Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெர்சனல் கம்ப்யூட்டரும் சுருங்கி, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு வந்துவிட்டது.
Page 1 of 1 • Share
பெர்சனல் கம்ப்யூட்டரும் சுருங்கி, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு வந்துவிட்டது.
[You must be registered and logged in to see this image.]
ஒரு காலத்தில், வீட்டில் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் என்றால், “அப்படியா, முடியுமா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பியவர்கள் இருந்தனர். ஆனால், தொழில் நுட்பம் சுருங்க, சுருங்க, பெர்சனல் கம்ப்யூட்டர் எங்கும் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டது.
இதற்குக் காரணம் “மூர் விதியும்” ஆகும். அந்த விதியின்படி, ட்ரான்சிஸ்டர்கள் சுருங்கி, சிப் ஒன்றில் பதியப்படும் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை கோடியைத் தாண்டிவிட்டது. அந்த வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரும் சுருங்கி, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு வந்துவிட்டது.
சிப்கள் தயாரிக்கும் நிறுவனமான இன்டெல் நிறுவனமே, தன் முதல் கம்ப்யூட்டராக, ஸ்டிக் கம்ப்யூட்டரை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் குரோம் காஸ்ட் (Chromecast) போல இல்லாமல், இது எந்த சாதனத்தையும் சார்ந்தில்லாமல், முழுமையாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் உள்ளது. இதில் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களை இயக்க முடியும்.
அப்படியானால், உடனே இன்டெல் ஸ்டிக் கம்ப்யூட்டரை வாங்கிவிடலாம் என்று முடிவெடுக்கிறீர்களா? கொஞ்சம் கீழே தரப்பட்டுள்ள அதன் அம்சங்களையும், செயல் திறனையும் கவனித்துவிட்டு வாங்க முடிவு செய்திடுங்கள்.
முழுமையான யு.எஸ்.பி.போர்ட்:
இதில், முழுமையாக இயங்கும் யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது. எளிதாக இன்ஸ்டால் செய்திட முடியும். எடுத்து இயக்கியவுடன் இயங்கும் ஒரு டிஜிட்டல் சாதனமாக இது உள்ளது. எந்தச் சிக்கலும் இதனை இயங்க வைப்பதில் இல்லை. டி.வி. மானிட்டரில் இதனைச் செருகி, பவர் பட்டனை அழுத்தினால், இந்த ஸ்டிக் கம்ப்யூட்டர், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை லோட் செய்கிறது. இதில் தரப்பட்டுள்ள செட் அப் செயல்பாட்டினை மேற்கொண்டு விட்டால், நமக்கு வழக்கமான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சூழ்நிலை கிடைக்கிறது.
வை பி யுடன் புளுடூத் இயங்காது:
இன்டெல் ஸ்டிக் கம்ப்யூட்டரில் வை பி இயங்கும்போது புளுடூத் இயங்காது. புளுடூத் இயங்குகையில், வை பி இயங்காது. இந்த ஸ்டிக் கம்ப்யூட்டர் இயங்குவதற்கு, கீ போர்ட் மற்றும் மவுஸ் தேவைப்படும். இப்போது இரண்டும் இணைந்த கீ போர்ட் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
ஸ்டிக் கம்ப்யூட்டர் நம் வை பி இணைப்புடன் இணைக்கப்படும். ஒரு புளுடூத் சாதனத்துடனும் இணைக்கப்படும். இங்கு கீ போர்ட் இணைக்கப்படும். அது புளுடூத் இணைப்பில் இயங்கும். இந்த வகையில் கீ போர்ட் இயக்கப்படும்போது, வை பி இணைப்பு வேகம்
மிக மிகக் குறையும். அல்லது இல்லாத நிலை ஏற்படும். அல்லது வை பி இணைப்பு நிலையாக இருக்கும். கீ போர்ட் வழியாக உள்ளீடு செய்திடும் எழுத்துகள் சரியாக டிவியில் தெரியாது.
தற்போதைய ஸ்மார்ட் டி.வி.:
இப்போது வரும் டிவிக்கள் பெரும்பாலும் ஸ்மார்ட் டிவி எனப்படும், இணைய இணைப்பில் இயங்குபவையாகவே உள்ளன. இந்த டிவிக்களில், இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. ஆனால், பிரவுசர்கள் போன்ற அப்ளிகேஷன்கள் இயக்கம் என வருகையில், இவை தள்ளாடுகின்றன. இன்டெல் கம்ப்யூட்டர் ஸ்டிக் இணைக்கப்படுகையில், டிவியில், முழுமையான விண்டோஸ் அல்லது லினக்ஸ் இயக்கம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், நிச்சயம் நாம் டி.வி.யில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குச் செல்ல மாட்டோம். இந்த ஸ்டிக் கம்ப்யூட்டருடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ், குரோம் அல்லது பயர்பாக்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, இவை அனைத்தும் இல்லாமல், இந்த டிவியை வைத்து அழகு பார்த்தோமே என்று எண்ணுவீர்கள்.
மெமரி மற்றும் பவர்:
உங்கள் ஸ்மார்ட் டிவியை, ஸ்டிக் கம்ப்யூட்டருடன் இணைத்துவிட்டு, அது சரியான பெர்சனல் கம்ப்யூட்டர் என எண்ணினால், அது குறுகிய காலமே இருக்கும். ஸ்டிக் கம்ப்யூட்டரில், போதுமான கம்ப்யூட்டிங் பவர் கிடைக்காது. எடுத்துக் காட்டாக, 1080 p விடியோவினைக் காண ஆசைப்பட்டால், அதில் பல சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திப்பீர்கள். அதனை மட்டும் பார்க்க வேண்டும் என எண்ணினால், சரி. பிரச்னைகள் ஏற்படாது. அதனுடன், மற்ற கம்ப்யூட்டர் செயல்பாடுகளை மேற்கொள்ள முயன்றால், சிக்கல்கள் ஏற்படும்.
பவர் பேங்க் பயன்படுத்தலாம்:
இன்டெல் ஸ்டிக் கம்ப்யூட்டரின் ஒரு சிறப்பம்சம், அது இயங்க, பவர் ப்ளக் பாய்ண்ட் தேவையில்லை. ஏதேனும் ஒரு பவர் பேங்க் சாதனத்தை இணைத்து இயக்கலாம். இது யு.எஸ்.பி. பவர் போர்ட் வழியாக மின்சக்தியைப் பெறக்கூடியதாக உள்ளதால், இது சாத்தியமாகிறது. மேலும், இதற்கு எந்த ஒரு ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி.யில் பயன்படுத்தப்படும் கேபிளை இதற்குப் பயன்படுத்தலாம்.
போன் திரை தெரியாது:
குரோம் காஸ்ட் சாதனத்தை, ஸ்மார்ட் டிவியுடன் பயன்படுத்தினால், உங்கள் ஸ்மார்ட் போனை அப்படியே டிவி திரையில் இணைத்துக் காணலாம். ஆனால், ஸ்டிக் கம்ப்யூட்டரில் இந்த ஒருங்கிணைப்பு ஏற்படாது.
போர்ட்டபிள் பி.சி.யாக கருத வேண்டாம்:
ஸ்டிக் கம்ப்யூட்டரை, ஒரு போர்ட்டபிள் கம்ப்யூட்டராகச் செயல்படுத்தலாம் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால், இதன் முழுமையான இயக்கத்திற்கு நாம் பல சாதனங்களைச் சார்ந்து இயங்க வேண்டியதுள்ளது. எச்.டி.எம்.ஐ. போர்ட் உள்ள ஸ்கிரீன் வேண்டும். ஸ்டிக் கம்ப்யூட்டர் இயங்க, பவர் சாக்கெட் அல்லது பவர் பேங்க் இணைக்க வேண்டும். மேலும், ஒரு கீ போர்ட் மற்றும் மவுஸ் தேவை.
இதன் விலையை ஒப்பிடுகையில், அந்த விலைக்கு நல்லதொரு டேப்ளட் பி.சி. வாங்கிவிடலாம். அதில், அதற்கான ஸ்கிரீன், விர்ச்சுவல் கீ போர்ட், மவுஸ் ஆகியன உள்ளன. பவர் பேங்க் அல்லது பவர் சாக்கெட் தேவைப்படாது. சிறிய எச்.டி.எம்.ஐ. கனெக்டர் ஒன்றை எடுத்துச் சென்றுவிட்டால், டேப்ளட் பி.சி.யும் நல்லதொரு பெர்சனல் கம்ப்யூட்டராக மாறிவிடும்.
இருந்தாலும், ஒரு விண்டோஸ் 8 டேப்ளட் பி.சி., முழுமையான ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை அனைத்துமாகத் தர முடியாது. அதே போல் தான் ஸ்டிக் கம்ப்யூட்டரும் தர முடியாது. ஆனால், டேப்ளட் பி.சி.யை எளிதாக பெர்சனல் கம்ப்யூட்டராக இயக்க முடியும். ஸ்டிக் கம்ப்யூட்டரை அவ்வளவு எளிதாக இயக்க முடியாது.
இன்டெல் ஸ்டிக் கம்ப்யூட்டர், ஒரு டிவியை முழுமையான விண்டோஸ் டிவியாக மாற்ற இயலும். ஒரு பேக்கப் பி.சி.யாக அதனைச் செயல்படுத்தலாம். ஆனால், முழுமையான போர்ட்டபிள் பெர்சனல் கம்ப்யூட்டராக அது செயல்பட முடியாது.
[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பெர்சனல் கம்ப்யூட்டரும் சுருங்கி, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு வந்துவிட்டது.
தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெர்சனல் கம்ப்யூட்டரும் சுருங்கி, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு வந்துவிட்டது.
அடப்பாவி நான் நேற்று சொன்ன விசயத்த இன்று போஸ்ட்டா போட்டாச்சா
Similar topics
» யு.எஸ்.பி. டிரைவை பெர்சனல் கம்ப்யூட்டராக மாற்றலாம்
» நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? - ஆபத்து!
» கையில் மடித்து எடுத்துச் செல்ல புதிய தொழில்நுட்ப கீபோர்ட்
» சுருங்கி வரும் நிலா
» தொட்டாற் சுருங்கி செடியின் மருத்துவ குணங்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum