தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்மிக சிந்தனைகள்

View previous topic View next topic Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty ஆன்மிக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun Apr 10, 2016 4:58 pm

* தெய்வீக நம்பிக்கைக்கு ஆதாரமாக உனக்குள் தெய்வம் உள்ளது. தினமும் சிறிது நேரமாவது கண்ணை மூடித் தியானம் செய்து "நீ யார்' என ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.
* அறிவு வடிவான இறைவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிய வேண்டும்.
நூலறிவில் மட்டுமல்லாது மெய்யுணர்வு என்ற அறிவினால் அறிய வேண்டும்.
* பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன.
* பொருளாசை உடையவனுக்கு தகரம் கூட ரூபாயாகத்தான் தோன்றும். பயமுடையவனுக்கு கட்டை கூட பிசாசாகத் தான் தோன்றும். அதுபோல் பக்தியில் சிறந்தவனுக்கு எதைப் பார்த்தாலும் கடவுளாகத் தோன்றும்.
* கலங்கிய தண்ணீரில் சூரிய பிம்பம் தெரியாது. அதுபோல் தெளிவில்லாத உள்ளத்தில் கடவுள் தெரிய மாட்டார்.
* குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான், அதுபோல் கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun Apr 10, 2016 4:58 pm

* மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக ஓடுவதில்லை. காற்று தனக்காக வீசுவதில்லை. அதுபோல் ஞானிகளும் தமக்காக ஒருபோதும் வாழாமல் பிறர் நன்மைக்காகவே வாழ்கிறார்கள்.
* மலரைச் சுற்றி மணம் கமழ்வதைப் போல, நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ் என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
* கோபம் அறவே இல்லாதவனிடம் தர்மதேவதை பணிவுடன் வீற்றிருப்பாள். அவன் நல்வாழ்வு பெற்று வாழ முழுமையாக அருள்புரிவாள்.
* நாம் அனுபவிக்கும் சுகமோ, பாவமோ அனைத்திற்கும் மூல காரணம் நம் வினைப்பயன்களே. புண்ணியமும், பாவமும் நாம் செய்த வினைகளால் உண்டாகின்றன.
* செடி கொடிகள் வேர் மூலமாகத் தண்ணீரைப் பெற்று வளர்வது போல, கடவுளும் ஏழைகளின் மூலமாகவே உணவினை ஏற்று மகிழ்கிறார்.
* மனம் ஒரு நல்ல சேவகன். அதே சமயத்தில் கெட்ட முதலாளி. மனம் உனக்கு அடிமையானால், அது உனக்கு சேவகனாய் பணி செய்யும். மனம் உனக்கு முதலாளியானால் ஆட்டிப் படைக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun Apr 10, 2016 4:59 pm

* மன மாசு தியானத்தாலும், வாயினால் செய்த பாவங்கள் இறைவனைத் துதிப்பதாலும், உடம்பால் செய்த பாவங்கள் இறைவனை அர்ச்சிப்பதாலும் நீங்கும்.
* வளரும் பயிருக்கு முள்ளை வேலியாக இட்டால் ஆடுமாடு போன்ற உயிர்களால் துன்பம் நேராமல் வளர்ந்து நிற்கும். நாம் சம்பாதிக்கும் பணத்திற்கும் ஒரு வேலி இருக்கிறது. அது தான் தர்மம். தர்மம் செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.
* தனக்கு வருகின்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குச் சிறிதும் துன்பம் செய்யாதிருப்பதும் மிக உயர்ந்த குணங்கள்.
* உலகில் மக்கள் செய்கின்ற பிழைகளில் எல்லாம் பெரிய பிழை எது தெரியுமா? அறிவு தரும் நல்ல பயனுள்ள நூல்களைப் படிக்காமல் இருப்பதாகும்.
* கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகத்திற்குச் சேவை செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
* யாராவது நம்மைப் புகழும்போது மகிழ்ச்சி அடைதல் கூடாது. இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் சமமாகக் கருதினால் மனம் அமைதி பெறும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun Apr 10, 2016 5:04 pm

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.
* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.
* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.
* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun Apr 10, 2016 5:05 pm

* முதுமைக்கு வேண்டியதை இளமையில் இருந்தே தேடுவது போல, மறுபிறவிக்கு வேண்டிய நன்மைகளை இப்பிறவியிலேயே தேடவேண்டும்.
* போதும் என்ற திருப்தி உனக்கு என்று உண்டாகிறதோ அன்று இன்ப மாளிகையின் முற்றத்தை நீ அடைந்து விட்டதாக உணரலாம்.
* என் வயலுக்கு மட்டும் மழை பொழிய வேண்டும் என்று எண்ணாதே. உலகம் செழித்து வாழ மழை வேண்டும் என்று எண்ணுவதே அருள்பெறும் வழியாகும்.
* உடல்அழுக்கை நீராடுவதால் போக்குவது போல், மனஅழுக்கை வழிபாட்டால் போக்க வேண்டும்.
* இறைவனின் பெயரைச் சொல்வதால் பயம்,பாவம் என்னும் இருவித துன்பங்களில் இருந்து தப்பிக்க முடியும்.
* நல்ல உணவு வகைகளை உண்பதால் உடல் நலம் பெருகும். நல்ல நூல்களை படிப்பதால் மனநலம் உயரும்.
* உனக்குச் சரி என்று படுவதையே சரி என்று பிறரிடம் சாதிக்காதே. இன்று சரி என்று உனக்குத் தோன்றிய ஒன்றே நாளை தவறு என்று மாறிவிடக்கூடும்.
* கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வது போல, கண்ணுக்குத் தெரிந்த கடவுளான உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun Apr 10, 2016 5:06 pm

* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக்கெல்லாம் தலையாய பிழை அறிவு நூல்களைக் கற்காமல் இருப்பதே ஆகும். அதனால், நல்ல நூல்களை வாசிப்பதை அன்றாடப்பணியாக்கிக் கொள்ளுங்கள்.
* மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமன் அன்று; உயரம் அன்று; அறிவு ஒன்றுதான் மனிதனை உயர்த்த வல்லது.
* ஆண்டவனுக்கு பணக்காரன், இல்லாதவன் என்ற பேதங்கள் சிறிதும் கிடையாது. இறைவனின் சன்னதியில் அனைவரும் சமம் என்ற உணர்வோடு வழிபாடு செய்யுங்கள்.
* குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தினமும் ஒன்றுகூடி, காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாடு செய்வதால் குடும்பத்தில் அமைதியும், அருளும் தழைக்கும்.
* இனிமையான சொற்களைப் பேசுபவர்களுக்கு உலகில் எந்தத் துன்பமும் இல்லை. எமவாதனை உண்டாகாது. அவர் இருக்கும் இடத்தில் அருள் துலங்கும்.
* நாம் எந்தப் பாவத்தைச் செய்தாலும் தெய்வத்திடம் மன்னிப்பு பெற்று விடலாம். ஆனால், நன்றி மறந்த பாவத்தை தெய்வம் ஒருபோதும் மன்னிக்காது.
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனது தான். ஒரு வேளை திரும்பி வந்தாலும் அது தன் தன்மையில் சிதையாமல் இருப்பது என்பது சந்தேகம்தான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun Apr 10, 2016 5:07 pm

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள் ஆவார்கள்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்திடலாம். அலைபாயும் கடலையும் தாண்டிடலாம். நச்சுப்பாம்பையும் மாலையாகக் கழுத்தில் அணிந்திடலாம். ஆனால், மூடனைத் திருத்த யாராலும் முடியாது.
* தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல, உயர்ந்த குணம் கொண்டவர்கள் தாழ்ந்தநிலையை அடைந்தாலும் அவர்கள் உயர்ந்த எண்ணங்களையே கொண்டிருப்பார்கள்.
* நாம் எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். ஒருவன் தக்க தருணத்தில் செய்த உதவியை மறந்த(செய்ந்நன்றி மறத்தல்) பாவத்தை எந்த தெய்வமும் மன்னிக்காது.
* தவம் செய்ய காட்டுக்குப் போக வேண்டாம். பட்டினி கிடக்க வேண்டாம். தலைகீழாக நிற்கவேண்டாம். வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டே தவம் செய்யலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun Apr 10, 2016 5:08 pm

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள் ஆவார்கள்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்திடலாம். அலைபாயும் கடலையும் தாண்டிடலாம். நச்சுப்பாம்பையும் மாலையாகக் கழுத்தில் அணிந்திடலாம். ஆனால், மூடனைத் திருத்த யாராலும் முடியாது.
* தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல, உயர்ந்த குணம் கொண்டவர்கள் தாழ்ந்தநிலையை அடைந்தாலும் அவர்கள் உயர்ந்த எண்ணங்களையே கொண்டிருப்பார்கள்.
* நாம் எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். ஒருவன் தக்க தருணத்தில் செய்த உதவியை மறந்த(செய்ந்நன்றி மறத்தல்) பாவத்தை எந்த தெய்வமும் மன்னிக்காது.
* தவம் செய்ய காட்டுக்குப் போக வேண்டாம். பட்டினி கிடக்க வேண்டாம். தலைகீழாக நிற்கவேண்டாம். வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டே தவம் செய்யலாம்.

கிருபானந்த வாரியார்

தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum