தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சின்னச் சின்ன கதைகள்

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 7:27 pm

First topic message reminder :

கொடுத்துப் பெறுதல்
--------------------------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by ஸ்ரீராம் Mon Nov 02, 2015 11:45 am

அணைத்து கதைகளும் சிந்திக்க வைக்கிறது.


spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 VScWx5Q2RUGpUEZ1TVEB+special-post
#spoct15-2
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 3:01 pm

அணைத்து கதைகளும் சிந்திக்க வைக்கிறது.

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 3:03 pm

மூத்தோர் சொல்லே மந்திரம்!
-------------
அந்தச் சாலை, சோலைக்குள் புகுந்து பாம்புபோல் வளைந்து வளைந்து செல்வதைப் பார்க்க அழகாக இருக்கும். உல்லாசப் பயணிகள், சாலை ஓரத்தில் கார் வேன்களை நிறுத்தி இயற்கை அழகை ரசிப்பார்கள். அச்சாலை ஓரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் பயணிகள் வீசும் பழங்களையும், தின்பண்டங்களையும் உண்டு வாழ்ந்து வந்தன.

எல்லா குரங்குகளுக்கும் சிங்கராசன் என்ற குரங்கு தலைவனாக இருந்து வந்தது. எல்லா குரங்குகளும் சிங்கராசனின் சொல்லைக் கேட்கும். ஒரு சிலவற்றைத் தவிர. சாலையோரம் ஒரு வாகனம் நின்றால் போதும். ஐந்து, ஆறு குரங்குகள் ஒன்று சேர்ந்து பயணிகளை மிரட்டி உணவுப் பொருள்களைப் பறித்து விடும். இவைகளின் போக்கு சிங்கராசுக்குப் பிடிக்காது.

மேலும், சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதும், விரைவாக வரும் வண்டிகளைத் தாண்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் சில பலியாவதும் உண்டு.

ஒரு நாள்…

ஒரு உல்லாசப் பயண வண்டி சாலையோரமாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்து ஏழெட்டுப் பேர் இறங்கி இயற்கைக் காட்சியைக் கண்டுகளித்தனர். அச்சமயம் பார்த்து, இரண்டு மூன்று குரங்குகள் வண்டிக்குள் புகுந்து தின்பண்டங்கள் மற்றும் பால்பாட்டில்களை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறின.

காட்டுக்குள் சென்று மற்ற குரங்குகளுக்கும் கொடுத்தன. சிங்கராசு எதையும் வாங்க மறுத்தது. உடனே அது, “”தம்பி, தங்கைகளே! மற்றவர் விருப்பப்பட்டு கொடுத்தால் தான் எப்பொருளையும் வாங்கித் தின்ன வேண்டும். இப்படி குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பாட்டிலைக் கூட எடுத்து வந்து விட்டீர்களே! குழந்தைகள் வயிற்றில் அடிப்பது பாவமல்லவா?” என்று கூறியது.

இதைக் கேட்ட காளி எனும் குரங்கு, “”ஓ! மனிதர்களுக்குப் பரிந்து பேசுகிறீர்களா? நம்மீது மனிதர்கள் பரிதாபப் படுகிறார்களா? கல்லெறிந்து துரத்துகிறார்களே! சும்மா இருங்கள்…” என்று அலட்சியமாக முறுக்கைக் கடித்துக் கொண்டே சொன்னது. சிங்கராசு மனம் நொந்தது!

“”தம்பி! எந்த நற்செயலுக்கும் பின்னால் நல்ல பலனுண்டு. எந்தக் கெட்ட காரியத்துக்கும் தீய பலன் இருக்கும். புரிந்து கொள்வாய் விரைவில்” என்றது.

“”ஹா… ஹா… ஹா..!” என்று சிங்கராசைப் பார்த்து எள்ளி நகையாடின குரங்குகள். “”கிழடு ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கும். வாருங்கள் விளையாடலாம்” என்று சாலைக்கு கூட்டமாகக் கிளம்பின குரங்குகள்.

அடுத்த நாள்…! காளி சொன்னது, “”டேய்… துருவா! இந்த ரோட்டை ஐந்து நிமிடத்திற்குள் யார் அதிகமாகத் தாண்டுகிறார்கள் என்று பார்ப்போமா? அதிகம் தாண்டுபவர் தான் அடுத்தத் தலைவர். இனி சிங்கராசு வேண்டாம்” என்றது.

போட்டியின் நடுவராக மயிலன் எனும் குரங்கு இருந்தது. “”தாண்டுங்கள்…! ஒன்று… இரண்டு… மூன்று…” என்று மயிலன் போட்டியை ஆரம்பித்து வைத்தது. முடிவில் காடன் என்ற குரங்கு நூற்றுத் தொண்ணூறு முறை ஓடி வெற்றிப் பெற்றது.

“”காடனுக்கு ஜே!” என்று எல்லா குரங்களும் முழக்கமிட்டன. “”இனி காடன் தான் நம் தலைவர்” என்று அதைத் தூக்கிக் கொண்டாடின. சிங்கராசு மவுனமாக இருந்தது.

அச்சமயத்தில்…

வேகமாக வந்த கார் குரங்கு கூட்டத்தின் மீது மோத, சில குரங்குகளுக்கு அடிபட்டன. சில தப்பித்து ஓடின.
ஆனால்… துரதிருஷ்டவசமாக காளி அடிபட்டு இறந்தது. மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. காளியைப் பார்த்துக் குரங்குகள் கதறி அழுதன.

இதைக் கவனித்த சிங்கராசு, “”ஐயோ! காளி இறந்து விட்டதே… நான் சொன்னதைக் கேட்காமல்… சே, இப்படியா ஆக வேண்டும்” என்று நினைத்து கண்ணீர் விட்டது.

“”சிங்கராசு அண்ணே! வயதில் மூத்தவர் சொல்லை மீறினால் இப்படித்தான் நடக்கும் என்பது உண்மையாகிவிட்டது. எங்களை மன்னித்து விடுங்கள்” என்று சிங்கராசுவின் காலில் விழுந்தன குரங்குகள்.

“”தம்பி, தங்கைகளே! இனி இந்தச் சாலை நமக்குவேண்டாம். சோலைக்குள் சென்று சுதந்திரமாக வாழ்வோம். வாருங்கள்!” என்று கூறிய தலைவன் சிங்கராசுவின் சொல்லைக் கேட்டு, காட்டுக்குள் சென்றன அனைத்துக் குரங்குகளும்.


+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 3:17 pm

குழையும் வண்ணம்
---------------
-ரா. சோமசுந்தரம்

ஜன்னலற்ற ஜன்னலான கண்ணாடிச் சாளரங்களில் மோதிச் சலித்தது காற்று. கட்டடங்களுள் நுழைந்து, எதையாவது தள்ளி, முன்புபோல கோப்புகளைப் புரட்டி விளையாட முடிவதில்லை. ஆத்திரத்துடன் தரையிறங்கி, சாலையில் கிடந்த மணலை அள்ளித் தூற்றியது. முழங்கையால் தடுத்தும், முடியாமல் அவள் கண்களில் மண் பட்டு வலித்தது. காற்றின் கை இழுத்த கூந்தலை மீட்டு, முதுகில் தள்ளினாள்.

கணக்குகளை முடித்துக் கொண்ட ஒரு கடையின் ஷட்டர் வேகமாக அதிர்ந்து இறங்கியது. எதிர்வரிசைக் கடைகளின் வெளிச்சம் அவள் நின்ற பேருந்து நிழற்குடையின் அடிவரை நீண்டுப் படுத்திருந்தது.

நசுங்கிய அலுமினியக் கூடைக்குள் டிபன் கேரியர் முணுமுணுக்க நிழற்குடைக்குள் வந்து நின்ற ஒரு கிழவி, “”இப்பவே இப்பிடி குளுருதே” என்று சொல்லி அவளிடம் பேச்சு கொடுத்தாள். அவள் பதில் சொல்லவில்லை.

“”27டி போச்சா கண்ணு”

“”இல்ல”

“”எவ்ளோ நேரமா நிக்கற”

“”இப்பதான் வந்தேன்”

இனி எதையும் கேட்காதே என்ற பாவனையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு பின்னகர்ந்தாள். கிழவி சாவகாசமாய் புகையிலையை வாயில் அதக்கிக்கொண்டு, நிழற்குடையின் தரையில் உட்கார்ந்து, கால்களை சாலையில் நீட்டினாள்.
கிழவியின் மீது அவளுக்கு இரக்கம் வந்தது. தன்னைப்போலவே உழைக்கும் பெண். விதவை. திருமணம் நடந்திருக்கலாம், பிள்ளையும் பெற்றிருப்பாள். பிறகு ஏன் இந்த ஓயாத உழைப்பு! அவளிடம் பேச விரும்பினாள். அதற்கான நேரம் கடந்துவிட்டது.

அவளுக்கு யாரிடமும் அதிகம் பேசுவது பிடிப்பதில்லை. தயக்கம். கொஞ்ச நேரம் பேசியதுமே ஏனோ சலித்துவிடுகிறது. அது அம்மாவாக இருந்தாலும் சரி. இந்த மருந்துக் கடை வேலைக்கு வந்த பிறகுதான் இப்படியாக எல்லார் மீதும் இனம் புரியாத வெறுப்பு. எப்போதும் தனித்து ஒதுங்கி நின்றது மனது.

இத்தனை தயக்கத்திலும்கூட, அவன் இந்த வழியாக செல்ல நேர்ந்தால், நிறுத்திப் பேச வேண்டும் என்று விரும்பினாள். பேச வேண்டிய வார்த்தைகளைக்கூட தொகுத்து வைத்திருந்தாள். அவன் இன்றும் அவளைக் கடந்துசெல்லக் கூடும்.
நேற்றும் இதேபோல, இதற்கு முந்தைய பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள். இந்தக் கிழவியைப் போல யாராவது- பேசாமல் நிற்க மட்டும் - துணைக்கு வரமாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தாள். தனியாக நிற்க அச்சமாக இருந்தது.

இரவில் கடைசி பஸ்ஸூக்காக இங்கு நிற்கும்போது கடந்து செல்லும் சிலர் வாகனத்தை ஓரம் நிறுத்துவார்கள். உடன் நிற்கும் யாராவது ஒரு பெண் ஓடிப்போய் ஏறிக்கொள்வாள். அவள் தனியாக நிற்கும்போது சிலர் வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு திருப்பிப் பார்ப்பார்கள். இருட்டில் அடையாளம் தெரியவில்லை போல என்று மனதில்படும்.
நேற்று அவர்களில் ஒருவனாகக் கடந்துபோனவன் பைக்கை நிறுத்தாமல் அவளிடம் திரும்பி வந்தான். அவளை இருட்டில் உற்றுப் பார்த்தான். சீறிப்பாய்ந்த வாகன ஒளியில் இருவரும் தங்கள் முகங்களை அடையாளம் கண்டனர். அவன் அடிக்கடி மருந்துக் கடைக்கு வருகிறவன்தான்.

“”நீங்க லெட்சுமி மெடிக்கல்ஸ்தானே”

“”..ம்…”

“”லேட்டாச்சுன்னா இந்த ஸ்டாப்பிங்க்ல நிக்காதீங்க”

அடுத்த ஸ்டாப்புக்கு போங்க. இந்த நேரத்துல அந்த மாதிரியான பொண்ணுங்கதான் இங்க நிப்பாங்க”.
ஆத்திரமும் அழுகையும் அடக்க முடியாதவளாய், அவனுக்கு நன்றி சொல்லும் பாவனையில் அசட்டுத்தனமாக குட்மார்னிங் சொல்வதுபோல கையை அசைத்துவிட்டு படுவேகமாக நடந்தாள். அவன் பைக்கில் வேகமாக அவளைக் கடந்து போனான்.

வீட்டில் அம்மா, அண்ணா,அண்ணி எல்லாரும் சொன்னார்கள். “இந்த வேலையை விட்டுட்டு வேறு வேலை பார்’. காலையில் கிளம்பி பகலெல்லாம் மருந்துக்கடையில் வேலைபார்த்து, இரவில் வீடு வருகிறவளுக்கு வேலைதேட நேரம் இல்லை. மற்றவர்களுடன் பேசிப் பழகி, காரியம் சாதிக்கும் திறமையும் இல்லை. பேசக்கூடிய ஓரிரு பெண்களும், வேறு சில மருந்துக் கடையைத்தான் பரிந்துரைத்தார்கள். ஆனால் மருந்துக் கடையே வேண்டாம் என்று தீர்மானித்திருந்தாள். மருந்துக் கடை என்பதாலேயே அவளிடம் “ஆணுறை’ கேட்கும் ஆண் மகனை வெறும் வாடிக்கையாளன் என்று அவளால் ஏற்க முடியவில்லை. “விற்கிறோம், கேட்கிறான். என்ன தவறு?’ தோல் மருத்துவர் பிரியாவிடம் நிறைய ஆம்பிளைங்க வர்றாங்க. மருந்து எழுதித் தர்றதில்லையா!’ என்று கடைத் தோழியர் சொன்னாலும் மனம் ஏற்கவில்லை. “அது வேறு இது வேறு’

இந்த உலகம் முழுதும் காமம் நிரம்பி வழிவதாக அவளுக்குள் எண்ணம் வலுத்தது. தோழிகள் தங்கள் சென்போன்களில் ஆண் நண்பர்கள் அனுப்பும் செக்ஸ் ஜோக்ஸை அவளிடம் காட்டினால் திட்டுவாள். அந்த செல்போன்களில் அவர்களது ஆண் நண்பர்கள் பதிவு செய்து தரும் 2 நிமிட ஆபாச படங்களை தோழிகள் ரசிப்பதை தடுக்க முயன்று முடியாததால் அழுதாள். அதிலிருந்து அவளை அவர்கள் பல விஷயங்களில் ஒதுக்கிவிடத் தொடங்கினர்.

தோழிகளைவிட்டு விலக நினைக்கிறோமா அல்லது மருந்துக் கடை வேலையை விட்டுவிட விரும்புகிறோமா என்று தீர்மானிக்கவே அவளுக்கு மூன்று மாதங்கள் ஆயிற்று. கடைசியாக அவள் மருந்துக்கடை வேலையை விட்டுவிடுவதுதான் ஆழ் மன விருப்பம் என்று முடிவு செய்தாள். ஆனால் யாரை அணுகுவது? அவளுக்கு யாரும் பழக்கம் இல்லை.

ஏதாவது ஒரு அலுவலகத்தில் மாலை 5 மணியோடு முடிகிறமாதிரி ஒரு வேலையைத் தேடிக்கொள்ள விரும்பினாள். அது எடுபிடி வேலையாக இருந்தாலும் சரி. பிளஸ் டூ தேறிய பெண்ணுக்கு வேறு என்ன வேலை கிடைத்துவிடும்!. சுயதொழில் தொடங்கலாம். அதற்கு ஒரு தொழிலைத் தேர்வு செய்து பயிற்சி பெற வேண்டும். பயிற்சிக்கும் பணம் வேண்டும்.

அவளுக்கு பணம் கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை.. அவளுக்கான தொழில் எது என்பதும் பிடிபடவில்லை.
அழுகையுடன் ஒரு சிறுமி நிழற்குடை மேடையில் ஏறினாள். அவளைத் தொடர்ந்து, பச்சிளம்குழந்தையை டர்க்கி டவலில் சுற்றி மார்போடு அணைத்தபடி ஒரு பெண்ணும், கனமான ஒரு பெரிய சூட்கேசுடன் ஒரு பெரியவரும் நிழற்குடைக்குள் வந்து நின்றனர். குழந்தையை டர்க்கி டவலால் மேலும் இறுக்கமாகச் சுற்றினாள் அந்த பெண்.
“”பொழுதோட வூடு போவக்கூடாது? பச்சைக் கொழந்தைய இந்த குளுர்ல தூக்கிட்டு போறியேம்மா” கிழவி சொன்னாள். இதற்கு அவர்கள் பதில் தரவில்லை. “”பாவம், இந்தப் புள்ளயும் குளிர்ல நடுங்கிட்டு நிக்குது, ரொம்ப நேரமா”. அந்தக் கிழவியின் இரக்கம் அவளிடம் குற்றவுணர்ச்சியைத் தூண்டியது. அவளிடம் பதில் பேச விரும்பினாள், ஆனால் பேசவில்லை.

அவன் வழக்கம்போல இன்று கடைக்கு மருந்து வாங்க வந்திருந்தான். சர்க்கரை நோயாளிக்கான மாத்திரைகளைச் சொன்னான். நிச்சயமாக அவை அவனுக்கு இல்லை. உள்-அறையிலிருந்து கவனித்தாள். அவளை அவன் தேடுவதைப் பார்த்தாள். தோழியிடமிருந்து மாத்திரைகளை தானே வாங்கி வந்து நீட்டினாள். சிரித்தான். “பிரச்னையில்லாம வீடு போனீங்களா..’ என்றான், மெதுவாக. அந்த வார்த்தையில் கபடமில்லாத அக்கறை இருந்தது.
தலையாட்டினாள்.

“எங்க வேலை செய்றீங்க?”

“விஜயா பாங்க்-ல அட்டன்டர்”

“”அந்த நேரத்துல போனீங்க..”

“மார்ச் மாசம் கடைசியிலே இப்படித்தான் ஒரு பத்து நாளைக்கு லேட்டாகும்”

“”நேத்து சொன்னதுக்கு தேங்க்ஸ்” மெல்லிய முறுவலுடன் இறங்கியவன், திரும்பிக்கூட பார்க்காமல், பைக்கின் முன்உறையில் மாத்திரைகளை வைத்து, சாலையைப் பார்த்தபடி ஸ்டார்ட் செய்து விரைந்தான்.

“இன்றும் கூட வங்கியில் வேலை இருக்கலாம். அவனும் தாமதமாகப் புறப்படலாம். அவள் இங்கு நிற்பதைக் கண்டால், நின்று பேசுவானா? இல்லையென்றாலும் அழைத்துப் பேச வேண்டும். அல்லது ஒரு மதிய வேளையில் வங்கிக்கே சென்று பேசினால் என்ன..? அந்த மாதிரியான பெண்கள் நிற்கும் இடம் தெரிந்தவனுக்கு அது மாதிரியான தொடர்புகள் இருக்குமோ! அவனை நம்பிப் பேசலாமா?’

ஆண்கள் மீது அவளுக்கு பொதுவாகவே மரியாதை இழந்திருந்தாள். முகம் மட்டுமே அறிந்த ஒரு பெண் மீது அவன் கொண்ட இரக்கம்தான் அவளை அவன்மீது மரியாதை கொள்ள வைத்தது. “அவன் பலருடன் பழகும் வாய்ப்புள்ளவன். ஒரு குறைந்த சம்பளத்துக்கு மனதுக்குப் பிடித்த ஒரு சிறிய வேலையைத் தேடிக்கொள்ள அவன் உதவுவான் என்று நம்பினாள்.
பிளஸ் டூ படிக்கின்ற காலத்தில் அவள் மனவெளியில் காதல் நிரம்பிக் கிடந்தது. அவள் விஜய் ரசிகை. சிம்ரனும் விஜய்யும் திரையில் டூயட் பாடுகிறபோது அவள் மனவெளிக்குள் விஜய்யை அழைத்துச் சென்றுவிடுவாள். ஆனால் மருந்துக் கடை வேலைக்கு சேர்ந்த பிறகு, வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தது. அவள் வாழ விரும்பிய வாழ்க்கை, கனவின் விளிம்பிலேயே இருந்தது. அந்த வாழ்க்கை யாரோ சிலருக்கு மட்டும்தான் என்ற எண்ணம் மனதில் சுமையாக இறங்கியது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. சுற்றியுள்ள அனைத்தின் மீதும் வெறுப்பு உண்டானது. எல்லாரையும் விட்டு மெல்ல மெல்ல ஒதுங்கத் தொடங்கினாள். காதில் செல்போனில் பேசிக்கொண்டே வந்து, சீட்டு கொடுத்து, சில்லறை கொடுத்து, மருந்து வாங்கி இறங்கிச் செல்லும்போதும் கழுத்தொடியப் பேசும் பெண்களைப் பார்த்து வியப்பாள். “செல்போன் பில்லுக்கு பணம் எப்படிக் கிடைக்கும்? மறுமுனையில் நிச்சயம் ஒரு ஆணாகத்தான் இருக்கும்’.

“நான் பேசினால், அவனைக் காதலிக்க முயலுவதாக அவன் நினைப்பானோ?..’

புதிதாக இந்த எண்ணம் எழுந்ததும் அவளுக்கு மனஇறுக்கம் வலுத்தது. கைக்குட்டையை மேலும் மேலும் மடித்து உருட்டிக் கசக்கினாள். அவன் இந்த வழியாகச் சென்றாலும் பேசக்கூடாது என்று பின்னகர்ந்தாள். வேறு வேலை தேடுவதற்கான ஒரு வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்றும் பதற்றமாக இருந்தது.

“அவனுக்கு திருமணமாகியிருக்கலாம். அல்லது அந்த வங்கியிலேயே இன்னொரு பெண்ணை காதலிக்கலாம்’. இந்த எண்ணம் பதற்றத்தைக் குறைத்தது.

“அவன் நடவடிக்கை நல்லவிதமாக இருக்கிறது. எல்லாருடனும் நன்றாகப் பழகுகிறான். இந்த உதவி கேட்பதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்க மாட்டான்’

ஒரு நர்சரி பள்ளியில் அல்லது குழந்தை காப்பகத்தில் வேலை செய்யும் ஆசை இருந்தது. குழந்தைகள் அன்பைத் தவிர எதையும் எதிர்பார்ப்பதில்லை. வார்த்தைகளை தேர்வு செய்து பேச வேண்டியதில்லை. பேசவே வேண்டியதில்லை. சிரித்தாலே போதும். அவள் தயக்கமின்றி குழந்தைகளுடன் பழகும் காட்சிகளை விரித்த மனது, அவளை மெல்ல பகல்கனவிற்கு நகர்த்தியது.

“”27டி வருமா?”

குழந்தையை வைத்துக்கொண்டிருந்த பெண்தான் அவளிடம் கேட்டாள் அவள் பதில் சொல்வதற்கு முன்பாகவே, கிழவி பேசினாள். “”கடைசி பஸ் போவலம்மா, வரும்”. தன்னை புறக்கணித்தவர்களிடம் கூட வலிய பேசும் அந்தக் கிழவியின் எளிய மனம் பிடித்திருந்தது. பதில் பேசாமல் இருக்கும் இவர்களை அவமானப்படுத்தும் வகையில், கிழவிக்கு பதில் சொல்ல நினைத்தாள். வழக்கம்போல தயக்கம் தடுத்தது. பதில் சொல்லும் வார்த்தைகளை சேகரித்தபோது, காலம் கடந்துவிட்டிருந்தது.

எதிர்வரிசையில் இருந்த பெரிய கடையின் விளக்குகள் அணைந்தன. நிழற்குடை இருண்டது. கடையின் மேலாக டிரான்ஸ்பரன்ஸி போர்டில் ஒரு ஆணும் பெண்ணும் இறுக்கமாக கட்டிப் பிடித்து சிரித்துக்கொண்டிருந்தனர். கிளர்ச்சியை வலிந்து தூண்டும் அந்தத் தோற்றம் அவளுக்குப் பிடிக்கவில்லை. பார்வையை சாலையின் பக்கம் திருப்பினாள்.

27 டி வந்தது

பெரியவரும் அந்த பெண்ணும் முன்வாசலில் ஏறினார்கள். கிழவி தன் அலுமினியக் கூடையுடன் பின்வாசலுக்கு ஓடினாள். இவளும் கிழவியைப் பின் தொடர்ந்தாள்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 4:56 am

ராமனும், அம்மன் சிலையும்!
-----------------------

பாண்டியன், வள்ளி தம்பதியினரின் ஒரே மகன் ராமன். அவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். பாண்டியன் ஒரு சிற்பி. அவரது கைவண்ணத்தில் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ்துரை என்பவரை திருநெல்வேலி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டுக் கொன்ற வீர வாஞ்சிநாதனின் உருவச் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அரசாங்கத்திடம் இருந்து விருது பெற்றவர் பாண்டியன். தலைசிறந்த சிற்பி என்ற பெயர் அவருக்குண்டு.

அன்று பள்ளி விடுமுறை. தாய் வள்ளியிடம் சாப்பாடு கேட்டான் ராமன். “”டேய்… கொஞ்சம் பொறுடா, இப்பத்தான் சாதம் அடுப்பில வெந்திட்டிருக்கு, வடிச்சதும் தர்றேன்” என அம்மா சொல்ல, “”போம்மா… எனக்கு சாதமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்” என்று அம்மாவிடம் கோபித்துக் கொண்டான் ராமன்.

“”ஏண்டா… இப்படி கோபப்படுறே? பொறுமையே கிடையாதுடா உனக்கு. கொஞ்ச நேரம் பொறுமையா இரு வடித்து தர்றேன்” என்று வள்ளி சொல்ல, பொறுமை இழந்த ராமன், “”எனக்கு சாதம் வேண்டாம்” என உரக்க கத்தியபடி படுக்கையில் போய் படுத்துக் கொண்டான். தூக்கம் கண்களைத் தழுவியது.
பொறுமையும், சகிப்புத் தன்மையும் அறவே கிடையாத தன் மகனை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே உணவு தயாரிப்பதில் மும்முரமானாள் வள்ளி.

ராமனை சிலை வடிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார் தந்தை பாண்டியன். வழியில் அவனுக்கு பாப்கார்ன் பாக்கெட்டை வாங்கிக் கொடுத்தார். அதை கொறித்துக் கொண்டே சென்றான். பாண்டியன் சிலை வடிக்க குவித்து வைக்கப்பட்டிருந்த கல்லிலிருந்து ஒன்றை எடுத்து சிலை வடிக்க முயன்றார். அவர் கையில் வைத்திருந்த உளி கல்லை சிலையாக்க முயன்றது.

உடனே, “”ஐயோ! வலிக்குதே… என்னை விட்டுவிடுங்க…” என அலறியது அந்தக் கல். இதையடுத்து, பாண்டியன் அந்தக் கல்லை தனியே வைத்து விட்டு வேறொரு கல்லை எடுத்து சிலை செதுக்க முயன்றார். சிறிது நேரம் மௌனமாக இருந்த அந்தக் கல்லும், “”அம்மா உடம்பெல்லாம் வலிக்குதே…” என அலறியது.

சிற்பி பாண்டியன் அந்தக் கல்லையும் எடுத்து ஒதுக்கி வைத்து விட்டு வேறொரு கல்லை எடுத்து சிலை செதுக்க முயன்றார். அந்தக் கல்லோ மற்ற இரண்டு கற்களைப் போல கதறாமல் மௌனமாய் பொறுமையாய் உளியின் துன்பத்தை தாங்கிக் கொண்டது. சிற்பி சந்தோஷத்தோடு சிலை வடித்தார். அது அழகான அம்மன் சிலை ஆனது.

பாண்டியன் அந்தச் சிலையை வணங்கினார். கரடு முரடாக இருந்தக் கல் அழகான அம்மன் சிலையாகி அம்மனே நேரில் வந்து காட்சி தருவது போல் இருப்பதை உணர்ந்து கரம் கூப்பினான் ராமன். அப்பாவின் திறமையை மனதுக்குள் பாராட்டி மகிழ்ந்தான்.

சிறிது நேரத்தில் ஒருவர் கழுதையுடன் வந்தார். அப்பாவிடம் துணி துவைக்க கல் ஒன்று கேட்டார். அப்பா முதலில் சிலை வடிக்க முயன்று உளி படும் முன்னரே அலறிய கல்லை எடுத்துக் கொடுக்க, அதை கழுதையின் மீது ஏற்றி குளக்கரைக்கு துணி துவைக்கும் கல்லாக்கிட கொண்டு சென்றார் சலவைத் தொழிலாளி.

சற்று நேரத்தில் நான்கைந்து பேர் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அம்மன் சிலையைக் கண்டு வியந்து வணங்கி சிற்பி பாண்டியனை பாராட்டி அம்மன் சிலையையும், கோயில் படிக்கட்டுக்காக இரண்டாவதாக சிற்பி சிலை வடிக்க முயன்று துன்பங்களை சகித்துக் கொள்ளாமல் பொறுமையிழந்த கல்லையும் தூக்கி ஆட்டோவில் ஏற்றிச் சென்றார்கள். கூடவே பாண்டியனும், ராமனும் சென்றார்கள். பீடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன் சிலையை பயபக்தியுடன் வணங்கினார்கள்.

அம்மனை தரிசிக்க வந்த அனைவரும் கோயில் படிக்கட்டில் போடப்பட்டிருந்த கல்லை மிதித்துக் கொண்டே வந்தார்கள். அழகான அம்மன் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் படிக்கட்டாக்கப்பட்ட கல் மனம் வருந்தியது. அது அம்மன் சிலையை பார்த்து, “நீ மட்டும் பொறுமை காத்தாய். துன்பங்களை சகித்துக் கொண்டாய். அதனால்தான் நீ இன்று பல பக்தர்கள் வணங்கும் அம்மன் சிலையாகி இருக்கிறாய். உனக்கு தினமும் அபிஷேகமும், ஆராதனையும் செய்கிறார்கள். சிற்பி என்னை சிலை வடிக்க முயன்ற போது துன்பத்தைக் கண்டு துவண்டேன். பொறுமை இழந்து அலறினேன். இப்போது மனித கால்களால் மிதிபடுகிறேன்’ என்றது.

உடனே அம்மன் சிலை, “உன் நிலைமை இப்படி இருக்க உளி படும் முன்னே பொறுமையிழந்து துன்பத்தை தாங்கி கொள்ள மனம் இல்லாத முதல்கல் இப்போது குளக்கரையில் துணிகளால் அடிபடுகிறது. நித்தமும் அழுக்கு அபிஷேகம்தான் அதுக்கு நடக்கிறது. இனி வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம். பொறுமைக் காத்து துன்பங்களை தாங்கிக் கொண்டால் மட்டுமே வெற்றி நிச்சயம்’ என அம்மன் சிலை சொல்ல, “புரிந்து கொண்டேன்’ என்றது படிக்கல்.

“”டேய்… ராமா எழுந்திருடா… சாப்பாடு ரெடியாயிச்சு. வா சாப்பிடலாம்” என்று வள்ளி அழைக்க, ராமன் கண்களை கசக்கியபடியே எழுந்தான். அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது அவன் இவ்வளவு நேரம் பார்த்ததெல்லாம் கனவு என்பது. கனவு என்றாலும் நனவு போல் அல்லவா இருக்கிறது.

பொறுமைக் காத்து துன்பங்களை தாங்கிக் கொண்ட தோள்கள்தான் வெற்றி மாலையை சுமக்கும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, அதன்படி நடக்க உறுதி எடுத்துக் கொண்டே கைகளை அலம்பச் சென்றான் அம்மா தந்த உணவை ருசிக்க.
+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 4:58 am

வேர்விடும் உறவுகள் – சிறுகதை
---------------

கல்யாணம் நல்லபடியாக நடந்து மருமகள் லக்ஷ்மியோடு வீடு திரும்பிய சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார் ராமச்சந்திரன்.

மதுராம்பாளுக்கு சர்க்கரை உச்சம். இன்சுலின் போட்டு ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது. கல்யாண முகூர்த்தம் சுபமாக முடிய வேண்டுமென குலதெய்வத்தைப் பிரார்த்தனை செய்தபடியே இருந்தார். சம்பந்தி வீட்டில் கல்யாணத்தை நிறைவாகச் செய்தார்கள். எந்த ஒரு சம்பிரதாயத்தையும் விட்டுவிடாது பார்த்துப் பார்த்து செய்தார்கள்.

தஞ்சாவூர் பக்கத்து சமையல்காரர்கள், அப்படியொரு கை மணம். கிராம்பு ரசம் ஹைலைட். சாப்பாட்டு ஹாலே மணத்தது.
லக்ஷ்மி ஒரே பெண். செல்ல வளர்ப்பு. கல்யாணம் முடிந்து மறுநாள் கட்டு சாதம் வைத்து சம்பிரதாயங்கள் முடிந்து மாப்பிள்ளையோடு கிளம்பும் போது பெற்றவர்கள் கண்கலங்கி நின்றார்கள். கடைசியில் துக்கம் பீரிட்டு குமுறிக் குமுறி அழுது தீர்த்துவிட்டார்கள். சந்தோஷமான நேரத்தில் கண்ணீர்விட்டு அழக்கூடாது என்று பெரியவர்கள் தேற்றினார்கள். கூடியிருந்தவர்களுக்கு அந்தச் சூழ்நிலை மிகுந்த மனபாரத்தைத் தந்தது. எல்லோரும் பேச்சின்றி இறுகிய முகத்தோடு நின்றார்கள்.

நிலைமை ஒருவாறு மாறியது. லக்ஷ்மி குருமூர்த்தியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு புறப்பட்டாள். காரில் மகன் மருமகளோடு ராமச்சந்திரன் மதுராம்பாள் ஏறிக் கொண்டார்கள். வீடு வந்ததும் இரு சுமங்கலிப் பெண்கள் புதுமண தம்பதிகளை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்கள். வலது காலை எடுத்து வைத்து லக்ஷ்மி வீட்டிற்குள் வந்தாள்.
பூஜை அறைக்குச் சென்று ஸ்வாமி நமஸ்காரம் செய்தபின் மாமியார், மாமனார், கணவன், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் நமஸ்காரம் செய்தாள்.

லக்ஷ்மி காஸ் அடுப்பில் பாலைக் காய்ச்சி, பிறகு பால் பாயசம் வைத்தாள். நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணம் சற்றுத் தூக்கலாகவே இருந்தது. எல்லோரும் பாயசத்தை ருசித்துக் கொண்டிருக்கும் போது சம்பந்தி வீட்டில் வைத்திருந்த கட்டு சாதத்தை அத்தை பிரித்தாள்.

அட்டைப் பெட்டியில் சிறு சிறு சில்வர் ஃபாயில் பொட்டலங்களை அடுக்கிவைத்திருந்தார்கள். புளியோதரை, தயிர் சாதம், தொட்டுக் கொள்ள வற்றல், மோர் மிளகாய், புளிக்காய்ச்சல், மிளகாய்ப் பொடி தடவிய இட்லி.

அந்தக் காலத்தில் மூங்கிற் கூடையில் வாழை இலை பரப்பி, ஒரு கூடை புளியோதரை, இன்னொரு கூடை தயிர்சாதம், மற்றொரு கூடையில் இட்லி என்று வைத்து கூடைகளைத் துணியால் இறுகக் கட்டிவைப்பார்கள்.

“காலம் ஒவ்வொரு செயல்பாட்டையும் எப்படி எப்படி மாற்றிவிடுகிறது..’ ராமச்சந்திரன் ஆச்சரியப்பட்டார்.
ராமச்சந்திரன் மாலையில் மொட்டைமாடிக்குச் சென்று பூந்தொட்டிகளுக்கு தண்ணீர்விட்டார். வீட்டுக் காவலுக்கு வந்திருந்த செக்யூரிட்டி கார்டு பூச்செடிகள் வாடிவிடாமல் தண்ணீர்விட்டிருந்தார்.

ஒரு துளசிச் செடி மட்டும் சற்றே வாடிப் போயிருந்தது. “இளஞ்செடி. வெயில் அதிகமாக அதன் மீது விழுந்தது கூட காரணமாயிருக்கலாம்…’ என்று சொல்லிக்கொண்டே நீரை ஊற்றினார்.

மறுநாள் காலையில் பார்த்தபோது துளசி சற்று அதிகமாகவே வாடிப் போயிருந்தது. எனவே தோட்டத்திலிருந்த துளசி கன்று ஒன்றை ஆணி வேரோடு பத்திரமாகப் பெயர்த்தெடுத்து மண்ணோடு சேர்த்து மொட்டை மாடிக்குக் கொண்டுவந்தார். பூந்தொட்டியில் இயற்கை உரம் கலந்த மண்ணை நன்கு கிளறி துளசிக் கன்றை நட்டார். உயிர்த் தண்ணீரும்விட்டார்.
வீட்டிற்கு வந்த மருமகள் லக்ஷ்மி வீட்டு வேலைகளை மாமியாரிடம் கேட்டுக் கேட்டு பதவிசோடு செய்வதைப் பார்த்த ராமச்சந்திரனுக்கு சந்தோஷமாக இருந்தது.

அன்று காலை மதுராம்பாளின் உடல் நிலை திடீரென்று சரியில்லாமல் போனது. சர்க்கரை கன்னாபின்னாவென்று எகிறிவிட்டது. மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகுதான் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
அந்த இரண்டு நாட்களும் அதற்கடுத்த நாட்களிலும் லக்ஷ்மி வீட்டு வேலைகளில் முழுவதுமாக மூழ்கிப் போனாள். காலை காபி, டிபன், மதிய சாப்பாடு, மாலை ஓட்ஸ் கஞ்சி, இரவு சப்பாத்தி என்று இயந்திர கதியில் வேலை.

லக்ஷ்மி புக்ககம் வந்து ஒரு வாரம் நெருங்கியது. அவள் தனது பிறந்த வீட்டை நினைக்கக் கூட நேரமில்லாது போனதை நினைத்து ராமச்சந்திரன் மிகவும் வருந்தினார். அப்போதுதான் எதேச்சையாகப் பார்த்தார். லக்ஷ்மியின் முகத்தில் ஏதோ இனம்புரியாத வாட்டம் தெரிந்தது. இரவு குருமூர்த்தியிடம் லக்ஷ்மியை சம்பந்தி வீட்டிற்கு அழைத்துப் போய் வருமாறு கூறினார்.

“‘போனதும் வந்ததுமாக வர வேண்டாம். அவள் விருப்பப்படி இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டு வரட்டும். அவளும் அடுத்த வாரம் லீவு முடிந்து வேலைக்குச் சேர வேண்டும். அதற்குப் பிறகு அவளுக்கு நேரம் கிடைப்பதே துர்லபம்.”
லக்ஷ்மி இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிவந்தாள். அவள் முகம் வாட்டமற்றிருந்தது.

அந்த இரண்டு நாட்களுக்குள் ராமச்சந்திரன் சமையல் உட்பட வீட்டு வேலைகள் முழுவதையும் செய்ய ஓர் அம்மாவை அமர்த்தியிருந்தார். ஊர்க்காரர்களிடம் எப்போதோ சொல்லியிருந்தார். அது வாகாக அப்போது கைகூடிற்று.

சமையல் அம்மாவுக்கு வயது ஐம்பதுக்கு மேல். கணவர் இல்லை. ஒரேபிள்ளை. புதுடெல்லியில் வேலை. அவனுக்கு ஓர் ஆண் குழந்தை. டெல்லி குளிர் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் குழந்தைக்கு மூன்று வயதானதும் கிராமத்திற்கே திரும்பிவிட்டாள். எது எப்படியோ வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் தோதாக நல்ல நபர் கிடைத்ததில் ராமச்சந்திரன் மனநிறைவோடு இருந்தார்.

“மதுரத்திற்கும் முடியவில்லை. லக்ஷ்மியும் வேலைக்குப் போக வேண்டும். கடவுளாகப் பார்த்து ஆள் அனுப்பியிருப்பதாக’ வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தார். லக்ஷ்மிக்கு புகுந்த வீட்டில் பிடிப்பு அவள் அறியாமலேயே வந்துவிட்டது. மாமனார், மாமியார், கணவன் என்று எல்லோரிடமும் பரிவும் பாசமும் இயல்பாகப் படர்ந்தது.

மாடிக்குச் சென்ற ராமச்சந்திரன் புதிதாகத் தொட்டியில் வைத்த துளசிக் கன்றை உற்றுநோக்கினார்.

புலம் பெயர்ந்ததால் இருந்த வாட்டம் நீங்கி துளசித் செடி நிமிர்ந்து நின்றது கம்பீரமாக. முளைத்த மண்ணில் உள்ள ஊட்டச்சத்தோடு புதுமண்ணில் உள்ள சத்தையும் கிரகித்துக் கொண்டு துளசி ஆரோக்கியமாக வளர்வதை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

“”புதிய இடத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு வாழ்வதில் செடிகளுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை…” என்று சொல்லிக் கொண்டே ராமச்சந்திரன் பூவாளியில் நீரை நிரப்பி துளசிச் செடிக்கு ஊற்றினார்.

இனந்தெரியாத சந்தோஷம் மனசு முழுவதும் நிறைந்திருப்பதைப் போல உணர்ந்தார்.
குளிர்ந்த நீர்த் துளிகள் துளசி இலைகளின் மீது பட்டுத் தெறித்தன. இலைகள் காற்றில் மெல்ல ஆடின.

- நா. கிருஷ்ணமூர்த்தி

வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 5:00 am

தலைமுறை இடைவெளி!
-+----------

”அப்பனே! முருகா.. இன்னிக்கு டென்த் ரிசல்ட் வருதாம். என் பையன் மகேஷ் பஸாகணும். 90 பெர்சன்ட் மார்க் எடுக்கணும்.. வேண்டிக்கிட்டது மாதிரி ரிசல்ட் வந்துட்டதுன்னா சாயந்திரம் உன் கோயிலுக்கு வந்து தேங்காய் உடைச்சு அர்ச்சனை பண்றேன்..”

–பூஜை அறையில் என் மனைவி கற்பகம் முருகனோடு பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

செய்தித்தாளில் கண்களை மேயவிட்டபடியே கற்பகத்தின் நடவடிக்கைகளை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டிருந்தேன்.
பொதுவா எங்க வீட்ல தினசரி பூஜை எல்லாம் நான்தான் செய்வது வழக்கம். “”ஏங்க.. எனக்கு வேலை நிறைய இருக்கு. நீங்க ஆபிஸ் போறதுக்குள்ளே பூஜையை முடிச்சுட்டு போய்டுங்க. நான் விளக்கேத்தினா அவ்வளவு ராசி இல்லீங்க..” என்பாள் கற்பகம்.

இன்று என்னடான்னா பையனுக்கு ரிஸல்ட் வரதுன்னதும் பூஜை அறையில் தஞ்சம் புகுந்துட்டா. அதனால மணி 8 ஆகியும் இன்னும் எனக்கு காபி வரவில்லை.

அவள் இப்போது சமையலறையில் நுழைந்தாள். அங்கிருந்து காபி டபராவுடன் நேரே மகேஷ் அறைக்குள் புகுந்தாள்
“”ஏய்! மகேஷ்.. எந்திரிடா.. இன்னிக்கு பரீட்சை ரிசல்ட் வர்றது உனக்கு ஞாபகம் இல்லியா? இந்த காபியைக் குடிச்சுட்டு சீக்கிரம் குளிச்சிட்டு நெட் சென்டருக்குப் போய் ரிசல்ட்ட பாரு..”

“”அட.. போம்மா.. அப்புறம் பாத்துக்கலாம்..” பையன் சிணுங்கினான்.

என் மனைவி நேரே என்னை நோக்கி வந்தாள். “”என்னங்க இந்தப் பையனை பாத்தீங்களா! ரிசல்ட் வருதுன்னு நான் தவிச்சுக்கிட்டுருக்கேன்.. இவன் இன்னும் எந்திரிக்க மாட்டேங்கிறான்..”

“”நீ எதுக்கு இப்படி ஆர்ப்பரிக்கறே. பரீட்சை எழுதுனவனே பதற்றம் இல்லாம் கிடக்கிறான். நீ ஏன் இப்படி தவிக்கறே? சரி.. சரி.. நீ முதல்ல எனக்கு காபியைக் கொடு..”– எரிச்சலோடு அவள் கையில் இருந்த காபியை பிடுங்கி குடிக்க ஆரம்பித்தேன்.

“”அதானே பார்த்தேன். உங்களோட பிள்ளை உங்கள மாதிரிதானே இருப்பான். எதிலுமே சுறுசுறுப்பில்லாம..
எனக்கு விருட்டென கோபம் பொங்கியது. நேரே ரூமுக்குப் போய் மகேஷின் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டினேன்.
“”ஏண்டா! உனக்கு இன்னிக்குக் கூட தூக்கம் குறையக்கூடாதா? போய் ரிசல்ட் பாத்துட்டு வாடா. உங்கம்மாவோட நச்சரிப்பைத் தாங்க முடியல..”

மகேஷ் போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தான். இடுப்பிலிருந்து சற்றே இறங்கிப் போயிருந்த பெர்முடாûஸ மேலே ஏற்றியவாறே எழுந்து வந்தான்.

“”அப்பா! என் ஃபிரண்ட் தினேஷ் இருக்கான்ல..அவங்க வீட்ல நெட் கனெக்ஷன் இருக்கு..அதுலே ரிசல்ட் பார்த்துட்டு ஃபோன் பண்ணி எனக்குச் சொல்லிடுவான்”.

“”அப்ப.. உனக்கே போய் பார்க்கணும்னு ஆர்வம் இல்லியா?”
அதற்கு பதில் சொல்லாத மகேஷ் டி.வி. எதிரே உட்கார்ந்தான். ரிமோட்டை அழுத்தினான். கிரிக்கெட்டில் பார்வையைப் படரவிட்டான்.

என் மனைவி மேலும் கடுப்பாகிவிட்டாள்.

“”பார்த்தீங்களா.. டிவி பார்க்க ஆரம்பிச்சுட்டான்..”

நான் எதுவும் சொல்லாமல் டூத் பிரஷை கையில் எடுத்துக்கொண்டு அதில் பற்பசையை பரவவிட்டபடியே பாத் ரூமுக்குள் நுழைந்தேன்.

****************

நினைவுகள் 1970-க்கு பின்னோக்கிச் சென்றன.

எஸ்எஸ்எல்சி பரீட்சை எழுதிவிட்டு லீவுக்கு அமைந்தகரையில் உள்ள மாமா வீட்டுக்கு சென்றிருந்தேன்.
அங்கே லட்சுமி திரையரங்கில் திரைப்படம், அருகில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பெருமாள் கோயில்களில் சாமி தரிசனம், மாலையில் ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்காவில் மாமாவுடன் “ஷட்டில் காக்’ என்று ஜாலியாக பொழுதுபோயிற்று.

ஒரு நாள் மாமா என் பரீட்சை நம்பரைக் கேட்டார். மனப்பாடமாகிவிட்டிருந்த நம்பரை உடனே எழுதிக்கொடுத்தேன்.
“”என் ஃபிரெண்ட் ஒருத்தர் கல்வித்துறையில் வேலை செய்றார். பரீட்சை ரிசல்ட்டை முன்கூட்டியே சொல்லிவிடுவார்,” என்றார்.

“”அப்படியா மாமா?” என்றேனே தவிர பரீட்சை ரிசல்ட்டை முன்கூட்டியே தெரிந்துகொள்ள எனக்கு ஒன்றும் ஆர்வம் இல்லை.

அன்று மாலை.. மாமா வீட்டுக்குத் திரும்பியபோது அவர் முகம் சற்று வாட்டத்துடன் இருந்தது. எனக்கும் மாமாவுக்கும் சேர்த்து காபி கொண்டு வந்தாள் மாமி. மாமா காபியை ஒரு மிடறு குடித்தபடியே, “”சேகர்.. உன் ரிசல்ட் தெரிஞ்சுடுச்சு..,” என்றார் சுவாரஸ்யமே இல்லாமல்.

“”சொல்லுங்க மாமா..”

“”இல்லடா.. எப்படி சொல்றதுன்னு தெரியலை! கணக்கு, இங்கிலீஷ்ல நீ ஃபெயில்னு சொல்றார் நண்பர்..”

“”அப்படியா மாமா..?” என்றேன் ஏமாற்றத்துடன்.

ஆனாலும் எனக்கு பெரிய அதிர்ச்சி எதுவும் இல்லை. ஏனென்றால் கணக்கு, இங்கிலீஷில் நான் “வீக்’ தான்.
மாமா என்னுடைய ரியாக்ஷனுக்காக முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

என்னைவிட அவர்தான் அதிகம் கவலைப்பட்டது போல் தெரிந்தது.

“”மாமா ஒரு ரிக்வெஸ்ட். என்னோட ரிசல்ட்ட அப்பா, அம்மா கிட்டே சொல்லிடாதீங்க..பேப்பர்ல வர்றபோது தெரிஞ்சுக்கட்டுமே..முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு அவங்க மனசு ஏன் கஷ்டப்படணும்?” என்றேன்.மாமா என்னைத் தீர்க்கமாக பார்த்தார்.
பின்னர் எழுந்துவந்து என் தோள்களில் தட்டிக்கொடுத்தபடியே “”வாடா, ஷட்டில் காக் ஆடப் போகலாம்,” என்றார்.
மறுநாள் புரசைவாக்கத்தில் உள்ள எங்க வீட்டுக்குப் போனேன். அப்பா ஆபீஸில் இருந்து அப்போதுதான் வந்திருந்தார். சட்டையைக் கழற்றியவாறே, “”ஏன்டா.. அமைந்தகரையில்தான இத்தனை நாள் இருந்தே. பக்கத்துல இருக்குற பச்சையப்பாஸ் காலேஜுக்குப் போய் பியுசி.க்கு எப்ப ஃபார்ம் கொடுக்கறாங்கன்னு கேட்டியா?” என்றார்.

“”இல்லேப்பா..” என்றேன். “”போ.. போ.. நாளைக்கே போயி காலேஜிலே விசாரிச்சுட்டு வா. செலவுக்கு அம்மாகிட்டே ரெண்டு ரூபா வாங்கிக்க..,” என்றார்.

“”சரிப்பா..” என்றேன்.

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.

அப்பாவுக்குத்தான் என்மீது எவ்வளவு நம்பிக்கை. ஆனால் ரிசல்ட் பணால்னு போயிடுச்சுன்னு மாமாவோட நண்பர் சொல்லிட்டாரே..

மனதுக்குள் ஓ..வென அழுதேன்.

உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் தவித்தேன்.

பஜ்ஜி செய்துகொண்டிருந்த அம்மா கையில் இரண்டு தட்டுகளுடன் வெளியே வந்தாள். “”ஏங்க.. காலேஜில் சேர்வதற்கான அப்ளிகேஷன் பற்றி விசாரிச்சுட்டு வான்னு சொல்றீங்க சரி..ஆனா அவன் இன்னும் அரை டவுசர்தானே போட்டுக்கிட்டிருக்கான்..காலேஜ் போகும்போது அரை டவுசரையா மாட்டிக்கிட்டு போவான். ஃபுல் பேன்ட் தைக்க வேணாமா…?”

“”ஆண்டாள்.. நீ சொல்றது சரிதான். வர்ற சனிக்கிழமை பின்னி ஷோ ரூமுக்குப் போய் அவனுக்கு ஒரு வருஷத்துக்குத் தேவையான பேண்ட், சட்டைத் துணிகளை எடுத்துருவோம்,” என்றார் அப்பா.

வயசுக்கு வராத பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுட்ட கதையா போய்க்கொண்டிருந்தது.

அன்று மதியம் 2 மணிக்கு பக்கெட் போன்ற அலுமினிய தூக்குப் பாத்திரத்தை அம்மா கொண்டு வந்தார். அதுல 5 கிலோ கோதுமை. தாணா தெரு கடைசியில் உள்ள செப்புத்துறைக்குச் சென்று மாவு அரைச்சுக்கிட்டு வரச் சொன்னாள்.
மாவு அரைத்துக்கொண்டு திரும்பியபோது மாலைப் பத்திரிகையில் ரிசல்ட் வெளியாகியிருந்தது. நிறையப் பேர் நியூஸ் ஸ்டால்களில் பேப்பரை வாங்கி அங்கேயே ரிசல்ட் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பரீட்சை எழுதிய மாணவ, மாணவியர் மட்டுமின்றி எல்லோருக்குமே பேப்பர்ல ரிசல்ட் பாக்குறதுலே ஆர்வம்..ஒரு த்ரில்…ஆனா எனக்குமட்டும் “நில்’ (ஒன்றுமில்லை)

வழியில் எங்கும் நிற்காமல் நேரே வீட்டுக்கு வந்தேன். எங்க வீடு மாடியில் இருந்தது. பால்கனியில் பேப்பருடன் அப்பா நின்றுகொண்டிருந்தார். ரிசல்ட் பார்க்கும் ஆர்வத்தில் அரை நாள் லீவு போட்டுட்டு வந்துட்டார் போலிருக்கிறது. அருகில் அம்மா. பக்கத்துவீட்டு பையன் பேப்பரைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

என்னோட நம்பரை வலைபோட்டு தேடறாங்க போல.

“”ம்..ஹூம்!”

–பெருமூச்சுடன் படிகளைக் கடந்து மாடிக்கு வந்தேன். அப்பா என்னைப் பார்த்து முகம் மலர்ந்தார்.

“”டேய் ரிசல்ட் பாத்தியா”?

“”இல்லப்பா.. மாவு அரைக்கப் போயிருந்தேன்ல..”

“”நீ பாஸாயிட்டேடா..”

“”அப்படியா?”

–ஆச்சர்யத்தில் வாய் பிளந்தேன்.

அம்மா முகத்தில் முழு மலர்ச்சி. அழகாகத் தெரிந்தாள்.

ஆனால் எனக்கு சந்தேகம் தான்.

நானே என் நம்பரை பேப்பரில் தேடினேன். வந்திருந்தது.. “”நான் பாஸாயிட்டே..ன்”– என்று வாய் திறந்து கூவினேன்.
அதே வேகத்தில் மாமாவின் நண்பர் ரிசல்ட் பாத்துச் சொன்ன கதையைத் தெரிவித்தேன்.

அப்பாவுக்கு திடீரென மாமா மீது கோபம் வந்தது. அடுத்த கணம் என்னைக் கட்டி அணைத்து “”பெத்தவங்க மனசு வருத்தப்படக்கூடாதுன்னு நீ நெனச்ச பாரு..அதுவே போதும்..நீ நல்லா இருப்பே.. நல்லா வருவே..”–என்றார்.

நான் ரொம்பவும் நெகிழ்ந்து போயிட்டேன்.

அம்மா கண்களில் கண்ணீர். அதில் பாசம், பரிவு, ஆனந்தம் அனைத்தும் ஒருங்கிணைந்திருந்ததை உணர்ந்தேன்.

*******************

“”ஏங்க.. இன்னமுமா குளிச்சிட்டிருக்கீங்க?”
–கற்பகத்தின் அதிரடி குரல் கேட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தேன்.

தலைத் துவட்ட ஆரம்பித்தபோது ஒரு ஃபோன். புரசைவாக்கத்தில் இருந்து பெரிய தம்பியிடமிருந்து.

“”என்ன முகேஷ் பாஸாயிட்டானா?”

“”இன்னும் ரிசல்ட் பார்க்கலப்பா.. அப்புறமா நானே பண்றேன்.”

முகத்தை துடைப்பதற்குள் மற்றொரு “ரிங்’.

ஷெனாய் நகரில் இருந்து சின்ன தம்பியின் குரல்.

“”இனிமேல்தான் பாக்கணும்…பாத்துட்டு சொல்றேன்”.

ஜட்டி மாட்டுவதற்குள் மறுபடியும் ஒரு “கால்’.

“”பெரியப்பா..அண்ணா பாஸாயிட்டானா? எவ்வளவு பெர்சன்டேஜ்?”

“”இன்னும் பாக்கலம்மா..”

“”சரி நம்பர் கொடுங்க.நான் பாத்துட்டுச் சொல்றேன்”.
நான் மகேஷை நோக்கி குரல் கொடுத்தேன்.

“”ஏண்டா.. உன் சித்தி பெண் ப்ரீத்தி நம்பர் கேட்கறா..அவ கிட்ட பேசு..” என்றேன்.
அதற்குள் கற்பகம் அங்கு வந்தாள்.

“”பாத்தீங்களா புள்ள லட்சணத்தை..ஊர்ல இருக்கறவங்க எல்லாம் ரிசல்ட் என்ன.. ரிசல்ட் என்னன்னு கேட்கிறாங்க..ஆனால் இவனுக்கு துளி கூட அக்கறையே இல்ல பாருங்க,” என்று திட்டிக்கொண்டிருந்தாள்.
எனக்கும் ஆத்திரமாக வந்தது.
“”ஏண்டா.. நீ பரீட்சைதான் எழுதினாயா.. இல்லையா?” என்றேன்.
அதற்கு அவன் சிரித்தான்.
“”என்னப்பா! நீங்களும் அம்மாவோட சேந்துக்கிட்டீங்களா? கிரிக்கெட் மேட்ச்சில் இருக்கற த்ரில் பரீட்சை ரிசல்ட்டில் இல்லப்பா. நான் நல்லா எழுதியிருக்கேன்..எப்படியும் பாஸாயிடுவேன். அதனாலே ரிசல்ட் பாக்கறதுலே என்ன திரில் இருக்கப்போவுது? என்ன ஒண்ணு..மார்க் எத்தனை பெர்சன்ட்னு பார்க்கணும்..அதுமட்டும்தான் தெரிஞ்சுக்கணும்..”
தெளிவாகப் பேசினான் மகேஷ்.
அவனருகே சென்றேன். வாரப்படாத அவன் தலைமுடியைச் சிலுப்பிவிட்டவாறே “”நீ சொல்றதும் சரிதான்..”– என்றேன் சிரித்தவாறே.

என் மனைவிக்குத்தான் ஒண்ணும் புரியவில்லை.

என் பையனோட ரிசல்ட் பற்றிய பயத்தில் இருந்து அவள் இன்னும் விடுபடவில்லை.

தலைமுறைகள் மாறினாலும் முடிவுகள் மாறுவதில்லை. உண்மைதானே..

–இயற்கைப்ரியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 5:01 am

புளிய மரத்து மனிதன்
------------------
கதைசிறுகதைபுளியமரத்து மனிதன்‘கதை சொல்கிறோம்

ஊரை உலுக்கியெடுத்த புயல் ஓய்ந்து ஒரு மணிநேரமே ஆகியிருந்தது. வாட்டியெடுத்த கவலையுடன் மகள் வீட்டிலிருந்து தன் குடிசை நோக்கி விரைந்து வந்த ரங்கசாமி, அந்த தெருமுனையில் நுழைந்தபோதே தான் கண்ட காட்சியை நம்பமுடியாமல் அதிர்ந்தார்.

வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தது புளியமரம். பச்சை மலையை பெயர்த்தெடுத்து வந்து குறுக்கே போட்டாற்போல அது தெருவை அடைத்துக் கிடந்தது.

அடிவயிற்றிலிருந்து அடக்க முடியாத துக்கம் கிளம்பி தொண்டையை அடைத்ததில், கண்ணீர் பொங்க அந்த புளியமரத்தை புருவம் சுருக்கி கூர்ந்து பார்த்தபடி ஒரு கணம் திடுக்கிட்டு நின்றார். தன் குடிசையின் நிலவரம் என்னவாகியிருக்கும் என்ற கவலையை விட புளியமரம் விழுந்து கிடப்பதுதான் பெருங்கவலையை எழுப்பியது.

பொலபொலவென வழிந்த கண்ணீர் கன்னங்களில் இறங்கி நரைத்த தாடியை நனைத்தது. வெற்றுடம்பின் தோளில் கிடந்த துண்டால் கண்களை துடைத்துக் கொண்டே நடந்தார்.

எழுபத்தைந்து வயதில் எத்தனையோ புயல் வெள்ளங்களைப் பார்த்திருந்த போதிலும், எந்தப் புயலும் ஏற்படுத்தியிராத சோகத்தை இந்தப் புயல், அந்தப் புளிய மரத்தை வீழ்த்தியதன் மூலம் இயற்கையின் பலத்தையும், இதயத்தில் இடிதாக்கிய வலியையும் உணர்த்தியதில் உடைந்து போனார்.

எப்படியும் ஐம்பது ஆண்டுகளைத் தாங்கி நின்ற அம்மரத்தையொட்டியே வாழ்நாளின் பெரும்பகுதி ஓடிவிட்ட நிலையில், தன் மரணமும் ஒரு நாள் அம்மர நிழலில் வெகு சாதாரணமாய் நிகழக்கூடும் என்று அடிக்கடி ரங்கசாமி நினைத்துப் பார்ப்பதுண்டு.

உதிர்ந்து விழும் இலைகள், பூக்கள், பிஞ்சுகள், பழங்கள் என ஆண்டுதோறும் பருவங்கள் மாறிமாறி ஓடுமே தவிர, ரங்கசாமியின் ஓய்ந்த பொழுதுகள் மாறாமல் புளியமரத்தடியில்தான் மையம் கொண்டிருந்தன.

உச்சியைப் பிளக்கும் வெயில் அடித்தாலும் சூரியனின் ஒரு கதிர்கூட ஒற்றை நாணயமென தரையில் விழாத வண்ணம், அடர்ந்திருக்கும் புளிய மரத்து நிழலில் கயிற்றுக் கட்டிலில் மல்லாந்துக் கிடக்கும் வேளைகளில், வாழ்க்கைப் பாதையில் தான் ஓடிவந்த நாட்களை அசை போடுவதுதான் அவரது ஆசுவாசம்!

சமீபகாலமாய் தன் அந்திமப் பொழுதுகள் பற்றியே அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டிலில் கிடந்த போது, மார்பின் மீது விழுந்த புளியம் பிஞ்சுகளை வாய்க்குள் போட்டு குதப்பிக் கொண்டு தன் மரணம் பற்றி நினைக்கையில், தான் படுத்திருக்கும் இதே இடத்தில் உயிரற்ற தன் உடல் கிடத்தப்பட்டிருப்பதையும், புளியமரத்தைச் சுற்றிலும் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் உற்றார் உறவினர்கள் அமர்ந்திருப்பதையும் மனச்சித்திரமாய் பார்த்தபோது கூட தன் மீது வைக்கப்பட்டிருந்த மாலைகள், மலர்களிடையே பெருமளவில் உதிர்ந்து விழுந்த பழுத்த இலைகள் மூலம் அந்த புளியமரமும் தனக்கு அஞ்சலி செலுத்தியதான அக்காட்சியே அவருக்கு பெரும் நிறைவைத் தந்திருந்தது.

தன் மனக்காட்சி, காற்று கலைத்துப் போன கோலமாகியதை விழுந்துக் கிடந்த அந்தப் புளியமரம் அமைதியாய் அறிவித்துக் கொண்டிருக்க, சோகம் சுமந்த முகத்துடன் அங்கு வந்து நின்றார் ரங்கசாமி.

தன் குடிசையை சுவாதீனமாய் ஒரு பார்வை பார்த்தார். புயல், குடிசையின் சில கீற்றுக்களை மட்டுமே நகர்த்தி இழுத்துப் பார்த்ததைத் தவிர தன் குடிசைக்கு வேறெந்த சேதாரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு மீண்டும் புளியமரத்தில் தன் சோகப் பார்வையை பதித்தார்.

மரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆளாளுக்கு ஆச்சரியங்களை அள்ளி இரைத்தபடி இருந்தனர்.

“”என்னய்யா இது? இந்தப் புளியமரம் இப்படி விழும்ன்னு நான் கொஞ்சம்கூட நெனச்சுப் பார்க்கலே!”

“”யார்தான்யா நெனச்சாங்க? ரெண்டாளு சேர்ந்து அணைச்சாலும் அணைக்க முடியாத கனம் இருக்கின்ற இந்த மரம், இப்படி திடுதிப்புன்னு விழும்னு யாருமே நெனக்கலே!”

“”அட, அதெல்லாம் இருக்கட்டும்யா! மரம் எப்படி விழுந்துக் கெடக்குதுன்னு பார்த்தீங்களா? ரோட்டுப் பக்கம் தவிர மத்த மூணு பக்கத்துல எந்தப் பக்கம் விழுந்திருந்தாலும், நாலைஞ்சு வீடுங்க தரை மட்டமாயிருக்கும்!”

“”அதோட போயிருக்குமா? புயலுக்கு பயந்து வீட்டுக்குள்ளே அடைஞ்சுக் கெடந்த மக்க உசிரையுமில்லே காவு வாங்கியிருக்கும்.. நல்லவேளை யார் செஞ்ச புண்ணியமோ அப்படி ஒண்ணும் ஆகலே!”

“”இதுல இன்னொரு ஆச்சரியம் பார்த்தீங்களா? அடிச்ச புயலுக்கு நம்ம பகுதியில மரம் மட்டைங்க எல்லாம் மேற்கால சாய்ஞ்சுக் கெடக்குதுங்க. இந்தப் புளியமரம் என்னன்னா, கெழக்காலல்லே விழுந்திருக்கு!”

“”அட, ஆமாய்யா…!”

அப்போதுதான் ரங்கசாமியும் அந்த உண்மையை யோசித்தார். வீசிய புயலுக்கு விழுந்த மரங்கள் மேற்கு நோக்கி சாய்ந்திருக்க, புளிய மரம் மட்டும் விதிவிலக்காக கிழக்கு நோக்கி ஏன் விழவேண்டும்? தன் குடிசையை காப்பாற்றத்தானோ? பூவும் பிஞ்சுமாக விழுந்துக் கிடந்த புளிய மரத்தையே வெறித்துக் கொண்டிருந்தார்.

போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாதபடி தெருவை சீர் செய்யும் பொறுப்புடன் புளிய மரக் கிளைகளை அரிவாளால் கழித்துக் கொண்டிருந்தான் முருகானந்தம். அவனுடன் மேலும் சிலரும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த முருகான்ந்தம் இதே புளியமரத்தில் தொட்டில் கட்டிப் போட்டு தாலாட்டில் தூங்கிய கைக்குழந்தையாக இருந்த அந்தக் காலங்களையும் பார்த்தவர்தான் ரங்கசாமி. அப்போதல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த ஆற்றங்கரை தெருவிலிருக்கும் குடிசைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ரங்கசாமியின் குடிசைக்கு அருகே நிழல் பரப்பிக் கொண்டு நின்றிருந்த அந்த ஒற்றைப் புளிய மரம்.

மத்தியான வெயிலுக்கு அதன் நிழலில் தஞ்சமடைய குடிசாவாசிகள் வந்து அமரும் போதெல்லாம் ரங்கசாமி வீடு களை கட்டியிருக்கும். ஊர்க்கதை, உறவுக் கதை என்று சலசலப்பும் கலகலப்புமாக இருக்கும் அந்த இடம். இரவு நேரங்களிலோ புளிய மர சிலு சிலு காற்றுக்கு வரிசைக் கட்டிக் கொண்டு பாய், தலையணையுடன் படுக்கைக்கு தயாராகிவிடுவர் சிலர்.

இருட்டிய பின் புளிய மரத்தில் அடையும் பறவையினங்கள் கூட அடங்கிவிடும். பாய் விரித்துப் படுக்க வந்தவர்கள் வாய் மட்டும் ஓயாமல் நள்ளிரவு தாண்டியும் சலசலத்தபடி இருக்கும்.

அப்படியொருநாள் உறவுக்கார வீட்டுக்கு விருந்தினனாக பாய் விரித்துப் படுக்க வந்தவன்தான் யூசுப்! புளியமரத்துப் படுக்கைவாசிகளின் சுதந்திரம் பறிக்க வந்தவன் என்பது யாருக்குத்தான் அப்போது தெரியும்?

அந்தத் தெருவில் குடியேற ரங்கசாமியிடம் அவன் கெஞ்சிக் கூத்தாடியதில், தன் குடிசைக்கு அருகே அவனும் ஒரு குடிசைப் போட்டுக் கொள்ள அனுமதி தந்தார். அப்போதே விழத் தொடங்கிவிட்டது புளிய மரத்தடி மகிழ்ச்சிகளுக்கான முதல் அடி!

விசாலமான மரத்தடி மெல்ல மெல்ல யூசுப்பின் ஆக்கிரமிப்புக்கு ஆளானதில், மரத்தடி கூட்டம் குறையத் தொடங்கியது. ஒவ்வொரு முறை குடிசைக்கு கீற்று மாற்றும் போதெல்லாம், யூசுப்பின் குடிசை நீளம், அகலமென வளரத் தொடங்கியதில் அவன் வீட்டோரம் ஓடிய புளியமர வேர்கள் வெட்டப்பட்டன.

அந்த இடம் பறிபோவதை விடவும், புளியமரத்து கிளை வேர்கள் வெட்டப்படுவதற்காகவே யூசுப்பிடம் வரிந்துக் கட்டுவார் ரங்கசாமி. ஒருசமயம், வேரை வெட்டியதற்காக யூசுப்புக்கும் கிழவருக்கும் சண்டை முற்றியதில் தெருவே கூடிவிட்டது. வயதானாலும், ரங்கசாமியின் முறுக்கேறிய கைகளும் தோள்களும் இன்னமும் பலம் மிகுந்ததாகவே இருப்பதை அந்தத் தெருவே உணர்ந்த நாள் அன்று. யூசுப்பைப் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டார். யூசுப்புக்கு எதிராக தெரு சனமும் கிளர்ந்தெழுந்ததில், அன்றோடு அடங்கத் தொடங்கியது யூசுப்பின் கொட்டம். ஆனாலும் புளியமரத்தடியின் பழைய நாட்கள் திரும்பிய பாடில்லை. தெருவே மாறிப் போனது கால ஓட்டத்தில்.

தன் மூன்று மகள்களுக்கும் இரண்டு மகன்களுக்கும் திருமண விருந்து பரிமாறியதும், தன் மனைவி தங்க பாப்புவை சவக்கோலத்தில் கிடத்தியதுமான அந்தப் புளிய மரத்தடிதான் ரங்கசாமிக்கு எல்லாமும் ஆகிப்போனது.
இப்போது முருகானந்தம் குழுவினர், கால்பங்கு கிளைகளை கழித்து ஓரளவுக்கு பாதை ஏற்படுத்தியிருந்தனர். பொடிசுகள் விழுந்து விழுந்து புளியம் பிஞ்சுகளை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

“”இந்தப் பெரிய கிளைய வெட்டுங்கடா! அதை இழுத்துப் போட்டீங்கன்னா, சுளுவா தெருவ சுத்தம் பண்ணிடலாம்!” என்ற அந்தக் குரல் ரங்கசாமியை பழைய நினைவுகளிலிருந்து மீட்டெடுத்தது. அது யூசுப்பின் குரல்!

ரங்கசாமியின் காது மடல்கள் சிவுசிவு என சூடேறியது.

“”எல்லாம் இவன் செஞ்ச வேலைதான்யா! கரையான் அரிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இந்த மரத்தக் கொன்னுட்டான்யா!”என கத்திக் கொண்டே, யூசுப்பை அடிக்கப் பாய்ந்தார் ரங்கசாமி. அதற்குள் சட்டென சிலர் அவரை தடுத்துப் பிடித்தனர். நாடி தளர்ந்திருந்த அந்த மனிதருக்கு அப்படியொரு ஆவேசம் வருமென யாரும் எதிர்பார்க்கவில்லை.

வெகுதூரம் வரை யூசுப்பின் மீது வசை மழை பொழிந்தவரை, “ஏன் புயலில் வீழ்ந்த ஒரு மரத்துக்காக இந்தக் கிழவர் இத்தனை அலப்பறை செய்கிறார்?’ என்ற கேள்வி முருகானந்தம் போன்ற இளசுகள் பலருக்குள்ளும் இருந்தது.

அதுவரை வெயில் படாத நிலம், ஊர் நடப்புக்களை அலசும் விவாதக் களமாக, பழமையின் இனிமையில் இளைப்பாறுதல் தலமாக இருந்த அம்மரத்து நிழலில், இதுநாள் வரை கோலோச்சிய தன் நிலை, திடுமென சூன்யமாகிப் போனதை உணர்ந்த ரங்கசாமிக்கு கண்ணீர் கட்டுக்கடங்க மறுத்து வழிந்தபடி இருந்தது.

அப்போது திடீரென வீசிய பலமான காற்றுக்கு உதிர்ந்துக் கிடந்த புளியமரத்து இலைகள் பறந்ததில், ரங்கசாமியின் முகத்திலும் வியர்த்திருந்த வெற்றுடம்பிலும் வந்து அப்பிக் கொண்டன.

அது… அந்த மனிதர் மீதான அம்மரத்துக்கான கடைசி ஸ்பரிசம்!

தோளில் கிடந்த துண்டை எடுத்து அழுத்தமாக தன் வாயைப் பொத்திக் கொண்டார் ரங்கசாமி. அதையும் மீறி வெடித்துக் கிளம்பியது அவரிடமிருந்து அந்த மரத்துக்கான அஞ்சலி அழுகை.

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 5:03 am

மோர்சாதம்!- சிறுகதை
-----------------

குழந்தைகளுக்கான கதைசிறுகதைமோர் சாதம்

எப்போது பார்த்தாலும் மோர்சாதம்தான். தொட்டுக் கொள்ளும் ஐட்டம் மட்டும்தான் தினந்தோறும் மாறும். நார்த்தங்காய் ஊறுகாய், மோர் மிளகாய், மாங்காய் தொக்கு, வற்றல், பச்சை வெங்காயம், தொகையல்.

ராதிகாவின் டிபன் பாக்ஸýக்கே வெட்கமாக இருக்கும். ஏனென்றால், அந்த பாக்ஸ் வாங்கப்பட்ட நாளிலிருந்து வேறு எந்த சாதத்தையும் கொண்டு சென்றதில்லை. ஆனால் ராதிகா இதற்கெல்லாம் வெட்கப்பட்டதில்லை, அவமானப்பட்டதில்லை.

“”என் வீட்டின் நிலைமையைப் பார்க்கும் போது என்னால் இதுமாதிரியான சாப்பாட்டைத்தான் கொண்டு வந்து சாப்பிட முடியும். நானாவது பள்ளிக்கூடம் வந்து போகிறவள். ஆனால், ஆபீசுக்குப் போகும் என் அப்பாவும் இதே மோர் சாதத்தைத்தானே கொண்டு போகிறார். மெயின் ஐட்டம் மோர்சாதமாக இருந்தாலும், தொட்டுக் கொள்ளும் ஐட்டம் வகை வகையாக இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து கவனமாகக் கொடுத்தனுப்புகிறாளே அம்மா, அவளுடைய அன்புக்குத்தான் ஈடு இணை ஏது! அம்மாவின் இந்த அன்புக்காகவும், அப்பாவின் பொறுப்புக்காகவும் இந்த மோர் சாதத்தை மனம் ஒத்து, ருசித்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். அதுதான் நியாயம்” என்று தன்னைக் கேலி செய்யும் சக மாணவிகளிடம் சொல்வாள் ராதிகா.

தோழிகளில் சிலர் வகைவகையான உணவுகளைக் கொண்டு வருவார்கள். ஒருத்தி தேங்காய் சாதம் கொண்டு வருவாள். இன்னொருத்தி வடாம், வற்றலுடன் புளியோதரை கொண்டு வருவாள். வேறொருத்தி ஃப்ரைடு ரைஸ்-ரைத்தா. இன்னொரு பெண் சப்பாத்தி-குருமா. அடுத்தவள் இட்லி-சாம்பார் என்று தினுசு தினுசாக ருசி, வண்ணங்களில் கொண்டு வந்து ஜமாய்ப்பார்கள்.

அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவள் ருக்மணி. அவள் அந்த வருடம்தான் இந்தப் பள்ளிக்கூடத்தில் வந்து சேர்ந்தவள். அதற்கு முன் நகரத்தின் செல்வச் செழிப்பு மிகுந்த பகுதியில் இருந்த ஒரு பள்ளியில் படித்தவள். அவளுடைய தந்தைக்கு வேலை இடமாற்றம் காரணமாக இந்தப் பகுதிக்குக் குடியேறியிருந்தாள் அவள்.

ருக்மணி மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது அவள் கொண்டு வரும் உணவு வகைகளிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அது எந்த வகை உணவாக இருந்தாலும், அதில் முந்திரிப் பருப்புகள் நெய் பூசிக் கொண்டு மினுமினுக்கும். அவள் டிபன் பாக்ஸைத் திறந்தாலே கும்மென்ற மணம் பக்கத்திலுள்ள எல்லோருடைய பசியையும் அதிகரிக்கச் செய்யும்.

ருக்மணி பெருமையடித்துக் கொள்வாள். “”எங்க அம்மா ரொம்ப டேஸ்ட்டா சமைப்பாங்க. அவங்க சமையலை சாப்பிடறதுக்காகவே எங்க வீட்ல எப்பவும் விருந்தாளிங்க வந்துகிட்டே இருப்பாங்க.”

அவளுடைய பேச்சையும் சரி, ருசி பார்ப்பதற்காக அவள் கொடுக்கும் உணவுப் பொருட்களையும் சரி, உணர்ச்சிவசப்படாமல் ராதிகா கேட்பாள்; ருசிப்பாள். மற்ற பெண்களெல்லாம் தன்னை வாயாரப் பாராட்டும் போது, ராதிகா மட்டும் வெறும் புன்முறுவலுடன் பழகுவது ருக்மணிக்கு கௌரவக் குறைச்சலாகவே இருந்தது.

அதை வெளிப்படையாகவே காட்டினாள் அவள். “”விசாலம், நீ என்ன கொண்டு வந்திருக்கே? ஓ… சாம்பார் சாதமா? ராகேஸ்வரி பிரியாணி கொண்டு வந்திருக்கா. மஞ்சுளா சப்பாத்தி; நளினி வெண்பொங்கல், ராதிகா..? ஓ… வழக்கமான மோர்சாதம்தானா?” என்று கேட்டு சிரித்தாள். கூட இருந்த தோழிகளும் அவளுடன் கூட்டு சேர்ந்து சிரித்தார்கள்.

“”ஏன் ராதிகா, எங்களுக்கெல்லாம் பங்கு கொடுக்க வேண்டியிருக்குமோன்னுதான் மோர்சாதமாகக் கொண்டு வர்றியா? ஒருவேளை நாங்களெல்லாம் வகைவகையா கொண்டு வர்றோமே, ஆளுக்கு ஒரு ஸ்பூன் கொடுத்தா பாதி வயிறு நிறைஞ்சிடும். எதுக்காக வீண் செலவு செய்யணும்னு நினைக்கிறியா?” என்று அவளை மேலும் சீண்டினாள்.

மலர்ந்த தன் முகத்தில் எந்த வாட்டத்தையும் காட்டவில்லை ராதிகா.

“”நாங்க ஏன் உனக்கு எங்க வீட்டு டிபனைத் தர்றோம் தெரியுமா? நாங்க சாப்பிடறதைப் பார்த்து நீ கண் வெச்சிடக்கூடாதுன்னுதான்.” ருக்மணிக்கு ராதிகாவின் அமைதி மேலும் கோபம் தந்தது.

அநேகமாக தினமும் ராதிகாவை ருக்மணியும் பிறரும் கேலி செய்வது நிற்காது. ஆனால், அதற்காக அவர்களுடன் கோபித்துக் கொண்டு அவள் தனியாகவோ, தோழிகளுடனோ சாப்பிடப் போவதில்லை. எந்த எதிர்ப்புக்கும் கலங்காத மனவலிமையைப் பெற இந்தச் சம்பவங்களை பயிற்சி முறைகளாகவே அவள் கருதினாள். “எவ்வளவு நாளைக்குத்தான் கேலி பண்ணுவார்கள், பண்ணட்டுமே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அதோடு, தோழிகள் அளிக்கும் அவரவர் வீட்டு உணவுப் பொருட்களையும் வாங்கிக் கொள்வாள்.

எத்தனையோ உத்திகளைக் கடைப்பிடித்தும் ராதிகா சிறிதும் அசராததைக் கண்டு ருக்மணிக்குப் பொறாமையாக இருந்தது. ஒரு இறுதி வாய்ப்பாக ஓர் அஸ்திரத்தைப் பிரயோகிக்கத் தீர்மானித்தாள்.

வழக்கம் போல மதிய உணவு நேரத்தில் தோழியர்கள் கூடினார்கள். ருக்மணி ஆரம்பித்து விட்டாள். “”ஏன் ராதிகா, தினமும் வெறும் மோர்சாதம் மட்டும் கொண்டு வரும் நீ, நாங்க கொடுக்கிற விதவிதமான உணவு வகைகளை ருசி பார்க்கிறாயே, இதேபோல உனக்கும் வேணும்னு ஆசை இருக்காதா? உன் அம்மாவிடம் கேட்கமாட்டாயா?”

“”இந்த அளவுக்கு வகைவகையாக செய்து சாப்பிட எங்க வீட்ல வசதி இல்லை ருக்மணி. என் அப்பா வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியில விபத்து ஏற்பட்டு அவருக்குக் கால் ஊனமாகிவிட்டது. ஆனாலும், அந்த நிறுவனத்தில் அவரை வீட்டுக்கு அனுப்பிடாம, அந்த உடல்நிலையில் அவர் செய்யக் கூடிய எளிமையான வேலையைக் கொடுத்து ஆதரித்து வர்றாங்க. வேலை எளிமையாகி விட்டதால் சம்பளமும் பெருமளவில் குறைஞ்சு போச்சு. வேலை இல்லாம வீட்லயே இருக்குறதுக்கு, சொற்ப வருமானமா இருந்தாலும் வேலைன்னு ஒண்ணு இருக்கறது பெரிய விஷயம்னு அவர் நினைக்கிறார். அதனால எல்லாத்திலயும் சிக்கனம் பார்க்க வேண்டிய கட்டாயம். ஓரளவு வசதியாக இருந்த போது என் அம்மாவும் வகைவகையாக டிபன் செய்துதான் தருவாங்க. ஆனா, அதையே இப்பவும் எதிர்பார்க்க முடியுமா? அதனால இப்போதைய சூழ்நிலைக்கு எது சரியோ, எது முடியுமோ அதை நான் ஏற்றுக் கொள்றதுதானே முறை?” என்று அமைதியாக பதில் சொன்னாள் ராதிகா.

ருக்மணி தவிர, மற்ற தோழிகள் எல்லோரும் அது சரியான வாதம்தான் என்று ஒப்புக் கொண்டார்கள். ருக்மணிக்கு மட்டும் சந்தேகம். அது எப்படி சுவையான உணவை ருசி பார்த்துவிட்டு அப்புறம், அது இல்லாமலும் இருக்க முடிகிறது? தன்னால் மோர்சாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே!

வீட்டிற்கு வந்த பிறகும் அதே சந்தேகக் கேள்வி அவள் மனதில் சுழன்று கொண்டிருந்தது. மாலையில் சுமார் ஏழு மணிக்கு அம்மாவும், அப்பாவும் வீட்டிற்கு வந்தார்கள். இருவருக்குமே உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால், அதற்கான மருத்துவ பரிசோதனைகளை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அந்த பரிசோதனை முடிவுகளை வாங்கி வருவதற்காக மருத்துவமனைக்குச் சென்று விட்டு அப்போதுதான் திரும்பினார்கள்.

அவர்களுடைய முகம் வாட்டமாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள் ருக்மணி. “”என்னம்மா, என்னப்பா?” என்று தவிப்புடன் அவர்களைப் பார்த்துக் கேட்டாள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் என்பதால் குடும்ப நிலவரங்களை அவளும் அறியும்படிதான் அவளுடைய பெற்றோர்கள் வைத்துக் கொண்டார்கள். பொதுவான குடும்ப விஷயம் எதையும் அவளிடம் மறைக்க மாட்டார்கள். அந்த வகையில் தங்களுடைய உடல்நிலை சோதனை முடிவுகளை அவளிடம் தெரிவித்தார்கள். “”ருக்மணி எங்க ரெண்டு பேருக்குமே ரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருக்கிறதாம். கொலஸ்ட்ராலும் கூடி இருக்கிறது. அதனால உணவு விஷயத்தில் கடுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார்.”

“”ஏம்ப்பா, அதுக்குதான் நிறைய மருந்தும், சிகிச்சையும் இருக்கே!” என்று வாதாடினாள் ருக்மணி.

“”இருக்கு ருக்மணி. ஆனா அவற்றின் சக்தியும் ஒரு எல்லைக்குட்பட்டதுதான். மருந்து ஓரளவுக்குதான் வேலை செய்யும். அதற்கு ஏதுவாக நாம் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டோம்னா குறைகள் நீங்கும்” என்றார் அப்பா.

“”அதனால நான் இனிமே எளிமையான சமையலைத்தான் தயாரிக்கணும். உனக்குத்தான் பாவம். ருசிருசியாக சாப்பிட்டு இனிமே புது சாப்பாட்டை ஏற்றுக்க முடியாமல் போயிடும்” என்று வருத்தப்பட்டாள் அம்மா.

“”குழந்தையை ஏன் ஏங்க வைக்கிறே?” அப்பா அம்மாவை கடிந்து கொண்டார். “”நாம பத்தியமாக சாப்பிட்டுக்கலாம். இவளுக்குத் தனியாக வேறு சமையல் செய்.”

அப்பாவின் அன்பு ருக்மணியை நெகிழ வைத்தது. “”வேண்டாம்மா, நீங்களும் வேலைக்குப் போறீங்க. இரண்டு வகையாக சமைக்கறது தினப்படி முடியாது. நானும் பத்திய சாப்பாட்டையே சாப்பிட்டுக்கறேன். இப்போதிலிருந்தே இப்படி சாப்பிட்டு பழகிட்டா ஒருவேளை உங்க வயசிலே நான் எந்த உபாதையும் இல்லாமல் இருக்க முடியுமோ என்னவோ!” என்றாள் உறுதியுடன்.

வசதியில்லாத நிலையில் ஏற்கனவே சாப்பிட்டுப் பழகிய டாம்பீகமாக உணவு வகைகளை ராதிகா இப்போது மறுக்கிறாள் என்றாள் அவளுடைய மனோதிடம்தான் எவ்வளவு உயர்ந்தது! தனக்குள் வியந்து கொண்டாள் ருக்மணி.

“அவளைத்தான் எப்படியெல்லாம் கேலி செய்து மனம் நோக வைத்தேன்! நானாகப் போய் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவள் கொண்டு வரும் மோர்சாதத்தில் கொஞ்சம் பங்கு கேட்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

- நாகா கண்ணன்

மோர்சாதம்!- சிறுகதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 5:05 am

அனுசுயா மாமி
-------------
அனுசுயா மாமிசிறுகதை

ஏன், நான் செத்து தொலைஞ்சிருக்கக் கூடாதா? இதோ பாரு வைதேகி, நம்பள கொண்டு வந்தவனுக்கு எப்ப கொண்டு போகணும்னு தெரியும். இந்த கோழை விளையாட்டெல்லாம் விட்டுடு. உன் உயிர் உனக்குச் சொந்தமானாலும், அந்த உயிரை அழிக்கிற உரிமை உனக்குக் கிடையாது.”

“”மாமி சித்த என்ன பேச விடறேளா? என்னுடைய பிரச்னை இதுமட்டுமில்ல, இப்ப நான் முழுகாம இருக்கேன்! மாமி அவருக்கு தகனம் முடிஞ்ச ரெண்டாவது நாள் நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவும் இல்லாம எங்க அம்மா ஆத்துக்கே என்னை அழைச்சிண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. நான் இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாகப் போறேன்னு புகுந்த வீட்டுக்கும் தெரியாது. பொறந்த வீட்டுக்கும் தெரியாது. இந்த நிலையில நான் இங்க இருந்துட்டு குழந்தைய பெத்துகிட்டா எல்லாரும் தப்பா இல்லையா பேசுவாங்க. இதையெல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னே நேக்கு தெரியலை. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன்”.

“”முடிவு இதில்லை வைதேகி. வாழ்ந்து காட்டுறதுல இருக்கு. முதல்ல உங்காத்து பெரியவா எல்லோருக்கும் உன்னோட நிலையச் சொல்லு. பிரச்னை வரட்டும். அப்பதான் முடிவு கிடைக்கும். என் கதையை எடுத்துக்கோ இந்த ஆத்துல இருக்கறாவாளுக்கும், இந்த அக்ரஹாரத்துல இருக்கறவாளுக்கும் அனுசுயா மாமி இல்ல நான், அனகொண்டா மாமின்னும், டென்ஷன் மாமின்னும் பேரு. அதோட மட்டுமில்ல நேக்கு இன்னொரு பட்டப் பெயரும் வெஞ்சிருக்கா. பென்ஷன் மாமின்னு. என் ஆத்துக்காரர் மூலமா வாங்கிண்டு இருக்கிற பென்ஷன் மத்தவாளையும் வாழவெச்சிண்டுருக்கு. அத பத்தியெல்லாம் மத்தவாளுக்கு புரியவெச்சுண்டு இருக்க நேக்கு இஷ்டமில்லை. நான் ஒருத்தி, என்னைப் பத்தியே பெருமையா பேசிண்டு போறேன்.

இதோபாரு… நீ இந்த லோகத்தை ஜன்னல் வழியா பார்த்துண்டு இருக்க. எல்லா வழியும் தெரியுங்கறது சாத்தியமில்லை. வெளியே நின்னு பாக்கனும், அடுத்தவாளோடு சேர்ந்து பழகி பார்க்கணும். உன்னோட கேள்விக்கும், உன்னோட பிரச்னைக்கும் நிறைய பதில் கிடைக்கும்.

தூக்கத்துல எழுந்து நடக்கற வியாதி நோக்கும் இருக்குன்னு நெனச்சு, இன்னைக்கு நடந்தத மறந்துடு. போய் நிம்மதியா தூங்கு.

பொழுது விடிஞ்சி எப்படி வாழணும்னு நெனச்சிக்கோ. போயிட்டு வாடியம்மா. உங்காத்துல யாராவது எழுந்திருச்சி உன்னை காணலேன்னு தேட ஆரம்பிச்சுடப் போறா” என்று படபடத்த அனுசுயா மாமி, வைதேகியை அனுப்பி வைத்தாள்.
மாமி நேரத்தைப் பார்த்தாள். கடிகாரம் இரண்டு மணி பதினைந்து நிமிஷத்தை சரியாகக் காட்டிக் கொண்டிருந்தது.
மாமிக்குத் தூக்கம் தொலைந்து போனது தெரிந்தும் ஒப்புக்குப் படுத்திருந்தாள். திடீரென ஒரு சத்தம். மாமி எழுந்து வெளியே வந்தாள். கோபாலகிருஷ்ணனின் மனைவி மைதிலி. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள்.
மைதிலிக்கு ஏற்கெனவே மூன்று மகள்கள் உள்ளனர். இது நான்காவது பிரசவ வலி. இந்தச் சுற்றில் எப்படியும் அந்தக் கண்ணனே வந்து பிறக்கப் போகிறான் என்கிற எதிர்பார்ப்பு. மைதிலியை மருத்துமனைக்கே கொண்டு சென்றனர்.
பொழுது விடிந்தது. வீட்டுக்கு அருகே ஒரு டாக்ஸி வந்து நின்றது. டாக்ஸியிலிருந்து கோபாலகிருஷ்ணனும், மைதிலியும், கோபாலகிருஷ்ணனின் அம்மாவும் அழுதவாறே இறங்கி வந்தனர்.

மைதிலியின் கையில் குழந்தை. வீட்டில் குடியிருப்பவர்கள் வாசலை நோக்கி ஓடி வந்தனர்.

கோபாலகிருஷ்ணனின் அம்மா சத்தமாக அழுதாள். மைதிலியும் கையில் குழந்தையுடன் அழுது கொண்டிருந்தாள். அனுசுயா மாமி, கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்தாள்.

“”என்ன பாவம் செஞ்சோம் மாமி, குழந்தை செத்து பொறந்திடுச்சு” அனுசுயா மாமியிடம் தொடர்ந்தான்.

“”அப்படியே கொண்டு போய் புதைச்சுட்டு வர மனசில்ல. ஆத்து வரைக்கும் வந்து போகட்டுமேன்னு கொண்டு வந்துட்டோம். பொறந்தது ஆண் குழந்தை மாமி” என்று கோபாலகிருஷ்ணனும் அழத் துவங்கினான். அந்த வீடே கோபாகிருஷ்ணனின் குடும்பத்தைப் பார்த்து சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தது.

அந்த அழகான குழந்தையை வீட்டு வாசலுக்கு வெளியே ஒதுக்குப் புறமாக வைத்து, காமாட்சி விளக்கையும், ஊதுவத்தியும் கொளுத்தி தேங்காய் உடைத்து தலைமாட்டில வைத்திருந்தார்கள்.

மைதிலிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. குழந்தையிடம் அழுது கொண்டிருந்தவள், திடீரென அந்தக் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வீட்டினுள் எடுத்துச் செல்ல முற்பட்டாள்.

கோபாலகிருஷ்ணனின் அம்மா “”எங்கடீ எடுத்துப்போற,” என்று தடுக்க… “”ஆத்துக்குள்ள எடுத்துப்போறனே” என்றாள்.
“”ஆத்துக்குள்ளேயா? என்னடி ஆயிட்டுத்து நோக்கு, புத்தி மழுங்கிடுத்தா செத்துப்போனவாள எதுக்கு ஆத்துக்கு வெளியே வெச்சு கொண்டு போய் தகனம் பண்றா? எல்லாத்துக்கும் ஒரு வழிமுறை இருக்கு. அதுப்படித்தான் எல்லாமே நடக்கணும். நீ புதுசா எதையும் குழப்பித் தொலைக்காதே”.

“”மனுஷாளோட, மனுஷாளா வாழ்ந்து செத்துப் போனவாள வீட்டுக்கு வெளியே வெச்சு சடங்கு பண்ணி எடுத்துட்டுப் போவாங்க. என் பிள்ளைக்கு இந்த மனுஷாளுன்னா யாருன்னே தெரியாது. உலகத்தோட வெளிச்சத்தையே பார்த்ததில்லை. இப்படி எதையுமே தெரியாத குழந்தைய யாரோடயும் சேர்ந்து பழகி, வாழாத இந்தக் குழந்தைக்குத் தீட்டுன்னா என்னத் தெரியும்?

இங்க இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல மண்ணுக்குள்ள, போகப்போற என் குழந்தை, என் ஆத்துக்குள்ள வந்துபோனா என்ன தப்பு? என்னை யாரும் தடுக்காதீங்க….” என்று குழந்தையுடன் வீட்டுக்குக் போக முற்பட்டாள்.

கோபாலகிருஷ்ணன் தடுத்து நிறுத்தினான். அவன் அம்மா கர்ஜித்தாள். சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் “என்ன கண்றாவி இது’ என்பது போல் பார்த்துக் கொண்டனர்.

சிலர் “கலி முத்திப் போயிடுத்து’ என்று கேலியும் கேவலமுமாய் பேசிக் கொண்டிருந்தனர். சிலர் அவ சொல்றதும் நியாயமாத்தான் படுது என்று முணு முணுத்துக் கொண்டிருக்க, கோபாலகிருஷ்ணன், மைதிலியிடமிருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டு “”இது தீட்டுடீ பித்துப் பிடிச்சவளே” என பொருமினான்.

“”ஒரே ஒரு மணிநேரம் நம்ம குழந்தை ஆத்துக்குள்ள இருந்துட்டு வந்துடுத்துன்னா. அதுக்கப்புறம் கொண்டுபோய் அடக்கம் பண்ணிக்கோங்கோ” என்று கெஞ்சினாள் கதறினாள் மைதிலி.

அந்த வீட்டில் இருக்கும் சில பெண்கள் மைதிலியை சமாதானப்படுத்தினர்.

“”பிள்ளைய பெத்து முழுசா ஒரு நாள் கூட ஆகல, பச்ச உடம்போடு அலட்டிக்காத மைதிலி. சம்பிரதாயப்படி நடக்கறது நடந்துட்டுப் போகட்டும்” என்று அமைதியாய் இருக்கக் கூறினர்.

மைதிலி அழுவதைப் பார்த்து அவளுடைய மூன்று மகள்களும் அழுது கொண்டிருந்தனர்.

அனுசுயா மாமி கோபாலகிருஷ்ணனிடம், “”மைதிலி சொல்றதுல என்ன தப்பு? அவா ஆசைய நிறைவேத்தக் கூடாதா?” என்று கேட்டதுதான், கோபாலகிருஷ்ணன் கோபமானான்.

“”என்ன மாமி நீங்களும் அவளோட சேர்ந்துட்டு விளையாடறீங்க. எந்த பாரம்பர்யத்துல இது நடத்திருக்கு. பெரிய பெரியவா எல்லாம் பார்த்துட்டு வந்த ஆச்சாரத்தையும், அனுஷ்டானத்தையும் மறந்துடச் சொல்றேளா, இல்லை, மாத்திக்கச் சொல்றேளா? இது தீட்டு மாமி தீட்டு.”

“”எதுடா தீட்டு. அந்தக் குழந்தை பிறந்து சாகல, அது பெத்தவ வயத்துலயே செத்து பிறந்திருக்கு. அப்போ உன் ஆத்துக்காரியும் தீட்டுதானே….”

“”ஒரு பொணத்தை வயத்துல சுமந்துட்டு இருந்தாளே அவ உடம்பே தீட்டுதானடா. இப்படியிருக்கச்ச உன் ஆத்துக்காரிய உன் ஆத்துக்குள்ள மறுபடியும் நீ சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லு. இந்தக் குழந்தை இங்க வெளியவே இருக்கட்டும்.
உன் ஆத்துக்காரியால அடுத்தக் குழந்தை வேணுன்னு சேர்த்துக்கிட்டீன்னா, இந்தக் குழந்தையையும் உன் ஆத்துக்குள்ள எடுத்துட்டுப் போய் வெச்சு அதுக்கப்புறம் அடக்கம் பண்ணிக்கோ…” அனுசுயா மாமி ஆவேசமாய் பேசி முடித்தாள்.
சில விநாடியில் கோபாலகிருஷ்ணன் குழந்தையை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்குள்ளே சென்றான்.

ஒரே நாளில் “வயிற்றில் வளரும் குழந்தைக்கும் வயிற்றில் இறந்த குழந்தைக்கும்’ வழி சொன்ன திருப்தியில் அனுசுயா மாமி வீட்டுக்குள் நுழைந்தாள்.

- வ.பாலகிருஷ்ணன்

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 5:06 am

குற்றம் புரிந்தவன் மனம்..!
-----------------

குற்றம் புரிந்தவன் மனம்சிறுகதை

சத்யபுரி அரசன் சத்யசந்தன் வெகு நேர்மையாகவும், நெறிதவறாமலும் ஆண்டு வந்தான். அவன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவனது ஒரே மகன் விஜயன். மதியுக மந்திரியின் மகன் மணவாளன். இருவரும் ஆத்ம நண்பர்கள். ஒருவரை ஒருவர் பிரியமாட்டார்கள். இளவரசன் விஜயன் கொஞ்சம் சோம்பேறி. ஆனால், மணவாளனோ அதிபுத்திசாலி. இருவருக்கும் பத்து வயது நிரம்பியது. அவர்களை தங்கள் குருகுல மகாராஜிடம் கல்வி பயில அனுப்ப வேண்டிய தருணம் வந்ததால், அரசன் சத்யசந்தன் பொதிகை மலைச்சாரலில் உள்ள குருகுல ஆஸ்ரமத்திற்கு விஜயனையும், மணவாளனையும் அழைத்துச் சென்று இருவருக்கும் எல்லா கலைகளையும் பயிற்சியளிக்க வேண்டினான்.

ஆஸ்ரம கொள்கைப்படி அவர்களின் படிப்பு முடிய பத்து ஆண்டுகள் ஆகும். அதுவரை அவர்கள் அரண்மனைக்குச் செல்ல முடியாது. மற்ற மாணவர்களைப் போலவே நடத்தப்படுவர். எவ்விதச் சலுகையும் கிடையாது.

இருவருக்கும் வேதம், சாஸ்திரம் மற்றும் போர்க்கலை, வாள் சண்டை, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என்று எல்லா கலைகளிலும் பயிற்சி அளித்தார். எல்லாவற்றிலும் மணவாளனுக்கு நற்பெயர். எனவே, குருகுல மகாராஜ் விஜயனைக் கண்டித்து, மணவாளனை புகழ ஆரம்பித்தார். இதனால், விஜயனின் மனதில் பொறாமை தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
இப்படியாக பத்தாண்டுகள் உருண்டோடின. அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய காலம் நெருங்கியது. நன்கு பயின்ற மணவாளனை எல்லோரும் புகழ்ந்தனர். தன்னைப் பாராட்டவில்லையே என்ற ஏக்கம் விஜயன் மனதில் ஏற்பட்டது. ஆகவே, வஞ்சமாக மணவாளனை பழிவாங்க வேண்டுமென அவன் மனம் துடித்தது. இதையறியாத மணவாளன் எப்போதும் போல சகஜமாகப் பழகி வந்தான். விஜயனின் மனமாற்றத்தை அவன் உணரவில்லை.

ஒரு நாள் விஜயனும், மணவாளனும் படகு சவாரி செய்தனர். மணவாளனுக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. இதுதான் தக்க சமயம் என்று நினைத்து, விஜயன் படகை ஒரு சுழலில் சிக்க வைத்து மூழ்கும் படி செய்தான். படகு கவிழ்ந்து இருவரும் நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். விஜயன் நீந்தி கரை சேர்ந்தான். தனக்கு நேர்ந்த கதிக்காக மணவாளன் குருமகாராஜை நினைத்து, தன்னைக் காப்பாற்ற வேண்டினான். நிஷ்டையில் இருந்த குருமகாராஜ் அதிர்ச்சியடைந்து, தன் வலிமையால் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தை உணர்ந்து இருவரும் பிழைத்துக் கொள்ள அருள்புரிந்தார்.

என்ன ஆச்சர்யம்! நதியில் அடித்துச் செல்லும் மணவாளனுக்கு அருகில் ஒரு பெரிய வாழை மரம் மிதந்து வந்தது. அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு கரை ஏறினான். அவனுக்கு விஜயன் செய்த சூழ்ச்சி தெரியாது. ஆகவே, நதியில் விழுந்த இளவரசன் விஜயனுக்கு என்னவாயிற்றோ என புலம்பிக் கொண்டு ஆஸ்ரமத்தை நோக்கி விரைந்தான்.

இதற்கு முன்பே நீந்தி வெளியேறிய விஜயன், தான் அவசரத்தில் இப்படி செய்து விட்டோமே என அவன் மனசாட்சி உறுத்தியது. “”ஆண்டவனே! மணவாளனைக் காப்பாற்று. என் குற்றத்தை மன்னிக்கவும்!” என கதறிக் கொண்டே ஆஸ்ரமத்தை அடைந்தான்.

அவன் கதறி அழுவதைக் கண்ட குரு மகாராஜ், “”என்ன விஜயா… என்னவாயிற்று? ஏன் இப்படி புலம்புகிறாய்?” என்று கேட்டார்.

“”குருதேவா! நான் மகாபாவி. ஆத்திரத்தாலும், பொறாமையாலும் என் ஆத்ம நண்பனை இழந்து விட்டேன். அவன் மரணத்திற்கு நான்தான் காரணம். என்னையும் நதியில் தள்ளிக் கொன்றுவிடுங்கள். அவனின்றி நான் அரண்மனைக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்” என்று கூறி தரையில் புரண்டு அழுதான்.

“”விஜயா! உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள். மணவாளனுக்கு ஒன்றுமாகாது. அவன் விரைவில் வந்துவிடுவான். உள்ளே சென்று ஓய்வெடுத்துக் கொள்!” என்று அனுப்பி விட்டார்.

அதேசமயம், மணவாளன் கதறிக் கொண்டு குருநாதர் காலில் விழுந்தான். “”குருதேவா! நான் என் இளவரசன் விஜயனை இழந்து விட்டேன். படகில் விபத்து ஏற்பட்டு நதியில் இருவரும் மூழ்கி விட்டோம். நான் தப்பித்துக் கொண்டேன். இளவரசைக் காப்பாற்றாத துரோகி நான். எனக்கு மரணதண்டனை நிச்சயம். எப்படி அரசரைச் சந்திப்பேன்” எனக் கதறினான்.

மணவாளன் குரலைக் கேட்டதும், அரைதூக்கத்திலிருந்த விஜயன் எழுந்து வெளியே வந்து, “”மணவாளா! என் ஆருயிர் நண்பனே” என ஆரத்தழுவிக் கொண்டு, தான் அறியாமல் செய்த குற்றத்தைக் கூறி மன்னிக்க வேண்டினான்.

மணவாளனும், “”இளவரசே! தாங்கள் நல்ல மனம் படைத்தவர். விதி நம்மை சதி செய்து விட்டது. குருமகாராஜ் அருளால் பிழைத்துக் கொண்டோம். அவர்தான் நம்மைக் காப்பாற்றினார். அவருக்கு நன்றி சொல்லி வணங்குவோம்” என்றான்.

குருமகாராஜ் இருவரையும் கட்டி அணைத்து, “”இளவரசன் விஜயன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து விட்டான். குற்றம் புரிந்தவன் மனம் பட்டபாடு இருக்கிறதே, அதுதான் அவனுக்குத் தண்டனை. உங்கள் இருவரின் நட்பும் மேலானது. உங்கள் குருகுலவாசம் முடிந்தது. நாளை காலை எல்லோரும் அரண்மனைக்குச் செல்வோம். புறப்படுவதற்கு தயாராகுங்கள்” என்றார்.

மறுநாள், எல்லோரும் சத்யபுரியை அடைந்தனர். பத்தாண்டுகள் கடந்து இருபது வயது நிறைந்த போர் வீரர்களாக விஜயனும், மணவாளனும் வருவதை அறிந்த அரசன் சத்யசந்தன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

சத்யசந்தன் குருமகாராஜிடம், “”சுவாமி! தங்கள் அருளால் இருவரும் நன்கு கல்வி பயின்று வந்துள்ளனர். எனவே, ஒரு நல்ல நாளில் விஜயனுக்கு முடிசூட்டி, மணவாளனை மந்திரியாக்கி விட்டு, நாங்கள் தங்களோடு ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்ய விரும்புகிறோம். தாங்கள்தான் முடிசூட்டும் விழாவை நடத்தித் தர வேண்டும்” என கேட்டுக் கொண்டான்.
இதைக் கேட்ட விஜயன், “”தந்தையே! என்னைவிட மணவாளனே எல்லாவற்றிலும் மேன்மையானவன். ஆகவே, அவன்தான் அரச பதவிக்கு உகந்தவன். அவனுக்கு முடிசூட்டுங்கள். நான் எல்லா விதத்திலும் அவனுக்கு துணைபுரிவேன்” என்றான்.

அரசருக்கு விஜயனின் திடீர் மனமாற்றம் அதிர்ச்சியளித்தது. அதைப் புரிந்து கொண்ட குருமகாராஜ், “”சத்யசந்தா! விஜயன் சொல்வது முற்றிலும் சரியே. குருகுல வாசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள்தான் அதற்குக் காரணம். ஆகவே, உன் ராஜ்யத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து, இருவரையும் ஒவ்வொரு பகுதிக்கு அரசனாக்கி விடு” என ஆசி கூறினார். அதன்படி, இருவருக்கும் முடிசூட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட சிங்கபுரி நாடு இருவரின் ஆட்சியில் மேலும் சிறப்புற்றது.

- கலாநிகேதன் பாலு

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 7:21 pm

வேடிக்கை தந்த பாடம்
----------------

பள்ளிக் கூடத்தில் ஆறாம் வகுப்பு “பி’ பிரிவில் ஆறுமுகம், சம்பத் இருவரும் பயின்று வந்தார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவ்வப்போது பிறர் துன்புறுவதைக் கண்டு மகிழும் சம்பத்துடைய குணத்தை மட்டும் மாற்ற இயலாதவனாக இருந்தான், ஆறுமுகம்.

பரீட்சை முடிந்து பள்ளி விடுமுறை அறிவித்தார்கள். ஆறுமுகம், தன்னுடைய கிராமத்துக்கு வரும்படி சம்பத்தை, அழைத்தான்.

“”ஐயோ, பட்டிக்காட்டுக்கா கூப்பிடறே? நீ வேணுமானா இங்கேயே இருந்துக்கோ. பட்டணத்து ஜாலி வாழ்க்கை அங்கே கிடைக்குமா?” என்றான் சம்பத். கிராமம் என்றாலே இளப்பம் அவனுக்கு. பள்ளியில் படிக்கும் கிராமத்துப் பையன்களைக் கேலி செய்து அவர்கள் அழுவதைப் பார்ப்பது, அவனுக்கு வேடிக்கை.

“”ரொம்ப வேண்டாம். இரண்டு நாட்கள் அங்கே இருந்துவிட்டு வரலாம் வா. எப்போது பார்த்தாலும் டிவி, விடியோ, சினிமான்னு பொழுதுபோக்க, போரடிக்கல்லியா உனக்கு? ஒரு மாறுதலுக்கு என் கிராமப் பக்கம்தான் வாயேன்” என்று வற்புறுத்தி அழைத்தான் ஆறுமுகம்.

சம்பத்தும் தன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு வந்தான். ஹாஸ்டலில் தங்கியிருந்த ஆறுமுகம், தன் பெட்டியை எடுத்துக் கொண்டான். இருவருமாக கிராமத்திற்குப் புறப்பட்டார்கள்.

பூம்பொழில் கிராமம்தான் எவ்வளவு சுத்தமாக இருந்தது! புகை இல்லை, எரிச்சல் இல்லை, இரைச்சல் இல்லை, யந்திரத்தனம் இல்லை, எங்கு பார்த்தாலும் பசுமை. அமைதி, அழகு, அதுவரை அனுபவித்தறியாத சுகமான இயற்கைக் காற்று, கால்நடைகளும், கழனிகளும் சம்பத்துக்குப் புதுக்காட்சிகள். அந்தப் புதுமைச் சந்திப்பில் அவன் உள்ளம் குதூகலிக்கத்தான் செய்தது.

மணக்கும் தேங்காய் எண்ணெயில் செய்த பலகாரங்களை ருசித்து உண்ட அவன், ஆறுமுகத்தின் ஆலோசனைப்படி, அவனுடன் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க புறப்பட்டான்.

நீர்நிறைந்த பெரியகுளம் ஒன்று அவ்விருவர் கவனத்தையும் கவர்ந்தது.

குளக்கரையில் ஒரு வேட்டியும், ஒரு சட்டையும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த உடனேயே சம்பத்துக்கு ஒரு வேடிக்கையான எண்ணம் உதித்தது. “”ஆறுமுகம், இந்த வேட்டி சட்டையை எடுத்து ஒளித்து வைத்துவிடலாமா? குளத்தில் குளிப்பவன் வந்து பார்த்துத் திண்டாடுவான்; தவிப்பான். பார்க்க தமாஷாக இருக்கும்” என்றான் உற்சாகத்துடன்.

“”தப்பு சம்பத்” ஆறுமுகம் அவசர அவசரமாக மறுத்தான். “”அதோ அங்கே குளிக்கிறானே, அவன் ஓர் ஏழை உழவன். பாவம், இந்த வேட்டி, சட்டையைக் காணவில்லை என்றால், அவன் ரொம்பவும் தவித்துப் போவான். அரையில் கட்டிய சிறு துண்டோடு, எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தன்வீட்டிற்கு நடந்து போக ரொம்பவும் கூச்சப்படுவான். ம்… அதற்கு பதிலாக இப்படிச் செய்வோம். அவனுடைய சட்டைப் பையில் ஓர் ஐந்து ரூபாய்த் தாளைச் சொருகி வைப்போம். அதைப் பார்க்கும் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான்! நமக்கும் அதைப் பார்க்க மனநிறைவாக இருக்கும்” என்றான்.

சம்பத் உடனே, தன் எண்ணத்திற்காக ரொம்பவும் வெட்கப்பட்டான். “”ஆறுமுகம், நான் சொன்னது தப்புத்தான். உன் யோசனைப்படியே செய்யலாம்” என்றான்.

அதேபோல அந்த உழவனின் சட்டைப் பையில் ஓர் ஐந்து ரூபாய்த் தாளை இருவரும் திணித்துவிட்டு, ஓடிப்போய்ப் பக்கத்துத் கோயிலில் ஒளிந்து கொண்டார்கள்.

உழவன் குளித்துவிட்டுக் கரையேறினான். உடலைத் துண்டால் துடைத்துக்கொண்டு, சட்டை, வேட்டியை அணிந்து கொண்டான். தற்செயலாகத் தன் சட்டைப் பையைத் தொட்டுப்பார்த்த அவன், அதில் ஓர் ஐந்து ரூபாய் நோட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டான். வெளியே எடுத்து அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். “எப்படி இந்தப் பணம் என் பைக்குள் வந்தது?’ என்று யோசித்தான். ஒன்றும் புரியவில்லை.

எதிர்பாராமல் கிடைத்தப் “பரிசை’க் கண்டு அவன் ஆனந்தக் கூத்தாடவில்லை. அகமகிழவில்லை. சற்றுநேரம் யோசித்தான். பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்து கோயிலை நோக்கிச் சென்றான்.

“”கடவுளே! இந்தப் பணம் என் சட்டைப் பைக்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. கீழே கிடந்து நானாக எடுத்துப் பையில் போட்டுக் கொள்ளவுமில்லை. யாரிடமிருந்தும் திருடவுமில்லை. எனக்கு எந்த வகையிலும் உரிமையாக முடியாத பணம் இது. இதைப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. இது யாருடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்க, நான் யாரையும் போய் விசாரிக்கவும் போவதில்லை.

ஏனென்றால், யாரேனும் தன்னுடையது என்று பொய் சொல்லக்கூடும். ஆகவே, இந்தப் பணத்தை உன் உண்டியலில் போட்டு விடுகிறேன். மாதம் ஒருமுறை உண்டியலைத் திறந்து கிடைக்ககூடிய பணத்தை வைத்து அன்னதானம் செய்வார்களே, அந்தப் பணிக்கு இந்தப் பணம் ஓரளவு உதவக்கூடம்” என்று வேண்டிக்கொண்ட அவன், அந்த ஐந்து ரூபாய்த் தாளை உண்டியலில் செலுத்தி, கடவுளை வணங்கிவிட்டுச் சென்றான்.

ஆறுமுகத்திற்கும்கூட பிரமிப்பு! சம்பத் ஆச்சர்யத்தால் உறைந்தே போய்விட்டான். “”இப்படிக்கூட கொஞ்சமும் சுயநலமில்லாத மனிதப் பிறவி இருக்க முடியுமா?” என்று அவ்விருவருமே அதிசயித்தனர்.

இது மாதிரியான தன்னலம் நோக்காத வாழ்வில் எல்லா மகிழ்ச்சியும் நிறையும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 7:23 pm

பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா!
-------------
தெருமுனையிலிருந்த அந்த நாய், எனது டூ வீலரைத் தொடர்ந்து வருவதை வீட்டிற்கு வெகு அருகாமைக்கு வந்தபோதுதான் கவனித்தேன். இன்ஜினை ஆப் செய்து, வண்டியை விட்டு இறங்கி, வீட்டின் இரும்பு கேட்டைத் திறந்தேன். வாலை ஆட்டியபடி அந்த நாய் என்னை நெருங்கி வந்து சுற்றியது.

“ஸý…ஸý’ என விரட்டும் போதுதான், அப்பா வாங்கி வரச் சொன்ன பிஸ்கட் பாக்கெட்டை மறந்துவிட்டோம் என்பது நினைவிற்கு வந்தது.

தினமும் இரவு உணவு முடிந்து அந்தத் தெருவிலேயே இங்கும் அங்குமாய் காலார நடப்பதை வழக்கமாக்கிக் கொண்ட எனது தந்தை, கூடவே அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் தெரு நாய்களுக்கும் பிஸ்கட், பொறை என போடுவார். பல ஆண்டுகளாக இது நடந்து கொண்டிருப்பதால், எங்கள் வீட்டிலிருந்து யார் வெளியே வந்தாலும் அந்த ஏரியா நாய்கள் அன்புடன் வாலாட்டும். நாய் என்றில்லை… காக்கைகள், குருவிகள் என எல்லா ஜீவன்களுக்கும் உணவளிப்பதை இந்த வயதான காலத்திலும் ஒரு தவம் போல் செய்து கொண்டிருந்தார். இந்த ஜீவராசிகளுக்கு உணவளிப்பது அந்த நாராயணனுக்கே உணவளிப்பதற்கு சமம். இப்படிப்பட்ட தந்தையின் சித்தாந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவரின் நலனுக்காக அவரின் விருப்பத்தைக் கேள்வி கேளாமல் செய்துவிடுவேன்.

ஓரிருநாட்கள் அந்த நாய்களுக்கு உணவு தவறிவிட்டாலும், நாய்கள் வருத்தப்படுகிறதோ இல்லையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.

புலம்பத் துவங்கிவிடுவார். முன்பெல்லாம், மாலையில் அவரே சென்று மார்க்கெட்டில் தேவையான அளவு பிஸ்கெட், பொறை என வாங்கி வந்துவிடுவார். தற்போது கண்கள் சரியாகத் தெரியவில்லை என்பதால், வெளியே எங்கும் அதிகமாகச் செல்ல முடிவதில்லை. இது போன்ற சிறிய வேலைகளுக்கும் என்னையே நாடத் துவங்கிவிட்டார்.

வண்டியை நிறுத்தி, கேட்டைச் சாத்தினேன். அதற்குள் சப்தம் கேட்டு எனது கடைக்குட்டி கோகுல் ஓடி வந்தான். அவனும் நாய்களுக்கு பிஸ்கட் போடும் அப்பாவின் அணியில் சமீபத்தில் சேர்ந்த உறுப்பினர். பேரனிடமும் இந்தப் பழக்கத்தை நன்றாக விதைத்துவிட்டார்.

“”அப்பா… பிஸ்கட் வாங்கிட்டு வந்தீங்களா…”

நான் பதில் சொல்லத் தயங்க… இது போன்ற மறதி அவ்வப்போது நடைபெறுவதால், விஷயத்தை சரியாகப் புரிந்துக் கொண்டு உடனே தாத்தாவிடம் பற்ற வைக்க விரைந்துவிட்டான்.

தற்போது தான் வளர்ந்து வரும் காலனி என்பதால் கடைகள் ஏதும் அருகாமையில் இல்லை. மீண்டும் வண்டி எடுத்து வாங்கி வர உடல் மற்றும் மனச் சோர்வு தடுத்தது.

நான் உடைமாற்றி ஹாலுக்கு வரும் போது, அப்பா ஏற்கெனவே தனது புலம்பலைத் துவங்கிவிட்டது கேட்டது.

கோகுல் வேறு தூபம் போட்டுக் கொண்டிருந்தான்.

“”ஏன்… தாத்தா… வாக்கிங் போகல…”

ஈஸி சேரில் சாய்ந்திருந்த எனது அப்பா தலைத் தூக்கி என்னை பார்த்தவாறு… “”எப்படிப்பா போறது… வெளியே நாய்களெல்லாம் நான் பிஸ்கட் போடுவேன்னு ஏக்கத்தோட எல்லாம் பின்னாலயே வருமே…பசியோட இருக்கிற அந்த நாய்களோட கண்களை எப்படி என்னால பார்க்க முடியும்…” நிஜமாகவே அப்பா

ஃபீல் பண்ணி பேச… எனக்கு எரிச்சலாய் வந்தது. வேலை பளு, உடல் அசதி இவைகளுக்கு நடுவே நாயாவது… பிஸ்கெட்டாவது … எனது எரிச்சல் அதிகமாக… கோபத்தில் கத்தினேன்…

“”இப்ப என்ன ஆகிப் போச்சு எதுக்கு இந்த சின்ன விஷயத்தை பெரிசு பண்றீங்க… இத்தனை நாள் … நான் தானே வாங்கிட்டு வந்தேன்..”

“”எங்க.. எத்தனை தடவை சொல்ல வேண்டியிருக்கு…”

அப்பா இடைமறித்துச் சொன்ன வார்த்தைகள் எனது கோபத்தை இன்னும் கிளறியது.

என்னையறியாமல் எனது குரலின் டெசிபல் அதிகமாகியது.

“”ஒரு நாள் பிஸ்கட் போடலைன்னா என்ன அந்த நாய் செத்தா போயிடும் நாளைக்கு போட்டுக்கலாம்….” எனது இந்த உரத்த குரலால், ஆடிப்போன கோகுல் தாத்தாவை பார்த்தான்.

இது போன்ற சமயங்களில், பிரச்சனை பெரிதாவதை தவிர்க்க அப்பா சற்று நேரம் அமைதி காப்பார். அதற்குப் பிறகு, தனது ஆற்றாமையை பொறுக்க முடியாமல் மெதுவாய் முனகுவார். அன்றும் அது போலவே நடக்க… நான் பொருட்படுத்தாமல் அந்த இடத்தைவிட்டுச் சென்றேன்.



மறுநாள் காலை. அலுவலகத்தில் அன்று ஆடிட். ஆதலால் சற்று சீக்கிரமாக போயாக வேண்டும். போகும் வழியில் கோகுலையும் பள்ளியில் விட வேண்டும். அவனும் புத்தகப்பை எடுத்து தயார் ஆக… வெளியே வந்து, பைக் எடுத்தேன். எனது பின்னால் கோகுலும் உட்கார்ந்து கொண்டான். கேட்டருகே அப்பா தயக்கமாய் நிற்பதை அப்போது தான் பார்த்தேன்… நேற்றைய கோபத்தினால் ஏற்பட்ட வடு லேசாய் நம நமவென எரிந்துக் கொண்டிருந்தது.

“”என்ன அப்பா… என்ன விஷயம்?” என்று கேட்க.

அவரும் தயங்கியபடி,”"சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு சீக்கிரம் வந்திடுவல்லே. இன்னிக்கி அன்பு இல்லம் போகணுமே…” என்றார்.

அப்பா அப்படி கேட்டதும்… அன்று வியாழக் கிழமை என்று சட்டென நினைவிற்கு வந்தது.

கோகுலும் உடனே, “”ஆமாம்பா… இன்னிக்கி தர்ஸ்டே” என்றான்.

அப்பா சாய்பாபாவின் பக்தரும் ஆவார். “நாராயண சேவா’ என்கிற பெயரில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் “அன்பு இல்லம்’ என்கிற இல்லத்தில் வாழும் அனாதைச் சிறுவர்களுக்கு தனது கையால் அவர் இரவு உணவு வழங்குவது வழக்கம். மாதத்தின் முதல் வாரமே அதற்கான பணத்தை தனது பென்ஷனிலிருந்து அந்த இல்லத்திற்கு கட்டச் சொல்லிவிடுவார். அந்த இல்லத்திற்கு ஒவ்வொரு வாரமும் அவரை கூட்டிப்போகும் டூட்டியும் கூடவே எனக்குச் சேர்ந்துவிட்டது.

அன்றும் அப்படி அவரை வண்டியில் கூட்டி போகத்தான் தற்போது கோரிக்கை விடுக்கிறார்.

“”சரி, பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

பிறகு, அலுவலக வேலைப் பளுவில், இந்த விஷயங்களெல்லாம் மறந்து போனேன். ஆடிட்டிங் என்பதால் பணி நேரம் முடிந்தும் அலுவலகத்தில் இருக்க வேண்டியதாயிற்று. மனைவியிடமிருந்து போன் வந்தது. மணி பார்த்த போது மாலை 6.20 என காட்டியது. விவரத்தை சொன்னேன். அப்போது தான், அப்பா 6 மணிக்கே அந்த அன்பு இல்லத்திற்கு செல்வதற்கு தயாராய் இருக்கிறார் என்பதைச் சொன்னாள். கோகுலை வேறு டியூஷனிலிருந்து கூட்டி வர வேண்டும். மனைவியிடம் போனை தந்தையிடம் கொடுக்கச் சொன்னேன்…

“”அப்பா… ஏற்கெனவே நேரமாயிடுச்சு… 6.30 மணிக்கு கோகுலை டியூஷனிலிருந்து கூட்டிட்டு வரணும். அதற்கு பிறகு வீட்டிற்கு வந்திட்டு, இல்லத்திற்கு போக நேரமாயிடும். அதனால, நான் அப்படியே கோகுலை கூட்டிட்டு அந்த இல்லத்திற்கு போயிடறேன்”

உடனே, அப்பா தழுதழுத்தார்…

“”ஏம்பா… அதான் காலையிலேயே சொன்னேனே…”

நான் இடைமறித்தேன்.

“”சொன்னீங்க… ஆனா இப்போ நிலைமை சரியில்லையே. அங்க வந்திட்டு போக இருட்டாயிடும். இல்லமும் கொஞ்சம் தூரம். சொன்னா புரிஞ்சுக்குங்க. அடுத்த வாரம் நீங்க வாங்க”

அப்பா மெüனமாயிருந்தார்.

“”சரி, நான் வச்சிடறேன்”

காத்திராமல் நான் போனை கட் செய்தேன்.



சுமார் 7.30 மணி இருக்கும்.

நானும் கோகுலும் அன்பு இல்லத்தின் வாசலில் இருந்தோம். சிறுவர்கள் ஓடி வந்து எங்களை வரவேற்றனர். அதில் ஒரு வாண்டு ஓடி வந்து வாசலிலேயே… “”அங்கிள்… தாத்தா வரலியா…?” என கேட்க… சட்டென, “”ஏன் நாங்க வந்திருக்கோமே?” என கேட்கத் தோன்றியது. சிறுவனிடம் போய் எதற்கு வாதம் என மறைத்து, “”ஆபீஸ்லேர்ந்து நேரா வரேன். கூட்டிட்டு வர முடியலப்பா” என மழுப்பினேன்.

கோகுல் சில சிறுவர்களுடன் சென்று விளையாட ஆரம்பித்தான்.

அவன் என்று இல்லை, உள்ளே வந்த பிறகு வார்டன், சமையல் செய்யும் ஆயா மற்றும் பல குழந்தைகள் அப்பாவைப் பற்றி விசாரித்தார்கள். எனக்கு விசித்திரமாக இருந்தது. உணவு அளிப்பதை மீறி அப்பா எந்த அளவிற்குப் பாசமாய் அந்தக் குழந்தைகளுடன் பழகியிருக்கிறார் என்பது அவர்களது எதிர்பார்ப்பில் பட்டவர்த்தனமாய் தெரிந்தது. அப்பா வராதது குழந்தைகளுக்கு சற்று ஏமாற்றமாகத் தானிருந்தது.

குழந்தைகள் தட்டில் இனிப்பு மற்றும் உணவுகள் பரிமாறிவிட்டு, அவர்கள் சாப்பிடும் வரையில் இருந்தேன். மனதின் பாரம் சற்று குறைந்தாற் போலிருந்தது. கிளம்பலாம் என்று கோகுலை கூப்பிட்டேன். அப்போது எனது அருகே ஒரு சிறுவன் நெருங்கி வந்து, “”அங்கிள்… அடுத்த வாரம் தாத்தா வருவாரா?” என்றான்.

“”கட்டாயம் வருவார்…” என்று சொல்லிவிட்டு, மேலும் அவனிடம் தமாஷாய் தொடர்ந்தேன்…

“”இந்த வாரமே வந்திருப்பார்… விஷயம் தெரியுமா… தாத்தா மேல எனக்கு கோபம்…. டூ விட்டுட்டேன். அதான் கூட்டி வரலை” பதிலைக் கேட்டு அந்தச் சிறுவன் சுவாரஸ்யமாய் என்னிடம் பேசுவான் என்று நினைத்தேன். மாறாக, அவன் என் முகத்தை கூர்மையாய் பார்த்து, மெüனம் காத்தான்.

சிறிது நேர மெüனத்தை அந்த சிறுவனே உடைத்தான்…

“”அங்கிள்… அப்பா மேல கோபத்தைக் காட்டறதுக்கும், சண்டை போடறதுக்கும் உங்களுக்காவது அப்பா இருக்காரே…”

சிறுவனிடமிருந்து வந்த இந்த எதிர்பாராத வார்த்தைகள் என்னை திக்குமுக்காடச் செய்தன. அவனது இந்த ஒரு சில வார்த்தைகள் ஆயிரம் வார்த்தைகளினால் விளக்க முடியாத அர்த்தத்தை உணர்த்தி, என்னை சிந்தனையில் ஆழ்த்தியது. பல வருடங்கள் அப்பாவை வைத்துக்கொண்டு நன்றாக பார்த்து கொள்வேன் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகள் தெரியவில்லை… என்னையும் இந்த பையனின் நிலைக்கு காலம் தள்ளுவதற்கு தலைமுறை இடைவெளியினால் வளர்ந்த எனது ஈகோவே அவரது சின்ன சின்ன பரோபகார எண்ணங்களுக்கும் முட்டுகட்டை போடுகிறது… இருக்கிற காலத்தில் பெற்றவர்களின் மனம் கோணாமல் நடந்துக் கொள்வது தானே நாம் செய்யும் நன்றிக் கடன். அப்படி என்ன பெரிதாய் ஆசைப்பட்டுவிட்டார்…அப்பா?

கோகுலை அங்கேயே இருக்கும்படி சைகைகாட்டி, தாத்தாவை கூட்டி வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பினேன். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் புரியாமல் கோகுல் விழித்தான்.

வெளியேவந்து, கிக்ஸ்டார்டரை உதைத்து அப்பாவை கூட்டிவர உற்சாகமாய் வண்டியை எடுத்தேன். போகும் வழியில் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக் கொள்ளவேண்டும்… மனதில் குறித்துக் கொண்டேன்.

பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா!

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by செந்தில் Tue Nov 03, 2015 8:24 pm

கைதட்டல் அருமை அண்ணா. கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:43 pm

அருமை அண்ணா.

உங்களின் தொடர்ச்சியான ஊக்கிவிப்புக்கு நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:46 pm

நிலத்தினும் பெரிதே… வாழ்வினும் உயர்ந்தன்று
------------------------
எட்டு வச்ச காலுக்கு கீழ நெலம் வழுக்குன மாதிரி கனாக் கண்டு முழிச்சனைக்கு காலையில தான்…

“”சேலத்துல இருந்து சங்ககிரி போற ரெண்டு வழி தடத்த நாலு வழித் தடமா அகலப்படுத்த அரசாங்கம் முடிவு பண்ணியிருக்கு… அதுக்காவ இந்த நல்லராயன் பாளையம் கிராம இட்டேறி பொறம்போக்கையும், அதனோட ஓரஞ்சார வெவசாய நெலங்களையும் நட்ட ஈடு குடுத்து அரசாங்கமெ எடுத்துகிறதா அறிவிச்சிருக்கு. இதனால பாதிக்கப் படறவங்க இருந்தா ஒரு வாரத்துல கலெக்டராபீசுல சம்பந்தப்பட்ட அதிகாரிங்களெப் பார்த்து மனு கொடுக்கலாம்”னு தலையாரி பறை போட்டு சொல்லீட்டு போனான்.

கண்ட கனா பலீச்சிருச்சே… உழுது… உழுது வாழ்ந்த வாழ்க்க இப்பிடி கழுத பொறண்ட களமாச்சே…னு வேகுவேகுனு ஓடி அங்க பார்த்து, இங்க பார்த்து ஆபீசருங்க கால புடுச்சி இன்னைக்கி இல்லீனாலும் என்னைக்காவது மழ தண்ணி பேஞ்சி பயிரு வெளையும் பசியாறலாமுன்னு நீசதண்ணியில உசுர வளத்து கெடந்தமெ சாமீ… வெளையீர நெலத்த வெடுக்குனு புடுங்கீட்டா எங் குடும்பம் எங்க போயி நிக்குமுனு மன்னாடிப் பார்த்தேன்… மனு குடுத்துப் பார்த்தேன் ஏதும் புரோசனமில்லீங்க.

தேவப்பட்டா எந்த நெலத்தையும் எடுத்துக்க அரசாங்கத்துக்கு உரிம இருக்குதாமெ… எனக்கு தெரியாதுங்க… அங்க… ஆபீசருதான் சொன்னாருங்க.

நல்லராயன் பாளையத்துல செம்பாதிய எடுத்துகறதா உத்தரவானதுக்கு பொறவு எங் கையளவு நெலம் எம்மாத்தரம்?….. “ஒரலுல அகப்பட்டது ஒலக்கைக்கு தப்புமாங்க’

இட்டேறி ஓரமா வண்டி மாடு கண்டு போயி வார எசவா இருந்த இந்த நெலத்த வெச்சித்தான் எங்கையன் தம் பொழப்ப உருட்டி பொறட்டுனாரு.

எப்பவுமெ காஞ்சிக் கெடக்கும்… எப்பவாவது பேஞ்சிம் போவும் மழய நம்பித்தான் இந்த மண்ணு. ஒரு பட்டம் வெளஞ்சா ஒம்பது பட்டம் தவறிப்போவும். பருவம் தப்பிப்போன பொழுதுக்கு கோமணத்துல முடிய அப்பப்ப அவருக்கும் ரெண்டு காசு வேணுமில்லெ… வெள்ளாமெ இருந்தா காட்டுல பயிரு பச்சைகளுக்கு பண்டுதெம் பாப்பாரு, இல்லீனா… மரமேறி நொங்கு, எளநீ எறக்கி வித்துட்டு வருவாரு.

இந்தப்பாடு இப்பிடி போயிகிட்டிருந்தப்பதான்… ஒரு நா மரத்துல ஏறுறப்ப காலு தவறி உழுந்து பொடனி கத்திரிச்சி பொசுக்குனு போயிச் சேர்ந்தாரு. எல்லாருக்கும் மண்ணுல சாவுன்னா… அவுருக்கு சாவு மரத்துலன்னு எழுதி வச்சத யாரு மாத்த முடியும்

உசுரு போறப்பகூட நெனச்சிருப்பாரு… “தாங் காப்பத்தலைனா என்ன… எங் கொலத்த இந்த மானம் பார்த்த பூமி காப்பாதீரு’முன்னு.

அதுவும் போவ, “ஓரோரு அறுப்புக்கும் ஒரு உக்கழுத்து செயினு பண்ணிப் போடுவான் எம்பையன்’னு வீராப்பு பேசி பெரிய சீரகாபாடியில இருந்து ஒருத்திய கட்டி வெச்சாரு.

வாக்கப்பட்டு வந்த மவராசி பாய விரிச்சி பாதகமில்லாமெ எனக்கொரு புள்ளையெப் பெத்துப் போட்டா. பொறந்த பொட்டையும் அது தீட்டுக்கு வெக்கிற வரைக்கும் கூலிவேலைக்குப் போயி குடும்பத்தோட ஒத்தக்கால தாங்கிச்சி.

குந்தின புள்ளைய எத்தனை நாளைக்கி தான் கூடவே வெச்சிருக்கிறது…

எனக்கும் பொறவு… இந்த நெலத்துக்கு ஆசப்பட்டகருமத்தம்பட்டி மருமவனுக்கு, தையில மண்ணக்காட்டி கண்ணாலத்தையும், பொறவு வந்த ஆடிக்கு மனைய வெச்சி அர பவுனும் பண்ணிப்போட்டேன். ஆடிப்பட்டம் வெளையும்… அடவ மீட்டுடலாமுன்னு.

“செரைச்சாலும் தலையெழுத்து போயீருமா?’ங்கறாப்பள…கடன ஒடன வாங்கி ஆடி ஒழவு ஓட்டி, கடலக்கொட்ட ரகம் பார்த்து மானாவாரியா வெதச்சி வரப்பு ஏறறத்துக்குள்ள அடிச்சு பேஞ்ச மொத மழயில கடலச் செடிங்க திமு திமுன்னு பச்சக்கட்டி நின்னத பாத்து, “பகவான் கண்ண தொறந்துட்டான்’னு நெனச்சேன். ஆனா, அந்த ஒரு மழயோட செரி… பொறவு மழயே இல்ல. பட்டந்தவறிப் போவ… கடலச்செடிங்க காட்டுலயே காஞ்சி கருவாடா போச்சி.

அப்ப உழுந்த கடன்தான்…

பட்டந்தவறி போனாலும்… பருவ மழ தள்ளிப்போனாலும் பட்ட கடன் இல்லீன்னு போயீருமா

கடனு… கடனுக்கு வட்டி… வட்டிக்கி குட்டின்னு ஏறிப்போவ, கடன் குடுத்த பெரிய மனுசன் கழுத்துக்கு துண்டு போட வந்துட்டா ஊருக்குள்ள உசுர வெச்சிகிட்டு இருக்க முடியுமாங்க

அதான்…நெலத்த எடுத்துகிட்டு பணத்த கொடுக்குறோமுன்னு கவருமெண்டு சொன்னதும்… நெலமில்லாட்டியும் பரவாயில்ல… மானத்தோட வாழுவோமுன்னு நீட்டுன காயித்தாத்துல ரேகெ உருட்டி கடன தாட்டி உட்டுடேங்க. எரவ சீலையெ நம்பி இடுப்புக் கந்தய வுட்ட மாதிரி. இப்ப கடனும் போச்சி… நெலமும் போச்சி.

கடனுக்கு போவ கா காசு மிஞ்சலீங்க.

காயிதத்துல ரேகெ உருட்டனத்துக்கும் பொறவு பாருங்க… சும்மா ஆறு மாசத்துல நெகுநெகுன்னு போட்ட ரோட்டுல டவுனு வண்டிக எல்லாம் சர்ரு புர்ருனு பறக்குது.

அங்க தான் அப்பிடின்னாக்க… இங்க எம்பொழப்பு “சீ’ன்னு ஆயிடுச்சி…

“இட்ட ஒறவு எட்டு நாளைக்கு, நக்குன ஒறவு நாளு நாளைக்கு’ங்கறாப்பள, நெலத்துக்கு ஆசப்பட்டு என் புள்ளைய கட்டுன மவராசன், நெலமில்லைனு தெரிஞ்சதும் நலுங்காமெ… குலுங்காமெ… நல்லமேனிக்கு புள்ளைய கொண்டாந்து அப்பன் வூட்லயே கெடடீன்னு உட்டுட்டு போயீட்டான்.

இப்பவெல்லாம் பாத மேல போற பட்டணத்து வண்டிங்கள பாக்கறப்ப, அதுக எம் பொழப்பு மேல ஏறீன மாதிரியே நெனச்சுகுவேங்க.

ம்…விதி இப்பிடீன்னு இருக்கறப்ப யாரப் போயி நொந்துக்க முடியும்

வாழாவெட்டி புள்ளையையும்,வாக்கப்பட்ட பொண்டாட்டியையும் கூலிக்கு போவ உட்டு குந்தனாப்ல திங்க, புருசன் நாவொன்னும் வக்கத்து போவலயே

வாக்கப்பட்டு போன புள்ளைக்கு வகைவகையா செய்யத்தான் முடியல…வாழ்ந்து கெட்டு வந்த பொறவும் வவுத்துக்கும் நல்ல கஞ்சி ஊத்த முடியல…. அதுக்காவ… நம்பிவந்தவள நட்டாத்துல உட்டுட்டு நாந்துக்கவா முடியும்

உசுரு இருக்கற வரைக்கும் ஒழைச்சுத்தான் பாப்பமெ

அதா… அங்க தெரியிதே… நாலு மூங்க நெட்டு பனஓல போட்டு …அதான் எங்குடிச. உழுத மண்ணும் பொறம்போக்கா போச்சி… இருந்த பொழப்பும் ரோட்டுக்கு வந்தாச்சி…

அண்ட அந்த குடிச இருக்குது… கூழுக்கு…

ஓடிப்புடிச்சி எளவட்டாமா திரிஞ்சப்ப நட்டுவகாரன் புள்ளைக்கு கொட்டிக் காட்டனுமாங்கறாப்ள எங்கையன் கூடமாட போயி வாரப்ப தென்ன பன ஏற கத்துக்கிட்டது…. “”கையெடுத்து நாங் கும்புடுற கடவுளு கைவுட்டாலும், காலெடுத்து நாஏறன கரும் பன கையுடுலீங்க”

பூம்பாளையில பக்குவமா பதனீ எறக்கி பான சட்டியில சுண்ணாம்பு தடவி புளிச்ச வாட வாராமெ கோட வெயிலுக்கு எதமா சாப்புடுறீங்களே… இது தான் எங்க மூணு சீவனுக்கும் ரெண்டு வேள கூழு வூத்துது.

பாவம்… நீங்க என்ன பண்ணுவீங்க… டவுனுகாரங்க, படிச்சவங்கெ… பவுசா பிளசர் கார்லெ போறப்பெ ஆசப்பட்டு ஒரு வா பதனீ சாப்புட எறங்கிட்டீங்கெ. எம்பாட்ட ஒங்ககிட்ட சொல்லி என்னத்தப் பண்ண?

ஏதோ,ஒங்களப்போல எங்கையோ போற மவராசரு எங்கடைய பார்த்து ஒரு முழுங்கு பதனீ சாப்புட வாரதாலதான் எம் பொழப்பும் ஓடுது.

போற வேலைய சௌரீயமா முடிச்சீட்டு திலும்பி வாரப்ப இங்க வந்து ஒரு வாயி பதனியோ நாலுகுழி நொங்கோ சாப்டுட்டு போங்க அப்பதான் என்னூட்லேயும் அடுப்பெறியும். கோடி வித்தையும் கூழுக்கு தானுங்களே

அதெல்லாஞ் செரீ… இந்த வெய்ய சீசனுக்கு ரோட்டோரமா நொங்கு கட போட்டுட்ட… வேச காலம் போன பொறவு என்ன பண்ண போறேன்னு கேட்கிறீங்களா…

“காலஞ்செய்யிறத ஞாலமும் செய்யாது’ன்னு சொல்லுவாங்க… எஞ்சாவு எங்கையோ…எந்த பனையிலன்னு எழுதி வெச்சிருக்கொ யாருக்குத் தெரியும் அப்பிடித்தான் எம் பொழப்பும் முன்ன…வெவசாயம்… இப்ப…நொங்கு யாவாரம்… மறுக்கா… யதாவது இல்லாமலேயா போயீரும்?

எல்லா உசுருக்கும் மறு வேளைக்கின்னு ஒரு கவளம் எங்கையோ எழுதி வெச்சிருக்கும்க. மறு வேலைக்கி எங்க…எங்கன்னு சாகறவரைக்கும் சங்கடப்பட்டா வாழரது எக்காலம்

சுருக்கா சொல்லனுமுன்னா… வாழ்க்கைங்கறது என்னான்னு நெனைக்கிறீங்கெ… வேற ஒன்னுமில்லீங்கெ “நம்பிக்க’தானுங்கெ.

என்ன நாஞ்சொல்றது செரி தானுங்களே?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:48 pm

தாயின் மனசு
-----------------

கமலா, என்னம்மா அப்படியே ஸ்தம்பிச்சுட்டே?” கேட்டுக்கொண்டே வந்தார் அருணாசலம். அவர் குரல் அதட்டல் கமலாவை சுயநிலைக்கு மீட்டு வந்தது.

அவர் மீண்டும் தணிவாய், “”கமலா, இப்படியே நின்னுட்டிருந்தா எப்படிம்மா? போம்மா. போய் உள்ள ஆக வேண்டியதைக் கவனிக்க வேண்டாமா?” என்றார்.

ஆக வேண்டியது என்று இனிமேல் அவளுக்கு ஒன்று உண்டா? அதுதான் நேற்று அமர்க்களமாய் நடந்து முடிந்துவிட்டதே… பெரியவர் அருணாசலம் கைத்தடியை அழுந்த ஊன்றிக்கொண்டு மற்றொரு கையால் மூக்குக் கண்ணாடியை கொஞ்சம் உயர்த்தி வண்டிப் பாதையைப் பார்க்கிறார். புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு பெட்டி வண்டி அந்தப் பாதையில் வெகுதூரம் சென்றுவிட்டிருந்தது.

கமலாவும் கூட தன் சிந்தனையில் வெகுதூரம் போயிருந்தாள்.

“”அம்மா, ஏம்மா இவ்வளவு நேரம் முழிச்சிட்டிருந்தே? நான் சொல்லிட்டுத்தானே போனேன். ஆபீஸ்ல நிறைய வேலைன்னு. நீ எடுத்து வச்சுட்டுப் படுத்திட்டா நான் சாப்பிட்டுக்க மாட்டேனா?”

“”ஐயையோ! என்னம்மா இது, இப்படிச் சுடறதே உன் உடம்பு! கொடுத்த மருந்த ஒழுங்கா சாப்பிட்டியா?”

“”இங்கே பார்த்தியாம்மா, இதிலே என்ன இருக்குன்னு சொல்லேன் பார்க்கலாம். நாளைக்கு என் பிறந்த நாளில்லை? அதான் மம்மிக்கு என்னோட கிப்ட்! வெங்காயச் சருகு நிறத்துல பட்டுச் சேலை!’

இப்படியெல்லாம் அவளை – கமலாவை இனி யார் கேட்கப் போகிறார்கள்? இனி யாருக்குத்தான் அவள் வாசற்படியிலே உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு ஒடிய காத்துக் கிடக்கப் போகிறாள்?

கண்களில் நீர் வழிய பாதையைப் பார்த்தபடி அப்படியே அசையாமல் நின்றிருந்தாள் – கமலா. பெட்டி வண்டி பார்வையிலிருந்து ஓடி மறைகிறது. “ஜல் ஜல்’ என்ற அதன் சலங்கை சப்தம் அவள் காதைச் சுற்றி ஒலிப்பதுபோல ஒரு பிரமை.

எதிரே நின்ற பெரியவர் அருணாசலத்துக்கும் இந்தத் துக்கத்தில் பங்கு உண்டு. பக்கத்து வீட்டுக்காரரும் ரிட்டயர்டு தலைமை ஆசிரியருமான அவர், கமலாவின் மகள் பவானிக்கு ஆசிரியராக இருந்தவர். அவரையும் அவள் பிரிவு அலைக்கழித்தது.

ஒரு பெண்ணுக்கு வாய்க்கிற வாழ்வும் வாத்சல்யமும் புகுந்த வீட்டுக்குத்தான் சொந்தம்னு யாருக்குத் தெரியாது? இன்றைக்கு வண்டிப் பாதையைப் பார்த்து கண்கலங்கி நிற்கும் இதே கமலா, இதேபோல ஒருநாள் தன் தாயைக் கலங்கவைத்துவிட்டு புகுந்த வீட்டுக்குப் பயணப்பட்டவள்தானே?

பெரியவர் அருணாசலம் கைத்தடியை ஊன்றிக்கொண்டே ஏதோ மெல்ல முணுமுணுத்தபடி போய்விட்டார்.
பன்னிரெண்டு வயதில் தந்தையை இழந்தவள் பவானி. அவளுக்கு தாயோடு தந்தையாகவும் இருந்து குறையில்லாமல் வளர்த்தவள் இந்தக் கமலா.

பவானியை உயர் படிப்புக்கு அனுப்ப வேண்டும் என்பது அவள் தந்தையின் ஆசை. அவர் இன்று இல்லை. ஆனால், அவர் கொண்ட ஆசை நிராசையாகிவிடவில்லை. கமலா பவானியைக் கல்லூரிக்கு அனுப்பினாள். இதில் கமலாவுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது; கூடவே ஓர் அச்சமும் தொடர்ந்தது. வயது கால உணர்வுகள் தன் மகளை எந்தவிதத்திலாவது தடம் புரட்டிவிடுமோ என்ற பயம்தான் அது. ஆணின் அரவணைப்பை இழந்து தனித்த அவள் வாழ்க்கையில் இத்தகைய பயம்கூட நியாயம்தான். மூன்றாண்டு பட்டப்படிப்பு முடிந்தது. அந்தமட்டில் பவானிக்கு ஒரு வேலை கிடைத்தால் குடும்பத்துக்கு பாரம் குறையுமே என்று நினைத்தாள். ஒரு தொழிற்சாலையின் நிர்வாகப் பிரிவில் பவானிக்கு வேலையும் கிடைத்துவிட்டது. அதன்பிறகு அவளுக்கு நல்ல ஒரு வரனாகப் பார்த்து ஒரு குறையும் இல்லாமல் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமே என அடுத்த சிந்தனைக்குத் தாவியது கமலாவின் உள்ளம்.

உறவில் ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து… இதோ அவனோடு கல்யாண காட்சிகள் முடிந்து அனுப்பி வைத்துவிட்டாள்.

திரும்பி வீட்டுக்குள் வந்தாள். ஏதோ ஓர் இனந்தெரியாத அமைதி வீட்டில் அழுந்திக் கிடப்பதாக அவளுக்குத் தோன்றியது. பழக்கமில்லாத ஒரு புதிய வீட்டுக்குள் நுழைவதுபோல் இருந்தது கமலாவுக்கு. உள்ளே வந்தாள்.

“”மியாவ்!”

கமலா மேலே உத்திரத்தை நிமிர்ந்து பார்க்கிறாள்.

“”பவானியா? அவள்தான் புருஷன் வீட்டுக்குப் போயிட்டாளே! இனி நான்தான் உனக்குப் பவானி”.
அந்தப் பூனைக்கு அவள் உள்ளம் பதில் சொல்கிறது.

பெட்டி படுக்கை – காலையில் பவானி துலக்கி வைத்த பாத்திரங்கள் – அவள் நின்ற இடம் – உட்கார்ந்திருந்த இடம் என்று வீடு முழுவதையும் பரக்க விழித்துக்கொண்டு புதுமையாய் பார்த்தாள் கமலா. அவள் உள்ளம் ஏங்கித் தணிந்தது.
உள்ளே கூடத்தில் உட்கார்ந்து தூணில் சாய்ந்தாள். என்றைக்காவது ஒருநாள் பெண் பிறந்த வீட்டுக்கு அன்னியம்தானே என்று எண்ணிச் சமாதானப்பட முடியவில்லை. தன்னை நினைத்தாள். இறந்துபோன தன் கணவனை நினைத்தாள். அவரோடு புதிதாய் இந்த வீட்டில் வாழ வந்த நாட்களை நினைத்தாள். எங்கோ முடங்கிக் கிடந்த கனவோ, அந்தக் காலத்து நினைவுகளெல்லாம் மளமளவென அவள் மனதில் மடல் விரித்தன மலரும் நினைவாக.

“”கமலா, கமலா!” – சத்தமாய்க் குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள் பர்வதம்மாள் – கமலாவின் தாய்.
எதிர்பாராமல் இவ்வளவு காலையில் தாயின் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுவிட்டாள் கமலா.

“”அடடே! அம்மா என்னம்மா இத்தனைக் காலையில புறப்பட்டு வந்திருக்கியே, என்னம்மா விஷயம்?” என்று கேட்டுக்கொண்டே கமலா வெளியே வரவில்லை; அதற்குள் பர்வதம் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு வந்த துணி முடிச்சை பொத்தென போட்டுவிட்டு ஓடிவந்து மகளைக் கட்டிக்கொண்டாள்.

“”ஒண்ணுமில்லேடி கமலா. பாழும் மனசு கேக்கலை. எப்படி இருக்கேன்னு பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நல்லா இருக்கியாம்மா?” என்றாள் பர்வதம்.

கமலா எதுவும் பேசவில்லை. அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது. கமலா புகுந்த வீட்டுக்கு வந்து ஐந்தே நாள்தான் ஆகிறது. “”அதற்குள் யாராவது இப்படி நலம் விசாரிக்க பதறி அடிச்சிட்டு ஓடி வருவாங்களா? நீ நல்ல பைத்தியம் அம்மா?” என்று வாய்விட்டுச் சிரித்தாள் கமலா. இந்த சப்தத்தைக் கேட்டு கமலாவின் புருஷனும் மாமியாரும் உள்ளிருந்து வந்துவிட்டார்கள்.

துணி முடிச்சுக்குள் பர்வதம்மாள் கொண்டு வந்ததெல்லாம் கமலாவினால், பின்னி முடியாமல் இருந்த ஸ்வெட்டர் ஒன்று, ஊசி, நூலுருண்டை, அவளுக்குப் பிடித்த நெய் முறுக்கு…!

அந்தப் பாசத்தின் நெகிழ்வை அப்போது கமலாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. “”இதுக்கா அம்மா, இப்படி மாத்தி உடுத்திக்காமக்கூட அலங்கமலங்க வந்தே?” என்றுதான் கேட்டாள்.

இப்போது கமலாவின் இமைகள் கண்ணீரை ஒற்றிக் கொள்கின்றன. நேற்று நடந்தது இன்றைக்கு, இன்று நடப்பது நாளை தன் மகளுக்கு. காலம் ஒரே மாதிரிதானே சுழன்று கொண்டிருக்கிறது. இதில் மாறுதல் ஏது? மனிதர்கள்தானே மாறுகிறார்கள். உறவுகளா மாறுகிறது? புதுமை, புரட்சி என்பதெல்லாம் இந்த ஆத்ம சலனங்களுக்கு அப்பால் எங்கோ நிகழ்ந்து எங்கேயோ பேசப்படுகிற விஷயங்களோ…

“”ம்மா…!” – என்ற குரல் அவளை அந்தச் சிந்தனையிலிருந்து தட்டி எழுப்பியது. மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய பசுவின் குரல் அவளைத் தோட்டத்திற்கு அழைத்தது. திடுக்கிட்டதுபோல் எழுந்த கமலா அதே வேகத்தில் போய் அதன் கன்றையும் அவிழ்த்துவிட்டாள். தவிட்டு தொட்டியின் அருகில் கொண்டுபோய் விட்டு கிளறிவிட்டாள்.
அவளின் பிரியத்துக்குரிய அந்த வெள்ளைப் பசு செல்லமாகத் தலையைக் குலுக்கிக் கொண்டது. தவிட்டைக் கிளறிவிட்ட கமலாவின் கைகளை பசுவின் சொறசொறப்பான நாக்கு நீவிவிட்டது. அதில் அவளுக்கு இப்போது அசூசையாக இல்லை… இதமாக இருந்தது.

-பாவலர் மலரடியான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:50 pm

நான் விற்பனைக்கல்ல…
----------------------
டிராக்டரின் இரும்புக் கலப்பைகள் என் நிலத்தாயை ஆழ உழுதபோது எனக்கு ஏற்பட்ட வலி, இதுவரை நான் உணராத வலி. அப்படி வலித்தது. இரும்புக் கலப்பைகளுக்குள் தக்காளிப் பழங்களோடு தக்காளிச் செடிகளும் குற்றுயிரும் குலை உயிருமாக மண்ணுக்குள் புதைகின்றபோதே மனசும் புதைந்து கொண்டிருந்தது.

மண்டையைப் பிளக்கும் வெயில் உடம்பைப் பிழிந்து வியர்வையை அருவியாக்கிக் கொட்டிக் கொண்டிருந்தது. அந்தப் புழுக்கம் என் உடம்புக்கு பழகிப் போன ஒன்றாக இருந்தது. ஆனால் திரண்டு நிற்கும் கண்ணீருக்குள் கண்கள் மூழ்கி அந்தக் காட்சியை என்னைக் காணவிடாமல் கலங்கடித்துக் கொண்டிருந்தன.

என்ன செய்ய…. உழுதவன் பார்த்த கணக்கு உருப்படியாகவில்லை. மூன்று மாதங்கள் உழைப்பு கருகி விட்டது. ஆயிரம் அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீரை இரண்டு நீர் மூழ்கி மோட்டார் வைத்து நிலத்திற்கு மேலே ஒரு மோட்டார் வைத்து எடுத்து செய்கிற விவசாயம் என்னுடையது. கடவுள் புண்ணியத்தில் கரண்ட் மட்டும் அரசின் தயவால் இலவசம். அதற்கும் பணம் கொடுக்க வேணடிய நிலை இருந்தால், அய்யோ… என்று தலையில் கையை வைத்துக் கொண்டு போய் விடலாம்.

இரண்டு ஏக்கர் நிலம். இரண்டு தடவை உழவேண்டும். அதற்கு டிராக்டர் கூலி நான்கு மணி நேரத்திற்கு மூவாயிரம்… தொழு உரம் எட்டு டன். அதற்கு பத்தாயிரம்… அப்புறம் பாத்தி பிடிக்க இரண்டாயிரம்…. விதை இருநூறு கிராம். வீரிய ஒட்டு ரகம் ஐயாயிரம்… அந்த விதையை பாவி நாற்றங்காலாக உருவெடுக்க இருபத்தைந்து நாள்… அப்புறம், அதை நடவு செய்ய கூலி இரண்டாயிரம்… களை எடுக்க, மருந்தடிக்க, இப்படி தொட்டதுக்கெல்லாம் செலவு செஞ்சாத்தான் இரண்டு மாதம் கழித்து தக்காளி விளைச்சல் பார்க்க முடியும்… விதை பாவியதிலிருந்து விளைச்சல் பார்க்கிற வரைக்கும் ஒவ்வொன்றும் விவசாயிக்கு, பிரசவம் தான்.

இரண்டு மாதங்கள் பதினைந்து நாளைக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் தக்காளி பறிக்கலாம். அதற்கும் கூலி ஆள் விட வேண்டும். ஏக்கருக்கு மூன்று பேர் வேண்டும். எல்லாம் முடிஞ்சு இரண்டாயிரம் கிலோ முதல் விளைச்சலாக வந்து காரைக்குடி சந்தைக்குக் கொண்டு போனேன். கிலோ அஞ்சு ரூபாய்க்கு மேலே போகலை…. முதல் வருமானம் பத்தாயிரம் ரூபாயோடு வந்தேன். அப்புறம் நூறு கிலோ, இருநூறு கிலோன்னு பறிக்க முடிஞ்சது…. நேற்று வரைக்கும் அஞ்சு ரூபாய்க்கு போன தக்காளி இன்று கிலோ இரண்டு ரூபாய்க்கு எடுக்கிறேன்னு சொன்னான். பறிக்கிற ஆள் கூலிக்குக் கூட தக்காளி விலை போகலை… அதனால் தான் அப்படியே டிராக்டரை விட்டு உழுது போடுவோம்… கோடை மழை பெய்தால் அடுத்த உழவுக்கு சரியாக இருக்குமேன்னு நினைத்து உழச் சொன்னேன்.

நூறுநாள் வேலைத் திட்டம் வந்தாலும் வந்துச்சு…. ஆரம்பத்தில் இருநூறு ரூபாய் வாங்கினவங்க இப்போது இருநூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தாத்தான் தக்காளி பறிக்க வர்றேன்னு சொல்றாங்க… இருநூறு கிலோ தக்காளி பறிக்க கூலி எழுநூற்று ஐம்பது ரூபாய்…. அந்த தக்காளிக்கு மார்க்கெட்டுல விலை நானூறு ரூபாய்தான். கமிஷன் ஏஜெண்ட் கிட்டக் கேட்டால்….. “”தக்காளி விளைச்சல் அதிகம்…. மார்க்கெட்டுக்கு அதிகமாக வர்றதாலே விலை போகலை”ன்னு சொல்றான்….

எப்படியிருக்கு… நினைச்சுப் பாருங்க… இப்படி விவசாயம் பண்ற நான் கேனப்பயலாத் தானே உங்க பார்வைக்குத் தெரிவேன்… உங்களுக்கு மட்டுமா… என் மகனுக்கும்தான்….

“”நிலப் பத்திரத்தையும், வீட்டுப் பத்திரத்தையும் எடுத்து வையுங்க… சனி, ஞாயிறு நான் மட்டும் ஊருக்கு வர்றேன்… நான் திரும்பும் போது என்னோடு நீங்களும், அம்மாவும் வீட்டைப் பூட்டிட்டு சென்னைக்கு வர்றீங்க… அவ்வளவுதான்…” போனை பேசிவிட்டு வைத்து விட்டான்.. “நான் என்ன நினைக்கிறேன்… என்ன விரும்புறேன்…’ என்று பதில் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

விவசாயத்திற்கு இயந்திரங்கள் வந்தவுடன் மனிதர்கள் இயந்திரங்களாக மாறிப் போனார்கள். அறுபது வருடங்களுக்கு முன்னால் திரும்பிப் பார்க்கிறேன். அப்போது எனக்கு பத்து, பன்னிரெண்டு வயது இருக்கும். அப்பவே காலை ஆறு மணிக்கே தோட்ட வேலைக்கு அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடுவார். இரண்டு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய மூணு ஏர்கள் விடுவார்கள். எப்போதும் அப்பாதான் முதல் ஏராக உழுவார். அதற்குப் பின்னால்தான் கூலிக்காக வெளியிலிருந்து வந்த இரண்டு ஏர்களும் செல்வார்கள். நான் போகும் அன்று அப்பா கடைசி ஏராகவும், கூலி ஆட்கள் அடுத்து நானும், எனக்குப் பின்னால் அப்பாவுமாக நான்கு ஏர்கள் உழுவோம். எனக்கு கற்றுக் கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு.

விதை பாவுவது, பாத்தி கட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது எல்லா வேலையும் எனக்குத் தெரியும். இருபத்தைந்து வயதில் நான் முழு விவசாயி ஆகிப் போனேனே தவிர, நான் படித்தது அந்தக் காலத்து பத்தாம் கிளாஸ் அவ்வளவுதான். அதனால் தான் என் மகனை விவசாயத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க விடாமல் பட்டணத்திலேயே பணம் கட்டி படிக்க வைத்து முன்னேற்றி விட்டேன். நான் எந்தப் பட்டணத்தைப் பார்த்திருக்கிறேன்? எல்லாமே அவனுடைய தன் முயற்சி. செலவுக்குப் பணம் கேட்டு வருவான். கொடுப்பதோடு சரி. புத்தியுள்ள பிள்ளை. நல்லா வந்துட்டான். இப்போது அவன் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கிறான். அவன் மனைவியும் அதே வேலைதான்.

அவனாக லீவு நேரத்தில் குடும்பத்தோடு வந்து நான்கைந்து நாட்கள் இந்த கிராமத்தில் தங்கி விட்டுப் போவான். அதற்கே என்னுடைய பேரப் பிள்ளைகள் இரண்டும் வசதியில்லாத கிராமத்தைக் கண்டு நெளிவாங்க…

“”அப்பா… எப்பப்பா ஊருக்கு…?” என்று நச்சரித்து விடுவார்கள். ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி…. தக்காளி எப்படி செடியில் விளையுது… கரும்புத் தோட்டம்…. புடலை பந்தல்… இப்படி பார்க்கும் போது, “”ஐ…” என்ற சத்தத்தோடு தொட்டு மகிழ்வார்கள். எனக்கு அது மகிழ்ச்சியாகத் தெரியும். பேரப் பிள்ளைகள் வந்தால் வீட்டில் தங்க மாட்டார்கள்… தோட்டத்தில்தான் பொழுதைக் கழிக்க நினைப்பார்கள்.

வயலில் நடுகிற நாற்றுக்கு காட்டுகிற அக்கறையை எந்த விவசாயியும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு காட்டமாட்டான். ஆனால் நான் அக்கறை காட்டினேன். அதுதான் இந்த வயசான காலத்திலே விழுதுகள் வேரைத் தாங்க நினைக்குது…

சரி… இந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை பட்டணம்… அதுவும் எப்படி இருக்குதுன்னுதான் பார்ப்போமோ….

கோடை காலமாக வேற இருக்கு…. இந்த வருஷம் மழை வேற பெய்யலை… நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சு மோட்டார் இழுவை பத்தலை… ஒரு மாதம் கழிச்சு விவசாயத்தை ஆரம்பிக்கலாம்னு அதுவரை போறேன்…

“நிலமழகிய மங்கலம்’ – பெயருக்கு ஏற்றாற்போல் அழகான சோலையுள்ள இந்தக் கிராமத்தை விட்டு முதன் முறையாக வெளியேறப் போகிறேன். இன்று வெள்ளிக் கிழமை. நாளை காலை வெங்கடேசன் வந்து விடுவான். சென்னை சென்று விட்டு வரும் போது இந்த நிலம், இந்த வீடு எனக்குச் சொந்தமாக இருக்குமா? என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அழுகை எனக்கு முட்டிக் கொண்டு நின்றது.

பச்சை பசேலென இருந்த தோட்டத்தை சமப்படுத்தி கட்டாந்தரையாக்கி விட்டு பணம் கேட்டு என் எதிரே வந்து நின்றான் டிராக்டர் டிரைவர். பதினைந்து நூறு ரூபாய் தாள்களை எண்ணிக் கொடுத்தேன். தோளில் கிடந்த துண்டை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அப்படியே நிலத்தில் குத்துக் காலிட்டு உட்கார்ந்தேன். உலர்ந்து கிடந்த செம்மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளினேன். கைவிரல்களின் இடுக்குகள் வழியே மெதுவாகச் சிதற விட்டேன்.

“உனக்கும் எனக்குமான சொந்தம் இன்னும் எத்தனை நாளைக்கு… ஒரு மாசமோ… இரண்டு மாதமோ தான்… உன்னை இழந்து விலகப் போகிறேன்… எனக்குப் பின்னால் நீ நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் விவசாயமா… இல்லை நிரந்தரமாக செத்துப் போகும் பிளாட்டாகவா… கட்டிடமாகவா.. எனக்குத் தெரியாது… உனக்குச் சொந்தமில்லாத வியர்வையை உன்மீது தெளித்து வாழ்ந்திருக்கிறேன்… இப்போதும் உனக்குச் சொந்தமில்லாத உன்மீது ஒருமுறை கூட தெரித்து விழாத என் கண்ணீரை தெளித்து விடை பெறப் போகிறேன்… மன்னித்து விடு…’ விம்மிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்ட போது வாய் மட்டும் விரிந்து எச்சிலை வெளிக்காட்டியது… கண்ணீர் நிலத்தில் விழுந்து காய்ந்தது.

மடியிலிருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.. மதியம் சாப்பிட முடியவில்லை… வீட்டுத் திண்ணையில் படுத்த போது உறக்கம் வராத தவிப்பு.. பீரோவில் எப்போதோ வைத்த பத்திரங்களை சாயங்காலம் தேடி எடுத்து அரை மனதோடு பத்திரப்படுத்தி வைத்தேன். விடியும் பொழுது நல்ல பொழுதாக வெங்கடேசனின் மனமாற்றச் செய்தியோடு விடிய வேண்டும் என்ற நம்பிக்கையோடு அன்று இரவு படுக்கைக்குப் போனேன்.

வயல்காட்டிற்கு போய் விட்டு வந்து படுக்கும் ஒவ்வொரு நாளும் அடித்துப் போட்டதைப் போல் அசத்தும் உறக்கம் அன்று புரண்டு புரண்டு படுத்தாலும் வரவில்லை.

விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்த வெங்கடேசனின் பிடிவாதம் நிலப் பத்திரப் பையோடு என்னைச் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்து, இரண்டு நாட்களை வழியனுப்பி வைத்திருந்தது.

அடுக்குமாடி வீடு… குளு குளு அறை, எதற்கும் வீட்டை விட்டு வெளியே வராத அளவிற்கு வசதிகளோடு உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்ட வாழ்க்கை… மகனும் மருமகளும் வேலைக்குப் போன பின்பு பேரப்பிள்ளைகளும், டி.வி.யும்தான் உலகமாக இருந்தது. இரண்டு நாட்கள் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மூன்றாவது நாள் என்னால் இருக்க முடியவில்லை.

“”வெங்கி…”

“”என்னப்பா…?”

“”வய வரப்புன்னு சுத்திகிட்டே இருந்த உடம்பு… வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க முடியலை… அது என்னப்பா… வெளிக்காற்றே வராமல் குளுகுளுன்னு அது நமக்கு சரியா வரலை… எங்கேயாவது காலாற நடந்துட்டு வர்றேன்”

நான் புறப்படத் தயாரானேன்.

“”அப்ப ஒண்ணு செய்யுங்க அப்பா…”

“”நீங்க…. தனியா போக வேண்டாம்… உங்க பேரன் முகிலனை கூட்டிட்டு போங்க..

கடைக்கு சாமான்கள் வாங்க போறான். அவனோட நீங்களும் போயிட்டு வாங்க.. அதற்குள் நிலம் சம்பந்தமாக ஆள் வந்திருவாங்க.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊர்காரங்கதான்… வெள்ளையபுரம்… சீக்கிரம் வந்து விடுங்க…”

பெரிய கடை வீதி… நடந்து போகும் போதே ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டு போனான் பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் முகிலன்.

தெருவோரத்தில் சோபாக்களும், சேர்களும், அலங்கார பொம்மைகளுமாக இருந்தன.

நான்கைந்து நைந்து போன வடமாநில மனிதர்கள் அதை விற்கும் வியாபாரிகளாகத் தெரிந்தனர்.

“”முகிலா….” என்று தான் சொன்னேன்.

“”இதெல்லாம் பணக்கார வீடுகளில் வைக்கிற அலங்கார பொருட்கள் தாத்தா…”

அதை சிறிது நேரம் நின்று பார்த்தேன். அழகழகாக இருந்தன.

ஒரு இடத்தில் சாலையின் இரண்டு புறங்களிலும் தள்ளுவண்டிகளில் காய்கறி கடைகள், அடர்த்தியான மரங்களோ, விவசாய நிலங்களோ இல்லாத அந்த நகரத்தில் பச்சை பசேலென காய்கறிகள் அடுக்கி வைத்திருந்தார்கள் வியாபாரிகள்.

முகிலன் ஒரு தள்ளுவண்டி அருகில் போனான்.

தக்காளிகளைப் பொறுக்கி எடுத்து இரண்டு கிலோ போடச் சொன்னான். அந்தக் கடைக்காரன் என் மகன் குடும்பத்திற்குப் பழக்கப்பட்டவன் போலத் தெரிந்தது.

“”எப்பவும் அப்பா வருவாரு… இன்னைக்கு நீங்களா….?” என்று கேட்டான்.

தக்காளிகளை வாங்கிக் கொண்டு, “”எவ்வளவு?” என்று கேட்டான்.

“”கிலோ நாற்பது… எண்பது ரூபாய் கொடுங்க..”

“”கிலோ நாற்பதா…” எனக்கு நெஞ்சடைத்தது.

“”என்னப்பா… நாற்பது சொல்றே…?” நான் கேட்டேன்.

“”என்ன செய்யுறது… மழை இல்லை… விவசாயம் இல்லை… தக்காளி விளைச்சல் குறைஞ்சு போச்சு… வரத்து குறைவு…”

கடைக்காரன் எனக்கு விவசாயம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

நான் பேசாமல் நகர்ந்தேன்.

“”ஏம்பா… பத்து ரூபாய் குறைச்சு வாங்கலாமில்லே…?”

“”தாத்தா… இது கிராமமில்லே… டவுன்… அவன் சொல்றது தான் விலை. விலை குறைச்சுக் கேட்டா நம்மை ஏற இறங்கப் பார்ப்பான்”

அடுத்தது ஒரு உயரமான கட்டிடத்திற்கு அழைத்துப் போனான்.

“”தாத்தா… இது ஷாப்பிங் மால்…”

“”அப்படின்னா?”

“”இங்கே சினிமா தியேட்டர், ஹோட்டல், மளிகை கடை, காய்கறி கடை எல்லாமே இருக்கு…”

உள்ளே நுழைந்தபோது, குளு குளு காற்று வரவேற்றது. எதிரே இருந்த கடைக்குள் போனோம்.

ஒரு பெரியகடை முழுவதும் எல்லாவிதமான பழங்களும், காய்கறிகளும் அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தோட்டத்தில் பறிக்கிறபோது கூட இவ்வளவு அழகாக இருந்ததில்லை காய்கள்… அவ்வளவு அழகாக இருந்தன.

தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு முகிலன் செல்ல பின்னால் சென்றேன்.

நான்கைந்து மாம்பழங்களும், ஆப்பிள்களும் வண்டியில் எடுத்துப் போட்டான். ஓரிடத்தில் எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம்.

“”என்ன தாத்தா…. ஆச்சரியமாக இருக்கா?”

“”ஆமாம்… பணக்காரங்க வீட்டிலே இருக்க வேண்டிய பொருட்களை வீதியிலே விற்கிறாங்க… சாதாரண ஏழை மக்களும் வாங்குற சாப்பிடும் பொருட்களை குளு குளு அறையில் வைச்சிருக்காங்க… ஆச்சரியம் தானே?”

இரண்டு மணி நேரம் சுற்றி விட்டு வீடு வந்தபோது வீட்டிற்குள் இரண்டு பேர் உட்கார்ந்து என் மகனுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான்.

“”அப்பா பேர்ல தான் இருக்கு…” அவர்களிடம் என் மகன் சொன்ன போது எனக்குப் புரிந்தது. நான் எதுவும் பேசவில்லை.

“”ஒரு நல்ல நாளாகப் பார்ப்போம்.. போயிட்டு பேசுகிறேன்”

அவர்கள் விடை பெற்றார்கள்.

“”வீடு மட்டும் இருக்கட்டும்… தோட்டத்தை பத்து லட்சத்துக்குப் பேசியிருக்கிறேன். நீங்க சரின்னு சொன்னா… விற்று விடுவோம். எனக்குச் சரி…” என்றான் வெங்கடேசன்.

“”நான் உயிரோடு இருக்கும்வரை தோட்டத்தை விற்க வேண்டாம்பா…”

“”என்னப்பா… சொல்றீங்க…?”

“”இன்னும் பத்து வருஷம் கழித்து உங்க எல்லோருடைய கைகளிலும், நீங்க மடியிலும், கைகளிலும் வைச்சு படம் காட்டுறீங்களே… அதுதான்.. அதுக்குப் பேரென்ன…?” பெயர் தெரியாமல் நான் இழுத்தேன்.

“”கம்ப்யூட்டரா…” மகன் கேட்டான்.

“”ஆமா… அது தான்.. அதுவும் உங்க கைநிறைய பணமும் இருக்கும்… ஆனால் கத்திரிக்காயும், தக்காளியும் இருக்காது… அது என்னை மாதிரி ஆட்களால் தான் தர முடியும்.. உங்களால் முடியாது… என் வழியிலேயே நான் போறேன்.. என்னை விட்டு விடு… என்னை விற்று விடாதே….”

நிலப் பத்திரத்தை வாங்கிக் கொண்டேன். அன்று இரவே கிராமத்திற்கு திரும்ப பஸ்ஸில் ஏற்றி விடச் சொன்னேன் நான்.

- குன்றக்குடி சிங்கார வடிவேல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:51 pm

புரிஞ்சுக்கவே முடியலையே..!
----------------
தெரு முனையில் பிள்ளையார் கோயிலில் பாடல் உரக்க ஒலித்தது. இன்று விநாயகர் சதுர்த்தி. எங்கள் வீட்டிலும் காலையில் எழுந்த உடனேயே விநாயகர் பாடல் சி.டி.யை அப்பா போட்டுவிட்டார். பூஜை முடியும் வரை அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

களிமண் விநாயகர் சிலையை வாங்க நானும், அப்பாவும் கடைத்தெருவுக்குச் சென்றோம். பிளாட்பாரம் முழுவதும் பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் வீற்றிருந்தன. அதில் பல வண்ணம் பூசப்பட்ட சிலைகள் சூரிய ஒளிபட்டு மின்னிக் கொண்டிருந்தன.

முகம் களையாக உள்ள சிலையைப் பார்த்து வாங்கும்படி அம்மா சொல்லி இருந்ததால், அப்பா வெகு சிரத்தையாக ஓரடி உயரமுள்ள களிமண் சிலை ஒன்றை வாங்கினார். அச்சிலையின் அடிப்பாகத்தில் விநாயகரின் வாகனமான எலியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

பிள்ளையார் கண்ணில் பொருத்துவதற்காக அப்பா இரண்டு பிள்ளையார் கண்களை (கருப்பு சிவப்பு கலரிலான குன்றிமணிகள்) வாங்கினார். நான் எலி வாகனத்தின் கண்களில் பொருத்தினால் அழகாக இருக்குமே என்று இரண்டு கண்களை கேட்டு வாங்கிக் கொண்டேன்.

வீட்டுக்கு வந்தோம். அம்மா பிள்ளையாரின் அழகையும், அவரது பாதம் அருகே அமர்ந்திருந்த எலியின் தோற்றத்தையும் பார்த்து மெச்சினாள்.

“”ஏங்க… பிள்ளையாருக்கு கோல்டன் கலர் பெயின்ட் அடிச்சுடுங்க! கலர் பவுடர், பிரெஷ் எல்லாம் வீட்டில் இருக்கு,” என்றாள்.

நான், பிள்ளையாரின் வாகனமான எலிக்கும் கோல்டு கலர் அடிக்கணும்னு அப்பா கிட்ட கண்டிப்பா சொல்லி விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் பிள்ளையார் பொன்னொளியில் மின்னினார். எலியும் பொன்னெலியாக மாறியிருந்தது.

அம்மா அந்த வருடம் வாங்கிய 5 சவரன் செயினை பிள்ளையாருக்கு அணிவித்து அழகு பார்த்தாள். பிள்ளையாரின் தொப்பையில் புதிதாக வெளியான 10 ரூபாய் நாணயத்தை ஒட்டினாள். கொழுக்கட்டை, வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், எள்ளுருண்டை, பழங்கள் என பிள்ளையாருக்கு விருந்து படைக்கப்பட்டது. அப்பா பிள்ளையார் அகவல் படித்துக் கொண்டிருக்க, அகவல் படித்து முடிக்கும் வரை எரியும் கற்பூரத் தட்டில் கற்பூர வில்லைகளை நான் வைத்துக் கொண்டிருந்தேன்.

கற்பூர ஜோதி முழுவதும் அணைந்து முடிந்ததும் பிள்ளையாரை விழுந்து கும்பிட்டோம். படையலுக்கு வைத்திருந்த பலகாரங்களில் கொஞ்சம், கொஞ்சம் எடுத்து காக்கைகளுக்கு வைத்துவிட்டு வந்தார் அப்பா.

அம்மா எங்களுக்கு இலை போட்டாள். பிள்ளையாருக்கு வைத்திருந்த கொழுக்கட்டை அனைத்தையும் பூஜை அலமாரியில் இருந்து எடுத்த போது நான் ஆட்சேபித்தேன்.

“”அம்மா… இப்போதுதான் பிள்ளையாருக்கு படைச்சோம். அவர் சாப்பிடறதுக்குக் கூட டயம் கொடுக்காம, உடனே எடுத்து எங்களுக்கு பரிமாறுகிறீங்களே…” என்று சற்றே கோபத்துடன் கேட்டேன்.

“”குமரா ஜோக் அடிக்காம ஒழுங்கா சாப்பிடு…” என்று அப்பா அதட்டினார்.

“”அம்மா… நாம பக்தியோட படைச்சிருந்தா பிள்ளையார் நிச்சயமா நம்ம வீட்டு கொழுக்கட்டையை சாப்பிடுவாரு. அதனால நாலு கொழுக்கட்டையாவது பூஜை அலமாரியிலேயே வச்சுடும்மா. அப்பதான் நான் சாப்பிடுவேன்” என்று அடம்பிடித்தேன்.

“”ஆமாம் வாணி… போனா போவுது நாலு கொழுக்கட்டையை பூஜை அலமாரியிலேயே வச்சிடேன். என்னக் குறைஞ்சிடப்போவுது?” என்றார் அப்பா.

“”சரி… சரி… நான் அங்கேயே வச்சுத் தொலைக்கிறேன். முதல்ல நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடியுங்க. நான் சாப்பிடணும். காலைல 4 மணிக்கு எந்திரிச்சது. இன்னும் வேலை ஓயல..” -அம்மா சலித்துக் கொண்டாள்.

பிள்ளையார் அருகே இருந்த கொழுக்கட்டை, எலி வாகனம் அருகே வைக்கப்பட்டிருந்த எள்ளுருண்டைகளைப் பார்த்தவாறே திருப்தியாக சாப்பிட ஆரம்பித்தேன். அத்துடன் “”பிள்ளையாரே… எங்க வீட்டுக் கொழுக்கட்டை ஒன்றையாவது நீ சாப்பிடணும்னு” என மனசார வேண்டிக்கிட்டேன்.

மதியம் 2 மணி. உண்ட களைப்பில் அம்மாவும், அப்பாவும் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தனர். நான் பூஜை அறையிலேயே பிள்ளையாரின் அழகை ரசித்தபடி படுத்திருந்தேன். சற்று நேரத்தில் உறங்கியும் போனேன். ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். திடுமென ஏதோ சப்தம் கேட்டு எழுந்தேன்.

ஆஹா… என்ன ஆச்சர்யம்? பூஜை அலமாரியில் பிள்ளையாருக்குப் பதிலாக அவருடைய வாகனம் எலி வந்து உட்கார்ந்திருந்தது. அது தன் இரண்டு கால்களாலும் (கைகள் என்றும் சொல்லலாமே) ஒரு கொழுக்கட்டையைப் பிடித்துக்கொண்டு பரபரவென சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

“”அம்மா… அம்மா…” என்று பரவசத்துடன் கத்த ஆரம்பித்தேன். அம்மா என்னவோ ஏதோவென்று பதறி அடித்து எழுந்தாள். கூடவே அப்பாவும்.

“”அம்மா… பிள்ளையாரு என்னோட பிரார்த்தனைய ஏத்துக்கிட்டாரு. அவரு வரலைன்னாலும், அவரோட வாகனமான எலியை அனுப்பி கொழுக்கட்டையை சாப்பிட்டுக்கிட்டிருக்காரு”என்றேன் மிகுந்த உற்சாகத்தோடு.

ஆனாலும், எலி என்ற சொல்லைக் கேட்டதும் அம்மா மிகவும் கிலி பிடித்தாற்போல் ஆகிவிட்டாள். “”என்னது எலியா?” என்றபடியே வேக வேகமாக பூஜை அறைக்கு ஓடி வந்தாள்.

“”எங்கே எலி…? எங்கே எலி…?” என்று கத்தினாள்.

நான் பூஜை அலமாரியைக் காட்டினேன். ஆனால், அங்கே எலி இல்லை. அது மாயமாக மறைந்து விட்டிருந்தது. அம்மா போட்டக் கூச்சலில் அது பயந்து ஓடிவிட்டிருக்கும் என்று புரிந்தது.

“”அதுக்குத்தான் நான் பூஜை அலமாரியில் தின்பண்டம் எதுவும் வைக்கிறதில்ல. சொன்னா கேட்டாதானே…” என்ற அம்மா, அடுத்த கணம் அப்பாவைப் பார்த்து, “”ஏங்க… இதுநாள் வரைக்கும் நம்ம வீட்ல எலித் தொல்லை இல்லாம இருந்துச்சி. .இப்போ வந்துடுச்சு. இனி அது அடிக்கடி இங்கே வரும். துணி மணி எல்லாத்தையும் கடிச்சு பாழாக்கிடும். அத்தோட எலியின் சிறுநீரினால் லெப்டோபைரஸ் என்ற எலிக் காய்ச்சல் நோய் வேற வந்திடுமாம். நீங்க கடைத்தெருவுக்குப் போய் நாட்டு மருந்துக் கடையில் உடனே எலி விஷம் வாங்கியாந்துருங்க. இல்லேன்னா நாம நிம்மதியா இருக்க முடியாது” என்று அரற்றினாள்.

“சரி… சரி…’ என்றவாறே அப்பா மீண்டும் படுக்கப் போயிட்டார்.

அம்மா மீண்டும், “”என்னங்க… இன்னைக்கு புதன்கிழமை. மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமையா வருது. பிள்ளையாரேஅன்னைக்கு கொண்டுவிட முடியாது. அதனால இன்னைக்கு சாயந்தரமே பிள்ளையாரக் கொண்டு போய் கடலில் போட்டுட்டு வந்துடுங்க. அத்தோட எலி விஷமும் மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க. என்ன நான் சொல்றது காதுல விழுந்ததா?” என்று வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்பா மீண்டும் “சரி… சரி…’ என்றவாறே பாக்கி தூக்கத்தைத் தொடர்ந்தார்.

நான்தான் திகைத்துப் போனேன்.

இந்தப் பெரியவங்கள நம்மாள புரிஞ்சுக்கவே முடியல்லையே. காலைல பிள்ளையாரை சாமி சாமின்னு கொண்டாடினாங்க.. இப்ப என்னடான்னா…?

பிள்ளையாரைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது.
+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:53 pm

பல்லி
--------
கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய் ஆகப்போவது ஒன்றுமில்லை. சாவகாசமாக பத்திரிகைகள் விற்கும் கடை முகப்பில் மாலை தினசரிகளின் போஸ்டர்களைப் படித்தார்.

குட்ரோவிச்சி நிரபராதி! போஃபர்ஸ் பீரங்கி கொள்முதல் விஷயத்தில் அவரை இந்தியா வரவழைத்து விசாரிப்பது தேவையற்றது-பிரதமர் திட்டவட்டம்

2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டால் தமிழனின் பெருமை உலக அளவில் உயர்ந்துள்ளது- கட்சிப் பிரமுகர் பெருமிதம்

நாடாளுமன்றத்தை குண்டு வீசித் தகர்க்க முயன்றவரின் மரண தண்டனை ரத்து பற்றி ஜனாதிபதி பரிசீலனை…

அவ்வளவு தான் இன்றைய செய்திகள் என்று ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தார் கதிர். ரயில்நிலையத்துக்கு வெளியில் வாகனப் பாதுகாப்பு கீற்றுக் கொட்டகையில் இவரின் டூ வீலர். தினமும் அவர் பணி முடிந்து வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகும். இன்று தான் மஞ்சள் வெயில் மறையும் நேரத்தில் வருகிறார்.

“”ஐநூறு ரூவா பணம் கட்றியா? ஜெயிலுக்குப் போறியாங்கிறத நீயே முடிவு பண்ணிக்க…”

டூட்டி ஸ்டேஷன் மாஸ்டர் அறையைக் கடக்கையில் அங்கே சிறு கூட்டம். கதிர்வேலு நின்று பார்த்தார்.

“”அய்ய! இது இன்னா அநியாயமா கீது? நா பெரிய கொல குத்தமாப் பண்ணீட்டேன்? இனிமே இது மாதிரி செய்யாதடி, போடின்னு என்னை எச்சரிக்கைப் பண்ணி விரட்டி விடு சாரு. அய்நூறு, ஆயிரம்கற?”

“”நீ தப்புப் பண்ணிட்டு எங்க கிட்ட வாக்குவாதம் வேறயா? கூச்சல் போடாம இந்த ரூம்லயே இரு. போலீஸ் வரும் உன்னை இட்டுனு போவ”

பொங்கலுக்கு அரசாங்கம் தந்த இலவச சேலை உடுத்திய ஐம்பது வயதுப் பெண். நெற்றியின் உச்சியில் குங்குமம். கறுப்பு நிறம். நடுத்தர உடல்வாகு. வெற்றிலைக் காவிப் பற்கள். அவள் கையில் மஞ்சள் துணிப்பை ஒன்று.

“”சாரூ, காளிகாம்பா தரிசனத்துக்குப் புறப்பட்டேன். என் மருமவ மாசமா இருக்கா. அவளையும் அவ ஆத்தாளையும் கோயில்ல வெயிட் பண்ணச் சொன்னேன். அவங்க எனக்காகக் காத்திருப்பாங்க. போய் ஒரு அர்ச்சனைப் பண்ணி வரக் கிளம்பியவளை இப்படி மடக்கிப் போட்டுட்டியே!”

டிக்கெட் கலெக்டர்கள் இரண்டு பேர் அவளைச் சுற்றி நின்று கேலியாகச் சிரித்தனர். “”சாமி கும்பிட வந்ததா ஏன் புளுகறே? சாமி கண்ணைக் குத்திடும். பக்தி உள்ளவ இப்படி தப்பு செய்யலாமா?”

“”அக்காங், பொல்லாத தப்பு கண்டுபிடிச்சுட்ட! தினோம் ரயில்ல டிக்கட் வாங்காம நூறு பிச்சக்காரன் பாட்டுப் பாடி நம்ம காதை அறுக்கறான், அவனைப் புடிக்க மாட்டீங்க. நா ஒயுங்கா டிக்கெட் வாங்கினேன். என்னை இங்க உக்காத்தி பேஜார் பண்றியே!”

“”நீ எந்த கிளாஸ் டிக்கட் வாங்கி எந்த கிளாஸ்ல ஏறின? உன் அப்பன் வூட்டு ரயிலா?”

“”பிளாட்டுவாரத்ல நுழைஞ்சேன். ரயில் வந்திட்டுது. கிளம்பிடுங்ற பயத்துல ஒரு பொட்டீல ஏறினேன். பாத்தா அது ஃபஸ்ட்லாசு. சரி அடுத்த ஸ்டேசன்ல மாறிடுவோம்னு…”

“”நாங்க உன்ன செக் பண்ணலேன்னா பீச் வரை குசாலா ஃபஸ்டு கிளாஸ்லயே போயிருப்ப!”

“”சத்தியமா நா அப்படிப்பட்டவ இல்ல சாரு. என்னைப் போக விடு”

“”நீ பணம் கட்டாம இங்கேந்து போக முடியாதும்மா. ஜட்ஜ் வருவாரு. போலீஸ் வரும். அதுவரை இங்கேயே சத்தம் போடாம இரு”

“”சார், என் சுருக்குப் பைல இருபத்தி அஞ்சு ரூவா இருக்குது. அர்ச்சனைத் தட்டுக்குப் போக அஞ்சு ரூபா மீறும். அத சூடத் தட்டுலப் போட்ருவேன்”

“”நல்லதாப் போச்சி! எடு! எல்லாரும் டீ சாப்டுவோம். இவ்வளவு நேரம் உன்னோட கத்தி எங்க தொண்டையும் வறண்டு போச்சு. வேண்ணா ஃப்ரீயா ஒரு ஃபோன் பண்ணிக்க. உன் வீட்லேர்ந்து இங்க வந்து பணம் கட்டி உன்னை மீட்டுட்டு போவட்டும்”

“”அநியாயம் சார் இது. இவன்களுக்கு கேஸ் புடிக்க துப்பு இல்ல. கிடைச்ச ஒரு படிப்பறிவு இல்லாத பொம்பளையை இப்படி வாட்றாங்களே! பல்லி நாக்குல பூச்சி விழுந்தா அது கதி அவ்வளவுதான்” என்றார் வேடிக்கை பார்த்த ஒருவர்.

“”நீங்க வேறங்க! இதுங்களுக்கு இதே வேலை. மாட்டிக்கிட்டதும் நீலிக் கண்ணீர் விடுதுங்க. இதுகளை இப்படி ஒரு தடவையாது தண்டிச்சாதான் புத்தி வரும். முழியையும் மோரையையும் பார்! சரியான திருட்டுக் களை” என்றார் கதிர்வேலு.

நடந்தார்.

மறுநாள் காலை பத்து மணி.

கிண்டி ரயில் நிலையம் எதிரே பேருந்து நிறுத்தம். ஒரு மாநகரப் பேருந்து வந்து நின்றது. முன்புறம் இறங்கும் வாசலில் இருவர், பின்புறம் ஏறும் வாசலில் இருவர் சீருடை அணிந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நின்றனர்.

“”ஆமா! இவங்க இப்பத்தான் முகூர்த்தம் பாப்பாங்க. ஏற்கெனவே மூணு எடத்துல நிறுத்தி நிறுத்தி டிக்கெட் போட்டதுல கட்டை வண்டி மாதிரி ஊருது. ஆபிசுக்கு நாம் லேட் இல்லாமப் போய் சேர்ந்த மாதிரிதான்” பஸ்ஸின் உட்புற நெரிசலில் பிதுங்கி மனம் வெதும்பிய ஒரு நிற்கும் பயணி எரிச்சல் பட்டார்.

“”அது என்னவோ செக்கருங்கன்னாலே உயரமும் குண்டுமா வஞ்சனை இல்லாத உடம்புக்காரங்களாத்தான் இருக்காங்க. அப்படிப்பட்டவங்களைத்தான் செக்கிங் இன்ஸ்பெக்டரா எடுப்பாங்க போல! பாத்தாலே வயித்தக் கலக்கி நம்பர் டூ வந்துடும் சங்கட உணர்வு…” என்றார் மற்றொரு பயணி.

“”ரைட் போ, போ. ஓ.கே. உம், உம், சரி”, எட்டுப் பேர் தங்கள் டிக்கெட்டுகளை ஒழுங்காகக் காண்பித்து நகர, சிக்கினான் அய்யா ஒரு சிறுவன் வசமாக! சட்டைப் பையில் கை விடுறான். அரை டவுசர் பாக்கெட்டில் தேடுறான். நெளிகிறான்.

“”வாங்கினேனே எங்கே பூட்டுது?”

“”இப்படி இரு” என்று அந்தப் பையனின் சட்டை பின் காலரை இழுத்து ஒருபுறம் நிறுத்துகிறார் ஓர் இன்ஸ்பெக்டர்.

“”என்னடா, திருட்டுப் பயலே, உன்னைக் கவனிச்சிட்டுத்தான் வரேன். தினமும் ஓசி பயணம் செய்ல. இன்னிக்கு மாட்ன. எவ்வளவுடா துட்டு வச்சிருக்க?”

“”சார், நான் அப்படி செய்றவன் இல்ல. இஸ்கோல்ல படிக்றேன். வாங்கின டிக்கட் எங்கயோ தாரவாந்துப் போச்சி…” கை கூப்பினான்.

“”ஜீப்ல ஏறுடா! மூஞ்சில போக்கிரிக் களை! பொய் வேற. போலீஸ்ல ஒப்படைச்சாத்தான் திருந்துவ”

பின் கழுத்தில் பொளேர் அறை. பையனின் ட்ரவுசர் பையில் கை விடுகிறார் செக்கிங் இன்ஸ்பெக்டர் கதிர்வேலு.

“”தோ வெச்சிருக்கியே ரூபா”

“”அய்யா, அந்த ஐநூறு என்னது இல்ல. எங்க ஆத்தா வேல செய்ற வூட்டம்மா ஏதோ ரெண்டு பக்திப் பொஸ்தகம் வாங்கியான்னு குடுத்த துட்டு. அவங்க குறிச்சிக் குடுத்த துண்டுச் சீட்டு வேணாலும் காட்றேன்…”

“”கத விடாதடா கழுத! பிக்பாக்கெட் அடிச்சியோ?” இன்னும் ரெண்டு அறை.

“”திரும்பிப் பார்க்காம ஓடு! அறைஞ்சே கொன்னுடுவேன்”

“”கதிர்வேலு, கவனம் அந்தப் பையன் ஏமாத்திட்டு ஓடிருவான்!” என்று ஒரு இன்ஸ்பெக்டர் குரல் கொடுத்தார்.

சிறுவனிடம் பறித்த ஐநூறைப் பத்திரமாக தன் சட்டைபாக்கெட்டில் பதுக்கிய கதிர், “”ஒழிஞ்சுப் போறான்யா அறியாப் பையன். டே! ஓடுடா, அடிபட்டுச் சாவாத…” என்று பையனை கழுத்து கை வைத்துத் தள்ளினார்.

அன்று பிற்பகல்

சதீஷ் வடபழனி முருகன் கோவில் அருகில் பேருந்தில் செல்கையில் “டாடி, மம்மி வீட்டில் இல்ல…’ என்று அவன் அலைபேசி பாடியது.

“”…ஹாங் வந்துகிட்டிருக்கேன்டா. இன்னும் நிமிஷம்”

சதீஷ் ஒரு தனியார் நிறுவன மென்பொறியாளர். வேலையில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆயிற்று என்பதால் இன்னும் இரு சக்கரம் வாங்கவில்லை.

அன்று அவன் ஆபிஸ் செல்லவில்லை. ஸ்டெர்லிங் சாலை முனையில் அவன் நண்பர்கள் நால்வர் காத்திருப்பார்கள். நல்ல ஓட்டலில் சாப்பாடு. தியேட்டர் ஒன்றில் மேட்னி என்று குதூகலம் தொடரும்.

மறுபடி செல்போன். மறுபடி,மறுபடி.

“”அடடா! என்னடா இப்படி பொறுமையில்லாத பசங்களா இருக்கீங்க? வந்துகிட்டிருக்கேன்ல?”

பேருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் நின்றது. “ஏன் அதிக நேரம் நிற்கிறது? ஓ! செக்கிங்கா! பத்து நிமிடம் பயணத் தடையா! எத்தனை கால் கொடுப்பான்களோ? அலைபேசியை சைலன்ட் மோடில் வைப்போம்…’

“”மிஸ்டர் டிக்கெட்!”

“”தோ சார்”

சதீஷ் தன் பாக்கெட்களில் கைவிட்டு, விட்டு, விட்டு…

“”இருக்கா இல்லியா தம்பி?”

சட்டைப் பையில் இருந்து திரும்பத் திரும்ப அலைபேசியை எடுப்பதும், வைப்பதுமாக இருந்ததில் எங்கோ காற்றில் பறந்தோடி விட்டது போலும்.

“ஐயோ இப்ப என்ன செய்ய?’

“”எந்திரிடா! பெரிய லாடு கணக்கா சீட்ல உக்கார்ந்திருக்கான். நடடா!” சட்டை பின்காலரில் இன்ஸ்பெக்டரின் கை.

“”சார், அடாபுடாங்காதீங்க. நான் படிச்சி, நல்ல வேலை…”

“”மொத இறங்குடா”

சதீஷுக்கு அவமானமாக இருந்தது. ராட்சசர்கள் போன்ற இந்த செக்கிங் இன்பெக்டர்களிடம் மேலும் ஏதாவது பேச முயன்றால், பொது இடம் என்றும் பாராமல் அவர்கள் கெட்ட வார்த்தையால் வசை மழை பொழியலாம். பேருந்தைவிட்டு இறங்கி நின்றான்.

“”டே, உன்னத்தான்டா, ஜீப்ல ஏறு…”

“”சார், ரெண்டே நிமிஷம் வெயிட் பண்ணுங்க. என் நண்பர்கள் வந்திடுவாங்க பணத்தோட…”

“”நீ ஜீப்ல ஏறுடா” இரண்டு பேர் அவனைத் தூக்கி ஜீப்பில் திணித்தனர். “”ஏழுமலை, உம் போ!”

“”சார், நீங்க ரொம்ப ஓவரா போறீங்க. நான் ஒரு என்ஜினியர்”

“”டேய், ஒனக்குப் பேசவே தகுதி கிடையாது. குற்றவாளி, குற்றவாளிதான். நீ என்ஜினியரா? ரெüடிப் பய மாதிரி இருக்க, பொய் வேற…”

“”சார், ப்ளீஸ்…”

ஜீப் விரைந்தது. நான்கு இன்ஸ்பெக்டர்கள் தங்கள் இலாகா பற்றி தங்களுக்குள் ஏதேதோ பேசினர்.

“”சார், என்னை எங்கே கொண்டு போறீங்க?”

“”போனதும் தெரிஞ்சுப்படா”

“”சார், என்னை ஏன் ரெட்ஹில்ஸ் பக்கம் கூட்டிப் போறீங்க?”

“”கவர்னர் மாளிகைக்கு கூட்டிப்போய் உன்னை மாதிரி ஆள்களுக்கு விருந்து வைப்பாங்களா?”

“”சார், நான் யாருனு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க. எங்கப்பா…”

“”போடா! உன் அப்பன் ஜில்லா கலெக்டரா? எங்க தலையை சீவிடுவானோ?”

“”சரி, உங்ககிட்ட மரியாதையை எதிர்பார்க்க முடியாது. என்னை முழுசாப் பேசவும் விட மாட்டேங்கறீங்க”

“”டேய், போலீஸ் கிட்டேயும் எங்க கிட்டேயும் மாட்டாத வரைதான் மரியாதை, கிரியாதை எல்லாம். மாட்டினா எவனா இருந்தாலும் அவ்ளோதான்”

ஜீப் நின்றது

“”சரி, சரி இருக்கிற பணத்தை எடு!”

“”முந்நூத்தி அம்பதுதான் சார் இருக்குது. ரசீது கொடுப்பீங்க இல்ல?”

“”ஒத தான் கொடும்போம்”

“”நான் போகலாமா சார்?”

“”டே, அந்த செல்போன்”

“”இதுவுமா! தரமாட்டேன்”

“”மரியாதையா குடுத்திடு…”

சதீஷ் ஒரு போக்குவரத்து போலீஸ்காரரைக் கண்டு அவரிடம் ஓடினான்.

“”சார், இந்த அநியாயத்தக் கேளுங்க”

“”பணம் தான் வாங்கீட்டீங்க இல்ல? எதுக்கு செல்போனைக் கேக்குகிறீங்க?” என்றார் போலீஸ்காரர்.

“”மவனே, இன்னக்கி நீ முழிச்ச முகம் நல்ல முகம்டா!”

ஜீப் கடுப்புடன் புறப்பட்டுச் சென்றது.

கோபத்துடன் செல்போன் பட்டனை அழுத்தி செக்கிங் இன்ஸ்பெக்டர் கதிர்வேலுவை அழைத்து அழும் குரலில் சதீஷ் சொன்னான், “”அப்பா, நீ எல்லாம் இந்த இலாகால வேலை செஞ்சும் எனக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தியா?”

- ரா.கண்ணன் மகேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:55 pm

கா(ஞ்)சித் துண்டு
-----------------
பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான எதையாவது அல்லது நம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களில் எதையாவது விட்டுவிடச் சொல்லுவார்கள். பெரியவர் ராகவனும் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார். அதாவது அவர் விரும்பி உபயோகிக்கும் காசித் துண்டை விட்டுவிடத் தீர்மானித்தார்.

எதையும் ரசித்து செய்யும் ராகவனுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு பழக்கமுண்டு. காசித்துண்டு என சொல்லப்படும் ஒரு வகை காவி நிறத்துண்டை தேவைப்பட்டபோது வாங்குவார். அந்தத் துண்டினால் என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? அந்தத் துண்டு மெலிதாக இருக்கும். அதன் காரணமாக குளித்துவிட்டு துடைத்துக் கொள்ள உடலுக்கு உறுத்தாத வண்ணம் இருக்கும். கொடியில் போட்ட குறுகிய நேரத்திலேயே காய்ந்துவிடும். பெட்டியில் அடுக்கும்போது அதிக இடம் அடைக்காது.

காசித்துண்டை உபயோகிக்க இவ்வளவு வலுவான காரணங்கள் இருந்தும் காசிக்குப் போனால் முதலில் இந்தக் காசித்துண்டை விட்டுவிடலாம் என்று அவர் செய்ததற்கு முக்கியமான காரணம் உண்டு. அவரிடம் இருந்த துண்டுகள் எல்லாம் நைந்துவிட்டன. அதனால் மீண்டும் காசித்துண்டு வாங்க வேண்டும் என்று ஒருநாள் அவர் மனைவிடம் தைரியமாகச் சொன்னார்.

எதையுமே சற்று நிதானித்து யோசித்துச் செய்யும் அவர் மனைவி ராஜம் சற்றும் தாமதியாமல் உடனே, “”சரி வாங்கிவிடுவோம்” என்றாள்.

அப்போதாவது அவர் யோசித்திருக்க வேண்டும். தவறினார்.

மறுநாள் அவர் மனைவி ராஜம் அவளாகவே, “”ஏங்க, காசித்துண்டு வாங்கணும்னு சொன்னீங்களே” என்று நினைவூட்டினாள். சாதாரணமாக இவர் ஏதாவது சொன்னால் கண்டுகொள்ளாமல் இருக்கும் ராஜம், இன்று அவளாகவே வலிய வந்து இவர் தேவையை நினைவூட்டினாள். அப்போதாவது அவர் கவனித்து யோசித்திருக்க வேண்டும்.

“”ஏங்க, எப்பவுமே காசித்துண்டு காஞ்சிபுரத்தில் நல்லா இருக்கும். நாம ரெண்டு பேரும் காஞ்சிபுரம் போயி காசித்துண்டு வாங்கி வரலாமா?” என்று கேட்டவுடன் மயங்கிப்போய், அடடா நம் மேல் எவ்வளவு அக்கறை என்று மகிழ்ந்தாரே, அப்போதாவது அவர் யோசித்திருக்க வேண்டும்.

வீட்டருகே உள்ள பல கடைகளில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் காசித்துண்டு, அதற்கு ஏன் காஞ்சிபுரம் போக வேண்டும் என்று யோசனை வந்தாலும், துண்டு நல்ல தரமாக காஞ்சிபுரத்தில்தான் கிடைக்கும் என்று மனைவி கூறியதன் மர்மத்தை அவர் அப்போதாவது யோசித்திருக்க வேண்டும்.

அவர் எண்ண ஓட்டத்தை படித்தவள் போல்,”"காஞ்சிபுரம் போய் ஏன் துண்டு வாங்க வேண்டும். இங்கே கிடைக்காதா? என்றுதானே யோசிக்கிறீங்க” என்றாள் ராஜம். அதற்கு அவளாகவே ஒரு விளக்கமும் அளித்தாள். “”காஞ்சிபுரம் போய் துண்டு வாங்கும் சாக்கில் அப்படியே காஞ்சி காமாக்ஷியையும், வரதராஜரையும் அங்கே உள்ள மற்ற திருத்தலங்களையும் தரிசித்து வரலாமே, ஒரு கல்லில் இருமாங்காய்” என்றாள் ராஜம்.

மறுநாள் காஞ்சிபுரம் போக ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்தார்.

ராஜம் யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.

பேசி முடித்துவிட்டு ராகவனிடம் திரும்பிய ராஜம், “”ஏங்க, எப்படியும் நா கார்லதானே போய்ட்டு வரப் போறோம். என் தங்கை கல்யாணியும் வரேங்கறா, கூட்டிட்டுப் போலாமா?” என்றாள்.

அவருக்கும் அது நியாயமாகவே தோன்றியது.

“”சரி வரச்சொல்லு” என்றார். அப்போதாவது யோசித்திருக்கலாம்.

“”ஏங்க இப்போ கல்யாணி வரும்போது அவளோட குழந்தைகளை யார்கிட்ட விட்டுட்டு வருவா? அதுனால குழந்தைகளையும் அந்தக் குழந்தைகளைப் பொறுப்பா பாத்துக்க அவளோட மச்சினர் பொண்ணு ராதிகாவையும் கூட்டிண்டு வரேன்னு சொன்னா” என்றாள். “”சரி” என்றார் ராகவன்.

“”அதுனாலே சின்னக் கார் போறாது, பெரிய காரே ஏற்பாடு செஞ்சிருங்கோ” என்றாள். அதற்கும் சரி என்றார் ராகவன்.



மறுநாள் காலையில் குளித்துவிட்டு பெரிய காரில் ராகவனும், ராஜமும் ஏறி அமர்ந்தனர்.

“”ஏங்க நாம் போற வழியிலதானே தாம்பரம். அங்கே இந்து மிஷன் ஹாஸ்பிடல் கிட்ட கல்யாணி வந்துடறேன்னு சொன்னா. அங்க போயி அவங்களையும் கூட்டிகிட்டு போகலாம்” என்றாள் ராஜம்.

கார் விரைந்தது.

“”சார் ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்க டீசல் போட்டுக்கறேன். அப்புறமா கணக்கு பார்த்துக் கழிச்சிக்கலாம்” என்றார் டிரைவர். ராகவன் சரி என்றார். தாம்பரம் போய் கல்யாணி, ராதிகா மற்றும் குழந்தைகள் கிஷோர், ஜனனி எல்லோரையும் ஏற்றிக்கொண்டு அப்படியே ஹைவே ஹோட்டலில் போய் கார் நின்றது காலை உணவுக்காக. காலை உணவு முடித்துவிட்டு ஹோட்டலுக்கு ரூ. 400. அதன் பிறகு வெளியே இருந்த கடையில் குழந்தைகள் விளையாட பொம்மைகள் எல்லாம் வாங்கிக் கொண்டு ஆக மொத்தம் ரூ. 1500 செலவில் கார் தாம்பரத்தைத் தாண்டி நெடுஞ்சாலையில் விரைந்தது. டோல்கேட்டில் அவர்கள் கேட்ட பணத்தை ராகவன் தன் பையிலிருந்து எடுத்துக்கொடுக்க டோல்கேட்டையும் தாண்டி ஒரு வழியாக காஞ்சிபுரம் வந்தாயிற்று.

“”ஏங்க, முதல்லே நாம பச்சையப்ப முதலியார் கடைக்குப் போயி காசித்துண்டை வாங்கிட்டு, அப்புறம் கோயிலுக்கெல்லாம் போகலாம்” என்றாள் ராஜம். அப்போது மணி காலை 9.

கார் பச்சையப்ப முதலியார் கடைக்கு முன்னால் நின்றது. அனைவரும் கடைக்குள் சென்றனர். அதற்குள்ளாகவே அந்தக் கடையில் பெண்கள் கூட்டம்.

“”நீங்க அதோ அங்கே காசித்துண்டு இருக்கு. அந்தக் கெüண்டர்லே வாங்குங்க. நாங்க சும்மா உள்ளே போயி பட்டுப் புடவையெல்லாம் புதுசா ஏதாவது வந்திருக்கான்னு பார்த்துட்டு வந்துடறோம். ஜானகி கல்யாணத்துக்கு இங்கேதான் வாங்கப் போறோம்” என்றாள் ராஜம்.

“”நீங்க இந்தக் குழந்தைகளை உங்க கூட வெச்சுக்கோங்க” என்றபடி பெண்கள் கூட்டத்தில் கரைந்து காணாமல் போனார்கள் பெண்மணிகள். குழந்தைகளை வைத்துக்கொண்டு ராகவன் சமாளித்துக் கொண்டிருந்தார். கடை ஊழியர் சொன்னார், “”சார் ஒரு போன் போட்டு கேட்டுகிட்டு வரக்கூடாதா. காசித்துண்டு இருந்ததெல்லாம் வித்துப் போச்சு. நாளைக்கு வந்துடும்” என்றார்.

வெகுநேரம் பொறுமையோடு காத்திருந்து நாகரிகம் கருதி தன் கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு ராஜத்தை தேடிக்கொண்டு கடையுள்ளே பேந்தப் பேந்த விழித்தபடி உலாத்தினார் ராகவன். இரு புறமும் குழந்தைகளை கையில் பிடித்தபடி.

“”பெரியப்பா எனக்கு ஒண்ணுக்குப் போகணும்” என்றான் கிஷோர். கடைக்காரரை அணுகி, “”ஏம்பா இந்தப் பையன் ஒன் பாத்ரூம் போகணுமாம். பாத்ரூம் இருக்கா?” என்றார். ஒரு வழியாக அவர்களை அழைத்துக்கொண்டுபோய் கையெல்லாம் சுத்தம் செய்து அழைத்து வந்தார் ராகவன்.

ஜனனி, “”பெரியப்பா பக்கத்து தெருவுல ஒரு பட்டாணிக்கடை இருக்கு. நாங்க இங்க வரும்போதெல்லாம் எங்க அம்மா அங்க கூட்டிட்டுப் போயி சுடச்சுட கடலை வாங்கிக் கொடுப்பாங்க” என்றாள்.

இருவரையும் அழைத்துப்போய் “”கடலை கொடுப்பா” என்றார்.

அந்தக் கடைக்காரர் “”அடடே! வாம்மா! உங்க அம்மா வரலையா? அடிக்கடி வருவாங்களே” என்றார்.

ராகவனுக்கு திக்கென்றது. ஒரு வழியாக மீண்டும் கடைக்கு வந்து உள்ளே சென்று அவர்களைக் கண்டுபிடித்து “”என்னம்மா செய்யறீங்க மணியாச்சு, சீக்கிரம் வாங்க. கோயிலுக்குப் போகணும்” என்றார்.

கடை ஊழியர், “”சார் பொறுமையா இருங்க. இப்போ ஒரு மணி ஆவுது. கோயிலெல்லாம் மூடி இருப்பாங்க. நாலு மணிக்குத்தான் திறப்பாங்க” என்றார். சரி என்றார் ராகவன்.

“”சரி எல்லாருக்கும் பசிக்கும். எல்லாரும் போய் உங்க சாப்பாட்டை முடிச்சிட்டு வந்திருங்க. நீங்க கேட்டபடி எல்லாப் புடவையையும் எடுத்து வைக்கிறோம் வந்து பாருங்க” என்றார் கடைக்காரர்.

அனைவரும் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். கார் ஹோட்டல் சரவணபவனுக்குள் நுழைந்தது. அங்கே உட்கார இடம் கிடைக்காமல் காத்திருந்து பின்னர் ஒரு வழியாக கிடைத்த இடத்தில் உட்கார்ந்து உணவை முடித்துவிட்டு மீண்டும் கடைக்கு வந்தனர்.

முகமலர்ச்சியுடன் வரவேற்றார் கடைக்காரர். மீண்டும் குழந்தைகளோடு போராடி எப்படியோ சமாளித்துக்கொண்டிருந்தார் ராகவன்.

“”மணி நாலு. சரி கோயிலுக்குக் கிளம்பலாம்” என்றார். கையில் ஒரு பெரிய பட்டுப் புடவை மூட்டையுடன் ராஜம். கடைக்காரர் கொடுத்த ரசீதுச்சீட்டைப் பார்த்தார் ராகவன். ரூ. 10,318.00. தன்னுடைய பர்ஸிலிருந்த பணத்தை எடுத்து மெüனமாக அவரிடம் அளித்துவிட்டு கடையிலிருந்து கிளம்பினார்.

கடைக்கு வெளியே வந்தவுடன் கல்யாணி, “”ஐயோ, மறந்தே போச்சு. இன்னிக்கு ராத்திரி என் வீட்டுக்காரர் சிங்கப்பூருக்கு போறார். இனிமே கோயிலுக்கெல்லாம் போயிட்டு எப்போ வீட்டுக்குப் போறது. கோயிலெல்லாம் இன்னொருநாள் பாத்துக்கலாம். எங்க வீட்டுக்காரருக்கு இவரை மாதிரி எல்லாம் பொறுமை கிடையாது. கத்துவார்” என்றாள் ராகவனைக் காட்டி.

ராகவன் சரி என்றார். கார் நேராக தாம்பரம் வந்து கல்யாணி, ராதிகா மற்றும் குழந்தைகள் கிஷோர், ஜனனி எல்லோரையும் சேலையூரில் அவர்கள் வீட்டுக்குச் சென்று இறக்கி விட்டுவிட்டு வீடு திரும்பியது.

வாடகைக் கார் டிரைவர், “”சார், நீங்க 500 ரூபாய் கொடுத்திருக்கீங்க. அதுபோக மீதி கொடுத்தா போதும்” என்று சொல்லி ராகவன் கொடுத்த ரூ.1460-ஐ வாங்கிக் கொண்டு தலையைச் சொரிந்தார். புரிந்தது ராகவனுக்கு. தனியாக ட்ரைவருக்கு ரூ.100 அளித்துவிட்டு ராஜம் வாங்கியிருந்த புடவை மூட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். மின்சார வெட்டு, லிப்ட் வேலை செய்யவில்லை. இரண்டு மாடிகளை ஏறி வீட்டுக்குள் நுழைந்து பெருமூச்சுவிட்டார் ராகவன்.

மின்சாரம் வந்து விளக்குகள் பளீரென எரிய ஆரம்பித்தன. விர்ரென்று லிப்ட் இயங்கியது. ராஜம்,”"ஏங்க இந்தப் பட்டுப் புடவையை பாருங்க ஜொலிக்குதுல்ல” என்றாள்.

“”ஏங்க நம்ம அண்ணாநகர்லேயே காதி கிராமோத்பவன் இருக்கு. அங்கே போயி காசித்துண்டு வாங்கலாம்” என்றாள்.

“”சரி, அதை நான் பாத்துக்கறேன். இப்படி பொடி நடையா போயி வாங்கிட்டு வந்துடறேன்” என்றார் ராகவன்.

காசிக்குப் போனால்தானா எதையாவது விடவேண்டும்? ராகவன் யோசித்தார். சென்னையிலேயே காசித்துண்டை விட்டுவிடுவது என்று முடிவெடுத்தார். ராகவன் எப்போதுமே புத்திசாலி.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:57 pm

வரப்பு
------------
என்ன கோபாலு இந்தப்பக்கம்…? எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டியே…என்ன விசேஷம்?”

“”இல்ல மச்சான்…உங்களைத்தான் பாத்துட்டுப் போகணும்னு வந்தேன்”

“”வா…வா…உட்காரு! யம்மா…யார் வந்திருக்கான்னு பாருங்க…! நம்ம கோபாலு”

“”யப்பா…வா…ஆயிரம் வாட்டி இந்தத் தெருவுல போவ…ஆனா ஒரு வாட்டிகூட வீட்டுக்குள்ள வந்ததில்ல…இன்னைக்கு மச்சான் இருக்கான்னு தெரிஞ்சி வந்திரிக்கியாக்கும். எப்படியிருக்க? தொழிலெல்லாம் எப்படியிருக்கு…?”ன்னு கேட்டுகிட்டே குறுங்கட்டில்ல வந்து உட்கார்ந்தாங்க மாடசாமியோட அம்மா.

“”யய்யா…கோபாலு என்ன சோலியா வந்திருக்கானாம்…?”

“”தெரிலம்மா…இப்பத்தான வந்திருக்கான்” என்றான் மாடசாமி.

“”யய்யா…இரு; நான் காப்பித்தண்ணி கொண்டாரேன்”-எழும்ப முயன்ற அவர்களை…”"வேண்டாந்த்த…நீங்க உக்காருங்க அத்தை” என்று உட்கார வைத்தான்.

“”சரி, மாப்ள…என்ன ஏதும் விசேஷமா?”

“”விசேஷம்லாம் ஒண்ணுமில்ல மச்சான். நம்ம அய்யும்புள்ளி வயல் இருக்குல்ல…”

“”ஆமா இருக்கு…”

“”அதுக்குக் கிழக்குப் பக்கம் எங்க வயல் இருக்குல்ல…”

“”சரி”

“”அந்த வயலை வித்துடலாம்னு இருக்கேன்”

“”எதுக்கு மாப்ள அந்த வயலை விக்கிற?”

“”…”

“”எலே…உனக்குக் கிறுக்கு கிறுக்கு ஏதாச்சும் புடிச்சு போச்சா? அந்த வயலை எதுக்கு விக்கிற? நம்ம ஊர்லயே அதுதான் நல்லா விளையக்கூடிய வயலு…மழை தண்ணி இல்லன்னாலும், பாதாள மடைக்குப் பக்கத்துல இருக்குறதால, குளத்துல கொஞ்சமா தண்ணியிருந்தாலும் ரெண்டு எட்டுல வயலுக்குப் பாஞ்சிடும். மழைத்தண்ணி ஒழுங்கா இருந்தா மூணு போகமும் விளையும். அதைப்போய் விக்கப் போறேன்னு சொல்றியே! உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா…”- பொரிந்து தள்ளினார் மாடசாமியின் தாயார்.

“”இல்ல அத்தை… சூழ்நில அப்படி. அதை வித்துதான் சமாளிக்க வேண்டியிருக்கு”

“”சரி. அப்டிய விக்கணும்னா வேற காஞ்ச பூமி எதையாவது வில்லு…இல்ல அந்தக் கள்ளுக்கடை திரட்டுல இருக்குற நிலத்தை வில்லு. அய்யம்புள்ளி வயலைப் போய் விக்கணும்னு சொல்றியே”

“”அந்த…அந்த இடம் அவ்வளவு விலை போகாது. இந்த வயல்தான் நல்ல விலைக்குப் போகும். அதான் இதை விக்கலாம்னு வந்தேன்”

“”சரி மாப்ள. எதுக்கும் அவசரப்படாத. வேற வழியில சமாளிக்க முடியுமான்னு பாரு”

“”இல்ல மச்சான்…நல்ல முடிவு பண்ணிட்டுதான வந்திருக்கேன்”

“”யாரு என்ன விலைக்குக் கேக்குறாங்க… எதுவும் விசாரிக்கிறியா?”

“”இல்ல மச்சான்…யார் கிட்டயும் சொல்லல. உங்ககிட்டதான் முதல்ல வந்திருக்கேன்”

“”எங்கிட்டயா?”

“”ஆமாம் மச்சான், தெற்குப் பக்கம் புதுக்குடி ஊர்க்காரர் வயல், மேற்குப்பக்கம் உங்க வயலு, வடக்கயும், கிழக்கயும்…வாங்குற அளவுக்கு யாரும் இல்ல…அவனுவ ரெண்டு பேருமே இத்து போனவனுவ. ஒழுங்கா பணமும் வந்து சேராது. புதுக்குடிகாரருக்கு குடுக்குறது நியாயமில்ல! நீங்க நம்ம ஊரு, நம்ம சொந்தம், அதுமட்டுமில்ல. கொடுக்கல் வாங்கல்ல நீங்களும் உங்க அப்பா மாதிரி நியாயமானவங்க. அசலூருக்கு விக்கிறத அடுத்த வயல்காரங்க நீங்க உங்களுக்கு விக்கிறதுதான் நியாயம். நீங்க வாங்கீட்டீங்கன்னா அப்படியே வரப்பைத் தட்டி ரெண்டு வயலையும் ஒண்ணாக்கிடலாம்”-கோபாலு சொல்லிக்கொண்டே போனான்.

மாடசாமியின் நினைவுகள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தன.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்…

நேரம் கிடைக்கும்போதெல்லாம், அப்பாவுக்கு உதவியாக வயல்காட்டு வேலைகள் அத்தனையும் இழுத்துப் போட்டுச் செய்வான்.

ஒரு சமயம், ஊருக்குத் தெற்கே உள்ள அய்யம்புள்ளி வயலில் (தென்னை மரத்தடி வயல், கல்காவடி வயல், குளத்தங்கரை வயல், குப்பைத் திரடு வயல், கள்ளுக்கடை வயல்…என்று வயல்களை அடையாளம் சொல்வது ஊர் வழக்கம்) தண்ணீர் பாச்சுவதற்காக மண்வெட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு சென்றான்.

நல்ல உழவு நேரம், வயல் எல்லாம் தொழி அடித்து சேறும் சகதியுமாக இருந்தது. வரப்புல நடந்து போவதே சிரமமாக இருந்தது.

நடுவைக்கு முன்னால நாலுபக்க வரப்பில் உள்ள புல்லைச் செதுக்கி, வயலில் போட்டு, மிதித்து அதையும் உரமாக்கிவிடுவார்கள். வரப்பும் களையின்றி சுத்தமாகிவிடும்.

தெற்குப் பக்க வரப்பில் நடந்தது போய், கிழக்குப் பக்க வரப்பில் நடப்பதற்கு திரும்பினான்.

வரப்பு வரப்பாக இல்லை!

குறைந்தது முக்கால் அடி அகலமாவது இருக்க வேண்டிய வரப்பு மூன்று அங்குலம் கூட இல்லை.

முத்துப்பாண்டி மாமா (கோபாலுடைய அப்பா) அந்த அளவுக்கு வரப்பையெல்லாம் வெட்டி வயலுக்குள் வீசிக்கொண்டிருந்தார்கள்.

“”என்ன மாமா…வரப்பை இப்படி வெட்டுறீங்க? எப்படி நடந்து போறது?”

“”உன்னை எவன் வரப்புல போகச் சொன்னான்? உன் வயலுக்குள்ள இறங்கிப் போ”

“”என்ன மாமா… ரெண்டு பேருக்கும் பொதுவான வரப்பை நீங்க இப்படி வெட்டி வரப்பே இல்லாத மாதிரி ஆக்கிட்டிங்களே…”

“”அப்படித்தான்டா வெட்டுவேன்…இப்ப என்னல பண்ணணும்ங்கிற…?”

“”மாமா நீங்க பேசுறது நியாயம் இல்ல”

“”நியாயம் இல்லன்னு தெரிதுல்ல. பொத்திகிட்டு போயாம்ல. எதாவது பேசுன…கையில என்ன இருக்குதுன்னு பார்த்துக்க…”

அத்து மீறி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு நேரே வீட்டுக்கு வந்தான் மாடசாமி.

“”அப்பா…எங்க அம்மா…? அந்த முத்துப்பாண்டி மாமா இப்படிப் பண்றாங்க…”- ன்னு நடந்ததையெல்லாம் அம்மாவிடம் சொல்லிக் குமுறினான்.

“”சரி…சரி…ஆத்திரப்படாதய்யா…நீ படிச்ச புள்ள…அவுகளும் நீயும் ஒண்ணா? பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கினார் காடாள்வார். நீ பொறுமையாயிரு. வரப்பை வெட்டுனவன் வாழ்ந்ததில்லன்னு சொல்வாங்க. நமக்கு ஒரு குறையும் வராது” என்று மகனைச் சாந்தப்படுத்தினாள் அந்தத் தாய்.

****

“”என்ன மச்சான் என்ன யோசனை?”-கோபாலின் குரல் கேட்டு பழைய நினைவுகளில் இருந்து நிகழ்காலத்துக்குள் வந்தான் மாடசாமி.

“”என்ன மச்சான் இவ்வளவு யோசிக்கிறீங்க? அய்யம்புள்ளி வயல்னா அத்தனை பேரும் எனக்கு உனக்குன்னு வந்து நிப்பானுவ…நீங்க என்னடான்னா…”

“”அதுக்கில்ல மாப்ள…நீ வரப்பை தட்டிட்டு, ரெண்டு வயிலயும் ஒண்ணாக்கிடலாம்னு சொன்னியா…அதான் ஏதோ ஒரு நினைவு”

“”சரி என்ன மச்சான் சொல்றீய?”

“”இந்தா பாரு, எங்கம்மா சொன்ன மாதிரி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத. அது பொன்னு விளையிற பூமி! இன்னைக்குப் பணத்துக்கு அவசரம்னு வித்துட்டு, அப்புறம், நாளைக்கு நாலு காசு வந்த பிறகு, “அடடா அவசரப்பட்டு வித்துட்டோமே’ன்னு கலங்கப்படாது. அதனால ஒரு தடவைக்கு ரெண்டு தடவை, ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு நாள் யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வா”

“”ஆமாய்யா…தம்பி சொல்றது சரிதான்… நீ எதுக்கும் ஒரு யோசனை பண்ணிக்கய்யா”

“”இல்ல அத்தை… நான் விக்கணும்கிற முடிவுலதான் வந்திருக்கேன். அதுவும் உங்ககிட்ட விக்கணும்னுதான் வந்திருக்கேன்த்த…அதுல எந்த மாற்றமும் இல்லை” திடமாகச் சொன்னான் கோபால்.

****

வாங்கியாச்சு! பத்திரம் எல்லாம் பதிவு பண்ணி, பட்டா மாற்றுவதற்கும் ஏற்பாடு பண்ணாயாச்சி.

“”யய்யா…கோபாலு சொன்ன மாதிரி அந்த வரப்பைத் தட்டிட்டியன்னா ரெண்டு வயலும் ஒண்ணாயிடும்; உழுறதுக்கு நடுறதுக்கு எல்லாம் செüகரியமாயிருக்கும்ல…”

“”ஆமாம்மா…! ஆனா நான் அந்த வரப்பைத் தட்டமாட்டேம்மா! எந்த வரப்புல நடக்க முடியாம நான் வயலுக்குள்ள இறங்கி நடந்தேனோ அந்த வரப்பை எடுக்க வேண்டாம்மா.

அந்த வரப்புலதாம்மா புதுக்குடி ஊர் அண்ணாச்சி நடந்து போறாங்க; நாலுமாவடி அண்ணாச்சி வயலுக்குப் போகணும்னாலும் அந்த வரப்புல போறதுதான் அவுகளுக்கு செüகரியம்.

அந்த வரப்பு இல்லன்னா, அவங்கல்லாம் பல வயல்களைக் கடந்துதான் அவங்கவங்க வயல்களுக்குப் போகணும். அந்த வரப்பு இருந்திச்சின்னா எல்லாருக்கும் உதவியாயிருக்கும். அதனால் அந்த வரப்பை நல்லா ஒரு அடி அளவுக்கு அகலப்படுத்தி வச்சிருவோம் சரியாம்மா! நாலு பேருக்கு நல்லவனா இருந்தா மட்டும் போதாது, நாலு பேருக்கு உதவியாவும் இருக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்வாங்கள்ல…”

“”ஆமாய்யா…எம்புள்ளை…நீ எப்பவும் நல்லாயிருப்பய்யா…” மகனை அணைத்து முத்தமிட்டாள் அந்த அன்புத் தாய்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 9:59 pm

தொலைபேசி…
------------
மேலத்தெரு துரைச்சாமி வீட்டில் டெலிபோன் வைத்திருந்த செய்தி, கீழத்தெருச் சனங்களுக்குத் தேனாய் இனித்தது. இனி ஆத்திர அவசரத்திற்கு அவன் வீட்டுக்குப் போய் போன் பண்ணிக் கொள்ளலாம். கிழக்கே தூரம் தொலவெட்டில் இருக்கும் போஸ்ட் ஆபிசுக்கு அரக்கப்பரக்க ஓடிப்போய் போன் பண்ணிக் கொள்ள வேண்டியதில்லை. அதுவும் மழை பெய்து வெள்ளம் வரும் காலங்களில் ஓடையைத் தாண்டி போஸ்ட் ஆபிசுக்குப் போவதென்பது சிரமம் பிடித்தக் காரியமாக இருந்தது. கீழத்தெருவுக்கும் போஸ்ட் ஆபீசுக்கும் நடுவில் அகழி மாதிரி ஓடைக் கிடந்தது. “சீத்’தென்று மழை பெய்வதற்குள்ளே மணிமுத்தாறு அணையிலிருந்துத் திறந்து விடப்பட்ட நீர் வலை போட்டு அமுக்கியது போல ஓடையை நிறைத்தது.

போஸ்ட் ஆபீஸ் பக்கம் பெரிய பெரிய பணக்காரர்களின் வீடுகள் இருந்தன. ஊரிலிருந்த அநேக விளைநிலங்கள் அவர்களுக்குப் பாத்தியப்பட்டிருந்தன. கீழத்தெருச் சனங்களின் வயித்துப்பாட்டுக்கு அவைதான் வரும்படி தந்து கொண்டிருந்தன. மேலத் தெருக்காரர்களில் அநேக ஏழைகளும் கீழத் தெருச் சனங்களுடன் சேர்ந்து வயக்காட்டுச் சோலிகளைப் பங்குப் போட்டுக் கொண்டதுண்டு.

துரைச்சாமியின் வாழ்க்கைச் சக்கரம் வயல் தடங்களில் ஓடிக் கொண்டிருக்கவில்லை. மூதாதையர் சேமிப்பில் தளிர் விட்டிருந்த பணக்கிளைகளில் வட்டியைப் பூக்க வைத்துக் கொண்டிருந்தான் அவன். உள்ளூர் தெருக்களில் வாசம் பரப்பிய பூக்கள் அயலூர்கள் வரைக்கும் காற்றடித்து மணத்தன. பரிமாற்றங்களை உறுதிப்படுத்திக் கொள்ள அவன் வீட்டில் டெலிபோன் வைத்துக் கொண்டான்.

“”என்னடே முத்தையா… வூடு தேடி வந்திருக்க?”

“”அவசரம்.. அய்யாவப் பாக்கத்தான் வந்தென்..”

“”என்ன விஷயம்? வட்டிக்குப் பணம் வேணுமா?”

“”அதெல்லாம் வேண்டாங்க… வட்டிக்கு வாங்கனா என்னியால சமாளிக்க முடியாதுய்யா. நாகர்கோவில்ல இருக்கற எம் பொண்ணுக்கு ஒரு போன் பண்ணிக்கினும்யா..”

“”அவ வூட்லப் போன் வச்சிருக்காளா?”

“”இல்லய்யா. அவ மாப்ள செல் வச்சிருக்காரு…”

“”முன் ரூம்லலாடே போன் இருக்கு..”

“”நீங்க மனசு வச்சா முடியும்ய்யா…”

“”இப்படி அடுத்தவங்க வந்துப் போன் பண்ணா போன் பில்லு அதிகமால்ல வரும்?”

“”நாப் பேசறதுக்குத் தக்கன ரூவாத் தந்திரமுங்க..”

“”இப்பக் கையில எவ்ளவ் வச்சிருக்க?”

“”அஞ்சு ரூவா இருக்குய்யா..”

“”ஆங்… அப்படிச் சொல்றியோ. சரி. கொஞ்ச நேரந்தான் பேசணும். வளவளன்னுப் பேசி கழுத்த அறுக்கக் கூடாது. நம்பர் தெரியுமா?”

“”எம்மொவா பேப்பர்ல எழுதிக் குடுத்திட்டுப் போயிருக்காய்யா. ஒவ்வொண்ணா அதப் பாத்துப் பாத்து அடிச்சிக்குவேன்..”

“”கொண்டா… காச இப்பிடிக் குடு..”

“”அஞ்சு ரூவாயையுமாய்யா?”

“”பின்ன? ஒரு ரூவாய்க்குப் பேசிரலாமின்னுப் பாத்தியா? போன் வைக்க எவ்ளவ் செலவாயிருக்கு, போன் பில்லு எவ்ளவ் கொடுக்க வேண்டியிருக்கு தெரியுமா?”

“”சரிய்யா..”

முற்றத்தைத் தாண்டி முன்னறைக்குப் போனார் முத்தையா. சற்று அரிச்சலாக இருந்தது அவருக்கு. இதுவரை முற்றம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் கீழத்தெருக்காரர்கள். காசுக்காகவே அவரை முன்னறைக்கு அனுமதித்திருந்தான் துரைச்சாமி.

முத்தையாதான் துரைச்சாமி வீட்டுப் போனில் முதன் முதலாகக் காசு தந்து போன் பேசிக்கொள்ளும் காரியத்தை ஆரம்பித்து வைத்தார். நாளாவட்டத்தில் கீழத்தெருக்காரர்கள் சன்னஞ்சன்னமாய் வருகைத் தரத் துவங்கினர். ஐந்து ரூபாயை துரைச்சாமியிடம் தந்துவிட்டு அயலூர்களிலிருந்த தன் உறவினர்களுடன் அவசரத்தைப் பகிர்ந்துக் கொண்டனர்.
துரைச்சாமிக்குப் பணம் முக்கியம். அழுக்கைப் பொருட்படுத்தினால் பெட்டி நிறையுமா? அவர்கள் பேசிவிட்டுப் போனபிறகு ரிசீவரைத் துடைத்துக் கொண்டால் சுத்தமாகி விடுகிறது.

“”என்ன முத்தையா பம்மிக்கிட்டு நிக்கற? போன் பண்ணணுமா?”

“”ஆமாய்யா”

“”யாருக்கு?”

“”மெட்ராசுல இருக்கற எம்மொவனுக்குய்யா”

“”எவ்வளவு வச்சிருக்க?”

“”அஞ்சு ரூவா கரெக்ட்டா வச்சிருக்கன்யா..”

“”அஞ்சு ரூவாய்க்கெல்லாம் இப்ப போன் பண்ண முடியாதுடே. போன் பில்ல எல்லாம் ஏத்திப்புட்டானுங்க..”

“”அப்படின்னா எம்புட்டுய்யா தரணும்?”

“”பத்து ரூவா கொண்டா”

“”செத்த நேரந்தானேய்யா பேசுவேன். பசார்ல இருக்கற போன்ல பேசினாக்கூட மூணு ரூவாய்க்கு மேல வராதேய்யா… கொஞ்சம் கொறச்சிக்கங்க..”

“”அப்போ இங்க வந்துப் பேசாத. பசார்ல இருக்கப் போன்ளப் போயி பேசிக்க…”

“”என்னய்யா இப்பிடிச் சொல்லிப்புட்டிய? முன்னப்பின்னப் பழகாத ஆளுவகிட்ட சொல்லுத மாதிரி. பசாருக்கு இங்கயிருந்து மெனக்கெட்டு பஸ்ஸேரில்ல போவணும். ரொம்ப அவசரம்ய்யா இப்ப. நாவர்கோயில்லக் கெட்டிக் குடுத்திருக்க எம்மொவலோடப் புருசனுக்கு ரொம்ப சொவமில்லையாம். அவசரமா பணம் கேட்டு எம்பேத்திய அனுப்பியிருக்கா. அத எம்மொவன்கிட்ட சொல்லணும். அவந்தான் பணம் அனுப்பி வைக்கணும்யா. நாள மக்கிய நாள்லருந்து பத்து ரூவா வாங்கிக்கங்க. இன்னிக்கு எங்கிட்ட அஞ்சு ரூவாத்தாய்யா இருக்கு…”
அவரின் பீடிச் செலவுக்காக வைத்திருந்தக் காசுகள் அவை. இன்று வயக்காட்டுச் சோலிக்குக் கிடைத்த கூலியில் வீட்டுக்கு அரிசியும் குழம்புச் சாமான்களும் வாங்கிப் போட்ட பிறகு மீந்திருந்தக் காசுகள். பீடி வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் இடுப்பு வேட்டியில் சுருட்டிச் செருகியிருந்தார். சாயந்தரம் வீட்டுக்கு வந்தப் பேத்தியைப் பார்த்ததும் அவரின் திட்டம் திசை மாறிப் போனது.
“”அஞ்சு ரூவாய்க்கெல்லாம் பேச முடியாது. வீட்ல இருந்தா போயி எடுத்துட்டு வா. வீடு என்ன ரொம்பத் தொலைவிலயா இருக்கு?”
குறுக்காகக் கிடந்த மண் சாலையைக் கடந்தால் கீழத்தெருக் குடிசைகள். மூச்சைப் பிடித்துக் கொண்டு நடந்தால் மூணு நிமிச நடைத் தூரம்.
“”வூட்ல இல்லய்யா. உங்களுக்குத் தெரியாதா, நா ஒருத்தன் வேலப் பாத்துத்தான் எங்க ரெண்டுப் பேரோட வயித்துப் பாட்டக் கழிக்கோம். அவளுக்குத்தான் பக்கவாதம் வந்து ஒரு சோலிக்கும் போவமுடியாம கெடப்பிலே கெடக்குதாளே. அவளுக்கு மருந்து மாயம் கூட எஞ் சம்பாத்தியத்தில இருந்துதான் வாங்கிக் குடுக்கணும். மெட்ராசுல எம்மொவன்காரன் ஆட்டோ ஓட்டுரான்னுதான் பேரு. அவன் உண்டு, அவன் பொஞ்சாதிப் புள்ளைங்க உண்டுன்னு மொடங்கிக் கெடக்கான். எப்பமாவது சிலுப்பிக்கிட்டு வந்திட்டுப் போறான். கையில இருக்கக் காசையெல்லாம் தாறுமாறா செலவுப் பண்ணிட்டுக் கடேசில கடன் வாங்கிட்டுத்தான் ஊருக்குப் போறான். இந்தக் கொள்ளையில எங்கையில எப்படிய்யா காசு மிஞ்சும்?”
“”ஒஞ் சொந்தக் கதைய எல்லாம் கேக்க எனக்கு நேரமில்லடே. பத்து ரூவா இருந்தா வந்துப் பேசு. இல்லன்னா நடையைக் கட்டு. என் நேரத்தக் கெடுக்காத எரிச்சலாயிருக்கு..”
கருக்கல் கூடியிருந்தது. முற்றத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருந்த குழல்விளக்கு வெளிச்சத்தில் முத்தையாவின் வதங்கல் முகம் இருளடித்துப் போயிருந்தது. அறுபது வயசுக்கு மேலிருக்கும் அவருக்கு. காய்ந்த வாழைத் தழையைப் போல சதை மெலிந்தத் தேகம். இலைகளை உருவிவிட்டப் புளியம் விளார் மாதிரி ஒடிசலானக் கை, கால்கள். பாதி நரையும் பாதி கருப்பும் கலந்த கதம்ப முடிக்கற்றைகள். இடுப்பில் நாலு முழ வேட்டியும் மேலுக்குக் கறைப் படிந்த முண்டாப் பனியனும் அணிந்திருந்தார். அந்தக் காலத்து ரெண்டாங் கிளாஸ் படிப்பில் எழுத்துக்களை நியாபகப்படுத்தி வாசித்துக் கொள்ளும் திறமை மட்டும் குறைந்து விடாமலிருந்தது.
அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பத்து வயசுப் பேத்திக்கு ஆதங்கமாகத் தோன்றியிருக்க வேண்டும். “”வாங்க தாத்தா.. வூட்டுக்குப் போவொம்..” என்று அவரின் கையைப் பிடித்து இழுக்கத் துவங்கினாள். காம்பவுண்ட் சுவர் தாண்டி உள்ளே வந்து வீசியக் காற்றின் குளிர்ச்சியில் அவளின் இளந்தேகம் அதிர்வடைந்துக் கொண்டிருந்ததை அவர் உணர்ந்தார்.
வாசல் முகப்பில் கதவுச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு மிதப்பாக நின்றிருந்தான் துரைச்சாமி. தாட்டியமான உடல்வாகு, தடித்த முகத்தில் கத்தியைச் செருகி வைத்திருந்ததைப் போல விறைப்பான மீசை. அவன் உடுத்தியிருந்த வெள்ளைச் சட்டையிலும் வெள்ளை வேட்டியிலும் குழல் விளக்கின் வெளிச்சம் பதிந்து மின்னல்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
சம்பாஷணையின் அரவம் கேட்டு அவ்வப்போது அவனின் மனைவியும், டவுன் சட்டை அணிந்திருந்த மகனும் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போயினர். தன்னைக் கூர்ந்து முறைத்துவிட்டு அவர்கள் போயிருந்ததை அப்பட்டமாகத் தெரிந்து கொண்டார் அவர்.
முத்தையாவுக்கு அந்த இடத்தை விட்டு நகல மனசில்லாமல் இருந்தது. சுகவீனப்பட்டுக் கிடக்கும் மருமகனின் வேதனையான முகம் அவரின் நினைவை அலைகழித்தது. மருமகனுக்கு ஒன்று நிகழ்ந்து போனால் மகளின் குடும்பம் தெருவுக்கு வந்துவிடும். ரொம்பவும் சிக்கலான நோய் என்றால் பெரிதாகச் செலவு செய்துப் பார்க்கிற வசதியில்லை அவளுக்கு. மகன்தான் உதவிப் பண்ணியாக வேண்டும்.
“”அய்யா…”
“”ஒழுங்கா போறியா, இல்ல என்கிட்ட ஒதவாங்கப் போறியா?”
பேத்தியின் வேகம் அதிகமானது. தாத்தாயின் கையைப் பற்றி பலமாக இழுத்தாள். இனியும் அவர் செல்லவில்லை என்றால் அவள் அழுது கூப்பாடு போட்டு விடுவாள் என்பது உறுத்தியது.
தெருவுக்கு வந்தபோது நாய் ஒன்று அவர்களை எதிர்நோக்கி நின்று குரைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து அவர் உக்கிரமாய் முறைத்ததில், சட்டென்று குரைப்பை நிறுத்திவிட்டு முனகலோடு விலகிப் போனது.
வீட்டுக்கு வந்தார். அடுப்பில் உலை ஏறி இருந்தது. சக்கைப் பிள்ளையார் மாதிரி அடுப்புக்கு முன் உட்கார்ந்திருந்தாள் அஞ்சலை. பக்கத்தில் கிடந்த சுள்ளி விறகுகளை ஒவ்வொன்றாய் எடுத்து முறித்து அடுப்புக்குள் திணித்துக் கொண்டிருந்தாள். தீ வெளிச்சத்தில் அவளின் முகவாட்டம் துல்லியமாய்த் தெரிந்தது. வாத நோவில் தேகத்தை முன்னும் பின்னும் அசைத்துக் கொடுத்தவள், அவர்களைக் கண்டதும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு “என்ன?’ என்பதுபோல் அனிச்சையாய் ஏறிட்டாள்.

“”முந்திச் சேலையில துட்டு ஏதாச்சும் போட்டுருக்கியா..?”
“”ஒமக்குத் தெரியாம எங்கிட்ட ஏதுய்யா துட்டு?”
“”அவம்பாவம் பிடிச்ச தொரச்சாமிப் பய, அஞ்சு ரூபாய்க்குப் போன் பண்ணக் கூடாதின்னுட்டான்..”
“”பின்னே எம்புட்டாம்?”

“”பத்து ரூவா குடுக்கணுமாம்..”
“”ஒம்மகிட்ட எவ்ளவ் இருக்கு?”
“”அஞ்சு ரூவா. பீடி வாங்கணுமின்னு வச்சிட்டிருந்தேன். வேற துட்டுக்கு எங்கனப் போவேன்?”
“”பக்கத்து வூட்ல யாராச்சும் தரமாட்டாவளா..?”
“”அவிங்ளும் நம்மளக கெனக்காதான..?”
“”இப்ப என்னச் செய்யறது? மொவனுக்குப் போன் பண்ணாத்தான் ஏதாச்சும் பணம் அனுப்பி வைப்பான். மகா என்னப் பாடு படுதாளோ தெரியலியே..”

“”சரி அதுக்கு ஏன் அழுத? அரிசியை ஒலயிலப் போட்டுட்டியா?”
“”இல்ல, ஒல இன்னும் கொதிக்கல..”
“”சரி அதுல ஒரு கிலோ இருக்குலா? பாதிய எடு. வாங்கனக் கடையிலேயே குடுத்துட்டுக் காசு வாங்கிட்டு வாரேன்..”
“”பொங்கற அரிசியவா? காலையில சோத்துக்கு?”
“”நாளைக்குப் பட்டினி கெடந்தா என்ன, செத்தாப் போயிருவம்? அத எடு மொதல்ல..”
உள்ளூர்க் கடை என்பதால் கொடுத்து வங்குவதில் குழப்பமில்லாமல் போயிற்று.

இருள் இறுகிக் கிடந்தது. தெருவின் மேற்கு அற்றத்தில் அடர்த்தியாக நின்றிருந்த உடைமரங்களின் கிளைகளில் கொத்தாகத் தொங்கிய சாட்டைச் சாட்டையானக் காய்கள் சலசலத்துக் கொண்டிருந்தன. மண் சாலையை நெருங்கியதும்தான் அவருக்குள் தெளிச்சல் வந்தது. மேற்குத் தெரு வீடுகளிலிருந்து சன்னமாம் ஒளிச்சிதறிக் கொண்டிந்த வெளிவிளக்குகளின் உபயத்தால் துரைச்சாமியின் வீட்டை நெருங்கியிருந்தார் முத்தையா.

முற்றத்துக் குழல் விளக்கு முன்னை மாதிரியே பகட்டு குறையாமல் எரிந்துக் கொண்டிருந்தது. முன்னறையில் சேர் போட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் ஆழ்ந்திருந்தான் துரைச்சாமி. சந்தடிக் கேட்டதும் அதிர்வுடன் கவனத்தைத் திருப்பிக் கொண்டே முற்றத்தை வெறித்துப் பார்த்தான்.

முத்தையாவின் அறிபறியான நடை, துரைச்சாமியின் ரத்தத்தை உறைய வைத்திருந்தது. நாளங்களில் சூடேறத் துவங்கியது. சடக்கென்று எழுந்து நின்று அவரை எதிர்கொள்ளும் முனைப்பில் வாசலுக்கு வந்தான். அருகில் நெருங்க நெருங்க அவரின் கால்கள் கொடியாய் குழையத் துவங்கியதும்தான் அவனுக்குள் நிதானம் படர்ந்தது.
இதம்பதமாய் வார்த்தையாடினார் அவர். “”பத்து ரூவாத்தானய்யா கேட்டிய? கொண்டு வந்திருக்கேன். போன் பேசிக்கிறட்டுமாய்யா?”

“”அத அப்பமே கொண்டு வந்திருக்கலாமில்ல? எதுக்கு அப்பிடித் திமிர்த்தனம் பண்ண? அதிகமா கேக்கறனோ? ஒன் வூட்ல போன் வச்சிருந்தா அதோடக் கஷ்டம் ஒனக்குத் தெரியும்..”

“”கையில காசு இல்லாமத்தான்யா அப்படிச் சொல்லிப்புட்டேன். அவசரமா போன் பண்ணனும்யா..”
அவர் தந்த சில்லரைகளை வாங்கி எண்ணிப் பார்த்தான். வியர்வைத் துளிகளைப் போல வெள்ளியாய் பரிணமித்தன காசுகள். பத்து ரூபாய் சரியாக இருந்தது. வாசலை விட்டு நகன்று அவருக்கு இடம் விட்டு நின்றான்.
கதவின் அடைப்புப் பகுதியின் பக்கத்துச் சுவரில் இறுக்கமாய் பொருத்திக் கிடந்தது டெலிபோன். கையலகப் பலகையின் மேல் ஓர் ஆமையைப் போல கவிழ்ந்துக் கொண்டிருந்தது.
கையில் சுருட்டி வைத்திருந்த தாளை விரித்து எண்களைப் பார்த்தார். பலகையின் விளிம்பில் தாலை மலர்த்தி வைத்து, இடது கையில் ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டார். ஒவ்வொரு எண்ணாய் பார்த்துப் பார்த்து அடித்ததில் சற்று சிரமப்படவேண்டியதிருந்தது. அது “செல்’லின் எண். இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஊருக்கு வந்திருந்த அவரின் மகன்காரன் தந்துவிட்டுப் போயிருந்த எண் அது. அரசாங்கத்தில் ஆட்டோ லோன் வாங்குவதற்காக சாதிச் சான்றிதழ் தேவையாயிருந்தது. சாதிச் சான்றிதழ் எடுப்பதற்கு அவசர அவசரமாக ஊருக்கு வந்துவிட்டுப் போயிருந்தான் அவன்.
மறுமுனையில் “”ஹலோ..” கேட்டது.
அவர் பதற்றமானார்.
“”புஷ்பராஜு. நாந்தா அய்யா பேசுதென். ஆங் நல்லாயிருக்கோம். நாவர்கோயில்ல அக்கா மாப்பிள்ளைக்கு சொசக்கேடா இருக்குதாம். பணம் கேட்டு மகளை அனுப்பி வச்சிருக்கா. கொஞ்சம் பணத்தோட ஊருக்கு வந்துட்டுப் போடா. அவளுக்கு ஒத்தாசைக்கு ஒறவுல யாரும் இல்லப்பா. ஆமாம்ப்பா…”
“”…..”
“”நீ மட்டும் வந்துட்டுப் போ. …. திரும்பிப் போயிரலாம். ஆமாம்பா.. ஆமாம். வரும்போது அய்யாவுக்கு “செல்லு’ ஒண்ணு வாங்கிட்டு வாப்பா, அங்கதான் சவுரியமா கெடைக்குமாமே. ஆமாப்பா, அடுத்த வூட்ல வந்துதான் பேச வேண்டியிருக்கு. அதுவும் ஒரு தடக்கப் பேசறதுக்குப் பத்து ரூவா அநியாயமா கேட்குதாவ. ஆமாப்பா. இப்பப் பேசுறதுக்குக் கூட பணம் பத்தாம, சோத்துக்கு வாங்கி வச்சிருந்த அரிசியக் கடையிலக் கொண்டுக் குடுத்திட்டு அவிகக்கிட்ட காசு வாங்கிப் பேசுதேன். சரிப்பா.. வாங்கிட்டு வா… என்ன… வச்சிரட்டுமா?”

பிசிறலோடு வார்த்தைகளை முடித்திருந்தார். ரிசீவரை பழையபடியே வைத்துவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டார். பதற்றம் குறைந்திருந்தது அவருக்கு. முகத்தில் மகிழ்ச்சியின் இழையோடியது. கால்களை அவசரமில்லாமல் எடுத்து வைத்து வாசலை அடைந்தார். துரைச்சாமியின் முகத்தைப் பார்ப்பதற்குத்தான் அவருக்கு வேதனையாக இருந்தது. அவன் முகத்தில் அறைந்தது போல அவர் போனில் பேசியிருந்த வார்த்தைகளே அவனின் கோபத்துக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டார். அதைத்தானே தானும் விரும்பியது என்று மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு வாசலைக் கடந்து வெளியேறிப் போனார்.

+

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 10:02 pm

வரலாற்றுக் கால ஐயப்பன் கதை
-------------------

இந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்…
உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து, கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருந்தான். ஒருசமயம் சபரிமலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவனால் முடியாமல் போகவே, அங்கிருந்த ஒரு மாந்திரீகரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவர், சபரிமலையில் தர்மசாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனின் கோயில் இருப்பதாலும், அதன் அபார சக்திதான் அந்தக் கிராமத்தைக் காத்து வருவதாகவும் கூறினார்.
அதனால் வெகுண்டெழுந்த உதயணன், எப்படியாவது அந்தக் கோயிலை நாசப்படுத்தி, கோயிலையும் கொள்ளையடிப்பேன் என்று சபதம் செய்து, அவ்வாறே சபரிமலைக் கோயிலை தீக்கிரையாக்கி நாசப்படுத்தினான். தடுக்க வந்த கோயில் நம்பூதிரியைக் குத்திக் கொலை செய்தான். தனது அப்பா உதயணனால் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நம்பூதிரியின் மகன் ஜெயந்தன், மீண்டும் சபரிமலைக் கோயிலை எடுத்துக் கட்டுவேன் என்றும், உதயணனைப் பழிவாங்குவேன் என்றும் சபதம் செய்தான்.
உதயணனே அறியாமல் அவனது கொள்ளைக் கூட்டத்திலேயே போய்ச் சேர்ந்தான் ஜெயந்தன். இதற்கிடையில் உதயணனுக்கு பந்தள ராஜாவின் சகோதரியைத் திருமணம் செய்துகொண்டு, தனக்கு ராஜமரியாதை வரவேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே அவன் ராஜகுமாரியைத் திருட்டுத்தனமாகத் தூக்கிவந்து விட்டான். தன்னுடன் வந்த ஜெயந்தனிடம் ராஜகுமாரியை பத்திரமாகத் தனது இருப்பிடத்தில் கொண்டுபோய் விடுமாறும், தான் மேலும் கொள்ளையடித்துவிட்டு வருவதாகவும் கூறி, உதயணன் சென்று விட்டான்.
இந்நிலையில் ஜெயந்தன் ராஜகுமாரியிடம் தனது சபதத்தைக் கூறினான். ராஜகுமாரியும் தனக்கு உதயணனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றாள். ஜெயந்தனையே திருமணம் செய்துகொண்டு, சபரிமலைக் கோயிலைப் புதுப்பிக்க தானும் உதவிசெய்யப் போவதாகக் கூறினாள். அவள் விருப்பப்படி ஜெயந்தனையே திருமணம் செய்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் அருகிலுள்ள குகையில் வாழ்க்கை நடத்தினார்கள். கோயிலைக் கட்ட இறையருள் வேண்டும் என்று எண்ணி, தர்மசாஸ்தாவை நோக்கித் தவம் புரிந்தனர். தர்ம சாஸ்தா அவர்களுக்குப் பிரசன்னமாகி, வேண்டும் வரம் கேட்டார். தங்கள் விருப்பத்தை அவர்கள் கூறினர். ஐயப்பனாக தானே மறுபிறப்பு எடுத்து வருவதாக அவர்களிடம் வாக்களித்தார் சாஸ்தா. அதன்படி ஐயப்பன் அவதரிக்க, இது பற்றி விவரமாகக் கடிதம் எழுதி, அக்குழந்தையை பந்தள ராஜனிடம் அனுப்பி வைத்தார்கள்.
பந்தள ராஜாவும் குழந்தை ஐயப்பனை நல்ல முறையில் வளர்த்து வந்தார். ஓரளவுக்கு வயது வந்தவுடன் தனது தந்தையான ஜெயந்தன் போட்ட சபதத்தை நிறைவேற்ற, தனது படைவீரர்களுடனும் சகாக்களுடனும் கானகத்திற்குக் கிளம்பினார் ஐயப்பன். காட்டிற்குச் செல்லும் வழியில் கண்ணில்பட்ட உதயணனின் ஒவ்வொரு முகாமையும் தாக்கி, கொள்ளையர்களை அழித்தவாறே சபரிமலையை நோக்கிச் சென்றனர் அனைவரும்.
அப்போதுதான் அராபியக் கடல் கொள்ளைக்காரரான வாபர் ஐயப்பனுக்கு அறிமுகமானார். இவர் அலிக்குட்டி அஸீமா தம்பதியினருக்குப் பிறந்தவர். எரிமேலி பகுதியிலுள்ள உதயணனின் முகாமைத் தாக்கி அழித்து, அந்த இடத்திற்குக் காவலாக வாபரை நிறுத்திவிட்டுச் சென்றார் ஐயப்பன்.
இறுதியில் கரிமலைக்கோட்டை என்ற இடத்தில் உக்கிரமான சண்டை நடந்தது. அந்தச் சண்டையில் உதயணனைக் கொன்றார் ஐயப்பன்.
சண்டை <உக்கிரமாக நடந்த போது உதயணனின் கூட்டத்திலிருந்த ஒரு கொள்ளையன் தப்பித்து விட்டான். வரும் வழியில் எரிமேலியில் வாபரைப் பார்த்தான். ஐயப்பனின் மேல் இருந்த கோபத்தால் வாபரைக் கொன்று விட்டான்.
பின்னர் பந்தளராஜனும் சபரிமலை வந்து சேர்ந்தார். நல்ல நாள் பார்த்து அனைவரது முன்னிலையிலும் சபரிமலைக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டும் பணி நடைபெற்றது.
கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், குடமுழுக்கு மற்றும் ஆராதனைகளை நடத்தினார்கள். இறுதியில் மங்கள தீபாராதனையின் போது, ஐயப்பன், தர்மசாஸ்தாவான தான் அவதாரமெடுத்த நோக்கத்தினை அனைவருக்கும் கூறி, மனி உடலோடு அப்படியே மறைந்துவிட்டார்.
ஐயப்பன் ஜோதி ரூபமாக ஐயனின் விக்கிரஹத்திடம் ஐக்கியமனார். அக்காட்சியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தார்கள். ஐயப்பனைப் போற்றி வணங்கினார்கள். சபரிமலைக் கோயிலை மீண்டும் கட்டுவதற்காக தானே மறு அவதாரமெடுத்த ஐயப்பனை நினைந்து போற்றித் துதித்தார்கள்.

+
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 10:04 pm

குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டி
--------------

கதைகள்குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டிசிறுகதை

இன்று என்ன தேதி என்றால் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நேற்றைய தேதியை நினைவுபடுத்த முயற்சித்து அதுவும் மறந்துபோய் கடைசியில் முயற்சியைக் கைவிட்ட பிறகு ஞாபகம் வந்து தொலைக்கும். ஆனால் பாட்டியை முதன்முதலாகப் பார்த்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. ஒன்றாவதோ இரண்டாவதோ படிக்கிறேன் (அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு முன்பா?).

நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த இடத்தின் பெயர் ஹெல்த் கேம்ப். வெள்ளைக்காரர்களோ அல்லது அவர்களது இந்திய குமாஸ்தாக்களோ வைத்த பெயர். பசும்புல் நிறைந்த மேட்டுப்பகுதி. தாசில்தார் சிரஸ்தார் என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டவர்களின் குடியிருப்புகள். அதற்கு மேல் பகுதியில் போலீஸ் குடியிருப்பு. அதற்கும் மேல்புறம் நாங்கள். அநேகர் நடுத்தர வர்க்கத்தினர். அப்பாவுக்கு எல்.ஐ.சி.யில் வேலை. கொஞ்சம் இஸ்லாமும் கொஞ்சம் கம்யூனிசமும் கலந்த கலவை அவர். கடற்படை எழுச்சியில் பங்கு பெற்றதால் அங்கிருந்து விரட்டப்பட்டவர். அதன் மிச்ச சொச்சம் எப்போதும் அவரோடிருக்கும். எல்லாவற்றிலும் கலகம் புரிவார். இஸ்லாத்தில் இருந்து கொண்டே மதவாதிகளுடன். கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டே கம்யூனிஸ்டுகளுடன். வேலையில் இருந்துகொண்டே மேலதிகாரிகளுடன். ஒரு நாள் திடீரென எல்.ஐ.சி. வேலையை ராஜினாமா செய்தார்.

கதை அப்பாவைப் பற்றியதல்ல. பாட்டியைப் பற்றியது. ஒரு நாள் வாசலில் வெள்ளை நிறத்தில் வேட்டி மாதிரியும் அதே நேரத்தில் ஜிப்பா மாதிரியுமான உடையில் ஒரு பெண்மணி. திருவிதாங்கூர் பகுதியின் பழைய தலைமுறை கிறிஸ்துவப் பெண்கள் இப்போதும் இந்த உடையை அணிகின்றனர். அவர்களை சேடத்தி என்று விளிப்பார்கள். சேட்டன் ஆண், சேடத்தி பெண். அப்போதெல்லாம் ஆடைக்குள் மதம் புகுந்திருக்கவில்லை. அதனால் வித்தியாசம் தெரியாது. நான் வீட்டிற்குள் ஓடி அம்மாவிடம் ஒரு சேடத்தி வந்திருப்பதாகக் கூவுகிறேன். வாசலில் தொடர் சிரிப்பு. அம்மா வந்து பார்த்து அம்மாவும் சிரிக்கிறார். “”டேய் இது உன் உம்மும்மாடா” என்கிறார். உம்மும்மா என்றால் பாட்டி. பாட்டியின் சிரிப்பு இருமடங்காகிறது. தலைமேலிருந்து கூடையை இறக்கி வைத்து ஒவ்வொரு பொருளாக எடுக்கிறார் பாட்டி. கருப்பட்டி, குளியலின்போது தேய்த்துக் கொள்வதற்கென ஒரு நார். அவுலோஸ் பொடி, சமையல் கத்தி, தேங்காய்…இவைதான் இப்போது ஞாபகத்தில் உள்ளவை. ஊரிலிருந்து கொண்டு வந்தவை.

பிறகு பாட்டியைப் பார்த்து நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஊருக்குப் போனபோது ஊருக்குப் போவது என்பதே தனி சுவாரசியம். எங்கள் கூடலூரிலிருந்து மூக்கு நீண்ட பேருந்தில் நிலம்பூர் செல்ல வேண்டும். நிலம்பூர் நகரத்துக்குள் போவதற்கு முன்பே இடது கைப்பக்கம் திரும்பி மூன்று கிலோ மீட்டர் சென்றால் நிலம்பூர் தொடர்வண்டி நிலையம். இங்கிருந்து புறப்படும் ஒரே ஒரு ரயிலைப் பிடிப்பதற்காகவே ராஜலட்சுமி அய்யரால் தனிப்பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. நிலம்பூர்தான் கடைசி ஸ்டேஷன். உலகத்திற்கே கடைசி போன்ற ஒரு தோற்றம். அங்கிருந்து ஷொர்னூர் அங்கிருந்து எர்ணாகுளம் என வண்டிகள் மாறி மாறிப் பயணித்து விடியற்காலை 4 மணிக்குக் கோட்டயம்.

புகை கக்கியபடியே நீராவி என்ஜின் ரயில்பெட்டிகளை இழுத்து வந்து நிலம்பூர் ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு தனியாகத் தான் மட்டும் சுழன்று ஓடி பக்கத்துத் தண்டவாளத்து வழியாக ரயில்பெட்டிகளின் முன்பக்கம் இணைந்து செல்வதுமான விளையாட்டில் நானும் மானசீகமாகச் சேர்ந்து கொள்வேன். ரயில் பயணத்தின்போது அம்மா ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும்போதும் அதன் பெயரைக் குறித்துக் கொள்வார். கோட்டயத்திலிருந்து முண்டக்காயம் (அங்கே தான் நான் பிறந்தேன்) வரை பேருந்துப் பயணம். ரொம்ப நாளைக்குப் பிறகு முண்டக்காயம் என்ற பெயரை உச்சரிக்க மாட்டேன். ஏதோ கெட்ட வார்த்தை சொல்வது போலக் கூச்சம். அதுதான் மாவட்டம். கோட்டயத்தில் எங்கே என்றால் காஞ்சிரப்பள்ளி என்பேன். அதுதான் தாலுகா, அதற்கு மேல் யாரும் அநேகமாக கேட்க மாட்டார்கள்.

பெயர்தான் அப்படியே தவிர முண்டக்காயம் எனக்கு ரொம்பப் பிடித்தமான இடம். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஓர் ஆறு வழிமறித்துக் கொண்டேயிருக்கும். பாறைகளாலான பெரிய பெரிய குன்றுகள். அவற்றின் மேல் கட்டப்பட்ட வீடுகள். பாட்டியின் வீடும் அப்படி ஒரு பாறைக்குன்றின் மீதுதான் இருந்தது. பாறை வழியாகக் கீழே நடந்தால் ஆறு. வீட்டின் பின்புறம் கற்களாலான அடுக்குகள். அவை நிறையத் தென்னைகளைத் தாங்கிப் பிடித்திருந்தன. தென்னை மரத்தை முதன் முதலாக அங்கேதான் கிட்டப்போய் பார்த்தேன். தேங்காய் பறித்துப் போட ஒருவர் வருவார். பிறகுதான் தெரிந்தது அவர் என் சித்தப்பாதானாம். சித்தியின் கணவர். தேங்காய் பறித்துப் போட வந்தவர் அப்படியே சித்தியின் மனசையும் பறித்துப் போய்விட்டார். சாதி மாறி திருமணம் செய்த சித்தியின் வீட்டுக்கு யாரும் போவதில்லை என்றார்கள். பார்த்தால் தனித்தனியாக ஒவ்வொருவரும் போய் வந்து கொண்டுதானிருந்தார்கள். வீட்டின் வலது பக்கமாகக் கொஞ்ச தூரம் சென்றால் சித்தியின் வீடு. அங்கிருந்து கீழே பார்த்தால் அங்கேயும் ஓர் ஆறு தெரியும். நானும் அம்மாவும் போனோம். மரவள்ளிக் கிழங்கு வேக வைத்தும், பலாப்பழமும் தந்தார் சித்தி. இருட்டுவதற்குள் அம்மா பாட்டி வீட்டிற்குத் திரும்பினார். நான் அங்கேயே தங்கினேன். எனக்கென்னவோ சித்தப்பாவைப் பிடித்திருந்தது. கட்டான உடல், விரிந்த மார்பு, மார்பு நிறையக் கருகருவென முடி, அடர்ந்த மீசை. என்னிடம் புன்னகைத்துக் கொண்டேயிருந்தார்.

பாட்டியின் வீடு என்றால் பாட்டியை அந்த வீட்டில் அபூர்வமாகத்தான் பார்த்தேன். மாமா தான் அங்கே எல்லாம். மாமாவுக்கு பீடி சுருட்டும் வேலை. ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு முறத்திலுள்ள பீடி இலையைக் கத்தரித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு பாடலாக நேயர் விருப்பம் கேட்டுக்கொண்டிருப்பார்.

உள் அறையில் தாத்தா படுத்த படுக்கையாகக் கிடந்தார். வாய் இழுத்துக் கொண்டுவிட்டதால் ஒருவிதமான அடிக்கட்டைக் குரலில் மாமாவைக் கூப்பிட்டு பாடச் சொல்வார். அம்மாவுக்கு தாத்தா மீது பாசம். ஆனால் பாட்டி அந்த அறைக்குள் போனதைப் பார்த்ததேயில்லை. பாட்டியை தாத்தா நிறைய கொடுமைப்படுத்தியிருந்ததாக யாரிடமோ அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு தாத்தாவைப் பார்க்க பயம். அந்த அறைக்குள் போகமாட்டேன். படுத்த படுக்கையிலும் தாத்தா பீடி குடித்துக் கொண்டேயிருப்பார். பீடி பற்றவைக்க அடுப்பங்கரையிலிருந்து கொள்ளிக் கட்டையை யாராவது கொண்டு போய் கொடுப்பார்கள். ஒருமுறை என்னிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. உடல் நடுங்க பயத்துடன் சென்று கொடுத்துவிட்டு ஓடிவந்தேன்.

கொஞ்ச நாளில் மறுபடியும் கூடலூர். இப்போது வீடு மாறியிருந்தது. இப்போது மேல் கூடலூர். ஹெல்த் கேம்ப் வீட்டுக்குப் பிறகு இது ஆறாவது வீடு.

வீட்டுக்கு முன்புறம் மாரியம்மன் கோயில். மேல் கூடலூரில் ஒவ்வொரு வீட்டுக்கூரையிலும் ஒரு குரங்குக் குடும்பம் இருக்கும். ரேஷன் கார்டில் பெயர் இருக்காதே தவிர, குரங்குகள் ஏதோ அவர்கள் சொந்தக் குடும்பம் போலவும், சில நேரம் அதீத உரிமை எடுத்து குடும்பத் தலைவர் போலவும் புழங்கும். அம்மா அருகில் கல்லில் சட்னி அரைத்துவிட்டுத் திரும்புவதற்குள் ஏதேனும் ஒரு குரங்கு கையை விட்டு அள்ளித் தின்றுவிடும். பிறகு காரம் தாங்காமல் கூரை மேல் அங்கும் இங்கும் தாவுவதும் “ஈ’ என்று இளித்துக் காட்டுவதுமாக அனிமல் பிளானட்டின் ஒரு எபிசோடே ஓடிக்கொண்டிருக்கும். கூடவே பாட்டியும் வந்து சேர்ந்தார். அந்த வீட்டில்தான் பாட்டி தனக்குள் பேசிக்கொள்வதை கவனிக்க ஆரம்பித்தேன். காலை நீட்டி அமர்ந்து கொண்டு எதிரில் இல்லாத ஒருவருடன் சுவாரசியமாக கையை அசைத்து அசைத்துப் பேசுவார். சிரிப்பு, கோபம், ஆச்சரியம், ஆர்வம் என பாவங்கள் மாறி மாறித் தெரியும் அந்த முகத்தில். நாம் கவனிப்பது தெரிந்தால் சட்டென ஒரு கனைப்பு கனைத்து எதையோ தேடுவது போல பாவனை செய்வார்.

ஒருநாள் பாட்டி தனக்குள் மூழ்கிப் பேசிக் கொண்டிருக்கையில் வீட்டுக்குள் யாரும் இல்லை என்று நினைத்து எதையாவது லபக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட குரங்கு சமையலறைப் படிக்கட்டில் இறங்கி வந்தது. ஏதோ சத்தம் கேட்டு பாட்டி திரும்ப, பாட்டியைப் பார்த்து குரங்கு உறைந்து போக பாட்டி அய்யோ என்று கத்தி கடைசி “யோ’விலேயே முகம் ஸடில் ஆகிவிட கிட்டத்தட்ட அதே முகபாவத்தை குரங்கும் வெளிக்காட்ட ஓரிரு நிமிடத்தில் குரங்கு தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கிவிட்டது. பாட்டியும் பயம் நீங்கி சிரிக்க ஆரம்பித்தார். நானும் அம்மாவும் சிரிப்பில் ஐக்கியமானோம். குரங்கும் பாட்டியும் நேருக்கு நேர் முறைத்துக் கொண்டு நின்றதை மறுபடியும் நினைவுபடுத்தி அம்மா,”"இதில் எது குரங்கு என்று குழம்பிவிட்டேன்” எனச்சொல்ல பாட்டி இன்னும் சத்தமாகச் சிரித்தார்.

பாட்டிக்கு என் மீது எப்போதும் தனிப்பிரியம் உண்டு. யாராவது திண்பண்டம் கொண்டு வந்தால் நான் இல்லாவிட்டாலும் என் பங்கு எனக்கு வந்து சேருவதில் கராறாக இருப்பார். அம்மா, பாட்டியைச் சீண்டுவதற்காக, “”அவனுக்கெல்லாம் வேண்டாம். சாப்பிட மாட்டான்” என்று சும்மா சொல்வார். அவ்வளவுதான் அன்று முழுவதும் பாட்டி முகத்தைத் தூக்கி வைத்திருப்பார். பாட்டி வெறுந்தரையில் லாகவமாக குட்டிக்கரணம் போட்டுக் காண்பிப்பார். எத்தனை முறை கேட்டாலும் சோர்வடையாமல் குட்டிக்கரணம் போடுவார். ஒவ்வொருமுறை போடும்போதும் தவறாமல் அதே ட்ரேட் மார்க் சிரிப்பும் கொசுறாக வரும்.

ஒருமுறை மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது ரிக்கார்ட் டான்ûஸ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். வெள்ளைச் சட்டை, கைலி, தலையில் முண்டாசு என லோக்கல் காஸ்ட்யூமில் பாட்டி கூட்டத்தோடு நின்றார். பக்கத்தில் நின்றவர் ஆள் தெரியாமல் பாட்டியின் தோளில் கை வைத்து நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தார். பாட்டியும் அலட்டிக்கொள்ளவில்லை. தற்செயலாக ஆசாமி பாட்டியின் முகத்தைப் பார்த்து கிலியடித்துப்போய் விலக,பாட்டியிடமிருந்து அதே சிரிப்பு.

கடைசியாக, பாட்டியைப் பார்த்தது கூடலூர் பேருந்து நிலையத்திற்கருகில் குடியிருந்தபோதுதான். நாங்கள் எல்லோரும் பெரியவர்களாயிருந்தோம். பாட்டியின் வயது கூடியும் அதே சுறுசுறுப்பு. தனக்குள் பேச்சு, இம்முறை ஏனோ பாட்டி குட்டிக்கரணம் போட்டு காண்பிக்கவில்லை; நானும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் போட்டுக் காட்டியிருப்பார் என்றே தோன்றுகிறது.

ஏன் என்று தெரியாது! பாட்டியை அம்மா “தங்கச்சி’ என்றுதான் கூப்பிடுவார். இருவரில் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிவதும் அம்மாதான். பாட்டியிடம் சதாசர்வ நேரமும் ரசிக்கத்தக்க குழந்தைத்தனம் ஒட்டிக் கொண்டிருக்கும்.

அம்மா அழுது கொண்டிருந்தார்.

“”பாட்டி போயிட்டாடா”

“”எப்படி?”

பாட்டி ஊரில் உள்ள நான்கு சித்திகளின் வீட்டிலும் மாறி மாறித் தங்குவது வழக்கம். இடைக்காலத்தில் பாட்டிக்கு ஒரு பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது. சின்னதாக எந்தப் பொருளைப் பார்த்தாலும் எடுத்து மடியில் கட்டிக்கொள்வார். சித்திகளின் வீட்டில் இது பெரும் பிரச்னையாக வெடித்து கடைசியில் பாட்டியை எந்த வீட்டிலும் தங்க வைக்க முடியாதென்று சொல்லிவிட்டார்கள். ஒருநாள் இரவில் ஒரு சித்தியின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாட்டி முண்டக்காயம் கடைவீதியில் பூட்டிக்கிடக்கும் ஓட்டல் ஒன்றின் முன்பு படுத்துக்கொண்டார். விடிந்து வெகு நேரமாகியும் விழிக்காததால் ஆட்கள் வந்து பார்க்க பாட்டியின் மூச்சு நின்றிருந்தது.

உயிர் பிரியும்போது பாட்டி சிரித்திருப்பாளா?
கூடலூர் அன்வர் ஷாஜி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-2 - சின்னச் சின்ன கதைகள் - Page 6 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum