொடியில் மறைந்தது. கண்களிள் கண்ணீருடன் பிள்ளைகளை ஏறெடுக்க, அவர்கள் என்னவென்று கேட்டும் சொல்லாமல், அன்போடு அணைத்துக் கொண்டார்.
இது அன்றோ அன்னையின் அன்பு என்பது. தனது துக்கத்தை எல்லாம் வினாடியில் தனது பிள்ளைகளுக்காய் மறப்பது.
பிள்ளைகளுக்கு அவரின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்றாலும், அன்போடு அவரின் அன்பில் நனைந்தனர்.

mohanavani- புதியவர்
- பதிவுகள் : 32
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum