Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் வலிமைக்கு
Page 1 of 1 • Share
உடல் வலிமைக்கு
உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!
தற்போது பலரது உடலில் போதிய அளவில் ஆற்றல் மற்றும் வலிமை இல்லை. இதற்கு அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் உள்ள தவறு தான் காரணம்.
தவறான உணவுப் பழக்கவழக்கத்தினால், உடலின் ஆற்றல் மற்றும் வலிமைக்கு வேண்டிய காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, புரோட்டீன்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!! இப்படி உடலில் குறைவாக உள்ள சத்துக்களின் அளவை அதிகரித்தால் தான் உடல் வலிமையோடு இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும்.
அதிலும் நீங்கள் ஜிம் செல்பவராயின், கண்டிப்பாக இச்சத்துக்கள் அவசியம் தேவை. இவை இருந்தால் தான் ஜிம்மில் உடற்பயிற்சியை செய்ய முடியும்.
ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! சரி, இப்போது உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து அவற்றை உட்கொண்டு உங்கள் உடலை வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ் ஓட்ஸில் சுத்திகரிக்கப்படாத கார்ப்போஹைட்ரேட் உள்ளதால், இவை மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரித்து, நீண்ட நேரம் உடலில் ஆற்றலைத் தக்க வைக்கும். எனவே நீங்கள் எப்போதும் மந்தமாக இருப்பதை உணர்ந்தால், ஓட்ஸை காலை வேளையில் உட்கொண்டு வாருங்கள்.
பருப்பு வகைகள் பருப்பு வகைகளில் கனிமச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை இரத்த சிவப்பணுக்களை உருவாக்கி, தசைகள் மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்ல வழிவகுத்து, உடலை ஆற்றலுடனும், உறுதியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.
காபி காபி உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க உதவும் ஓர் பானம். இந்த பானத்தைக் குடித்தால், மைய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, சோர்வு உடனடியாக நீக்கப்படும்.
பச்சை இலைக் காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகளில் உடலின் வலிமை மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் மைக்ரோ நியூட்ரியன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதோடு, மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்.
வாழைப்பழம் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இவை டோபமைன் என்னும் கெமிக்கலை உற்பத்தி செய்து, ஆற்றலுடன் நீண்ட நேரம் இருக்க உதவுவதுடன், கவனத்தை அதிகரிக்கவும் உதவும்.
வேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால், அவை இதய ஆரோக்கியத்தை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
மேலும் வேர்க்கடலை வெண்ணெய் ஓர் சிறந்த ஆற்றல் மற்றும் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருள். இதில் கலோரிகள் அதிகம் மற்றும் மெதுவாக செரிமானமாகும். முக்கியமாக வேர்க்கடலை வெண்ணெயை காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது நல்லது.
மீன், சிக்கன், முட்டை இவைகளில் புரோட்டின் அதிகம் உள்ளது. இவை தசைகளின் வளர்ச்சிக்கும், புதுப்பிக்கவும் உதவும். மேலும் இவைகள் மெதுவாக செரிமானமாவதோடு, நீண்ட நேரம் சுறுசுறுப்புடனும், வலிமையோடும் இருக்க உதவும்.
சிவப்பு திராட்சை சிவப்பு திராட்சையில், உடலின் ஆற்றலை அதிகரிக்கும் ரெஸ்வெரடால் உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் சர்க்கரை உள்ளதால், இவை உடனடி ஆற்றலை வழங்குவதோடு, உடலின் உறுதியையும் மேம்படுத்த உதவும்.
பீட்ரூட் ஜூஸ் உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸ் குடித்தால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும். ஏனெனில் பீட்ரூட்டில் உடல் உறுதியை அதிகரித்து, சோர்வைக் குறைக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.
திணை தானியங்களுள் ஒன்றான திணையில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்க்கத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
எனவே இவற்றைக் கொண்டு கஞ்சி அல்லது உப்புமா செய்து உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மேலும் இது பத்தே நிமிடங்களில் வேகக்கூடியது என்பதால் விரைவில் சமைத்து சாப்பிட ஏற்ற ஓர் உணவுப் பொருள்.
மருத்துவம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உடல் வலிமைக்கு
ஆரோக்கியம் தரும் ஆலோசனைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum