தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கெட்ட பய சார் இந்த கபாலி!

View previous topic View next topic Go down

கெட்ட பய சார் இந்த கபாலி! Empty கெட்ட பய சார் இந்த கபாலி!

Post by rammalar Mon May 09, 2016 11:49 am

மே 1 அன்று என்ன ஸ்பெஷல்?
என்று தமிழக இளைஞர்களிடம் பொதுவாக கேட்டுப்
பாருங்கள்.

‘உழைப்பாளர் தினம்’ என்பது கூட அவர்களுக்கு
மறந்திருக்கும். ‘தலயோட பர்த்டே’ என்பார்ள்.
கோரஸாக சமூக வலைத்தளங்களில் அந்த நாளில்
தலக்கு வாழ்த்துக்கள் பறக்கும். மற்ற ரசிகர்கள்கூட
சற்று பம்மி அமர வேண்டிய நாள் அது.

ஆனால் இந்த வருடம் அந்த நாளில் ராஜின ரசிகர்களும்
அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டார்கள்.

ஆம், ரஜினிகாந்த் நடித்துக் கொண்டு வரும் ‘கபாலி’
திரைப்படத்தின் டீஸர் அன்றுதான் வெளியானது.
முன்பெல்லாம் ரசிகர்கள் தங்களின் அபிமான
நடிகர்களின் பட ரிலீஸ் அன்று ஃபிலிம் சுருள்
பெட்டிகளை ஊர்வலமாக எடுத்து வந்து
பூஜையெல்லாம் போடுவார்கள்.

அந்த பரவசம் இன்று அப்படியே இணையத்திற்கு
மாறியிருக்கிறது. டீஸர் வெளிவருவதற்கு முன்பேயே
அது குறித்த பரபரப்பு உற்சாகத் தீயாக பரவியது. படிக்கும்
காலத்தில் பரீட்சைக்கு எழுந்து படித்திராதவர்கள் கூட
ஞாயிறு அன்று காலையிலேயே கணினியிலும் வாட்ஸ்
அப்பிலும் மொத்தமாக குழுமி விட்டார்கள்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கெட்ட பய சார் இந்த கபாலி! Empty Re: கெட்ட பய சார் இந்த கபாலி!

Post by rammalar Mon May 09, 2016 11:50 am

கெட்ட பய சார் இந்த கபாலி! QArLSMjJQlCo1YJtseMV+kabali-5
-
டீஸர் வெளியான பத்து மணி நேரத்தில் சுமார் 26 லட்சம்
பேர் இந்த டீஸரை பார்த்ததாக ஒரு தகவல் சொல்கிறது.
வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லாத வரவேற்பு இது.
(திங்கள் அன்று 51 லட்சம்)

Kabali Teaser என்ற ஹேஷ்டாக் உடன் இந்த
விஷயம் டிவிட்டர் தளத்தில் உடனே டிரைண்டிங் ஆனது.
***
கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்தின் திரை அந்தஸ்து
சற்று இறங்குமுகத்தில் சென்று கொண்டிருந்தது.
‘கோச்சடையான்’ ‘லிங்கா’ ஆகிய திரைப்படங்களின்
சுவாரஸ்யமின்மைதான் காரணம். ரஜினி திரைப்படங்களின்
தோல்வியை முன்பு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாத
அவரது ரசிகர்கள் கூட அந்தச் சமயத்தில் சோர்வடைந்தார்கள்.

ஏழத்தாழ பாபா காலத்து நிலைமை முன்பெல்லாம்
ரஜினியைப் பற்றி இணையத்தில் எவரேனும் ஒரு துளி
கிண்டலித்தால் கூட பொறி பறக்கும். ஆனால் அந்த
வரிசையில் அவரது ஒரு சில ரசிகர்களே கூட இணைந்து
கொண்ட அளவிற்கு நிலைமை மோசமாகிப் போயிருந்தது.

ஆனால் அத்தனை சோர்வையும் அவப்பெயரையும் ஒரு
நிமிடத்திற்கும் சற்று கூடுதலாக மட்டுமே ஓடும் இந்த
டீஸர் ஒட்டுமொத்தமாக துடைத் தெறிந்திருக்கிறது.
பியர் பாட்டில் பொங்கி வழிவது போல் ‘தலைவா.. தெறி,
மாஸ், Emperor is back’ என்ற ரசிகர்களின் உற்சாக
கூக்குரல்கள் இணையமெங்கும் பொங்கி வழிகின்றன.
***
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கெட்ட பய சார் இந்த கபாலி! Empty Re: கெட்ட பய சார் இந்த கபாலி!

Post by rammalar Mon May 09, 2016 11:50 am

அப்படி என்ன இருக்கிறது இந்த டீஸரில்?

நரைத்த தாடியுடன் வயதான கெட்டப்பில் இருந்தாலும்
கம்பீரம் எந்த வகையிலும் குறையாத வகையில் கோட்,
சூட், கூலிங்கிளாஸ் அணிந்த விறுவிறுப்பான ரஜினியைக்
காண முடிகிறது.

ஹீரோயின் கால்களை அறிமுகப்படுத்தும் வழக்கமான
தமிழ் சினிமா பாணியையும் தவறவிடவில்லை.
‘நெருப்புடா’ என்கிற பாடல் வரியுடன் தெறிக்க வைக்கும்
சந்தோஷ் நாராயணின் ரகளையான இசையுடன் ரஜினியின்
எண்ட்ரி. காது கிழிய விசிலடிக்கப் போகும் ரசிகர்களின்
உற்சாகம் இப்போதே கற்பனையில் கேட்கத் துவங்கி
விட்டது.

நீங்க ஏன் கேங்ஸ்டர் ஆனீங்க என்று கூட்டத்தில் எவரோ
ஒருவர் கேட்கும்போது தனது டிரேட் மார்க் சிரிப்பை
வழங்கும்போது உற்சாகம் கொப்பளிக்கிறது.

டீஸரின் கடைசி நொடிகளில் எழுபதுகளின் தோற்றத்தில்
இருந்த ரஜினியின் கெட்டப்பில், டிசைனர் சட்டையுடனும்
கூலிங்கிளாஸுடனும் வழிகிற தலைமுடியை இடது
கையால் தள்ளி விட்டுக் கொண்டே இளமையான ரஜினி
வேகமாக கடந்து செல்லும் காட்சியுமு் ஒவ்வொரு
ரசிகனும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று விடுகிறான்
என்பது உறுதி.

என்னய்யா இந்த ஆளு? என்று நமக்கே சற்று திகைப்பாகி
விடுகிறது. அத்தனை அபாரமான Screen Presence.
***
ரஞ்சித்தின் முதல் இரண்டு திரைப்படங்களிலும் தலித்
அரசியல் தொடர்பாக குறியீடுகள் லேசுபாசாக இருந்ததாக
பேசப்பட்டதால் ‘கபாலி’ திரைப்படத்திலும் அப்படிப்பட்ட
விஷயங்கள் இருக்கின்றனவா என்று ஒரு குழு இந்த
டீஸரில் தேடிக் கொண்டிரக்கிறது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கெட்ட பய சார் இந்த கபாலி! Empty Re: கெட்ட பய சார் இந்த கபாலி!

Post by rammalar Mon May 09, 2016 11:50 am

‘ஓரிடத்தில் அம்பேத்கர் படம் மாட்டியிருந்ததே
கவனித்தீர்களா?’ என்று பயங்கர ஆர்வத்துடன் ஒரு
புலனாய்வுக் கேள்வியைக் கேட்டார் நண்பரொருவர்.

‘பழைய நம்பியார் படங்கள்ல அவர் கையைக் கசக்கிக்
கிட்டே ‘டேய் கபாலி’ன்னு கூப்பிட்டவுடனே ‘சொல்லுங்க
எஜமான்’ன்னு வருவானே அந்த கபாலின்னு நினைச்சியா..
கபாலி.. டா…’ என்று ரஜினி தனக்கே உரிய
மேனரிஸத்துடன் சொல்வது அள்ளுகிறது.

தமிழ்திரை மட்டுமல்லாமல் பொதுவாகவே கபாலி
என்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு
ரவுடியின் அடையாளத்துடனேயே அதுவரை உபயோகப்
படுத்தப்பட்ட வந்தது.

அந்த பழமையான மரபை இத்திரைப்படம் உடைக்கும்
அதற்கான அரசியல் அடையாளம்தான் அந்த வசனம்
என்கிறார்கள்.

இறுதி நொடியில் ரஜினி சொல்லும் ‘மகிழ்ச்சி’ என்கிற
சொல் உடனே இணையத்தில் டிரெண்ட் ஆகி விட்டது.
‘எங்க பெரியப்பா செத்துப் போயிட்டாருங்க’ என்று
ஒருவர் வருத்தமான ஸ்டேட்டஸ் போட்டாலும் கூட
அதை சரியாக கவனிக்காமல் ‘மகிழ்ச்சி’ என்று கமெண்ட்
போடுகிற ரீதியில் ரசிகர்கள் தாறுமாறான கொலை
வெறி உற்சாகத்துடன் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு காட்சியில்
வரும் ராதிகா ஆப்தே என்ன அழகு பார்த்தீர்களா’ என்று
ஒரு கூட்டம் தனியாக ஜொள்ளிக் கொண்டிருக்கிறது.
***
இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக ஒரு செய்தியைப்
பார்த்தேன்.

‘இந்த டீஸரை இணையத்தில் பார்த்த அதன் எண்ணிக்கை
சாதனையைக் கூட்ட வேண்டாம். எனவே இதை
பார்க்காதீர்கள்.. அது நம்முடைய நடிகரின் சாதனையை
மீறிப் போய் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று
இன்னொரு நடிகரின் ரசிகர்கள் தங்களுக்குள் ரகசியமாக
செய்தி பரப்பிக் கொள்கிறார்களாம்.

ஒர தமிழ்த் திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில்
வடிவேலு டுபாக்கூர் வாக்கி டாக்கி ஒன்றின் மூலம்
ஓவர் ஓவர் என்று தனது தேறாத அல்லக்கை ஆட்களிடம்
சதித்திட்டங்களைப் பற்றி பேசுவதுதான் நினைவிற்கு
வருகிறது.

இருந்தாலும் டீஸரின் பார்வையாளர்கள் எண்ணிக்கை
இந்த நொடி வரை கூடிக் கொண்டே போவதுதான்
மேட்டர்.
யார்கிட்ட.. கபாலிடா… மகிழ்ச்சிடா!

——————————

– சுரேஷ் கண்ணன்
குமுதம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கெட்ட பய சார் இந்த கபாலி! Empty Re: கெட்ட பய சார் இந்த கபாலி!

Post by செந்தில் Mon May 09, 2016 3:11 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கெட்ட பய சார் இந்த கபாலி! Empty Re: கெட்ட பய சார் இந்த கபாலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum